Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. ஆயுத போருக்கு விதை போட்டதால் மக்கள் அழிவில் இவருக்கு பங்கு உண்டு என்றால் மக்கள் அழிவார்கள் என்று தெரிந்தும், அந்த ஆயுத போரை பல வருடங்களாக கொண்டு நடத்தியவர்களுக்கும் அதில் மிகக் கூடுதல் பொறுப்பும் பங்கும் உள்ளது. (ஆனால், நீலன்ஆயுத போரை ஆதரித்ததாக எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை)
  2. தந்தை செல்வா உண்மையில் அதிஷடக்காரர். 1977 ல் இயற்கையெய்துவிட்டார். சற்று இளமையானவராக இருந்து சற்று காலம் கூடுதலாக வாழ்ந்துருந்தால் ஏதோ ஒரு ஆயுத இயக்கத்தினால் துரோகியாக்கி போட்டு தள்ளப்பட்டிருப்பார். நினைவேந்தல் கூட இப்படி கெளரவமாக நடந்திருக்காது.
  3. இறுதி யுத்தத்த வெற்றிக்காக என று கூறி மக்களிடம் இருந்து புலம் பெயர் தேசியவாதிகள் என்று அழைப்பவர்களால் 2008/2009 காலப்பகுதியில் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான ஈரோ பணமும் இப்படி பொட்டலம் கட்டி வைத்திருந்தால் பிடிபட்டிருக்கும். 😂 😂 மக்களுக்கு சிறு பகுதியேனும் திரும்ப கிடைத்திருக்கலாம். ஆனால் கெட்டிக்காரர்கள் என்றதால் பினாமிகள் பெயரில் பல் வேறு இடங்களை கைமாற்றப்பட்டு அத்தனை பணமும் பணத்தை சேர்ததவர்களாலே ஆட்டையை போடப்பட்டது. பணத்தை சேர்தத நோக்கம் நிறைவேறாமல் விட்டாலும் கிடைத்த பணத்தை அப்படியே அமுக்கியதில் வெற்றி பெற்று விட்டார்கள்.
  4. 1995 காலப பகுதியில் கனடாவில் வசித்த உங்களுக்கு தெரிந்தவர்களை கேட்டு பாருங்கள். அப்போது கியூபெக் மாகாண தனி நாட்டு கோரிக்கைக்கு எதிராக தமிழர்களில் பெரும்பாலானோர் வாக்களித்தது ஒன்றும் இரகசியமல்ல. “கனேடியன்”, என்ற அந்தஸ்து போய்விடும் என்று பதட்டப்பட்டார்கள்.
  5. இந்த வாக்கெடுப்பு நடை பெற்றது 90 களின் ஆரம்பத்தில். அந்நேரத்தில் அங்கு வசித்த ஈழத்தமிழர்கள் கனடாவில் இருந்து கியூபெக் பிரிந்து தனி நாடாகிவிடுமோ என்ற பதட்டத்தில் இருந்தார்கள். எமது தேசியம் காப்பதாக கூறும் தேசிய வீரர்களும் அதில் அடக்கம். கனடாவின் தேசிய ஒற்றுமையை காக்க கியூபெக் பிரிந்து தனி நாடாக கூடாது என பெரும்பாலான ஈழத்தமிழர்கள் வாக்களித்து கனடாவின் இறைமையை காப்பாற்றினார்கள .
  6. திரு. நீலன் திருச்செல்வம் சர்வதேச ரீதியில் அறியப்பட்ட அரசியலமைப்பு சட்ட நிபுணர். உலகப் புகழ் மிக்க சட்ட அறிஞர். இவரது நூல்கள், கட்டுரைகள் சர்வதேச ரீதியில் அரசியலமைப்பு சட்ட மாணவர்களால் தேடி வாசிக்கப்படும் அளவுக்கு பிரபலமானவை. அவர் பல்வேறு நாடுகளில், குறிப்பாக கஜகஸ்தான், தென்னாபிரிக்கா, சிலி போன்ற நாடுகளில் அரசியலமைப்பு சட்டங்களை உருவாக்குவதில் பங்கு வகித்தார். இவ்வாறு உலகம் அறியப்பட்ட ஒருவரை தற்கொலை குண்டு மூலம் படுகொலை செய்த செயலானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் தனக்கு தானே குழி பறித்த பல செயல்களில் ஒன்றாகும். இவரது கொலையினல் பலன் அடைந்தது இலங்கை அரசு. படுகொலை நடந்த உடனேயே ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் கொபி அன்னான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரன் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்திதில் இருந்து இவரது அனைத்துலக முக்கியத்துவம் உணரப்பட்டது. சகிப்பு தன்மை அற்று தாம் செய்த படுகொலைகளை மறைக்க கொலை செய்யப்பட்டவர் மீது அபாண்டமாக பழி போடுவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் அனைத்து ஆயுத இயக்கங்களாலும் மேற்கொள்ளப்பட்ட இத்துப்போன தந்திரம் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். அதை போன்ற ஒன்றே இந்த படுகொலையின் நியாயப்படுத்தலும்.
  7. நடை பெற்றது ஒரு குற்ற செயல். அதில் பாதிக்கப்பட்டவரது தனிப்பட்ட அல்லது அந்தரங்க தகவல்களை பொது ஊடகங்களில் பகிர்வது பத்திரிகை தர்மத்திற்கு (Journalist Ethics) விரோதமானத்து. பாதிக்கபட்டவரது தனிப்பட்ட வாழ்ககையை மதிக்கும் மாண்பு என்பதனை வீரகேசரி பத்திரிகை மீறி இருக்கிறது. ஒரு குற்ற செயல் சம்பந்தமான நீதி விசாரணையை கொசிப் செய்தியாக்கி உள்ளது நீண்ட கால பாரம்பரியத்தை கொண்ட ஒரு பத்திரிகை. பொதுவாக இலங்கையில் வெளிவரும் ஊடகங்களின் தரம் இவ்வாறே உள்ளது. மேற்குலகில் வெளிவரும் ஊடகங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் (Victims) தனிப்பட்ட தகவல்கள் பகிர்வதில்லை. 2015 ம் ஆண்டு தமிழ் பெண்ணொருவரை கொலை செய்து சூட்கேசில் அவரது சடலத்தை பேரூந்து நிலையத்தில் வீசிய குற்றவாளிக்கு சில. நாட்களுக்கு முன் மரண தண்டனை வழங்கப்பட்டது.
  8. தலையங்கம் தவறு. “தமிழ் தேசியத்தை பிழைப்புவாதிகள் எதிர் என் பி பி” என்று தலையங்கம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் பிரதேசங்களின் வளர்ச்சி பற்றி எந்த அக்கறையும் இல்லாது மக்கள் பிரச்சனைகளை வெறும் ஊறுகாய போல் தொட்டு கொண்டு நடக்க முடியாதவற்றை வீரவசனங்களாக கதைப்பவர்களே இதுவரை நகர பிரதேச சபைகளில் பதவிகளில் இருந்தனர். அந்த பிழைப்புக்கு ஆபத்து வந்து விட்டதே என்ற கோபமே இவர்களிடம் எஞ்சி உள்ளது . பிழைப்பு வாதஅத்துக்கு ஆபத்து வந்த நிலையில் கூட ஒன்று பட முடியாத ஈகோ. இது தான் இவர்களின் டிசைன்.
  9. திரு செல்வநாயகம் இனவாதத்தை எதிர்தது தனது அரசியல் போராட்டத்தை நேர்மையுடன் ஆரம்பித்திருந்தாலும் காலப்போக்கில் வெறும் சுலோகங்களிலும் கோஷங்களிலும் தங்கி இருந்து ஆவேச பேச்சுக்களை தனது அரசியல் ஆயுதமாக்கி இறுதியில் வரட்டு பிடிவாதத்தால் அரசியல் ரீதியில் தனது அடைவுகளை நோக்கி ஒரு அங்குலம் தானும் முன்னேறாதது மட்டுமல்ல இறுதியில் இருந்ததையும் இழந்தது தான் கசப்பான உண்மை. இதை விடுதலை புலிகள் யுத்த இறுதியில் Bitter end என்று தெளிவாக குறிப்பிட்டனர்.
  10. சொற்களிலும் சுலோகங்களிலும் மட்டும் தொங்கி கொண்டிராது ஜதார்த்தத்தை (Reality) ஏற்றுக் கொண்டு வட கிழக்கில் தமிழர் வாழ்வு சிறக்கு நீங்கள் அனைவரும் சேர்ந்து வேலை செய்ய வேண்டுமே தவிர இப்படி ஆளுக்காள் அடிபட்டு சுய நல அரசியல் நடத்தக்கூடாது. Reality கசக்க தான் செய்யும். அதற்காக அடுத்த தலைமுறையுயும் பலி கொடுத்து தமிழ் மக்கள் தொகையை மேலும் குறைவதற்கு உங்கள் அரசியல் காரணமாகி விடக்கூடாது. மரமண்டை தமிழ் தேசிய முன்னணி கூட சிந்தித்து செயற்பட வேண்டிய காலமிது.
  11. தமிழில் கற்கைகளை நடத்தினாலும் ஆங்கில கல்வியையும் பல்கலைக்கழகம் ஊக்குவிக்க வேண்டும். பட்டம் பெறுபவர்கள் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். ஏனெனில் இயற்கை வைத்தியம் என்பது உலகம் முழுவதும் நீண்ட காலமாக உள்ளன. அதுலும் பல வகைகளை உலகின. பல்வேறு நாடுகளில் உள்ளன. ஆகவே அந்த வைத்திய முறைகளையும் கற்றறிந ஆங்கில தேர்சசி உதவியாக இருக்கும். அப்போது தான் இவர்கள் தமது துறையில் முழுமை பெறலாம். தனியே தமிழில் மட்டும் கற்றுவிட்டு உலகத்துக்கே வைத்தியத்தை கொடுத்தவர்கள் நாம் என்பது போல லூசுத்தனமான கிணற்று தவளை கருத்துகளை கொண்டவர்களாக இருப்பர்.
  12. ஒரு பாடைக்கு குறைந்தது 10000 ரூபா என்று பார்த்தாலும் 243 பாடைக்கும் ஏறத்தாள 2.3 மில்லியன் ரூபா தேவைப்படும். அதற்கு புலம் பெயர் நாடுகளில் திரள் நிதி வசூலிக்கப்பட்டால் அதற்கு பங்களிக்க நான் தயார். தமிழ் நாடு மக்களின் நன்மைகருதி முக்கியமாக பிரதான பாடைக்கு நான் பங்களிக்கத் தயார்.
  13. மேலே சென்றவர் அங்கும் இனவாதத்தை பரப்புவாரா? 😂
  14. “தலித்” என்ற பதம் அதாவது இந்த பெயர்சொல் இலங்கையில் பாவனையில் இல்லை. ஆனால், அந்த சொல்லால் வட இந்தியாவில் வகைப்படுத்தப்படும் செயலான சாதி ஒடுக்கு முறைகள் நிறையவே இலங்கையில் நீண்ட காலமாக உள்ளது. இன்றும் உள்ளது.
  15. கடைசியில் இந்த கேடு கெட்ட அயோக்கிய அரசியல்வாதியின் தமிழ் தேசியம் என்பது பொலிடோல் குடிச்சிட்டு பாடையில் போ படு என்ற நிலைக்கு வந்து நிற்கிறது.
  16. ஆனால் இன்று தமிழும் இலங்கையில் ஒரு உத்தியோகபூர்வ ஆட்சி மொழி. இதை கொண்டு வந்தது தமிழ் தேசியவாதிகளால் இன்றும் நிராகரிக்கப்படும் இந்திய இலங்கை ஒப்பந்தம். 49 வீத சனத்தொகை அதிகரிப்புக்கு சிறு இனக்கலவரம் மூலம் மலையக மக்கள் வடமாகாணத்தில் குடியேறியது காரணம் என்பது தவறான தகவல். அவ்வளவு பெரிய ஜனக்கூட்டம் வடமாகாணம் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் அதை உண்மை என ஒரு பேச்சுக்கு வைத்தாலும் அதன் மூலம் தமிழரின் ஜனத்தொகை வட பகுதியில் அதிகரிக்க தமிழ் தேசியத்தின் பலம் அதிகரிக்க சிங்களவர்கள் காரணமாக இருந்தார்கள் என்றே கூறவேண்டும். ஆனால் அதன் பின்னர் தமிழ் தேசியவாதிகளின் அரசியல் தமிழரின் ஜனதொகை குறைய காரணமானது.1950 ல் இலங்கை சுதந்திர மடைந்த காலப்பகுதில் மொத்த சனத்தொகை 78 லட்சம் மட்டுமே. இன்று இரண்டு கோடிக்கு மேல். கிட்ட தட்ட மூன்று மடங்கு. வட கிழக்கு தமிழரின் எண்ணிகை மேலும் தேய்வடைந்து செல்வது தமிழ் தேசிய இருப்புக்கு துணை புரியாது. சர்வதேசத்திடம் நீதி கேட்கும் போது அவர்களும் இதை ஏற்கப்போவதில்லை. இந்த தாயகம் தேசியம் எல்லாம் எமக்குள் மட்டும் அரசியல் சுய நலத்திற்காக பேசிக்கொள்ளும் அளவுக்கு சுருங்கிவிட்டது.இன்றும் கூட ஒற்றுமையாக நடை முறை சாத்தியமான ஒரு தீர்வை பெற்று தமிழரை அரசியல், கல்வி பொருளாதார ரீதியில் பலப்படுத்துவோம் என்ற பொறுப்புணர்வு தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகளுக்கும் புலம்பெயர்ந்து தேசிய வேட தாரிகளுக்கும் அறவே இல்லை. எப்படியோ யுத்தம் முடிந்தது நல்லதே. இல்லையெனில் தமிழ் தேசியத்திற்கான விலை என்று கூறி இருப்பவர்களையும் கடந்த 15 வருடங்களில் காவு கொடுத்திருப்பார்கள். ஒட்டு மொத்தமாக தமிழ் தேசியவாதிகளின் அரசியல் என்பது தமிழருக்கு கொடுத்தது அழிவுகளையும் தமிழ் தேசியத்தை மேலும் சிதைத்ததை மட்டுமே என்பது தான் உண்மை. வாயால் மட்டுமே தமிழ் தேசியம் கதைப்பார்கள். அதுவும் தமது சுய நலத்திற்காக. இன்று மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதற்கு காரணமே தமிழ் தேசிய வாதிகளின் அழிவு அரசியலை புரிந்திருப்பதாலேயே.
  17. சிமான் கட்சியே எப்படியும் தோற்கத்தானே போகிறது. அப்ப கட்சியையே பாடையில் ஏற்றி மாலை போடுவாரா? 😂😂😂😂
  18. சஜித் வெற்று பெற்றிருந்தால் சஜித் தான் தையிட்டி விகாரைக்கு காரணம் என கூறி இருப்பார். ஆரிய குளத்தை மணிவண்ணன் மேயராக இருந்த போது சுத்தப்படுத்தி அழகுற செய்த போது நாக விகாரைக்கு வரும் சிங்களவர் வந்து இளைப்பாறவே மணிவண்ணன் அதை செய்தார் என்று பத்திரகையாளர் சந்திப்பில் பெஈரங்கமாக இனவாதம் பேசியவரே இந்த கஜேந்திரகுமார்.
  19. அப்போதும் அவர்களின் தேவைக்காகவே தமிழீழம் பிறக்குமாம். எமது வெத்து வேட்டு தலைமைகளின் வரட்டு பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை இப்போதாவது உணர்தீர்களே! இரண்டுமே சாத்தியமாகாது என்று தெரிந்தும், இரண்டையும் நம்பி தேர்தலில் வாக்குகளையும், விலை மதிப்பற்ற இளைஞர்/ யுவதிகளின் இனிய உயிர்களையும் கொடுத்த, விழலுக்கு இறைத்த நீராக்கிய முட்டாள்தனத்தை இனித் தமிழர்கள் செய்யக் கூடாது.
  20. இவ்வாறு பூச்சாண்டி காட்டி காட்டியே தமிழ் தேசியவாதிகள் தமது தவறுகளை மறைத்துக் கொண்டு தமிழரின் இருப்பை இலங்கை தீவில் அழிப்பதற்க்காக இனவாதிகளின் வேலையை சுலபமாக்கி வருகின்றனர். அதி தீவிர தமிழ் தேசியம் பேசும் கஜே கும்பல் 2009 ல் இருந்து தமது ஒரு நாடு இரு தேசம் கொள்கையை அமுப்படுத்த எடுத்த வினை திறனான நடவடிக்கைகள் முன்னேற்றங்கள் பூச்சியமே! ஆளையாள் துரோகி என்று திட்டி தமது தவறுகளை மறைப்பது தான் அன்றில் இருந்து இன்று வரை தமிழ் தேசியம் பேசிய அதை வைத்து வாழ்ந்துவரும் அனைவரும் தவறாமல் செய்த ஒரு விடயம். தமிழரின் இருப்பு பலவீனப்பட்டாலும் தமது இருப்பு பாதிக்கப்படாமல் இருந்தால் சரி என்பதே அவர்களது கொள்கை. 1963 ல் இருந்து 1981 வரை 20 ஆண்டுகளில் பாரியளவில் மற்றைய மாகாணங்களையொத்த அளவில் அதிகரித்த தமிழரின் சனத்தொகை 1981 இற்கு பின்னர் ஏன் பாரிய வீழ்சசியை கொடுத்தது தமிழரின் அரசியலை பலவீனமாக்கியது என்று கேட்டால் இன அழிப்பால் மக்கள் வெளியேற்றதால் வந்தது என்று சப்பை கட்டு வேறு. அப்படியானால் 1963 ல் இருந்து 1981 வரை ஏன் சனத்தொகை அதிகரித்தது? சோறா சுதந்திரமா என்று வெற்று சுலோகத்தை வைத்து இரண்டையும் பலவீனப்படுத்தியதுதான் தமிழ் தேசியம் பேசியோரின் சாதனை. தமிழ் மக்களை அறிவு ரீதியில் பலப்படுத்திய யாழ் பலகலைகழகம் என்றாலும் சரி , யாழ் நூலக கட்ட நிர்மாணம் என்றாலும் சரி தமிழ் தேசிய பேசாது புத்திசாலித்தனமாக செயற்பட்டவர்களாலே உருவானதொழிய வெற்று கோஷம் போட்ட தமிழ் தேசியம் பேசியவர்களால் வந்ததல்ல. 1950 களில் யாழ் நூலக கட்ட உருவாக்ககத்தில் பங்களிக்காத வெற்று சுலோக்காரர்கள் அது இனவாதிகளால் தீ வைக்கப்பட்டவுடன் அதை தமது இனவாத அரசியலுக்கு திறமையாக பயன்படுத்தினர். இவ்வாறாக தாம் பேசும் தமிழ் தேசியம் தொடர்ந்து தமது அரசியல் நடவடிக்கைகளால் பலவீனப்பட்டு வருவதை மறைக்க இன்றும் தமது வழமையான பாணி உசுப்பேற்றும் சென்றிமென்ற பரப்புரைகளை மட்டுமே தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் / நபர்கள் செய்து வருகின்றனர். தமிழ் மக்களை பலப்படுத்தும் விதமாக தமது தவறான முன்னைய தந்திரோங்களை மாற்றுவதோ மக்களுக்காக செயற்படுவதை விட இந்த வெற்று கோஷ அரசியல் தமக்கும் தமது குடும்பத்துக்கும் நன்மை பயக்கும் என று தாயக/ புலம் பெயர் தீவிர தமிழ் தேசியம் பேசும் தரப்புகள் நினைக்கிறார்கள்.
  21. “நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்”. என்ற கணக்கில் சேர்ககலாம். 😂😂😂
  22. தமிழ் நாட்டின் கல்விதுறை பற்றி தமிழ் நாட்டில் கல்வி பயின்று தற்போது ரஷயாவில் உயர் கல்வியை மேற்கொள்ளும் ரஷ்ய மாணவன. கூறுகிறார். https://www.facebook.com/share/r/19UDy8gUjK/?mibextid=wwXIfr
  23. தமிழ் தேசியத்தை பேசுகிறோம் பேசுகிறோம் என்று சிறப்பாக பேசிக்கொண்டு தமிழர் இருப்புக்கு கொள்ளி வைத்ததே உண்மையில் நடந்த விடயம். சிறுபான்மை இனங்கள் தம்மை காத்துகொள்ளவும் பேரினவத ஒடுக்கு முறைகளில் இருந்து தப்பி பிழைக்க இயல்பான மக்கள் தொகை அதிகரிப்பு மிக அவசியம். ஆனால் இலங்கையின் மக்கள் தொகையில் தமிழரின் வீதம் கடந்த 40 ஆண்டுகளில் மிக குறைந்தே வருகிறது. உதாரணத்துக்கு யாழ் மாவட்டத்தையும் வட மாகாணத்தையும் எடுத்துக் கொண்டால் 1963 ல் இருந்து 1981 வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்ட சனத்தொகை ஏறத்தாழ 35 வீதத்தால் அதிகரித்தது. 2025 ல் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. வடமாகாணம் முழுவதையும் பார்ததால் 1963 - 1981 வரை கிட்டத்தட்ட 49 சத வீத வளர்சசி. 2025 ல் 45 வருடங்களின் பின்னர் அதே எண்ணிக்கை நகரமல் அப்படியே உள்ளது. மக்கள் தொகை இவ்வாறு வீழ்சசியடைந்தால் இன பரம்பல் குறைவடையும். யாழ் மாவட்ட மக்களை வன்னியில் குடியேற்றுவதற்கு 1970 களில் இலங்கை அரசு செய்த ஊக்குவிப்பை கூட( படித்த வாலிபர் திட்டம் போன்ற) தமிழர் தேசியம் பேசியவர்கள் செய்யவில்லை. குறைந்தது 1977 கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கு வந்த மலையக மக்களை கூட பாரிய இடவசதி இருந்த வன்னி பகுதியுல் குடியேற்ற தமிழ் தேசியவாதிகள் எவரும் முயற்சி எடுக்கவில்லை. அவர்களில் மிக பெரும்பானமையானோர் திரும்பி மலையகம் சென்றார்கள். உண்மையில் தமிழ் தேசியத்தை விரும்பி இருந்தால் அதை செய்திருப்பார்கள். தமிழ் தேசியம் பேசிய தலைமைகள் எல்லோருமே தமது தவறான கொள்கைகள் மூலமும் வரட்டு பிடிவாதத்தின் மூலமாகவும் கடந்த பல தசாம்பங்களாக தமிழ் தேசியத்தை தொடர்ந்து சிதைத்தே வந்துள்ளனர் என்பதைக் கடந்த காலங்களை நடு நிலையுடன் பார்ததால் தெளிவாக தெரியும். இதில் அரசியல்வாதிகள் ஆயுத போராளிகள் என்று எவரும் விதி விலக்கு இல்லை. அனைத்து தலைமைகளும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். மக்களின் அனைத்து பிரிவினரையும் வெவ்வேறு அரசியல் திலைப்பாடு இருந்தவர்களும் இணைத்து மக்களின் வாழ்வியலூடாக ப நிலை நாட்டியிருக்க வேண்டிய தமிழ் தேசியத்தை வெறும் அரசியல் சுலோகமாக மாற்றி இன்று சாதாரண கருத்து வேறுபாடுகள் கூட துரோகி என ஆளையாள் திட்டி தீர்ககும் நிலை. துரோகி என்ற சொல்லுக்கான அர்த்தமே கேள்விக்கிடமாக்குள்ளது. அந்தளவுக்கு தமிழ் மக்கள் பலவேறு பிரிவுகளாக பலிந்து கிடக்கிறார்கள்.
  24. உங்க தலைவர் கஜேந்திர குமார் சர்வதேச விசாரணைக்கு முயற்சித்து பார்க்கலாமே! அவரால் சர்வதேச விசாரணை இல்லை ஒரு கிராமசபை விசாரணையை கூட செய்விக்க முடியாத வெத்து வேட்டு. அதற்குள் ஒரு நாடு இரு தேசம் என்று நடக்க முடியாத விடயங்களை கூறி வண்டியை ஓட்டுகிறார். புலம் பெயர. நடுகளில் தமிழ ஈழம் பெற்று தருவோம் என்று மக்களிடம் பணம் வசூலித்து அதை ஆட்டையை போட்டது ஒரு தமிழ் தேசிய களவாணிக் கும்பல். இப்படியே ஆளாளுக்கு தமிழ் தேசியத்தை வைத்து பிராடு வேலை செய்து விட்டு இந்த தலைமுறை நிம்மதியாக கண்ணை மூடிவிடும். தாயகத்தில் தமிழர் பகுதிகளில் மக்கள தொகை வீழ்சசி. 70 களில் இருந்ததையும் இழந்தது தான கண்ட மிச்சம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.