Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. அதாவது தேர்தல் புறக்கணிப்பு மூலம் தமிழரின் இருப்பை இலங்கையில் தக்க வைத்து கொள்ளலாம் என்று கூறியுள்ளீர்கள். அது எப்படி என்றும் அதன் நடைமுறைச்சாத்தியத்தையும் கூறுவீர்களா?
  2. பெல்ஜியத்தை சேர்ந்த Tim tense என்ற இந்த யூருப்பர் கடந்த வருடமும் இலங்கை சென்று பல வீடியோக்களை தனது யூருயூப்பில் வெளியிட்டிருந்தார். இவ்வருடமும் சென்றுருந்தார். பெரும்பாலான வீடியோக்களில் ஶ்ரீலங்காவையும் அந்நாட்டு மக்களின் hospitality யையும் புகழ்ந்தே உள்ளார். ஶ்ரீலங்கா சுற்றுலாவை மேற்குலகில் பிரபல்யப்படுத்தியே உள்ளார். இந்த வர்த்தகர் தொடர்பான விடியோவைக் கூட Avoid this man in Kaluthura என்ற தலைப்பில் சுற்றுலாப் பயணிகளுக்கான விழிப்புணர்வு பதிவாகவே வெளியிட்டுள்ளார்.
  3. சுற்றுலா அனுபவங்கள் எப்போதுமே மகிழ்வானவை. கேட்க ஆவலை தூண்டுபவை. மிகுதி பயண அனுபவங்கள் அறிய ஆவலாக உள்ளேன். முடிந்தால் Palma வின் இயற்கை அழகு ததும்பும் படங்களையும் இணைக்கலாம்.
  4. மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள். கடற்கரையோரம் காலாற நடப்பதற்காக கால்களை தயார் செய்தார் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதை நினைத்தீர்கள்.
  5. எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது. இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே! அல்லது நீங்கள் கூறலாமே!
  6. நிச்சயமாக இவை இரண்டும் ஒன்றல்ல. திட்டமிட்ட குடியேற்றங்களும் கொழும்பு போன்ற Metropole city ஐ நோக்கிய தமிழரின் குடிப்பரம்பலும் ஒன்றல்ல. ஆனால், இவற்றை தடுத்திருக்க அல்லது தமிழரின் இனப்பரம்பலை வட கிழக்குப் பிரதேசங்களில் அதிகரித்திருத்து இதன் ஈடு செய்திருக்கக் கூடிய அரசியல் தீர்வை பெற கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமக்கே உரி ய பாணியில் தவறவிட்டதன் விளைவுகளில் இதுவும் ஒன்று. தற்போதைய எமது நிலையில் எமக்கு சாத்தியமானவற்றை பெற தாயக/ புலம் பெயர் அரசியலாளர்கள் ஒன்றாக இணைந்து முயற்சிப்பது ஒரு வழி (ஒருவருக்கொருவர் துரோகி பட்டங்களை வழங்குவதன் மூலம் தம்மை புனிதராக காட்ட விளையும் மூடத்தனமான அரசியல் செய்வதை விடுத்து) அல்லது, தாயகத்தில் தமிழரின் இருப்பை பாதுகாக்க வேண்டும் பொது எண்ணம் கொண்ட, துணிச்சல் கொண்ட இளைஞர்கள் வருங்காலத்தில் அமையும் அரசாங்கங்களுடன் (முஸ்லீம் மக்களைப் போல்) அமைச்சரவையில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் வரும் அனுகூலங்களை பாவித்து எமது மக்களின் குடிப்பரம்பலை வட கிழக்கில் மெதுவான வேகத்திலாவது அதிகரிக்க செய்ய முயற்சிக்க முடியும். எமது மக்களின் உற்பத்தி, கல்வி, பொருளதாரம் ஆகியவற்றில் எம்மை பலப்படுத்தி இலங்கைத் தீவில் நாமும் ஒரு சக்தி என்பதை காப்பாற்றிக் கொள்ளலாம். அப்படி இல்லை எமது பழைய வழி முறைகளில் நாம் வீரர்கள் என்று நிருப்பிக்க கங்கணம் கட்டி உசுப்பேற்றிக் கொண்டிருந்தால், இப்படியே இணையங்களிலும் முகநூல்களிலும் மட்டும் தேசியம் பேசி காலத்தை வீண்டித்து மாயாஜால அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் இலங்கையில் தமிழரின் அரசியல் பலம் இன்னும் இப்போதிருப்பதை விட இன்னும் மோசமாகும் ஆபத்து கண்முன்னே தெரிகிறது. ஒவ்வொன்றாக இழந்துவிட்டு எதிரி மோசமானவன் என்பதை உலகத்திற்கு காட்டுவதற்காகவே இந்த அரசியலை செய்தோம் என்று கூறிக்கொண்டிருப்பது எம்மை நாமே ஏமாற்றும் மடைத்தனமான அரசியல். அதையே கடந்த 70 வருடங்களாக செய்து வருகிறோம்.
  7. விசுகு, நான் உங்களை சொன்னதாக தவறாக விளங்கி விட்டார்கள். அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டதற்கு எனது எழுத்தின் தெளிவின்மை காரணம் என்றால் மன்னித்தருள்க. நான் கூறியது எமது அரசியல்வாதிகளின் அரசியல் அவ்வாறு தான் உள்ளது என்பதையே.
  8. ஆசிய நாடுகளை பொறுத்தவரை படித்தவர்கள் தான் கூடுதலாக பகுத்தறிவுக்கு முரணாண பலவற்றை நம்புவர்களாக உள்ளனர். ஸ்ரிபன் ஹக்கின் தனது நூலில் எழுதியிருந்தார், தான் கீழ் திசை நடுகளுக்கு சொற்பொழிவாற்ற சென்ற போது அடுத்த 2000 கோடி வருடங்களில் பிரபஞ்ச சுருக்கம் ஏற்பட்டு கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதி அழியலாம் என்ற, “பிரபஞ்ச சுருக்க கோட்பாடு” என்பது பற்றி அங்கு குறிப்பிட வேண்டாம் என்றும் அது பங்கு சந்தையில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டாராம். அந்த அளவுக்கு 2000 கோடி வருடங்களுக்கு பின்பு நடக்கும் என கூறப்படும்( அதுவும் இன்னமும் முழுமையாக நிரூபிக்கப்படாத ஆய்வில் இருக்கும் ஒரு கோட்பாடு) விடயங்களை பற்றி கூட கவலைப்படும் அளவுக்கு அங்கு படித்தவர்கள் கூட இருகிறார்கள்.
  9. @goshan_che @kandiah Thillaivinayagalingam இதில் குமாரசாமி இணைத்த முதலாவது பதிவும் முன்பு யாரோ ஒருவர் நையாண்டியாக பதிந்த பதிவாக இருக்கலாம். அது கோஷான் கூறிய முதலாவது வகையை ஒத்த சிலரால் உண்மை என நம்பி முக நூல்களில் பகிரப்பட்டதாக இருக்கும். அது போல் கோஷானின் நையாண்டிப்பதிவும் அவ்வாறு உண்மை என நம்பி பகிரப்படும் அளவுக்கும் அதை நம்பும் குறிப்பிட்ட தொகை ஆட்களும் உள்ளனர்.
  10. முடிஞ்சா அடுத்து என் தெருவுக்கு வாடா பாப்பம் என்று கூறிவிட்டு, அடுத்து எங்கே அரசியல் செய்யலாம் என்று தேடி அங்கே சென்றுவிடுவோம். 😂😂
  11. நான் கூறியது மக்களை பற்றியும் மத வேறுபாறு இன்றி போராடிய இளைஞர்களை பற்றியும் மட்டுமே. தனிப்பட எந்த இயக்கங்களை பற்றியும் அல்ல. மோடி அல்ல. ஆர். எஸ்.எஸ் என்பது எனது அவதானிப்பு.
  12. தமிழரது உரிமைப் போராட்டத்தில் மதங்களை கடந்து மக்கள் இணைந்து போராடியதும் மதங்களை கடந்து பல போராளிகள் இணைந்ததும் உயிர் நீர்த்ததும் முன்னேற்றங்கள் அற்ற வீண் வேலை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் போல.
  13. பொதுவாகவே மேற்கு நாடுகளை வெறுக்கும் நீங்கள் மேற்கு நாடுகளில் ஒன்றான ஜேர்மனியை அங்கீகரித்து ஜேர்மனியில் உள்நாட்டு சட்டங்களை அங்கீகரித்து அங்கு வாழ்வதும் உங்கள் நலன்களின் அடிப்படையிலேயே.
  14. எமது இனத்துக்குள் மத பிளவுகள் நடந்து நமக்குள் நாம் அடிபட்டால எப்படி எமது இனம் வாழ முடியும்? கருத்தைப்பார்காமல் ஏதோ என்னிலை இருக்கிற கடுப்பிலை எழுதீற்றீங்க போல. இண்டைக்கு இன்றும் ரெண்டு பெக்கை எடுத்திட்டு படுத்திட்டு நாளைக்கு கருத்தை வாசிச்சுப் பாருங்க குமாரசாமி. 😂
  15. நான் காலிஸ்தானை உதாரணம் காட்டியது நீங்கள் கூறிய விடயத்துக்கக அல்ல. தமது நலன்களை முன்னிறுத்தி மற்றயவற்றை புறக்கணித்தல் என்பதை தமிழரும் செய்துள்ள நிலையில் மற்றயவர்களை அதற்காக குற்றம் சாட்டுவது அபத்தம்.
  16. நான் கூறவந்த விடயம், தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக சமரசம் செய்வதும், சில ராஜதந்திர உறவுகளை மேற்கொள்ளுவதும் உலக வழமை. அதற்காகவே காலிஸ்தானை உதாரணம் காட்டினேன். தமிழீழம் ஒன்று உருவாகி இருந்தாலும் அதன் பொருளாதார நலன்களை முன்னிறுத்தி, தனக்கு இலாபம் தரும் வர்த்தகத தொடர்பில் இருக்கும் ஒரு நாட்டினுள் நடக்கும் மனித உரிமை விவகாரங்களை தமிழீழமும் கருத்தில் எடுத்திருக்காது. இது இயல்பானது. நாட்டின் நலன் கருதி அவ்வாறு தான் நடந்து கொள்ளவேண்டும். ஆகவே இதல் மற்றய நாடுகளை குற்றம் சாட்டுவது எமக்குப் பயன்றறதுடன் எமக்கு பாதகமாகவும் அமையும். ஒரு நாடு என்ற அங்கீகாரத்துடன் உள்ள தனது எதிரிக்கு உலகில் இயல்பாக உள்ள அனுகூலங்கள் என்ன என்பதையும் உலக அங்கீகாரமற்ற இயக்கம் என்ற ரீதியில் உலகில் இயல்பாக எமக்கு உள்ள பிரதிகூலங்கள் என்ன என்பதையும் ஆழமாக சிந்தித்து தனது அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டியது போராட்டதை நடத்தும் விடுதலை இயக்களின் கடமையே தவிர உலக நாடுகளின் வேலையோ மக்களின் வேலையோ அல்ல. உதாரணத்திற்கு தன்னுடன் ராஜதந்திர உறவு இல்லாத நாட்டு ராஜதந்திரிகளை தமது நாட்டில் இருந்து வெளியேற்றுவது ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் நடைமுறை. உலக அங்கீகாரத்துக்காக போராடும் ஒரு விடுதலை அமைப்பு அதே நடைமுறையை பின்பற்றுவது ராஜதந்திரமல்ல. ஐரோப்பியயூனியன் தம்மை பயங்கரவாத பட்டியலில் இட்டது என்பதற்காக அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகள் யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து அவர்களை வெளியேற்றிய செயலால் இலாபமடைந்தது ஶ்ரீலங்கா அரசே. வெறும் உணர்ச்சிவசப்பட்டு இதை சிலர் சிலாகிக்கலாம். ஆனால் உலக அளவில் எமது நிலையை உணர்ந்தே நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேனுல் அதனால் விளையும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். இது போல பல விடயங்களைக் கூறலாம். இவையெல்லாம் இனி யோசித்து என்ன பலன் என்றோ அல்லது இவை பேசாப்போருள்கள் அல்லது பேசாமல் மறைக்கப்பட வேண்டியவை என்று யாராவது நினைத்தால் அந்த அதே போன்ற தவறுகளையே இனியும் எதிர்காலத்திலும் செய்து எம்மை தாமே நாசப்படுத்திக்கொள்வோம்.
  17. மக்களிடையே மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை சிதைத்த விட்டு வெடுக்குநாறி மலையைக் காப்பாற்றி அதை வைச்சு என்ன பண்ணுறது?
  18. உங்கள் உழைப்பறியோ உங்கள் தனிப்பட்ட வாழ்வு பற்றியோ நான் எதுவும் பேசவில்வும் இல்லை அது பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. தமிழர் அரசியலை பற்றி விமர்சிக அனைவருக்கும் உரிமை உண்டு. தனி நபர்களை விமர்சிக்கவில்லை. பொதுமக்களின் வாழ்வை பாதிக்கும் அரசியல் முடிவுகளை எடுக்கும் அரசியல் செய்த/ செய்யும் எல்லோரதும் அரசியல் நடவடிக்கைகளை எவரும் விமர்சிக்கலாம். (கவனிக்க அவர்களது தனிப்பட்ட வாழ்வை அல்ல) எவராவது தான் செய்யும் அரசியல் நடவடிக்கைகளை யாரும் விமர்சிக்க கூடாது என்று நினைத்தால் அவர் அரசியலில் ஈடுபடவோ தலைமை வகிக்கவோ அருகதை அற்றவர். இந்த விடியோவை முதல் முதல் பார்தத போது துவாரகா என்று வந்த பெண்ணுக்கு தான் தான் அடிவிழுவதாக நினைத்தேன். பின்னர் தேன் இவர் வேறு ஒருவர் என்பதை அறிந்தேன்.
  19. உண்மைக்கும் உங்களுக்கும் வெகு தூரம். யாராவது உண்மைகளை பேசினாலே சேறடித்துவிட்டார்கள் கொச்சைபடுத்திவிட்டார்கள் என்று மூக்கால் அழுவது சென்றிமென்ற் பேசி உண்மைகள் பேசுவதை தடுக்க நினைப்பது உங்கள் வாடிக்கை தான். அதற்காக உண்மைகளை பேசாமல் இருக்க முடியாதே!
  20. அமெரிக்கா மட்டுமல்ல தமிழர்களாகிய நாமும் அப்படித்தான். 1980 களின் ஆரம்பத்தில் சீக்கியர்களின் காலிஸ்தான் தனி நாட்டுக் கோரிக்கை வலுவடைந்து பிந்தரன்வாலே தலைமையில் போராடியபோது அவர்களை இந்திரா காந்தியின் அரசு அடக்கி ஒடுக்கியபோது எந்த தமிழ் இயக்கங்களுக்கே (புலிகள் உட்பட்ட) அதற்கெதிராக மூச்சசுகூட விடவில்லை. ஏன்? 1984 ல் பொற்கோயிலில் அவர்களின் தலைவர் உட்பட பல போராளிகளை இந்திய இராணுவம் கொன்ற போதும் அவர்களின் பிரச்சனையை தீர்க்க அரசியல் ரீதியில் முயலாது இராணுவத் தீர்வை நாடிய போதும் எந்த தமிழ் ஆயுத இயக்கங்களோ மிதவாத அமைப்புகளோ அதற்கெதிராக மூச்சு கூட விடவில்லை. ஏன்? சுயநலம். நங்கள் மட்டும் சுயநலவாதிகளக இருப்போம் மற்றவர்கள் எல்லோரும் தமது தமது நலன்களை விட்டு எமக்கு உதவ வேண்டும் என்ற நினைப்பே பச்சை சுயநலத்தின் வெளிப்பாடே.
  21. அனைத்துலக நோர்வே மூலம் நேரடியாகவே தலையிட்ட நிலையில், உலகத்தை பகைத்து போருக்கு மீண்டும் செல்வதன் ஆபத்தையைம் அப்படி அப்போரில் தோல்வி ஏற்பட்டால் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போகும் அரசியல் சூனிய நிலையையும் சாதாரண மக்களாலேயே கணிக்க கூடிய நிலையில், உலக நாட்டு தூதுவர்களுடனும் பல ராஜதந்திரிகளுடனும் அடிக்கடியான சந்திப்புக்களை மேற்கொண்ட சம்பந்தப்பட்டவர்களால் அதுவும் ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர் கிறிஸ்ட் பற்றனின் நேரடி எச்சரிக்கைக்கு பின்னரும் கணிக்கமுடியாமல் இருந்தது என்பதை நம்ப முடியவில்லை. பாரிய மனித அவலம் தமிழீழதை அமைக்க சாதகமாக அமையும் என்ற மாயையில் மக்களின் அழிவு தொடர்பாக எந்த பொறுப்புணர்வும் அற்றதாகவே இறுதி சில வருடங்களாக பேச்சுவார்தையை புறக்கணிக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டதோடு யுத்தத்திற்கான சூழ்நிலையும் உருவாக்கப்பட்டது. பேச்சுவார்ததையில் நாம் கேட்டது கிடைத்திருக்கவிட்டாலும் இன்றைய நிலையை விட மிகவும் மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் அதே வேளை புலிகளுக்குள் இருந்த திறமைமிக்க அரசியல் போராளிகள் உயிருடன் இருந்து மக்களுக்கு தலைமை வகித்திருக்க முடியும். சிங்கள அரசுக்கும் சிங்கள மக்களின் பொதுப்புத்திக்கும் யுத்தத்தின் மூலம் புலிகளை தோற்கடித்தோம் என்ற மமதை இல்லாமல், பேச்சு வார்ததை மூலம் சமாதானமாகவே அவர்களின் ஆயுதத்தை மௌனித்தோம் என்ற மரியாதை புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும் இருந்திருக்கும். இதை வீம்புக்காக சிலர் மறுக்கலாம். ஆனல் இன்றைய அவல நிலையை விட மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் என்பதை பொது அறிவுடன் சிந்திக்கும் எவரும் மறுக்க முடியாது.
  22. பத்திரிகைச் செய்தி 1 தமிழர் பாசறைப் பத்திரிகை 10.04.4354 திங்கட்கிழமை. தமிழ் பெருங்குடிகளின் தொன்மை, அவர்களின் வரலாற்றை அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கு நாடுகள் எப்படியெல்லாம் மறைத்து வருகின்றனர். உலகை ஆண்ட தமிழர்கள் இன்று நாடு நாடற்ற இனமாக மாற்றப்பட்டுள்ளதென்றால் அதற்கு காரணம் இந்த மேற்குலக நாடுகளே. அவர்கள் இந்திய சிறிலங்கா நாடுகளின் மூலம் தமிழரை அழித்ததோடு அவர்கள் தொன்மைகளை மறைக்கும் கைங்கரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மேற்கு நாடுகளை மட்டுமல்ல இந்த உலகையே செல்வ செழிப்பாக்கியவர்கள் தமிழர்களே என்ற உண்மையை தமிழர் வரலாறு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் உடாசா கோபாலு கண்டறிந்துள்ளார். இற்றைக்கு 23 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, கோஷான் சே என்ற எமது தமிழ் பெரும்பாட்டனின் குறிப்புகளை ஆதாரங்களை மீட்டெடுத்த உடாசா கோபாலு அதை நூலாக உருவாக்க, அதை மக்கள் தூய்மைவாதக் கட்சியின் தலைமைச் செயற்பாட்டாளர் சேரமான் மக்கள் முன் வெளியிட்டு பலத்த கைதட்டல்கள் விசிலடிகள் மத்தியில் உரையாற்றினார். எமது பெரும்பாட்டன் கோஷானின் குறிப்புகளை இணையங்களில் இருந்து அழித்து விட அமெரிக்க ஏகாதிபத்திய சிஐஏ முயன்று வருவதாகவும், அதற்காகவே மைக்ரோசொவ்ற் நிறுவனத்துக்கு பெரும் தொகைப்பணம் கைமாறியுள்ளதான தகவல்களை, “தமிழ் நீ குழாய்ச் சங்கம்” என்ற செய்தி இணையம் வெளியிட்ட வீடியோவை மேற்கோள் காட்டி உரையாற்றிய அவர், கோஷானின் குறிப்புகளைப் பாதுகாக்க அதனை PDF ஆக பிரதியெடுத்து தமது வரவேற்பறையில் தொங்க விட்டு, தமிழர் பெருமையை நிலைநிறுத்த வேண்டும் என்றும் மக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததோடு அதை செய்யாமல் விட்டால் நீ தமிழனே அல்ல என்று நரம்பு புடைக்க கூறினார். அத்துடன் 45 நூற்றாண்டுகளுக்கு முன்பு புறாக்களில் மூலம் தகவல்களை பரிமாறிக்கொண்ட தமிழன் தகவல்களை அனுப்ப புதிய முறைகளைப் பற்றி ஆராய்ந்தான். அந்த வகையில் தகவல்களை அனுப்ப புதிய முறையை கண்டு பிடித்த ஒரு தமிழ் பெருமகுடிமகன் அதை சோதனை செய்வதற்காக தனது தந்தைக்கு “என்னப்பா” என்று கேட்டு தகவலை அனுப்ப, அவரை ஏமாற்றிய அமெரிக்க நிறுவனம் அந்த தொழில்நுட்பத்தை திருடி, என்னப்பா என்ற அழகு தமிழ் வார்ததையை திருடி WhatsApp என்று தனதாக்கி கொண்ட வரலாற்றையும் “ஏமாற்றப்பட்ட தமிழா” என்ற தலைப்பில் விடியோ வெளியிட்ட நீ குழாய் சங்க தலைவர் சேட்டை செம்மொழியான் தெரிவித்தார். உடாசா கோபாலு கண்டறிந்த, எமது பெரும்பாட்டன் கோசான் சே யின் கலவெட்டுகளை ஒத்த குறிப்புக களை மறைக்க அமெரிக்க சிஐஏ யுடன் சேர்ந்து சதி செய்த பேராசிரியர் அறிவுமதியின் முயற்சி தமிழர் வீரப்படையின் துரிதமான செயற்பாட்டால் முறியடிக்கப்பட்டது. பத்திரிகை 2 அறிவுச்சுடர் பத்திரிகை 14.04.4354 வெள்ளிக்கிழமை “தமிழர் பாசறை” பத்திரிகை கடந்த திங்கட்கிழமை 10.04.4354 ல் வெளியிட்ட தகவல்களை சரிபார்தத தமிழ் அறிவுப் பல்கலைகழக பேராசியர் அறிவுமதி 21 ம் நூற்றண்டில் வாழ்ந்த கோஷான் சே யாழ் இணையம் என்ற இணைய இதழில் நகைச்சுவையாக “சிரிப்போம் சிறப்போம்” என்ற தலைப்பில் வெளியிட்ட தகவல்களே அவை என்று, தனது ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்தார். அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் அறிவுமதி இலுமினாட்டி அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதை போளிசீலன் தனது நீ குழாய் விடியோவில் கூறியதைத் தொடர்ந்து அந்த பேராசியர் வீட்டுக்கு முன்னால் திரண்ட தமிழர் வீரப்படை என்ற அமைப்பினர் ஆர்பாட்டங்களை மேற்கொண்டு அவரைத்தாக்கி தமது இனப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர். அவர ஒரு வந்தேறி என்பதையும் வட்சப் தகவல்களை ஆதாரம் காட்டி அவர்களின் தலைவர் தெரிவித்தார். வீரத்தமிழர் அமைப்பின் இந்த வீரச்செயலை பல முகநூல்ப் போராளிகள் பாராட்டி லைக்குகளை அள்ளி வழங்கியுள்ளதுடன் தூய்மைவாதக் கட்சியில் உள்ளீர் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். பத்திரிகைச்செய்தி 3 பிபிசி 16.04.4354 ஞாயிற்றுக்கிழமை பேராசியர் அறிவுமதி தாக்கப்பட்டது தொடர்பாவும் கோஷன் சே என்ற 21 ம் நூற்றாண்டு அறிஞர் தொடர்பாகவும் ஆய்வுச் செய்திகளை வெளியிட்ட அறிவுச்சுடர் பத்திரிகை செய்தி ஆசிரியர் தாகப்பட்டு பத்திரிகை பிரதிகள் தெருவில் எரிக்கப்பட்டதாக காவல்துறையினிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த போது இதை செய்தவர்கள் உணர்சிவசப்பட்ட தமிழ் காவலர்கள் என்று முகநூல் போராளி ஒருவர் கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக விபரங்களை அறிய தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துடன் தொடர்பு பிபிசி தொடர்பு கொண்ட போதிலும் தொடர்பு கிடைக்கவில்லை. விசாரணைகளை மேற்கொள்ள தூய்மைவாதக் கட்சி அலுவலகத்துக்கு காவல்துறை இன்பெக்டர் வந்த போது அவர்களிடம் வாக்குமூலம் அளித்த கட்சித் தலைவர் இதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் அரசியலமைப்பு சட்டத்தை தான் மதிப்பதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து பொலிசார் அங்கிருந்து திரும்பினர் என காவல்துறை ஆணையாளர் பிபிசிக்கு தெரிவித்தார். (பல ஆண்டு யாழ் இணைய வாசிப்பின் Inspiration காரணமாக எழுந்த கற்பனை)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.