Everything posted by island
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அப்ப ஏன் சர்வதேசத்துக்கு செய்தி சொல்லப் போகிறோம் என்று வெளிக்கிட்டவையாம். சர்வதேசம் கேட்டதா தங்களுக்கு செய்தி சொல்ல சொல்லி? சர்வதேசம் கேட்காமலேயே வடகிழக்கு இணைத்த சுயாட்சியை வட கிழக்கில் 10 வீதமான மக்கள. மட்டுமே ஆதரிக்கிறார்கள் என்ற சேதியை சொன்னதேன்?
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
அட! இந்த அரியநேந்திரனே இனந்தெரியாத ரவுடிகளை வைத்து வெற்றி பெற்ற வேட்பாளரை கடத்திச் சென்று மிரட்டி அவரின் வெற்றியை தட்டிப்பறித்து பாராளுமன்றப் பதவிக்கு வந்தவரா? அது தெரிந்தும் அதைபற்றி இங்கு அதைக் கண்டிக்கும் நேர்மை இங்கு எவருக்கும் இல்லை போல் இருக்கிறது.
-
தமிழ் கட்சிகள் யாழில் அவசர சந்திப்பு
அனுராவின் கட்சிக்கு தமிழ் பிரதேசங்களில் ஒரு சில தொகுதிகளாவது வரும் பாராளுமன்ற தேர்தலில் கிடைக்க வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் கல்வி அறிவுள்ள நேர்மையான இளையவராக இருக்கவேண்டும். பழைய கறள் கட்டிய வெற்று கோஷங்களுடன் மாயைகளை பேசுபவர்கள் வயதில் இளையவர் என்றாலும் அவரை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
2004 ம் ஆண்டு தேர்தலில் தானே பல கள்ள வாக்குகளை போட்டதாக சிறீதரன் வெளிப்படையாக கூறினார். அப்படி கள்ள வாக்கு போட்டதால் தான் 2004 ம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் குடைத்ததாக கூறினார். அவ்வாறு வெளிப்படையாக அவர் தெரிவத்த விடயம் பற்றி யாரும் இங்கு உரையாடுவதில்லை. சிறீதரன் கூறுகிறார் அதை பற்றி பேசினால் அந்த காலத்தில் இருந்தவர்களை எல்லாம் பிழை சொல்ல வேண்டி வரும் என்று. அப்படியானால் அந்த காலத்தில் இவருடன் கிளிநொச்சியில் இருந்தவர்கள் பல கள்ள வாக்குகளை போட்டனர் என்ற உண்மையை கூறுகிறார்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
கள்ளா! என று தெருவில் சிலர் கத்தியது மட்டுமே முக்கிய ஆதாரம் போன்று நீங்கள் எழுதியது தங்களுக்கு சாதாரணமான விடயமாக தோன்றி இருக்கிறது.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் உடனடியாக முறையிடுவதும் தேர்தல் ஆட்சேபனை வழக்கு தொடுப்பதும் தான் நடைமுறை. அதை விடுத்து தனது அல்லக்கைகளை வைத்து கள்ளா! கள்ளா! என்று கத்துவதல்ல. அது என்றுமே ஆதாரம் ஆகாது. ஒரு கருத்து களத்தின் மட்டுறுத்துனராக பொறுப்பான இடதத்தில் இருக்கும் நீங்கள் இதை எழுதியது உண்மையில் ஆர்ச்சரியத்தை அளிக்கிறது.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
விரிவான தகவல்களுக்கு நன்றி. இந்த தேசியவாத வியாதி பிடித்தவர்களின் எப்போதுமே கருத்தியல் ரீதியில் உரையாட மாட்டார்கள். எடுத்தவுடன் ஒருவரை பற்றி அவதூறு புரிந்து அந்த அவதூறை மட்டுமே ஆயுதமாக பயன் படுத்துவர். அதிலும் இந்த தீவிர தமிழ் தேசியவாதம் பேசுபவர்கள் அதில் ஒருபடி மேலே சென்று மற்றவரை நம்ப வைப்பதற்காக தாமே கட்டமைத்த பொய்களையும் பிம்பங்களையும் மாயைகளையும் அவர்களே ஒரு கட்டத்தில் பேதைகள் போல நம்ப தொடங்கி, அதன் பின்னர் அவர்களே அதற்கு பலியாகி தம்மை நம்பிய மக்களையும் பலியாக்குவர்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
உண்மையில் ஒருவரின் வாக்குகளை மற்றவர் திருவது சாத்தியமற்ற விடயம். தோற்றுவிட்டோம் என்ற ஆற்றாமையில் ரவிராஜின் மனைவி புலம்பிய விடயத்தை வைத்து அவரின் ********** இப்படியான கோயபல்ஸ் பாணி பொய்கள் இட்டுக்கட்டப்பட்டன. சுமந்திரனின் அரசியலிலும் பல தவறுகள் உண்டு. அதை திருத்தி கொள்ளாவிட்டால் அவரை மக்கள் நிராகரிப்பார்கள்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
சிங்கள அரசிடம் உலக அரசறிவியல் தெரியாதவர்களாக வெறும் உணர்சசி அரசியல் செய்து தோற்றவர்கள் பட்டியல். ஜி.ஜி பொன்னம்பலம் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அ. அமிர்தலிங்கம் வே. பிரபாகரன் ஆர். சம்பந்தன் சுமந்திரன் எதிர் காலத்திலாவது அறிவை பயன்படுத்தி அரசியலை செய்தால் வெற்றி கிடைக்கும்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
உண்மை. நிச்சயம் திருடி இருப்பார். அவர்களில் பல திருடர்கள் உண்டு தானே!
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
அத்துடன் ஒரு துறைசார் அமைச்சர் அந்த துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் என்பதும் தேவையானது.
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலுக்கும் எமக்கும் தொடர்பு இல்லை அது இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் ஜனாதிபதி தேர்தல் அதை புறக்கணிகயுங்கள் என்று பிரச்சாரம் செய்த தேசியக் கும்பலும், பொது வேட்பாளர் என்றும் தாயகம் தன்னாட்சி என்று வீர உரைகள் ஆற்றி மக்களை உசுப்பேற்றிய தேசிய கும்பல்களும் ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி பாராளுமன்றம் செல்ல தமக்குள் அடிபடும் நாள் நெருங்குகிறது.
-
கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை
40000 சிங்கள இராணுவத்தினரின் சவப்பெட்டிகளை கொழும்புக்கு அனுப்புவோம் என்று சமாதான காலத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இனவெறியர் தானே இந்த கஜேந்திரன். அவர் அவ்வாறு தான் கூறுவார்.
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
இருப்பினும் பாராளுமன்ற தேர்தல் முடிய மீண்டும் அமைச்சாக அவர் முயலக் கூடும். ஆனால், அநுரவிடம் இவரின் பாச்சா பலிக்காது என்றே நினைக்கிறேன். அநுராவுக்கு மண்டை பிழை என்று பிள்ளையான் கூறிய காணொளி வேறு சமூக வலைத்தளங்களில் உலாவுகிறது.
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
அரசியலமைப்பின் பிரகாரம் பிரதம மந்திரி ராஜினாமா செய்தால் மொத்த அமைச்சரவையும் பதவி இழக்கும். எனவே பிரதமர் தினேஷ் குணவர்தன ராஜினாமாவை கையளித்த உடனையே டக்லஸ் தனது தானாகவே இழந்துவிட்டார். தனியே ராஜினாமா செய்ய வேண்டியதில்லை.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இருக்கலாம். ஆனால், தாயக மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கவில்லை என்ற பொருள்பட எப்போதும் தமிழன் கூறிய கருத்துக்கே பதிலளித்தேன். தனக்கு பணி நிரந்தரபாக்கியவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுயமாக சிந்தித்து தான் அவர் வாக்களித்தார்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நான் பெரும்பான்மை மக்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பதையே தெரிவித்தேன்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அவர்கள் சுயமாக சிந்தித்து தான் வாக்களித்து இருக்கிறார்கள். அதில் என்ன சந்தேகம்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
தம்மை தாமே ஏமாற்றிவிட்டு, தாம் உருவாக்கிய மாயைகளை தாமே நம்பி அதற்கு பலியாகிவிட்டு ஐயோ, உலகம் ஏமாற்றிவிட்டது என்று புலம்பல் வேறு. 😂
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
1994 ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிகா சிறிது காலம் பிரதமராக இருந்து விட்டே பின்னர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார் என நினைக்கிறேன். என் ஞாபகம் சரி என்றால் இவர் மூன்றாவது பெண் பிரதமர்.
-
தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை வழங்காமல் உண்மையான மாற்றம் சாத்தியமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ளவேண்டும் - பா.உ கஜேந்திரகுமார்
இப்படி வெறும் அறிக்கை அல்லது பத்திரிகை சந்திப்பு என்று சொல்லிக்கொண்டிராமல் செயலில் இறங்க வேண்டும். அநுரவுடன் சென்று அவருடன் அரசியல் தொடர்புகளை வளர்த்து தமிழருக்காக பெற கூடிய நன்மைகளை படிப்படியாகவேனும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவேண்டும். அவரின் அரசில் இணைந்து பணியாற்றி முடிந்தளவு நன்மைகளை தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டும். அதை விடுத்து தாயகம், தேசியம், சுயநிர்ணயம், ஒரு நாடு இரு தேசம் என்று சும்மா வேலைக்காகாத வெற்று கோஷங்களை மட்டும் வருடக்கணக்கில் பேசிவிட்டு போவதில் எந்த பயனும் இல்லை.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தற்போது கல்குலேற்றர்கள் அதிகம் பாவனையில. இல்லை. கைத்தொலைபேசியில் இருக்கும் கல்குலேற்றரை தான் மக்கள. அதிகம் உபயோகிக்கிறார்கள். அதனால் குழப்பம் வருவது இயற்கை தானே. 😂 தற்போதெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதை விட கைத்தொலைபேசியில் யூருயூப் காணொளிகள்அதிகம் பார்ப்பதால் எதிர்காலத்தில் தொலைக்காட்சிக்கு பதிலாக தொலைபேசியை தெரிவு செய்யும் சந்தர்ப்பமும் உண்டு. 😂
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
எல்லாரும் சுமந்திரனை திட்டி தீர்த்தினம். சுமந்திரனுக்கு இதோட ஆப்பு எண்டாங்கள். கடைசில சுமந்திரன் ஆதரிச்ச சஜித்துக்கு தான் வட கிழக்கில் அதிக வாக்குகள். 😂 சங்குக்கு கட்டு பணமும் அம்போ😂😂😂
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு
பொதுவாக தங்களை விட அரசியல் அறிவு உடையவர்களையே அரசியல் ஆலோசகராக வைத்து கொள்வது உலக வழமை. கஜேந்திரகுமார் மட்டும் உலக வழமைக்கு மாறாக குதிரை கஜேந்திரன் என்ற அரசியல் தற்குறியை அரசியல் ஆலோசகராக கொண்டுள்ளார்.😂
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தமிழ் பிரதேசங்களில் சஜித்தின் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றியா?