Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. இது முன்னமே யாழில் கூறப்பட்ட விடயம், அமெரிக்க புதிய அதிபர் ஐரோப்பிய ஒன்றியத்தினை பலவீனப்படுத்தி தனியே ஐரோப்பிய நாடுகளுடன் தனது உறவை வளர்க்க முற்படுகிறார், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அவசியமான ஒன்று. பிரசெல்ஸின் நீண்ட நாளைய திட்டமான United States of Europe திட்டத்தின் மூலம் அதிகரித்த அதிகாரத்தினை கைப்பற்றும் முயற்சிக்கு உக்கிரேன் போரை ஒரு துருப்பு சீட்டாக பயன்படுத்தி வந்திருந்தது, இதில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே தன்னிச்சையாக தமது பாதுகாப்பு செலவின அதிகரிப்பு என விலகி நிற்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீண்ட நாள் தலையிடியாக இருந்து வந்துள்ள நிலையில் தற்போதய பூகோள அரசியல் சூழ்நிலை அவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தினை கொடுத்திருக்கின்றது. இதனை முன்னரே எதிர்பார்த்து காத்திருந்த பிரித்தானியாவும் பிரான்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்தினை புறந்தள்ளி இதனை தமது பொருளாதார நலனுக்கு பாவிக்கும் முயற்சியில் பிரித்தானியா வெற்றி பெற்றுள்ளது என கருதுகிறேன். பிரசெல்ஸினை பின் தள்ளி பிரித்தானியா ஒரு அமைதி உடன்பாட்டினை உருவாக்கி அதில் அமெரிக்காவினை இணைத்தால் Marshal plan 2.0 இனை உருவாக்கி அதன் மூலம் பிரித்தானியாவினை மீண்டும் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதனூடாக அதிகாரமிக்க நாடாக முடியும் என கருதுகிறது. பிரான்ஸ் எப்படியேனும் இதில் குறிப்பிட்ட நலனை பெற முயற்சிக்கிறது, பிரான்ஸ் தனியாக உக்கிரேனை கட்டியெழுப்ப ஐரோப்பிய நாடுகளில் உள்ள இரஸ்சிய பணத்தினை கையாள்வது பற்றி அண்மைய ட்ரம்ப் சந்திப்பில் நடத்தப்பட்ட பத்கிரிகையாளர் மானாட்டில் கோடி காட்டியிருந்தார், ஆனால் இவ்வாறான நிலைகளை அமெரிக்காவின் உதவியில்லாமல் செய்ய முடியாது என்பதால் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் இரு நாடுகளும் அமெரிக்காவின் அனுசரணையினை கோருகின்றனர், இதில் யார் வெல்வார்கள் என பார்க்கலாம், அமெரிக்காவிற்கு தேவை பிரசெல்ஸின் அதிகாரத்தினை இல்லாதொழிப்பது. அமெரிக்கா எள் என்பதற்கு எண்ணெயாக யார் இருக்கிறார்களோ அவர்களே இதன் மூலம் பலன் பெறப்போகிறார்கள், ஆனால் பிரித்தானியா ஏற்கனவே பிரான்ஸினை விட பல படிகள் மேலே சென்று விட்டது. உருசுலாவின் இந்த நிகழ்வில் ஐரோப்பிய நாடுகளை கடிவாளம் போடும் முயற்சி பலிக்கவில்லை.
  2. இந்தியா பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறப்பாகவே உள்ளது, அதனை ஒரு போதும் மறுக்கவும் இல்லை அத்துடன் அவுஸ்ரேலியாவினை விட சிறந்த அணியாக இந்தியா உள்ளதனை ஒரு போதும் மறுக்கவில்லை.
  3. பொதுவாக கூக்ளி வீசும் போது துடுப்பாட்டக்காரருக்கு மிக தெளிவாக கையின் பின் பக்கம் தெரியும் அதன் மூலம் பந்து உள்ளே வரும் என எதிர்பார்ப்பார்கள், வருணின் லெக் ஸ்பின்னும் கூக்ளி வடிவத்திலேயே இருக்கிறது, குல்டீபின் கூக்ளியினை கணிப்பதும் கடினமாக இருக்கும் பந்தை விடுவிக்கும் போது ஏற்படுத்தும் மாற்றமே அந்த வேறுபாட்டினை வெளிப்படுத்துகிறது இதற்கு பந்து வீச்சு பகுதியில் நிற்கும் சக ஆட்டக்காரர் இந்த வேறுபாடுகளை அவதானிக்கலாம் அவர்கள் துடுப்பாட்டக்காரருக்கு சைகை செய்யலாம்.
  4. அவுஸ்ரேலியா இரண்டு டிக்கெட் போட்டு வைத்திருப்பார்கள் ஆனால் இந்தியாவிற்கு ஒரு டிக்கட்தான்.🤣
  5. நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள், நான் குல்டீபை புகழவில்லை, சுழல் பந்து வீச்சில் உள்ள விடயங்களையே கூறி எதற்காக இந்தியணி வருணிற்கு மேலாக குல்தீப்பினை எடுக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தேன். இப்போது கூட இந்த ஆடுகளம் நியுசிலாந்து ஆடுகளம் அளவிற்கு பந்து வீச்சிற்கு ஏற்ற வகையில் இல்லை என கருதி ஒருவரை அணியில் இருந்து நீக்க விரும்பி (சுழல் பந்து வீச்சில்) பட்சத்தில் இந்திய தெரிவுக்குழு வருணை நிக்க முயல்வார்கள். எப்போதும் அணித்தேர்வில் ஆடுகளம் எதிரணி என்பவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுப்பார்கள், தற்போது வருனை நீக்க மாட்டார்கள் என நம்புகிறேன் ஆனால் ஆடுகள நிலையினை பார்த்து நீக்கினால் ஆச்சரியமுமிருக்காது. அவுஸ்ரேலியா 320 மேல் ஓட்டங்களை எடுக்க வேண்டுமாயின் கெட் ஒரு நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டும் (அவுஸ் 280 ஓட்டங்களையே எடுக்குமோ தெரியவில்லை). ஆனால் இந்த ஆடுகளம் நியுசிலாந்து ஆடுகளத்தினை விட துடுப்பாட்டத்திற்கு சாதகம் என கூறுகிறார்கள்.
  6. இந்த ஆடுகளம் நியுசிலாந்துடன் ஆடிய ஆடுகளம் போலல்லாது துடுப்பாட்டத்திற்கு சாதகமானது, அவுஸ்ரேலிய பந்து வீச்சாளர்கள் நியுசிலாந்து பந்து வீச்சாளர்கள் அளவிற்கு சிறப்பாக பந்து வீசமாட்டார்கள் அதனால் வாய்ப்பு இருக்கலாம், இந்தியாவினுடனான போட்டியில் அவுஸின் பலம் துடுப்பாட்டம் எனவே அதிக ஒட்டங்களை முதலில் துடுப்பெடுத்தாடினால் அவுஸ் இலக்கு வைக்கலாம் 280 மேலாகவே. இந்தியா பலமான அணி என்பதில் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை, ஆனால் அவுஸ்ரேலிய அணியினை இலகுவாக வென்றுவிடலாம் என கருதவில்லை, அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால் இந்த பலவீனமான அவுஸ்ரேலிய அணி இந்தியாவினை வெல்ல முடியும், பார்ப்போம் என்ன நடக்கிறது என. இந்தியணியின் ஆரம்ப ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும் நடுவரிசை சிறப்பாக கையாழும், அதனால் இந்தியணிக்கு துடுப்பாட்டம் பிரச்சினையாக இருக்காது, அவுஸ்ரேலியா மிக பெரிய ஓட்டத்தினை குவித்து அதன் மூலம் அழுத்தம் ஏற்படுத்த முயற்சிக்கலாம். அத்துடன் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை கண்டாலேயே இந்திய தொடக்க வரிசைக்கு ஒவ்வாமை வருவதுண்டு, அவுஸில் இரண்டு தொடக்க பந்து வீச்சாளர்களும் இடது கை வேக பந்து வீச்சாளர்கள்.
  7. 96 உலக கோப்பையில் அவுஸ்ரேலிய அணி தலைசிறந்த அணியாக இருந்தது, இறுதி போட்டியின் முன்னர் வெற்றி கோப்பையுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இலங்கை அணியினை பார்த்து அவுஸ்ரேலிய அணியினர் கேட்டனாராம் நிங்கள் வெற்றிக்கோப்பையுடம் படம் எடுக்கவில்லையா என அதற்கு இலங்கை அணியின் தலைவர் கூறினாராம் நாங்கள் எமது நாட்டில் கொண்டு போய் படம் எடுத்து கொள்கிறோம் என. நிலமை தற்போது இந்தியணி அவுஸ்ரேலிய அணி போலவும் அவுஸ்ரேலிய அணி பலவீனமான இலங்கை அணி போலவும் உள்ளது, போட்டியின் முடிவுகள் எப்படியும் இருக்கலாம், குறித்த நாளில் சிறப்பாக விளையாடும் அணியே வெல்லும்.
  8. கோனலி 3 ஒரு நாள் போட்டியில் விளையாடி சராசரியாக 4 ஓட்டங்களை பெற்றுள்ளார், அதிக பட்ச ஓட்டங்களாக 7 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
  9. கூப்பர் கோனலியினை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கலாம், ஆனால் கடினமான பந்தில் இலகுவாக எடுக்க கூடிய ஓட்டங்களை அவர் தவறவிடுபவர் என கருதுகிறேன் அதனால் இங்கிலிஸ் இனையே தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க அதிக வாய்புள்ளது. இந்த ஆடுகளத்தில் சுழல் பந்து வீச்சாளர்களின் சராசரி ஓட்ட விகிதம் ஓவருக்கு 4.8 அதாவது வெற்றி இலக்கான 250 (ஓவருக்கு 5) இனை விட குறைவாக உள்ளது, அவுஸ்ரேலிய அணியின் மத்திய தர வரிசை மிக மெதுவாக ஒட்டம் சேர்க்கும் வரிசையாக உள்ளது அதனால் ஆரம்ப ஓவர்களில் சரியான துவக்கத்தினை அவுஸ்ரேலிய தொடக்க வீரர்கள் கொடுக்க வேண்டும் அல்லது இங்கிலிஸினை மத்திய தரவரிசையில் வைத்துக்கொண்டு கொனலியினை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும். இந்தியா இந்த போட்டியிலும் 4 சுழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவார்கள் என செம்பாட்டான் கணித்துள்ளார். கெட் மற்றும் இங்கிலிஸினை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கி அவுஸ்ரேலிய அணி எதிர்பார்க்கும் சிறந்த தொடக்கத்தினை கொடுக்க முடியாமல் ஆரம்பத்திலேயே விக்கெட்டினை இழந்தால் அது அவுஸ்ரேலிய அணியின் நடுவரிசையில் அதிக நெருக்கடியினை கொடுக்கும், அதனால் கோனலியினை ஆரம்ப ஆட்டக்காரராக இறக்கலாம் என கருதுகிறேன்.
  10. குறித்த ஆடுகளத்தில் ஒரு வாரத்திற்கு முன்னரே ஒரு போட்டி நடைபெற்றுள்ளது அதில் 240 இலக்கினை இந்தியணி 45 ஓவர்களில் விரட்டி இருந்தது (280 ஓட்ட ஆடுகளம் என கருதுகிறேன்), ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்னர் போட்டி இடம்பெற்றதால் ஆடுகளம் மேலும் மெதுவாகியிருக்கலாம் அதனால் 260 ஓட்டங்கள் வெற்றிக்குரிய இலக்காக இருக்கலாம் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). அவுஸ்ரேலிய அணி 250 எடுத்தாலே வெற்றி பெறக்கூடும் என கருதுகிறேன் (சிறப்பான களத்தடுப்பு).
  11. அவுஸ்ரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மட் சோர்ட் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி விட்டார் அவருக்கு பதிலாக கூப்பர் கோனலி அணிக்குள் வருகிறார், அதனால் கெட்டுடன் இங்கிலிஸ் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளது. கோனலி சகலதுறை ஆட்டக்காரர், இடது கை சுழல் பந்து வீச்சாளர். அரையிறுதி போட்டி பாகிஸ்தான் இந்திய அணி ஆடிய ஆடுகளம் (பிட்ச்), போட்டியன்று இரவு ஈரலிப்பு காணப்படாது என்பதால் அணிகள் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட விரும்பும் என கருதப்படுகிறது. இதனிடையே இன்னொரு மணிக்கட்டு பந்து வீச்சாளரான தன்வீர் சங்கா அவுஸ்ரேலியாவிற்காக களமிறக்கப்படலாம் என கருதப்படுகிறது, ஆனால் ஏற்கனவே அடம் சம்பா ஒரு லெக் சுழல்பந்து வீச்சாளராக உள்ளார் அத்துடன் கோனலியின் இடது கை பந்து வீச்சுள்ளது இந்த நிலையில் அவுஸ்ரேலியா ஒரு வேக பந்து வீச்சாளரை எடுத்து விட்டு அந்த இடத்தில் சங்காவினை கொண்டு வருவார்களா என தெரியவில்லை, அவ்வாறு கொண்டு வருவதாயின் ஸ்பென்சர் ஜோன்சனையே மேசையில் உக்கார வைப்பார்கள் என கருதுகிறேன் (ஜோன்சனும் சங்காவும் 11 வது துடுப்பாட்டக்காரர்கள்), ஆனால் சங்காவினை கொண்டு வருவது ஒரு மோசமான தெரிவல்ல ஏனெனில் இந்தியணி வலது கை ஆட்டக்காரர்களை அதிகம் கொண்ட அணி.
  12. சும்மா விளையாட்டுக்கு கூறியது, மேலே நிற்பவர்களை கலாய்ப்பதற்கு.🤣 அவுஸ்ரேலியா தனது போட்டி முடிந்த மறுநாள் துபாயிற்கு பயணம் மேற்கொண்டது (சனிக்கிழமை) தென்னாபிரிக்கா சனிகிழமைக்கு மறுதினம் துபாயிற்கு பயணமாகியுள்ளது, இரண்டு அணியும் இந்திய, நியுசிலாந்து போட்டி முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கவில்லை, இதன் மூலம் போதிய ஓய்விற்கு பின்னர் துபாயில் பயிற்சியில் ஈடுபடுவதற்கு வசதியாக இருக்கும் எனும் நோக்கத்தில், தற்போது தென்னாபிரிக்கா பாகிஸ்தான் திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. போட்டிகளுக்கிடையே சரியான இடைவேளை இல்லாததால் அணிகள் முன் தயாரிப்பாக இந்த நடவடிக்கையினை எடுத்தன, இது தென்னாபிரிக்காவிற்கு சங்கடமாக அமைந்துவிட்டது.
  13. எனக்கு போட்டியாக நீங்களுமா? 1 இலிருந்து 24 வரையான இலக்கத்தில் எந்த இலக்கம் பெரியது?🤣
  14. நீங்கள் கூறுவது சரிதான் என கருதுகிறேன், அவுஸில் சிமித், லபுசான், இங்லிஸ், மக்வேல் சுழலினை விளையாட கூடியவர்கள்.
  15. எனக்கும் நீன்ட நாளாக அவுஸினை பிடிப்பதில்லை அதற்கு காரணம் அவர்களின் மோசமான நடவடிக்கைகள், ஆனால் தற்போது அந்த இடத்தினை இந்தியா தட்டி பிடித்துவிட்டதால் அவுஸில் இருந்த கடுப்பு இப்போது இல்லை.
  16. நாளைய போட்டியினை முழுமையாக பார்க்க முயற்சிப்பேன் (இதனைதான் எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன்), நியுசிலாந்து வருணின் பந்தை கணிக்க முடியாமல் ரிவர்ஸ் சுவீப்பும் அடிக்க முடியாமல் களத்தடுப்பை போட்டு இந்தியா நியுசிலாந்தினை நெருக்கி விட்டார்கள், பொதுவாக கெட் சுழல் பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள மைதானத்தில் இறங்கி வந்து விளையாடுவார், பந்தினை கணிக்க முடியாவிட்டால் அது ஆபத்து, சுவீப் அடிப்பதே சிறந்தது ஆனால் ஆசிய மட்டையாளர்கள் போல சுழலுக்கு எதிராக சுவீப் அடிக்க்க மாட்டார்கள் ,அத்துடன் இந்த துபாய் ஆடுகளம் வழுக்கி தாழ்வாக வருவதுடன் உயரம் வேறுபடும் இது ஆபத்தானது, இவ்வாறான சூழலில் அவுஸ்ரேலியா இந்திய சுழல் பந்தின் வீரியத்தினை எவ்வாறு இல்லாமல் செய்ய போகிறது என்பதுதான் ஆர்வமான விடயமாக அனைவரும் எதிர்பார்க்கிறோம், ஆனால் அவுஸ் எப்போதும் ஒரு திட்டத்துடன் வருவார்கள் இவ்வாறான நொக் அவுட் விளையாட்டுகளில். வருண் மட்டுமல்ல மற்ற 3 சுழல் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக போடுவது நிலமையினை மோசமாக்கிறது, இதில் யாராவது இரன்டு பந்து வீச்சாளர்களை அவுஸ் இலக்கு வைக்க கூடும் யார் அந்த அதிர்ஸ்டசாலிகள், நான் நினைக்கிறேன் ஜடேயா, அக்சர் என.
  17. தாராளாமாக, முன்னால் போங்கள் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.🤣
  18. இந்த இந்தியணியினை அவுஸ்ரேலியா எப்படி எதிர்கொள்ள போகிறது என தெரியவில்லை, நேற்றைய போட்டியில் வருணின் பந்தினை கணிக்க முடியாமல் நியுசிலாந்து திணறியது, வருண் கரம் போல், லெக் ஸ்பின், ஓப் ஸ்பின், சிலைடர் போன்ற வித்தியாசங்களில் பந்து வீசுகிறார் என் கருதுகிறேன், பந்தினை கணிக்க முடியாவிட்டால் பின் காலில் சென்று விளையாடுவது ஒரு தெரிவாக இருக்கும் ஆனால் வருணின் பந்து வேகமாக வருவது கூட மட்டையாளர்களை குழப்புகின்றது, விலியம்சன் சிறப்பாக வருனை எதிர்கொண்டார் ஆனாலும் பன்ட்கை தவறாக கணித்தால் அதனை ஈடுசெய்யும் வகையில் தனது கால்களை நகர்த்தி விளையாடியமை வில்லியம்சன் கூட வருனை எதிர்கொள்ள சிரமபட்டதனை காட்டுகிறது. மிஸ்ரி ஸ்பின்னர்கள் பலர் இதற்கு முன்னர் இருந்துள்ளார்கள் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் அவர்களில் ஒருவர், ஒரு கால கட்டத்தின் பின்னர் துடுப்பாட்ட வீரர்கள் இவர்களின் வேறுபாட்டினை கண்டுனர்ந்தபின் அவர்களின் பந்து வீச்சு சோபை இழந்து விடும் இது ஒரு பாதகம்.
  19. வீரப்பையன் காட்டு கத்தலாக கத்தியும் கவனத்தில் கொள்ளாத இந்திய தெரிவுக்குழுவிற்கு வருண் நேற்றைய போட்டியில் நல்ல பதிலளித்துள்ளார். வெற்றி பெற்ற இந்தியணிக்கு வாழ்த்துக்கள் அவுஸுடன் அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்கு. நான் தான் கடைசியாக வருவேன் என என் உள்மனம் கூறுகிறது இபோதே அத்திவாரத்தினை போட்டு வைப்போம் என பார்த்தால் விட மாட்டேன் என நிற்கிறீர்கள்.🤣
  20. முதல் மூவருக்கும்ம் கடைசி மூவருக்கும் வாழ்த்துக்கள்.🤣
  21. விதி வலியது.🤣 நான் தனியாள் இல்லை.🤣 கப்பல் மூழ்கும் போது தலைமை மாலுமி மற்றவர்களை அனுப்பிவிட்டு கடைசியாக கப்பலுடன் மூழ்குவாராம், இங்கு தலை அவர்தான் என நிரூபிக்கின்றார்.
  22. ஆரம்பத்தில் அவமானப்பட்டது உக்கிரேனிய ஜனாதிபதி என நினைத்தாலும், தற்போது இணையத்தளங்களில் உக்கிரேனிய ஜனாதிபதி எவ்வாறு அமெரிக்க ஜனாதிபதியினை அவமானப்படுத்தினார் என்பதற்கு கூறப்படும் அவர் உடல்மொழி மற்றும் திறமையான பேச்சாற்றலையும் கூறுகிறார்கள். இந்த நிகழ்வு உக்கிரேனுக்கு சாதகம் எதனையும் ஏற்படுத்தாது, ஆனால் இதனை இவ்வாறு கையாண்டிருக்க கூடாதோ என தோன்றுகிறது, ஆனால் அமெரிக்க அதிபர் கூறிய அமெரிக்க ஆயுதங்கள் இல்லை என்ற்றல் இரண்டு கிழமை கூட உக்கிரேனால் தாக்குபிடிக்க முடியாது என்பதற்கு ஆம் 3 நாள்கள், இதனை முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன் புட்டினிடம் இருந்து என கூறும்போது அவரது உடல் மொழியால் கூறுகின்ற கருத்து மற்றும் நக்கல் தொனி என உக்கிரேனிய அதிபர் தெறிக்கவிடுகின்றார். நன்றி உணர்ச்சி இருக்க வேண்டும் என கூறும்போதெல்லாம் அவர் காட்டும் உடல் மொழி 350 பில்லியனுக்கு 500 பில்லியனாக வாங்கும் (கனிம வளமாக) உனக்கெதற்கு நான் நன்றி உணர்ச்சி காட்ட வேண்டும் எனும் ஒரு உடல் மொழி மூலம் இதுவரை உலகில் போரை ஏற்படுத்தி அந்த இரத்ததில் வரும் பணத்தின் மூலம் இராஜ்ஜியம் நடாத்தும் உங்களுக்கே இவ்வளவு ஆணவம் இருக்கும் என்றால் அதில் பாதிக்கப்படுபவனினிற்கு எவ்வளவு உணர்வு இருக்கும் என பாதிக்கப்படும் இனங்களின் சார்பாக எழுச்சி பெற்று நிற்கும் ஒரு தலைவனாக ஜெலென்ஸ்கி காணப்படுகிறார். தற்போது தான் அமெரிக்காவிற்கும், இரஸ்சியாவிற்கும் வெளியே உண்மையாக கொண்டாடப்படும் தலைவனாக ஜேலென்ஸ்கி பரிணமித்துள்ளார், அமெரிகாவிற்குள் ஜெலென்ஸ்கிக்கு எதிராக மக்கள் திரும்புகிறார்கள் என கூறப்படுகிறது, இது வரலாற்றில் இதற்கு முன்னர் சர்வதேச அரங்கில் சேகுவேரா அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை கேள்விக்குள்ளாக்கியது போலாகும் (தாம் கூறுவதனை பொம்மை போல தலையாட்டாமல் கேள்வி கேட்பதனை விரும்பாத அமெரிக்க குடிமக்கள்). ஆனால் சேகுவேராவையும் ஜெலென்ஸ்கியினையும் ஒப்பிடுவது தவறு, ஆனாலும் தற்போதய கால கட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஜெலென்ஸ்கி நல்ல பதிலை கொடுத்திருக்கிறார், ஆனால் ஜெலென்ஸ்கி ஒரு சந்தர்பவாதி, இலட்சியவாதி அல்ல அதனால் காட்சிகள் மாறலாம்.
  23. இருக்கலாம், அவுஸ்ரேலியாவுடன் மோதுவதனை தவிர்க்க இந்த போட்டியில் இந்தியா தோற்க கூடும்.
  24. அமெரிக்க மக்களையும் அமெரிகாவினையும் ஜெலென்ஸ்கி அந்த வெள்ளை மாளிகை சந்திப்பில் அவமானப்படுத்திவிட்டதாக கூறுகிறார்கள், எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை யாருக்காவது தெரிந்தால் கூறவும். ஆனால் கடவுள் புண்ணியத்தில் அமெரிக்காவிற்கிடையே கடல் உள்ளதால் தப்பி விட்டீர்கள் என சந்தடி சாக்கில் ஒரு நக்கல் அடிப்பார் அது ஒரு வேற லெவல், அது அமெரிக்க இராணுவத்தினரை அவமதித்தாக இருக்கலாம், ஆனால் அமெரிக்க மக்களையும் அமெரிக்காவினையும் அவமதித்ததாகத்தெரியவில்லை.
  25. இண்றைய போட்டியில் காயம் காரணமாக ரோகித் விளையாடவில்லையாம் (மாற்றீடாக ரிசப் பந்த்) என ஒரு வதந்தி உலாவுகிறது. இண்றைய போட்டியில் நியுசிலாந்து வென்றால் அவுஸ்ரேலியாவினை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயாம் அரை இறுதிப்போட்டியில் ஏற்படும், அதனை விட இண்றைய போட்டியில் தோற்று இந்தியாவினை அவுஸ் அரையிறுதியில் சந்திப்பதே சிறப்பு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.