Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. கருத்தியல் ரீதியாக உரையாட முடியாத போது உண்மைகளை ஏற்றுகொள்ள முடியாதபோது தப்பியோட கிடைத்த நொண்டிச் சாட்டு. கிடைத்த சாட்டை விடாமல் …. Escape………. Escape 😂😂😂😂😂
  2. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுதந்திரமாக செயற்பட முடியாது. எலஙா அரசியல் முடிவுகளையும் நாம் புலிகள் மட்டும் தான் எடுக்கிறோம். புலிகள் சொல்வதை பேச மட்டும் தான் அவர்களால் முடியும் என்று அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரிவித்த பின்பு, அங்கு நடப்பவை பற்றி கூட்டமைப்பினர் என்ன கூறினாலும் அது புலிகள் கூறுவதாக தானே உலக நாடுகள் எடுக்கும். அப்படியருக்க அவர்கள் கூறிலாலென்ன கூறமல் விட்டாலென்ன.
  3. ராஜீவ் கொலைவழக்கில் விடுதலையான சாந்தனின் இழப்பிற்கும், ராஜீவின் நண்பரான சம்பந்தனின் இழப்பிற்கும் ஈழ தமிழ் மக்கள் தரும் பதில்... -Livingston Edinborough- என்ன ஒப்பீடு இது? இதில் லிவிங்ரன் எடின்பரோவில் இருந்து கூறியிருப்பது என்னவென்றால், சம்பந்தரும் யாராவது வெளிநாட்டு தலைவர் ஒருவரின் கொலைக்கு உடந்தையாக இருந்து குற்றவாளியாக தீர்ப்பு பெற்றிருந்தால் அவரது இறப்புக்கு பெருமளவு மக்கள் தொகை கூடியிருக்கும் என.
  4. வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த இல்லங்களை மூடும் உத்தரவு தெளிவாக தெரிவிக்கப்டட நிலையில் இதை பொய்செய்தி என்று கூற ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும். வட்சப் தகவல்களும் முகநூல் தகவல்களும் நம்பக தன்மை அற்றவை. https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/
  5. சிவ சிவ என்று கூறி பட்டை அடித்துவிட்டால் அவர்கள் என்ன அயோக்கியத்தனம் புரிந்தாலும் முண்டு கொடுக்க சிலர் வருவார்கள். இது யாழ்பாணத்தில் இயல்பானது.
  6. இது வாதமல்ல. இது தான் உண்மை. நிச்சயமாக சிங்க கொடியையோ புலி கொடியையோ தனது விருப்பத்தின் பேரில் சம்பந்தர் பிடித்திருக்க மாட்டார். தனது மன விருப்பதிற்கு மாறாக அவர் செயற்பட்டார். இதை அவர் தனது சுயநலனுக்காகவே செய்தார். அவரது இந்த இரண்டு செயலும் தமிழருக்கு நன்மை எதையும் கொடுக்கவில்லை. ஒரு அரசியல்வாதியாக அவர் பலனடைந்தார் எனக் கூறலாம்.
  7. தவறாக புரிந்து கொள்ளும்படி எழுதியதற்கு மன்னிக்கவும். அதற்காக வருந்துகிறேன்.
  8. அந்த 15 வருடங்கள் என்பது தமிழரின் அரசியல் நிலை என்பது 2009 ன் முன்பு எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளின் விளைவால் நொந்து நூடில்ஸ் ஆகி போயிருந்த நிலமை என்பது நேர்மையாக சிந்திக்கும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலமையை ஈடு கட்ட இந்த தலைமுறையில் யாராலும் முடியாது என்பதே துன்பகரமான உண்மை.
  9. @நிழலி சம்பந்தர் தனது அரசியல் வாழ்வில் முடிவெடுக்கும் பொறுப்பு வாய்ந்த தலைவராக உருவேடுத்தது 2009 இன் பின்னரே. 1977 ல் அவர் முதல் முறையாக பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதில் இருந்து 1983 வரையான குறுகிய காலப்பகுதியில் அவர் ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே. 1983 ல் ஆயுத போராளிகள் போராட்டத்தை முழுமையாக கையில் எடுத்த பின் 2004 வரை அவர் மற்றைய அரசியல்வாதிகளைப் போல செல்லா காசாகவே இருந்தார். போரட்டதை முழுமையாக வலுக்கட்டாயமாக (byforce) பொறுபெடுத்தவர்களுக்கே போராட்ட தோல்வியில் அதிக பொறுப்பு உண்டு. 2004 ல் தமிழ் தேசிய கூட்டமைப்பை புலிகளை ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்கும் நிபந்தனையுடன் புலிகள் அவரை அங்கீகரித்திருந்தாலும், சம்பந்தர் புலிகளின் கருத்துகளை சர்வதேசத்திற்கு ஒப்புவிக்கும் ஒரு பேச்சாளராகவே செயற்பட்டிருந்தார். தனது சொந்த கருத்துக்களை பொதுவெளியில் பேசும் உரிமை அற்ற ஒருவராகவே விடுதலைப் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தார். திரு அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே இதை தெரிவித்திருந்தார். புலிகள் மட்டும் தான் இங்கு அரசியல் செய்கிறார்கள் . நாம் சொல்வதை செய்வதை மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்ய முடியும். அவர்களால் சுதந்திரமாக இயங்க முடியாது என்று திரு அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாகவே தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்ததை இங்கு சுட்டிக் காட்ட விளைகிறேன். அவர் முழுமையான முடிவெடுக்கும் தலைவராக வந்த 2009 இன் பின்னரான காலப்பகுதியில் அவரால் அரசியல் தீர்வை கொண்டு வர முடியவில்லை. அவரின் குறுகிய கால அரசியல் தலைமை வெற்றிகரமாக செயற்படவில்லை என்பது ஏற்று கொள்ள தக்கதே. அதற்கான அரசியல் சூழ்நிலையும் அவரது குறுகிய காலத்தில் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், 2015 ம் ஆண்டுக்கு முன்பு மகிந்த ஆட்சியில் தமிழர் பகுதியில் படுமோசமான இராணுவ ஆட்சியே நேரடியாக நடை பெற்றது. மாவீரர் தினமோ வேறு தமிழர் சார்ந்த எந்த உரிமை அரசியல் நிகழ்வுகளோ நடத்த முடியாத நிலை இருந்தது. மகிந்தவும் கோத்தாவும் நினைத்தபடி மட்டுமே ஆட்சி நடை பெற்றது. 2016 ல் நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரிக்கும் அவரது முடிவு தமிழரில் உரிமை அரசியலை மேற்கொள்ளுவதற்கான ஒரு ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது. இன்று அவரை திட்டித் தீர்க்கும் புலம் பெயர் அரசியலாளர்கள் கூட தாயகத்துக்கு விசிற் அடித்து தமது குடும்ப உறுபகினர்களுடன் மகிழ்வாக இருக்க சந்தர்ப்பம் 2016 ல் அவரது அரசியல் முடிவினால் உருவான நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே ஏற்பட்டது. 2015 ன் முன்பு. தாயகத்திற்கு செல்ல தொடை நடுங்கிக் கொண்டிருந்து, 2016 ன் பின்னர் இலங்கை சென்ற பல புலம் பெயர் வீராதி வீரர்கள் பலரை நான் அறிவேன். மற்றப்படி ஆசிய நாடுகளில் அரசியல்வாதிகளுக்கு உள்ள வியாதியான சாகும்வரை பதவியில் இருத்தல் என்பது அவரையும் தொற்றிக் கொண்டது என்பதும் மறுக்கமுடியாததே. சம்பந்தரின் பல தவறுகள் விமர்சனத்துக்கு உரியவையே என்பதை ஏற்றுக் கொளுகிறேன். ஆனால் முழு பழியையும் அவர் மேல் போட்டு திட்டி தீர்ப்பது இழிவானவர்களின் செயலே. நிழலி, தாங்கள் தளத்தின் உரிமையாளர். எமக்கு இங்கு எழுத இடம் தந்ததற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். உங்களுடன் எதிர்வாதம் புரிந்ததற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
  10. இவ்வாறாக தமிழரிடையே மத பிரிவினைகளை மறவன்புலவு தேரடியாக செய்ய வேறு சிலர் தந்திரமாக மறைமுகமாக நச்சு விதைகளை மக்களின் மத்தியில் விதைக்கின்றனர். தமிழ் சிவில் சமூகம் என்று கூறுமர அமைப்புகள் இதனை கண்டும் காணாமல் விடும் நிலையே உள்ளது. வழமை போல் தலைக்கு மேல் வெள்ளம் போன பின்பே குய்யோ முறையோ என்று ஓலமிடுவார்கள். உலகத்தால் ஒதுக்கி வைக்கப்படும் இனமாக தமிழரை மாற்றும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள் போல் உள்ளது.
  11. சிறுவர் போராளிகளாக இயக்கத்தில் இணைந்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் அரசியலை கற்று கொடுக்காது போக்கிலியாக வளர்ததது யார் குற்றம்? அரசியலை கற்று கொடுத்திருந்தால் அவர்கள் சம்பந்தரை விட சிறந்த அரசியலை செய்திருக்கலாம்.
  12. உண்மைதான். முடியாவிட்டால் பொத்தி கொண்டு இருந்திருந்தால் முள்ளிவாய்கால் பேரழிவே நடந்திருக்காது. இது உங்கள் கூற்று.
  13. நேரடியான நேர்மையான நெத்தியடி பதில். 👍
  14. உங்களை பொறுத்தவரை, சம்பந்தர் ஒரு பத்து பேரை போட்டு தள்ளியிருந்தால் அதை மன்னித்திருப்பீர்கள்.😂
  15. கொலை செய்தவர்களை மன்னிக்கலமாம். கொலை செய்ததை சாட்சி சொன்னவனை மன்னிக்க கூடாதாம். 😂
  16. இதுவரை தமிழருக்கு தலைமை வகித்த அனைவருமே தமிழர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து பொறுப்பற்ற வகையில் நடந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர் அழிவுக்கும் தமிழரின் உரிமை அரசியல் பல தலைமுறைக்கு பின்தள்ளப்பட்டதற்கும் காரணமானவர்களே. இதில் சம்பந்தரை மட்டும் திட்டும் அரசியல் என்பது, தாம் விசுவாசம் வைத்திருக்கும் தலைவர்களின் மாபெரும் தவறுகளை மறைத்து சம்பந்தர் மீது மட்டும் முழுப் பழியையும் போடும் இழிவான அரசியலே.
  17. சம்பந்தர் மட்டுமல்ல இதுவரை தமிழர் அரசியலுக்கு தலைமை வகித்த அனைவருமே தோல்வியடைந்தவர்களாகவே மரணத்தை தழுவினர் என்பதே வரலாறு. அந்த வரிசையில் இப்போது சம்பந்தர். அன்னாரிர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  18. அதற்கு காரணம் உலக சனத்தொகை அதிகரிப்பு. 1924 ம் ஆண்டு உலக சனத்தொகை 1.5 பில்லியன். இன்று 7.9 பில்லியன். அதிக மக்கள் வாழ கட்டங்கள் வீடுகள் தேவை.
  19. உண்மை தான். மோசமான இனவாதத்தை எதிர் கொள்ள பல ஆண்டுகளுக்கு முன்பே, தனமு சக தமிழர்களையே தாழ்ததப்பட்டவர்கள் என்று ஓதுக்கி வைத்தும் இன்றும் அதை கடைப்பிடிக்க துடிக்கும் ஒரு சமுதாயத்துக்கு இங்கு இனவாதம் என்பதே தெரியவில்லை தான். 😂
  20. ஈழத்தமிழர்கள் விசித்திரமானவர்கள். உலகம் முழுவதும் இனவாதிகளும் வலதுசாரிகளும் அதிகாரத்துக்கு வருவதை விரும்பும் அதே வேளை இலங்கையில் மட்டும் சமத்துவமான அரசியல் வேண்டுமாம்.
  21. குஜராத்தில் இப்படியான கள்ள சாராய மரணங்களும் அதிகம் உண்டு என்று கேள்விப்பட்டேன். https://en.m.wikipedia.org/wiki/2022_Gujarat_alcohol_poisoning https://www.newindianexpress.com/amp/story/nation/2024/Jan/15/two-dead-several-hospitalized-after-consuming-alcohol-in-gujarat-cause-of-death-unclear https://www.business-standard.com/amp/article/current-affairs/drugs-liquor-worth-over-rs-6-400-cr-seized-in-gujarat-in-two-years-123031700836_1.html
  22. மது இல்லாத ஒரு மாநிலத்தை உருவாக்குவது நடக்காத காரியம். வேண்டுமென்றால் மது இல்லாத இந்தியாவை உருவாக்கினால் அது சாத்தியமே.
  23. அப்படி சிக்கலை உருவாக்கி தமிழர் பிரச்சனையை தீர்க்க முடியுமா? அப்படி என்ன சிக்கல் வந்து விட போகிறது. வேட்பாளர்களுக்கு 50 வீத வாக்குகள் கிடைக்காமல் விட்டால் இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் ஏற்பாட்டு ஏற்கனவே அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. அதன் படி ஜனாதிபதி சுமுகமானக தெரிவு செய்யப்படுவார். காற்றுள்ள போதே தூற்றிகொள்ள தெரியாத தமிழர் தரப்பு இப்படி காலாகாலமாக கூறிக்கொண்டே மெல்ல மெல்ல இலங்கை தீவில் அரசியல்பலமிழக்க போகிறது என்பதற்கான அறிகுறிகளே தெரிகின்றன.
  24. உண்மை என்ன வெனில் ஒட்டுமொத்தமான ஆயுத போராட்டதினால் தமிழருக்கு கிடைத்த பலன் புலப்பெயர்வு அதன்மூலம் புலம் பெயர்ந்த தமிழரின் பொருளாதார முன்னேற்றம், புதிய தலைமுறையின் கல்வி, தொழில்நுபட்ப முன்னேற்றம் மட்டுமே. தாயகத்தில் வாழ்ந்து வரும் மக்களை பொறுத்தவரை விளைவு அரசியல் ரீதியான பாரிய இறங்கு முகம். பாரிய உயிரிழப்புகள், பொருளாதார ஏற்றத்தாழ்வு. தங்கி வாழ்வோர் தொகை அதிகரிப்பு இன்னும் பல. ஆயுதப் போராட்டத்தின் பலனகளை அனுபவிப்பவர்களுல் டக்லஸும் ஒருவரே.
  25. யாழ் மாவட்டம் தழுவிய ரீதியில் வாள்வெட்டு சுற்றுப்போட்டி ஒன்றை நடத்த வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.