Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. மாண்புமிகு ஶ்ரீலங்கா ஜனாதிபதி அனந்தி சசிதரன் நிச்சயம் சிறந்த தீர்வை கொண்டுவருவார் என ற நம்பிக்கையுடன் வாக்களிப்போம்.
  2. குழந்தை வேண்டும் என்று 1000 தடவைகள் கேட்டுக்கொண்டு சண்டை பிடித்து வெவ் வேறு கட்டிலில் படுத்தால் குழந்தை கிடைக்காது. புரிந்துணர்வுடன் அன்பாக பழகி ஒரே கட்டிலில் படுத்து ரொமான்ஸ் செய்தால் மட்டுமே குழந்தை கிடைக்கும்கந்தையர் 😂
  3. உண்மையான வரிகள். நன்றி. தீர்வு என்பது சடப்பொருள் அல்ல. இரு முரண்பட்ட அரசியலுக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் கூட்டம் அல்லது இருவேறு பிரிவுகளாக பிளவுபட்டு ஒன்றின் மீது மற்றது ஆதிக்கம. செலுத்தும் நிலையில் அந்த அரசியல் தலைமைகள் தமக்குள் இருக்கும் பரஸ்பர அவநம்பிக்கைகள், வெறுப்பு ஆகியவற்றை களையும் நோக்கிலான பாதையில் தொடர்சசியான அர்பணிப்பான பேச்சுவார்ததைகள் மூலம் இருவருக்கும் நன்மை பயக்கும் ஒரு புள்ளியான ஒரு தீர்வை அடைதல் என வரும். இரு தரப்பும் ஒன்றாக வேலை செய்யாமல் தீர்வு வராது. அதனால் தான் ஆங்கிலத்தில் Negotiation என்ற அழகான வார்த்தையைப் பிரயோகத்தை பயன்படுத்துகின்றனர். இந்த பாதையில் பல சவால்கள் வருவது இயற்கை. அந்த சவாலை எதிர்கொள்ளும் துணிவு மனப்பக்குவம், பற்றுறுதி இருவருக்கும் அவசியம். ஆனால், துரதிஷரவசமாக இலங்கையில் நடை பெற்ற அத்தனை பேச்சைவார்ததைகளும் இரு பகுதியும் தம்மை ஆசுவாசப்படுத்தவும் யுத்தத்துக்கு தயார்படுத்தவுமே பயன்படுத்தின. அதை தமது புத்திசாலித்தனம் என்றும் எண்ணி தம்மை தாமே ஏமாற்றிக்கொண்டன. என்னைப் பொறுத்தவரை 2002 என்பது தீர்வு காண்பதற்கு இந்த தலைமுறையில் இலங்கைக்கு கிடைத்த அருமையான இறுதி சந்தர்ப்பம். தற்போதைய நிலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தமிழர் தரப்புக்கு நம்பிக்கை தரும் அரசியல் சூழ்நிலையை காணமுடியவில்லை.
  4. ஆயுதங்களை கைவிட்டு, மக்களை விடுவிக்குமாறு ஒபாமா ஜனவரியில் கேட்டிருந்தால் இயக்கம் சம்மதித்திருக்குமா?
  5. பேச்சுவார்ததையில் இருந்து இயக்கம் தன்னிச்சையாக வெளியேறுவதாக அறிவித்த 2003 காலப்பகுதியில் இருந்து, மீண்டும் பேச்சுவார்ததைக்கு திரும்புமாறு இணைத்தலைமை நாடுகளும் நோர்வேயும் பலமுறை விடுதலைப் புலிகளைக் கேட்டது பொய்யா கோபால்.
  6. இல்லை. கிளிநொச்சி வீழ்ந்தவுடன் மக்களை வெளியேற அனுமதிக்குமாறும் ஆயுதங்களை கைவிட்டு உடனடியாக பேச்சுவார்ததைக்கு செல்லுமாறு உலக நாடுகள் ஒன றிற்கு பலமுறை வற்புறுத்தின. ஒரு கட்டத்தில் ஒபாமா நேரடியாக காணொளி மூலம் இந்த வேண்டுகோளை வைத்தார்இயக்கம் அதற்கு இசையவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் குறுக குறுக மக்களும. போராளிகளும் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது மக்களின் இழப்புகள் அதிகமாகும் என்பதை சாதாரணமாகவே எவராலும் புரிந்து கொள்ள முடியும். அதை புறக்கணித்தது மாபெரும் தவறு அல்லது பொறுப்பற்ற செயல். நிலமை கட்டு மீறிய பின்னர் மக்கள் புலிகளை மீறியே இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் சென்றனர். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல எல்லாம் முடிந்த இறுதி தருணத்தில் சூனிய பொழுதில் அரசியல் போராளிகளை சரணடைய சொன்னது கோட்டபாயவுக்கு அவர்களை கொல்ல சிறந்த வாய்ப்பை வழங்கியது.
  7. இந்த கேள்வியை நீங்கள் கேட்டதால் கூறுகிறேன். மிக பிந்திய முடிவு என்றாலும் கிளிநொச்சி விழுந்த உடனையாவது இனி ஆயுத போராட்டம் சரி வாராது தாம் பலவீனமாகி விட்டோம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு அன்றே மக்களை செஞ்சிலுவை சங்கத்தின் மேற்பார்வையில் விடுவித்து ஆயுத போராட்டத்தை முடித்து அரசியல் போராட்டத்தை அன்றே ஆரம்பித்திருந்தால் பெருமளவு மக்களையும் அரசியல் போராளிகளையும் காப்பாற்றியிருந்திருக்கலாம். அதுவும் லேட்டான முடிவு தான். என்றாலும் ஏராளமான பொதுமக்களும் போராளிகளும் உயிரோடு தப்பியிருப்பர். இன்று அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டிக் தேவையில்லை. அரசியல் போராளிகளே போராட்டத்தை தொடர்ந்திருக்கலாம். பெருமளவான பொது மக்கள் கிளிநொச்சிக்கு பிறகு அந்த பிரதேசத்தில் இருந்து வெளியேறவே விரும்பினர். அவர்கள் வெளியேற விடாமல் தடுத்து ஒரு சிறிய பிரதேசத்துக்குள் கொண்டு சென்றது மாபெரும் தவறு தான். எவரலும் மறுக்க முடியாது.
  8. பாதுகாப்பான நாடுகளில் சொகுசாக இருந்து தீவிர தமிழ் தேசியம் பேசி இனவாதத்தை மேலும் வளர்தது விடுவதும் உசுப்பேற்றி உசுப்பேற்றி வெறுப்பு கருத்துக்களை விதைத்து உண்மையான தமிழ் தேசியத்துக்கு உலை வைப்பது தான் தான் எமது வேலை. நாம் அங்கே போய் எமது குடும்பத்தை அதற்கு பலி கொடுக்க மாட்டோம் சார். 😂
  9. தமிழ்க் கவிதைகளின் நவீன கால வரலாறு சுப்ரமணிய பாரதியில் இருந்து தொடங்குகிறது என்பது பரவலான பார்வை. அவரது முறுக்கு மீசையையும், மிடுக்கான கோட்டையும் போலவே உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே என்ற அவரது வரிகளும், அவரது அடையாளத்தோடு கலந்தவை. ஆனால், எல்லா வரலாற்று மனிதர்களின் வாழ்விலும் அவர்களது எழுச்சியான பக்கங்களைப் போலவே, சங்கடமான பக்கங்களும் இருக்கும். தமது எழுச்சிமிகு விடுதலைப் போராட்டப் பாடல்களால் பெரிதும் அறியப்பட்ட சுப்ரமணிய பாரதியின் வரலாற்றிலும், அப்படி ஒரு பக்கம் உண்டு. பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை மாகாணத்தில் இருந்து புதுவைக்கு சென்ற பாரதியார் 1908 முதல் 1918 வரை 10 ஆண்டுகாலம் புதுவையில் வாழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் எழுச்சிமிகுந்த பாடல்கள் பலவற்றையும் அவர் எழுதியுள்ளார். முதல் உலகப் போர் முடிந்த நிலையில், புதுவையில் இருந்து சென்னை மாகாணத்துக்குள் நுழைய முயன்ற பாரதியாரை கடலூர் அருகே கைது செய்து கேப்பர் மலை சிறைச்சாலையில் அடைத்தது பிரிட்டீஷ் இந்திய போலீஸ். இதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு வாரத்துக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாரதியார் சிறை நிலைமைகளைத் தாங்க முடியாமல் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி மெட்ராஸ் மாகாண ஆளுநர் பென்ட்லண்ட் என்பவருக்கு மிகப் பணிவான ஒரு வேண்டுகோள் கடிதத்தை எழுதினார். இந்தக் கடிதம் பாரதி குறித்த சித்திரத்தை மாற்றிவிடும் மொழியில் அமைந்திருக்கும். ஒருபுறம் இந்தக் கடிதத்துக்காக சிலர் பாரதியை விமர்சித்தாலும், பாரதி ஆர்வலர்கள் அவரை அவரது சூழ்நிலையில் வைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். எந்த சூழ்நிலையில் பாரதி இந்தக் கடிதத்தை எழுத நேர்ந்தது என்பது குறித்து ஆய்வாளர்கள் சிலர் தங்கள் கருத்துகளை முன்வைக்கிறார்கள். கடிதத்தில் என்ன எழுதி இருந்தார்? ‘காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ என்ற தலைப்பில் பாரதியின் படைப்புகளை 12 தொகுதிகளாக தொகுத்துள்ளார் சீனி.விஸ்வநாதன். இந்த நூலில் பாரதி எழுதிய அந்த ஆங்கிலக் கடிதம் இடம் பெற்றுள்ளது. சென்னை ஆவணக் காப்பகத்தில் இருந்து பெற்ற அரசு ஆணை நகலின் அடிப்படையில் அவர் இந்தக் கடித வாசகத்தை தந்துள்ளார். அந்த ஆங்கிலக் கடிதத்தின் தமிழாக்கம் இதோ: மாட்சிமைதாங்கிய பெண்ட்லன்ட் பிரபு, சி.சுப்ரமணிய பாரதியின் பணிவான விண்ணப்பம். மாட்சிமைதாங்கிய பிரபுவுக்கு இது இனிதாக இருக்கட்டும். புதுச்சேரியில் இருந்து என் சொந்த மாவட்டமான திருநெல்வேலி செல்லும் வழியில் கடலூரில் நான் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. எனது விஸ்வாசத்தைத் தெரிவித்து பல வாக்குறுதிகள் அளித்த பிறகு என்னை நேரில் சந்தித்து உரையாட மாட்சிமை தாங்கிய பிரபுவின் அரசு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்-டி.ஜ.ஜி. (சி.ஐ.டி.) அவர்களை புதுவைக்கு அனுப்பியது மாட்சிமைதாங்கிய தங்களுக்கு நினைவிருக்கும். அந்த உரையாடலின்போது அரசாங்கம் தொடர்பான எனது அணுகுமுறையில் முழுவதும் திருப்தி அடைந்த டி.ஐ.ஜி. அவர்கள், முற்றிலும் போர்க்காலத்தைக் கணக்கில் கொண்டு, மெட்ராஸ் மாகாணத்தின் ஏதாவது இரண்டு மாவட்டத்தில் காவலில் இருக்க விருப்பமா என்று என்னிடம் கேட்டார். அந்த யோசனைக்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஏனெனில், அரசியலை முற்றிலும் விட்டொழிப்பதாக நான் அறிவித்த பிறகு, போர் நடந்துகொண்டிருக்கும்போதுகூட, என் நகர்வுகளைத் தடுப்பதற்கான காரணம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்போதோ போர் முடிந்துவிட்டது. அதிலும் நேச அணியினர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் அமைதியான ஒரு குடிமகனாக பிரிட்டிஷ் இந்தியாவில் குடியமர்ந்து வாழ்வதற்கு எனக்கு எந்த சங்கடங்களும் நேராது என்று முழுவதும் நம்பி புதுச்சேரியில் இருந்து கிளம்பி வந்தேன். என் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக நான் கைது செய்யப்பட்டு கடலூர் மாவட்டச் சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளேன். இந்தச் சிறை நிலைமையை நீளமாக விவரித்து மாட்சிமைதாங்கிய பிரபுவுக்கு சோர்வை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால், இந்தச் சிறை நிலைமைகள் என்னைப் போன்ற பிறப்பும், அந்தஸ்தும் உடைய ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியாதவை மட்டுமல்ல, என் உடல் நலனுக்கு அபாயத்தை விளைவிக்கும் சாத்தியங்களையும் கொண்டுள்ளவையும்கூட. மாட்சிமைதாங்கிய உங்களுக்கு மீண்டும் ஒரு முறை உறுதி அளிக்கிறேன்: அரசியலின் அனைத்து வடிவங்களில் இருந்தும் விலகிவிட்டேன். பிரிட்டிஷ் அரசுக்கு விஸ்வாசமாகவும், சட்டத்தை மதிப்பவனாகவும் எப்போதும் இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுவிக்க உத்தரவிடும்படி மாட்சிமை தாங்கிய தங்களிடம் யாசிக்கிறேன். மாட்சிமை தாங்கிய தங்களுக்கு கடவுள் நீண்ட மகிழ்ச்சியான ஆயுளை வழங்கட்டும். மாட்சிமை தாங்கிய தங்களின் மிகப் பணிவுள்ள வேலைக்காரனாக இருக்கவேண்டுமென யாசிக்கிறேன். https://www.bbc.com/tamil/articles/c0dr20r0rd2o?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR27njOTiSSmpcP8lP4WqNuLxqAanLnhQKUNO2UMYGm5qdmyay1XEmxS8l8_aem_AVKmtKS1HTidUaIDyTN4pfJUe_RT7JidNIF6iXfCg7z0rAoy-MN47KOY3lmfKdxtsC8VLAOlF6BBSL9UV9R18JbR
  10. நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாகி விஜய் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்குமளவுக்கு முன்னேறுவது நல்லதே. எனது வாழ் நாளில் சீமான் அவரது நடைமுறை சாத்தியமற்ற கிறுக்குத்தனமான பேச்சுகளைத் தவிர்த்து பொ றுப்புணர்வுடன் அறிவு பூர்வமாக மேடையில் பேசுவதை பார்கக ஆசையாக உள்ளது. அவர் பொறுப்புணர்வுடன் செயலாற்றும் போது அவரின் மதிப்பு மனிதர்கள் மத்தியில் கூட உயரும் வாய்ப்பு உண்டு. அவரது கிறுக்குதனமான கொமடிப் பேச்சுகளை பார்தத்து ரசிக்கும் இளவட்டங்கள் அவர்களுக்கு maturity வந்தவுடன் Pokemon ஐ spongebob பிள்ளைகள் கைவிட்டு அடுத்த கட்ட மனித வளர்சசிக்கு செல்வதை போல சீமானை கைவிட்டுவிட்டு சென்றுவிடுவர். ஒரு சில மனவளர்சசி குன்றியவர்கள் அவருடன் தங்கி விடுவதும் உண்டு.
  11. @goshan_che ஒரு கட்சி போட்டியிட்ட தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்கு எண்ணிக்கையையை மொத்த வாக்காக எடுத்துக்கொண்டு ஒரு கட்சி பெற்ற வாக்கை வர்களின் வாக்கு சதவீதமாக கொள்வது ஒரளவு துல்லியமாக இருக்கும். ஒரிரு தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகளுக்கு இது பொருந்துமோ தெரியாது. ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகளுக்கு ஒரளவுக்கு பொருந்தலாம்.
  12. எட்டாப்பழம் புளிக்கும் என்பதை அழகாக கூறியுள்ளனர் இந்த மீம்ஸ் மூலம். இதற்கு @Kavi arunasalam அவர்கள் ஓவியம் வரைந்தால் எப்படி வரைவார்?
  13. தகவல்களுக்கு நன்றி. இந்த கோணத்தில் நான் சிந்திக்கவில்லை.
  14. விகிதாசார பிரதிநிதித்துவம் அமுல் செய்யப்பட்டால் பா.ஜ.க போன்ற பாஸிச கட்சிகளும் தமது சர்வாதிகாரத்தை காட்ட முடியாது. மோடி போன்ற கேவலமான பிரதமர் இந்தியாவை ஆண்டு இருக்க மாட்டார். இந்தியா முழுவதிலும் உள்ள சிறுபான்மை, பட்டியல் இன மக்கள் நன்மையடைவர்.
  15. கந்தையா, அது நடக்க வாய்பபு இல்லை. காரணங்கள் 1. ஆசிய மக்களுக்கு உரித்தான ஈகோ மனப்பான்மை, சுயநலம் என்பவை அந்த மக்களிடம் இருந்து வந்த அரசியல்வாதிகளுக்கும் உண்டு. அது இவ்வாறான அரசியலுக்கு தடை. 2. பா.ஜ.க ஆர் எஸ் எஸ் இன் இந்துத்துவா பாசிச கொள்கையை அமுல்படுத்தும் கட்சியாக இல்லாமல், மத அரசியலில் இருந்து வெளிவந்து இந்திய மக்களுக்கான மக்கள் அரசியலை செய்ய தயாராக வேண்டும். அதற்கு குறைந்தது வாஜ்பாய் போன்ற soft core அரசியல்வாதிகள் பா.ஜ.க தலைவர்களாக வரவேண்டும்.
  16. மோடிஎன்பவர் ஆர். எஸ். எஸ் இன் இந்துத்துவா பாசிசத்தை அமுல்படுத்தும் ஒரு கருவி மட்டுமே. அந்த கருவியின் காலம் ஏறத்தாள முடிந்து சக்கை போல் ஆர். எஸ் ஆராலேயே தூக்கி வீசப்படும் காலம் வந்து விட்டது. அந்த மோடி எப்படி சிங்களவனுக்கு ஆப்பாக இருப்பாராம். இவ்வாறான கற்பனைகள் தான் தமிழரின் பாரிய பலவீனம். காங்கிரஸோ, பா.ஜ.க வோ இருவரையும் சமாளிக்கும் வல்லமையான ராஜதந்திரம் சிங்கள அரசிகளிடம் உள்ளது என்பதை நேரில் பார்தத பின்புமா இப்படியான கற்பனைகள்.
  17. சீமான் மலையாளத்தை பூர்வீகமாக கொண்டவர். அவரின் மனைவி தாய்வழி தெலுங்கு. அவரின் மகன் மலையாள, தெலுங்கு , தமிழ் கலப்பினம் அப்படியாயின் சீமானின் தூய தமிழ் வாதம் சீமானுக்கே ஆப்பு அடிப்பதாக உள்ளதே! 😂 இனிமேலாவது சீமான் திருந்த வேண்டும்.
  18. 2019 பாராளுமன்ற தேர்தல் 2024 பாராளுமன்ற தேர்தல்
  19. ஏற்கனவே வாக்களிப்பு ஏபரல் 19 ல் முடிந்து விட்ட நிலையில் இவ்வாறான அங்க பிரதஷ்னத்தால் அளிக்கப்பட்ட வாகுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?
  20. மாட்டிறைச்சியை தடை செய்தால் மீன் விலை அதிகரிக்கும் என்ற நப்பாசையில் கடற்றொழிலாளர் சங்க செயலாளரும் போனாரோ. 😂
  21. ஈழத்தமிழரின் அரசியல் தொடர்பான உரையாடலை ஏதோ காரணத்துக்காக வேறு விடயங்களுக்கு திசை திருப்ப முயற்சிக்கின்றீர்கள். இதற்கு விரிவாக பதில் சொல்ல போனாலும் சிக்கல் தான். என்றாலும் உறவாடி கொலை செய்தல் என்ற உங்கள் கடைசி பந்தியில் நீங்கள் கூறியது உண்மை தான். அமிர்தலிங்கமும் உறவாடி, அவரைக் கொண்டே வாசலில் தம்மைச் சோதனையிடவேண்டாம் என்று சொல்ல வைத்து அவரின் மனைவி கையால் தேனீர் குடித்தவர்களாலே கொலை செய்யப்பட்டார். பிரேமதாசவும் அவர் வீட்டுக்கு முன் வசித்து உறவாடியவாடியவராலே கொலை செய்யப்பட்டார். ரஜீவ் கொலையும் அதே போலவே. இந்த பட்டியல் நீளும். ஆனால், எமது உரையாடல் அது பற்றி அல்ல என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
  22. பாராளுமன்ற தேர்தல் அதே ஒற்றையாட்சி அரசியமைப்பின் கீழ் நடத்தப்படுவதில்லையா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.