Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. அவுஸ்ரேலியாவில் உள்ள குவின்ஸ்லான்ட் எனுமிடத்தில் ஒரு சூறாவளியின் போது சுறா ஒன்று வீதிக்கு வந்ததாக செய்தி வந்தது நினைவிலுள்ளது, அமெரிக்க அன்பர்களுக்கு சுறா வர வாய்ப்பில்லாவிட்டாலும் முன்னால் இரஸ்சிய அதிபர் வாய்கொழுப்பில் கதைத்ததிற்கு பதிலடியாக இரண்டு அணு நீர்மூழ்கியினை இடம் குறிப்பிடாத இடத்தில் நிலை நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார், இந்த வெள்ளத்தினால் நியுயோர்க் நகரவாசிகளின் கால்களில் இந்த இரண்டு அணு நீர்மூழ்கிகள் இடறவாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருக்கவும்.🤣
  2. நான் கூற வந்த விடயத்தினை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என கருதுகிறேன். உதாரணத்திற்காக நீங்கள் வீடு வாங்க முடிவு செய்து சந்தை விலையில் வாங்குவதனை விட மலிவாக வாங்குவதற்காக ஒரு வாங்கும் முகவரை அணுகுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம் (இரண்டு வகை முகவர்கள் உள்ளார்கள் பொதுவாக விற்கும் முகவர்களே அனைவருக்கும் தெரியும், விற்கும் முகவர்கள் விற்பவர்களின் நலனை அடிப்படையாக கொண்டு செயற்படுபவர்கள்). உங்களுக்கு பிடித்த வீட்டினை சந்தை விலையில் 3 மடங்கு அதிக விலையில் விற்க முனைகிறார், அதற்கு அவர் கூறும் காரணம் பொதுநலம் என கூறி உங்களை வாங்குமாறு கூறினால் அவர் கூறிய மாதிரியே 3 மடங்கு விலையில் வீட்டை வாங்குவீர்களா அல்லது முகவரை மாற்றுவீர்களா?
  3. இயற்கையின் மாற்றங்கள் இயல்பானது, இந்த கண்ட மேடை நகர்வுகள் ( டெக்டோனிக் பிளேட்) தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது இதனாலேயே மலைகளும் மடுக்களும் உருவானது, மயோசின் காலத்தில் கடலின் கீழே இருந்த யாழ்ப்பாணம் தரையுயர்தல் மூலம் உருவாகியது இதனாலேயே கடல் வாழ் உயிரினங்களின் எச்சங்களின் தோற்றுவாயாக சுண்ணாம்புக்கல் நிலப்பிரதேசமாக யாழ்ப்பாணம் இருந்து வருகிறது, இயற்கை இவ்வாறிருக்க அங்கு வாழும் மனிதர்கள் ஆளுக்கொரு சாதியினை எவ்வாறு உருவாக்கினார்கள், வானத்திலிருந்து குதித்தார்களா? அல்லது வந்தேறு குடிகளா?
  4. மக்களால் தெரிவு செய்யப்படாத ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் எதோ ஒரு நிகழ்ச்சி நிரலிற்காக செயற்படுகிறார்களோ என முன்பு கூறிய விடயம் மீண்டும் உறுதிப்படுத்துவது போன்ற நிகழ்வு இது. அதிகரித்த உற்பத்தி செலவினால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் செல்ல போகின்றன, வெறும் 30 பில்லியன் வாகன சந்தைக்காக ஜேர்மனி இதனை ஆதரிப்பதாக கருத்தில் எடுத்தாலும் நடைமுறையில் அதிகரித்தவிலையினால் மறைமுகமாக அந்த வாய்ப்பினை கூட இழக்கின்ற நிலைதான். ஒரு புறம் திறமையான வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டாலும் மறுபுறம் பொருளாதாரம் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் செயற்பட்டு அமெரிக்காவினை மோசமான மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிடும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறார். அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ள நிலையில் அரச கடனுக்காகவும் தற்காலிக பங்கு சந்தை உயர்விற்காகவும் மத்திய வங்கி ஆளுநருடன் வட்டி விகிதத்தினை குறைக்க சண்டை இடும் ட்ரம்ப் நிச்சயமாக அமெரிக்காவின் பொருளாதாரத்தினை புதைகுழியில் தள்ளாமல் விடமாட்டார்.
  5. GDP பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் அலகு, இங்கு நாட்டின் பொருளாதாரம் பற்றி குறிப்பிடப்படுகிறது, அபிவிருத்தி பற்றியல்ல இரண்டும் வெவ்வேறானவை, அபிவிருத்திக்கு GDP பயன்படுத்தப்படுவதில்லை மாறாக தலாவருமானம் பயன்படுத்தப்படுகிறது, இந்த விடயங்கள் இடைநிலை பள்ளி சமூக கல்வி பாடத்தில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  6. கடந்த ஆண்டு 25 பில்லியன் டொலர் பெறுமதியான இரஸ்சிய எரிபொருளை பெற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் 2021 இல் 108 பில்லியன் இரஸ்ய எரிபொருளிற்காக செலவு செய்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவிடமிருந்து 250 பில்லியன் பெறுமதியான எரிபொருளை பெற்றுக்கொள்ள ட்ரம்புடன் ஒப்பந்தம் ஒன்றிற்கு வந்துள்ளார்கள், இது தவிர போக்குவரத்து மற்றும் காப்புறுதிக்கட்டணம் என்பன மேலதிகமாக அதன் செலவுடன் சேரும், பலமடங்கு விலையில் அமெரிக்க எரிபொருளிற்கு வாங்குவதற்கு ஐரோப்பிய நாடுகளை தள்ளி அமெரிக்காவிற்கு மிக சாதகமான ஒரு வியாபார ஒப்பந்தத்தினை ட்ரம்ப் முடித்துள்ளார், அத்துடன் நிற்காமல் 600 பில்லியன் முதலீடுகளையும் அமெரிக்காவிற்கு பெற்றுக்கொடுத்துள்ளார்(1.3 டிரில்லியன்). இதே போல ஜப்பானிடமும் 550 பில்லியனுக்கு முதலீட்டு ஒப்பந்தம் பெற்றுள்ளார்.
  7. இலங்கை அரசை போலவே இஸ்ரேலும் உணவை ஆயுதமாக பயன்படுத்துகிறது, உலக நாடுகளிலிருந்து வரும் உணவு பொருள்களை வழங்குவதற்கு இஸ்ரேல் அமெரிக்க நிறுவனத்தின் மூலமான உணவு பங்கீட்டினை வலியுறுத்துகின்றது, இதன் மூலம் அமெரிக்க இஸ்ரேல் இணைந்து உணவை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்ற நிலை காணப்படுகிறது, தன்னார்வ நிறுவனங்களின் மூலம் வினியோகிக்கப்படும் உணவு கமாசிற்கு சென்று விடும் என குற்றம் சாட்டும் இஸ்ரேல் விமானம் மூலம் பாரசூட்டில் உணவு பகிர்வதனை தடுக்கமாட்டோம் என கூறுயுள்ளதாம், ஆனால் பாரசூட்டில் முன்னர் உணவு போட்டதில் பொதுமக்கள் சிக்கி உயிர் இழந்துள்ள நிலையில் அதனை செய்ய உலக நாடுகள் விரும்ப்பாது, இஸ்ரேலின் குற்றச்சாட்டான தன்னார்வ நிறுவனங்களின் உணவு பரிமாற்றத்தினால் கமாஸ் உணவினை பெறும் என்றால் விமானத்திலிருந்து போடும் போது அது கமாசிற்கு கிடைக்காதா? நெத்தயாகு செலன்ஸ்கி போல அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் போகும் நபர்.
  8. எங்கெல்லாம் சண்டை உருவாகிறதோ அங்கு அதன் பின்னால் ஒரு கரம் இருக்கும் இதுதான் தற்போதய உலக நிலை.
  9. 90 களில் வந்த படமா? சின்ன வயதில் படம் பார்ப்பதுண்டு 90 களில் இல்லை பின்னர் வெளிநாடு வந்த பின்புதான் பார்க்க ஆரம்பித்தேன், தொலைக்காட்சியில் இந்த படத்தில் ஒன்றை தற்செயலாக பார்த்தேன், சுவாரசியமாக இருந்தது, இந்த படத்தின் ஆரம்பம் அவ்வளவு சுவாரசியமில்லாமல் இருந்ததாக உணர்ந்தேன் ஆனால் பின்னர் படம் சுவாரசியமாக இருந்தது. டொமினோ பாதிப்பு எனும் உத்தியினை படத்தின் சுவாரசியதிற்காக பயன்படுத்துகிறார்கள் என கருதுகிறேன், வண்ணாத்து பூச்சியின் இறக்கையின் அதிர்வு ஒரு சுனாமியினை உருவாக்கும் என்பது போல ரூப் கோல்ட்பேர்க் முறையில் மரணம், மரணத்தினை தவிர்க்க முயலுபவர்களுடன் முகமில்ல்லாத ஒரு எதிரியாக போரிடுவது சுவாரசியத்தினை ஏற்படுத்துகிறது என கருதுகிறேன்.
  10. இது ஒரு முக்கிய பிரச்சினை, ஏனோ பெரிதாக கவனத்திற்கு வருவதில்லை, எதிர்கால சந்ததியின் எதிர்காலம் குறித்த உங்கள் அக்கறை புரிகிறது, ஆனால் பெரும்பாலும் இக்கால கட்டத்தில் பெரிதாக இந்த விட்யங்களில் மக்கள் அக்கறை அற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த தலைமுறையினர் கூட தமெக்கென சொந்த வீடுகளற்றவராகவும் நிலங்களற்றவராகவும் மாறுகின்ற நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரேட்டோ எனும் பொருளியலாளரின் 80/20 எனும் தத்துவம் இயல்பியல் விதியில் தவிர்க்க முடியாத உண்மை என கூறினார்கள், ஆனால் தற்போது 1% உலக வளத்தின் 44% மேலாக உரிமை கொண்டாடுகின்றனர் என கிரெடிட் சுய்ஸ் மற்றும் யுபிஸ் வங்கியின் 2022-2023 அறிக்கை கூறுகிறது. இது அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் நிகழுகிறது, அமெரிக்காவில் 1% மொத்த அமெரிக்க வளத்தில் காற்பங்கினை தமது உரிமையாக்கியுள்ளார்கள், அவுஸ்ரேலியாவில் 20% மொத்த அவுஸ்ரேலிய வளத்தில் 60% -65% தமது உரிமையாக கொண்டுள்ளார்கள். இந்த வளப்பரம்பல் சமநிலை இன்மையால் பொருளாதார சுனாமி அடிக்கடி ஏற்பட்டு உலக பொருளாதாரம் பேரழிவிற்குள்ளாகிறது, இதில் என்ன வருத்தம் என்றால் சாமானியமானவர்கள்தான் இந்த கொள்கையினை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள், இந்த கொள்கைகளால் பாதிக்கப்படும் மக்களே இந்த கொள்கைகளை ஆதரிக்கும் மனப்பாண்மை எவ்வாறு தோன்றியது என தெரியாவிட்டாலும் மக்கள் அடிபடையில் கூட்ட மனப்பாண்மை கொண்டவர்களாக இருப்பதே இதற்கான காரணமாக இருக்கும் என கருதுகிறேன். இலங்கையில் சிறிய மீனவர்களின் வாழ்வாதாரங்களை கேள்விக்குள்ளாக்கும் அயல்நாட்டு பெரும் முதலாளிகள் ஒரு புறமும் அதானி குழு என மறு புறம் என நாட்டை கொள்ளையடிக்கிறார்கள், ஆட்சியில் இருக்கும் அரசுகளுக்கு தட்டி கேட்டால் ஆட்சி அதிகாரம் பறிபோய் விடும் எனும் எண்ணத்தில் அதனை கண்ணை மூடி கண்டு கொள்ளாது விடுகிறார்கள், பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல சாதாரண மக்களை பரம ஏழையாக்கும் இந்த நிலை தொடர்கிறது.
  11. இறுதியாக வந்த அமெரிக்கநுகர்வோர் விலை சுட்டெண் மீண்டும் அதிகரித்த போக்கினை காட்டுகிறது, இதனிடையே வட்டி விகிதத்தினை குறைக்கவேண்டும் என்பதற்காக மத்திய வங்கி ஆளுநருடன் முன்னர் ட்ரம்ப் முரண்பட்டிருந்தார், தற்போது மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கும் போக்கில் உள்ளது, அரச பாதீட்டின் பற்றாக்குறை 6.7% GDP உள்ள நிலையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள நிதிக்கொள்கைகளால் அரச வருமானம் குறைந்து, அதே நேரம் அரச செலவு குறைவதால் பொருளாதாரம் QT போன்ற பொருளாதார சூழ்நிலையினை உருவாக்கி பொருளாதார சுருக்கம் ஏற்படும், தற்போதய ட்ரம்பின் பெரிய அழகிய திட்டத்தின் மூலம் பெரும் நிறுவனங்கள் அதிகளவான நன்மையினை பெற சாதாரண மக்களின் நலன் ஒப்பீட்டளவில் மிக குறைவாக காணப்படுவதால் பொருளாதாரத்தினை தூண்டும் சாதரண மக்களின் செலவு குறைவாக இருப்பதுடன் அரச செலவு குறையும் போது அதிக பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. பல உலக நாடுகள் இதே போல ஒரு இக்கட்டான பொருளாதார நிலைக்கு செல்கின்ற நிலை தொடருகிறது, மக்கள் பற்றிய சிந்தனை அற்ற தலைவர்கள் உலக பொருளாதாரத்தினை பாதிப்பிற்குள்ளாக்க உள்ளார்கள்.
  12. அவரை அப்பா என அழைக்கிறார்களே ஐரோப்பியர்கள்? OBBBA மூலம் அடுத்த 10 ஆண்டில் 3.7 ட்ரில்லியனை அமெரிக்க கருவூலம் இழக்கும் என எதிர்வுகூறுகிறார்களாம், அதே நேரம் DOGE மூலம் அதே 10 ஆண்டில் 1.3 ட்ரில்லியனை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கிறார்களாம், அதன் இடைவெளி -2.4 ட்ரில்லியன், அதாவது ஆண்டு ஒன்றுக்கு 200 பில்லியன் இழப்பு ஏற்படும் என கணித்துள்ளார்கள். இந்த வரிக்குறைப்பு மற்றும் அரச செலவீட்டுக்குறைப்பு போக அதனை ஈடுகட்ட உலக நாடுகளின் மீதான வரி விதிப்பின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு மேலதிகமாக 30 பில்லியன் வருமானம் எட்ட முடியும் என கணித்துள்ளார்கள் அதனால் -170 பில்லியன் செலவு ஆண்டு ஒன்றிற்கு ஏற்படும் என கூறுகிறார்கள் அதனை ஐரோப்பியர்களிடம்தான் (NATO) வசூலிக்க உள்ளார் போல உள்ளது. ஜேர்மனி கடந்த ஆண்டு எதிர்மறை பொருளாதார வளர்ச்சியில் உள்ள நிலையில் GDP இல் 3% இராணுவ செலவீட்டிற்கு அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். இந்த நிதிக்கொள்கைகளால் உள்நாட்டு (அமெரிக்க) பொருளாதாரம் பெரிதும் பாதிக்கலாம் என கருத்து நிலவுகிறது, சாதாரண அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி உள்ளது?
  13. இந்த காணொளி இணையத்தில் காணப்பட்டது, தற்போதுதான் பார்த்தேஎன் (முதல் 5 நிமிடம்), உக்கிரேன் போரின் பரிணாமம் (அடிப்படை) பற்றியது என கருதுகிறேன், முழுவதுமாக பின்னர் பார்க்கவுள்ளேன். இவரரது மனைவி கிழக்கு உக்கிரேனியர் என கூறுகிறார்.
  14. இலங்கை ஒரு சர்வாதிகார நாடு என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு, மக்களின் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் அரச படைகளிற்கு எதிராக இலங்கை நீதித்துறையால் எதுவும் செய்ய முடியாதுள்ளது. முப்படைகளின் தலமை பொறுப்பு ஜனாதிபதியிடமே உள்ளது அதனால் இந்த அடிப்படை மனித உரிமை மீறலுக்கு ஜனாதிபதியே பொறுப்பாவார்.
  15. வாழ்வாதார பிரச்சினையினை எதிர்கொள்ளும் மக்கள் பட்டினியாக இருக்க உல்லாச பிரயாணம் செல்பவர்களின் பிரச்சினை ஒரு பிரச்சினையே இல்லை, ஒரு கட்டத்தின் பின் இந்த பெரிய மீன்பிடி படகுகளுக்கு எதிராக சிறிய மீன்பிடி படகின் மூலம் மீன் பிடியில் ஈடுபடும் தனியார் இலங்கை மீனவர்கள் வறுமையின் அடிமட்டத்திற்கு செல்ல உள்ளார்கள், இதனை காலம் தாழ்த்துவதே தவறு, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடவில்லை இயற்கை வளங்களை அழிக்கும் இந்த உபகரனங்களை பிடித்து அழித்து விடுவதுடன், மிக அதிக தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதன் மூலம் இயற்கையினை பாதுகாப்பதுடன் எல்லை தாண்டிய பிரச்சினையினை தீர்க்கலாம். தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயுறும் வேறல்லவா? இன்று உலகம் முழுக்க இதே போலத்தான் அந்தந்த மக்களின் வளங்கள் சுறையாடப்பட்டு அவர்கள் வறுமைக்கோட்டிற்கு கிழே செல்கிறார்கள்.
  16. இஸ்ரேல் மட்டுமல்ல இந்த பிராந்தியத்தில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள், தமது நாட்டில் உள்ள இஸ்லாம் மதமற்ற மக்கள் மேல் ஒரு இன அழிப்பை காலம் காலமாக நடத்துகின்றன கூறப்படுகிறது, தற்போது சிரியாவில் அரச ஆதரவுப்படைகள் ட்ருஸ் இன மக்கள் மேல் ஒரு இன சுத்திகரிப்பினை மேற்கொள்கிறார்கள், இந்த ட்ருஸ் மக்களுக்கு இஸ்ரேல் ஆதரவாக உள்ளதாக கூறப்பட்ட போதும் எதுவும் செய்யாத நிலையில் மக்கள் மிக மோசமாக கொல்லப்படுகிறார்கள். லெபனானில் கிறிஸ்தவ பெரும்பான்மை நிலவிய காலத்தில் இதே போல் ஒரு இனசுத்திகரிப்பு மூலம் இஸ்லாமிய பெரும்பான்மையினை கொண்ட நாடாக லெபனான் மாறியுள்ளதாக கூறுகிறார்கள். உக்கிரேன் கூட கிழக்கு உக்கிரேனியர்களின் மீது மிக மோசமான அடக்குமுறையில் ஈடுபட்டவர்கள்தான். இந்த விடயத்தில் ஒருவருக்கு ஒருவர் சழைத்தவர்கள் இல்லை, இந்த மூளை இல்லாத மிருகங்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள்.
  17. நான் கிறிஸ்தவ மத குருக்களிற்கு போட்டியாக அர்த்தநாரீஸ்வரர் கருத்தை கூறியதாக நீங்கள் சொல்லவில்லை எனவே கருதுகிறேன், அவ்வாறு நிங்கள் கருதினால் உங்கள் கருத்தில் கூறப்பட்ட படித்தவர்கள் முற்போக்கானவர்கள் எனும் கருத்து, அத்துடன் கத்தோலிக்க மத குருக்கள் மத சார்பான கற்கை நெறி மட்டுமல்லாமல் துறைசார் கல்வியும் கற்றவர்கள், இந்த துறைசார் கல்வி அறிவே முற்போக்கு சிந்தனைக்கு காரணம் என நீங்கள் கருதுகிறீர்கள் என நான் கருதுகிறேன், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானவர்கள் துறைசார் கல்வி கற்றவர்கள் உள்ளார்கள் ஆனால் யாழ்ப்பாணத்தில்தான் மிக மோசமான பிற்போக்குவாதம் உள்ளது, படித்தவர்கள்தான் பெரும்பாலும் வரதட்சணை வாங்குபவர்களாக உள்ளார்கள் (நீங்கள் அப்படி செய்திருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்😌). அவருக்கு கிடைத்த வேலை அவரது திறமைக்கு கிடைத்த வேலை, இவரரது கடந்த கால வாழ்க்கை மிகவும் அடக்குமுறைக்குள்ளான வாழ்கையாக இருந்துள்ளது, ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என்பது அவரரது கருத்தில் இருந்து தெளிவாக உணரமுடிகிறது, அதற்கு காரணம் கல்வி என அவர் கருதுகிறார் அவரரது உண்மையான அடையாளம் அவரரது திறமை (கல்வி).
  18. எதிர்கால சந்ததியினர் மேலும் ஏழ்மையாகும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது, தற்போதே மக்களால் சொந்தமாக வீடு வாங்க முடியாது எனும் நிலை அவுஸ்ரேலியாவில் உருவாகிவிட்டது, பெரு நிறுவனங்கள் மக்களின் வளங்களை மட்டும் சுரண்டுவதுடன் நிற்பதில்லை, அவர்களுடன் வீடுகளை வாங்குவதிலும் போட்டியிட ஆரம்பித்து விட்டன. விவசாயம் என அனைத்து துறைகளிலும் மக்களை விரட்டுகின்ற நிலை காணப்படுகிறது. இந்த நிறுவனங்களின் பண செல்வாக்கினால் அரசியல்வாதிகள் இந்த நிறுவனங்களுக்கு சாதகமான முறையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன, மக்களால் எதுவும் செய்யமுடியாத நிலையில்தான் உலகு செல்கிறது, மக்களுக்கு சார்பாக வளங்களை தேசிய மயப்படுத்த முயலும் அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்படுகிறார்கள். இந்த ஆர்டீசியல் கிணறு பற்றி சிறிய வயதில் படித்த நினைவு உண்டு, அவுஸ்ரேலியா வந்த ஆரம்பத்தில் அனைவரிடம் கேட்பதுண்டு இந்த ஆர்டீசியல் கிணறு எங்கே உள்ளது என இதுவரை பார்த்ததில்லை. கிட்டதட்ட எமது சுண்ணாம்புகல் நிலத்தடி நீர் போன்ற ஒரு அமைப்பு.
  19. மதங்கள் பெயர்கள்ர்தான் வித்தியாசம் ஆனால் அதன் உள்ளார்த்தங்கள் ஒன்றுதான். பாலின சுதந்திரம் என்பது ஒரு சமூக பிரச்சினை, பல அடிப்படை சமூக பிரச்சினைகளுக்கு மதங்கள்தான் காரணமாக இருக்கின்றன, அதே வேளை மதங்கள் நல்ல விடயங்களை கூறினாலும் தமது நம்பிக்கைகளுக்கும் விருப்பிற்கும் எதிராக இருந்தால் மதத்தினை வழிகாட்டியாக பயன்படுத்துவதில்லை. இதற்கு அடிப்படை காரணமே சாதாரண மனிதர்கள் தம்மை தாமே கற்பனையான விம்பங்களில் பார்ப்பதுதான். சிந்திக்க தெரிந்த மனிதனுக்கு மதங்களும் தேவையில்லை, முட்டாள் சமூக கோட்பாடுகளூம் தேவையில்லை.
  20. இங்கிலாந்து கூட கட்டாந்தரை பிட்சில் இந்தியாவினை விளையாட வைக்கிறது? அவுஸ்ரேலியா இந்தியாவிற்கு வேக பந்து வீச்சாளருக்கு சாதகமான ஆடுகளமே வழமையாக கொடுப்பதுண்டு, ஆனால் சில வேளை அவர்கள் விரித்த வலையில் அவர்களே சிக்கி இந்தியாவிடம் அடி வாங்குவதுண்டு.
  21. மதங்கள் மக்களை நலவழிப்படுத்த உருவாக்கப்பட்டவை ஆனால் அவை காலத்திற்கேற்ப தம்மை புதிப்பதில்லை, அதற்கு காரணம் கடும் கோட்பாட்டாளர்களே! சில இயற்கை விடயங்களை ஏற்றுகொள்ளும் மனநிலை அல்லது புரிதல் இல்லாதவர்கள் அது ஒரு சமூக பிரழ்வாக மாறிவிடும் எனும் நோக்கத்தில் சில விடயங்களை இந்த மதங்கள் எதிர்க்கின்றன, ஆரம்பத்தில் கத்தோலிக்க சபை கூட அவ்வாறுதான். சில மதங்கள் குறிப்பாக இந்து மதத்தில் அர்தநாரீஸ்வரர் என இவ்வாறான இயற்கையினை கடவுளாக பார்க்கிறார்கள். இங்கு மக்கள் தமது விருப்பங்களையும், நம்பிக்கைகளையும் மற்றவர்கள் மேல் திணிப்பதுதான் தவறாக மாறிவிடுகிறது. எமது புரிதல் தவறானது என்பதனை புரிந்து கொள்ள மதங்கள் தேவை இல்லை, அதற்கான தைரியம் இருந்தாலே போதுமானது.
  22. புதிய மாணவர்களுக்கு உதவி நிச்சயமாக தேவைப்படும் என கருதுகிறேன், அவ்வாறு உதவினாலே புதிய மாணவர்களும் பழைய மாணவர்களும் இயல்பாக பழகலாம், பகிடி வதை என்பது குரூர புத்தி கொண்ட சிலரது வக்கிரங்களுக்கு வடிகாலாக இருப்பதலாலேயே சிலர் இதனை விரும்பி செய்கிறார்கள் என கருதுகிறேன், உடைந்து போன ஒரு சமூகத்தில் இருக்கும் பொதுவான அம்சம் (வர்க்க, மத, சாதி வேறுபாடுகள்) இது என கருதுகிறேன்.
  23. காரில் இதற்கான பாதுகாப்பு பொறிமுறை உள்ளது, ஆரம்பத்தில் வெள்ளத்தில் மிதக்கும் கார் பின்னர் கார் மூழ்க ஆரம்பிக்கும் உள்ளிருந்து காரின் கதவினை திறக்க முடியாது யன்னல் ஊடாக வெளியேறலாம், ஆனால் காரின் முன் பாகம் தண்ணீரில் முதலில் மூழ்கும், எஞ்ஞின் எடை காரணமாக, அதனால் காரின் பின் பகுதி தண்ணீருக்கு மேல் இருக்கும் போது காரின் பின் பகுதிக்கு சென்று காரின் பின் கதவினை அவசரகாலத்தில் திறப்பதற்கான ஆழியின் துணையால் திறந்து வெளியேறலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.