Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. எந்த தோல்வியினை பற்றியும் கவலைப்பட தேவையில்லை.
  2. அவுஸ்ரேலிய அணியில் இங்கிலாந்துடனனான போட்டியில் 4 முழு அளவிலாலன பந்து வீச்சாளர்களை ஐந்தாவது பந்து வீச்சாளருக்கு பதிலாக பகுதிநேர பந்து வீச்சாளர்களையும் அவுஸ் பயன்படுத்தியிருந்தது. பென்ஸர் ஜோன்சன் வெறும் 7 ஓவர்கள் மட்டுமே வீசினான் (காயம்?) அதனையும் சேர்த்து 13 ஓவர்களை பகுதிநேர பந்து வீச்சாளர்களை அவுஸ் பயன்படுத்தியது இறுதி ஓவரை பகுதிநேர சுழல் பந்து வீச்சாளர் மானஸினை பயன்படுத்தி இருந்தார்கள். அடம் சம்பா போலவே மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர் சங்காவும் முழுநேர பந்து வீச்சாளர், ஆனால் அவரை போட்டியில் இறக்கவில்லை. அவுஸை விட தென்னாபிரிக்கா பலமான அணி. இந்த போட்டியிலும் அதே அணியுடன் அவுஸ் களமிறங்க வாய்புள்ளது, அனைத்து அணிகளும் பெரும்பாலும் இவ்வாறான கொளைகையினையே பின் பற்றுகின்றன. இந்தியா அணியிற்கு இந்தநிலை இல்லை. தென்னாபிரிக்க அணிதான் பலமான அணி, ஆனால் அவுஸ் அழுத்தமில்லாமல் விளையாடகூடிய அணி.
  3. ஒரு விரைவு உணவகத்தில் வேலை செய்த போது,என்னுடன் மும்பாயினை சேர்ந்த பெண்மணியும் வேலை செய்திருந்தார், ஒரு நாள் டென்டுல்கர் உனவகத்திற்கு வந்திருக்கிறார் என கூறினார் (அது ஒரு விரைவு உணவகம் எப்போதும் கூட்டமாக இருக்கும்) அவர் வழமையாக என்னை முட்டாளாக்கும் வேலை செய்பவர் என்பதால் அதனை காதில் வாங்காமல் வேலை செய்துகொண்டிருந்தேன். எனது கையினை பிடித்து தர தரவென இழுத்து சென்றார், கவுண்டரில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் வரிசையில் அவரை பார்த்தவுடன் நினைத்தேன் இது இவரரது வழமையான முட்டாளாக்கும் முயற்சி என நினைத்து இது தெண்டுல்கர் இல்லை என்றேன். எமக்கும் அவருக்குமிடையே 5 அடி தூரம் இருந்திருக்கும், அவர் எங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு அவர் எந்த உணர்வையும் காட்டாமால் நிற்க இவர் அவர்தானெ வலியுறுத்த, அதனை நான் மறுக்க பக்கத்தில் நின்றவர் தலையாட்டி தெண்டுல்கர்தான் என உறுதிபடுத்தினார், பின்னர் எமது உணவகத்தில் வேலை செய்தவர்கள் கைதுடைக்கும் பேப்பரில் கூட அவரது கையெழுத்தினை வாங்கினார்கள். தொலைகாட்சியில் பார்ப்பதற்கும் நேரில் பார்க்கும் அடையாளம் காணமுடியவில்லை.
  4. பையன்! சும்மா விளையாட்டிற்காக பதியும் கருத்துக்களை சீரியசாக எடுக்கதீர்கள்.
  5. சூதாடுவதும் தப்பு, சூதாட தூண்டுவதும் தப்பு (ரஜனிகாந்த மொடுயுலேசனில் - சும்மா உங்கலை கலாய்ப்பதற்காக கூறினேன்), அதோட நான் சரியான கஞ்சனும் கூட இதனை எனது பெற்றோர்களே உறுதிப்படுத்தியுள்ளார்கள் ( பொக்கட் மணியாக கொடுக்கும் காசினை சேர்த்து வைத்து பின்னர் அம்மாவிடமே கொடுத்துவிடுவதனால்)
  6. அதில என்னை யாராலும் வெல்லமுடியாது.😁
  7. நான் சூதாடுவதில்லை , அத்துடன் தான தர்மமும் செய்வதில்லை.😁 தோல்வியினை ஏற்றுக்கொள்ளாமல் சொல்லுகின்ற சாக்கு போக்குகளை நானும் விளையாட்டுக்காக சொல்லி பார்த்தேன், நீங்களும் அதை சீரியசா எடுத்துக்கொண்டு.😁
  8. பகல் கனவு. நியுசிலாந்துடனனான போட்டியிலேயே சாயம் வெளுத்து விடும்.
  9. அந்த கொடுமையை வேற பார்க்க வேணுமா என நித்திரை கொள்ள சென்றுவிட்டேன் (11 ஆவது ஓவரில் கரிஸ் ராபின் பந்தில் கில்லின் கட்சை விட்டவுடன்), ஆனால் இந்தியணி மிகவும் பலவீனமான அணியாகவே எனக்கு தெரிகிறது.
  10. ஆம் பவர் பிளேயில் பந்து நன்றாக திஉம்பும் இதற்குள் 2- 3 விக்கெட் எடுத்தால் பாகிஸ்தானுக்கு வாய்ப்பிருக்கலாம் இல்லாவிட்டால் பங்களாதேசை முடிச்ச மாதிரி 45 ஒவரில் முடித்து விடுவார்கள்.
  11. ஆடுகலம் இரட்டை தன்மை கொண்டதாக உள்ளது அத்துடன் பந்து வேறு திரும்புகிறது, பாகிஸ்தான் பந்துவீச்சில் இந்தியணி இதனை திரத்துவது இன்னமும் கடினமான இலக்குதான்.
  12. பாகிஸ்தான் 35 ஓட்டங்கள் குறைவு, இந்தியாவின் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
  13. இந்தியனியில் மாற்றமில்லை, அனி விபரம் அறிவித்துவிட்டார்கள், பாகிஸ்தான் துடுபெடுதாடுகிறது.
  14. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான பார்க சமனுக்கு பதிலாக (காயம்) இமாம் உல் கக் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என கூறப்படுகிறது. உண்மைதான், அடிக்கடி ஆட்டக்காரர்களை மாற்றுவது அணியின் பலவீனமாக கருதப்படும், தற்போதுள்ள அணிகளில் ஒரு செட்டில் ஆகாத அணியாக இந்தியாவே காணப்படுகிறது, எத்தனை சுழல் பந்து வீச்சாளர் தேவை, யார் யார் தேவை என குழப்பமான அணியாக.
  15. இந்தியா இறுதி நேரத்தில்தான் விளையாடும் அணியினை அறிவிப்பார்கள், ஜடேஜாவினை கம்பீர் கட்டியணைத்தார் என்பதனடிப்படையில் இந்த வதந்தி உலாவுகிறது (அதாவது ஜடேயா விளையாட முடியாதென).😁 பாகிஸ்தானிய பயிற்சியாளரை இந்தியணி 4 சுழல்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது என பத்திரிகையாளர் கேட்டதற்கு, அணிகள் ஒரு முழுநேர சுழல்பந்து வீச்சாளர்கலுடன் களமிற்ங்குகின்றன என சுட்டிக்காட்டினார். உண்மையில் இந்தியா எதற்கு இப்படி சுழல் பந்துவீச்சாளர்கள் வேண்டும் என விரும்புகிறார்கள் என தெரியவில்லைதான்.
  16. இந்திய கிரிக்கெட் நிபுணர்களா அல்லது இந்த ஐவர் கூட்டணியா சரி என இன்று தெரிந்துவிடும். ஆனால் பாகிஸ்தானுக்கெதிராக இஅயற்கையும் சதி செய்கிறது போல இருக்கிறது.
  17. ராவல் பின்டியில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான், பங்களாதேச போட்டி மழையினால் தடை ஏற்படும் என எதிர்பார்க்கிறார்கள்.
  18. கோலி மற்ற வீரர்களை விட 1 மணித்தியாலம் முன்னதாகவே துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டாராம், இந்திய கிரிக்கட் நிபுனர்கள் இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை இலகுவாக ஊதி தள்ளிவிடும் என கணித்துள்ளார்கள்.
  19. அதற்கு ஒரு தடியில் கரட்டினை கட்டி தொங்கவிட்டு அதனை நாட்டிற்கு முன்னே நீட்டினால் நாடு முன்னோக்கி நகரும்😁. மக்களுக்கு இப்படி பேச்சுக்களை பேசி பேசியே அடுத்த 4 வருடங்கள் கொல்ல போகிறார்கள்.
  20. https://www.youtube.com/shorts/Hne1-9P3uPw?feature=share இலங்கை இடது கை வேகப்பந்துவீச்சாளர் மதுசங்க துடுப்பாட்ட வீரரின் மனநிலையினை புரிந்து பந்தின் மேலாக விரலை நழுவ விடும் off cutter (இந்த வகை கட்டரை இறுதி நேரத்திலே உணரமுடியும்) மூலம் ரோகித் சர்மாவினை அவுட்டாக்கும் காணொளியில் விளக்கப்படுகிறது.
  21. பையன் நீங்கள் அடிச்ச மணி ஆண்டவனுக்கு கேட்டுதோ இல்லையோ ஆனால் டெல்லிக்கு கேட்டு விட்டது, ஜடேயாவிற்கு பதில் வருணை இன்றைய போட்ட்டியில் களமிறக்க உள்ளதாக தகவல் உலாவுகிறது.😁 பாகிஸ்தான் பற்றிய பேதி இந்தியணியில் தீயாய் பற்றி எரிகிறது போல இருக்கிறது.😁
  22. நாங்களும் உங்களை மாதிரி இந்தியாவைத்தான் நம்புகிறோம், பாகிஸ்தானை இல்லை, பார்ப்போம் யாரை இந்தியா கைவிடுகிறதென.😁 விளையாட்டில் யாராவது வென்றால் மற்றவர் தோற்றாக வேண்டும் அது முடிந்து போன போட்டி, முக்கியமான போட்டி இன்றுள்ளது. பங்களாதேஸ் காத்து கொண்டிருப்பார்கள் யாரை கூட்டி கொண்டு போவது என முடிவு எடுப்பதற்கு.😁
  23. https://postimg.cc/SJ940SPM இது நேற்றைய தென்னாபிரிக்க ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு விபரம். ஆப்கானிஸ்தான் அணியின் எக்ஸ் பக்டர் பிளேயராக இருப்பவர் ரஸீட் கான், தென்னாபிரிக்காவின் திட்டம் அவரது பந்துவீச்சில் விக்கெட் இழக்காமல் சராசரியாக ஓட்டங்களை எடுப்பது அதாவது தவிர்த்தாடுவது.
  24. சுருக்கமாக கூறி முடிக்கிறேன், கிரிக்கெட்டில் ஒரு அணியின் மிக சிறந்த பந்துவீச்சாளர் (அல்லது துடுப்பாட்ட வீரர்) காணப்பட்டால் இரன்டு வகையான உத்திகளை கையாள்வார்கள். 1. ஆரம்பத்திலேயே அவர்களை தாக்கி ஆடுவது. 2. தவிர்த்து ஆடுவது இதில் எதனை தெரிவு செய்வதென்பது எந்த வகையான கிரிக்கெட் (டெஸ்ட், ODI, T20), ஆடுகளத்தின் தன்மை, அணியின் துடுப்பாட்ட வரிசை (batting strength) என்பதனை பொறுத்தது. அதனாலேயே பெரும்பாலும் பெறுபேறுகளை மட்டும் கவனத்தில் எடுப்பதில்லை.
  25. சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்காமைக்கு காரணமான வலது ஆட்டக்காரர்களுக்கு இலகுவாக இருக்கும் ஆனால் பட்டேல் மற்றும் ஜடேயா பந்து வலது கை ஆட்டக்காரர்களுக்கு மட்டைக்கு வெளியே பந்து செல்லும் அத்துடன் பந்தை 12 மணியளவு கோனத்தில் வளமையாக போடுவது போலல்லாமல் 10 மணியளவு கோணத்தில் போடுவார்கள் அது தரையில் பந்து படும் பகுதியினை பொறுத்து கிடையாக வேகமாகவோ அல்லது பந்து தங்கி மெதுவாகவோ வரும் அதற்கு ஏற்ப துபாய் ஆடுகளமும் உள்ளது. பொதுவாக பட்டேல்,ஜடேஜா, சுந்தர் இந்த மூவரும் இந்த துபாய் ஆடுகளத்தில் அதிகமான உதவிகளை மணிக்கட்டினை பயன்படுத்தி பந்துவீசுபவர்கள் போல பெற முடியாது, ஆனால் அந்த இரண்டு குஜராத்தியர்களின் பந்து வீச்சுஆடுகளம் மற்றும் வலது கை ஆட்டக்காரர்களுக்கெதிராக பலனுள்ளதாக இருக்கும். வருணிற்கு சகலதுறை திறமை இருந்தால் அவர்தான் அணித்தேர்வில் முதல் தெரிவாக இருப்பார்(வருணும் யாதவும்தான் மணிக்கட்டு பந்து விச்சாளர்கள்) ஆனால் வருணின் மிஸ்ரி ஸ்பின்னர் எனும் விடயத்தினை கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும் விரல்கள் மூலம்(வருண் மணிக்கட்டினையும் விரல்கலையும் ஒருங்கே பாவித்து மாற்றங்களை ஏற்படுத்துபவர்) சிறந்த மட்டையாளர்கள் பந்தினை (அவரை முன்னர் எதிர் கொண்ட வீரர்கள்) இலகுவாக கணித்துவிடுவர், ஆனால் குல்டீபின் கையிலிருந்து பந்தை கணிப்பது மிக கடினம். இந்த ஒரு காரணத்தினாலேயே அவரை தெரிவு செய்கிறார்கள் என கருதுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.