Everything posted by island
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சி வட கிழக்கில் உள்ள 5 மாவட்டங்களில் உள்ள 20 மேற்பட்ட தோகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற ஓரு கட்சி. அவரை தமிழர்களின் ஒட்டுமொத்த தலைமையாக மக்களே ஏற்கவில்லை. இருப்பினும் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர களில் ஒருவர். அவர் எந்த மொழியில் கையருமது இடவேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை அவருக்கு மட்டுமே உள்ளது. அதை தவறு என்று சொல்ல எத்த கொம்பனுக்கும் உரிமை இல்லை.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
நாங்கள் அப்படி எல்லாம் செய்ய மாட்டோம். யுத்தம் புரிவதை நாமே முடிவு செய்வோம். பேச்சுவார்ததையில் இருந்து வெளியேறுவதையும் மீண்டும் யுத்தத்தை தொடக்குவதையும் நாமே முடிவு செய்வோம். யார் யாரை போட்டு தள்ளினால் தமிழீழம் விரைவில் கிடைக்கும் என று எமக்கு தெரியும். எனவே அதையும் நாமே முடிவு செய்வோம். எங்காவது சொதப்பினால் மட்டும் நோர்வே மீதும் அமெரிக்கா, பிரிட்டன் சோனியா, கருணாநிதி என்று கண்ணில் யார் தென்படுகிறானோ அவன் மீது முழுபழியையும் போட்டு புலம்பி திரிவோம். இது எங்கள் உரிமை.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
மற்றயவர்கள் எந்த மொழியில் கையெழுத்து இடவேண்டும் என்று கட்டளையிடும் உரிமை மோடிக்கு இருப்பதாக எழுதிய நீங்களே அவருக்கு அந்த உரிமை இல்லை என்ற புரிதலுக்கு வந்திருப்பது நல்லது. உங்களுக்கு உள்ள புரிதல் கூட மோடிக்கு இல்லை. நிற்க, குஜராத் மொழியை தாய் மொழியாக கொண்ட மோடி இந்தியில் கையெழுத்து இடுவதை யாரும் மோடியை போல் மோட்டுதனமாக கேள்வி கேட்கப்போவதில்லை. 😂
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழமையாக ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் அவரது தமிழ் மொழி உரிமை தொடர்பான வேண்டுகோள்கள் எல்லாம் அர்ததமற்றவை என்று கூற வருகின்றீர்களா?
- IMG_9450.png
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினால் அந்த கடிதத்தில் கூறப்பட்ட விடயங்களை வாசித்து பரிசீலித்து அந்த விடயங்களுக்கு சாதகமாகவோ பாதாகமாகவோ உரிய காரணங்களை விளக்கி பதிலெழுதும் உரிமை அல்லது அதை விவாதிக்கும் உரிமை மட்டுமே மோடிக்கு உள்ளது . அதை விடுத்து கையெழுத்து எப்படி போட்டாய் என்று கேட்கும் உரிமை மோடிக்கு இல்லை. கச்சதீவை மீள் என்று கடிதம் எழுதினால், அதை மீட்க முடியாது. அது இரு நாடுகளுக்கு இடையில் ராஜதந்திர உறவை பாதிக்கும். எனவே கொடுத்தது கொடுத்தது தான், திருப்பி எல்லாம் கேட்க முடியாது என்று வேண்டுமானால் பதில் கடிதம் போடலாம். எந்த மொழியில் கையொப்பம் இடவேண்டும் என்று கூறும் உரிமை இந்திய பிரதமராக பதவி வகிப்பதால் மோடிக்கு உள்ளது என்று நீங்கள் கூறி இருப்பதால் இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவின் பிரகாரம் அந்த உரிமை பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று நீங்கள் தெரிவித்தால் நீங்களும் அதை தெரிந்து கொள்வோம்.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
அதை முடிவு செய்யும் உரிமை மோடிக்கு இல்லை.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
அதே வேளை அடுத்தவன் எப்படி கையெழுத்து இடவேண்டும் என்பதை வெறு ஒருவன் தீர்மானிக்க முடியாது.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
வட இந்நியாவில் வாழும் பல கோடிக்கணக்கான மக்களுக்கு கையெழுத்து போடவே தெரியாது. அதை முதல் மோட(டி)ர் கவனிக்க வேண்டும். வட மாநிலங்களை விட தென் மானிலங்களில் கல்வியறிவு மிக மிக அதிகம்.
-
மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை - அண்ணன் கைது
தமிழ் நாட்டிலும் சரி, ஈழத்திலும் சரி நீண்ட காலமாகவே கிராமங்களில் உள்ள பல சிறிய கோவில்களில் சாதாரணமக்கள் பூசகர்களாக உள்ளனர். அவ்வாறாக அவர்களால் தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில்களில் பூசகர்களாக பிராமணர்களை அழைத்தாலும் வரமாட்டார்கள். ஆனால் பெரிய கோவில்கள் எல்லாவற்றிலுமே பிராமணர்கள் மட்டும் தான் பூசை செய்யலாம். தமிழ் நாட்டில் அனைத்தை சாதியினரும் அர்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு கொண்டுவரப்பட்ட சட்டதை எதிர்தது பிரமணர்கள் நீதிமன்றம் சென்று சைவ ஆகமங்களில் அந்த உரிமை பிறப்பால் பிராமணர்களாக பிறந்தவர்களுக்கே உரித்தானது என்று தடை உத்தரவு வாங்கியுள்ளனர். தமிழ் நாட்டிலாவது அப்படியான விழிப்புணர்வு ஏற்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டதை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால், ஈழத்தை பொறுத்தவரை கோவில்களில் பிராமணர்களின் மேலாண்மையை தாங்களாக ஏற்றுக கொண்ட அடிமை நிலையே நிலவுகிறது. பிராமணகளை உயர்ததிப் பிடித்து அவர்களுக்கு அரணாக தாம் நின்று தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கவதே யாழ்பாண வெள்ளாள மனநிலை. ஆறுமுக நாவலர் யாழ்பாண மக்களுக்கு கற்றுக்கொடுத்தது இதுவே. ஆகவே, சாதி ஒடுக்குமுறை, சமூக நீதி ஆகிய விடயங்களில் தமிழ் நாட்டுமக்களை குறை சொல்லும் தார்மீக உரிமை ஈழத்தமிழருக்கு இல்லை.
-
மாற்று சாதி இளைஞரை காதலித்த தங்கை கொலை - அண்ணன் கைது
தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் ஈழத்தமிழர் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள கோவில் அமைப்புகளிலும் அவர்களது திருமணங்களிலும் வருணாசிரம ஆட்சியே கோலோச்சுகிறது. சாதி வெறியில் யாழ்பாணம் முன்னிலை வகிக்கிறது.
-
கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? - நிலாந்தன்
அதி தீவிர இனவாதத்தை கொண்டவராகவும் யுத்த வெறியராகவும் ஒருவரை ஜனாதிபதி பதிவிக்கு கொண்டு வருவதன் மூலமே அவருடன் யுத்தம் செய்து அவர் எமது மக்களை வகை தொகையின்றி படுகொலை செய்ய அதை வைத்து நாம் தமிழ் தேசியத்தையும் தமிழீழத்தை அமைக்கலாம் என்ற கோட்பாட்டு சிந்தனை உருவாகியவுடன் எனக்கு தமிழ் தேசியவாதிகளின் உண்மை முகம் விளங்கி விட்டது.
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
நான் சுட்டிக்காட்டியது இனவாதத்தை பற்றியது மட்டுமே. தமிழர், சிங்களவர் இருவருமே இனவாதம் உள்ளவர்களே. எண்ணிக்கை பலம் என்ற அடிப்படையில் சிங்கள இனவாதம் மேலோங்கி இருந்தாலும் தமிழர்களும் இனவாதம் உள்ளவர்களே என்பதையே வரலாறு கூறுகிறது. அந்த நோயை தீர்த்து ஒன்று பட்ட இலங்கையில் வாழ்வதற்கு இரு பகுதியும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். ஒருவரை ஒருவர் கைகாட்டுவதே தத்தமது குற்றங்களை மறைக்கவே.
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
யாழ்பாணத்தின் வரலாறு கூறும் நூலான “யாழ்பாண வைபவமாலை” என்னும் நூலில் புத்த கோவில்களை எல்லாம் இடித்து சிங்களவரை துரத்திய வரலாறு உள்ளது. மதம் மாறினார்கள் என்பதற்காக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராது அனைவரையும் சங்கிலியன் வெட்டி கொலை செய்த வரலாறும் உள்ளது. ஆகவே இனவாத விடயத்தில் நாமும் சிங்களவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர். இற்றைக்கு 250 வருடங்களுக்கு முன்பு 1750 களில் இந்நூல் எழுதப்பட்டது.
- IMG_9332.jpeg
-
தமிழில் பட்டப்படிப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!
அவர் எங்கட யாழ்ப்பாணத்து தமிழ் பேசவில்லை. அப்ப அவர் எங்கட ஆள் இல்லை தானே! கேட்டிய கிளி இதுவும் ஒரு கேள்வியாம்! 😂
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
தந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் நுணாவிலானுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன். 🪔🪔
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
உங்களுக்கும் உங்கள் கும்பத்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
முன்பே தெளிவாக கூறி இருந்தேன், அர்ச்சனா என்ற சைக்கோவால் அவதூறு கூறப்பட்ட சங்கவி என்ற பெண் யூருப்பர் நேர்மையாகவும் பண்பாகவும் அவரிடம் நீதி கேட்டதற்கு பதில் கூறுவதாக தனது முகப்புத்தகத்தில் அரச்சுனா பதில் கூற அந்த கேடுகெட்டவனின் மிக மலினமான கிண்டல் அவதூறு காணொலியை பார்தத பின்பும் அர்சனாவை மனப்பூர்வமாக ஆதரிப்பவர்கள் மனநிலை பாதிக்கப்பட்ட சைக்கோகளே.
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
உங்கள் அர்சனாவும் அவரது அடி பொடிகளான வன்னி அணியும் தமிழ் பெண்கள் மீது மேற்கொண்ட அவதூறுகளுக்கு ஆதாரம் உண்டா வாத்தியாரே. பெண் யூருப்பர் சங்கவி மீது அபாண்டமான அவதூறுகளை தனது வன்னி அணி மூலம் பரப்பி அதை தானே share செய்து அர்சசனாவிடம் நீங்கள் அதற்கு ஆதாரம் நீங்கள் கேட்கவில்லையே! அந்த பெண் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நேர்மையாக காணொளி மூலம் அர்சனாவிடம் நீதி கோரிய போது, அதற்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு அர்சனா சைக்கோ ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில் அந்த பெண்மீது மீது தானே நேரடியாகவே அவதூறுகளும் இழிவு படுத்தும் விதாமாகவும் ஒரு சைக்கோவை போல் பேசியிருந்த அரச்சனாவிடம் ஆதாரம் கேட்டீர்களா? அர்சனாவின் அந்த அவதூறு காணொளியை பார்தத பின்னும் அவரை ஆதரிப்பவர்களும் மன நிலை பாதிக்கப்பட்ட சைக்கோக்களே.
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
எமது தமிழ் சமூகத்தில் பண்பாடற்ற கீழ்தரமான அரசியல், சமூகவியல் கலாச்சாரத்தை உருவாக்கவும் அதற்காக ஆதரவாளர் அமைப்புகள் என்ற போலி முகபுத்தக அணிகளை கொண்டு தனக்கு பிடிக்காதவர்கள் மீது தன்னுடன் கருத்தியல் ரீதியாக முரண்பாடு கொண்டவர்கள் மீதும் அவதூறுகளை புரிவதும், அதிலும் பெண்கள் என்றால் அவர்கள் மீது பாலியல் அவதூறுகளை பொழிவது போன்ற செயல்களை செய்யும் அர்சசுனா ஒரு விஷசெடி தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. இவரோடு முரண்படுபவர்கள் வாய் திறந்தாலே அவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீச ஒரு காவாலி அணிகளை கட்டமைத்துள்ளார். முளையிலேயே கிள்ளி தூர எறியவேண்டிய விஷசெடியே அர்சசனா.
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
உங்களது ஒப்பீடே தவறானது. நாம் இங்கு பேசுவது அர்சசுனா என்ற நபர் தமிழரின் உள்ளூர் அரசியல் மற்றும் சமூக விடயங்களில் தனது அடியாட்கள் மூலம் செய்துவரும் அழிசாட்டியங்களை பற்றி மட்டுமே. தனக்கு பிடிக்காதவர்கள் மூலம் பழி சுமத்துவதும் பெண்கள் என்றால் அவர்களின் நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் விதமாக தனது அடியாட்கள் மூலம் அவதூறு பொழிவதும் தமிழர் சமூக வாழ்வில் சாதாரண மக்கள் வாய் திறக்க அஞ்சும் நிலமையை உருவாக்கி வருகிறார். இது தமிழரின் சமூக வாழ்வில் ஏற்படுத்த போகும் தாக்கம் பாரதூரமாக இருக்கும். அவரை கிராமத்தில் இருந்து வந்த அப்பாவி என்று மறைமுக முட்டு கொடுப்பது தவறானது. அ.அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். நீங்கள் ஒப்பிட்ட விடயங்கள் வேறு ஒரு category என்பது அரசியல் படுகொலைகள் சார்ந்தது. ராஜபக்சக்களின் இனபடுகொலையோ , ரணிலின் படுகொலைகளோ ஜேவிபின் அல்லது ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற படுகொலைகளோ இந்த திரியின் பேசு பொருள் அல்ல.
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
அர்ச்சனா தனது துறைசார் கல்வியை கற்றிருந்தாலும் அதில் முழுமை பெற்றவரக தெரியவில்லை. முழுமையாக அந்த கல்வியை கற்றவர் போல் தெரியவில்லை. இவரது புலம் பெயர் / தாயக ஆதரவாளர்கள் எவரும் படித்த கல்வியாளர்களாகவோ முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாகவோ தெரியவில்லை. மருத்துவத்துறையில் இலங்கையில் அவர் எந்த சாதனையையும் நிகழ்ததவில்லை. பொதுவாக துறைசார் கலவியை கற்றவர்கள் அத்துறையில் உச்சத்தை தொட வேண்டும் என்றே விரும்புவர். மருத்துவத் துறையில் தன்னால் இதற்கு மேல் செல்லும் அளவுக்கு தனக்கு அறிவு இல்லை என்பதாலேயே தனது வாய் வாரத்தை காட்டி, தன்னை ஹீரோவாக காட்டி அரசியலில் பிரவேசித்தார். தமிழ் சமுதாயத்தில் அரசியல்/ போது அறிவற்ற ஒரு கூட்டம் இருப்பதை துல்லியமாக கணிப்பிட்டது அவரது திறமை என வேண்டுமானால் கூறலாம். அவர் படித்தவர் என கு தன்னை தானே பீற்றிக்கொண்டாலும் அவரது எந்த நடத்தையும் படித்தவர் போல் என்றுமே இருக்கவில்லை பக்கா லோக்கல் மொழி நடையில் கதையாடல்களை மேற்கொண்டே மக்கள் ஆதரவை பெற்றார். அவரது சிங்கள / ஆங்கில மொழி பாவனைகள் கூட பக்கா லோக்கல் பாசையகவே உள்ளபோது அவரை எப்படி படித்தவரக கொள்ள முடியும். மக்கள் வாக்களித்ததும் அவரது கல்விக்காக இல்லை . அவரது ஹீரோயிசத்தையும் அதிரடி புரட்சியாளனாக காட்டிக்கொண்டதை நம்பியே மக்கள் வாக்களித்தனர். தேர்தலுக்கு முன்பே அநாகரிகமாக நடந்து கொள்ள தொடங்கியும் தனக்கு வாக்குகள் விழுந்ததை வைத்து அரசியல் அறிவு அற்ற இந்த கூட்டம் தான் எப்படி பண்பாடு அற்ற முறையில் நடந்தாலும் வாக்களிக்கும் என்று நம்ப தொடங்கி விட்டார்.
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
அர்ச்சனா அளவுக்கு அதிகமாக தொடர்சசியாக அநாகரிகமாக நடத்து கொண்டாலும் அவரை கண்டிக்க கல்வி சமுதாயம் என்று தம்மை அடிக்கடி பீற்றிக்கொள்ளும் யாழ்பாண சமூகம் முன்வரவில்லை. மெளனமாக அவரது பண்பாடு அற்ற செயல்களை அங்கீகரிக்கும் போக்கே காணப்படுகின்றது. அத்துடன் இன்னும் அவரை ஊக்குவிக்கும் போக்கும் உள்ளது.
-
ஊழல் எதிர்ப்பு அணி வன்னி என்னும் அவதூறு பரப்பிகளும் அதை பகிரும் மூடர்கூடமும்..…
இவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். நன்றி பாணபத்திரரே.