Everything posted by vasee
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
https://econofact.org/factbrief/has-the-pentagon-failed-its-7th-audit-in-a-row லிங் விடுபட்டு போய் விட்டது மீண்டும் மீண்டும் பென்டகன் கணக்கு கண்ணை கட்டுதாம்.😁 அதனால் ஜெலன்ஸ்கி சொன்னது உண்மையாக இருக்குமோ என ஒரு ஐயம்.
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
824 பில்லியனை பென்டகன் கனக்கில் இருந்து எடுக்கலாம், மிகுதி 136 பில்லியன். அமெரிக்காவில் இது எப்படி சாத்தியம்? அண்மையில் ஜெலன்ஸ்கி கூட குற்றம் சாட்டியிருந்தார் தமக்கு வரவேன்டிய பணம் வரவில்லை என.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவுஸ்ரேலியாவின் இடத்தை இந்திய அணி தட்டிப்பறித்த பின் (மைதானத்தில் கேவலமாக நடப்பது, இந்தியணி மைதானத்திற்கு வெளியிலும் கேவலமாக நடக்கிறது) இந்தியாவினை பிடிப்பதில்லை.
-
சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
பையன் உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், உணர்ச்சி வசப்படாமல் கருத்தாடுங்கள், அனைவருக்கும் அவர்களது கருத்துரிமை உள்ளது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியணி தோற்றால் அவர்களால் தாங்க முடியாது அதே இந்தியணி வென்றால் எங்களால் தாங்கமுடியாது (காதை கடித்து விடுவார்கள்).
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
எனக்கு இந்தியா நிலமை தெரியவில்லை, சில வேளி மிகைப்படுத்தி கூறியிருப்பார், ஆனால் 3ஆம் உலக நாடுகளில் ஏழைகள் மிக ஏழைகளாகவும் பணக்காரர்கள் அதிக பணம் படைத்தவர்களாக இருக்கின்றார்கள், இவ்வாறான ஏற்ற தாழ்வு இந்தியாவில் மிக அதிகம், அவரது நண்பரின் வருமானத்தில் சிறந்த வாழ்க்கை தரத்தினை கொண்டிருக்கலாம்.
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
பொதுவாக இரஸ்சியா பற்றி கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தினை இறுதியாக ஐரோபிய ஒன்றிய தலைவர்களே தாமே உண்மை என நம்புகின்ற நிலை காணப்படுகிறது, இரஸ்சியாவினால் உக்கிரேனை கூட கைப்பற்ற முடியாது (இரஸ்சியர்கள் வாழாத), அதற்கு காரணம் அவர்களது இராணுவ போரிடும் ஆற்றல் மிக மட்டுப்படுத்தப்பட்டது. தேவையற்ற இராணுவ செலவுகளை அதிகரிப்பதனை விட்டு, ஐரோப்பிய பிராந்தியத்தில் நிலையான அமைதி முயற்சி ஏற்படுத்தி பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இனிமேல் ஒற்றை அல்லது இரட்டை உலக ஒழுங்கு என்பதற்கு வாய்ப்பே இல்லை, நாடுகளின் குழுமங்கள் கொண்ட(Bloc countries) ஒரு பல்துருவ உலக ஒழுங்குதான் நடைமுறை யதார்த்தம் ஆகிவிட்டது, இதற்கு காரணம் உலக சனத்தொகை பரம்பல் மூலம் ஏற்பட்ட வர்த்தக வகிபாகம். ஆனால் தற்போதய நெருக்கடி உலக பொருளாதாரத்தினை கடுமையாக பாதிக்கின்றது, இனிமேல் புதிய சண்டைகளை எதிர்கொள்ள கூடிய பொருளாதார பலம் தற்போது ஒரு நாட்டிற்கும் இல்லை, அதனையும் மீறி யுத்தத்தினை தொடர்ந்தால் இயலாமையின் விளிம்பில் நிற்கும் நாடு அணுகுண்டு என உலக அழிவிற்கு ஆரம்பமாகிவிடும். இந்த போர்களிற்கான தேவை பலவீனமான அரசியல்வாதிகளின் சுயநாலம். சமுக மற்றும் சுகாதார செலவுகள் 36% அளவில் முதல் இடத்தில் இருக்கின்றது, இதனை குறைக்க முடியும், ஆனால் பல உண்மையான இயலாதவர்கள் பாதிப்புள்ளாகுவார்கள். இதனை விட முன்னாள் இராணுவ வீரர்களின் சலுகைகளில் கைவைக்கலாம் 6%, அவர்கள் அதனை உணர்ந்து கொள்வார்கள், நாட்டிற்கு தேவையான முக்கியமான விடயம் என்பதால். ஆனால் அது நீண்டகால அடிப்படையில் பின் விளைவை ஏற்படுத்தலாம்.
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
மத்திய கிழக்கில் அரபுலக கூட்டணியின் எண்ணெய் வளத்தினை குறிவைத்து அவர்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கியது போல, ஐரோப்பிய ஒன்றியத்தினை உடைத்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உள்ள அச்சுறுத்தலை களைய முனைகிறது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் தம்மை விரிவு படுத்தி (கனடா போன்ற மேற்கு நாடுகளை இணைத்து) பொருளாதார மேம்படுத்தலில் கவனம் செலுத்த வேண்டும். தீராத போர் அவர்களை மேலும் பலவீனமாக்கும், நிரந்தர அமைதியினை உருவாக்கி ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொதுவான பிரச்சினைகளை (பொருளாதார, இராணுவ பிரச்சினைகளை) களைய சரியான தலைமை வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாக பிளவு பட்டுள்ளது, இந்த நிலைக்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சரியான் பிரதிநிதிகள் இல்லாமை, சில காலத்தின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் சார்க் அமைப்பு மாதிரி மாறாமல் இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல பிரிக்ஸ் கூட தற்போதய காலத்திற்கு தேவையான ஒன்று, உலக பொருளாதாரம் மாறி வருகின்ற உலக ஒழுங்கிற்கேற்ப தம்மை கட்டமைக்க வேண்டும்,
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதெல்லாம் கேட்டு வாங்க முடியாது, அது வரம், சிலருக்குதான் அந்த பாக்கியம் கிடைக்கும்.
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
இந்தியாவில் வடக்கில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினையும், இலங்கையில் தெற்கில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினையும் இருக்கின்றது. சிங்களவர்கள் தங்களை ஆரியர்கள் என்று கூறுகிறார்கள், அதனால் வட இந்தியருக்கு உள்ள அதே பிரச்சினை சிங்களவர்களுக்கும் இருக்கிறதோ தெரியவில்லை. இந்தியாவில் ஒரு நண்பர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, எந்த இடம் என கேட்டார் வைத்தியசாலை ஊழியர், அதற்கு இலங்கை என கூற, இலங்கை கிரிக்கட் அணியினர் போல அனைத்து இலங்கையர்களும் அரக்கர்கள் போல் இருப்பார்கள் என நினைத்தேன் என கூறினார் (இது நடந்தது 90 களின் பிற்பகுதி) இந்தியர்களுக்கு இதிகாச புராணங்கள், இலங்கையர்களுக்கு மகாவம்சம், நிறைய ஒற்றுமைகள் இருக்கு.😁 ஆனால் இந்த வெளிநாட்டு பயணங்கள் இந்திய, இலங்கையில் இருந்த அடிமட்ட மக்களின் சமூக வாழ்க்கை தரத்தினை உயர்த்தியுள்ளது, இது சமூக ரீதியான நல்ல மாற்றம்.
-
காதலர் தினக் கதை
சில முயற்சிகள் செய்தவர், ஆனால் அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்றவர்களாக அவர்கள் இருக்கவில்லை என கருதுகிறேன், அவர் மற்றவர்களின் நம்பிக்கை உணர்வுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார் என உணர்ந்தேன், அந்த அடிப்படையிலேயே தனது சமூக உறவுகளை கட்டமைத்திருந்தார் என்பதனை அவருடான அனுபவத்தில் உணர முடிந்தது, அதற்கு மிகையான பணத்தின் மீதான பாதுகாப்பு உணர்வினால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம். ஆனால் ஒரு வித்தியாசமான பார்வை கொண்ட புத்திசாலி பெண்மணி, ஆளுமையான ஆனால் அவரிடம் வெட்டிபந்தா கர்வம் எதுவும் இருக்காது, பொது உலகில் கரட்டை துரத்து கழுதை அல்ல அவர்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியணியினை தவிர மற்ற அணிகள் அனைத்தும் பல பிரச்சினைகள் உள்ளது (இந்தியணியே சிறந்த அணி) ஆனாலும் இந்தியணி வெல்லாது என நாங்கள் பிடிவாதமாக இருக்கிறோம். என்னுடன் வேலையில் இருந்த இந்தியரின் அயலவர்கள் இலங்கையர்கள், இந்திய அவுஸ்ரேலிய ஆட்டத்தினை பார்க்க அவர்களை வீட்டிற்கு அழைத்த இலங்கையர்கள் அவர்கள் 2-3 குடும்பங்கள் என பெரும் எண்ணிக்கையில் வீட்டில் கூடி அவுஸ்ரேலியாவினை ஆதரித்து இந்த இந்திய பெண்மணியினையும் அவரது கணவர் மட்டும் இந்தியர்கல் என்பதனால் தம்மை திட்டமிட்டே நோகடித்தார்கள் என்பதாகவும் அதன் பின்னர் அவர்களுடன் கதைப்பதில்லை என கூறினார். ஆனால் நீ அப்படியான ஆள் இல்லை என எனக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.😁 ஒருவரை வீட்டிற்கு கூப்பிட்டு அவரகளது மனதை நோகடிக்கும் நிலையில் தமிழர்கள் இருக்கமாட்டார்கள் என்றே நினைத்தேன், ஆனால் அவர்கள் தமிழர்களா என்பது தெரியவில்லை.
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
முன்னர் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை இந்த நண்பர் கூறிவந்தார், இந்தியாவில் உள்ள ஒரு சிறுபான்மை மதத்தினை சேர்ந்தவர், அங்குள்ள தனது சொத்துக்களை எல்லாம் விற்றுவிட போவதாக கூறினவர், தற்போது போய் தனது வீட்டை விற்று தனது நண்பனின் பேரில் ஒரு விவசாய நிலம் ஒன்றினை வாங்கி விட்டுள்ளார், வெளிநாட்டினர் விவசாய நிலம் வாங்க முடியாதாம், பின்னர் அதனை சாதாரண நிலமாக மாற்றிய பின்னர் தனது பெயரிற்கு மாற்ற உள்ளார். முன்னர் போல இந்திய எதிர்ப்பு காட்டுவதில்லை, பிற்காலத்தில் அவர் இந்தியாவில் சென்று தங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என கருதுகிறேன். . பொதுவாக இந்தியர்களும், இலங்கையர்களும் தமது நாட்டினை பற்றி மிகைப்பட கூறுவது வழமைதான், முன்னர் ஒரு சிங்கள பெண்மணி இதே போல பீத்திக்கொண்டிருந்த போது கடுப்பான அவுஸ்ரேலிய பெண்மணி அவரிடம் கேட்டார், பின்னர் எதற்காக இங்கே வந்தாய் என. இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை.
-
அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்; வட்டுக்கோட்டையில் பிரதமர் உறுதி
மீண்டும் மீண்டும் அனைவருக்குமுள்ள பொது பிரச்சினையினை அனைவருடனும் பேசி தீர்க்க வேண்டும் என கூறுகிறார், இதில் தமிழருக்கேன தனியான இனப்பிரச்சினை இல்லை எனும் கருத்தில் பிடிவாதமாக நிற்பது போல தெரிகிறது. பிரச்சினை உள்ளததனை ஏற்காவிடில் அதற்கான தீர்வினை காணமுடியாது.
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
அமெரிக்க துனை அதிபர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரச்சினை வெளியில் இருந்தல்ல, உள்ளே இருந்து வருகிறது எனவும், ஐரோப்பாவில் உள்ள அதிகார வர்க்கங்கள் மக்களின் ஜனநாயக உரிமையினை பறிப்பதாகவும், ரொமேனியாவில் நிகழ்ந்த நிகழ்வு தொடராலாம் என கூறியதுடன் அவ்வாறு நிகழ்ந்தால் (மக்களுக்கு பயந்து அதிகாரங்களின் பின்னால் ஒளிந்தால்) அமெரிக்கா அதற்கு ஆதரவு கொடுக்காது (அமெரிகாவினால் எதுவும் செய்ய முடியாது என குறிப்பிட்டார்). காணொளி இவரரது உரைக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். காணொளி ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்க துணை அதிபர் கூறிய ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பிரச்சினை வெளியில் இல்லை என்பதனை மறுத்து இரஸ்சியாவே பிரச்சினை அதற்கு தீர்வாக உக்கிரேனை பலப்படுத்தவும் நேட்டோவினை பலப்படுத்துவதனை தீர்வாகவும் கூறினர். இதற்கெல்லாம் ஒரு படி மேல் சென்று ஐரோப்பாவின் பிரச்சினைக்கு (உக்கிரேனிற்கான பிரச்சினைக்கு) அமெரிக்காவே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. காணொளி தற்போது ஜெலன்ஸ்கியின் இந்த அறிவிப்பு, அமெரிகா இந்த ஆண்டு இறுதிக்குள் உக்கிரேனில் தேர்தலை நடத்தவேண்டும் எனும் கோரிக்கை எதிராக போர் நிறுத்தம் ஏற்படுத்தாது போரை தொடர்வதன் மூலம் தேர்தலை புறக்கணித்து தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க விரும்புகின்ற நிலை காணப்படுகிறது (இவ்வாறான நிலை ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் விரோத கொளகை என அமெரிக்க துணை அதிபர் கூறியிருந்தார்). கடந்த அமெரிக்க அரசு போலல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் என செயற்படாமல் (ஐரோப்பிய ஒன்றியத்தினை பலவீனப்படுத்தும்) தனிய குறிப்பிட்ட நாடுகளுடன் உறவை பேண புதிய அமெரிக்க அரசு விரும்புகிறது, ஆனால் அதனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விரும்பவில்லை. உலகம் ஒரு பல்துருவ உலக ஒழுங்கிற்குள் மிக வேகமாக சென்று கொண்டிருக்கின்றது.
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
அண்மையில் இந்தியாவிற்கு சென்று திரும்பிய எனது இந்திய நண்பர் கூறினார், இந்தியாவில் உள்ளவர்களின் வாழ்க்கை வெளிநாட்டில் உள்ளவர்களை விட சிறப்பாக உள்ளதென, அவரது நண்பர ஓய்வு பெற்றுவிட்டதாகவும் மாதம் $3000 அவுஸ்ரேலிய டொலர் ஓய்வூதியம் பெறுவதாக கூறினார் (நம்புவது கடினமாக இருந்தது).
-
காதலர் தினக் கதை
இவரும் ஒரு பழைய டொயோட்டா கார் வைத்திருந்தார், இவரும் தனியாளாகவே இருந்தார்,
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஜெராட் கிம்பரின் Group B ஆய்வு காணொளி
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் வர முடியாது வீட்டில் அடி விழும். 😁
-
காதலர் தினக் கதை
ஓய்வு பெற்று விட்டார் வேலையிலிருந்து, ஆனால் பல கட்டங்கள் கட்டி விற்றுக்கொண்டிருந்தார் கடைசியாக அவரை சந்தித்த போது சிட்னியில் ஒரு முக்கிய பகுதியில் இரண்டு வீடு கட்டி விற்பனைக்கு தயாராகி இருந்தார், அவரது வருமானத்தினை கேக்கவில்லை ஆனால் அவரிடம் பல திட்டங்கள் இருந்தது குறைந்தது 10 மில்லியன் வைத்திருப்பார் என கருதுகிறேன்.
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
துபாயும் உபகண்ட ஆடுகளம்தான்.
-
காதலர் தினக் கதை
சீன பெண்கள் சுய பொருளாதாரத்தில் மிக் திறமையானவர்கள், என்னுடன் ஒரு பெண்மணி வேலை செய்தார் அவர் பதின்ம வயதின் இறுதிப்பகுதியில் வேலையினை ஆரம்பித்தார் 20 களின் இறுதிப்பகுதிக்குள்ளே வேலையினை விட்டு விட்டு தனது சொந்த முயற்சியில் இறங்கி விட்டார், அவர் கூறுவார் முதலாவது மில்லியன் டாலர் உழைப்பதுதான் கடினம் அதன் பின்னர் அனைத்தும் இலகுவாகிவிடும் என கூறுவார். Think & grow rich, 7 steps to wealth என இரண்டு புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார், இது வரை வாசிக்கவில்லை கிட்டதட்ட 10 ஆண்டுகளாகின்றன. real estate இல் முதலிட்டிருந்தார்.
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
3 வகை ஆட்டங்களிலும் இந்தியணிதான் மிக சிறந்த அணி, ஆனாலும் உபகண்டத்திற்கு வெளியே போனால் உப்புக்கண்டம் போட்டு அனுப்பிவிடுகிறார்கள்.
-
The Mehta Boys- அப்பா - மகன் உறவு பற்றி நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த, அருமையான படம்!
படம் நன்றாக உள்ளது, நன்றி! prime video இலே இதே போல ஒரு ஒரு பிரிந்து வாழும் தந்தைக்கும் மகளுக்குமிடையேயான கதை I want to talk இதற்கு தமிழில் உப தலைப்பும் உள்ளது. அதில் அந்த சிறிய குழந்தை தனக்கு நெருக்கமான பெரியவர்களின் பேச்சை உண்மை என கருதி தந்தை பொய் கூறுகிறார் என உறுதியாக கருதியிருக்கும் போது உண்மை தாக்கும் போது குழந்தை காட்டும் அந்த அதிர்ச்சியான உணர்வினை வெளிப்படுத்தும் அழகு, மிக சிறப்பான நடிப்பு, உங்களை இந்த படமும் கவரும் என கருதுகிறேன். அந்த குழந்தைக்கு தந்தை நெருக்கமானவர் அல்ல.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிரிக் இன்போ தரவுகளின் அடிப்படையில் சிலந்தி வரைபின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு பாக்கிஸ்தானும் தென்னாபிரிக்காவும் தெரிவாகும் என வந்துள்ளது ( தரவுகளை சாட் ஜிபிடி மூலம் பெற்றுக்கொண்டேன், கணிப்பீடு தவறாக இருக்கலாம்). இதில் மைதானத்தின் பங்கும் கவனத்தில் எடுக்கப்பட்டது.