Everything posted by புலவர்
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
-
கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பையனை மீண்டும் களத்தில் கணடது மகிழ்ச்சி.பையா எங்கே போயிருந்தீர்கள். இவ்வளவு நாளும்.- ‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
https://x.com/news18tamilnadu/status/1973688182236475601?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A- ‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
- சித்தி முன்னாடியே 2 கான்ஸ்டபிள்களும்.. நம்ம தமிழகத்தில் வேலியே பயிரை மேயுதே.. திமுக அரசுக்கு கண்டனம்
எங்கே ஐயா ஸ்டாலினின் இரும்புக்கரம்?திராவிட மாடல் ஆட்சி சிற்ப்பாக நடக்கிறது.- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
பிராமணரான ஸ்ரீதர் வேம்பு தனது தகவல் பரிமாற்ற செயலிக்கு 'அரட்டை' என்று தமிழில் பெயர் வைக்கிறார். தமிழைப் பேசிப் பிழைத்த திராவிடவாதியான கருணாநிதி குடும்பம் தங்களின் தொலைக்காட்சிக்கு சன் டிவி என்று பெயர் வைத்தது. சங்க காலத்திலிருந்து தமிழ் வளர்க்கும் பிராமணர்களை தமிழர்கள் அல்லாதவர்கள் என்று போலியாகக் கட்டமைக்கும் ஆரிய திராவிட இனவாத அரசியல் ஒழிக்கப்படவேண்டும்.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
கரூர் சம்பவத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அனுப்பியிருப்பது சில செய்திகளை சொல்கிறது. கரூர் துயர சம்பவத்துக்கு திமுக காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் எல்லார் மனதிலும் இருக்கிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு நண்பரிடம் இந்த செய்தியை சொன்னபோது அவரது முதல் ரியாக்ஷன் திமுகவை பற்றி தான் இருந்தது. ஏரியா மளிகை கடை அண்ணாச்சி திமுகவை வறுத்தெடுத்து விட்டார். மக்கள் செண்டிமெண்ட் விஜய் பக்கம் தான் இருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது. விஜய் பக்கம் தவறு இருக்கிறது என்றாலும் அதை மன்னிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். திமுகவின் வேகமான நடவடிக்கைகளே அவர்களுக்கு வில்லனாகி போனது. கரூர் அரசு மருத்துவமனையின் முதல் விஷுவல் காட்சிகளை மக்கள் பார்க்கும் பொழுது அங்கெ செந்தில்பாலாஜி இருந்தது, அடுத்த ஒரு மணி நேரத்தில் அன்பில் மகேஷ் அங்கெ வந்தது, சென்னையில் முதல்வர் தலைமை செயலகம் சென்றது, சம்பவம் நடந்து முழுமையாக இறப்பு எண்ணிக்கை கூட வெளிவருவதற்கு முன்னதாக 10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. அதையடுத்து உடனடியாக ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது, இரவோடு இரவாக ஸ்டாலின் கரூர் வந்தது, துபாயிலிருந்து உதயநிதி வந்து சென்றது என திமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் ஜெட் வேகத்தில் துல்லியமாக இருந்தது. அந்த அதீத துல்லியமே சந்தேகப்பட வைத்தது. இதே திமுக ஆட்சியில் நடக்கும் மற்ற பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுங்கள் என்று பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் தொண்டை தண்ணீர் வத்த கத்திய போதும் கண்டுகொள்ளாத ஸ்டாலின் அரசு, இந்த சம்பவத்தில் யாருமே எதையுமே கேட்கும் முன்னர், எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டது. திமுக இவ்வளவு விரைவாக செயல்படுவதிலேயே சந்தேகம் பலமானது. தனது துரித செயல்பாடுகள் மூலம் ஒட்டுமொத்தமாக விஜயின் மீது பழி போட்டுவிடலாம் என்கிற திமுகவின் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் மண்ணை வாரி போட்டன. எடப்பாடி, சீமான் இருவருமே அடக்கி வாசித்தனர். உச்சமாக அண்ணாமலையின் பிரஸ்மீட் மக்களின் பார்வையை ஒட்டுமொத்தமாக திமுக பக்கம் திருப்பியது. அரசு, மக்கள், விஜய் என்று அனைவர் மீதும் குறை சொன்னவர், அரசின் நிர்வாக தோல்வியை தெளிவாக சுட்டிக்காட்டியதை கட்சி பாகுபாடின்றி மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அந்த பக்கம் திமுகவும் தன் பங்குக்கு அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளை இறக்கி விட்டது. அரசின் மீது எந்த தவறும் இல்லை, விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் மீது தான் மொத்த தவறும் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த வாதத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் அண்ணாமலை சொன்னது போல் மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டரை சஸ்பெண்ட் செய்திருந்தால் கூட ஓரளவு திமுக பக்கம் நியாயம் இருந்திருக்கும். நேற்று வரை விஜய்க்கு தனது பூரண ஆதரவை வழங்கிய மீடியா அப்படியே யூடர்ன் போட்டது. கரூர் பிரச்சார காட்சிகளை வைத்து தவறு எங்கே நடந்தது என்று விசாரணை ஆரம்பித்தார்கள், விஜய் ரசிகர்களின் அடாவடிகளை தொடர்ச்சியாக ஒளிபரப்பினார்கள். இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பி வந்தார்கள். திமுகவின் தொடர் நடவடிக்கைகளை போல் பாஜகவும் தொடர்ச்சியாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக பாஜக தலைவர்கள் அனைவருமே கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மத்திய நிதியமைச்சர் நேரில் கரூர் விரைந்தார். இதற்கு அடுத்த கட்டமாக தான் உண்மை கண்டறியும் குழு. இத்தனை அரசியல் நிகழ்வுகளையும் சேர்த்து பார்த்தால் இந்த துயர சம்பவத்தின் பின்னணியில் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பது மட்டும் நமக்கு புரிகிறது.. ஏனெனில் அரசியல் கட்சிகள் ஒரு பிரச்சினையை கையில் எடுக்கிறார்கள் என்றால் அதன் மூலம் சில ஆதாயங்கள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று அர்த்தம். நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை காட்சிகளை பார்த்த பொழுதே அவர்களது அறிக்கை எப்படி இருக்கும் என தெளிவாக தெரிகிறது. அதே போல் உண்மை கண்டறியும் குழுவிடம் மக்கள் சொன்ன விஷயங்கள், மற்றும் அவர்களது கேள்விகளை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக ஆளும்கட்சிக்கு எதிராக தான் அறிக்கை கொடுப்பார்கள் என்பது வெளிப்படை. ஆக இந்த சம்பவத்தில் திமுகவுக்கு நேர் எதிர் நிலைப்பாடு எடுக்கிறது பாஜக. அதிமுக பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்பதற்காக இதை செய்கிறது என்று கடிவாளம் கட்டியது போல் ஒற்றை பார்வையில் இந்த நிகழ்வுகளை பார்க்கக்கூடாது. இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் காரணிகள் இருக்கிறது. அதிமுக பாஜக கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்பதை விடவும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால் கூட அது பாஜகவுக்கு வெற்றி தான். ராகுல்காந்தி விஜயிடம் பேசியிருக்கிறார் என்ற செய்தியை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ராகுல் + விஜய் பேச்சு செய்தி பரவக்கூடாது என்பதற்காக தான் விஜய் + குருமூர்த்தி சந்திப்பு என்று கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்பது இப்போது புரியும். கரூர் துயரத்துக்கு பின்னால் திமுக இருக்கிறது, செந்தில்பாலாஜி இருக்கிறார் என்ற சந்தேகங்களை இன்னும் மக்கள் மனதில் ஆழமாக விதைத்தால் கூட அது தேர்தல் அரசியலுக்கு பயன்படும். 2026 தேர்தலில் செந்தில்பாலாஜியை பெரிதும் நம்பியிருக்கிறது திமுக. அந்த இடத்தில கொஞ்சம் டேமேஜ் செய்ய முடியும். நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் செண்டிமெண்ட் ஒத்துழைத்தால் செந்தில்பாலாஜியை தள்ளி வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அல்லது செந்தில்பாலாஜியால் திமுகவுக்கு பயனில்லாத ஒரு நிலையை உருவாக்கலாம். அருணா ஜெகதீசன் அறிக்கைக்கு நேர் எதிரான ஒரு அறிக்கையை பாஜக முன்வைக்கும் போது, திமுகவுக்கு எதிராக இருப்பவர்கள் அதை ஆதரித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். இங்கே பாஜகவுக்கு எதிராக ஒரு பொதுக்கருத்தை முன்வைத்து அதை எப்படி அனைத்து கட்சிகளையும் திமுக ஏற்றுக்கொள்ள வைத்ததோ, அதே அரசியலை இன்று திமுகவுக்கு எதிராக செய்யப்போகிறது பாஜக. கரூர் சம்பவத்தில் மக்கள், ஒன்று திமுகவின் நிலைப்பாட்டில் இருக்க வேண்டும், அல்லது பாஜகவின் நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். விஜயும் பாஜக வெளியிடும் அறிக்கையை ஆதரித்தே ஆக வேண்டும். இது போன்ற செக்மேட் அரசியலை திமுக தான் எப்போதும் செய்யும், இன்று பாஜக அதை திறம்பட செய்கிறது. அரசுத்தரப்பின் தோல்விகளை நீதிமன்றம் கேள்வி கேட்கும் பொழுது திமுகவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படும். திமுக எப்போதும் கேள்விகளுக்குள் சிக்கிக் கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் தற்போது விஜய் தரப்பு மற்றும் பாஜக தரப்பு இணைந்து கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதனால் தான் விஜய் பாஜக பக்கம் போகிறார், விஜயை ஆர் எஸ் எஸ் தான் இயக்குகிறது என்ற நேரெட்டிவை நேற்றே கையில் எடுத்திருக்கிறது திமுக. ராகுல் + விஜய் பேச்சு அவர்கள் தொடர்பில் இருப்பதை காட்டுகிறது. விஜயுடன் ராகுல் பேசியிருக்கிறார் என்று தெரிந்து தான், ஸ்டாலினை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார் ராகுல் என்று செய்தி வெளியே வந்ததோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஸ்டாலினை தொடர்பு கொண்டது பற்றி ராகுல் ட்வீட் போடவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். கரூர் துயர சம்பவம் தமிழக அரசியலில் சில திருப்பங்களை ஏற்படுத்த போகிறது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. பின்குறிப்பு : இந்த பதிவு விஜயை நியாயப்படுத்துவதோ, திமுகவை நியாயப்படுத்துவதோ, அல்லது பாஜகவை நியாயப்படுத்துவதோ அல்ல. நடக்கின்ற சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் அரசியலை சுட்டிக்காட்டுவதற்கான பதிவு. இவையனைத்துமே என்னுடைய அனுமானங்கள் மட்டுமே. இந்த சம்பவத்தை பொறுத்தவரை விஜய், அரசு, மக்கள் என்ற வரிசையில் அனைவரின் மீதும் தவறு இருக்கிறது என்ற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது ஒரு பாஜக ஆதரவாளரின் கருத்து என்றாலும் சிலவிடயங்களில் கேள்விகளில் நியாயமிருக்கிறது. தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்தவர்களைக் கண்டு பிடிக்காமல் இருக்கும் திமுக அரசு இரவோடு இரவாக இவ்வளவு வேகமாக ஏன் செயல்படுகிறது? என்னய்யா இது?விஜய் தரப்பு வாதம் உப்புச் சப்பில்லாமல் இருக்கிறது.பள்ளிக் கூடத்தில் குழந்தைகள் சண்டை பிடித்து ஆசிரியரிடம் முறையிடுவது போன்று குழைந்தனமாக இருக்கின்றது.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- ‘சிஎம் சார், என்னைப் பழிவாங்க வேண்டுமானால்...’ - கரூர் சம்பவத்தில் மவுனம் கலைத்த விஜய்
https://www.facebook.com/share/p/1CgNcrNBrr/?mibextid=wwXIfrவிஜயின் முதல் பிரச்சாரக்கூட்டம் பற்றி எழுதும் போதே கூட்டத்தை பார்த்து பயமாக இருக்கிறது, ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என்று எழுதியிருந்தேன். விஜய்க்கு கூடுகிற கூட்டம், மற்றும் கட்டுப்பாடற்ற அவரது ரசிகர்கள் செய்யும் காரியங்களை பார்த்த பலரும், இது போன்ற அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார்கள். அதே போலவே கரூர் சம்பவம் மனதை உலுக்கி விட்டது. வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு சம்பவமாக பதிந்து விட்டது. விஜய்க்கு கூடும் கூட்டம் தான் அவருடைய அரசியல் முதலீடு. கட்டுப்பாடில்லாத கூட்டம் கூடுவதை விஜயும் விரும்புகிறார். அதனால் தான் எந்த இடத்திலும் தன் ரசிகர்களை கட்டுப்படுத்த அவர் விரும்புவதில்லை. ரசிகர்கள், தொண்டர்கள் துன்பப்படுவதையோ, பொதுமக்கள் துன்பப்படுவதையோ பற்றி விஜய் கவலைப்படுவதே இல்லை. இந்த விமர்சனங்கள் எல்லாம் விஜய்க்கு தெரியுமா என்பதே சந்தேகம் தான். கட்சியில் எந்த இரண்டாம் கட்ட தலைவர்களும் இல்லை என்ற நிலையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அருஜுனா, ஜான் சொல்வதை தான் அவர் நம்ப போகிறார். அப்படியே தெரிந்தாலும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த, ரசிகர்களை ஒழுங்குபடுத்த விஜய் விரும்பவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது. ரசிகர்களும் நாம் இப்படி நடந்து கொள்வதை தான் விஜயும் விரும்புகிறார் என்று நினைத்து மேலும் மேலும் அடாவடியாக நடந்து கொள்கின்றனர். படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் கலெக்ஷன் ரிப்போர்ட் சொல்வதை போல், களத்தில் என்ன நடந்தாலும் மாஸ் காட்டிட்டோம் என்பது மட்டும் தான் விஜய் மற்றும் அவரது ரசிகர்களின் பிரச்சாரமாக இருக்கிறது. விஜய் எந்த ஊருக்கு சென்றாலும் அவரை பார்ப்பதற்காக வரும் ரசிகர்களை தன்னுடைய அரசியலுக்கு கிடைக்கும் ஆதரவாக காட்டிக்கொள்வதற்கு தான் விஜய் முயற்சி செய்கிறார். அதனுடைய வெளிப்பாடு தான் பேச வேண்டிய இடத்தில மட்டும் வேனில் இருந்து வெளியே வருகிறார். உதாரணமாக கரூரையே எடுத்துக் கொண்டால் பைபாஸ் சாலையில் இருந்து அவர் பேசவேண்டிய இடத்திற்கு வர வேண்டும். பைபாஸிலேயே மிகப்பெரிய கூட்டம் நிற்கிறது. அங்கேயே அவர் வேனில் இருந்து வெளியே வந்து கை காட்டியிருந்தால் விஜயை பார்த்த சந்தோஷத்தில் பாதி கூட்டம் கலந்திருக்கும். ஆனால் விஜய் அதை செய்வதில்லை. திருச்சியிலும் அதுதான் நடந்தது. வேனிற்குள்ளேயே அமர்ந்து கொள்வதால் பொது மக்களால், ரசிகர்களால் அவரை பார்க்க முடிவதில்லை. இவ்வளவு தூரம் வந்துட்டோம், அவர் பேசற இடத்துல அவரை பார்த்துட்டு போயிடுவோம் என்று மொத்த கூட்டமும் அவர் வாகனத்தின் பின்னாலேயே வருகிறது . நாமக்கல்லில் இருந்து அவர் பின்னால் வந்த கூட்டம், பைபாஸ் சாலையில் நின்றிருந்த கூட்டம், அவர் பேசும் இடத்தில ஏற்கனவே காத்திருக்கும் பெருங்கூட்டம் என அனைத்தும் சேர்ந்து யாராலும் கட்டுப்படுத்த முடியாத கூட்டமாக மாறுகிறது. எல்லா கூட்டமும் ஒரே இடத்தில கூடிய பிறகு விஜய் வெளியே வருகிறார். இதைத்தான் விஜய் விரும்புகிறார். குறைந்த பட்சம் பைபாஸ் சாலையில் இருந்து அவர் பேசும் இடம் வரை வேனில் நின்று கொண்டு கையசைத்து வந்திருந்தால் கூட இவ்வளவு கூட்டம் கூடியிருக்காது. ஆனால் அதை செய்ய விஜய்க்கு மனமில்லை. விஜயுடைய ஒரே டார்கெட் கூட்டம். அதனால் தான் தாமதமாக வருகிறார். காவல்துறை என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்ற மனநிலை தான் விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு இருக்கிறது. அதனால் தான் திருச்சியில் தடையை மீறி ரோட் ஷோ நடத்தினார். சாலையில் இறங்கிய பிறகு யாராலும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பது விஜய்க்கும் தெரியும். ஒருவேளை காவல்துறை நடவடிக்கை எடுத்தாலும் அதையும் விஜய் தன்னுடைய அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வார். அந்தளவு சுயநலமாக சிந்திக்கிறார். அதே போல் தன் ரசிகர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவும், அவர்களை ஒழுங்குபடுத்தவும் விஜய் தயாராக இல்லை. ஏனென்றால் அவரது ரசிகர்கள் செய்யும் முட்டாள்தனங்கள் கூட அவருக்கு விளம்பரமாக மாறும் காலமிது. இப்படிப்பட்ட ஒரு கூட்ட த்தை கையில் வைத்திருக்கிறோம் என்பதை விஜய் பெருமையாக நினைக்கிறார். சமூக வலைத்தளங்களில் நான் பார்த்த வரையில் ஒரு விஜய் ரசிகர் கூட இறந்து போன 40 உயிர்களுக்காக கவலைப்படவில்லை. அவர்களுடைய கவலை எல்லாம் விஜய்க்கு கெட்ட பெயர் வந்து விடுமா? கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடுமா? விஜயுடைய அரசியலுக்கு சிக்கல் வந்துவிடுமா என்பது மட்டும் தான் அவர்களின் எண்ணமாக இருக்கிறது. தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி என்பது போல் சுயநலமான தலைவனுக்கு சுயநலமான தொண்டர்கள். இதோடு அரசியலை விட்டு ஒதுக்கினால் தமிழ்நாடு தப்பிக்கும்.ஏனென்றால் விஜயால் ஒருபோதும் மக்களுக்கான அரசியலை செய்ய முடியாது. https://www.facebook.com/share/v/17CgqSJ4mm/?mibextid=wwXIfr- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம்கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாடு அரசு | முழு விவரம் https://www.vikatan.com/கரூர் கூட்ட நெரிசலில் நடந்தது என்ன? விளக்கமளித்த தமிழ்நாட...https://x.com/im_inba1/status/1972704039591878854?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
https://www.facebook.com/share/p/1GxMJAgg8r/?mibextid=wwXIfr• #தமிழ்நாட்டின் இளைய தலைமுறை சினிமா நடிகர்கள் மீதான மோகத்தில், எப்படி தலைகீழாக சிந்திக்க ஆரம்பித்திருக்கிறது என்பற்கான உதாரணம்தான் கரூர் நிகழ்விற்கு பின்னரான நிகழ்வுகள். சரி. திமுக சதி வேலைகள் செய்தது. சரி. உயிரிழப்புகளை திமுகதான் திட்டமிட்டு நடத்தியது. சரி. பெரும் அநீதி சதி திட்டத்தின் ஊடாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. (இது தவெக அதனது பெரும் தவறை மறைப்பதற்காக உருவாக்கும் narrative என்பது எனது பார்வை) • #அப்படியானால் என்ன செய்யவேண்டும்? தவெகவின் தலைவர் தெருவிற்கு இறங்கி நீதி கேட்டிருக்க வேண்டும். சமூக ஊடகங்களில் தவெக ஆதரவாளர்கள் சொல்லும் சகல காரணங்களையும் விஜய் அவரது சொந்த வாயால் சொல்லிருக்கவேண்டும். சம்பவம் நடந்த இடத்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டும். இந்த புள்ளியில் இவர் எப்படி கூமுட்டை ஆனார் என்பதை தனியாக விவரிக்கிறேன். மூன்று நாட்களாக வெளியே வரவில்லை. பெரும் அசம்பாவிதம் நடந்த பிறகு தாழ்ப்பாளை போட்டு உள்ளுக்குள் ஒருவர் இருக்கிறார். இதற்கு ரைட் அப்புகள். “தலைவர் சோகத்தில் 3 நாட்களாக தண்ணீர் மட்டுமே குடித்தார்.” “தலைவா எழுந்து வா! “ • #டேய்! தலைவன் என்பவன் தலைமை தாங்குபவன். அவன் களத்தில் இருக்க வேண்டும். தலைவன் என்பவன் முடிவுகளை தொலைநோக்கு பார்வையில் துரிதமாக எடுப்பவன். மன உறுதியில் மற்றவரை விட கல்லாய் இருப்பவன். தமிழ்நாட்டில் உட்டாலக்கடியாய் நடக்கிறது. எட்டு கோடி மக்களை ஆள கெஞ்சி வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறார்கள். இதை சொல்வது யார்? படிக்காத பாமரனோ, கிராமத்தானோ அல்ல. சிலிக்கான் பள்ளத்தாக்கில் வேலை எடுக்கும் திறனுள்ள இளைய தலைமுறை. அந்தளவிற்கு நடிகர்கள் மீதான போதை தலைகீழாய் சிந்திக்கும் திறனை தந்திருக்கிறது. அநீதி தானே. அதை நீதானே தட்டிக்கேட்க வேண்டும். இன்னும் சில நாள் கழித்து அழும் முகத்துடன் பாவமாக உரையாற்றுவார். நெஞ்சை பிழிய வைக்கும் கதையுடன் வீட்டில் தாழ்ப்பாளை போட்டு இருந்ததற்கான காரணத்தை சொல்வார். அப்போதும் இந்த தலைமுறை “தலைவா! உன் கண்ணுல இருந்து கண்ணீர் வரலாமா” என இரண்டு ரைட்அப் எழுதும். இதுவரை சொன்னது திமுக சதி வேலை செய்திருந்தால். • #இனிமேல் சொல்வது“விஜய்தான் இதில் பெரும் குற்றவாளி” என்ற எனது பார்வையில். இந்த சனிக்கிழமை கூட்டம் என்பது விஜய் அவரது செல்வாக்கை காட்டுவதற்காக, அணு அணுவாக வடிவமைக்கப்பட்டது. இதில் Health and Safety Regulations என்பதை முற்றிலும் இரண்டாம் பட்சமாகவே அணுகியிருக்கிறார்கள். சில நாடுகளில் Public Order and Safety Protocols என அழைப்பார்கள். இவர்கள் கூட்டத்தை அதிகமாக்கி காட்ட பயன்படுத்திய உத்திகளை நான் விவரிக்க கூட தேவையில்லை. “எப்படி அதிகமாக கூட்டத்தை சேர்ப்பது, எப்படி அதனை அதிக நேரம் தக்கவைத்திருப்பது” என்பதுதான் அவர்களது “பிரதான நோக்கமாக” ஆரம்பத்திலிருந்து இருந்திருக்கிறது. சகல வழிகளிலும் அவர்களது பிரதான நோக்கத்தை அடைய பாடுபட்டிருக்கிறார்கள். கள தகவல்களை எடுத்து பார்த்தாலே தெரியும். திமுக சதி வேலை செய்தது என சொல்பவர்கூட இதனை மறுக்கமுடியாது. விஜய் இந்த “பிரதான நோக்கத்தை” அடைய எல்லாவகையான உத்திகளையும் பயன்படுத்தியிருக்கிறார். திமுக சதி செய்திருந்தாலும் கூட, தவெக முறையான Public Order and Safety Protocols பின்பற்றியிருந்தால் இந்த அனர்த்தம் நிகழ்ந்திருக்காது என்பதுதான் இதிலுள்ள bottom line. உண்மையில் மேற்குலகில் ஒருவர் இதே உத்திகளை பயன்படுத்தி, 40 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்திருந்தால் குறைந்தது 20 வருட சிறை தண்டனை கிடைத்திருக்கும். அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் பிறந்ததால், விஜய் தப்பித்திருக்கிறார். விஜய் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனால் கூட, திமுக சட்டத்தை பாய்ச்சாது. அது திமுகவிற்கு எதிராக திரும்பிவிடும் என்பதை அது அறியும். முழு அனுதாபத்தையும் விஜய் அறுவடை செய்துவிடுவார். க.ஜெயகாந்த்- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
அதெப்படி செந்தில்பாலாஜி சரியான நேரத்துக்கு வந்தாரு... அதெப்படி விஜயபாஸ்கர் அங்க வந்தாரு, அதெப்படி முதலமைச்சர் இதுக்கு மட்டும் உடனே நேரடியா கிளம்பிட்டாரு, அதெப்படி அன்பில் மகேஷ், MLA ங்க எல்லாம் அங்க வந்தாங்க, இப்படி எல்லாம் கேள்வி கேக்குறீங்க சரி... அவங்க வந்து தான் ஆகணும் அதுக்கு தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சி இருக்கு, அரசாங்கம், மக்கள் பிரதிநிதிகள் அங்க இருந்து தான் ஆகணும் அது அவங்க கடமை, அது தெரியாம background sound போட்டு எடிட்டிங் கட் போட்டு, பேசுற நீ களத்துக்கு வந்தியா... முதலமைச்சர் ஆகணும்ன்னு திரியுற விஜய்கிட்ட போய் சொல்லுங்க அண்ணா இப்படி ஒரு அசம்பாவிதம் ஆகி போச்சு நம்ம கூட்டத்துக்கு வந்து தான் இது எதிர்க்கட்சி சதியா கூட இருக்கலாம் நீங்க இங்கேயே இருங்க திருச்சில தங்குங்க, மக்களை போய் நம்ம நிர்வாகிகளை பாக்க்க் சொல்லுங்க, மாவட்ட செயலாளர்கள் கிட்ட போய் கலநிலவரம் என்னென்ன்னு தெறிஞ்சி கிட்டு நேரடியா போக வேண்டாம் atleast video call மூலமாவது ஆறுதல் சொல்லுங்க, நான் அங்க வந்தா இன்னும் பெரிய நெருக்கடி ஆகும் ஆனா உங்க கூட தான் நான் இருக்கேன், பயப்படாதீங்க எல்லாரும் சேர்த்து இந்த துயரத்தில இருந்து வெளியே வந்துரலாம்ன்னு பேச சொல்லி சொல்லி இருக்கலாம்ல..... Atleast புறமுதுகு காட்டி ஓடி போகும் போதாச்சும் செய்தியாளர்களை பார்த்து ஒரு வருத்தத துயரத்த சொல்ல கூட தயாரா இல்லாத ஒரு தலைவன் 🤦♀️🤦♀️- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
https://www.facebook.com/reel/813512611061830 ~ படிச்சு படிச்சு சொன்னேன் கேட்டிங்களா ? * என்ன கேட்டிங்களா ? ~ நீங்க அழாதீங்க, மாட்டிப்போம்னு சொன்னேன் கேட்டிங்களா சோசியல் மீடியா PEAK ல இருக்க இந்த காலத்திலயே இவனுங்க இந்த அளவுக்கு அட்டூழியம் பண்றானுங்க! அந்த காலத்துல எம்.ஜி.ஆர், என்னவெல்லாம் பண்ணிருப்பானுங்க ! அப்போ திமுகவை சரிக்கு சமமா களத்துல எதிர்த்து அவங்களை முடக்கி போட்ட துணிச்சலான ஒரே கட்சி அதிமுக தான்!- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
https://www.facebook.com/share/p/1FbGnQj4xg/?mibextid=wwXIfrகரூர் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நெரிசல் படுகொலைகள் வெளிப்படுத்திய தமிழக அரசு மருத்துவத் துறையின் அவலட்சணம் தமிழ்நாடு மருத்துவத் துறையின் அவலட்சணத்தை மனம் நொந்து எழுதியிருக்கும் இலங்கை மருத்துவர். ***** கரூர் கூட்டநெரிசல் இறப்பும் மருத்துவராகச் சில ஏமாற்றங்களும் இலங்கை மருத்துவர் என்னும் வகையில் காணொளிக் காட்சிகள் வாயிலாக நடந்த சம்பவங்களைப் பார்த்தபோது, தமிழ்நாட்டு அரச மருத்துவமனைகளின் தராதரம் குறித்து ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. 1) அம்புலன்ஸ்களின் உள்ளே காணொளிகள் எடுப்பது நோயாளியின் உரிமை மீறலாகும். இலங்கையில் இதுவரை காலமும் அம்புலன்ஸ்சுக்குள் இருந்து அம்புலன்ஸ் ஊழியர்களே காணொளி எடுத்து வெளியிட்ட வரலாறு இல்லை. அப்படி நடந்தால், உடனடியாக அந்த உரிமமே இரத்துசெய்யும் பொறிமுறை இலங்கையில் உண்டு. ஆனால்,நோயாளிகளின் உரிமை குறித்து நோயாளிகளுக்குச் சேவை செய்யும் பொறிமுறையில் உள்ளவர்களுக்கே எந்தவிதமான அடிப்ப்டைப் பயிற்சியும் வழங்கப்படவில்லை என்பது உறுதியாகின்றது. 2) இலங்கையில் அம்புலன்ஸ்களில் எந்தவிதமாக கட்சிக்கொடிகளோ, கட்சி பனர்களோ, கட்சி போஸ்டர்களோ ஒட்ட முடியாது. எந்தவிதமாக விளம்பரமும் செய்யமுடியாது. ஆனால், தமிழ்நாட்டில் அம்புலன்ஸ்கள் கட்சிக்கொடிகளுடனும் போஸ்டர்களுடனும் பனர்களுடனும் காவற்றுறைக்கு முன்னாலே நிற்க முடிகின்றது. மருத்துவப்பணியில் உலகமகா கேடு இதுவாகவேயிருக்கும். 3) ஒரு மனித உடல் எந்தவித மூச்சும் பேச்சும் அசைவும் இல்லாமல் இருந்தாலும், ஒரு மருத்துவர் அந்த உடலைப் பரிசோதனை செய்து, அந்த உடலில் உயிர் இல்லை என்பதனை உறுதிசெய்யும் வரை, அந்த மனித உடல் இறந்த உடலாகக் கொள்ளப்படமுடியாது. அங்ஙனம் கொள்ளப்படுவதும் சட்டவிரோதம். எனவே, அப்படிப்பட்ட உடலை, உயிருள்ள உடலாகவே கொள்ளப்படும். எனவே, அதனை UNRESPONSIVE STATE என்பர். உடலுக்கு முதலுதவிகள் செய்யவேண்டியது துறைசார் ஊழியர்களின் கடமையாகும். இங்கு துறைசார் ஊழியர்கள் என்போர் காவலர்,இராணுவத்தார்,தீயணைப்புப் படையினர் என்று அரச பாதுகாப்புத் துறையினரும் மருத்துவ சிற்றூழியர் முதலாயின ஊழியர் அனைவரும் அடக்கம். அதுவும், அம்புலன்ஸ்சில் வரும் உதவியாளருக்கு இப்பயிற்சி இருத்தல் அவசியம்.குறைந்தபட்சம் ஒரு FACEMASK மூலம் ஒக்சிஜன் கொடுப்பதேனும் அவசியம். 4) அம்புலன்ஸ் என்பது வெறுமனே நோயாளியைக் காவிக்கொண்டோடும் ஊர்தியல்ல! அதில் குறைந்தபட்சம் ஒரு ஒக்சிஜன் சிலிண்டர் ஏனும் இருத்தல் வேண்டும்.ஆனால், இந்தச் சம்பவத்தில், ஒரு குழந்தை அம்புலன்ஸ்சுக்குள் அம்புலன்ஸ் கட்டிலில் கிடத்திவிடப்பட்டுள்ளது. முன்னுக்கு ஓட்டுநருக்கு அருகில் ஒரு காவற்றுறை அதிகாரி உள்ளார். ஒரு அம்புலன்ஸ்சு ஊழியர் குழந்தையின் அருகில் இருந்து ''குழந்தை குழந்தை'' என்று கத்திக்கொண்டு இருக்கின்றார். யாரோவொருவர் காணொளி எடுக்கின்றார். யாரும் அந்தக் குழந்தைக்கு CPR/ சிபிஆர் (CARDIOPULMONARY RESUSCITATION) எனப்படும் நெஞ்சினை அழுத்தும் செயல்முறையினையோ, அல்லது குறைந்தபட்சம் ஒரு ஒக்சிஜனையோ கொடுக்கவில்லை. இதயமே செயலிழந்திருந்தாலும், நெஞ்சு அழுத்தும் செயன்முறையையும் ஒக்சிஜனையும் கொடுத்துக் கொண்டிருந்தால் மருத்துவர்களால் அக்குழந்தையைக் காப்பாற்றக் கூடியதாகவிருக்கும். ஆனால், இங்கு அம்புலன்ஸ் உதவியாளருக்கே இதுபற்றிய அறிவு இல்லை. காவற்றுறை அதிகாரிக்கு இல்லை. இலங்கையில் காவற்றுறை அதிகாரிகள் இராணுவத்தார் தீயணைப்புப் படையினர் என்று பாதுபாப்பு உத்தியோகத்தர்களுக்கு இவை பற்றிய பயிற்சிகளை இலங்கைச் சுகாதாரத் திணைக்களம் கொடுத்துக் கொண்டிருப்பதுடன், பாடசாலை ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் செயற்றிட்டத்தையும் இப்போது இலங்கை அரசாங்கம் சுகாதாரத் திணைக்களத்தினூடாக முன்னெடுத்து வருகின்றது. ஆனால், தமிழ்நாட்டில் இந்தக் கரூர் அனர்த்தத்தில் வெளிப்படையாகத் தெரிவது, தமிழ்நாட்டு அரச மருத்துவத்துறை இலங்கை அரசாங்க மருத்துவத்துறையோடு ஒப்பிட்டால் ''வெறும் கோது'' என்பதேயாகும்! 5) மருத்துவமனையில் வைத்து ஒரு காவற்றுறை அதிகாரி(பெண்மணி) பிள்ளையொன்றுக்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுப்பதும் கைகளைப் பிடித்துத் தேய்ப்பதுமாகவே இருந்தார். இதனைப் பலரும் பகிர்ந்து பாராட்டினர். ஆனால், ஒரு மருத்துவராக இக்காட்சியைக் கண்டதும் கவலையே ஏற்பட்டது.தமிழ்நாட்டுச் சினிமாத்துறை போதித்த அவசர சிகிச்சை இதுவேயாகும். தமிழ்நாட்டு அரசும் தமிழ்சினிமாத்துறையைக் கொண்டாடுவதும் அச்சினிமாக்களில் காட்டுவதே முதலுதவிப் பயிற்சி என்றும் பேக்காட்டும் அரசாகும். நெஞ்சினை அழுத்தும் சிபிஆர்/CPR செயன்முறை இல்லாது வெறுமனே நுரையீலுரக்குக் (Lungs) காற்றுக்கொடுப்பதில் எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதோடு, பிரயோசனமேயில்லாத இச்செயன்முறையால் குறித்த காவற்றுறை அதிகாரிக்கே தேவையில்லாத வாய்மூலம் பரவும் தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இவ்வாறான செயல் மருத்துவ விரோதமாகும்.முறையான ஒக்சிஜன் கொடுக்கும் வசதி ஏற்படுத்தும் வரை நெஞ்சினை அழுத்தும் சிபிஆர் செயன்முறையைச் செய்துகொண்டிருந்தாலே போதும் என்பதுதான் மருத்துவ சட்டவிதி. மருத்துவ விஞ்ஞானரீதியான் ஆய்வுகளாலும் ஏற்படுத்தப்பட்ட முடிவும் அதுவேயாகும். எனவே, குறித்த அனர்த்தத்தில் UNRESPONSIVE STATE (பேச்சு மூச்சு இல்லாத நிலைக்கு)ப் போனவர்களில் பலர் ஒழுங்கான அனர்த்த முகாமைத்துவ மருத்துவப் பயிற்சி அரச மருத்துவத்துறையில் இல்லாமையினால் இறந்திருக்கக்கூடிய வாய்ப்பும் காணொளிகளால் உறுதியாகின்றது. அரச மருத்துவத்துறையின் தராதரமும் இறப்புவீதத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது என்பதனை காணொளிகளின் ஊடாகவே ஊகிக்கக்கூடியதாகவுள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் அரச இயந்திரம் உருப்படியான அனர்த்த முகாமைத்துவப் பயிற்சிகளைக் காவற்றுறை அதிகாரிகளுக்கும் அம்புலன்ஸ் உதவியாளர்களுக்கும் மருத்துவமனைப் பணியாளர்களுக்கும் கொடுக்கவில்லை என்பது காணொளிகள் தெளிவாகவே தெரிகின்றது. 6) காணொளிகளின்படி, அம்புலன்ஸ்சில் இருந்து கொண்டுவரும் உடல்களை அப்படியே கொண்டுவந்து மருத்துவமனைக் கட்டில்களில் கிடத்துகின்றனர். எந்தவொரு கட்டிலிலும் மொனிட்டர்கள்(MONITORS) இல்லை. உடலில் உள்ள ஒக்கிஜனின் அளவு ( Oxygen saturation), இதயத்துடிப்பு (Heart rate and rhythm ) ,நாடித்துடிப்பு (Pulse rate) என்பவற்றை ஒருசில வயர்களை உடலில் வெறுமனே இணைப்பதனாலேயே ஒருசில கணப்பொழுதில் அறியக்கூடிய டிவி போன்ற கருவியாகும். பொதுவாக அவசரசிகிச்சைப் பிரிவில் 10 கட்டில்களே இருந்தால் 10 மொனிட்டர்கள் இருக்கும். திடிரென ஏற்படும் பெரும் அனர்த்தங்களின்போது, மருத்துவமனையிலுள்ள ஏனைய விடுதிகளில்(wardக்களில்) பயன்பாட்டில் இல்லாத அல்லது அத்தியாவசியத்தேவையில்லாத மொனிட்டர்களை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு இடமாற்றஞ் செய்துகொள்வர். இதுவெல்லாம் அனர்த்த முகாமைத்துவ (DISASTER MANAGEMENT) பயிற்சிகளினூடாகவும் மருத்துவமனைகளுக்குரிய உள்ளக சுற்றறிக்கைகள் (GUIDELINES) ஊடாகவும் ஊழியர் யாவருக்கும் காலத்திற்குக் காலம் மருத்துவ நிர்வாகம் புரிதலை ஏற்படுத்தி வைத்திருக்கும். ஆனால், அரச மருத்துவமனைகளில் கொண்டுவந்து கையளிக்கும்போது கட்டில்களில் வெறுமனே கிடத்துகின்றார்களேயொழிய, மருத்துவர் உடனடியாக வந்து பரிசோதனை செய்வதாகவோ- மொனிட்டர்கள் இருப்பதாகவோ- CPR/ சிபிஆர் (cardiorespiratory resuscitation) என்னும் நெஞ்சழுத்தும் செயன்முறையை தாதியரும் மருத்துவர்களும் செய்வதாகவோ காணமுடியவில்லை. 7) இலங்கையில் கொழும்பில் தேவாலய தொடர் குண்டுவெடிப்பு நடந்தபோது, தேசிய மருத்துவமனைக்கு எந்தவொரு அரச மருத்துவரும் வந்து அவசர சிகிச்சைக்கு உதவலாம் என்று குறுஞ்செய்தி மருத்துவச் சங்கங்களினூடாகக் கொழும்பு வலயத்தினுள் உடனடியாகப் பரப்பப்பட்டது. உடனே, வெறும் அரை மணித்தியாலத்தில் தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவும் அவசர சிகிச்சைப் பிரிவும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையிலும் மிதம்மிஞ்சி மருத்துவர் கூடி நிற்கும் இடமாக மாறியது. வரும் நோயாளிகளை (Triage method) தரம்பிரிக்கும் வேலையையே மருத்துவர்களில் ஒருகுழு நின்று செய்து கொண்டிருந்தது. உடல்கள் ஒக்சிஜனோடும் சிபிஆர் செய்தவாறுமே கொண்டுவந்து கையளித்தனர்.குறைந்தபட்சம் ஒக்சிஜனோடேனும் கொண்டுவருவதனை உறுதிசெய்திருந்தனர். இராணுவமும் காவற்றுறையும் இதில் தங்கள் அனர்த்த முகாமைத்துவப் புலமையை நன்கு வெளிப்படுத்தியிருந்தனர். மொனிட்டர் தட்டுப்பாடு, மருத்துவர் தட்டுப்பாடு, தாதியர் தட்டுப்பாடு என்று எதுவும் தென்படவில்லை.இலங்கை அவசர அனர்த்த முகாமைத்துவத்தில் ஆளணிப் பயிற்சியில் வெற்றிபெற்றிருந்தது.பொருளாதாரத்தில் நலிந்த நாடாயினும் இனவாதங்களால் சீரழிந்த நாடாயினும் இலங்கையில் அரச கல்வித்துறையும் அரச மருத்துவத்துறையும் தமிழ்நாட்டைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது என்பதனை இரண்டையும் அனுபவித்தவர்களுக்கு நன்றே விளங்கும். தமிழ்நாட்டில் ஏழைகளுக்குரியதாகவே அரச மருத்துவத்துறையும் கல்வித்துறையும் உள்ளது. இலங்கையில் பணக்காரர்களும் நாடும் இடமாகவே இலங்கை அரச மருத்துவத்துறையும் கல்வித்துறையும் உள்ளது.இலங்கையின் மருத்துவத்துறையில் குறைகள் உண்டு. ஆனால் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டால், அடிப்படை மருத்துவ சேவை பல்லாயிரம் மடங்கு பாராட்டுக்குரியதாகவுள்ளது. திராவிட ஆட்சி என்றும் திராவிட மாடல் என்றும் தமிழ்நாட்டாரினைக் கிணற்றுத்தவளைபோல் ஆக்கி,கேவலமான இழிநிலையில் இருக்கும் அரச மருத்துவத்துறையையே அங்குள்ள ஏழைகள் ‘’இதுவேனும் கிடைந்துள்ளது'' என்று ஏற்றுக்கொள்ளும் அடிமை மனப்பான்மைக்குள் தள்ளி, ஏமாற்றுவைத்திருப்பதும் கண்கூடு. தமிழ்நாட்டை ஊழல்வாதிகளிடம் இருந்து காப்பாற்றித் தமிழரின் கைகளில் கொடுத்தால் மட்டுமே, தமிழ்நாடு கொஞ்சமாயினும் வளர்ச்சி அடையும். தமிழ்நாட்டை பீகாருடன் ஒப்பிடாமல், பக்கத்தில் உள்ள இலங்கையோடு ஒப்பிட்டால், திராவிட மாடல் ஆட்சியின் கேடு விளங்கும்! இங்ஙனம், இலங்கை அரச மருத்துவன்- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
விஜை அவரை நல்ல அரசியல் தலைவருக்குரிய ஆளுமையைக்காட்டவில்லை.தன்னைப்பார்க்க தன்கூட்டத்தில்தன்பேச்சைக்கேட்க வந்தவர்கள் 40 பேர்வரையில் இறந்து விட்டார்கள்.இதற்கு விஜய் எந்த பிரதிபலிப்பையும் காட்டாது வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்.இது ஆளும் திமுக வின் சதி என்று ஊடக சந்திப்பை நடத்தி இறந்த மக்களுக்காக அவரது வருத்ததைத் தெரிவித்து அரசியலில் புயலைக்கிளப்பி இருக்க வேண்டும்.விஜை சொல்லும்பொழுது அது ஊடக வெளிச்சம் பெறும்.மாறாக அடைக்கோழியைப்போல் கோழைத்தனமாக வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறார்.அடுத்த வாரமாவது வெளியே வருவாரா?அல்லது கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தால் இதுதான் சமயம் என்று முடங்கி விடுவாரா?- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி
தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட 'அரட்டை ' எனும் செயலியின் அதிகரித்து வரும் பயன்பாடு பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்கா எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, உலக நாடுகள் பலவும் சொந்தக் காலில் நிற்பது பற்றி அதிகம் சிந்தித்துச் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் சேவையான WhatsApp இற்குப் பதிலாக அரட்டை எனும் செயலியினைப் ( Arattai App) பலரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். WhatsApp, Snapchat போன்ற செயலிகளைப் போன்றே அரட்டையும் பயன்படுகின்றது. தமிழ்நாட்டினைச் சேர்ந்த சோகோ நிறுவனத்தால் ( Zoho corporation) உருவாக்கப்பட்ட செயலி இதுவாகும். சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயற்படுகின்றது. இச் செயலியின் பெயர் தமிழ்ச் சொல்லாக இருப்பதுடன், 'அ' என்ற எழுத்தினை அடையாளமாகவும்கொண்டுள்ளது. நாமும் பயன்படுத்துவோமே! இச் செயலி வெற்றி பெற்றால் , அது ஒரு வகையில் தமிழின் வெற்றியாகவும் அமையும்.- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
மாநில அரசு பத்து இலட்சம்.. விஜய் இருப்பது இலட்சம்... காங்கிரஸ் இரண்டு இலட்சம் மத்திய அரசு இரண்டு இலட்சம் ஏறத்தாழ உயிரிழந்த ஒருவருக்கு தலா முப்பத்தைந்து இலட்சம்... உசுரக் கொடுத்து பயிரை விளைவிக்கும் விவசாயி. பாம்பு கடிச்சு செத்தா இரண்டு இலட்சம்.. கரண்ட்ல மாட்டி செத்தா மூணு இலட்சம்... வனவிலங்க தாக்கி செத்தா ஐந்து இலட்சம்... வெளஞ்ச வெள்ளாமை வெள்ளத்தில் போனா ஏக்கருக்கு ஐயாயிரம் ரூபா.. இப்போ சொல்லுங்க நான் விவசாயம் செஞ்சு சாகவா?? இல்லை கள்ளச்சாராயம் குடித்து சாகவா??? இல்லை விஜயைப் பார்க்க போய் சாகவா? -✍️ #ஈஷ் படித்ததில் பிடித்தது.அப்பாவி விவசாயிகளும் மீனவர்களும் சாகும் பொழுது வேடிக்கை பார்க்கும் கட்சிகள் கொழுப்பில் புதிய அரசியல் நடிகனைப் பார்க்கப் போய் இறந்தவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள்.இது தேர்தல் நேரம் என்று பிண அரசியல் செய்கிறார்கள். https://x.com/tholarbalan/status/1972595305842614478?s=46&t=44aq5wUJC7mrtrJVSmck3A சமூக நீதிக்காவலர்கள் கிளம்பிவிட்டார்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.