Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. ரஞ்சித் கூறுவது சரிதான், எப்போதும் பிச்சைக்காரர்களுக்கு தெரிவு இருப்பதில்லை எனும் நிலையில்தான் இலங்கை உள்ளது, இலங்கையினால் IMF இனை தவிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம், ஒரு காலத்தில் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இலங்கை தரப்பு தற்போது கடன் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது(இதுவும் ஒரு வகை அமைதிப்பேச்சுவார்த்தைதான்😁). இலங்கை கடனை திருப்பி செலுத்த தவறிய நிலையில் ஐ எம் எப் இன் உதவியினை நாடியுள்ளது, ஐ எம் எப் இலங்கை தரப்பினையும் கடன் கொடுத்தோரையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிக்கிறது. கடனினை செலுத்த தவறியதால் இலங்கை அரசு மேலதிகமாக கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது, அதனால் பல அடிப்படை அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இலங்கை அரசு ஐ எம் எப் உடன் உடன்படிக்கை மூலம் நிதியுதவியினை பெற்றுக்கொண்டு அதன் மூலம் தனது தேவைகளை பூர்த்தி செய்தது, இந்த இடைப்பட்ட காலத்திற்குள் கடன் வழங்குனர்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்தி மீண்டும் கடன் பெறுவதற்காக கடன் மறு சீரமைப்பு மூலம் அதனை எட்டுவதுதான் இலங்கை தரப்பினது நோக்கம், இது பல கடனை உடைய ஒருவர் அதனை ஒரே ஒரு ஒரு தனிப்பட்ட கடன்(Personal loan) மூலம் எட்ட முயற்சிப்பது போலாகும், தனிப்பட்ட கடனில் வட்டியும் முதலும் ஒரே அளவாக தவணை அடிப்படையில் செலுத்தவேண்டும் ஆனால் இங்கு கடன் மீழழிப்பு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் (Macro Linked Bonds). இலங்கை அரசு 30 விகித கடன் தள்ளுபடியினை வலியுறுத்துகிறது(Haircut), அண்மையில் இலங்கை அமைச்சர் அலி சப்ரி 17 பில்லியன் கடன் தள்ளுபடி கிடைக்கலாம் என கூறியுள்ளார். கடன் கொடுத்தோர் இந்த கணிப்பீடினை (Macro Linked Bonds) இலங்கைக்கு சார்பான ஐ எம் எப் இன் கணிப்பு அல்லாமல் மாற்றீடான கணிப்பினை வலியுறுத்துகிறார்கள். இலங்கை தரப்பு பொருளாதார வளர்ச்சி ஏற்படாமல் எதிர்பாரா பொருளாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு கடன் செலுத்தும் திட்டம் இருக்கவேண்டும் என கோருகிறது (குடுத்த கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுக்கக்கூடாது😁). ஆனால் இலங்கை; எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியினை விட அதிகமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டால் அதற்கேற்ப திருப்பி செலுத்தும் தொகையினை அதிகரிக்க கூடாது என இலங்கை நிபந்தனை வைக்கிறது இது கொஞ்சம் வடிவேலுவின் எனக்கு வந்தா தக்காளி சட்னி உனக்கு வந்தா இரத்தம்தான் (கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தனின் நிலையில் இலங்கைக்கு கடன் கொடுத்தோரின் நிலை😁). இந்த கடன் மறு சீரமைப்பில் உண்மைத்தன்மையாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருந்தாலே முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை பெறமுடியும் ஆனால் இலங்கை இதுவரை வரலாற்றில் இல்லாத முறையில் சீனாவுடன் ஒரு உடன்படிக்கையும் (சீனாவுக்கு சாதகமாக) மற்ற தரப்புகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு முயற்சிக்கிறது இது நிலமையினை சிக்கலாக்கும். 2027 இல இந்த புதிய பணமுறி வெளியிடப்படும் என்பதாக நினைவுள்ளது அதுவரை இலங்கை கடனை திருப்பி செலுத்தாமல் சந்தோசமாக செலவு செய்யலாம் அதுவரை இலங்கைக்கு தேவையான 2.9 பில்லியன் கடனை (சரியாகநினைவில்லை) பகுதி பகுதியாக ஐ எம் எப் வழங்கும், இங்கு ஐ எம் எப் இனை துரத்தினால் இலங்கை 2027 வரை தாக்குபிடிக்கமுடியாது (இலங்கையில் மீண்டும் மக்கள் மாட்டு வண்டியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் (உல்லாச பயணிகள் முன்பு மாட்டு வண்டியில் பயணித்ததுபோல😁) அத்துடன் கடன் மறு சீரமைப்பும் தடைப்பட்டுவிடும், இதனால் இலங்கைக்கு வேறு தெரிவில்லை ஆனால் 2027 பின் துரத்தினால் பிரச்சினை இல்லை என கருதுகிறேன் (இலங்கை அதை செய்யும் என நம்புகிறேன், அந்த வரலாற்று சாதனையினை இலங்கை படைத்தால் உலகம் முழுவது இலங்கையினை பார்த்து வியப்பார்கள்😁),
  2. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பார்கள், ஏற்கனவே அமெரிக்க கவச வாகனங்கள் உக்கிரேன் போரில் மோசமாக அடிவாங்கி அதன் பெய்ர் பாதிக்கப்பட்டிருக்க அது பத்தாது எண்டு செலன்ஸ்கி அமெரிக்க விமானங்களுக்கும் எப்படியாவது அவ்வாறான நல்ல பெயர் வாங்கிக்கொடுக்க துடிக்கிறார், இதில ஆயுதத்தை இப்ப விக்காட்டில் கொஞ்ச காலத்திற்கு பிறகு 50% கழிவு 80% கழிவு என பிளக் பிரைடே சேல்ஸ் மாதிரித்தான் விற்கவேண்டி வரும்😁. அல்லது போர் தீவிரமாகும்போது டிமாண்ட் அதிகரிக்க, அதிகரித்த விலையில் விற்பதற்காக அமெரிக்கா தற்போதய விற்பனையினை நிறுத்தி வைத்திருக்கலாம்😁.
  3. இலங்கை படையினர் ஒருவர் உக்கிரேனுக்காகவும் போரிட்டு இறந்ததாகவும் அவருக்கு அந்த மக்கள் அஞ்சலி செலுத்தியததாகவும் யாழில் செய்தி வந்திருந்தது. இலங்கை படையினரை தனது அமைதி முயற்சிக்கான ஐ நா படையில் இணைத்துக்கொள்ள அங்கே போய் (ஆபிரிக்க நாடுகளில் ஏதோ என்று என நினைக்கிறேன்) தமது மனித உரிமை மீறலை செய்து ஐ நாவிற்கும் லங்கா மாதாவிற்கும் பேரும் புகழும் பெற்றுக்கொடுத்த படையினரை இணைத்து இன்னும் எத்தனை மனித உரிமை மீறல்களுக்காக ரஸ்சியாவும் உக்கிரேனும் சொந்த செலவில் சூனியம் செய்கிறார்கள்?
  4. இந்த பகுதியில் கூலி வேலைகளுக்கு சென்றுள்ளேன், காலை உணவாக அவித்த மரவள்ளி கிழங்கும் பிளேன்ரியும் (கட்டன் சாயா என அழைப்பார்கள் என்பதாக நினைவுள்ளது?) வழங்குவார்கள்.
  5. கோசன் பதிவிட்ட கருத்தினை கொண்ட திரியினை தேடிய போது கண்ட இன்னொரு திரி (அந்த திரி காணவில்லை), இதில் இலங்கை சீனாவுடன் ஒரு ஒப்பந்தினையும் மற்ற கடன் வழங்கும் நாடுகளுடன் இன்னொரு ஒப்பந்தத்திலும் ஈடுபட முனைவதாக கூறப்படுகிறது.
  6. https://www.bilibili.com/video/BV1hH4y1N7SS/?buvid=YA41D4A2800104D54100BF395D146E754284&from_spmid=main.space-contribution.0.0&is_story_h5=false&mid=OtB05gw9mksSY4DcBCOFBA%3D%3D&p=1&plat_id=116&share_from=ugc&share_medium=iphone&share_plat=ios&share_session_id=3843C766-F363-41B0-AAA2-2A6EB38AD0A4&share_source=COPY&share_tag=s_i&spmid=main.ugc-video-detail.0.0&timestamp=1713860897&unique_k=UjFf8MR&up_id=249228804 இலங்கையில் வாழ்க்கை செலவு அதிகம் என்பதாக குறிப்பிடப்படுகிறது இந்த காணொளியில் அதன் பின்னூட்ட பகுதியில் மிகவும் சுவாரசியமான ஆனால் பக்கசார்பற்ற கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன. இலங்கையில் வெளித்தெரியும் பிரச்சினைகளை மூடி மறைக்கும் பூச்சு வேலைகளில் இரங்குவதில் கவனம் செலுத்துகின்றனர் இதன்போது ஏற்படும் பாதிப்புகளின் ஒரு பகுதியாக இந்த விவசாயிக்ள் பாதிப்படையக்கூடும் திட்டமிட்டு விவசாயிகளை பாதிப்படைய செய்கிறார்களா எனத்தெரியவில்லை. நீங்கள் கூறுவது விளங்கவில்லை, அல்லது தவறுதலாக வேறு திரி கருத்தினை பதிந்துவிட்டீர்களா?
  7. இந்த விடயத்தினை கோசான் அந்த திர்யில் மேற்கோள் காட்டியிருந்தார், பொதுவாக அந்த திரியில் முக்கியமான பகுதியே அந்த குறிப்பிட்ட பகுதிதான் கோசான் மேற்கோள் காட்டி தனது கருத்தினை தெரிவித்திருக்காவிட்டால் என்னால் அதனை கவனித்திருக்க மாட்டேன் எனவே நினைக்கிறேன், ஆனால் அந்த திரி நினைவில்லை.
  8. உங்களது இணைப்பு மொழி ஜேர்மைனில் உள்ளது என நினைக்கிறேன், கோவிட் தடுப்பூசிகளுக்காக பல நாட்டரசுகள் தமது வரிப்பணத்தினை இந்த நிறுவனத்திற்கு வழங்கியிருந்தார்கள், இதில் அஸ்ரா செனிக்கா மட்டுமே தனது உற்பத்தி செலவுடன் தடுப்பூசியினை வழங்க பைசர் போன்ற நிறுவனங்கள் இலாபமீட்டியிருந்தனர்.
  9. இது தற்போதய அரசின் ஒரு தந்திரம் உண்மையான நீண்டகால தொலைநோக்கோடு உள்நாட்டு அபிவிருத்தியினை ஏற்படுத்த உள்நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்காமல் குறுங்காலத்தில் இறக்குமதி மூலம் அத்தியாவசிய பொருள்களின் விலையினை குறைத்து மக்கள் வாழ்க்கை செலவினை குறைத்து இரணில் அரசு நிலமையினை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது எனும் ஒரு மாயையினை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெறுவதனை நோக்கமாக கொண்டு செய்யப்படுகிறது. இதனால் நீண்டகால பாதிப்பு ஏற்படுவதனை தவிர்க்கமுடியாது, இலங்கை தொடர்ச்சியாக இந்த் நச்சுவட்டத்திலேயே தொடர்ந்திருக்கும்.
  10. கடன் மறுசீரமைப்பு மூலம் செய்யப்படுவது, ஆனால் இதனால் அதிகளவில் பாதிப்புள்ளாகும் நாடுகள் இலங்கைக்கு அதிகளவில் கடன் கொடுத்த சீனா அல்ல கொஞ்சகாலத்திற்கு முன்னர் பாரிஸ் கிளப் சந்திப்பிற்கு முன்னராக சீனாவுடன் மட்டும் தனியாக இலங்கை ஒரு உடன்பாட்டிற்கு வந்திருந்தது, இதனை இலங்கைக்கு கடன் வழங்கியிருந்த நாடுகளின் சார்பாக இந்தியா தனது கண்டனத்தினை தெரிவித்திருந்த்தது (இது கடந்த ஆண்டு நிகழ்ந்தாதாக நினைவுள்ளது) அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானிய அமைச்சர் இலங்கை வெளித்தன்மையாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். சுருக்கமாக கூறுவதாயின் இலங்கைக்கு அதிக கடனை கொடுத்த சீனாவுக்கு சாதகமாக எந்த வித கழிவுகளும் இன்றி இலங்கை கடன் மறு சீரமைப்பு செய்து ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் தலையில் இலங்கை மிளகாய் அரைக்க உள்ளது. கடன் கொடுத்தவர்களுக்கு வேறு தெரிவு இல்லை, நட்டம் அவர்களுக்குதான், ஆனால் ஒன்றுமில்லாமல் போவதைவிட ஏதோ கிடைக்கிறதே என சந்தோசப்படவேண்டியதுதான்.
  11. ஒரு புறம் பாரிய அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை கொடுத்துக்கொண்டு மறுபுறம் பொதுமக்களை கொல்லவேண்டாம் என கண்துடைப்பு நாடகம் நடத்தும் அமெரிக்க அரசு எதற்காக பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறது என தெரியவில்லை இதே போலவே இலங்கையிலும் பொதுமக்கள் அழிவிற்குக்காரணமான ஆயுதங்களையும் பயிற்சிகளையும் இந்த தரப்புகளே வழங்கியது, இரஸ்சியாவுடனான யுத்தத்திற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இரஸ்சியாவினால் பாதிப்பு ஏற்படலாம் என நியாயம் கூறினால் இலங்கையிலும் பலஸ்தீனத்திலும் நிகழ்த்தபட்ட, நிகழ்த்தப்படுகின்ற படுகொலையினால் அமெரிக்காவிற்கு என்ன இலாபம் என்பது புரியவில்லை. அமெரிக்கா புதிதாக உலகை அழிப்பதற்கு புதிய ஒரு திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளதா? அல்லது அமெரிக்க உலக ஒழுங்கிற்கு வைரஸ் வந்துவிட்டதா? உண்மையில் அமெரிக்க குடிமக்கள் தம் கண்ணுக்கு முன்னால் நிகழும் படுகொலைகளை கண்டும் காணாமல் இருக்கும் சிந்தனையற்றவர்களாக இருப்பார்களா? எனும் சந்தேகமாக இருக்கின்றது (அவர்களது வரிப்பணத்தில்தான் இந்த படுகொலைகள் நிகழ்கின்றது அதனால் அவர்களும் இதற்கு தார்மீக பொறுப்புள்ளவர்கள்). குறைந்த பட்ச எதிர்ப்பாக இந்த இடது சாரி அரசினை வரும் தேர்தலில் தூக்கியெறியவேண்டும் அதையாவது செய்வார்களா? ஆனால் எந்த அரசு வந்தாலும் அவர்களது கொள்கைகளில் பெரிதாக மாற்றம் வராது ஏனெனில் எரியிற வீட்டில் பிடுங்குவதுதான் அவர்களது கொள்கை.
  12. இதுவும் ஒருவகை உருவக்கேலிதான். அவரது மீசை அவருக்கு மூக்கரிப்பினை ஏற்படுத்தியிருக்கலாம்.
  13. இதனை படிக்கும் போது எனக்குள் ஒரு சிரிப்பு வந்தது😁. நானும் சும்மா நகைசுவைக்காவே அவ்வாறு எழுதுவது (இப்போதெல்லாம் சீரியசாக எதனையும் பார்க்க முடியுதில்லை😁). இலங்கை விமானநிலைத்தில் பதற்றம் எனும் திரியில் பதிவிட்டுள்ளேன். எனக்கு இலங்கை 5 ஆம் இடத்தில் சுற்றுலா செல்லும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது என்பதில் ஏதோ சிறிலங்கன் சுத்துமாத்து செய்துவிட்டார்கள் என்றே என்னை பொறுத்தவரையில் கருதுகிறேன். குறையாக கூறவில்லை நான் உணர்ந்ததினை நேர்மையாக கூறிவிட்டேன் அது ஒவ்வொருவர் நிலைக்கு ஏற்ப வேறுபடலாம் ஆனால் உங்களது பயணக்கட்டுரைக்கும் எனது ஏமாற்றத்திற்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என பொய் சொல்லமாட்டேன்😁.
  14. நீங்கள் கூறுவது சரிதான், நான் முதல் தடவையாக இலங்கை விமான நிலையத்தினூடாக பயணித்தேன் அத்துடன் அது ஒரு சுற்றுலா பயணமும் இல்லை, அத்துடன் நான் பழழையதை மறந்த மோசமான மனிதனாகிவிட்டேன் என நினைக்கிறேன். நான் இலங்கையினை விட்டு வரும்போது ஒரு வெளிநாட்டவர் நான் இலங்கையர் என கருதி விமானநிலையத்தில் அவருக்குள்ள அசெளகரியங்களை குறிப்பிட்டார் (அது உண்மையில் எனக்கு பேரிய விடயமாக இருக்கவில்லை) அதில் ஒன்று கழிவறை சுத்தமற்று ஈரமாக இருப்பதும், கை உலர்த்துவதற்கு வசதி இல்லை எனவும் குறிப்பிட்டார், அதற்கு இலங்கையர்களின் பார்வையில் ஏன் அவ்வாறு இருக்கிறது என விபரித்தேன், கழிவறையில் தண்ணீர் வசதி இருப்பதால் ஒவ்வொருவரும் அதனை பயன்படுத்துவதற்கு முன்னர் தாமாக சுத்தம் செய்வதும், ஒவ்வொருவரும் கைகுட்டை பாவிப்பதும் காரணமாக இருக்கலாம் என. ஒவ்வொருவரது அனுபவங்களும் எதிர்பார்ப்புகளும் வேறுபடலாம், ஆனால் மேலே நான் நகைசுவையாகவே பதிவிட்டேன் ஆனால் அந்த பதிவு ஒரு பதற்றநிலையினை ஏற்படுத்தும் என நம்பவில்லை (நீங்கள் சிறீலங்கன் விமானத்தரை இறக்கம் பற்றிய செய்திக்கான பதிவினை இதில் இட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்). அத்துடன் சுற்றுலா பயணங்களில் பெரிதாக ஆர்வமும் இல்லை, முன்பு சாகச விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது அதுவும் இப்போது இல்லை, பெரிதாக சுற்றுலா போவதற்கே விருப்பம் இல்லை, குழந்தைகளுக்காக போவது மட்டுமே, இவ்வாறான அனுபவங்கள் என பெரிதாக ஆர்வம் இல்லை.
  15. சம்பந்தமில்லாத கருத்துக்களின் மூலம் இறந்துபோன உங்கள் திரியின் உயிர்ப்பிக்க முயற்சிப்பது போலுள்ளது, உங்கள் திரியினை வாசித்துவிட்டு இலங்கை தொடர்பான கனவுடன் இலங்கை சென்ற எனக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ததை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். என்னிடம் இலங்கை சுற்றுலாவுக்காக எனது கருத்தினை எதிர்பார்க்கும் வெளிநாட்டவர்களிடம் எதற்காக இலங்கையினை தெரிவு செதீர்கள் என்பதற்கு பெரும்பாலான பதில்கள் இணையத்தில் உள்ள கருத்துகளாக இருப்பதனை அவதானித்துள்ளேன். இவ்வாறு மிகைப்படுத்தப்படும் கருத்துகளால் பின் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும்.
  16. சர்வதேச விமானநிலையத்தில் வைத்து தரக்குறைவாக ந்டக்குமளவிற்கு முட்டாள்களாகவா இருப்பார்கள்? அவர்களது விமானநிலையத்தில் இராணுவத்தினரை பணிக்கமர்த்துவதனால் இலங்கைக்கு சாதகம்தானே (தண்டமாகத்தானே இருக்கிறார்கள் எதுக்கு வீணா சம்பளம் கொடுத்து முகாமில் வைத்து பராமரிப்பதற்கு)? அவர்கல் தமிழர் பிரதேசத்தில் இருந்து தொல்லை கொடுக்காமல் அவர்கள் தலைநகரத்தில் இருந்து புலம்பெயர் தமிழருக்கு தொல்லை கொடுத்தால் பரவாயில்லைதானே. அண்மையில் ஒரு தவிர்க்கமுடியாத காரணத்தினால் (ஒரு துயர நிகழ்வொன்றிற்காக) 4 - 5 நாள்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன் மிக நீண்டகாலத்தின் பின்னர், பேனா எடுத்து செல்லவில்லை கணனியில் பதிவு செய்து சென்றேன், கடமையில் இருந்த பெண்மணி குடிவரவு அட்டையினை கேட்டார் கனனியில் பதிந்தாகக்கூறினேன் எந்த தொல்லையுமில்லை.
  17. அங்கு பெருமளவில் சுற்றுப்பயணம் செய்வது எம்மவார்கள், அதனால் இராணுவத்தினர் தமிழில் கதைப்பார்கள் ஏனென்றால் நிலமை அப்படி. இந்த குடிவரவு அட்டையினை நிரப்புவதற்கு பேனா கூட அந்த விமான நிலையத்தில் இருக்காது, பேசாமல் அங்குள்ள கணனியில் ETA இலக்கத்தினை பதிவிட்டால் அனைத்து விபரமும் கணனி திரையில் தோன்றும் தேவையான மாற்றம் (மாற்றம் இருப்பின் மட்டுமே) செய்து அதனை பதிவு செய்தால் இலகுவாக ஒரு நிமிடத்தில் செய்துவிடலாம். ஆனால் பெரும்பாலும் குடிவரவு அட்டைகளை நிரப்புவர்களாக உள்ளார்கள்.
  18. போராட்டத்தினை வேண்டாம் என கூறவில்லை, ஆனால் எதிர்காலத்தில் இவ்வாறான சமூக அக்கறையுள்ளவர்கள் உயர் பதவிகளில் வருவதற்கு இடையூறாக தற்போதய நடவடிக்கைகள் அமைந்துவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும். பெரும்பாலும் கல்விகற்றவர்கள் உயர்பதவிகளை சுயநல அடிப்படையிலேயே குறிவைப்பார்கள், பின்னர் அவர்கள் ஊழல் போன்ற நடவடிக்கையிலும் ஈடுபடுபவர்களாகவும் மாறுகின்ற நிலை ஏற்படும். சமூக சிந்தனை உள்ளவர்கள் இந்த உயர்பதவிகளை பெற்றால் தேவையற்ற களைகள் சமூகத்தலைமைகளை பெறுவதனை தடுக்கலாம். உங்களிடம் ஒரு கேள்வி, சமுக சிந்தனை கொண்டவருக்கு சார்பாக கருத்திட்ட என்னிடம் கேள்வி கேட்ட நீங்கள், அவரையும் அவரது போராட்டத்தினையும் கேவலப்படுத்துகின்ற கருத்தாளர்களிடம் ஏன் எந்த கருத்தினையும் கூறவில்லை?
  19. சமூக நீதிக்காக போராடுபவர்கள் சுயநலமாக இருப்பதில்லை, ஆனால் இதனால் இப்படியானவர்கள் மற்றவர்களுக்காக சில வேளைகளில் தமது கல்வி, எதிகாலம் என்பவற்றை தூக்கி எறிந்துவிடுவார்கள், அப்படி இல்லாமல் தனது கல்வியினை இந்த குழந்தை சிறப்பாக முடித்து எதிர்காலத்தில் ஒரு மிக சிறந்த ஆளுமை நிறைந்த தலைமத்துவங்களை பெற்றால் சமூகத்திற்கும் மிக உதவியாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.