Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

island

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by island

  1. சர்வதேச விசாரணைக்கான சாத்தியப்பாடு பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். சில அழுத்தங்களை கொடுப்பார்களே தவிர முழுமையான சர்வதேச விசாரணை நடக்கப்போவதில்லை என்பதே ஜதார்த்தம். இன்றைய நிலையில் சாத்தியப்பாடான அரசியல் தீர்வை எட்ட முயற்சிப்பதே வினை திறனான செய்ய வேண்டியது. அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற பலவற்றை கூறினாலும் Reality என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப செயற்படுதல் வேண்டும்.
  2. ஒருவரை எமக்கு பிடிக்காவிட்டால் நேர்மையாக அவரது அரசியலை விமர்சிக்காமல் அவர் மீது ஆதாரமில்லாமல் அவதூறுகளை வீசி, பின்னர் துரோகி பட்டம் கொடுத்துப் பின்னர் போட்டு தள்ளு. இதுவே எமக்கு காலாகாலமாய் சொல்லிக் கொடுக்கப்பட்ட அரசியல் பாடம். அதை தான் நாம் செய்வோம். என்ன செய்ய, கடைசியில் சொல்லப்பட்டதை செய்யவோ செய்விக்கவோ முடியாமல் வயிறு எரிஞ்சு நாங்க படுற அவஸ்தை தெரியாமல் ஆதாரம் அது இது என்று நீங்க வேற தொல்லை. 😂
  3. இரண்டுமே சாக்கடை. ஓரு சாக்கடை நீரை பூட்டினாலும் மற்ற சாக்கடையில் அழுக்கு நீர் தேவையான அளவு இருக்கும். அழுக்கு நீர் பற்றாக்குறையாக இருக்கும் போது இரண்டு சாக்கடைகளுக்கும் இடையிலான கதவை அடிக்கடி திறந்து பின்னர் பூட்டுவது வழமை.
  4. நீங்கள் கூறிய அந்த அரசியல்வாதி வந்தால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பச்சை மட்டை மூலம் சட்டங்களை அமுல்படுத்துவார். அதை கண்டு வியப்பு அடைய போகும் மேற்கு நாடுகளும் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பச்சை மட்டை யை கையில் எடுக்க, அண்ணன் உலக நாடுகளுக்கு எல்லாம் பச்சை மட்டை ஏற்றுமதி செய்து தமிழ் நாட்டு பொருளாதாரத்தை உயர்ததுவார். ஏற்கனவே நெய்தல் படை அமைத்து விடுவாரோ என்ற அச்சத்தில் இலங்கை கடற்படை அதிர்சசி அடைந்துள்ளதாம். 😂
  5. 1981ல் பிரபகரன், உமா மகேஸ்வரன் சென்னை பாண்டி பஜார் துப்பாக்கி சண்டைக்காக கைது செய்யப்பட்ட போது கைது செய்யப்பட்ட பிரபாவை சந்தித்ததோடு அவர்களை நாடுகடத்துவதை தடுக்க அனைத்து கட்சியினரும் இணைந்து முயற்சி செய்தார். அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் கிட்டத்தட்ட விடுதலை புலிகளின் பிரச்சாரகர் போலவே செயற்பட்டார். 1987 ல் இந்திய இராணுவம் ஈழத்தில் நடத்திய படுகொலைகளை தமிழகத்தில் பரப்புரை செய்ததோடு இந்திய- புலிகள் யுத்தத்தின் காரணமாக தமிழ் நாட்டு மக்களிடையே இருந்த குழப்பநிலையை போக்க பேருதவி புரிந்தார். அன்று திமுக கட்சியில் இருந்த வைகோ கட்சி அரசியல் தொடர்புகள் மூலம் ஜோர்ஐ் பெர்னாண்டஸ் போன்ற வட இந்திய தலைவர்களை அழைத்து வந்து இந்திய இராணுவத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பிரச்சாரங்களை முன்னெடுத்ததோடு அவரை நிரந்தரமாக ஈழப்போராட்டத்தின் ஆதரவாளராக மாற்றுனார். பின்னர் ராஜீவ் கொலைக்கு பின்னரான பாரிய நெருக்கடி நிலையிலும் ஈழப் போராட்டதை ஆதரித்து பல முறை அதற்காகவே சிறை சென்றார். இருப்பினும் தற்போது சீமான் என்ற காமடியன. எம்மை entertainment செய்ய கிடைத்துள்ளதாலும் வைகோவால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதாலும், “ நன்றி மறத்தல் மிக நன்று”, என்ற ஈழதமிழ் அரசியலின் நியாயப்பட்டிடன் அடிப்படையில் அவரை தூக்கி கடாசி தமிழர் இல்லை என்று கறிவேப்பிலை போல் தூக்கி எறிவது நியாயம் தான். ( வைகோவின் தமிழக உள்ளூர் அரசியல் கூத்துகளை பற்றி எனக்கும் உடன்பாடு இல்லை. விமர்சனம் உண்டு)
  6. நீங்கள் கூறியது போல் ஆகரோஷமான உசுபேற்றும் தீவிர உணர்ச்சி பேச்சுகளை பேசியவர்கள காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரே. ஆனால் பின்னர் வந்த காலத்தில் இவர்கள் அனைவரும் சுயநல வெத்து வேட்டுகளாக இருந்ததையே வரலாறு காட்டுகிறது. இவர்களின் வன்முறை பேச்சுகள் சாதித்திது என்ன? அழிவுகளை மட்டுமே கொடுத்தது.
  7. நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. வரலாற்றை படிக்காமல் அது பற்றிய புரிதல் இல்லாமல் சீமானின் உசுப்பேற்றும் கேவலமான உரைகளை மட்டும் கேட்கும் புலம் பெயர் ஈழத்தமிழர் பலர் சிங்கள இனவெறியர்களை விட மோசமான கடைந்தெடுத்த இனவாதிகளாக உள்ளது உண்மை.
  8. நீங்கள் கூறுவது தவறு. அப்படி எதுவும் நடக்கவில்லை தமிழ் நாட்டில் தமிழ் மொழி தனித்துவத்துடன் எழுச்சி பெற்றதற்கு திராவிட இயக்கங்கின் பங்களிப்பை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது. இவை எல்லாம் வரலாறுகளாக பல்வேறு நூல்களில் உள்ளன. நீங்கள் வெறும் வட்சப் முகநூல் கட்சி பரப்புரைகளை மட்டுமே வைத்து கருத்து சொல்கின்றீர்கள். மிக அதிகமாக சமஸ்கிரதம் திணிக்கப்பட்டிருந்த பல தமிழ் நாட்டு அரச துறையில் தமிழ் கோலோச்ச தொடங்கியது திராவிட இயக்கங்களின் எழுச்சிக்கு பின்னரே. இந்தி திணிப்புக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியதில் திராவிட இயக்கங்களுக்கு பாரிய பங்களிப்பு உள்ளது. 1974 ம் ஆண்டு யாழ்பாணத்தில் நடந்த தமிழாராய்சசி மகாநாட்டில் கலந்து கொள்ள கருணாநிதிக்கு விசா வழங்க இங்கை அரசு மறுத்ததும் அந்த பின்னணியினால் தான். சீமான் மேடைக்கு மேடை தனது வழிகாட்டி எனவும் பச்சை தமிழர் என போற்றும் காமராஜர் தமிழ் தேசியத்தைக்கு எதிராக இந்திய தேசியம் பேசியவர். தமிழ் நாடு என்ற பெயரை கூட சூட்ட மறுத்தவர. மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ் நாட்டுக்கு சொந்த மான பல பிரதேசங்களை ஆந்திராவுக்கு தாரை வார்தது விட்டு அது பற்றி கேட்ட போது அவை எங்கும் போய்விட வில்லை இந்தியாவுக்குள் தானே உள்ளது என்று பதிலளித்தவர். 50 களில் ராஜாஜி, காமராஜர் ஆட்சிக்காலங்களில் தமிழ் மொழி இருந்த நிலையையும் பின்னர் 1967 க்கு பின்னரான காலத்தையும் விரிவாக நடு நிலையுடன் ஆராய்ந்து பார்ததால் உங்களுக்கு உண்மை விளங்கும்.
  9. தமிழர் தலைவர்களாக இனப்பிரச்சனையை சரியாக கையாண்டு அதை வெற்றி கொள்ள முயலாமல் அதை தங்கள அரசியலுக்கு பயன்படுத்தும் விடயத்திற்கு முன்னுரிமை வழங்கியவர் அதற்காக இளைஞர்களை இவ்வாறான இரத்தப்பொட்டுகளின் மூலம் உசுப்பேற்றும் பேச்சுகளை அவரது கட்சியினருடன் சேர்ந்து செய்தது என்ற அடிப்படையில் அவர் தவறு செய்தவராகிறார். அதற்காக அவர் யாரை உசுப்பேற்றினாரோ அவர்களாலே படுகொலை செய்யப்பட்டார். ஆனால், அவர் இனவாத பேச்சுக்களை பேசியதாகவோ அதற்கு ஊக்கம் கொடுத்ததாகவோ எந்த பதிவும் இல்லை. எனவே அவர் இனவெறியர் அல்ல.
  10. கருணாநிதி தெலுங்கர் என்பதே வெறும் பொய்யர்களின் பரப்புரை. கருணாநிதி மட்டுமல்ல எம்ஜிஆர், ஜெயலலிதா, அனைவருமே தமிழர்களே. தமிழ்நாட்டு மக்களால் பல முறை முதலமைச்சராகவும் தொடர்சசியாக தோல்வியை தழுவாத சட்டசபை உறுப்பினராகவும் தமிழ் நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவரின் அரசியலை விமர்சிக்கலாம் தவறில்லை. ஆனால் ஒருமுறை கூட கட்டுப்பணம் பெற முடியாத, ஒரு சிறிய கிராமசபை உறுப்பினராக கூட வெற்றி பெற வக்கற்ற கட்சிகள் தமக்கு ஒவ்வாதவர் மீது இனவெறி தாக்குதல் செய்வது ஏற்றுகொள்ள தக்கதல்ல. அதை விட தாமே இனவாதத்தால் பாதிக்கப்பட்டோம் என்று கூறும் ஈழத்தமிழர்கள் அடுத்தவன் நாட்டுக்குள் இனவாதம் பேசுவது சிங்கள இனவாதத்தை விட மோசமானது. அதிகாரம் கிடைக்காமலே இப்படி என்றால் அதிகாரம் கிடைத்திருந்தால்…. சொல்லி வேலை இல்லை.
  11. பிள்ளைகளை தனியே அனுப்பும் போது அவர்கள் மீது உள்ள அதீத பாசத்தின் காரணமாக மிகைப்படுத்தப்பட்ட பயத்தை ஏற்படுத்துவது பொதுவாக எமது நாடுகளில் பெற்றாரின் பொதுவான இயல்பு. இது தமிழருக்கும் பொதுவான ஒன்றே. சிங்கள இனவாத அரசியல்வாதிகள் தமிழர் மீது அளவுக்கு அதிகமான பயம் ஏற்படும் விதமாக அப்பாவி சிங்கள மக்களை நம்ப வைக்க பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதுவும் ஒரு காரணம். பொதுவாகவே இனவெறியர்களின் தந்திரம் இவ்வாறாக அடுத்த இனத்தின் மீது பயத்தை ஏற்படுத்துவதே. சிங்களவரில் சரத்விஜசேகரா, விமல் வீரவம்ச போன்றோரும் தமிழ் நாட்டில் சீமான் போன்ற இனவெறியர்களும் இதே போன்ற பரப்புரையையே மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பரப்புரைகளே மிகைப்படுத்தப்பட்ட பயத்தை பெற்றோருக்கு ஏற்படுத்துகிறது.
  12. ஸ்ராலின் ஒரு தமிழர். அத்துடன் இதுவரை தமிழ் நாட்டை ஆண்ட அனைவருமே தமிழர்களே. ஒரு அயோக்கிய அரசியல்வாதி தனது சுய லாபத்துக்காக கட்டி விட்ட கதைகளை நிர்வாக பொறுப்பில் இருக்கும் நீங்கள் பரப்பலாமா?
  13. பள்ளிகூடம் போகாமல் கட் அடித்து கள்ளு குடித்துவிட்டு படத்துக்கு போனவர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஒரு மாநிலத்தில் எப்படி புத்தர், யேசு எல்லாம் முதலமைச்சராவது?
  14. அடிப்படையில் திராவிடமா, தமிழா என்று கூறுவதே தற்குறி தனமான வாதம். தமிழரின் மரபு இனம் திராவிடம் என று மானுடவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நீ மனிதனா அல்லது தமிழனா என்று கேட்பதை போலவே இந்த கேள்வியும்.
  15. இதை கூறியவர் அறிஞர் அண்ணா. அண்ணா கூறியதாக நேரடியாக கூறாமல் அவர் காலத்தில் இருந்து நாம் கூறுகிறோம் என்று அதை கூறியது தான் என்பது போல் கூறியுள்ளார்.
  16. தேர்தலில் போட்டியிடுவதானல் அரச பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி சட்டப்படி ராஜனாமா செய்துள்ளார். இதில் என்ன பிரச்சனை?
  17. தேர்தல் அரசியல் என்றால் இப்படி தான் இருக்கும். இவ்வாறாக தேர்தலுக்கேனும் எமது சாதுரியத்தை பாவித்து நாம் இழந்தவைகளை தேர்தலுக்காக அவர்கள் தந்தாலும் பெற்று கொள்ளவதில் தவறில்லை. அதை குறை செல்வதில் பயனில்லை. துவக்கை தூக்கி கொண்டு போய் வீதிகளை விடுவிக்க முடியாது. இன்னும் நாலு வீதிகளை மூடத்தான் முடியும்.
  18. இது எல்லாம் ஒரு சாதனையா? நம்ம அண்ணன் ஒரு கூட்டத்தில் கூறினார், தான் முதலமைச்சராக வந்த பின்னர் ஆளுநர் மசோதாவுக்கு கையெழுத்து போடவில்லை என்றால் ஆளுநர் மாளிகையை பூட்டி திறப்பை தலையணைக்கு கீழ் வைத்து தூங்கி விடுவாராம். ஆளுநர் அதற்கு பயந்து கையெழுத்து போட்ட பின்னரே திறந்து அவரை வெளியே போக விடுவாராம். அந்த அறிவார்ந்த ஆலோசனையை கேட்காமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வென்றது ஒரு சாதனையா? 😁
  19. காத்தான் குடியை பற்றித் தெரியாது. ஆனால் மாவட்ட ரீதியில் யாழ் மாவட்டம் சனத்தொகையில் மாபெரும் வீழ்சசியை கண்டுள்ளது. 1963 ல 612,596 ஆக இருந்தது. 1971 ல் 696,664 ஆக இருந்த யாழ் மாவட்ட சனத்தொகை 1981 ல் 830552 ஆக அதிகரித்தது. அதாவது 10 ஆண்டுகளில் 133,888 அதிகம். 34 ஆண்டுகளின் பின்னர் 2025 யாழ் மாவட்ட சனத்தொகை 594,333. கிளிநொச்சி மாவட்டம் 136,434. 1981 ல் மொத்த இலங்கையின் சனத்தொகையில் 5.59 வீதமாக இருந்த யாழ் மாவட்ட சனத்தொகை 2025 ம் ஆண்டு 2.7 வீதமாக குறைவடைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை 1963 ல் 196,189. 1971 ல் 256,721 ஆக இருந்த சனத்தொகை 1971 ல் 330,333 ஆக அதிகரித்து 2025 ல் 595,435 ஆக அதிகரித்துள்ளது. மாகாண ரீதியில பார்ததால் வட மாகாணத்தின் சனத்தொகை 1963 ல் 741,341. 1971 ல் இது 874626 ஆகவும் 1981 ல் 1109, 404 ஆக தொடர்ந்து அதிகரித்தது. 34 வருடத்தின் பின்னர் 2025 ல் வடமாகாணத்தின் குடித்தொகை 1149,240. வளர்சசி வீதம் கிட்டத்தட்ட பூச்சியம். கிழக்கு மாகாணத்தின் குடித்தொகை 1963 ல் 546,474. 1971 ல் 717,571. 1981 ல் 1081,481. 2025 ல் 1782,050. ( இந்த புள்ளிவிபரங்கள் அனைத்தும் ஶ்ரீலங்கா சனத்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரவியல் தினைக்களத்தின் (Department of census and statistics) இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டவை.
  20. இலங்கை முழுவதும் வீதி பெயர் பலகைகளும் அரச திணக்களங்கள் பெயர் பலகைகள் எல்லாம் மூன்று மொழியிலும் உள்ளன. ஆகவே இங்கு அது பிரச்சனை இல்லை.
  21. மோடியே ஒரு இனப்படுகொலையாளன். 2002 இஸ்லாமிய மக்களை படுகொலையின் பங்காளர். நியாயமான சர்வதேச விசாரனை நடந்தால் இப்போதும் உள்ளே போக வேண்டியவர். அப்படிப்பட்ட மோடி வந்து பேசி தமிழருக்கு நன்மை கிடைக்கும் என்று நினைக்க நாம் என்ன இளிச்சவாயரா?
  22. தமிழன் மட்டுமல்ல உலகில் வாழும் அனைவருக்கும் தத்தமது கையெழுத்து எப்படி எந்த மொழியில் போடவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை அவர்களது தனிப்பட்ட விடயம். அதில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.