Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. மெல்பேர்ன் ஆடுகளம் முன்னர் கூறியது போல நாணய சுழற்சியில் வெல்லும் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்யும் எனும் கூற்று தவறாக வாய்ப்புள்ளது. அண்மையில் இடம் பெற்ற மழை காரணமாக ஆடுகளம் மூடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள், அதனால் ஆடுகளத்தில் ஈரப்பதன் காணப்படும் அத்துடன் புற்களும் காணப்படும், மைதான நிர்வாகிகள் இந்த ஆடுகளத்தின் புற்கள் வழமையாக உள்ளதை விட அதிகமாக விட்டு வெட்ட உள்ளதாக கூறுகிறார்கள் 12MM புல் கொண்ட ஆடுகளத்தில் 7 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டினை செபீல்ட் போட்டியில் எடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலமைகளை வைத்து பார்க்கும் போது நாணய சுழற்சியில் வெல்லும் அணி பந்து வீச்சினை தெரிவு செய்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது, ஏனெனில் இந்த மைதானத்தில் முதல் இனிங்க்ஸில் ஓட்ட்டங்களை எடுப்பது இலகு ஆனால் இரண்டாம் இனிங்ஸில் ஓட்டங்கள் எடுப்பது கடினம் என்பதால், துடுப்பாட்டத்தினை தேர்வு செய்யாமல் பந்து வீச்சினை தெரிவு செய்வதுதான் தற்போதய சூழ்நிலையில் சரியான முடிவாக இருக்கும்.
  2. எனது இளம்பிராயத்தில் வைத்தியரிடம் போக பயம், ஒரு தடவை வயிற்றில் உள்ள பூச்சிக்காக வைத்தியசாலை மருந்து கொடுத்தார்கள் அதனால் பக்க விளைவு ஏற்பட்டு மீண்டும் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றார்கள், வைத்டியர் ஊசி குத்த போகிறார் என்ற பயத்தில் ஏற்கனவே பல்கீனமாக இருந்த நான் மயக்கமாகிவிட்டேன், அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்து ஊசி மூலம் ஏற்றும் சேலைனை குத்திவிட்டார்கள்.😁 சில சமயம் சரியாக கதைப்பது போல இருக்கும் ஆனால் அப்படியே அதற்கு எதிர்மாறாக பின்னர் நிகழ்கிறது, இவரை யாராலும் வெல்ல முடியாது.😁
  3. மதில் மேல் பூனையாக இருப்பார்கள்தான் ஆட்சியினை தீர்மானிக்கின்றமையால் நிங்கள் ஆட்சியினை தீர்மானிப்பவராக இருக்கலாம் என நினைத்தேன்.
  4. நான் உங்களை தவறாக புரிந்து கொள்ளவில்லை, மிக நேர்மையான ஒரு கருத்தாளர் மற்றவரின் மனம் நோகாமல் அதே நேரம் நகைசுவையாக பதிலளிப்பவர். இது முக்கியமான விடயம்.
  5. மேற்கு (ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்) ஜோர்ஜெஸுகு ஆட்சிக்கு வருவதனை விரும்பவில்லை. நீங்கள் இரண்டு கட்சிக்கும் மாறி மாறி வாக்களிப்பீர்களா?
  6. கவலைப்படாதீர்கள் பெட்டியினை கட்டி தயாரக வைக்கவும், தற்காலிக ஊழியர்கலை பதவி நீக்கம் செய்தபின்னர் அவர்களின் வேலை கிடைக்க வாய்ப்புண்டு ஆனால் வைத்டியர் வேலை கிடைக்காது.😁
  7. ஒவ்வொரு ஆவணமும் பல கட்டங்களாக பரிசீலனை செய்யப்பட்ட பின்னரே அவை ஆவனப்பிரிவிற்கு மாற்றப்படும், அவற்றில் பல பல வகை பரிசோதனை தரவுகள் இயந்திர செயற்பாடு என பல்லாயிரக்கணக்கான நடவடிக்கைகள் மீளாய்வுக்குள்ளாக்கப்படுகிறது. ஒரு வைத்தியரின் வேலையினை வைத்தியர்தான் செய்யமுடியும் இங்கு கூறப்படுவது அவர்கள் ஏற்கனவே செய்த தற்காலிக வேலைகளை தொடர்வதற்கு நிரந்தர வேலை ஆக்குவதற்கு ஆதரவு வழ்ங்குதல் மட்டுமே.
  8. இல்லை, தனிப்பட்ட ரீதியில் சட்ட ரீதியான பொறுப்புக்கூறல், அதனால்தான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலும் அதற்கான பொறுப்பு கூறல் இருக்கும் என குறிப்பிட்டேன். நிறுவனங்கள் வெறுமனே ஒவ்வொருவரையும் கை நீட்டி தப்பி விடுவதற்காகவே அனைத்து செயற்பாடுகளும் ஆவணப்படுத்தப்படுகின்றது நீங்கள் கையெழுத்திடும் ( இலத்திரனியல் உள்ளடங்கலாக) ஆவணங்கள் சுகாதார திணைக்களத்தினால் பாதுகாக்கப்படுகின்றது. நான் சும்மா விதண்டாவாதத்திற்காக அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என கூறவில்லை, அவர்கள் தமது பொறுப்புணர்ந்து செயற்படுவார்கள், தவறு செய்தால் அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
  9. மருத்துவத்துறை மட்டுமல்ல அத்னோடு சம்பந்தப்பட்ட அனைத்து துறையும் சட்ட ரீதியான பிர்ச்சினையினை எதிர்கொள்ள வேண்டும் நாங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு கூட அதனால்தான் ஒருவரும் பொறுப்பு எடுக்க விரும்புவதில்லை.
  10. அவர் வைத்தியராக மான்லி அரச வைத்தியசாலையில் பணியாற்றியவர், இந்த விடயத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன .
  11. எமது ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் நாம் பதில் சொல்லவேண்டும், அதனால் பெரும்பாலானவர்கள் அந்த பொறுப்பை எடுக்க விரும்புவதில்லை, ஒரு ஆண்டு இறுதிக்காலத்தில் இயந்திரங்கள் ஓய்வுக்குள்ளாக்குவதற்கு முன்னர் அது சரியான முறையில் நிகழ்த்தப்பட்டுள்ளது என இலத்திரனியல் உறுதி மொழி கொடுக்கும் நிலையில் ஒரு துறை எனது வேலையிடத்தில் இருந்தது, அதில் வேலை செய்தவர்கள் அதனை செய்ய தயங்கினார்கள், நான் வேறு ஒரு துறையில் வேலை செய்து கொண்டிருந்தேன், அந்த துறையில் வேலை செய்தவர்கள் என்னை விட வேலைத்தரத்தில் உயர்வானவர்களாகவும் கல்வியில் உயர்வானவர்களாகவும் இருந்தார்கள் ஆனால் யாரும் முன்வரவில்லை (அது அவர்களது வேலை). நான் அந்த இலத்திரனியல் உறுதியினை வழங்கினேன், அப்போது அந்த அணியில் வேலை செய்த ஒரு ஐரிஸ் பெண்மணி என்னை தடுத்தார், உனக்கு இதனை அங்கீகாரம் கொடுக்கும் தகுதி இல்லை என ( அவரது நோக்கம் என்னை காப்பாற்றுவதாக இருந்தது) அவர்கள் உன்னை விட அதிக சம்பளம் வாங்குகிறார்கள் அது அவர்களது வேலை நீயாக ஏன் பிரச்சினையில் மாட்டி கொள்கிறாய் என. மருத்துவதுறை மட்டுமல்ல அதனோடு சம்பந்தப்பட்ட அனைத்து துறையிலும் அதே பொறுப்பு கூறல் இருக்கிறது.
  12. எமது நிறுவனத்தில் புற்று நோய் மருந்து ஆராய்ச்சி பிரிவில் ஒரு வைத்தியர் ஆலோசனையாளாராக பணி புரிந்திருந்தார், அவர் இன்னொரு மருத்துவ நிறுவனத்திற்கு வேலைக்கு முயற்சித்த போது அவரது தில்லு முல்லு வெளியானது, இந்தியரான இவர் இன்னொரு இந்திய வைத்தியரின் சான்றிதழ்களை வைத்து சிட்னியில் அரச மருத்துவமனையில் இரவு நேர மருத்துவமனை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தார், அவரின் கீழ் பல மருத்துவர்களும், தாதியர்களும் வேலை செய்திருந்தனர். https://www.abc.net.au/news/2017-07-05/inquiry-hears-staff-covered-up-fake-doctor-shyam-acharya/8680756 அவர் ஒரு போலி வைத்தியர்.
  13. ஒருவர் கடவுளை நோக்கி தவம் செய்வாராம் கடவுள் மனம் இரங்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார் அதற்கு அவர் நீரில் மிதக்கும் வரம் வேண்டும் என கேட்டார் அதற்கு கடவுள் ஆற்றில் ஒரு நபர் மிதவையில் வருவதனை காட்டி எதற்காக இப்படி தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கிறாய் என கேட்டாராம். எனக்கு மகாபாரத கதையினை யார் எழுதியது என்றே தெரியாது கதைகளை வாசிப்பதுடன் நிறுத்திக்கொள்வதுண்டு, இதில் கூறப்படுகின்ற விடயம் மனம் இல்லை என்பதுதற்கு உதாரணமாக கதை கூறப்பட்டுள்ளது.😁 உங்கள் கருத்திற்கு நன்றி பச்சை முடிந்துவிட்டது.
  14. ஆம் எனவே கருதுகிறேன், ருமேனியாவில் முதல் கட்ட வாக்கெடுப்பில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தீவிர வலது சாரி ஜொர்ஜெஷகு இவர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரானவராகவும் புட்டின் ஆதரவாளர் என கூறப்படுகிறது, அந்த தேர்தலை செல்லுபடி அற்றதாக்கவேண்டும் என முயற்சித்த அவரது போட்டியாளரின் (இடதுசார், மேற்கு ஆதரவு கொண்டவர்) குற்றச்சாட்டான சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டினை உச்ச நீதி மன்று பரிசீலித்து அந்த தேர்தலை செல்லுபடி அற்றதாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
  15. இல்லை நீங்கள் தவறாக புரிந்துவிட்டீர்கள், நான் கூறியது நதி மூலம் ரிசி மூலம் பார்ப்பதினை.
  16. புராணக்கதையான மகாபாரதத்தில் ஒரு கதை கூறுவார்கல் அர்சுனனுக்கு (அர்சுனா அல்ல) கர்ணனில் பொறாமை, காரணம் மக்கள் அவரை கொடை வள்ளல் என கூறுவதால், அதனால் அர்ச்சுனன் போவோர் வருவோரிடம் கர்ணன் என்ன தனது செல்வத்தினையா கொடையாக கொடுக்கிறார்? துரியோதனனின் காசை எந்தவித வருத்தமின்றி கொடுக்கிறார் என கூறிவந்தாராம், அதனை கேட்ட கண்ணன் 3 மலைகளை தங்கம் (அர்சுனாவின் தங்கம் அல்ல), வெள்ளி, வைரமாக மாற்றி அதனை அந்தி சாய்வதிற்குள் தானமாக வழங்குமாறு அர்ச்சுனனை கேட்டாராம், அர்ச்சுனன் வேலைக்கு ஆள்களை நியமித்து அந்த மலைகளை உடைத்து மக்களை வரிசையாக விட்டு தானமாக வழங்க தொடங்கினாராம் அந்தி சாயும் நேரம் வந்தது மலைகள் அப்படியே இருந்த்து. அர்ச்சுனன் கண்ணனிடம் என்னால் முடியவில்லை என தோல்வியினை ஒப்புக்கொண்டாராம், கண்ணன் கர்ணனை கூப்பிட்டு இந்த 3 மலைகளையும் அந்து சாய்வதற்குள் தானமாக வழங்கிவிடு என கூற அதற்கு கர்ணன் மூவரை அழைத்து ஆளுக்கொரு மலையினை தானமாக வழங்கினாராம். இங்கு பிரச்சினை மனம் இல்லை.
  17. https://www.smh.com.au/politics/nsw/safework-knew-tunnel-workers-were-exposed-to-high-levels-of-deadly-silica-dust-20241223-p5l0ay.html மூலப்பிரதி சிட்னி மோர்னிங் கேரட்டில் வந்தது, அதனை வாசிப்பதற்கு பணம் செலுத்த வேண்டும் அதனால் அந்த தகவலை வைத்து கட்டுரை வரைந்த உலக சோசலிஸ்ட் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது, நதி மூலம் ரிசி மூலம் பார்க்கவேண்டியதில்லை (இது ஒரு ஆபத்தான நோய்😁) அதில் கூறப்படும் விடயம்தான் முக்கியம்.
  18. வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவத்தினை (எந்த வேலையாக இருந்தாலும்) கல்வித்தகமைக்கு பதிலீடாக பயன்படுத்துகின்ற நிலை நிலவுகிறது, வெறுமனே உயர் கற்கையினை முடித்துவிட்டு வரும் நபர்கள் கூட இவ்வாறான இடைநிலை பள்ளியில் படித்தவர்களிடம் ஆரம்பத்தில் உதவியாளாராக பணியாற்றி செயலனுபவம் பெற்ற பின்னரே தமது சேவைகளை தொடர்கின்றனர். அர்ச்சுனா உண்மையில் விபரமானவராகவே இருக்கின்றார்.
  19. மதங்களை தமது அடையாளமாகவே (label) பார்க்கின்ற நிலை நிலவுகின்றது, மதம் மட்டுமல்ல இனம், சாதி என இது நீண்டு செல்கிறது. தாம் வாழ்ந்த இடத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டு மிக மோசமாக அடக்குமுறைக்குள்ளாகும் அகதி நிலையில் உள்ள மக்களுக்கு பல தசாப்தங்களாக அகதி வாழ்க்கை (உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்) வாழும் எங்களுக்குத்தான் மற்றவர்களை விட அதன் வலி தெரியும்.
  20. ஆஸ்திரேலிய சுரங்கப்பாதை கட்டுமான தொழிலாளர்கள் ஆபத்தான சிலிக்கா தூசிக்கு ஆளாகியுள்ளனர் ஜென்னி காம்ப்பெல் 9 டிசம்பர் 2024 ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் சுரங்கப்பாதை கட்டுமானத் தொழிலாளர்கள் 2016 மற்றும் 2020 க்கு இடையில் முக்கிய அரசாங்க திட்டங்களில் சுவாசிக்கக்கூடிய படிக சிலிக்காவின் ஆபத்தான நிலைகளுக்கு மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டனர், வரலாற்று காற்றின் தர அளவீடுகள் காட்டுகின்றன. இந்த வெளிப்பாடு தொடர்கிறது என்பதை மிக சமீபத்திய தரவு காட்டக்கூடும், ஆனால் மாநில பாதுகாப்பு ஒழுங்குமுறை அதை வெளியிட மறுத்துவிட்டது. சிட்னி மெட்ரோ வெஸ்ட் திட்டத்தில் டன்னல் போரிங் இயந்திரம் [புகைப்படம்: கெல்லா] ஆஸ்திரேலிய தொழிலாளர் சங்கத்தின் (AWU) அரசாங்க தகவல் பொது அணுகல் (GIPA) கோரிக்கைக்குப் பிறகு 2016-20 புள்ளிவிவரங்கள் நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில போக்குவரத்து நிறுவனமான NSW (TfNSW) மூலம் வெளியிடப்பட்டது. சிட்னி மார்னிங் ஹெரால்டு அறிக்கையின்படி , சிட்னி மெட்ரோ மற்றும் தென்மேற்கு சுரங்கப்பாதைகள் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 2020 க்கு முன்னர் "பாதுகாப்பான" வரம்பை விட 100 மடங்கு அதிகமாக சிலிக்கா அளவை வெளிப்படுத்தினர், மேலும் புதிய தரநிலையை விட 200 மடங்கு அதிகமாக இருந்தது. சேஃப் ஒர்க் ஆஸ்திரேலியா மூலம் ஆண்டு. பணியிட வெளிப்பாடு தரநிலை (WES) 2020 இல் ஒரு கன மீட்டருக்கு 0.1 மில்லிகிராமில் இருந்து 0.05mg/cc ஆக பாதியாக குறைக்கப்பட்டது. இது கொடிய தூசியின் ஆபத்தை மட்டுமல்ல, அரசாங்கங்களும், கட்டுமான நிறுவனங்களும் மற்றும் தொழிற்சங்கங்களும் சில காலமாக அபாயத்தை உணர்ந்துள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. TfNSW 948 அளவீடுகளை வெளியிட்டது, அதில் 318-மூன்றில் ஒரு பங்கு-0.1mg/cc ஐத் தாண்டியது. அவற்றில் 80 வழக்குகளில், தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. சில அளவீடுகள் 10.4mg/cc வரை அதிகமாக இருந்தன. அக்டோபர் நடுப்பகுதியில் சட்டம் மற்றும் நீதிக்கான NSW நிலைக்குழுவிடம் சமர்ப்பித்ததில், AWU, மாநிலத்தின் சுரங்கப்பாதை திட்டங்களில் சமீபத்திய சிலிக்கா தூசி அளவீடுகளுக்கான கோரிக்கையை SafeWork NSW நிராகரித்ததாகக் கூறியது. "வேலை தொடர்பான இறப்புகள், கடுமையான காயங்கள் மற்றும் நோய்களைக் குறைப்பதில்" பணிபுரியும் மாநில அரசாங்கத்தின் பணியிட பாதுகாப்பு ஒழுங்குமுறை, திட்டங்களுக்குப் பொறுப்பான கட்டுமான நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக இந்தத் தரவை அடக்கியது. NSW கிரீன்ஸின் பணி சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் அபிகாயில் பாய்ட், நவம்பர் 20 அன்று மாநில பாராளுமன்றத்தில் AWU கோரிக்கையை மறுத்து கூறினார்: "பெரிய கட்டுமான நிறுவனங்களின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தகவல்களை வெளியிடுவதால் ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை சேஃப்வொர்க் மேற்கோளிட்டுள்ளது. தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு பொறுப்பான ஒழுங்குமுறை அமைப்பு, உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் நிறுவனங்களுக்கு குறுக்கீடு செய்கிறது என்பது SafeWork NSW பிரதிநிதித்துவப்படுத்தும் கார்ப்பரேட் நலன்களைப் பற்றி பேசுகிறது. பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் உள்ள சுரங்கப்பாதை மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து, WES வழக்கமாக மீறப்படுகிறது என்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், அரசாங்கமும் முழுமையாக அறிந்திருப்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி சேஃப் ஒர்க் ஆஸ்திரேலியாவால் அமைக்கப்பட்ட திருத்தப்பட்ட விதிமுறைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, AWU இணையதளம், "புதிய சிலிக்கா தூசி சட்டங்கள் அமலுக்கு வருவதால், தொழிலாளர்கள் எளிதாக சுவாசிக்க வேண்டும்" என்று வெறித்தனமாக அறிவித்தது. ஆஸ்திரேலியா முழுவதும் அபாயகரமான சிலிக்கா தூசி சூழலில் பணிபுரியும் 600,000 தொழிலாளர்களிடம் தொழிற்சங்கம் அவர்கள் இப்போது "இந்த கொடிய தூசிக்கு எதிராக வேலையில் பாதுகாப்பை அனுபவிக்க முடியும்" என்று கூறியது. இது சிலிக்கா தூசி வெளிப்பாட்டால் தொழிலாளர்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றி எழுத AWU வேண்டுமென்றே மேற்கொண்ட முயற்சியாகும். தொழிற்சங்கத்தின் சொந்த GIPA கோரிக்கைகள், பெருநிறுவனங்கள் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை வழமையாகப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், விதிகளைச் செயல்படுத்துவதற்குப் பொறுப்பான அரசாங்க அமைப்புகளும் அதை மூடிமறைத்து வருகின்றன என்பதை நிரூபிக்கின்றன. தொழிலாளர்களை ஆபத்தான நிலைமைகளுக்கு வெளிப்படுத்துவதில் AWU தனது சொந்த பங்கை மறைக்க முயல்கிறது. சிலிக்கா தூசி வெளிப்பாட்டின் கொடிய அளவுகளைக் காட்டும் புள்ளிவிவரங்களுடன் கூட, தொழிற்சங்கம் பாதுகாப்பான நிலைமைகளைக் கோருவதற்கு மெட்ரோ சுரங்கப்பாதைத் திட்டங்களில் கருவிகளைக் குறைக்குமாறு தொழிலாளர்களை ஒருபோதும் அழைத்ததில்லை. அதற்குப் பதிலாக, பெரிய கட்டுமான நிறுவனங்களின் லாப நலன்களைப் பாதுகாப்பதற்காக, ஆபத்து எதுவாக இருந்தாலும், செயல்பாடுகள் தொடர்வதை அவர்கள் உறுதி செய்துள்ளனர். சிலிக்கா என்பது மணற்கல் மற்றும் ஷேலில் காணப்படும் இயற்கையாக நிகழும் கனிமமாகும், இது சிட்னி மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் அடித்தளத்தை உருவாக்குகிறது. சுரங்கப்பாதை இயந்திரங்களால் தொந்தரவு செய்யப்படும்போது, சிலிக்காவை சுவாசிக்கக்கூடிய படிக சிலிக்கா அல்லது படிக சிலிக்கா தூசி எனப்படும் நுண்ணிய துகள்களாக அணுவாக்கப்படுகிறது, கட்டுமானத் தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சுவாசித்து வருகின்றனர். உள்ளிழுக்கப்படும் சிலிக்கா நுரையீரல் திசுக்களில் தன்னை உட்பொதிக்கிறது மற்றும் வெளியேற்ற முடியாது. நீடித்த சிலிக்கா உள்ளிழுக்கத்தின் விளைவுகள் மீள முடியாதவை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே மோசமான நிகழ்வுகளுக்கு உயிர்காக்கும் விருப்பமாகும். படிக சிலிக்கா தூசி மணலை விட 100 மடங்கு சிறியது மற்றும் புற்றுநோய் கவுன்சிலின் கூற்றுப்படி, நீண்ட நேரம் உள்ளிழுப்பது நுரையீரல் புற்றுநோய், சிலிக்கோசிஸ், சிறுநீரக நோய் மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. சிலிக்கா தூசியின் வெளிப்பாட்டின் விளைவாக சிலிக்கோசிஸ் மற்றும் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும் முறைகள் பொருத்தமாக சோதிக்கப்பட்ட சுவாசக் கருவிகள், கருவியில் இருந்து பிரித்தெடுக்கும் அமைப்புகள், நீர் ஒடுக்கம் மற்றும் காற்றோட்டம் ஆகியவை அடங்கும். 2022 இல் கர்டின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 10,000 ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும், 103,000 பேர் வரை சிலிக்கோசிஸ் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. NSW இன் மிகப்பெரிய தொழிலாளர் இழப்பீட்டுக் காப்பீட்டாளரான iCare இன் கூற்றுப்படி, தூசி நோய் திட்டத்தில் புதிதாக நுழைந்தவர்களின் எண்ணிக்கை, 2018-19 நிதியாண்டில் 38 இல் இருந்து 2023-24 இல் 373 ஆக உயர்ந்துள்ளது. SafeWork NSW மற்றும் முக்கிய கட்டுமான நிறுவனங்களுடன் சமீபத்திய காற்றின் தரத் தரவை மறைத்து வைத்திருப்பது தொழிலாளர்களின் ஆரோக்கியத்தை அரசாங்க பாதுகாப்பு கட்டுப்பாட்டாளர்களின் கைகளில் விட முடியாது என்பதை நிரூபிக்கிறது. இந்த ஏஜென்சிகள் பாதுகாப்பற்ற பணிச்சூழல்களின் பரவலை மறைப்பதற்காகவே உள்ளன, இது தொழிலாளர்களின் ஒவ்வொரு நலனும், அவர்களின் உயிர்கள் உட்பட, பெருவணிக இலாபங்களுக்கு அடிபணிந்ததன் நேரடி விளைவாகும். இது ஒரு அரசியல் பிரச்சினை, இது முதலாளித்துவ அரசாங்கங்கள், லிபரல்-தேசிய கூட்டணி மற்றும் தொழிற்கட்சி மற்றும் அனைத்து பாராளுமன்றக் கட்சிகளையும் உள்ளடக்கியது. உதாரணமாக, பசுமைவாதிகள், அவர்கள் எப்போதாவது தொழிலாளர்களின் பாதுகாப்பின் கூறுகளைக் காட்டிக்கொண்டாலும், முதலாளித்துவத்தின் சாராம்சமான வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துகின்றனர். மற்ற அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து, பெருநிறுவனங்களுக்கு ஒரு தொழில்துறை போலீஸ் படையாக பணியாற்றும் AWU, தொழிலாளர்களின் பாதுகாப்பை ஒப்படைக்க முடியாது. அவர்களின் ஊதியம் பெறும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்புக் காரணங்களுக்காக வேலையை நிறுத்த அதிகாரம் பெற்றவர்கள், அதற்குப் பதிலாக, வணிகச் சார்பு பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளர்களால் சிக்கல்கள் புகாரளிக்கப்பட்டு "விசாரணை" செய்யப்படுகின்றன என்ற மாயையின் கீழ் தொழிலாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்கின்றனர். சுரங்கப்பாதை திட்டங்களில் மற்றும் கட்டுமானத் தொழில் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் பணியிட பாதுகாப்பை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கு, தொழிற்சங்கங்கள் சாராமல், தரவரிசைக் குழுக்களை உருவாக்க வேண்டும். உலக சோசலிஸ்ட் இனையத்தளத்திலிருந்து கூகிள் மொழி பெயர்ப்பு உதவியினுடன்.
  21. உங்களை போலவே எனக்கொரு சந்தேகம் இந்தாளுக்கு தெரியாத நபர்களே இருக்கமாட்டார்களோ என, ஒரு முன்னாள் இராணுவ வீரர் ஒரு வேலைக்கு சேர்ந்திருந்தார், அவர் இராணுவத்தில் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்பவர். அவரிடம் மற்றவர் கேட்டாராம் எவ்வாறு வெடிகுண்டுகளை செயலிழக்க செய்கிறீர்கள் என, அதற்கு அவர் சொன்னார், அது வெகு இலகு, ஒவ்வொரு நாட்டிலும் எவ்வகையான வெடிகுண்டுகள் பயன்படுத்துவார்கள் அதனை எவ்வாறு செயலிழக்க செய்வது என்பதனை கற்பித்திருப்பார்கள் என்றார். அதற்கு நம்மவர் கேட்டார் நிங்கள் அறிந்தேயிராத வெடிகுண்டினை செயலிழக்க செய்யும் நிலமை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என அதற்கு அவர் கூறினாராம் இது நான் சந்திக்கும் கடைசி வெடிகுண்டு இல்லை என நினைத்து கொள்வேன் என்றாராம்.
  22. இந்தியாவின் மானத்தை வாங்கும் கோலிக்கு ஆதரவாக இந்திய அணி, அவுஸ்ரேலிய ஊடகத்துறையினை புறக்கணிக்கும் இன்னொரு கேவலமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியணியின் இந்த தான் தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் உடந்தையாக இருகிறதா என தோன்றுகிறது. மெல்பேர்ண் ஆடுகளம் சிட்னி ஆடுகளத்திற்கு நெருக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது, தற்போது நிலவும் அதிக வெப்பத்தினால் கடுமையாக இருக்க வாய்ப்பு அதிகம என்பதால் பந்து விரைவாக அதன் சுவிங், சீம் அனுகூலம் இலகுவாக இழக்கப்பட்டுவிடலாம் என கருதப்படுகிறது, அதனால் சுழல் பந்து வீச்சாலர்களின் பங்களிப்பும் இந்த போட்டியில் காணப்படும், முதல் நாள் ஆட்ட நாளில் வெப்பம் 40 பாகை வெப்பத்தினையும் அடுத்துவரும் நாள்களில் 20 களின் மத்தியில் வெப்பம் காணப்படும் என கூறப்படுகிறது, நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுபெடுதாடும் என கருதப்படுகிறது. அவுஸ்ரேலிய அணியில் மக்சுவேனி (புதிய தொடக்க ஆட்டக்காரர்) இற்கு பதிலாக சாம் கொன்ஸ்டாஸும் கேசல்வூட்டிற்கு பதிலாக பந்து வீச்சாளராக போலன்ட் களமிற்ங்கிகின்றனர், போலன்ட் இனது ஊர் மைதானம் இதுவாகும் இதில் அவர் முன்னர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். கடந்த இரண்டு போட்டித்தொடர்களிலும் இந்தியாவே வென்றுள்ளதால் இந்தியர்கள் இந்தியணியே வெல்லும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திய பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்துடன் ஒப்பிடும் போது அவுஸ்ரேலிய அணி மேலாதிக்கத்துடன் இருப்பதால் அவுஸ்ரேலிய அணி வெல்லவே வாய்ப்பு அதிகம், இந்த போட்டியில் மழை குறுக்கிடாது என கருதப்படுகிறது.
  23. இனப்பிரச்சினை என்பதே இல்லை, பொருளாதார பிரச்சினைதான் இருக்கு என சொல்வதனை கேட்டு எல்லோரும் நம்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் (நீங்கள் உட்பட) மட்டும் நம்ப மறுக்கிறீர்கள், ஆகையால் நீங்கள்தான் மாறவேண்டும்😁.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.