Everything posted by island
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இல்லை.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அது தான் கூறுகிறேன் புலிகள் மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் அனைத்தும் நியாயமானவை என்றும் புலிகளால் கொல்லப்பட்ட அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்களே என்றும், இங்கு நீங்கள் வசிக்கும் நாட்டுப் பத்திரிகைகள் இணையங்கள் , பின்னூட்டங்கள், முக நூல்கள் ஆகியவற்றில் அந் நாட்டு மொழியில் எழுதி புலிகள் பயங்கரவாதிகள் அல்ல கொல்லப்பட வேண்டியவர்களையே அவர்கள் கொன்றார்கள் என்று நிறுவலாமே? அதை செய்வது சொந்த வாழ்ககைக்கு உலை வைக்கும் என்பதால் எந்த தேசியரும் அதை செய்ய மாட்டார் என்பது தெரியும். 😂
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தமிழரின் அரசியல் போராட்டம் இன்னும் பல தலைமுறைக்கு கூட முன்னெடுக்க முடியாத அவல நிலையை உருவாக்கி விட்டுச் சென்றது பொற்காலம் இல்லை. ஒருவரை அடித்து துவைத்து ICU நோயாளராக்குவது எளிது. அவரை மீண்டும் நலமாக்க நீண்ட காலம் எடுக்கும். ஆனால், கருத்து தெரிவித்தாலே படுகொலை செய்யப்படுவர் என்ற உயிர்ப் பயம் இன்றி மக்கள் வாழ்வது ஒரு ஆறுதல் அவ்வளவுதான்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 இந்த கேள்வியை கேட்கும் போது அனைத்து மக்களுக்கும் இப்படி சிரிப்பு வரும். நீங்களும் மனதுக்குள் சிரித்தீர்கள் அல்லவா விசுகு. 😂😂😂😂😂
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சந்திரிக்கா தோல்வியை தழுவவில்லை புத்தன். 1999 ம் ஆண்டு தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தார். யாழ்பாணத்தில் கூட கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார். 1999 ல் அவரை மனித வெடிகுண்டு மூலம் கொல்ல முயன்று பயங்கரவாதிகள் என்ற அரசின் பிரச்சாரத்துக்கு எம்மவர் துணை புரிந்தார்கள்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சுருக்கமான கேள்வி. தீர்வுத்திட்டத்தை தயாரித்த காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டது சரியானதா? ஆம் / இல்லை ஆம் என்றால் புலிகள் மேற்கொண்ட அரசியல் படுகொலைகள் நியாயமானவை என்று நீங்கள் வாழும் ஜேர்மன் நாட்டு பத்திரிகையில் எழுதி அதை ஜேர்மன் மக்களால் ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியுமா? ஏன் ஜேர்மன் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் நாங்கள் தமிழர்கள் அல்லவா என்று விதண்டாவாமன பதில் வேண்டாம். ஏனெனில் ஒரு நாட்டை அமைப்பதென்றால் உலக நாடுகளின் அங்கீகாரம் இல்லாமல் அதை அமைக்க முடியாது. உங்களை மட்டும் கேட்கவில்லை இங்கு கொலைகளை நியாயப்படுத்தும் ஒவ்வொருவரும் தாம் வாழும் நாட்டு மக்களை அரசாங்கங்களை அதனை ஏற்றுக் கொள்ள வைக்க முடியுமா? மேலே எத்தனை செயல்கள் கூறியுள்ளேன். அதை மீண்டும் கூறவா?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
ஒரு தகராறும் இல்லை. அரசியல் வலிமையற்ற மக்கள் கூட்டமாக எமது தமிழ் மக்கள் வந்து சேர்ந்ததற்கன காரணிகளை மட்டுமே நேர்மையுடன் கூறுகிறேன். எமது விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று எதிரி பிரச்சாரப்படுத்துகையில் அவர்களின் பிரச்சாரத்தை உலக நாடுகளை நம்ப வைக்கும் வகையிலான ஆதாரங்களைக் கொடுத்த புலிகளின் செயல்களை மட்டுமே நான் விமர்சிக்கிறேன். யுத்த களத்தில் இராணுவத்துடன் போராடிய போராளிகளையோ யுத்த களத்தில் மடிந்த மாவீரர்களையோ நான் என்றுமே விமர்சிக்கவில்லை.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சரியாக சொன்னீர்கள் அந்த ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதால் மிச்சம் இருக்கும் தமிழ் மக்களும் தப்பித்தார்கள் என்று தமிழ் மக்களை நினைக்க வைக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார்கள். இவர்கள் தமிழ் ஈழத்தின் அரசியலமைப்பை எழுதினால் kill first, explain later" என்று எழுதக் கூடிய மன நிலை படைத்தவர்களே. இங்கு இப்படி கொலைகளுக்கு வக்காலத்து வாங்குவதை இவர்கள் வசிக்கும் நாட்டு மொழியில் அந்த நாட்டு பத்திரிகைகளுக்கு எழுத முடியுமா? இதை ஒரு சவாலாகவே விடுக்கிறேன்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீங்களும் சுமந்திரன் சுமந்திரன் என்று ஒரு தனி நபர் மீது உங்களுக்கு உள்ள வக்கிரத்தை வருடக்கணக்காக இங்கு வந்து கொட்டலாம் என்றால் எமது தமிழ் இனத்தின் அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டு எமது தலைமுறையை நிரந்தர அடிமைகளாக்க செய்த அறிவற்ற செயல்கள் பற்றி பேசக்கூடாதா? ஏன் சரண்டைந்தார்கள் என்பது இந்த திரியிலேயே உள்ளது. சென்று வாசித்துப் பாருங்கள். வட்டுக் கோட்டையில் அண்மையில் நடந்த சம்பவத்துக்காக 1990 ல் அட்வான்ஸாக யாரோ வேறு உத்தியோகஸ்தர்களை கொலை செய்யப்பட்டார்கள் என்று கூறவருகின்றீர்களா?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீலனின் தீர்வு திட்டத்தில் போதாமை இருந்திருந்தால் அதை உரிய அரசாங்களுடன் பேசி அதை சீரமைப்பது தான் நாகரீகம் அடைந்த ஒரு சமுதாயங்கள் செய்வது. அதற்காக அதனை உருவாக்கியவரை போட்டுத் தள்ளுவது காட்டுமிராண்டித்தனமானது என்பதை இப்போது கூட புரிந்து கொள்ளும் பண்பு இல்லைப் போல உள்ளது. இந்த நிலையில் சிங்கள இனவாதிகளிடம் இதை எப்படி எதிர் பார்பபது? இவர்கள் கையில் நாடோ அதிகாரமோ செல்லக் கூடாது என்ற தீர்மானத்தை உலக நாடுகளை எடுக்க வைத்தது இவ்வாறான பலவேறு பயங்கரவாதச் செயல்களே. அவை ஒவ்வொன்றையும் இங்கு விலாவாரியாக எழுதமுடியாது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீங்கள் கூறிய விடயங்கள் நடப்பதற்கு முன்பே ஆயுதமின்றிச் சரணடைந்த 600 இலங்கைப் பொலிசாரை ஈவிரக்கமின்றி கொலை செய்தார்களே. 1986 ல் தொடங்கிய ஊழித்தாண்டவம். எல்லாப்பாவமும் இறுதியில் அப்பாவித்தமிழ் மக்கள் தலையில் இடியாக வந்து இறங்கியது தமிழ் மக்களின் வாழ்வில் வந்த சோகம் தான்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இனவழிப்பு, போர குற்றம் என்று சர்வதேச சமுகத்திடம் நீதி கேட்டுக்கொண்டே அநீதியான அக்கிரமமான இவ்வாறான கொலைகளை கயமைத்தனமாக நியாயப்படுத்தி எக்காளமாக பேசுவதைப் பார்ககும் ஒரு வேளை நாடும் போது நாடும் அதிகாரமும் கிடைத்திருந்தால்……………. இயற்கைக்கே பொறுக்கவில்லைப் போலும்.
-
தமிழரசுக்கட்சியின் குழப்பநிலைக்கு சுமந்திரனே காரணம்: எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
மேலே உள்ளது ஒரு செய்தியா அல்லது வெறும் காழ்புணர்வினால் எழுதப்பட்ட வசை பாடலா? சுமந்திரன் மற்றயவர்களை போல ஒரு சராசரி அரசியல்வாதி மட்டுமே. அவரின் மீது எல்லா குற்றச்சாட்டுகளையும் சுமத்தி மற்றய கள்ளர்கள் எல்லாம் தப்பிக்கும் உத்தியே இந்தக் கட்டுரை. சுமந்திரன் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தமிழரின் போராட்டம் பூச்சிய நிலைக்கு கீழே பல மடங்கு ஆழத்திற்கு சென்று விட்டது.
-
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுக்கும் மோடி அரசு!
13 ஐ அமுல்ப் படுத்துமாறு இந்தியா கொடுக்கும் அழுத்தம் இலங்கைக்கு சுகமளிக்கும் மசாஜ் போல் இருப்பதால் 13 ஐ அமுல்ப்படுத்தி அந்த மசாஜ் சுகத்தை இலங்கை இரக்க விரும்பவில்லைப் போலும். 😂
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
படு கொலை செய்யப்பட்ட அத்த 600 பொலிசாரும் யுத்தத்தில் ஈடுபட்டு சரணடைந்தவர்கள் அல்ல. சமாதான பேச்சுவார்தை நடந்த சம காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களை புலிகள் சுற்றி வளைத்த போது அன்றைய ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஆயுதமின்றி சரணடைந்த உத்தியோகஸ்தர்களே. “நீங்கள் சரணடையுங்கள் பேச்சுவார்த்தை மேசையில் உங்களை வெளியே கொண்டுவர தாம் நடவடிக்கை எடுக்கிறோம்”, என்ற உறுதி மொழியோடு கிழக்கு பொலிஸ் அத்தியட்சகருக்கு ஜனாதிபதி பிரேமதாச விசேட பணிப்புரையை விடுத்திருந்தார். கருணா, பதுமன் மீது மட்டும் பழி போட்டு தப்பிக்க முடியாது. கருணா இயக்கத்தை விட்டு வெளியேறும் வரை அதற்காக தண்டிக்கப்படாதது தலைமையின் உத்தரவின் படியே அது நடந்தது என்பதைத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
கந்தையா போரிடும் புலிகளை இராணுவம் கொன்றால் அது இன அழிப்பும் ஆகாது போற்குற்றமும் ஆகாது. ஆனால், ஆயுதமின்றி சரணடைந்த புலிகளை இலங்கை இராணுவம் கொலை செய்தது நிச்சயமாகப் போர்க குற்றம் தான். ஆனால் 1990 ல் ப ஆயுதமின்றி சரண்டைந்த பொலிசாரை புலிகளும் சுட்டுக் கொலை செய்த போர்க்குற்றத்தை செய்துள்ளார்கள் என்பது தமிழ் மக்களின் போராட்டத்தை பின்னடையச்செய்த நிகழ்வுதான்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அண்மையில் ஒரு zoom உரையாடல் கேட்டேன். அதில் இவ்வாறான பல அரசியல் படுகொலைகளைப் பற்றியும் ஆயுதமின்றிச் சரணடைந்த 600 இலங்கைப்பொலிசார் புலிகளால் கொலை செய்யப்பட்டது பற்றியும் பேசப்பட்டது. அதில் கலந்து ஐரோப்பாவில் இருந்து கலந்து கொண்ட தேசிய பற்றாளர் ஒருவர் கொலைகளை நியாயப்படுத்தி பேசினார். கொல்லப்பட்ட துரோகிகள் எல்லோரும் துரோகிகள் என்றும் எனவே கொல்லப்பட வேண்டியவர்களே என்று கூற குறுக்கிட்ட கலந்துரையாடலின் நெறியாளர் சர்வதேச விசாரணை ஒன்று வருமானால் தமிழர் தரப்பில் இதைக் கூற முடியுமா என்று கேட்க, பதட்டப்பட்ட தேசியபற்றாளர் இந்த விடயங்கள் எல்லாம் சர்வதேச விசாணைக்குட்படுத்த முடியாது. அது தமிழ்மக்களின் விவகாரம். முள்ளிவாய்க்கால் விடயத்தை மட்டுமே சர்வதேச விசாரணை செய்யலாம் என்று பதிலளித்தார். கோத்தபாயவுக்கும் அந்த தேசியருக்கும் என்னால் எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. 😂
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நானும் இந்த செய்தியை வாசித்து அறிந்துள்ளேன். வந்தவர்களை பரிசோதிக்க வேண்டாம் என்று காவலாளிகளிடம் யோகேஸ்வரன் கூறியது வந்தவர்கள மீது வைத்த நம்பிக்கையில். அமிர் கொடுத்த பிஸ்கட்டுகளை சாப்பிட்டுவிட்டு அவரின் மனைவி தயாரித்த தேனீரை அருந்தி விட்டு கொலை செய்தது என்ன அறம் என்று தெரியவில்லை. இவ்வாறான பல படுகொலைகள் மூலம் சிங்கள அரசுக்கு எமது போராட்டத்தை அழிக்க உடந்தையாக தவறு.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நன்றி ஜஸ்ரின். நில உச்சவரம்பு சட்டம் இன ரீதியான அடக்கு முறை சட்டம் என்று முதல் தடவையாக இந்த திரியில் கேள்விப்படுகிறேன். அது சம்பந்தமான தரவுகள் உண்டா?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
@vasee இலங்கையில் இனவாத அரசுகள் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தது அனைவரும் அறிந்த விடயமே. அதற்கு எதிராக தான் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. அதை எவரும் இங்கு மறுக்கவில்லை. அப்படி இருக்கும் போது தேவையில்லாமல் அது பற்றி பேசுவது ஏன்? ஆயுதப் போராட்டத்தை நடத்திய அனைத்து அமைப்புகளாலும் நிகழ்த்தப்பட்ட பல அரசியல் படுகொலைகள் அனைத்துலக ரீதியில் பிரச்சாரப் படுத்தப்பட்டு எவ்வாறு அது எமது போராட்டத்தின் பின்னடைவுக்கும் இறுதியில் பேரழிவுக்கும் காரணமாக அமைந்தது என்பதை பற்றியே இங்கு என்னால் உரையாடப்பட்டது. இதை வெளிப்படையாக கூறுபவர்கள் எப்படி இலங்கை அரசுக்கு உடந்தையாக இருப்பார்கள்? சும்மா வேண்டுமென்றே அடுத்தவர் மீது எழுந்த மானமாக பழி போடுவது தர்ககரீதியான விவாதமாக அமையாது என்பது உங்களுக்கு தெரியாதா? வேண்டுமென்றே இந்த விடயத்தை திசை திருப்புவதற்காக நில உச்சவரம்பு சட்டத்தை கூட துணைக்கு அழைத்திருக்கின்றீர்கள். நில உச்ச வரம்பு சட்டம் இன அடிப்படையில் அமைந்ததாக புதிதாக கதை கட்டுகின்றீர்கள். நில உச்சவரம்பு சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்று எந்த தமிழ் தலைமையும் கூறவும் இல்லை அதற்கெதிராக போராட்டமும் மேற்கொள்ளவில்லை. இன ரீதியிலான தரப்படுத்தலே தமிழர்களுக்கு எதிரானது. அது கூட 1977 ல் ஐதேக அரசால் மாவட்ட அடிப்படையில் மாற்றப்பட்டபோது பின் தங்கிய தமிழ் பிரதேச மாணவர்கள் பலனடைந்தார்கள். அப்போது யாழ்பபாண மாணவர்கள் இங்கு படித்துவிட்டு பரீட்சையை வன்னி சென று தோற்றியதன் மூலம் வன்னி தமிழ் மாணவர்களின் வாய்ப்புகளை தட்டி பறித்த செயல்கள் குறித்துப் பேச மாட்டீர்கள். தர்ககரீதியான விவாதம் என்பது அடுத்தவர்மீது பழி போட்டு அவரை துரோகியாக்கி வெற்றி கொள்வதல்ல. புரிந்து கொள்ளுங்கள்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
கொலை செய்யும் ஒவ்வொரு கொலைகாரனும் தமதுகொலைக்கு இப்படி பல காரணங்களை சோடித்து தாம் செய்த கொலையை நியாயப்படுத்துவது உலக வழமை. கொலைகார்ரின் ஆதரவாளர்களும் அதையே செய்வர். நீங்களும் அந்த உலக வழமைக்கு விதிவிலக்கு இல்லைத் தானே. 😂
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உண்மை தான். ஏற்றுக்கொள்கிறேன். தங்களுக்கு கருத்து சொல்லும் உரிமை உண்டு. அதை நான் என்றும் மறுக்கவில்லை. என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்தை மறுக்கும் பாணியில் நீங்கள் கேள்வி கேட்டதால், உங்களுக்கு அது சொல்லப்படவில்ல, நீங்கள் அதை ஏற்கவேண்ட அவசியம் இல்லை என்று, உங்கள் கருத்துரிமையை மதித்தே அதை தெரிவித்தேன் நண்பரே. கருத்துரிமையை அனைத்து ஆயுத்தாரிகளும் மறுத்து அவ்வாறு சுதந்திரமாக சிந்திப்பவர்களை, கருத்து தெரிவித்தவர்களை நர வேட்டையாடிய துயர வரலாறு இனி வேண்டாம் என்ற உங்களது கருத்துடன் நானும் உடன் படுகிறேன்
-
வீதியில் உலரவைக்கப்படும் 'நெல்லை' உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்
ஒவ்வொரு வீட்டு வளவுகளில் பற்றைகள் வளர்ந்து கவனிப்பாரற்று கிடப்பதால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் வருவதாகவும் அதனை துப்பரவு செய்யாதவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுபதாகவும. செய்திகள் வருகின்றன. அவ்வாறான காணிகளை துப்பரவு செய்து அதில் காயப்போடுவதுடன் அந்த வளவுகளை பராமரிப்பதுடன் நோய்களில் இருந்தும் காத்து கொள்ளலாம். அதை விடுத்து வாகனப் போக்குவரத்துக்கென அமைக்கப்பட்ட வீதிகளில் இவ்வாறு செய்வதை பற்றி அங்குள்ள சிவில் சமூகம் கூட எதிர்ப்பு தெரிவிக்காது இருப்பது ஆச்சரியம் அளிக்கின்றது. ஒரு வாகனத்தை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக மிக சொற்ப நேரம் நிறுத்தி வைப்பதற்கே நாம் பயப்ப்படும் உலகில் இது ஆச்சரியமான விடயம் தான்.
-
வீதியில் உலரவைக்கப்படும் 'நெல்லை' உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்
இதற்கான மாற்று வழிகளை விவசாயிகள் தான் சிந்தித்து நடைமுறைப்படுத்த வேண்டும். பயிரிடப்படாத தரிசு நிலங்கள் நிறைய உண்டு தானே அங்கு படங்குகளை விரித்து காயப்போடலாம் தானே. கிடங்கு முடங்கான மோசமான தெருக்கள் இருந்த காலத்தில் தெருக்களில் நெல்லைக் காயப் போடும் வழக்கம் இருக்கவில்லை. அபோது எங்கே காயப்போட்டார்களாம்?
-
வீதியில் உலரவைக்கப்படும் 'நெல்லை' உணவாக உட்கொண்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு; முல்லை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர்
தெருவில் நெல்லை காயப்போடுவது மக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் செயல். நெல்லை காயப் போடுவதற்கு வேறு பல வழிகள் இல்லையா? அதை முயற்சிக்காமல் இப்படி சோம்பேறித்தனமாக தெரிவில் காயப் போடுவது தெருவில் அசௌகரியப்படுத்தும். விபத்துக்களுக்கு வழி சமைக்கும்.