Everything posted by vasee
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
இடுக்கண் வருங்கால் நகுக.😄
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு மாதிரி கோசானின் முதலமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்துவிட்டீர்கள், இந்த மழை திருப்பத்தினை நான் எதிர்பார்க்கவே இல்லை, இந்த் போட்டியில் தென்னாபிரிக்கா வென்றால் கோசான் முதலைம்ச்சராகலாமா? இந்த் போட்டியில் கோச்சானை வாழ வைத்த தெய்வமும் காலை வாரினால் என்ன ஆகும்?
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
காணொளி நாட்டு வருகை தந்த ஒருவரை இவ்வாறு அவமானப்படுத்தியது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
காணொளி அமெரிக்க அதிபர் மற்றும் உக்கிரேன் அதிபருக்கிடையே மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது, கனிம வள ஒப்பந்தம் கைசாத்திடபடவில்லை, இரு அதிபர்கள் இணைந்த பத்திரிகையாளர் சந்திப்பு கூட நடைபெறாமலேயே ஜெலன்ஸ்கியினை ட்ரம்ப் துரத்தி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. போருக்கு முடிவு கட்டும் பேச்சுவார்த்தை உக்கிரேனுக்கு சாதகமாக இல்லாத நிலையிலேயே ஐரோப்பிய த்லைவர்கள் ட்ரம்புடனான சந்திப்பின் பின் உக்கிரேனுக்கு அமெரிக்க சார்பு நிலையினை ட்ரம்ப் எடுக்க கூடும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் உக்கிரேன் அதிபரை வெளியேற்றப்பட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பிரான்ஸ் உக்கிரேன் கனிமங்களில் ஆர்வம் காட்டுவதாக செய்தி வந்துள்ளது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
செம்பாட்டான் உங்கள் பேராசைக்கு குறுக்கே கோசான் உள்ளார் (கோசானின் ஆசை).🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மைதான்! ஆப்கன் அணியுடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய அணியே அனுபவமற்ற புதிய அணி, ஆனால் அவுஸ்ரேலிய அணி முக்கிய போட்டிகளில் அனுபவமான அணியினை போல அழுத்தங்களை எதிர்கொள்ளகூடிய அணி.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
lightning never strikes twice, இது ஒரு நிகழ்தகவான விடயம், அவுஸ்ரேலியா கடந்த வருடம் தப்பிவிட்டது இந்த வருடம் இங்கிலாந்து மாட்டிவிட்டது, ஒரு வருடத்திற்கு ஒன்றுதான், அதனால் நாளைய போட்டி ஆப்கானிஸ்தானின் இறுதி போட்டியாக அமைந்துவிடும்.🤣 லாகூரில் நாளை காலை மழை உள்ளது, ஆனால் மாலையில் மழை இல்லை என வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகிறது, அதனால் ஆப்கானிஸ்தான் தப்ப முடியாது.🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆதட்டனும் நாசர் குசைனும் இந்தியாவிற்கு துபாய் மைதான போட்டியினால் ஏற்படும் சாதகங்களாக கூறியுள்ள விடயங்கள். 1. ஒரே ஆடுகளம் என்பதனால் அதற்கான முன்னனுபவம் 2. பயன அலைச்சல் இல்லை 3. குறித்த ஆடுகலத்திற்கு மட்டும் தேவையான ஆட்டக்காரர்களை நிரந்தர தெரிவு. 4. களைத்து போன ஆடுகளத்திற்கு தேவையாக (மெதுவான ஆடுகளம்) மேலதிக சுழல் பந்து விச்சாளர்கள் மற்ற அணிகள் ஒரு சுழல் பந்துவீச்சாளர்கள் கொண்ட அணி.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
காணொளி அவுஸ்ரேலியாவிற்கு ஆப்கானிஸ்தான் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை, அவுஸ்ரேலியாவின் தற்போதய குறி இந்தியாதான் அதற்கு அவர்கள் தயாராக கூடும். அரையிறுதி போட்டிக்கு அவுஸ்ரேலியாவும் தென்னாபிரிக்காவும் தெரிவாகும்.
-
அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
தெரியவில்லை நீங்களே கூறுங்களேன்?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியுசிலாந்தினை ஒருவரும் தெரிவு செய்யவில்லையே?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
லாகூர் இந்தியாவின் பஞ்சாப் மானிலத்திற்Kஉ பக்கத்தில் உள்ளது என ஒரு இந்திய நண்பர் கூறினார் இக்காலகட்டத்தில் இரவு போட்டிகளில் அதிகளவு மைதான ஈரலிப்பு காணப்படும் என குறிப்பிட்டிருந்தார் அதனால் ஆப்கானிஸ்தான் சுழல்பந்து எடுபடாது என எதிர்பார்தேன் அது நடைபெறவில்லை, ஆப்கானிஸ்தான் சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்தினை மட்டு படுத்திவிட்டது. ஆனால் ஜோ ரூட் அழுத்தத்தினை இன்னும் சிறப்பாக கையாண்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் (தோல்வியினை ஏற்றுக்கொள்ளாமல் கூறும் சாக்கு போக்கு😁).
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்கிலாந்து இலகுவாக வென்றுவிடும் என நினைத்தேன், ஆடுகளத்தில் பெரிதாக ஈரலிப்பு இருக்கவில்லை என கருதுகிறேன்.
-
வடக்கு கிழக்கில் 92,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்
தமிழ் அரசியல் கட்சிகள் காலம் தாழ்த்திய விழிப்புணர்வு இது கிட்டதட்ட ஒரு சந்ததி கல்வி, போசாக்கின்மை என்பவற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு விட்டது. குறைகூறுவது நோக்கமில்லை அரசியல்வாதிகள் தம்மை பற்றி மட்டும் சிந்திக்காமல் சிறியளவிலாவது மக்களை பற்றியும் சிந்திக்கவேண்டும்.
-
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர் - ட்ரம்ப் அறிவிப்பு
ஜெலென்ஸ்கி வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கலாம், கையெழுத்திடுவது அதில் ஒரு பகுதியாக இருக்கலாம் (இரை).😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலிய அணி வாலி மாதிரி ஒவ்வொரு போட்டியிலும் அவர்களது ஆட்டம் மெருகேறும், இறுதி போட்டி நியுசிலாந்து எதிர் அவுஸ்ரேலியா என ஏற்கனவே தெரிவு செய்ததாக கருதுகிறேன் (அதனை சரிபார்க்கவேண்டும்), அரையிறுதி போட்டி ஆட்டங்கள் விறு விறுப்பாக இருக்கும், இந்தியா வெளியே போனாலும் சுவாரசியத்திற்கு குறைவிருக்காது. ஆப்கானிஸ்தானின் ஆறுதல் வெற்றி இங்கிலாந்தினை வெளியேற்றி விட்டது, ஆனால் இங்கிலாந்து போகும் வழியில் ஆப்கானிஸ்தானை இறக்கி விட்டு போகும்.
-
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு ‘தங்க அட்டை’; விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர் - ட்ரம்ப் அறிவிப்பு
உக்கிரேனின் கனிமவளத்தினையே ஆட்டைய போட்டுள்ளார்,பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தமாதிரி, இவரிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? வெள்ளிக்கிழமை பத்திரம் கையெழுத்திடுகிறாராம் உக்கிரேன் அதிபருடன். ஆனால் ஜெலென்ஸ்கிக்கு வேறு தெரிவு இல்லாததாலேயே இதனை செய்கிறார் என நினைக்கிறேன், அல்லது வேறு ஏதாவது திட்டம் வைத்திருப்பார், முன்பு ட்ரம்ப் ஆட்சியில் இருந்த போது ஒரு தென் கொரிய நண்பர் ட்ரம்பை பைத்தியக்காரன் என்றார், அதற்கு அவர் கூறிய காரணம் தென் கொரியாவின் பாதுகாப்பிற்கு வழங்கப்படும் கட்டணத்தினை இரட்டிப்பாக்கி விட்டார் என கூறினார் அவர் அப்பவே அப்படித்தான் போல.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆப்கானிஸ்தான் வெல்வதனை விட அவுஸ்ரேலியா வெல்வதுதான் நல்லது ஏனென்றால் இந்தியணிக்கு ஆப்கானிஸ்தான் அணியினை விட அரையிறுதியில் அளுத்தம் குடுக்க கூடிய அணி அவுஸ்ரேலியாதான் (எனது விருப்பம் இந்தியா அரையிறுதியுடன் வீடு திரும்ப வேண்டும்).
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மனிக்கட்டினால் போடும்போது திரும்பாத ஆடுகளத்திலும் திருப்பம் ஏற்படுத்தலாம், ஆனால் நான் கூறியது பிளைட் பந்துகள், பந்து நின்று வரவேண்டும் (மெதுவாக) ஆனால் மட்டில் விரைவாக பந்து மட்டைக்கு வரும் அதனால் அந்த பந்துவீச்சிற்குரிய சாதகம் குறைவாக காணப்படும். இங்கிலாந்தை அப்கானிஸ்தானை வென்றமையால் மீதமிருக்கும் அவுஸ்ரேலிய போட்டியினை அப்கானிஸ்தான் வென்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும் என கருதுகிறேன். விறு விறுப்பான போட்டியாக இருந்தது.
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
இந்த கவிதை ஓணாண்டியின் கவிதை இவை இரண்டும் பேசும் அரசியலை தள்ளிவிட்டு பார்த்தால் இரண்டும் மிக சிறந்த கவிதைகள். இரு கவிதைகளும் அனத்து பொதுவான பிரச்சினயுடனும் ஒத்து போகிறது (அதுவே ஒரு சிற்ந்த இலக்கியத்திற்கான அடையாளமாக நான் கருதுகிறேன்). அந்த கொள்கை விளக்க பகுதியினை எடுத்துவிட்டு அந்த அரசியலையும் தள்ளி வைத்துவிட்டு வாசித்து பாருங்கள் கவிதை சிறப்பாக இருப்பது போல் தோன்றும், வாசகரராக அதனையே நான் விரும்புகிறேன், ஆனால் அனைத்து வாசகர்களாலும் கவிதையினை புரிந்து கொள்ள முடியாது என்பது நியாயமே அதனால் அந்த கொள்கை விளக்க பகுதி தேவைதானோ என தற்போது கருதுகிறேன்.
-
அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விட்டது என கருதுகிறேன், போரினால் பாதிக்கப்பட்ட உக்கிரேனை கட்டி எழுப்ப உக்கிரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க முன்வரவேண்டும், இதுவரை போரிற்கு உதவியளித்த நாடுகள் உக்கிரேனின் பொருளாதார வளர்ச்சியினை கட்டி எழுப்புவதற்கும் முன்வரவேண்டும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சுழல் பந்து வீச்சாளருக்கு மட்டில் போடுவது மிக கடினம் அதனோடு ஒப்பீடு செய்யும் போது வேக பந்து வீச்சாளருக்குத்தான் மட் சாதகமானது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சுழல் பந்துவீச்சிற்கு காய்ந்து போன ஆடுகளம் மிக சிறப்பாக இருக்கும், மட்டில் சுழல் பந்திற்கு பிடிமானம் குறைவு அதனால் அதிகமாக திரும்பாது. எனக்கு பெரிதாகா அனுபவம் உங்களை போல இல்லை, மிக சொற்பமான காலமே விளையாடிய அனுபவம்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மட்டினில் பந்து சறுக்கி வருவதனால் பந்து உயரம் குறைவாக வரும், ஆடுகளத்தில் பிடிமானம் கூட (Grip) அதனால் பந்து உயர்ந்து வருகிறது, மட் அளவினை விட பந்தை முன்னால் போடலாம்தானே? (வேக பந்து வீசின அனுபவமில்லை)
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலியாவிற்கும், தென்னாபிரிக்காவிற்கும் உள்ள இடைவெளி பந்து வீச்சிலே உள்ளது. இரன்டு அணியிலும் துடுப்பாட்டத்தில் சிறப்பாக உள்ளது, இன்றைய போட்டியில் கிளாசன் விளையாடுவார் என கருதுகிறேன். அது மேலும் தென்னாப்ரிக்காவிற்கு வாய்ப்பாக இருக்கும். அவுஸின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக உள்ள கெட்டை பற்றிய கவனம் அவருடன் விளையாடும் சோர்ட்டில்இல்லை, இவர் இந்த சூழ்நிலையிற்கு மெதுவாக தன்னை மாற்றுவது தெரிகிறது, இவர் போர்மிற்கு வந்தால் தென்னாபிரிக்காவிற்கு மிக சவாலாக இருக்கும். பந்து வீச்சில் பென்ஸர் ஜோன்சன் மிக திறமையான பந்து வீச்சாளர், அவரரால் ஏனோ (இவரைத்தான் அதிக விக்கெட் விழுத்துவார் என கணித்திருந்தேன்) சிறப்பாக செயல்படமுடியவில்லை, இன்றைய போட்டியில் அவர் தனது போர்மிற்கு வரவேண்டிய நெருக்கடியில் உள்ளார். இவற்றிற்கெல்லாம் மேலாக சிமித்தின் தலமை, சர்வதேச போட்டி அனுபவமற்ற வீரர்கள் அணியில் அதிகம் இருந்தாலும் அவர்கள் மிக திறமையான வீரர்கள், கடினமான சூழலில் அவர்கள் தமது ஆற்றலை வெளிப்படுத்தக்கூடும். இந்த போட்டி தொடர் முடிவதற்குள் இந்த அவுஸ் அணி ஒரு சம்பியன் அணியாக வளர்ந்துவிடும்.