Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. தலைவர் பேரணி நடத்துன ஒரு மணி நேரத்துலயே போரை நிறுத்திட்டாங்க.. அவங்க அப்பனையே மிஞ்சிட்டான் பாரேன் இந்த பய... எங்கப்பன் குதிருக்குள் இல்லை.
  2. இதை நாங்கள் நம்பணும்!!! பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது உரையைத் தொடங்கும் போது. 'நமது படைகள், உளவுத்துறை நிறுவனங்கள், விஞ்ஞானிகளுக்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்..' என்று கூறித் தொடங்குகினார்; நமது ராணுவப் படைகளைப் பாராட்டுகிறேன். 'பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகள் மதத்தின் அடிப்படையில் மக்களைக் கொன்றனர்... இது எனக்கு தனிப்பட்ட வலியாக இருந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, முழு தேசமும் ஒரே குரலில் பேசியது' என்று பிரதமர் மோடி கூறினார். நமது பெண்களின் நெற்றியில் இருந்து 'சிந்தூர்' அகன்றால் அதன் தாக்கம் என்னவென்று பயங்கரவாதிகளுக்குத் தெரியும் என்று பிரதமர் மோடி கூறினார். மே 6/7 அன்று, இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. நாங்கள் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். அவர்கள் அதை ஒருபோதும் நம்பியிருக்க மாட்டார்கள்...' என்று பிரதமர் மோடி கூறுகிறார். 'இந்திய ஏவுகணைகள், ட்ரோன்கள் பயங்கரவாத முகாம்களைத் தாக்கியபோது, பயங்கரவாதிகள் அதிர்ந்தனர். பஹாவல்பூர், முரிட்கே ஆகியவை உலகளாவிய பயங்கரவாத பல்கலைக்கழகங்கள். 9/11, லண்டன் tube குண்டுவெடிப்பு, இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் என அனைத்திற்கும் இந்த இடங்களுடன் தொடர்பு இருந்தது' என்று பிரதமர் மோடி கூறுகிறார். பயங்கரவாத தலைமையகத்தை இந்தியா அழித்ததாக பிரதமர் மோடி கூறுகிறார். பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய தாக்குதல்களில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய பிரதமர் மோடி கூறுகிறார். 'பயங்கரவாத முகாம்கள் மீதான நமது தாக்குதல்களால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்தது. நம்முடன் ஒத்துழைப்பதற்கு பதிலாக, பாகிஸ்தான் நம்மைத் தாக்கத் தொடங்கியது. அது நமது பள்ளி, கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், இராணுவ வசதிகள் ஆகியவற்றைத் தாக்கத் தொடங்கியது. ஆனால், பாகிஸ்தானின் சொத்துக்கள் எங்களால் அழிக்கப்பட்டன' என்று பிரதமர் மோடி கூறுகிறார். பாகிஸ்தானின் மையப் பகுதியில் நாம் தாக்குதல் நடத்தினோம் என்றார். பாகிஸ்தான் மீதான இந்திய பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு, அது சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் கோரத் தொடங்கியது. மே 10 அன்று, பாகிஸ்தான் DGMO க்கள் எங்களை அடைந்தனர். அந்த நேரத்தில் பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பை நாம் அழித்துவிட்டோம் என்றார். 'பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பு மற்றும் இராணுவத்தின் மீதான தாக்குதல்களை மட்டுமே நாம் இடைநிறுத்தியுள்ளோம். அவர்களின் எதிர்கால நடவடிக்கைகளால் இது தீர்மானிக்கப்படும்' என்றார். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கான இந்தியாவின் கொள்கை ஆபரேஷன் சிந்தூர். பாகிஸ்தானிடமிருந்து வரும் எந்த அணு ஆயுத மிரட்டலும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றார். பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையிலான வேறுபாட்டை நாங்கள் காண மாட்டோம் என்று பிரதமர் மோடி கூறுகிறார்; பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். புதிய யுகப் போரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை நாம் நிரூபித்துள்ளோம். இது போரின் சகாப்தம் அல்ல, ஆனால் இந்த சகாப்தம் பயங்கரவாதத்தின் சகாப்தமும் அல்ல என்று பிரதமர் மோடி கூறுகிறார். பயங்கரவாதத்தை நாங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். பாகிஸ்தான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினால், அதன் பயங்கரவாத உள்கட்டமைப்பை அது நிறுத்த வேண்டும் என்றார். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்காது, பயங்கரவாதமும் வர்த்தகமும் ஒன்றாக நடக்காது, தண்ணீரும் இரத்தமும் ஒன்றாக ஓடாது. சர்வதேச சமூகத்திற்கு, எங்கள் கொள்கை, பாகிஸ்தான் மீதான பேச்சுவார்த்தைகள் பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியது மட்டுமே என்று பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமர் மோடி தனது உரையை முடிக்கும்போது, நமது படைகளின் வீரத்திற்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். ஜெய்ஹிந்த்
  3. https://www.facebook.com/share/r/1ArnxUpe5n/?mibextid=wwXIfr இந்தியா பாகிஸ்தான் போர்.
  4. நன்றி கோஷான் கண்கொள்ளாக்காட்சி. இந்தியா பிரன்ஸின் மானத்தையும் சேர்த்து வாங்கிவிட்டது.சைனாக்காரன் சைலண்டாக வேலையைப் பார்த்து விட்டு கம்முன்னு இருக்கிறான். Uploading Attachment...
  5. https://www.facebook.com/share/v/16RsZva6Ax/?mibextid=wwXIfr வேலியால எட்டிப் பார்க்கிறதுக்குள்ள சண்டை முடிஞ்சிட்டுதே! சீனாவின் ஜெட் உற்பத்தியாளரின் பங்குகள் கிடிகுடு என உயர்ந்ததும் இந்த போர்நிறுத்தத்துக்கு காரணம். அடுத்து யாழப்பாணத்தில் இருந்து சீனதூதுவர் இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்டது சாபகத்தில் வந்து தொலைக்குது. https://www.facebook.com/share/v/1AH8qmsTmC/?mibextid=wwXIfr
  6. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே உடனடிப் போர்நிறுத்தம் ஏற்பட்டு விட்டது.இந்த போர்நிறுத்தத்தில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் மத்தியஸ்தம் வகித்திருக்கின்றன.இந்தப் போரால் பெரும் பொருளாதார நட்டம் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டு விடும் என்று பயந்தே உலகநாடுகள் தலையிட்டு போரை நிறுத்தின.4 நாட்களில் போரை நிறுத்திய நாடுகளால் ஏன் இஸ்ரேலிய பாலஸ்தீன,உக்கிரைன் ரஸயா தமிழீழம் சிறிலங்கா போரை நிறுத்த முடியவில்லை?உனடியாக செய்ய வேண்டியது காஸ்மீர்,பலூஸ்தான்,பாலஸ்தீனம் ,தமிழீழம் போன்ற தேசிய இனங்களை சுதந்திரமாக பிரிந்து செல்ல அனுமதிப்பதுதான்.சீனாவின் ஆயுதங்களின் வலிமையை பாகிஸ்தான் சிறிதளவு பரீட்சித்துக்காட்டியதும் போர்நிறுத்தத்திற்கு ஒரு காரணமோ!!!! You tuber களுக்கும் பொப்கோர்ன் வியாபாரிகளுக்கும் தான் பெருநட்டம்.வடை போச்சே!
  7. https://www.facebook.com/share/p/19HuHVijwK/?mibextid=wwXIfrபிராந்திய / மேற்குலக வல்லரசுகளால் இந்தியா 'பொக்ஸ்' அடிக்கப்படுகிறதா? என்ற சந்தேகம்தான் தற்போது எமக்கு எழுகிறது. IMF இன் உதவி என்பது மேற்குலக அதாவது அமெரிக்க லொபியைத் தாண்டி ஒரு நாட்டுக்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை. அதுவும் போர் அறிவிக்கப்பட்ட ஒரு சூழலில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஆனால் நேற்று பாகிஸ்தானுக்கு அது கிடைத்திருக்கிறது. இது சொல்லும் செய்தி என்ன? அடுத்து மேற்குலக ஊடகங்களும் படைத்துறை ஆய்வாளர்களும் பாகிஸ்தானின் உத்திகளையும், இந்தியாவின் படைத்துறை ஓட்டைகளையும் ஒப்பிட்டு இந்தியாவைக் கழுவி ஊத்தத் தொடங்கி விட்டார்கள். இதுவும் ஒரு மேற்குலக லொபிதான். அவர்களால் ரபேல் போர் விமானங்கள் பாகிஸ்தானால் அழிக்கப்பட்டதையும், அதை சீனத் தயாரிப்பு ஜெட் மூலம் அழிக்கப்பட்டதையும் ஆச்சர்யத்துடன் கூடவே அதிர்ச்சியுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சீனாவின் அதி நவீன ஏவுகணைகள், AI தொழில்நுட்ப படைத்துறை வளங்கள் இந்தியா மீது பாகிஸ்தான் வழியாகச் சோதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது குழந்தைகளுக்குக் கூடத் தெரியும். துருக்கியுடன் வளைகுடா நாடுகளினது உதவிகளும் பாகிஸ்தானுக்குத் தாராளமாகக் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. IMF அதாவது பின்கதவு வழியே மேற்குலகமும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கு வந்து விட்டதா? 2009 இல் தமிழீழம் இதே இந்தியா உட்பட ஒட்டுமொத்த உலகத்தால் 'பொக்ஸ்' அடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஒரு நிலையை நோக்கி இந்தியா இழுத்துச் செல்லப்படுகிறதா? வரும் நாட்கள் இதற்கான பதிலைச் சொல்லும். தமிழின அழிப்பின் முதன்மைச் சூத்திரதாரியான இந்தியா கனவில் கூட எண்ணிப்பார்த்திராத 'பொக்ஸ்' இது.
  8. :ழத்தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் சீனா இந்தியா மற்றும் மேற்குலநாடுகள் ஆயுத உதவி உட்பட பல உதவிகளைச் செய்தன.இந்த நாடுகளில் இந்தியாவைத் தவிர மற்றைய நாடுகள் தமிழ்ஈழம் என்று ஒரு நாடு அமைவதை எந்த காலகட்டத்திலும் கூர்க்கமாக எதிர்க்கப் போவதில்லை. ஆனால் இந்தியா ஒரு போதும் அதை அனுமதிக்காது.பிராந்திய வல்லரசு என்பதால் இந்தியாவை மீறி எந்த நாடும் அரசியல்ரீதியாக தலையிட வில்லை. ஆனால் இந்த நிலை தொடர்ந்து இருக்குமா என்று சொல்ல முடியாது.ஒரு வல்லரசு நாடு தன் அண்டை நாடுகளை நட்பு நாடுகளை நட்பு நாடுகளாக வைத்திருக்கும். ஆனால் இந்தியாவுக்கு எந்த ஒருநாடும் நட்பு நாடாக இல்லை. இந்தியாவிடம் இலுந்து பல உதவிகளைப் பெற்ற சிறிலங்காவே இந்த யுத்தத்தில் நடுநிலையாக இருக்கப்போவதாகச் சொல்லிவிட்டது. .இந்த நிலையில் இந்தியாவுக்கு இயற்கையிலேயே நட்பாக இருந்த ஈழத்தமிழர்களை இந்தியா பகைத்துக் கொண்டது இந்தியாவுக்கு அதன் வெளியுறக் கொள்கையில் படுதோல்வியாகும். ஒருவேளை புகோள அரசியல் கட்டாயங்களினால் இந்தியாவே சிpலங்காவைப் பிரித்து தமிழீழத்துப்பிரித்துக்கொடுத்தாலும் ஈழத்தமிழர்கள் இந்தியாவை நேசிக்கமாட்டார்கள். ஒருகாலத்தில் மகாத்மா காந்தி யின்படங்கள் எங்கள் வீடுகளில் இருந்தன.இந்திய பாகிஜ்தான் போரின் போது தந்தை செல்வா தொண்டர்படை சேரத்ததாக வரலாறுகள் உண்டு. அதே வேளை சிறிலங்கா பாகிஸ்தான் விமானங்கள் எரிபொருள்நிரப்புவதற்கு இடங்கொடுத்தது..இந்த நிலையில் இந்தியா அடிவாங்குவது ஈழத்தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதற்கு இந்தியாவே காரணம்.
  9. பையனைக்கண்டது மகிழ்ச்சி!பையன் கொலிடே நின்ற நேரம் செம்பா பதிவுகளைப் போட்டு பதிவுகளில் முன்னணியில் நிற்கிறார். பையன் வந்தாச்சு. இனி பையனுக்கும் செம்பாவுக்கும் தான் போட்டி எவரை எவர்வெல்லுவாரோ?
  10. யாழ்மாவட்டத்தின் வாக்களிப்பு வீதம் ஏன் குறிப்பிடப்படவில்லை?
  11. உனக்கு 47 மனைவிக்கு 27 வயது மனைவி வழக்குப்போட்டால் உன் மானமே போயிடுமே. ஐரோப்பாவில் இருந்து கொண்டு புரியாணி தேடுதா புரியாணி சரியில்லை என்றால் கடையில் வாங்கி எதையாவது சாப்பிடு.
  12. இப்பொழுது செலன்ஸ்கி அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டு விட்டார்.தனது நாட்டு வளங்களை அமெரிக்காவுக்கு தாரை வார்த்து விட்டார் என்றாலும் அமெரிக்கா போரில் நேரடியாக பங்களிப்பு செய்யுமா? புட்டின் போரை நிறுத்தி விட்டு பின்வாங்குவாரா? இதனால் உக்கிரைன் பெற்ற நன்மை என்ன என்பது எப்போது தெரியவரும்?
  13. நிரந்தர முதல்வர் நந்தன் எட்டாத உயரத்தில் !!!!!!
  14. நோர்வேயின் பங்களிப்புடன் செய்யப்பட்ட சுனாமிக் கட்டடைமப்பை ஜேவிபியுடன் சேர்ந்து சந்திரிகா முடக்கினார். சந்திரிக்காவின் தீர்வுப்பொதியை ரணில் பாராளுமன்றத்தில் கொளுத்தினார். புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இடைக்காலவரைபை விவாதத்துக்கு எடுக்க முன்னரே ரணில்அரசாங்கததைக்கலைத்து பேச்சுவார்ததையைக் குழப்பினார். இதேபோல் பண்டா செல்வா ஒப்பந்தம் டட்லி செல்வா ஒப்பந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் எவற்றையுமே மாறிமாறி சிங்களத்தலைவர்கள் குழப்பினர். இந்த சிங்கள அரசாங்கத்தோடு 3 ஆம்தரப்பு அழுத்தம் இன்றி பேச்சுவார்த்தை நடத்தி எந்த ஒரு குறைந்த பட்ச தீர்வையும் பெறமுடியாது.போர்க்குற்ற விசாரணை இன அழிப்புக்கு எதிரான 3ஆம்தரப்பின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிகள் அதை விட 3 ஆம்தரப்புக்கு அனகூலமான பூகோள அரசியல்~சூழ்நிலைகள் இந்த அழுத்தைக் கொடுப்பதற்கு உதவும். அதற்கு முதல் தமிழர்கள் எல்லோரும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்த குரலில் பேசவேண்டும்.
  15. வீரசிங்கம் மண்டபத்தில் ஆகக்கூடியது 300 பேர் என்று பார்த்தால் யாழ்மாநகரசபை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் வந்தாலே போதும். மேதினம் என்றால் மேதின பேரணியாக வந்து ஒரு திறந்த வெளியில் குறிப்பாக அந்தக்காலத்தில் முற்றவெளியில்நடக்கும் மாபெரும் பெரும் கூட்டம் நடைபெநறும். மேதினப் பேரணியைக் கட்சிகள் தங்கள் பலத்தைகக் காட்டப்பாவிப்பார்கள். ஆனால் வழமைக்கு மாறாக அதுவும் தேர்தல் நேரத்தில் ஒரு சிறிய மண்டபத்திற்குள் சுருக்க வெுண்டிய காணம் என்ன? மே தினம்: அனைத்து முக்கிய கட்சிகளினதும் பேரணி விபரம்! 2025 மே 1 இன்று இலங்கை, சர்வதேச தொழிலாளர் தினத்தை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏராளமான பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுடன் நினைவுகூருகிறது. குறிப்பாக கொழும்பில் குறைந்தது 15 நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால், இலங்கை பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை அமுல்படுத்தியுள்ளனர். முக்கிய மே தின பேரணிகள் இங்கே: கொழும்பு தேசிய மக்கள் சக்தி (NPP): தேசிய மக்கள் சக்தி அதன் முக்கிய பேரணியை கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்துகிறது. இந்த இடத்தில் அரசியல் கூட்டங்கள் மீதான முந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் காலி முகத்திடலுக்கு திரும்புவதை இந்த நிகழ்வு குறிக்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP): SLPP யின் பேரணி நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP): கொழும்பு 10, டார்லி வீதியில் உள்ள அதன் தலைமையகத்தில் முன்னாள் தலைவர் டி.பி. இளங்கரத்னவுக்கு மலர் அஞ்சலி செலுத்துதல் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் பங்கேற்புடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு நினைவு நிகழ்வை நடத்துகிறது. முன்னணி சோசலிசக் கட்சி: அவர்களின் பேரணி கிருலப்பனை லலித் அதுலத்முதலி மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிற குறிப்பிடத்தக்க இடங்கள்: ஹைட் பார்க், விஹாரமஹாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கம், கொழும்பு நகராட்சி மன்ற வளாகம், ஆர்மர் வீதி, ஈ.ஏ. குணசிங்க சிலைக்கு அருகில் உள்ள வாழைத்தோட்டம், பி.டி. சிறிசேனா மைதானம், தபால் தலைமை அலுவலகம், கொஸ்கசந்தி மற்றும் பொது நூலகத்தில் கூடுதல் பேரணிகள் மற்றும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. கொழும்புக்கு வெளியே ஐக்கிய மக்கள் சக்தி (SJB): எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் தலவாகலை நகரில் பிற்பகல் 2:00 மணிக்கு SJB தனது பேரணியை நடத்துகிறது. இதில் சுமார் 50,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வஜன பலய (மக்கள் சக்தி கட்சி): இந்தக் கட்சி, வாரக்காபொல வாராந்திர சந்தை மைதானத்தில் காலை 10:30 மணிக்கு “தொழிலாளர்கள் தொழில்முனைவோரை நோக்கி” என்ற தலைப்பில் ஒரு பேரணியை ஏற்பாடு செய்கிறது. இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தலைமை தாங்குகிறார். இலங்கை தமிழரசுக் கட்சி : ITAK வின்பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளது. பேரணிகள் காரணமாக இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், பணியில் உள்ள போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1430151
  16. எதை எடுத்தாலும் கன்ட உடனே வாய்க்குள் வைப்பதா?எப்படியும் ஏதாவது எழுதி இருப்பார்கள்.வாசித்துப்பார்க்க வேண்டியதுதானே.
  17. ஆம்' நாம்பன் -ஆண் .நாகு பெண். எம்மக்கள் பொதுவாக நாகு கன்று பிறப்பதையே விரும்புவார்கள் காரண் பால். இதுவே ஆடு என்றால் கிடாயக் குட்டியைத்தான் விரும்புவார்கள். காரணம் இறைச்சிக்காக நல்வ விலை போகும். நம்மவரகள் பொதுவாக வளர்க்கும் கிடைhய்களை உண்பதில்லை. பக்கத்து வீட்டு கிடாய்களை விடமாட்டார்கள்.
  18. என்னப்பா வேம்படி முடிவுகளைக்காணோம் இந்த முறை முடிவுகள் சரியில்லையோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.