Everything posted by island
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
ரணில் சர்வதேசத்துடன் சேர்ந்து ஒஸ்லோவில் உடன்பாடு செய்தபடியான சமஸ்டிக்குள் தீர்வு கண்டு விடுவார்களோ என்ற பயத்தில் ரணிலுக்கு தண்டனை வழங்கி இனவாதியான போர் வெறியுடன் இருந்த மகிந்தவை கொண்டுவந்தால் தான் தமிழீழ போரை கொண்டு நடத்தலாம் என்று பாரிய தப்பு கணக்கு போட்டு பேரழிவை அடைந்து இன்று எதுவும் கிடைக்காத கையறு நிலை. அந்த மோசமான அரசியலை பாராட்டும் அளவுக்கு அரசியல் தற்குறியே இந்த அரியம் என்ற பொது வேட்பாளர்.
-
ஜனாதிபதி ரணிலுடன் சசிகலா ரவிராஜ், மாவையின் மகன் கலை அமுதல் சந்திப்பு
தமிழர்களில் ஒரு பகுதியினர் ரணிலுக்கும் மற்றயவர்கள் சஜித் மற்றும் அநுராவுக்கும் ஆதரவு அளிப்பது ஒரு வகையில் சிறந்ததே. அந்த வகையில் மாவையின் மகனும் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் ரணிலுடன் நிற்பது நல்லதே. யார் வென்றாலும் அவர்களுடன் தமிழர் பிரதேச அபிவிருத்தி மற்றும் நடைமுறை பிரச்சனைகள் என உடனடியாக தீர்கக வேண்டிய பிரச்சனைகளை முன்னெடுக்கலாம். அதற்கு இவ்வாறானவர்கள் தமது சுயநலத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது பொது நலமாகவும் சிந்திக்க வேண்டும். அரியத்திற்கும் சிலர் ஆதரவளிக்கலாம். அவர் வென்றால் தமிழீழத்தை வெட்டி பிரித்து தருமாறு கேட்கலாம். 🔪🎂
-
தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பான செய்திகள் - 2024
சரியாக சொன்னீர்கள் புலம் பெயர் நாடுகளில் தமிழ் தேசியவாதிகள் என தம்மை அழைத்துக் கொள்ளுபவர்கள் ஒரு சீரியலை டெலிவிசனில் பார்ப்பது போலவே தாயக அரசியலை நோக்குகின்றனர். அவர்களுக்கு நாளாந்தம் பொழுது போக ஒரு Thriling அரசியல் வேண்டும். யுத்த காலங்களில் அவர்களுக்கு இருந்த, அவர்கள் ரசித்த அந்த சுவாரசியம் இப்போது இல்லாமல் தவிக்கிறார்கள் பாவம்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
தமிழ் மக்கள் தம்மு முதலாவது அல்லது இரண்டாவது தெரிவை ரணிலுக்கு அளிப்பதே தற்போதைய நிலையில் நல்லது. ரணில் வந்து பாலாறும. தேனாறும. ஓடப்போவதில்லை. ஆனால், இன்றைய நிலையில் அதுவே பொருளாதார நீங்கள் சொன்னது போல் தாயக மக்கள் சற்றேனும் பொருளாதார மீட்சி பெற்று வடகிழக்கில் தமிழர் இருப்பை பேண சற்றேனும் கைகொடுக்கும். அதுவே இன்றைய தேவை. எது எப்படியோ ஆட்சிக்கு வரும் ஜனாதிபதியுடன் சுயநலமற்று (அது சாத்தியமில்லாதுவிட்டால் அல்லது சுயநலத்துடன் சேர்த்து பொதுநலத்தை சற்றேனும் ஆர்வம் கொண்ட வட கிழக்கு மக்களின் அபிவிருத்தியில் ஆர்வம் உடைய) தமிழ் மக்களின் பொதுவான பொருளாதார நன்மைகளை பேணக்கூடிய வட கிழக்கு அபிவிருத்தி, உற்பத்தி திறன், வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தக்கூடிய ஒரு சிலராவது சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
-
யாழ். நாவலர் மண்டபத்தை வாக்குச்சாவடியாகப் பயன்படுத்த வேண்டாம்!
தாழ்ந்த சாதியினரின் வீட்டில் உணவு அருந்த கூடாது, பந்தியில் தாழ்ந்த சாதியினரை அனுமதிக்கக் கூடாது என்று, மக்களிடையே சாதி வெறியை வளர்தத, சாதி வெறியனாக வாழ்ந்த, நாவலர் மண்டபத்தில் வாக்கு சாவடியை அமைத்தால் நாவலரால் தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கிய மக்களும் அங்கு வந்து சமமாக வாக்களிப்பர் என்ற கவலை இந்து மா மன்ற தலைவருக்கு ஏற்பட்டதில் வியப்பு இல்லை.
-
சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற உபாயம், தமிழ் தேசிய மக்களை ஒன்று திரட்ட பயன்படப்போகும் ஒரு அடையாளம், தமிழ் மக்களின் பிரச்சனைகளை சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல ஒரு வாய்ப்பாக கொள்ளவேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் இந்த தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற விடயம், தமிழ் தேசியத்தின் பெயரில் அரசியல் செய்ய நினைக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரித்து ஒரு புள்ளியில் நின்று, மக்களிடம் சென்று ஆதரவு திரட்டிவதென்பது மிக நல்ல விடயம். மிக மிக நல்ல விடயம். தமிழ் தேசிய அரசியலில் ஒரு தீர்மானமிக்க புள்ளி! இதன் மூலம் இத் தேர்தல் முடிவில், நீண்டகாலமாக தமிழ் மக்களுடம் கோரிக்கை அளவில் மட்டும் இழுபட்டு வந்த பல விடயங்களுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி போட்டுவிடமுடியும். 1. வடக்கில் (யாழ்/வன்னி) மட்டும் ஓரளவு வாக்குகளைப் பெற்று- கிழக்கில் பெருத்த அடி வாங்குவதன் மூலம், வடக்கு கிழக்கு இணைப்பென்பது வெறும் மடையர்களின் கோரிக்கை மட்டுமே- கிழக்கு தமிழ் மக்கள் ஆணை கிடைக்காத அதை மொத்தமாக இனி உதாசீனப்படுத்திவிடலாம் என்கின்ற செய்தியையும், 2. ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தமிழ் வாக்குகளில் 50% வீதத்தையேனும் பெறாத தமிழ் தேசிய வேட்பாளர் என்பது- வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரித்து- தமிழ் தேசிய அரசியல்வாதிகளை நிராகரித்து, தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள் என்கின்ற செய்தியையும், 3. தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை பெரும்பான்மை தமிழ் மக்கள் புறக்கணித்திருப்பதானது தமிழ் மக்களுக்கு இவர்கள் சொல்வதுபோல் உண்மையில் பிரச்சனைகள் இல்லை- அரசியல்வாதிகள் தான் தமிழ் தேசியத்தினை அரசியல் -பொருளாதார லாப நோக்கிற்காக பயன்படுத்துகிறார்கள் என்கின்ற செய்தியையும், 4. பெரும்பான்மை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்த தமிழ் பொதுவேட்பாளர் தரப்பை நாங்களும் நிராகரிப்பதே சரி- இவர்களுக்கு தீர்வென்பது இனி தேவையே இல்லாத ஒன்று என்கின்ற செய்தியை சிங்களத்துக்கும் உலகிற்கும் சொல்லத் துணிந்து, தமிழ் மக்களின் இத்தனைகால உரிமைப் போராட்டத்தை முட்டாள்தனமான சுயலாப அரசியல் முடிவினால் விற்கத் துணிந்திருக்கும் ஶ்ரீதரன்- மாவை- செல்வம்- விக்கி- சித்தார்த்தன்- சுரேஷ் போன்ற தமிழ்தேசியத் தூண்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக! தமிழ் வேட்பாளர் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை 50% க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறத்தவறும் பட்சத்தில், மக்களின் ஆணைக்கிணங்க, இத்தேர்தலில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள்/ கொள்கைகள் எவற்றையும் எதிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பதுதான் உங்கள் அரசியலுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பதன் பொருள்! செய்வீர்களா? ( முகநூலில் வாசித்தது)
-
சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
ஆகவே தமிழர் வாக்குகளை சிதறாமல் ஒன்றாக கட்டி……….
- IMG_7328.jpeg
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
இங்கு நடந்ததும் ஒரு தெருவிழா தானே. தமிழ் அமைப்புக்களின் தெருவிழா இப்படி தானே இருக்கும். கனடாவிலும் மக்கள் விழாவை குழப்பவில்லையே. இதே போல அமைப்புகளுனுள் இருந்த ஈகோ பிரச்சனை முற்றியதால் சில அமைப்புகளில் இருந்த காடையர்களே அங்கும் குழப்பங்களில் ஈடுபட்டனர்.
-
சுவிட்சர்லாந்தில் நடுவீதியில் சண்டையிட்ட தமிழ் அமைப்புகள்
முகப்புத்தக வீடியோவை பார்ததாலே தெளிவாக தெரிகிறது, தமிழ் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்த தீவிர தமிழ் தேசியவாதிகளின் பங்கு பிரிப்புச் சண்டை என்பது. ஐரோப்பிய யூனியனும் இந்தியாவும் தடையை எடுத்தார்களானால் இந்த திருட்டு காவாலிகளின் அட்டகாசம் இன்னும் அதிகரிக்கும்.
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
இந்த பொதுவேட்பாளர் கேம் என்பது தாயகத்தில் வாழும் தேசியம் பேசும் அரசியல்வாதிகளுக்கு அடுத்த பாராளுமறன்ற தேர்தலுக்கான ஒரு உசுப்பேற்றல் முதலீடு. ( பாராளுமன்றம் சென்று ஶ்ரீலங்கா ஒற்றையாட்சிக்கு விசுவாசபாக இருப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்வது வேறு) புலம் பெயர் நாடுகளில் வெட்டி வீர தேசியம் பேசுபவர்களுக்கு ஒரு time pass. மற்றும் உண்டியல் இதர வருமானம். etc
-
ஜனாதிபதி தேர்தலில் சஜித்திற்கு ஆதரவு : தமிழரசுக்கட்சி அதிரடி அறிவிப்பு
நீங்கள. கூறியது 100 வீதம் உண்மை. 2015 ம் ஆண்டுக்கு முன்பு இரு முறை அங்கு சென்ற போது முழுமையான இராணுவ ஆதிக்கம் இருந்தது. வாய் திறக்கவே மக்கள் பயந்தார்கள். பாடசாலைகளில் ஒரு விழா என்றால் கூட அப்பகுதி இராணுவ அதிகாரியை கட்டாயம் அழைக்கவேண்டிய நிலை இருந்தது. நினைவேந்தல்கள் இல்லை. நிலாந்தன் போன்ற பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் இன்று போல் எழுதும் சூழ்நிலை இருக்கவில்லை. இன்று வீரம கதைக்கும் பலர் 2015 ம் ஆண்டுக்கு முன்பு வாயே திறக்கவில்லை. ஆனால், 2016, 2018 ல் போன போது பாரிய இடைவெளியை உணரக்கூடியதாக இருந்தது. எனவே அன்று மைத்திரியை ஆதரித்தால் மக்கள் எதையும் இழந்துவிடவில்லை. நன்மைகளையே பெற்றனர். 2015 ல் மைத்திரியை ஆதரித்ததால் நாம் எதையும பெறவில்லை என்று இன்று புலம்புபவர்கள் எவரும் 2015 ம் ஆண்டுக்கு என்ன செய்தனர்? அன்று செய்ததைப்போல் மக்களின் நடைமுறை பிரச்சனைகளை நிறைவேற்க் கூடிய வேட்பாளர்களோடு நடைமுறை பிரச்சனைகள் தொடர்பில் பேசி அவர்களுக்கு வாக்களிப்பதே உகந்தது. அரியநேந்திரன் போன்ற வெத்து வேட்டு கோமாளிகளுக்கு வாக்களிப்பதால் எதுவும் கிடைக்கபோவதில்லை. ஒரு bollot sheet waste. அரியத்திற்கு வாக்களிப்பதும் வாக்கு சீட்டை குப்பைத்தொட்டிக்குள் போடுவதும் ஒன்றே.
-
அரியநேத்திரனை எம்.ஜி.ஆர் ஆக்கியது யார்? - நிலாந்தன்
வட கிழக்கு மாகாங்கள் இணைந்த தமிழர் தாயகத்தில் சுயாட்சி என்ற கோஷத்தை முன்வைத்து தமிழர் தாயகத்தில் ஒரு பொது வாக்கெடுப்பு என்று கூறி அரசியநேந்திரன் என்ற பொதுவேட்பாளரை இறக்கியவர்கள் இப்போது எம்ஜியார், நம்பியார் கதைகளை சொல்லி வாக்கு கேட்க வேண்டிய பரிதாப நிலை. 😂 அரியம் நீங்க எம்ஜி ஆர் மாதிரியுங்க. 😂 - நிலாந்தன்
- IMG_7299.jpeg
-
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்
அப்ப சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கணக்கில் தான் சங்கே முழங்கு கோஷம். 😂
-
25 வயது பெண்ணை பார்த்து மயங்கிய 52 வயது, சுவிஸ் நபர் – 47 இலட்சம் பறிபோனது- 3 பெண்கள் கைது.
சோழ பேரரசன் ராஜராஜ சோழன் பல வயதுகளில் பல மனைவிகளை கல்யாணம் செய்து தனது வாழ்வை அவர் களுடன் இன்பமாக அனுபவித்தான். அவன் மகள் ராஜேந்திர சோழனும் அதையே செய்தான். இவர் ஒரு சாதாரண நபர்.
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
சசிவர்ணம், நாங்கள் எதை பற்றி பேச தொடங்கினோமோ அதை விட்டு வேறு விடயங்களுக்கு திசை திருப்ப பார்கின்றீர்ர்கள். இத்திரியில் எனது கருத்துக்கு நீங்கள் மறுப்பு தெரிவித்த விடயம் இலங்கை இந்திய ஒப்பந்த அமுலாக்கத்தை புலிகள் குழப்பினார்களா இல்லையா என்பதை பற்றி மட்டுமே. ஆகவே வேறு விடயங்களுக்கு தாவாமல் அதை பற்றி மட்டும் பேசுவோம் யுத்தம் தொடங்கிய பின்னர் நடந்த இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை பற்றி நாம் பேசவும் இல்லை அதை நான் மறுக்கவும் இல்லை. இந்திய இராணுவம் இலங்கையில் இருக்கும் வரை இந்தியா ஒப்பந்தத்தை அமுலாக்கவிழைந்ததும் அதை அமுல் செய்ய விடாமல் புலிகள் போராடி ஒப்பந்தத்தை கிடப்பில் போடவைத்ததும் நடந்த உண்மைகள். இலங்கை அரசியலில் ஆர்வம் உள்ள நாளாந்தம் பத்திரிகை வாசிக்கும் ஒருவரல் கூட அறிந்து கொள்ளக் கூடிய வெளிப்படையான உண்மை அது. அன்ரன் பாலசிங்கத்தின் ராஜதந்திரத்தின் மூலம் இந்திய, இலங்கை ஆடசி மாற்றதின் சாதக விளைவுகளை பயன்படுத்தி இந்திய இராணுவம் வெளியேற நிர்பந்திக்கப்பட்ட பின்னர், இந்தியா தமிழர் பிரச்சனையில் பாராமுகமாகவே இன்னும் கூறப்போனால் முழுமையாக தமிழருக்கு எதிர்ப்பு நிலையையே கடைப்பிடித்தது என்பது யாவரும் அறிந்த உண்மை. அதனால் ஒப்பந்தத்தில் தமிழர் சார்பான சரத்துகளை அமுலாக்கும்மாறு இலங்கையை நிர்பந்திக்கவில்லை. ஆனால், ஒப்பந்தத்தில் தனது நாட்டின் நலன்கள் சார்பான சரத்துக்களை அமுல்படுத்தும் விடயத்தில் கறாறக நடந்திருக்கும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
@Kandiah57 உங்கள் கருத்துக்கள் உறுதியானவை. உறுதியான, வெட்டி விழுத்தமுடியாத, உயர்ந்து நிற்கும் ஆலமரமாக உங்கள் மண்டைக்குள் உள்ள மூளைக்குள் வளர்ந்து நிற்கும் அந்த விரூட்சத்தில் இருந்து புறப்படும் உங்கள் கருத்துக்கள், கேள்விகளுக்கு பதிலளிப்பது சாதாரண இயல்பான மனித அறிவுடன் இருப்பவர்களுக்கு மிகவும் கடினமானது. சாதாரணமாக கருத்துகளில் தெரிவிக்கப்பட்ட முழுமையான அர்த்தத்தை, செய்தியை விடுத்து வசனங்களை இரண்டாகப் பிரித்தும், சொல்லு சொல்லாக அதை வாசித்தும் அதற்கு பதிலெழுதும் தங்கள் பாணியே ஒரு அழகுதான். இவை அனைத்தும் உங்களது உறுதியான ஆலமரமாக வளர்ந்து நிற்கும் அந்த விரூட்சத்தில் இருந்து பிறப்பெடுப்பவை. தொடர்ந்தும் அப்படியே உறுதியாக இருங்கள்.
- தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
சிங்களவர்களுடன் இணைந்து தீர்வை காணா முடியாதா? அப்படியானால் விட்டுவிடுங்கள். தம்முடன் இணைந்து தீர்வை காணுமாறு அவர்களும் உங்களை வற்புறுத்த போவதில்லை. அவர்களும் உள்ளூர அதை தான் விரும்புவார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். தமிழர்கள் வினை திறனான நடைமுறை சாத்தியமான அரசியலை செய்யாது இவ்வாறு வெட்டி வீர அரசியல் செய்து பொழுது போக்க வேண்டும் அதுவே எமக்கு நல்லது என்றே இனவாதிகள் விரும்புவார்கள். டக்லஸும் கருணாவும் இனப்பிரச்சனைத்மீர்வுக்காக அரசுடன்்இணைந்து செயற்பட்டார்கள் என்று அப்பாவி தனமாக நம்மியதை பற்றி நான் என்ன சொல்ல. 😂 தமிழர் தரப்பு என்றுமே எல்லாமுமே சரியாக தான் மிக திறமையாக அரசியல் செய்தது என்று தெரிவித்திருத்தீர்கள். அதை நம்பிய நான் எதேச்சையாக இணையத்தளங்களில் பல்வேறு உலக பிரபல ஊடகங்களை பார்கக நேர்ந்தது. அதில் எல்லாம் நீங்கள் சொன்னதற்கு மாறான பல தகவல்களை பார்தத உடனையே எனது கம்பியூட்டரை Off செய்துவிட்டேன். அதை உலக நாட்டு ராஜதந்திரிகளோ உலக தலைவர்களோ மக்களோ அவற்றைப் பார்த்தால் அது தமிழருக்கு பாதகம் என்பதற்காக கம்பியூட்டரை நிறுத்தி எவரும் அந்த செய்திகளை பார்ககாமல் செய்துவிட்டேன். எப்படி எனது ராஜதந்திரம். இனி இந்த உலகில் தமிழனை அடிக்க எவராலும் முடியாது. தமிழேன்டா. 😂
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
நான் ஏற்கனவே கூறியபடி நீங்கள் இணைத்தது ஒரு இயக்கத்தின் பிரச்சார வீடியோ ஆகும். இப்படியான பிரச்சார வீடியோக்கள் ஒரு காலத்தில் உங்களை விட என்னை அதிகம் மயக்கியது. இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாள் முதலே அதை முற்றாக நிராகரித்து அதை அமுல்படுத்த விடாமல் தடுப்பற்கான தமது போராட்டத்தை விடுதலைப்புலிகள் ஆரம்பித்தது வெள்ளிடை மலை. தனி தமிழீழத்துக்கான போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என முழு வேட்கையுடனும் உத்வேகத்துடனும் புலிகள் அன்று இருந்ததும் இந்த ஒப்பந்தத்தை அதற்கு வந்த இடையூறாக புலிகள் கருதியதும் எல்லோருமே அறிந்த விடயம் தான். புலிகள் இந்திய இராணுவத்துடன் யுத்தம் புரிந்தது ஒப்பந்தத்தை அமுல் படுத்த அல்ல. மாறாக இந்திய இராணுவத்தை வெளியேற்றி இலங்கை இராணுவத்திடன் தமிழீழத்துக்கான போரை தொடர்ந்து நடத்துவதற்காகவே என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதையே பின்னர் செய்தனர். பிரேமதாசவுடன் பேச்சுவார்ததை ஆரம்பித்ததும் இந்திய இராணுவத்தை வேளியேற்றும் அரசியல் நகர்வுகளுக்காகவே. அது பற்றி அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். நான் அந்த நடவடிக்கையில் சரி, பிழை கூறவில்லை. அது தொடர்பாக சாதகமான பாதகமான வாத பிரதிவாதங்களுக்கு இடம் உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள கூடியதே. ஏனெனில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் பல போதாமைகள் இருந்தன. அதற்காக அதில் பல நல்ல அம்சங்களும் இருந்தன. அதில் உள்ளதை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இன்று தமிழர்கள் விரும்புவதில் இருந்தே அதை அறியலாம். ஆனால், அன்று தமிழ் தரப்பால் அது நிராகரிக்கப்பட்டது என்பதும் இன்று அதையாவது நடைமுறைப்படுத்தமாட்டார்களா என்று தமிழ் தரப்பு விரும்புவதும் எவராலும் மறுக்க முடியாத உண்மை.
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
அரசியல் என்பது காய்தல. உவத்தல் இன்றி நடந்த உண்மைகளை நேர்மையான ரீதியில் வெளிப்படையாக உரையாடுவது. அதன் மூலமே தெளிவு பெற முடியும். அதுவே முன்னேற்றதிற்கான வழி. உங்கள் பார்வையில் உள்ளது போல அரசியல் பக்தி விசுவாச இலக்கியம் அல்ல. நீங்கள் இணைத்தது வெறுமனே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரச்சார வீடியோ மட்டுமே.
-
தமிழ் பொது வேட்பாளர் சிறந்ததொரு நகர்வு - நாமல் ராஜபக்ஷ
இந்தியா இலங்கைக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்பதால், அவர்களுக்கு மட்டுமே பொறுப்பு உள்ளது போலவும், தமிழருக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அமைந்துள்ளது உங்கள் பதில். அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதை தடுக்க அல்லது அதை அமுல்படுத்த விடாமல் தடுக்க தமிழரின் முழுப்பலமும் வளங்களும் பயன்படுத்தப்பட்டு அதில் வெற்றி கண்டதை மறைக்க பாரக்கின்றீர்கள். அதை நிராகரித்து அமுல்படுத்தவிடாமல் தடுத்த விடயம் பற்றி சாதக பாதகமான முறையில் தர்க்கரீதியான வாதங்களை முன்வைக்க முடியும். ஏனெனில் அதில் போதாமை பல உண்டு. ஆனால், இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்திய பிரந்திய நலன்களுடன் இணைத்தே உருவாக்கப்பட்ட போதிலும், அதில் ஈழத்தமிழர் நலன்களும் சேர்ந்து முன்னிறுத்தப்பட்டதை மறுக்க முடியாது. வடகிழக்கு தமிழரின் பாரம்பரிய பிரதேசம் என்பது அங்கீகரிக்கப்பட்டமை, சிங்களம் மட்டும. சட்டம் முடிவுக்கு கொண்டு வந்து தமிழும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டமை, நிபந்தனையுடன் கூடிய வட கிழக்கு இணைப்பு, காணி, பொலிஸ் அதிகாரங்களுடன. கூடிய மாகாணசபை என சீதகமான அம்சங்களை கொண்டிருந்தாலும் ஜே. ஆர் அரசு இதை மனமுவந்து கொடுக்கவில்லை. விடுதலை புலிகளால் ஒப்பந்தத்திற்கு காட்டப்பட்ட பாரிய எதிர்ப்பும் ஒப்பந்த அமுல் படுத்துதுதலுக்கு போடப பட்ட முட்டுக்கட்டைகளும் தொடர்ந்த யுத்தமும் பேரினவாத அரசுகளுக்கு வரப்பிசாதமாக அமைந்தன. அதை சாட்டாக வைத்து இழுத்தடித்தனர். முள்ளிவாய்கால் இறுதி முடிவு தமிழரின் அரசியல் பலத்தை பாதாளத்தை நோக்கி நகர்த்தியது இனவாதிகளுக்கு மேலும் பலத்தை கொடுத்தது. அதனால் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வுக்கான சூழ்நிலை தற்போதைய நிலையில் மிகவும் பாதகமான நிலையில் உள்ளது. இந்தியா 37 வருசமா என்ன மசிரை புடுக்கினதா என்ற உங்கள் கேள்விக்கு பதில், அதற்கான எந்த தேவையும் இப்போது இந்தியாவுக்கு இல்லை. அவர்கள் அதை செய்ய போவதும் இல்லை. தீர்வை தருவதற்கு அது ஒன்றும் சடப்பொருள் இல்லை. புண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா? அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் அதிகம் பாதிக்கப்பட போவது தமிழர்கள் என்பதால் தமிழர்களுக்கு இதில் அதிக பொறுப்பு உள்ளது. விரும்பியோ விரும்பாமலோ. எப்படியும் தீர்வை சிங்களவர்களுடன் இணைந்தே தமிழர்களால் உருவாக்க முடியும். அதை விட வேறு வழி இல்லை என்பதே ஜதார்ததம். வேண்டுமானால் தமிழருக்குள் மட்டும் வெட்டி வீரம் பேசி மகிழலாம். அது தீர்வுக்கு கிஞ்சித்தும் பலனளிக்காது.