Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. ஜக்கம்மா நண்டுகளை கைவிட்டு விடார். இது நல்ல முடிவு, எனக்கு புள்ளிகள் அந்த கேள்விகளுக்கு வராது.🤣
  2. ஜக்கம்மாவே நண்டுகள் பக்கம்தான், ரஜனிக்காந்த மொடியுலேசனில் வாசிக்கவும்.🤣 அடுத்து உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் உள்ளது ஆனால் இது போல இழுபடாது.
  3. பெங்களூர் அணி பலமான அணிதான் ஆனால் அவர்கள் இறுதி போட்டியில் பஞ்சாப்பிற்கு எதிராக மட்டும் விளையாடவில்லை யாழ்கள ஒட்டு மொத்த நண்டுகளுக்கு எதிராக விளையாடுகிறார்கள்.
  4. ரீஸ ஒரே ஒரு மட்சில விளையாட வைத்து சொந்த செலவில சூனியம் வைச்சிட்டாங்கள். பையன் வந்தா ராஜாவாத்தான் (முதல்வன்) வருவார்.
  5. தோற்றுப்போன மும்பாய் அணியினை தேர்வு செய்தவர்களை விட்டு விட்டு நண்டுகள் குலாமிற்கு அந்த 3 புள்ளிகலை வழங்கலாம்தானே🤣.
  6. பும்ரா 18 வது ஓவரில் போட்டது நல்ல முடிவுதான், அந்த ஓவரில் ஒரு விக்கெட் விழுந்திருந்தால் நிலமை சில வேளை பம்பாயிற்கு சாதகமாக அமைந்திருக்கலாம், 19 ஓவர் மிக தாமதமகிவிடும்.
  7. பாண்டியா, சான்ட்னருக்கு 2 + 2 ஓவர்கள் இருந்துள்ளது, அளவு குறைந்த மெதுவான பந்து விளையாட சிரமாக காணப்பட்ட போதும் இறுதி ஓவர்களில் புல் லெந்தில் போட்டு வாங்கி கட்டிக்கொண்டார்கள், ஆனாலும் பஞ்சாப் சிறப்பாக விளையாடியது. பெங்களூர் அணிக்கு இறுதி போட்டி இலகுவாக இருக்கபோவதில்லை, பஞ்சாப் மிக சிறந்த அணியாக உள்ளது.
  8. மும்பாயினை முடிச்சுவிட்டாங்கள்.
  9. இந்த பாட்டின் அர்த்தம் தெரியாது ஆனால் 1, 2, 3 என்பது விளங்கும், இன்று இந்த மூவருக்கும் பஞ்சாப்பின் பரிசாக இந்த பாட்டு இப்படிக்கு நண்டுகள் குலாம்🤣
  10. ஒரு நல்ல நெறி முறை இல்லா படையிடம் (ethics), எந்த வித ஒழுக்கமும் (morals) இருக்காது அவர்களிடம் அழிவு ஆயுதம் இருக்குமாயின் அது உலக அழிவிற்கு வழிவகுக்கும், இதற்கு முழுக்காரணம் இந்திய குடிமக்களே. ஆனால் இவர்களிற்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் குறைந்த பட்ச நெறிமுறையினையாவது பின்பற்றவேண்டும். ஒரு சாதாரண எல்லை முறுகலை அணு ஆயுத அழிவு வரை எடுத்து செல்வது பைத்தியக்காரத்தனம், இப்படியான பைத்தியக்காரர்களுக்கு ஆயுதம் வழங்கும் போது அது பற்றி உலகு சிந்திக்கவேண்டும். இரண்டு ஆக்கிரமிப்பு நாடுகளும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரவேண்டும், உயரொழுக்கம் கொண்ட அரசியல் தலைமகளை மக்கள்தான் உருவாக்க வேண்டும்.
  11. இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாங்கும் விமானங்கள் உபகரணங்கள் முற்று முழுதான பயன்பாட்டு தன்மை கொண்டவையாக இருக்காது, அவற்றிற்கு பயன்படுத்தும் ஜிபிஎஸ் உள்ளடலங்கலாக அவை மேற்கின் கட்டுப்பாட்டில் இருக்கிறது, கடந்தகாலத்தில் போர் காலத்தில் இராணுவ அளவு கொண்ட ஜிபிஎஸ் மட்டுமல்ல சாதாரண ஜிபிஎஸ் இனை பயன்படுத்த முடியாதவாறான நிர்ப்பந்தத்தில் இந்தியா இருந்திருகின்றது. தற்போது வாங்கும் மேற்கு நாடுகளின் விமானங்கள் அதன் மென்பொருள் மேம்படுத்தல் நடவடிக்கை மட்டுமல்ல சாதாரண உபயோகத்திற்கு முன்னரான இயங்குநிலை சரிபார்க்கும் நடவடிக்கை (Start up checklist - sys login, upload mission data, sys health check) முடிக்கும் போது அது தயாரிப்பாளருக்கு அது தொடர்பான தகவலை அனுப்பிவிடும். இது ஒரு வகையில் சரியான விடயமாகவே உள்ளதாக தற்போது கருதுகிறேன், ஏனெனில் இந்தியா ஒரு ஆபத்தான சக்தியாக தெற்காசிய பிராந்தியத்தில் உருவெடுத்துள்ளது, இதற்கு உதாரணமாக அண்மைய பாகிஸ்தான் போரில் இந்தியா பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்கினை தகர்த்தாகவும் அதனால் 3 நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் இந்தியர்கள் பெருமை பேசுகிறார்கள். பாகிஸ்தான் மக்களையோ அல்லது இராணுவத்தினையோ தாக்கவில்லை வெறும் பயங்கரவாதிகளை மட்டும் தாக்குவதாக கூறிக்கொண்டு ஆரம்பித்த இந்தியாவின் நடவடிக்கை உலக அழிவின் விழிம்புவரை செல்லும் பைத்தியக்கார மனநிலைக்கு சென்றுள்ளார்கள், சாமானிய இந்தியர்கள் அதனை ஒரு தவறாக பார்க்காமல் அதனை ஒரு வெற்றியாக கருதும் முட்டாள்களாக உள்ளார்கள் (இந்த அழிவினால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்). இந்தியா ஒரு தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசாக வருகிறதோ தெரியவில்லை ஆனால் நிச்சயமாக ஒரு நாசகார சக்தியாக உருவெடுத்துள்ளது.
  12. நண்டுகள் குலாமின் சார்பாக வாழ்த்துக்கள்.😂
  13. எனது நண்பரின் ஊர் பற்றி ஒருவருக்கும் தெரியாது என நினைக்கிறேன், ஆனால் யாழ்ப்பாணம் இல்லை என்பதால்த்தான் இந்த கேள்வி எழுந்திருக்கும் என கருதுகிறேன்.
  14. சீனா, பாகிஸ்தானும், இந்தியாவும் தாம் கைப்பற்றி வைத்திருக்கும் காஸ்மீரை விடுவித்து காஸ்மீரை சுதந்திர நாடாக அங்கீகரித்தால் இப்படி தேவையில்லாத வலிகள் இருக்காது பிராந்தியம் நிம்மதியாக இருக்கும் (எதுக்கு அடுத்தவன் சொத்திற்கு ஆசைப்படுவது?). முதலில் அன்றாட வாழ்க்கைக்கு வழியில்லாமல் அல்லாடும் மக்களை மேம்படுத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் எனும் மனநிலை சாதாரண மக்களுக்கு ஏற்பட்டால் மட்டுமே உசுப்பேற்றும் போலி தேசி அரசியல்வாதிகளை கட்டுப்படுத்த முடியும். முதலில் தேசமாக ஒன்றினையாமல் (மதம், சாதி, வர்க்க) இந்த ஆயுதங்களை உருவாக்குவதால் எந்த பலனும் ஏற்படாது (இந்தியாவில் அது எப்போதும் நிகழாது).
  15. மைதான ஈரலிப்பினால் பந்து வீச்சாளர்களுக்கு சிரமமாக இருக்கும் பந்து ஸ்கிட்டாகி மட்டைக்கு இலகுவாக வரும் என நினைத்தேன், ஆடுகளம் பெரிதாக மெதுவாக இராது என்பதால் முதல் துடுப்பாட்டம் பாதகம் இராது என எண்ணியிருக்கலாம் பந்து வீச்சாளர்களுக்குத்தான் பந்தினை பிடிப்பதற்கு கடினமாக இருந்திருக்கும் ஆனால் சுழல் பந்து வீச்சு ஒரு ஓவர் மட்டுமே போடப்பட்டதால் அதுவும் ஓரளவு நிவர்த்தியாகிவிட்டது ஆனால் தோற்றிருந்தால் பாண்டியாவினை வைச்சு செய்திருப்பார்கள். குஜராத்தின் தோல்விக்கு பட்லரின் இழப்பும் மென்டிஸின் களத்தடுப்பும் காரணமாகிவிட்டது, மென்டிஸினை சுந்தருக்கு பின்னால் இறக்கியிருக்கலாம். பஞ்சாப் இறுதிப்போட்டிக்கு செல்லும் என கருதுகிறேன்.
  16. எனது நண்பர் (அவரரது ஊர் தெரியாது) ஒருவர் வெளிநாடு வந்த போது அதே இளம் வயதொத்த ஒருவர் "கொப்பர் என்ன கமமோ" என கேட்டார், அவரை (கேட்டவரை) பின்னர் கமம் என அழைப்பதுண்டு🤣.
  17. இன்றும் ஆரம்ப ஓவர்களில் சாய் சுதர்சனுக்கு அதே செட்டப் செய்தார்கள் அதே களத்தடுப்பாளர் (பாண்டியா) ஆனால் அன்று நடந்தது போல நிகழவில்லை.
  18. எனக்கும் அதே எண்ணம் இருந்தது🤣, அத்துடன் சென்னை அணிக்கு அடுத்த தெரிவாக தமிழ்நாட்டு வீரர்கள் அதிகம் விளையாடும் அணியான குஜராத் உள்ளது. கவனிக்கவில்லை தவறாக பதிந்திருந்தேன் ஆனால் நீங்கள் கவனித்துள்ளீர்கள், ஆனால் மும்பாய் முதல் துடுப்பாட்டம் தெரிவு செய்துள்ளது ஆச்சரியம்தான், அல்லது நீங்கள் கலாய்பதனை போல பாண்டியா யாழை பார்க்கிறாரோ?🤣
  19. வீராட் கோலியின் தற்போதய பிடித்த பாடல்.
  20. இன்றைய போட்டியில் மும்பை அணி பெயரளவில் பலமான அணியாக இருந்தாலும் குஜராத் அணி வெல்லும் என கருதுகிறேன் . மும்பை அணி வெல்லும் என கருதுபவர்கள் மும்பை எனவும் குஜராத் அணி வெல்லும் என கருதுபவர்கள் குஜராத் எனவும் குறிப்பிடவும், பெரும்ப்பான்மையானோர் இந்த் போட்டியில் இரு அணியினை தெரிவு செய்யாதமையால் இந்த முயற்சி. அந்த 5 நபர்கள் விதிவிலக்கு ஆனாலும் மும்பை வெல்லும் என குறிப்பிட்டு மும்பையினை வாக்குகாளால் ஆவது வெல்ல வைக்கலாம். உறுதியாக மும்பாய்க்கு 5 வாக்குகள்தான் கிடைக்கும்.🤣 எனது வாக்கு குஜராத்திற்கே! GT 1 VS MI 0 தற்போது குஜராத் முண்ணனியில் உள்ளது.😂
  21. இன்றைய மும்பை, குஜராத் போட்டியில் மும்பை அணிக்காக ரிக்கில்ட்டனின் இடத்திற்கு ஜொனி பரிஸ்டோ களமிறங்குவார், ஜாக்கின் இடத்திற்கு அசல்ங்கா அல்லது ஜாக்கோப் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குஜராத்திற்காக குசால் மென்டிஸ் களமிறங்குவார் என கூறப்படுகிறது. இந்த ஆடுகளம் ஒரு பக்கம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக புற்களுடன் காணப்படுவதாமாகவும் மறுபக்கம் புற்கள் அற்று சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக காணப்படுகிறது என கூறப்படுகிறது ஆனால் துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமாக ஸ்குயார் எல்லைக்கோடுகள் 62 மற்றும் 65 மிட்டர்கள் மட்டும் கொண்டவையாக காணப்படுவதால் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக காணப்படும். பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை எடுப்பதன் மூலம் ஓட்டங்கலை மட்டுப்படுத்துவதற்கு ஏற்ப ஆடுகளம் காணப்பட்டாலும் பக்க எல்லைகள் குறுகலாக இருப்பது பாதகமாக இருக்கலாம். பந்து வீச்சாளர்கள் பந்தினை விக்கெட்டு டு விக்கெட் என போட முயல்வதுடன் துடுப்பாட்டக்காரர்களை நேர் கோட்டாக விளையாடாமல் குறுக்காக விளையாட வைக்கவும் உள்ளே இருந்து வெளியே அடிக்க கால் உள்ளடங்கலாக உடலின் கீழ் பகுதிகளை குறிவைத்து பந்து வீசுவார்கள், குறிப்பாக சரியான அளவிற்கு சற்று குறைவாக (Back of length) பந்து வீச முயற்சிப்பார்கள். ஆனால் அளவு குறைந்த பந்துகளின் (short ball) தாக்கம் குறைவாக இருக்கும். மைதான ஈரலிப்பு காணப்படும் என்பதால் நாணய சுழற்சி முக்கியம் பெறும், நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என கருதுகிறேன். இந்த மைதான மற்றும் ஆடுகள நிலவரங்களின் அடிப்படையில் 180 - 190 வெற்றிக்குரிய ஓட்டங்களாக இருக்கும் என கருதுகிறேன். இறுதிப்போட்டியில் தீபக் சாகர் மற்றும் திலக் வர்மா தசைப்பிடிப்பு காரணமாக ஆடுகளத்திலிருந்து வெளியேறி இருந்தார்கள் என கருதுகிறேன், இவர்களில் யாராவது ஒருவர் இன்று காயம் காரணமாக விளையாட முடியாமல் போனால் இன்னுமொரு புதிய வீரர் களமிறங்குவார்கள், இவ்வாறு புதிய வீரார்க்கள் வாழ்வா சாவா போட்டிகளில் பெருமளவில் களமிறங்கும் அணி பலவீனமாக காணப்படும்,
  22. இது உள் நாட்டு உற்பத்தியினை கணிப்பதாகும், பொதுத்துறையின் கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கணிப்பீட்டிற்கும் எந்த தொடர்புமில்லை, உதாரணமாக உங்கள் வீட்டுக்கடன் 1 மில்லியன் என வைத்துக்கொள்வோம் உங்கள் ஆண்டு வருமானம் ஒரு இலட்சம் என கொண்டால் உங்கள் ஆண்டிறுதி வருமான வரி கட்டும் போது நீங்கள் எனது வருமானாம் 1,000,000 - 100,000 = - 900,000 அதனால் வருமான வரி கட்டமுடியாது என கூற முடியாதல்லவா? அமெரிக்க பொருளாதாரம் ஒரு உறுதியற்ற பொருளாதாரம் என நீங்கள் கூறுவதற்காக இந்த கடனையும் உள்ளடக்குகின்றீர்கள் அமெரிக்க உள்நாட்டு வருமானம் சரியாகநினைவில்லை 27 டிரில்லியன் ஆனால் அமெரிக்க கடன் 36 டிரில்லியன் என நினைக்கிறேன் அதனால் அமெரிக்க வருமானம் மறை இலக்கத்தில் உள்ளது என கூறுக்ன்றீர்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்கும்போது இந்த கடன் ஒரு பொருட்டாக இருக்காது, இதனை மையமாக வைத்தே ட்ரம்ப் தனது நகர்வுகளை செய்கிறார் (நான் ட்ரப் ஆதரவாளன் அல்ல),
  23. நீங்கள் இந்த அணிகளை இறுதிப்போட்டியில் தெரிவு செய்துள்ளீர்கள் போல் உள்ளது சரியான தெரிவுதான், சில வேளை பெங்களூர் தென்னாபிரிக்கா போல் இறுதிப்போட்டியில் சொதப்பினால்?
  24. குற்று இல்லை, கொமா 12,614. தவறாக பதியப்பட்டுவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் கணிக்கப்படுவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.