Everything posted by island
- பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இதில் எனக்கு முரண்பாடு உண்டு. தமிழ் மக்களினதும் அவர்களின் பிள்ளைகளினது தியாகத்தாலும், தமிழ் மக்களினது பங்களிப்பால் கிடைத்த ஆயுத பலத்தாலும், புலி வீரர்களது போர் திறமையாலும், புலிகள் இயக்கம் அடைந்த பேரம் பேசும் உயர் வலுவை உபயோகித்து அன்றைய நிலையில் ரணிலுக்கு அழுத்தம் கொடுத்து இன்று கனவில் கூட நினைக்க முடியாத ஒரு அரசியல் தீர்வை உருவாக்கி சர்வதேச நீடுகளின் ஒத்துளைப்புடன் அதை அமுல் செய்ய புலிகளின் அரசியல் பிரிவை பலமுடையதாக்க செய்யும் வல்லமையை அன்று கொண்டிருந்தது. மேற்கு நாடுகளும் அதையே விரும்பி பேச்சுவார்தைக்கு திரும்புமாறு புலிகளை கேட்டுக்கொண்டேயிருந்தனர். புலிகள் அதை புறக்கணித்து மீண்டும் யுத்ததிற்கு செல்ல முடிவெடுத்ததன் பலனே முள்ளிவாய்கால் பேரழிவு. ஆகவே, அன்று ரணிலை ஜனாதிபதியாக்கி அவருடன் பேசியிருப்பதன் மூலம் புலிகள் பலவீனமாக்கப்பட்டிருக்க மாட்டார்கள். மாறாக, அரசியல் ரீதியில் பலப்பட்டிருப்பார்கள். இன்று மூக்கால் அழும் நிலையும் வந்திருக்காது என்பது எனது கருத்து.
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
புத்திசாலிகளை தொடர்ந்து மௌனமாக்கி அதையே தமது புத்திசாலித்தனம் என்று நினைத்ததன் விளைவுகளையே தமிழினம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
-
பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
15 வருடத்தில் மட்டுமல்ல தமிழ் தரப்பில் இதுவரை எவருமே எதையும் புடுங்கவில்லை. பறி கொடுத்ததை மட்டுமே செய்தார்கள். இனிமேலும் புடுங்குவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. இப்படியே இணையத்தில் வந்து ஆளையாள் திட்டிவிட்டு போய் சேரவேண்டியதே தமிழ் தேசியம், என்ற நிலைக்கு கீழ் இறங்கி வந்து விட்டதே சாதனை. இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்பவே அசத்துறீங்க. 😂
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
- IMG_5647.jpeg
- IMG_5646.jpeg
- IMG_5648.webp
- IMG_5650.jpeg
- IMG_5649.webp
- IMG_5651.jpeg
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
- IMG_5652.jpeg
-
வெளிவருகிறது பொன்சேகாவின் போா் குறித்த நுால் – பல உண்மைகள் வெளிவரும் எனத் தகவல்
யுத்தம் நடந்த காலத்தில் நடந்த உண்மைகளை யாரும் நேர்மையாக எழுதினால் யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பின் ஆதரவாளர்களும் அதை ரசிக்கப்போவதில்லை என்பதுடன் அவர்களை அது கோபப்படுத்தும். இருதரப்பும் தமது வீரப்பிரதாபங்களை மட்டுமே பீற்றிக்கொள்ளும். இவர்களை எல்லாம் கடந்த, ஓரளவுக்காவது மக்களை நேசிக்கும் அரசியலாளர்கள் உருவாகும் போதே இனவாதம் ஒழிந்து காத்திரமான அதிகாரப்பகிர்வு ஏற்படலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அப்படியான நிலைக்கான சாத்தியக்கூறுகள் கூட தெரியவில்லை.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
முள்ளிவாய்ககாலில் தமது குடும்ப உறவுகளை நினைத்து அழுத தமிழர்களையும் வெசாக் கூடுகளை ரசித்த தமிழர் களையும் இரு வேறுபட்ட தமிழராக நினைத்து ஒப்பிட்டு பார்ப்பதே சுத்த அபத்தம். இவர்களில் இருவரும் ஒருவராக இருக்கும் சாத்தியமும் உண்டு.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
பொது வேட்பாளர் என்பது ஒரு யுக்தி. இன பிரச்சனை தீர்வுக்கு இந்த யுத்தி எந்த பலனையும் கொடுக்காது என்பதையே பொதுவான கருத்தாக பலரால் தெரிவிக்கப்பட்டது. அது ஏற்கப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படலாம். ஆனால், யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டியது ஆட்சி மாற்றத்தின் விளைவுகளை அனுபவிக்கப்போகும், வாக்களிக்கவிருக்கும் மக்களே. பல ஆயிரம் கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் எம்மால் அதை எப்படிக் கூற முடியும். ஆட்சி மாற்றத்தினால் வரும் விளைவுகளை எதிர் கொள்ள தயார் அற்ற வேடிக்கை மட்டும் பார்கக இருக்கும் நானோ நீங்களோ யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்யலாம்?
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
பொது வேட்பாளர் என்பது இலங்கையின் இன பிரச்சனைக்கு எந்த விதமான முன்னேற்றங்களையும் ஏற்படுத்தப்போவதில்லை. இனவாதம் இன ஒடுக்குமுறை என்று வரும் போது இன சமத்துவ ஜனநாயகத்தைக்காக அனைத்து இனங்களையும் உள்வாங்கிய தூரநோக்கு போராட்டங்களே வெற்றி பெறும். தனியே ஒரு இனத்தை முன்னிறுத்திய வேட்பாளரும் அவரை ஆதரித்து இடம் பெறும் பரப்புரைகளும் மேலும் இனவாத சக்திகளுக்கும் இனவாதத்தை தூண்டும் சக்திகளுக்குமே உதவி செய்யும். இன விரிசலையும் இனங்களுக்கு இடையிலான சந்தேகத்தையும் பகைமையை அதிகரிக்கவே உதவும். இலங்கையின் வரலற்றிலேயே இதற்கு உதாரணங்கள் உண்டு.
-
தமிழ்ப் பொது வேட்பாளர் : என் இவ்வளவு வன்மம்? - நிலாந்தன்
1977 பொது தேர்தலில் ஒற்றுமையை காட்டினால் விடிவு வரும் என்றார்கள். பின்னர் வந்த ஆயுத இயக்கங்கள் தேர்தலை புறக்கணித்தால் விடிவு வரும் என்றார்கள். பின்னர் 2004 ல் திரண்டு வாக்களித்தால் விடிவு வரும் என்றார்கள். மக்கள் திரண்டு வாக்களித்து 22 பாராளுமன்ற உறுப்பினரைக் கொடுத்தார்கள். 2005 ல் தேல்தலை புறக்கணித்தால் விடிவு வரும் என்றார்கள். விடிவை எதிர்பார்தத மக்கள் அதிர்ந்தே போனார்கள். பின்னர் 2013 ல் வடக்கு மாகாண சபை தேர்தலில் திரண்டு வாக்களித்தால் விடிவு வரும் என்றார்கள். இப்போது பொது வாக்காளருக்கு வாக்களித்தால் விடிவு வருமாம். இன்று ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி தமது வாழ்வை கழிக்கும் நிலாந்தன் அன்று உரியவர்களுக்கு இதே போல இடித்துரைத்திருந்தால், இந்த அரசியல் ஆய்வுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம்.
-
யாழ். வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கும்பல் ஒன்று அடாவடி
யாழ் வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்த இளைஞனின் நண்பர்கள் இருபத்தைந்து பேர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையின் பொருட்களுக்கு பலத்த சேதத்தை செய்துவிட்டு நேற்று (7) தப்பிச் சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை ஊழியர்களின் தவறினால் தமது நண்பர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தரது நண்பர்கள் ஆவேசமாக அலறியடித்துக்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இளைஞர்களின் தாக்குதலால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மூன்று இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதோடு தாக்குதலுக்கு உள்ளான இரண்டு வைத்தியசாலை ஊழியர்களும் காயமடைந்துள்ளனர். https://www.ceylonmirror.net/139121.html?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR1vayQjeQJdkEqbb6RnY9tyMus2r1Sa0Y1rnkkbKKhLzQP_mWUv_4GumCQ_aem_AYZ3aB0oksFiPYuO7AnERKF4Y4lVydEfdZ9oF50mTOFkYW1xDi_MyWeipBv9i_VuIRiZxAUYI_NZJjgMmjW0oaIE
-
லண்டன் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் தரையிறக்கம்!
மிக நீண்ட காலமாகவே ஶ்ரீலங்கா ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலா நாடு. இலங்கைக்கு படையெடுக்கும் மேற்குலக சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை ஒரு 3 ம் உலக நாடு, என்ற புரிதல் உண்டு. அந்த புரிதலுடன் அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே ஶ்ரீலங்காவிற்கு இட்ட பெயர்தான் taste of paradise என்பதாகும். இனவாதம் அதனால் ஏற்பட்ட யுத்தம் இலங்கைக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தினாலும் ஒரு சுற்றுலா நாடு என்ற ரீதியில் இலங்கை மீண்டும் சுற்றுலாப்பயணிகளின. சொர்க்கமாகவே வளர்ச்சியடைந்து வருகிறது.
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்
திரு எரிக் சோல்ஹைம் நோர்வே அரசினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்ததைக்கான அனுசரணையாளர் மட்டுமே. சம்பந்தப்பட்ட இரு தரப்புமே பேச்சுவார்த்தையை மூலமான அரசியல் தீர்வு காண்பதில் முழுமையான பற்றுறுதியுடன் இல்லாமல் தத்தமது வித்தியாசமான அஜண்டாவுடனேயே பேச்சுவார்ததை காலத்தில் செயற்பட்டு மீண்டும் யுத்தம் ஏற்படவும் பேரழிவு ஏற்படவும் காரணமாக இருந்தன. இந்நிலையில் எரிக் சோல்ஹைம் அவர்களை குற்றம் சாட்டுவதில் எந்த பிரயோசனமும் இல்லை.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
அன்று தமிழ்மக்கள் பொது வேட்பாளரை நிறுத்தி மகிந்த தேர்தலில்வென்றிருந்தால் அதன் பாதிப்பை தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனுபவித்திருப்பார்கள். @விளங்க நினைப்பவன் கூறியது போல் அன்று தமிழ் மக்களின் வாக்குகள் செல்லா காசாக்கப்படவில்லை என்பதை 2015 க் கு முன்பும் 2015 க் கு பின்பும் தாயகம் சென்ற புலம் பெயர் மக்களாலேயே வெளிப்படையாக உணரக்கூடியமாக இருந்தது.
-
தமிழ் பொது வேட்பாளர் குறுகிய அரசியல் - சட்டத்தரணி சுவஸ்திகா
தமது சொந்த மக்களுக்கே எந்த பிரயோசனமும் அற்ற தேர்தல் பகிஷகரிப்பு போன்ற உதவாக்கரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் அரசியல் செய்யும் தரப்பின் கடந்த கால வாடிக்கை. அதன் தொடர்சசியே இந்த பொது வேட்பாளர் என்ற பிரயோசனமற்ற தமிழரின் வாக்குகளை செல்லாக்காசாக்கும் வழமையான விளையாட்டும்.
-
தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
@ரஞ்சித் நான் எழுதும் விடயங்களை முழுமையாக புரிந்து கொள்ள முயலாமல் என்னை ஒரு பரம வைரி போலும் தமிழ் தேசியத்துக்கு எதிரானவன் போலவும், ஒற்றையாட்சியை வலியுறுத்துபவன் போலவும் சித்தரித்து நீங்கள் எழுத, பின்னர் நான் உங்களுக்கு இன்றைய அரசியல் நிலையின் உண்மை நிலையையும் இந்த நிலைக்கு எம்மைக் கொண்டு வந்து விட்டதன் கடந்த கால அரசியலைப் பற்றிக் கூறி பதிலெழுத, நீங்கள் முன்னதை விட ஆக்கோஷத்துடன் என்மீது வசைமாரி பொழிய இப்படியே இவ் விவாதம் நீண்டு செல்கிறது. எனவே, இந்த விவாதத்தை நிறுத்தி நீங்கள் முன் வைக்கும் அரசியல் முன் மொழிவு விரைவில் நடைமுறைச் சாத்தியமாக மக்களால் ஏற்றுகொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு அந்த அரசியல் வெற்றியளித்து, உங்களது அரசியல் முன்மொழிவின் வினைதிறனால் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தாலே போதும் நான் எனது இன்றைய நிலை தொடர்பாக எனது கருத்துகளை வாபஸ் வாங்கி உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்.