Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. 3 பாலங்கள் தகர்க்கப்பட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன், சரியாக தெரியவில்லை. உக்கிரேன் துருப்புக்கள் குறைந்த பயிற்சியுடன் இந்த சாதனைகளை செய்கிறார்கள்? கைது செய்யப்பட்ட உக்கிரேன் துருப்புகள் ஒரு வாரத்திற்கும் குறைவான பயிற்சியுடன் முன் களங்களில் சண்டை இடுகிறார்கள். இரன்டு தரப்பிலும் தொடரும் இப்போரினால் பெருமளவானவர்கள் கொல்லப்படுகிறார்கள், இரு தரப்பும் குறைந்த பயிற்சியுடன் பல அப்பாவி இளைஞர்களை பலி கொடுக்கிறார்கள், ஏற்கனவே இரண்டாம் உலகப்போரினால் பெருமளவான ஆண்கள் இறந்தமையால் இரஸ்சிய ஆண்களின் தொகையினை விட 4 மடங்கு பெண்கள் உள்ளதாக கூறுகிறார்கள். தற்போது உக்கிரேன் தரப்பு பெருமளவில் ஆளணிப்பற்றாக்குறையில் திண்டாடுகிறது, இந்த போரை நிறுத்தாமல் தொடர்ந்தால் எதோ ஒரு பகுதி தோற்றுவிடும், இதில் இந்த இரு தரப்பிற்கும் எந்த பெரிய இலாபமும் இல்லை, நட்டம் மட்டுமே மிஞ்சும் அரசியல்வாதிகள் எங்காவது ஒரு நாட்டில் இந்த போரினால் வந்த காசில் உள்ளாசமாக இருப்பார்கள் ஆனால் போரிட்டவர்கள் உடல் உள ரீதியான பாதிப்புடன் காலம் முழுவதும் வாழவேண்டியதுதான்.
  2. உங்கள் கருத்துப்படத்திற்கு நன்றி, இதுவரை காலமும் குண்டு சட்டியினை குதிரையாக நினைத்து ஒரே இடத்தில் நிற்பதை குறியீடாக குறிக்கும் (மரக்குதிரை போல) செயலைத்தான் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது என நினைத்திருந்தேன், இப்போதுதான் புரிகிறது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதைத்தான் குறிக்கிறார்கள் என.
  3. தகவலுக்கு நன்றி, இந்த பொது வேட்பாளர் முயற்சி வெற்றி அளிக்குமா என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு(அதற்கு காரணம் வேட்பாளர்கள் அல்ல இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பின்பற்றும் இனவாத போக்கு), ஆனாலும் தமக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என மிதவாத அரசியல்வாதிகள் வரலாறு முழுவதும் கூறும் குற்றச்சாட்டிற்கு நாம் ஏன் உடந்தையாக வேண்டும், மறுவளமாக இலகுவாக அரசியல் தீர்வு கிடைத்தால் சந்தோசம்தான். ஆனால் இந்த முயற்சியினை எதிர்ப்பவர்களும் இந்த மிதவாத அரசியல்வாதிகள்தான், இவர்கள் தான் 13 ஏற்காமல் விட்டதனை தவறென மூச்சுக்கு முன்னூறு தடவை கூவுபவர்கள். இந்த மிதவாத அரசியல்வாதிகளுக்கிடையேயான ஒற்றுமையின்மையினை குறிப்பிட்டிருந்தேன், இது ஒரு முரண்நகையாக உள்ளதல்லவா?
  4. இந்த ஆட்டு மந்தை செயற்பாடு ஆபத்தானது, ஆனால் இந்த பொது வேட்பாளர் கருத்தினை முதலில் முன் வைத்தது எந்த தமிழ் அரசியல்வாதிகளும் அல்ல, யாழ்கலத்தில் ரஞ்சித் இது தொடர்பாக ஆரம்பத்தில் கருத்து தெரிவித்திருந்தார், அதன் பின்னரே இது தமிழ் அரசியல்வாதிகளிடையே பேசு பொருளாகி இருந்ததாக உணர்கிறேன். எனக்கும் இந்த தேசியம் பேசி மக்களை கொள்ளை அடிக்கும் இந்த அரசியல்வாதிகளை பிடிப்பதில்லை, ஆனால் அவர்களால் முன் மொழியப்பட்ட இந்த பொது வேட்பாளரால் என்ன நன்மை வரும் என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்; ஆனால் தொடர்ந்து இணக்க அரசியல் என்று குண்டு சட்டியில் குதிரை ஓட்டும் அரசியலால் எந்த மாற்றமும் இல்லாததால் (இது பற்றி விரிவாக ரஞ்சித் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்) ஒரு மாற்று முயற்சியினை எதற்காக அந்த அரசியல்வாதிகளை பிடிக்கவில்லை (Bias) என்பதற்காக ஸ்ரியோ ரைப்பாக எதிர்க்க வேன்டும்? இதுதான் எனது புரிதல் உங்களுக்கு மேலதிகமாக இதில் ஏதாவது குறைகள் இருந்தால் குறிப்பிட்டு அதனை எதிர்த்தால் எனக்கு புரியும்!
  5. சச்சின் 16 வயதில் தேசிய அணிக்காக விளையாடினமையால் அவ்வாறு நீண்ட கால விளையாட முடிந்தது இருவரும் ஓய்வு பெறும் போது 40 எட்டி விட்டனர் அதன் பின்னர் விளையாடுவது சிரமமாக இருக்கலாம் என நினைக்கிறேன்.
  6. தமிழ் பொது வேட்பாளராக ஒரு பென் வேட்பாளர் போட்டியிட்டிருந்திருக்கலாம், 90 களில் சந்திரிக்கா கணவனை இழந்த குடும்பத்தலைவி என வாக்கு கேட்ட நேரம் வட கிழக்கில் தேர்தல் நடந்திருந்தால் நிச்சயமாக எனது வாக்கு சந்திரிக்காக இருந்திருக்கும், தமிழ் வேட்பாளரை விட அந்த நேரம் அவர் மக்களிடம் அனுதாப அலையினைக்கொண்டிருந்தார், ஆனால் வெற்றி பெற்ற பிறகு ஏதோ சொல்வார்கள் அது போல் அவரும் மாறிவிடார், ஆனால் அவர் சொன்ன குழந்தைகளை இழந்த பெற்றோரின் வலி தனக்கு தெரியும் என்றது பொய்யில்லை என இப்பவும் நம்புகிறேன். இந்த பொது வேட்பாளர் விடயத்தில் ஒற்றுமையாக செயற்பட்டிருக்கலாம், ஆனால் எமது பிரச்சினையே அதுதான்.
  7. ஜோ ரூட்டின் சராசரி 50, சச்சினின் சராசரி 53 ஆனாலும் ஜோ ரூட்டினால் சச்சின் சாதனையினை முறியடிக்க முடியும் அடிப்படையில் ஜோ ரூட்டினதும் சச்சினது விளையாட்டு முறைமை (Technic) ஒரே மாதிரியானது, இருவரும் வலது கை ஆட்டக்காரர்கள். பொதுவாக செலுத்தி ஆடும் போது (Drive) முன்னங்காலில் முழு எடையினையும் இருவரும் செலுத்துவதில்லை ஆனால் இவர்களின் சிறப்பான கணிப்பு (Timing) அதனை ஈடு செய்துவிடும். பொதுவாக செலுத்தி ஆடும்போது முன்னங்கால் 90 பாகைக்கு குறைவாக முன்னோக்கி வளைத்து அதே கோணத்தில் மட்டையின் மேல் கை முன்னோக்கி இருந்தால் கணித்தல் குறைவால் பந்தை தூக்கி அடித்து ஆட்டமிழக்கமுடியாது ஆனால் சச்சின் ஜோ ரூட் இவர்களது கணிப்பு சிறப்பாக இருப்பதால் அந்த பிரச்சினை அவர்களுக்கு இருப்பதில்லைன் ஆனாலும் இவர்கலது இந்த பலவீனத்தினை பந்து வீச்சாளர்கள் இலகுவாக குறிவைத்து இவர்களை ஆட்டமிழக்க செய்யலாம். இலங்கை அணி இடது கை துடுப்பாட்டக்காரர் குமார் சங்ககாரா இயல்பாகவே இந்த உத்தி அவருக்கு வருகிறது, இதனால் கணிப்பு தவறு ஏற்பட்டாலும் தூக்கி அடித்து அவுட்டாவதற்கான வாய்ப்பை அது இல்லாமல் செய்கிறது அத்துடன் அவரது சராசரி இந்த இருவரது சராசரியினையும் விட அதிகம் 57, அத்துடன் அவர் ஒரு விக்கட் கீப்பிங் துடுப்பாட்டக்காரர், அடம் கில்கிறிஸ்டின் சராசரி 47. முழுமையான துடுப்பாட்டக்காராக இல்லாமல் விக்கட் கீப்பராக இருந்து இவ்வாறான சிறந்த துடுப்பாட்டக்காரராக இருப்பது கடினம் இவர் 12000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். குமார் சங்ககாரவிற்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்பு முன்வைத்துள்ளேன் சேவாக்கின் 100 நிராகரித்த்மையாலோ அல்லது அவர் ஒரு பெரும்பான்மை இனத்தவராக இருந்ததாலோ என சரியாக தெரியவில்லை ஆனால் இந்த இரு ஆட்டக்காரர்களையும் (ஜோ ரூட், சச்சின்) ஒப்பீட்டளவில் கொண்டாடுபவர்கள் இவரை கண்டு கொள்ளாதது விசித்திரமாக உள்ளது. டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்களுள் அதிக சராசரி உடையவர் குமார் சங்ககாரவே, இவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கல்லிஸ் கூட ஒரு முழுநேர துடுப்பாட்டக்காராக இல்லாமல் சகலதுறை ஆட்டக்காரர், இவர்கள் இந்தியாவில் இருந்திருந்தால் வேறு விதமாக பார்க்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். https://www.espncricinfo.com/records/most-runs-in-career-223646
  8. 4 மணிநேர வரைபடம் வார வரைபடம் இரண்டாவதாக உள்ள வரைபடம் வார வரைபடம், வார, மாத வரைபடங்கள் சந்தை நிலவரத்தினை உறுதியாகக்காட்டுபவை, அவ்வாறு பார்த்தால் தற்போதய நிலைவரம் சந்தை தற்காலிக பின்னடைவு போல உள்ளது இதனை சிகப்புநிற அம்புக்குறியினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. முதலாவது படம் 4 மணிநேர வரைபடம் இந்த வரைபடம் வர்த்தகத்திற்கு பயன்படுத்திம் படம், கடந்த மாதம் நடுப்பகுதியில் விலை 5670 இலைருந்து இறங்கி இந்த மாத ஆரம்பத்தில் மிக பெரிய வீழ்ச்சி மெழுகுவர்த்தி ஒன்று 5585 ஏற்பட்டுள்லது, இந்த 5585 கடைசி உயரம்(lower high) தற்போது விலை இந்த நிலையினை எட்டுகிறது, இது ஒரு முக்கியமான எல்லை பிராந்தியமாக உள்ளது விலை ஏறுவதற்கு இந்த 5585 கடந்தாக வேண்டும் இல்லாவிட்டால் விலை மீண்டும் கீழிறங்கலாம். மேலே உள்ள படங்கள் 7 நாளில் காலாவதியாகிவிடும்.
  9. வட இந்தியர்களின் திருமணத்தில் மணமகன் கையில் இப்படி வாளை கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.
  10. இது சும்மா தட்டி வைப்பது மாதிரி, உண்மையில் செலன்ஸ்கியினை ஒன்றும் மேற்கால் செய்ய முடியாது, மேற்கு சித்துவிலையாட்டுகள் எல்லாம் சிங்கனுக்கு தெரியும் (மேற்கின் குடும்பி இப்போது செலன்ஸ்கியின் கையில்). இந்த காணொளியில் கூறுவதுமாதிரியெல்லாம் மேற்கு செய்ய முடியாது என நினைக்கிறேன்.
  11. நீங்கள் விளையாட்டுக்கு இப்படி எட்டி பார்த்ததாக எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன், ஆனால் விளையாட்டிற்கு கூட சகிக்கமுடியவில்லை.
  12. மேற்கு கைவிட்டால் இரஸ்சியாவிற்கு செலன்ஸ்கி போகக்கூடும், ஆனால் அப்படி மேற்கு செய்யாது, செலன்ஸ்கிக்கு மேற்கு பாதுகாப்பு உத்தரவாதம் அழித்து மத்திய கிழக்கு போன்ற ஏதேனும் நாட்டிற்கு அனுப்பி வைக்கலாம். ஆனால் திடீரென பழைய விடயங்களை மேற்கு தூசு தட்டுகிறது, கோத்தாவிற்கு நிகழ்ந்த மாதிரி நிகழலாம், அவசரத்திற்கு எல்லை ஓரமாக இருக்கிற இந்த கேர்க்ஸ் பிராந்தியம் வசதியாக இருப்பதால் இந்த ஊடுருவல் நடவடிக்கையாக இருக்கலாம், எதற்கும் ஒரு கை காவலா😁.
  13. தற்போதுள்ள நிலையில் தேசத்திற்கு செய்யக்கூடிய ஒரே ஒரு நல்ல வேலை, இந்த திருடர்களை இனங்காட்டுவதுதான். பூனைக்கு மணி கட்டுவது யார்?
  14. சிறிய நட்டத்துடன் பிட் கொயின் விற்பனையினை மூடி விட்டு அதே விலையில் 58155 இல் வாங்கியுள்ளேன், 58700 இனை விலை உயர்ந்தால் 60000 இல் இலாபம் எடுப்பது என முடிவு செய்துள்ளேன்.
  15. தற்போது உக்கிரேனின் இரஸ்சிய ஊடுறுவலுக்கே சரியான காரணம் தெரியவில்லை.
  16. பிட் கொயின் 60000 வரை உயர்ந்து தற்போது 575000 முக்கிய நிலையில் இருந்து கீழிறங்கிறது, மீண்டும் 58000 வில்லை அண்மிக்கும் போது பிட் கொயினை விற்கவுள்ளேன், பாதுகாப்பு வெளியேற்றம் 58700 (Stop loss), US S&P 500 தற்போது 5540 களில் உள்ளது இதன் விலை 5400 கீழிறங்கினால் விற்பது அல்லது 5400 இல் விலை மீண்டெழுந்தால் வாங்குவது என தீர்மானித்துள்ளேன்.
  17. இது ஒரு ஆப்பிழுத்த குரங்கின் நிலை உக்கிரேனுக்கு, நான் நினைக்கிறேன் இரஸ்சிய போர் கைதிகளையும் இரஸ்சிய மக்களின் விடுதலைக்கு மாற்றீடாக உக்கிரேன் படையினர் பாதுகாப்பாக பின் வாங்க அனுமதிக்க வேண்டும் என இரகசியமாக கோருவார்கள் என நினைக்கிறேன்.
  18. கதை சுவாரசியமாக இல்லை, தொடர்ந்து வாசிக்க முடியவில்லை.
  19. மக்களை கேடயமாக வைத்து உக்கிரேன் இராணுவம் பின்வாங்கும் தந்திரோபாயமாக இருக்கலாம்.
  20. 325 பக்க அறிக்கையில் எவ்வாறு இரஸ்சியாவினை பலவீனப்படுத்துவது என ஆராயப்பட்டுள்ளது. 1. பொருளாதார ரீதியாக - பொருளாதார தடை, எரிபொருள் விலையில் வீழ்ச்சி ஏற்படுத்துதல், பெலரஸில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தல். 2. பூகோள அரசியல் - உக்கிரேன், சிரியாவில் இரஸ்சியாவிற்கு எதிரான சூழ்நிலைகளை உருவாக்கல். 3.இராணுவ ரீதியான - இரஸ்சியாவிற்கெதிராக ஐரோப்பா நேட்டோ உதவியினூடாக இராணுவ அச்சுறுத்தலை உருவாக்குதல் 4.இரஸ்சியாவின் ஸ்திரத்தன்மையினை குலைத்தல் - அரசிற்கெதிராக சீர்குலைக்கும் நடவடிக்கைகளை ஏற்படுத்தல். இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மத்தியவங்கி தாக்குதல் (பொருளாதார இலக்கு), கூட்டுப்படை தலைமையகத்தாக்குதல் (இராணுவ இலக்கு) கொலன்னாவ தாக்குதல் (பொருளாதார இலக்கு), இந்த பெரிய தாக்குதல் தவிர சிறிய தாக்குதல்கள் அரசியல் தலைவர்கள் இராணுவ தலைவர்கள் கொலைகள் என்பன புலிகளின் பயங்கரவாத தாக்குதல் என மேற்கால் வகைப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் கூட ஏதோ ஒரு வகையான இராணுவ, பொருளாதார, அரசியல் நோக்கம் கொண்டனவாக இருந்தது, ஆனால் இந்த தாக்குதல் நீங்கள் கூறுவது போல ஒரு திசை திருப்பத்தாக்குதலுக்க்காக நல்ல பயிற்சி பெற்ற ஒரு டிவிசன் படையினரை வழங்கல் அற்ற ஒரு பகுதிக்குள் அனுப்பியது உக்கிரேன் படையினை நீண்ட காலத்தில் பலவீனப்படுத்தும் ஒரு முயற்சி, நிச்சயமாக இராணுவ அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள்.
  21. இந்த திரைப்படம் இனையத்தில் உள்ளது, பிரசாந்தின் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினால் என சில படங்கள் பார்த்ததுண்டு, அதுதவிர அவரது விசிறியெல்லாம் கிடையாது, ஆனால் அவரது மீண்டு வரும் படம் என்பதால் ஆர்வக்கோளாறில் இந்த திரைப்படத்தினை தரமான பிரதி வரும் வரை பொறுத்து பார்க்கும் பொறுமையின்றி இணையத்தில் தரவிறக்கி பார்த்தேன். சத்திய ஜித்திரே என நினைக்கிறேன், படத்தின் ஆரம்பத்தில் துப்பாக்கியுடன் வீட்டின் வாசலில் ஒருவர் தோன்றினால் படம் முடியும் போது அந்த துப்பாக்கி சுடப்படுவதாக முடிய வேண்டும் என கூறியதாக கேள்விப்பட்டுள்ளேன், பல திரைப்படங்களில் இந்த முறைமையினை பின்பற்றி படம் எடுக்கப்பட்டிருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் ஆரம்பக்காட்சி மறந்துவிடும் திரைப்பட இறுதியில். இந்த திரைப்படத்திலும் ஆரம்பக்காட்சியில் முயல் வேட்டைக்காரர் துப்பாக்கியுடன் தோன்றுகிறார், திரைப்படத்தின் இறுதியில் அந்த துப்பாக்கி வெடிக்கும் அதில் ஒரு திருப்பம் காணப்படும். ஆனால் இத்திரைப்படத்தில் இறுதிக்காட்சி நெருங்கும் போதே அந்த ஆரம்பக்காட்சி இங்குதான் வரப்போகிறது என பார்வையாளர்கள் உணரும் வண்ணம் காட்சி அமைத்துள்ளார்கள். ஆரம்பத்தில் காட்சியமைப்பினூடு கதாபாத்திரன் தன்னை பார்வையற்றவராக காட்டிக்கொள்வதனை எந்த வித குற்ற உணர்ச்சியுமில்லாதவராக காட்டுவதற்காக காட்சி அமைக்கப்பட்டிருந்தது போல தோன்றினாலும் பின் பாதியில் அவரது நிலைமாற்றம் செயற்கைதனமாக தோன்றுவது போல இருப்பதற்கு பின்பாதி காட்சி அமைப்பு பெரிதாக ஈர்க்கவில்லை என கருதுகிறேன், பிரசாந்திற்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பான படமாக இருந்தும் அதனை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதாக எனதளவில் உணருகிறேன், ஆனால் சிம்ரன், சமுத்திரக்கனி நடிப்பு சிறப்பாக இருப்பது போல உணர்கிறேன். படம் விறு விறுப்பாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.