ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ரசோதரன்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
முந்தாநாள் கூட ஓபிஎஸ் அவர் வென்று மத்திய அமைச்சர் ஆவது பற்றி ஏதோ சொல்லியிருந்தார். சேர்க்கை சரியில்லை...... சுத்திவர நிற்கின்ற நாலு பேர்கள் 'நீங்கள் அமைச்சர் ஆயிடுவீங்க, அண்ணே....' என்று சொல்லியிருப்பார்கள் போல.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை....இது முற்றிலும் எதிர்பார்க்காதது.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ஜீ 6000 வாக்குகளால் பின்னடைவு...... கடவுளுக்கே சோதனையா...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍.... கடைசி 5 ஓவரும் நல்லாவே இருந்தது. இப்ப முதல் 5 ஓவரில் 5 விக்கட் போயிட்டுது....18/5......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உகண்டா இது உலகக் கோப்பை என்று தெரியாமல் உள்ளே வந்து விட்டது..... நாலு போட்டிகள் விளையாடினால் தான் வீட்டை போக விடுவார்கள்....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍...... ஓமான் அணியில் Kashyap Prajapati என்ற பெயரில் ஒரு வீரர் விளையாடுகின்றார். நமீபியாவிற்கு எதிராக முதல் பந்திலேயே அவுட் ஆகினார். Prajapati என்ற பெயரைர் பார்த்ததுமே 'முண்டாசுப்பட்டி' படம் ஞாபகத்திற்கு வந்தது. இவர் உடனேயே அவுட் ஆகினதால், வந்த படம் அப்படியே போய் விட்டது. இவருக்கு குடியுரிமை கொடுத்த மாதிரி மற்ற வெளி ஆட்களுக்கும் கொடுக்கலாம் தானே...........
-
மெக்சிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum
அதே கட்சி, அதே தீவிர இடதுசாரி அரசியல். பெரிதாக மாற்றம் எதுவும் வரப் போவதில்லை என்றே சொல்லலாம். அந் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வகையில் மகிழ்ச்சியடையலாம். ஆனாலும் அந் நாடு பெரும்பாலும் பெரும் போதைப் பொருள், ஆட் கடத்தல் முதலாளிகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவிற்கு மெக்சிக்கோவால் இரண்டு பெரிய பிரச்சனைகள், பல ஆதாயங்களும் இருக்கின்றன. முதலாவது பிரச்சனை மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்கா உள்ளே வரும் போதைப் பொருட்கள். இரண்டாவது பிரச்சனை அமெரிக்கா - மெக்சிக்கோ எல்லையூனூடாக அமெரிக்கா உள்ளே வரும் அகதிகள். இவை இரண்டுக்கும் எந்த தீர்வோ, முடிவோ இந்தப் புதிய தலைவரால் கிட்டப் போவதில்லை........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓமான் காசை அள்ளி எறிந்து இலங்கையில் இருந்து ஒரு நாலு நல்ல வீரர்களை தூக்கிக் கொண்டு வரலாம் தானே.........இன்றைய ஆட்டதை மட்டும் வைத்துப் பார்த்தால், இலங்கையில் அப்படி ஒரு நாலு நல்ல வீரர்கள் இருக்கிற மாதிரி தெரியவில்லை தான்........ சவூதி இப்படித்தானே கால்ப்பந்து வீரர்கள், கோல்ஃப் வீரர்கள் என்று உலகம் முழுக்க போய் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍....... நான் தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஷைத் தான் தெரிவு செய்தனான். என் வீட்டு எறும்புக்கு கிரிக்கட் கொஞ்சம் தெரிந்திருக்குது. அது ஏதோ சும்மா ஓடுது என்று தான் நான் அப்ப நினைத்தனான்..........🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
-
ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான கூட்டத்தில் மோதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்
அப்படி நான் சொல்ல வரவில்லை. எங்களின் கவனம் அதில் இருக்கவில்லை என்று சொல்ல வந்தேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முக்கியமான நேபாள வீரர் ஒருவருக்கு அமெரிக்கா விசா மறுத்து விட்டது என்று செய்திகளில் இருந்தது. அவர் அவருடைய சொந்த மண்ணில் ஏதோ கடும் பிரளி செய்தார் என்றும், அதனால் அவருக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்றும் இருந்தது.
-
மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
அங்கே ஒரு கணக்குக்கு இன்னொரு கணக்கு சரியாகிவிடும்...............🤣.
-
ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான கூட்டத்தில் மோதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்
உங்களின் ஆதங்கம் புரிகின்றது. பாகுபாடு மட்டும் தான் இதற்கான ஒரு காரணம் இல்லை என்று நான் நினைக்கின்றேன்.
-
மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி வெற்றி பெறவும், விருதுநகர் லோக்சபா வேட்பாளர் ராதிகா வெற்றி பெற வேண்டியும் நடிகர் சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம் செய்தார். தமிழகத்தில் மார்ச் 19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். மேலும் பா.ஜ., சார்பில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் ராதிகா போட்டியிடுவதை ஒட்டி அவரது கணவர் சரத்குமாருடன் இணைந்து சூறாவளி பிரசாரம் செய்தனர். இந்நிலையில் நாளை(ஜூன் 4) லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் பல்வேறு மையங்களில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பா.ஜ., பிரமுகர், நடிகருமான சரத்குமார் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க வேண்டும் என விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப் பிரதக்ஷணம் செய்தார். இருவரும் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் அவர் கணவர் நடிகர் சரத்குமார் இருவரும் இணைந்து ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததை ஒட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் சரத்குமார், ராதிகா இருவரும் சாமி தரிசனம் செய்தனர். https://minnambalam.com/political-news/saratkumar-performed-angapradhsshan-at-temple-to-win-radhika-in-virudhunagar/ https://www.dinamalar.com/cinemanews/121715
-
ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான கூட்டத்தில் மோதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்
கிரிக்கெட்டில் எங்களுக்கு விழுகிற அடியை எப்படி தடுக்கலாம் என்ற யோசனையில் முழு நாடும் இருக்க, இவர்கள் இடையில் வருகின்றார்கள். எங்காவது ஓரமாக ஒதுங்கி நின்று சண்டையை போடுங்கோ........
-
A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு
புளூதூத் மற்றும் தொலைபேசி இணைப்பு ஊடாக குறுக்கு வழிகளில் பரீட்சைகளை எழுதினார்கள் என்றால், தொலைபேசிப் பாவனை நிரலை எடுத்து குற்றத்தை நிரூபிக்க கூடியதாக இருக்கும். வேறு வழிகளிலும் என்றாலும், எங்காவது ஏதாவது log entries இருப்பதிற்கு சாத்தியம் உள்ளது. அந்த நாட்களில் சில சிங்களமாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பரீட்சைகளில் மேற்பார்வையில் இருக்கும் ஆசிரியர்களே எங்களுக்கு கேள்விகளுக்கு பதில்களை சொல்லித் தருவதாகவே தாங்கள் நினைத்திருந்ததாக சொல்லியிருக்கின்றனர். ஏனென்றால் அன்று நாங்கள் மிக அதிகமான பரீட்சைப் பெறுபேறுகளை எடுத்துக் கொண்டிருந்தோம். உதாரணமாக, 1985ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு 4A மட்டுமே வந்திருந்தது. யாழ் மாவட்ட மாணவன் ஒருவனே அதைப் பெற்றிருந்தார். அந்த சிங்கள் மாணவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்டு, சிரிப்பதை தவிர வேறு எந்த உணர்வும் வரவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா இன்னும் கொஞ்சம் வேகமாக அடித்து இருக்கலாம். நெட் ரன் ரேட்டில் பங்களாதேஷ் உள்ளே வர, இலங்கை வெளியே போகும் நிலை வர வேண்டும்.......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
❤️....... நாங்கள் வென்றால், 'இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம்.....' என்று சொல்லி விட்டு, அதுக்குப் பிறகு அடக்கமாக ஒரு பெரிய மனுசன் மாதிரி இருப்பம்......நாங்கள் மட்டும் தோற்றம் என்றால், 'ஜஸ்ட் மிஸ்....' என்று ஆரம்பித்து ஒரு பாரதம் அளவிற்கு நீட்டுவோம்........🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
❤️........ போகிற போக்கைப் பார்த்தால், எல்லா தெய்வங்களும் தினமும் இங்கே களத்திற்கு ஆறுதல் சொல்ல வர வேண்டும் போல தெரியுதே........இன்றைக்கு ஆறுதல் நம்ம குருஜிக்கு.........😋.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣......... அந்த நேரத்தில் வேற மாதிரி ஒரு உருட்டொன்றை உருட்டுவோம்........😋 எனக்கு இவர் யாரென்றே தெரியாது. இவர் தான் இன்று உலகிலேயே சிறந்த வேகப் பந்து வீச்சாளராக்கும் என்று தான் நினைத்தேன்.............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣...... எங்களின் அணிக்கு, மேற்கிந்தியா, என்ன சோதனை காத்திருக்குதோ....அன்றைக்கு பையன் சார் நம்மளை வைச்சு செய்யப் போகின்றார்........🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த மாட்சில் மட்டுமே எத்தனை சாதனைகள், இரண்டு அணிகளிலும்........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
77 முடிஞ்சுது. 77 என்றாலே இலங்கைக்கு ஒரு கேடு போல.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😋............ இதே பிரச்சனை தான் அந்த நாட்களில் எனக்கும் இருந்திருக்குது...........