Everything posted by ரசோதரன்
-
ராணுவ ரகசியம்
எங்களை சுற்றி இருந்த விளையாட்டு திடல்கள்/மைதானங்களுக்கு நெற்கொழு, தீருவில், சிதம்பரா, நெடியகாடு, எள்ளங்குளம் என்றெல்லாம் பெயர்களை வைத்த நாங்கள் இதற்கும் ஒரு நல்ல பெயராக அப்பவே வைத்திருக்க வேண்டும்................ 🤣......... உங்களுக்கு பனை ஓலை, எனக்கு பனம்பாத்தி............. பாடசாலையில் எனக்கு ஆங்கில வகுப்பில் ஆசிரியையாக வந்து இருந்து விட்டுப் போன குலசேகரம் டீச்சரே இதை மொழிபெயர்க்க கஷ்டப்பட்டிருப்பார்....................🤣.
-
ராணுவ ரகசியம்
இந்த விடயத்தில் இவர்கள் செய்த இந்தக் கொடுமைகள் அப்படியே மறைக்கப்பட்டன..................😌. இவை எதையும் நிரூபிக்க முடியாது தான், ஆனால் எங்களில் பெரும்பான்மையானவர்களுக்கே இப்படி எல்லாம் நடந்தன என்று இன்றுவரை தெரியாது...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பத்தோடு பதினொன்றாக இருக்காமல், தனித்தன்மையுடன் இருப்போம் என்று தான் நானும் வித்தியாசமாக பாகிஸ்தானை தெரிவு செய்தேன்..................... பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறி விட்டதால் இந்த ஆடுகளம் தப்பிவிட்டது..................🤣.
-
ராணுவ ரகசியம்
🤣.............. இங்கு வந்து முதலாம் திகதியுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது. களத்தில் ஓரளவு வந்து போகும் நட்புகளில் யார் யாருக்கு எந்த எந்த விடயங்களில் ஒவ்வாமைகள் இருக்கின்றன் என்ற புரிதல் எனக்கு ஓரளவுக்கு வந்துள்ளது என்று நினைக்கின்றேன்........ நிலைமை கையை மீறும் போது, அந்த விடயங்களில் காந்தி தாத்தாவின் மூன்று பொம்மைகளாகி விடுவது தான் என் தெரிவாக இருக்கின்றது......................🤣. இந்தியாவில், தமிழ்நாட்டில், இங்கிருக்கும் இந்தியர்கள் என்று எங்கேயும் நானும் இந்த 'இந்திய ராணுவ' மணத்தை அறிந்ததில்லை......... சீக்ரெட் ரெசிபி போல.....................
-
ராணுவ ரகசியம்
கோஷானும் ஒன்றை சொல்லியிருக்கின்றார். பொதுவாகவே எவரும் இந்த விடயங்களை எங்கும் எழுதியதை நான் இதுவரை காணவில்லை. அதனால் தான் முற்றாகத் தவிர்த்தேன்......... 👍................உங்களுக்கு இந்த இடம் நல்லாவே தெரிந்திருக்கின்றது......... மழை காலங்களில் தீருவிலில் வெள்ளம் நிரம்பி வழியும், ஆகவே சில நாட்களில் இங்கு போய் பந்தடிப்போம்......... 🤣........... தேங்காய் எண்ணெய்யும், நல்ல எண்ணெய்யும் கலந்த ஒன்று தான் வரும்.........🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மையே வசீ................ பொதுவாகவே பலரும் சில விடயங்களை இலேசாகவும், வேறு சில விடயங்களை அதிக அர்த்தங்கள் உள்ளவையாகவும் ஆக்கிக் கொள்கின்றனர். இன்னும் சிலருக்கு வாழ்வில் எல்லாமே வெற்றி - தோல்வி வரை போகும் போட்டிகள் தான்........ ஆடுகள் போல சிலரும் உள்ளனர். இங்கே ஒரு கடி, அங்கே ஒரு கடி என்று சும்மா மேய்ந்து கொண்டு, எல்லாவற்றையும் இலேசாக கடந்து போகும் மனிதர்கள்............
-
ராணுவ ரகசியம்
இதுவே தான் என் நண்பர்கள் பலருக்கும் நடந்தது. 1987ம் ஆண்டு ஏலெவல் தான் எங்களின் வகுப்பு. பரீட்சைக்கு இரண்டு மாதங்களின் முன்னர், இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை ஆரம்பித்து நாங்கள் ஊரை விட்டு ஓடினோம். பின்னர் இந்திய ராணுவம் வந்தது. பல நண்பர்கள் முதல் தடவை பரீட்சை எடுக்கவேயில்லை. எடுத்தவர்களில் மிகவும் திறமையானவர்கள் சிலருக்கு கூட மிகவும் மோசமான பரீட்சை முடிவுகள் வந்தன. அப்படியே இந்தியா அல்லது வேற நாடுகள் என்று போனார்கள். அப்படிப் போனவர்களில் மிகச் சிலரே மேற்கொண்டு படித்தனர். இன்று நண்பர்கள் பலரும் காசு பணம் சேர்த்து விட்டார்கள். ஆனாலும் வாழ்க்கையில் சில தவறவிடக் கூடாத விடயங்களை தவற விட்டு விட்டதாகச் சொல்லுவார்கள்...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டிகள் தொடங்க முன்னர், பாகிஸ்தான் இந்தியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தும் என்று நானும் ஒரு சாத்திரம் சொல்லியிருந்தேன்................... நான் தான் வீழ்ந்து போனேன்.................🤣.
-
ராணுவ ரகசியம்
🤣............... மூன்று தடவைகள் நாய்க்கடி வாங்கியிருக்கின்றேன் என்று சொல்ல எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது................... ஏனென்றால் இதை வைத்தே சில பகிடிகளை சொல்லுவார்களே என்று. உங்களுக்கும் மூன்று தடவைகள் இது நடந்திருக்கின்றது என்பது ஒரு புதுத் தைரியத்தை கொடுக்கின்றது...........🤣. அடுத்த தடவை ஊருக்கு போகும் போது, எப்படியும் இந்தச் சந்தர்ப்பம் அமையத் தான் போகின்றது..... மெதுவாக அவைகளைக் கண்டும் காணாமல் போகப் போகின்றேன்...... ஆனால் நான் பாடுவதாக இல்லை......... இங்கு வட கலிஃபோர்னியாவில் ஒரு நண்பர் மிருக வைத்தியராக இருக்கின்றார். சில மாதங்களின் முன் என்று நினைக்கின்றேன், சிகிச்சைக்கு வந்த ஒரு பெரிய நாயை அவர் எதற்காகவோ தூக்கவோ அல்லது அசைக்கவோ முற்பட, அது திமிறியதில், அவருக்கு இடுப்பு பிடித்து, பல நாட்கள் சிரமப்பட்டார்.........
-
ராணுவ ரகசியம்
அவர்களுக்கு ஆட்களுக்கா பஞ்சம், சுவி ஐயா.................. ஒவ்வொரு இடத்திலும் இப்படிக் கூட்டமாகவே நின்றார்கள். இந்திய ராணுவம் உலகின் நாலாவது பெரிய ராணுவம் என்று இதை வைத்து தான் சொல்லியிருக்கின்றார்கள்........................🤣.
-
ராணுவ ரகசியம்
எங்கள் பகுதிகளில் தமிழ் இந்திய இராணுவ வீரர்கள் மிகக்குறைவாகவே இருந்தார்கள் என்று நினைக்கின்றேன். தமிழில் கதைக்கும் ஒருவரை ஓரளவு ஞாபகம் இருக்கின்றது, ஆனால் அவர் கூட கேரளா என்று தான் நினைக்கின்றேன். அவர் தான் எங்களை அந்த சுற்றி வளைப்புக்குள் மாட்டி விட்டவர் என்று நினைக்கின்றேன்........🤣. நான் அப்பாவிடம் உங்களுக்கு ரகசிய தகவலைச் சொன்ன அந்த இராணுவ வீரர் யார் என்று கடைசிவரை கேட்கவில்லை................
-
ராணுவ ரகசியம்
உங்களுக்கும், எல்லோருக்கும் என்னுடைய அனுமதி தாராளமாக இருக்கின்றது. நான் துண்டு துண்டாக பலதையும் பத்தையும் இங்கு களத்தில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். இங்கு களத்தில் எழுதுவதை ஒரு பொழுதுபோக்காகவே ஆரம்பித்தேன். இதே தலைப்பில் அல்லது இவை சம்பந்தமான விடயங்களை தொடர முடிந்த அளவிற்கு முயற்சி செய்கின்றேன். உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி...................🙏.
-
ராணுவ ரகசியம்
🤣........ ஊரில் இரண்டு தடவைகளும் சிறு வயதில் ஓடித் தான் கடி வாங்கினேன். ஆனால் திருச்சியில் கடித்தது என் பெற்றோர்கள் வீட்டில் வளர்த்த அவர்களின் செல்லப்பிராணி..................... காலுக்கு கீழே படுத்திருந்தது. நான் திரும்பும் போது அதன் மேல் கால் பட்டது, எட்டி ஒரே கடி................... உடனேயே அங்கே ஒரு தனியார் மருத்துவமனைக்கு போனோம். ஒரு ஊசி போட வேண்டும், திரும்பி நில்லுங்கள் என்றார் மருத்துவதாதி. இடது சட்டைக் கையை நன்றாக உயர்த்தி விட்டு, கையை நீட்டிக் கொண்டு நின்றேன்.......... ஆனால் அவர்கள் ஊசியை போட்டது பின்பக்கத்தில்.......🤣. எழும்பி நிற்க சொன்ன உடனேயே எனக்கு விளங்கியிருக்கவேண்டும்..............
-
ராணுவ ரகசியம்
🤣......... இந்திய ராணுவம் வந்த ஆரம்ப நாட்களில், அவர்கள் எங்களுடைய உறவுகள், எங்களுக்கு உதவிகள் செய்யப் போகின்றார்கள் என்ற எண்ணத்தில் நாங்கள் பலரும் இருந்தோம். நாங்கள் 'லிபரேஷன் ஆபரேஷன்' நடந்த போது ஊரை விட்டு ஓடியிருந்தோம். இந்திய ராணுவம் வந்தவுடன் ஊருக்கு திரும்பி வந்தோம். வரும் வழிகளில் அவர்களைப் பார்த்த போது மிகவும் நேர்மறையான எண்ணம் இருந்தது. ராணுவ ரகசியம் என்னவென்றால்................. ராணுவம் எப்போதுமே ராணுவம் தான்............... எவ்வளவு தூரத்தில் அவர்களை வைத்திருக்கின்றமோ அவ்வளவிற்கு அனுகூலம்.........👍. நாய்களின் கண்களை நின்று நேரே பார்த்தால், அவை பின்னால் போகும் அல்லது அடங்கி விடும் என்று எங்கோ வாசித்த ஞாபகம். மூன்று தடவைகள் நாய்களிடம் கடி வாங்கியிருக்கின்றேன், இரு தடவைகள் இலங்கையில், ஒரு தடவை திருச்சியில்........... ஆதலால் இந்த தியரியில் பலத்த சந்தேகம் இருக்கின்றது................🤣.
-
ராணுவ ரகசியம்
ராணுவ ரகசியம் --------------------------- நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. பொழுது இன்னும் விடிந்திருக்கவில்லை, நேரம் அதிகாலை நாலு அல்லது ஐந்து மணி ஆகியிருக்கும் போல. வெளியில் இருட்டு இன்னும் கும்மிக் கொண்டிருந்தது. இந்த நாய்கள் இவர்களுக்கு ஏன் அடங்கிப் போகின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியம் தான். ஒரு வேளை குலைக்கும் நாய்களை எப்படி குலைக்காமல் அடக்குவதென்று இந்திய ராணுவத்தில் ஒரு பயிற்சியும் இருக்கின்றதாக்கும். இதுவே இலங்கை ராணுவம் எவ்வளவு தான் பதுங்கிப் பதுங்கி வந்தாலும், எங்கள் ஊர் நாய்கள் விடாமல் குலைத்து, சில வேளைகளில் இலங்கை இராணுவத்திடம் அடிவாங்கி இழுபட்டு ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டே ஓடியும் இருக்கின்றன. இலங்கை இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் இருந்த வித்தியாசங்களில் ஒன்று இந்திய ராணுவத்தின் மணம். அந்த மணம் அல்லது வாடை எங்கேயிருந்து அவர்களின் மேல் வருகின்றது என்று தெரியவில்லை. ஆனால் நண்பன் ஒருவன், அவன் ஒரு நாள் இவர்களிடம் தனியாக மாட்டுப்பட்டான், சொன்ன தகவல்களின் படி அந்த மணம் அவர்களின் சட்டை அல்லது நீண்ட காற்சட்டைப் பைகளுக்குள் இருக்கும் சப்பாத்திகளின் மணமே. இந்திய இராணுவத்தினர் சப்பாத்திகளை அங்கங்கே சுருட்டி வைத்திருக்கின்றார்கள் என்று அவன் சொன்னான். ஒரு பனங்கூடலுக்குள்ளால் அவனை நடத்தி கூட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்த போது அந்தச் சப்பாத்தியில் ஒன்றை அவர்கள் அவனுக்கும் கொடுத்ததாகச் சொன்னான். உயிரா அல்லது அந்தச் சப்பாத்தியா என்று நினைத்து அதை சாப்பிட்டதாகச் சொன்னான். அவன் வேறு சிலவும் சொன்னான், அவை பொதுநலம் கருதி இங்கே தவிர்க்கப்படுகின்றன. ஒரு தடவை இந்திய ராணுவம் ஊரைச் சுற்றி வளைத்து தேடுகின்றார்கள் என்ற செய்தி கேட்டு, நாங்கள் சிலர் விழுந்தடித்து அருகில் இருக்கும் ஒரு ஊருக்கு ஓடிப் போனோம். அங்கு ஒரு விளையாட்டுத் திடல் இருக்கின்றது. அந்த விளையாட்டுத் திடலுக்கு ஒரு பெயர் இருக்கின்றது. அப்படி ஒரு பெயரை எந்த இடத்திற்கும் வைக்கவே கூடாது. ஆகவே அதையும் இங்கே தணிக்கை செய்கின்றேன். அந்த திடலின் மூன்று பக்கங்களிலும் அடர்த்தியான பனங்கூடல்கள் இருந்தன. ஒரு பக்கம் மட்டுமே வீடுகள் மற்றும் பாதை இருந்தன. மூன்று பனகூடல்களுக்குள்ளும் ஒற்றையடி பாதைகள் இருந்தன. அப்பாடா............ இன்றைக்கு இந்த இந்திய ராணுவத்திடம் இருந்து தப்பியாகி விட்டது என்று அந்த திடலின் ஒரு பக்கமாக நின்று சாவகசமாக கதைத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று எங்களுக்கு பின்னால் இருந்த பனைகளுக்கு இடையால் திபுதிபுவென்று இந்திய இராணுவத்தினர் வெளியே வந்தனர். எங்கேயிருந்து, எப்படி வருவார்கள் என்ற ஒரு வரையறை இவர்களுக்கு கிடையாது. இந்திய ராணுவம் வந்த ஆரம்ப நாட்களில் அவர்கள் சுற்றி வளைத்து எங்களை பிடிப்பது நாங்கள் சின்ன வயதுகளில் விளையாடும் கள்வன் - போலீஸ் விளையாட்டு போலவே. 'ஆ..... உன்னைப் பார்த்தாச்சு.............. நீ அவுட்.............' என்று சொல்வது போல, எங்களைக் கண்டால் கூட்டிக்கொண்டு போவார்கள். ஏதாவது ஒரு பாடசாலை, கோவில் வீதி, மைதானம் இப்படி எங்காவது வைத்திருந்து விட்டு, அநேகமாக எல்லோரையும் அன்றே விட்டுவிடுவார்கள். அவர்கள் எங்களை விடுதலை செய்யும் வரை எங்களின் அம்மாக்கள் வந்து அந்த இடத்தை சுற்றியே நிற்பார்கள். ஒரு நாள் அவர்கள் எங்களைப் பிடித்து விட்ட பின்னர், வரும் வழியில் அந்த இராணுவத்தினரில் ஒருவருக்கு எவ்வளவு நீட்டு தலைமுடி என்று அம்மா ஆச்சரியத்துடன் சொன்னார். அம்மாவும் எங்களைப் போலவே இலேசாகத்தான் அங்கே வெளியில் நின்றிருக்கின்றார். ஆனால் மிக விரைவிலேயே நிலைமைகள் மாறியது. அமைதி என்று ஆரம்பித்தது அடிபிடியாகியது. சுற்றி வளைப்பில் பிடிபட்டால் சப்பாத்தி கொடுக்கும் காலம் முடிந்து, சப்பாத்தால் மிதித்தாலும் மிதிப்பார்கள் என்ற ஒரு கஷ்ட காலம் மீண்டும் வந்திருந்தது. எங்களின் ஆட்கள் சிலரே அவர்களுக்கு உதவியாளர்களாக மாறியது தான் பெரும் கலக்கமாக மாறியது. சுற்றி வளைப்பில் எங்களை பிடித்துக் கொண்டு போக, அங்கே உதவியாளர்களாக இருக்கும் நம்மவர்கள் தலையாட்டிகளாக மாறினார்கள். அவர்கள் எங்களைப் பார்த்து தலையை ஆட்டினால், தலையாட்டப்பட்டவர்கள் உள்ளே. மற்றவர்களை விட்டுவிடுவார்கள். உள்ளே போனவர்களை, பெரும்பாலும் எல்லோருமே அப்பாவிகள் தான், வெளியே எடுப்பதற்கு பலர் வரவேண்டும். பாடசாலை அதிபர்கள், ஊர்ப் பெரியவர்கள், மத குருக்கள், இப்படிச் சிலர் இந்தக் கடமையையும் செய்து கொண்டிருந்தார்கள். அருகில் இருந்த இந்திய ராணுவ முகாமில் பிரதான தலையாட்டியாக இருந்தவரை எனக்கு நல்லாவே தெரியும். அதைவிட முக்கியம், அவருக்கும் என்னை நல்லாவே தெரியும் என்பது தான். கிட்டத்தட்ட ஒரே வயது தான். அந்த பிரதான இராணுவ முகாம் ஊடாகவே பேருந்துகள் போய் வந்து கொண்டிருந்தன. பேருந்துகளில் போய் வந்து கொண்டிருந்த சில நண்பர்களை காரணமே இல்லாமல் இறக்கி நல்லாவே அடி போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். எங்களால் ஊகிக்க முடிந்த ஒரே ஒரு காரணம் அந்த பிரதான தலையாட்டி மட்டுமே தான். என்னையும் ஒரு நாள் தலையாட்டி பார்த்தார், ஆனால் இறக்கவும் இல்லை, அடிக்கவும் இல்லை. அப்பவும் நான் வம்பு தும்பு என்று எதற்கும் போவது இல்லை என்பது தான் காரணம் போல. இன்னொரு சின்னக் காரணமாக அவருடைய முறைப்பெண் முறையான ஒருவர் என்னிடம் படித்துக் கொண்டிருந்ததும் என்று நினைக்கின்றேன். வீட்டில் நின்று இந்திய ராணுவத்தின் கைகளில் சிக்கவே கூடாது என்ற முடிவை ஒரு சம்பவத்தின் பின் எடுத்திருந்தேன். ஒரு நாள் எல்லாப் பக்கத்தாலும் வீட்டுக்குள் அவர்கள் திடுப்பென வந்தார்கள். மூன்று நாய்கள் முற்றத்தில் அவர்களைக் கண்டும் காணாதது போல தங்கள் முகநாடிகள் தரையில் தேயும்படி படுத்திருந்தன. பின் வளவுக்குள் இருந்த பனம்பாத்தி என்ன என்பதே அவர்களின் முதலாவது கேள்வி. அவர்களுக்கு அதை என்னவென்று ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லும்படி வீட்டில் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். என்னுடைய விளக்கத்தின் பின்னும் அவர்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள். நான் கொடுத்த பனம்பாத்தி விளக்கம் அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் நான் என்ன சொன்னேன் என்று எனக்கே புரிந்திருக்கவில்லை. தலையாட்டப்படாமலேயே அன்று தடுத்து வைப்பார்கள் என்று நினைத்தேன், அன்றும் பிரதான தலையாட்டி எனக்கு தன் தலையை ஆட்டவில்லை. ஆனால் எங்களின் நண்பர்களில் ஒருவனை தடுத்து வைத்துவிட்டனர். பின்னர் அன்றிரவு, வழமையான முயற்சிகளின் பின், அவன் விடுவிக்கப்பட்டான். அடுத்த நாள் ஒரு பெரிய தேடுதல் ஊரில் நடக்கப் போவதாக அப்பா வந்து சொன்னார். சல்லடை போட்டுத் தேடப் போவதாகாவும், பலரைக் கைது செய்யும் திட்டம் இருப்பதாகவும் சொன்னார். இந்த தகவல் மிகவும் இரகசியமானது என்றும், இந்திய ராணுவத்தில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு வீரர் மூலம் தெரிய வந்ததாகவும் கூட சொன்னார். அயலூர் ஒன்றைத் தவிர மற்றைய ஊர்கள் எல்லாவற்றையும் அதிகாலையிலேயே சுற்றி வளைக்கப் போகின்றார்கள் என்றும் சொன்னார். அந்த அயலூரில் மாமி ஒருவர் இருந்தார். ஆதலால் எல்லோரும் இப்பவே கிளம்பி மாமி வீட்டை போவோம் என்றும், நாளை மறுதினம் திரும்பி வரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. எங்களின் வீட்டில் ஏராளமான ஆட்கள், அதை விட மாமியின் வீட்டில் இன்னும் அதிகம். எங்கள் எல்லோருக்கும் மாமியின் வீட்டில் இடம் இருக்கவில்லை. நல்ல காலமாக மாமியின் வீட்டிற்கு அருகில் ஒரு வீடு காலியாக இருந்தது. அந்த வீடு வரலாற்றில் மிக முக்கியமான ஒருவரின் வீடு. அவரின் பெயரையும் இங்கு தணிக்கை செய்து கொள்வோம். அவரின் குடும்பத்தார்கள் எப்போதோ இந்தியாவுக்கு போய்விட்டார்கள். மாமியிடமே அந்த வீட்டின் பொறுப்பு இருந்தது. மாமியின் வீட்டில் இரவு சாப்பிட்டு விட்டு, நாங்கள் சிலர் அருகில் இருக்கும் அந்த வீட்டிற்கு போனோம். அந்த வீட்டில் படுத்திருக்கும் போது தான், விடிகாலையில் நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. இராணுவத்தினர் சாரைசாரையாக இங்கிருந்தும் அங்கே எங்களூருக்கு போகின்றார்கள் போல என்று நினைத்துக் கொண்டே மீண்டும் நித்திரையாகினேன். விடிந்து கொண்டு வர, முன் கதவைத் திறந்து கொண்டு ராணுவத்தினர் உள்ளே வந்தார்கள். எங்களைக் அப்படியே அள்ளிக் கொண்டு போய் ஒரு பாடசாலை மைதானத்தில் வைத்திருந்தனர். அன்றைய நாள் முடிவில் விசாரணைகள் முடிந்து எங்களை விட்டார்கள். நாங்கள் தங்கியிருந்த அந்த வீட்டின் விபரங்கள் அங்கு வந்து எங்களைக் கொண்டு போன இந்திய இராணுவத்தினருக்கு தெரிந்திருக்காதது எங்களின் அதிர்ஷ்டம். அடுத்த நாள் காலையில் எங்கள் வீட்டுக்கு வந்தோம். எங்கள் ஊரில் எந்த சுற்றி வளைப்பும் நடக்கவே இல்லை என்று சொன்னார்கள்.
- RaanuvaRakashyam.jpg
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
என்ன செய்வது மருதங்கேணியாரே, எனக்கு பிடித்ததை தானே என்னால் எழுதக் கூடியதாக இருக்கின்றது. 2009ம் ஆண்டிற்கு முன்னர் நாங்கள் இங்கு ஒரு நாடகம் எழுதி மேடையேற்றியிருந்தோம். ஆனால் 2009ம் ஆண்டு நடந்ததோ அந்த நாடகத்தில் நாங்கள் எழுதியிருந்ததிற்கு முற்றிலும் மாறாக............ எங்களின் விருப்பத்தை எழுதியிருந்தோம், ஆனால் சாத்தியம் வேறாக இருந்தது............. பலத்தினால் ஒருவர் இன்னொருவரை அடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக எதிர்த்து போராடும் அளவிற்கு நான் ஒரு தியாகியோ அல்லது வீரனோ அல்ல. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பலவீனமானவர்களுக்கும் மனதார ஆதரவு வழங்கினேன்; ஆதிக்க சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்தேன் என்றாவது இது இருந்து விட்டுப் போகட்டும்............
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நான் ஒரு சாத்வீகியாகத்தான் இருந்தேன்............. என்னை சரியாக நான்கு தடவைகள் மைனஸ் துப்பாக்கியால் சுட்டார்கள்................... 'நீங்கள் என்ன கிழித்தீர்கள்........ மூடிக் கொண்டு போங்கள்.........' என்றார் இன்னொருவர். இந்த அளவு மரியாதை கூட யாழ் களத்தில் நேரடியாக ஒருமையில் எழுதினால் கூண்டுக்குள் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தினால் மட்டுமே கிடைத்தது.............. இப்படித்தான் என்னிடம் விசயம் இருக்கின்றது என்ற விசயம் எனக்கு தெரிய வந்தது............😜.
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
இதெல்லாம் சுத்த அநியாயம்................... வெறும் ஆறே ஆறு மாத தொடர்பு....... தொடர்பு என்று கூட சொல்ல முடியாது, ஒரு சேவை கொடுக்கல் வாங்கல் என்று தானே அவர் சொன்னார்............ இதற்குப் போய் என்ன பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் நீதிமன்றின் வெளியே............. இந்த தடவை மதுரை செல்வம் பேச்சுவார்த்தையில் உசாராக இருக்கவேண்டும். விஜயலட்சுமி பல வருடங்களாக யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்று பட்டியலிட்டிருக்கின்றார்கள்......... என்ன, இந்தப் பக்கம் ஆறு மாதங்கள் மட்டுமே என்றவுடன் தான் கொஞ்சம் யோசனையாக இருக்கின்றது............. 'அண்ணனின் ஆறு மாதங்கள்.........' என்று இன்னொரு பட்டியலை அவரின் எதிரிகள் வெளியிட்டு விடுவார்களோ என்று............................ அரசியலிலும், சினிமாவிலும் இது எல்லாம் சகஜம் என்ற முடிவுக்கு வந்து விட்டதால், இனிமேல் பிரச்சனை ஒன்றுமே இல்லை, இப்படியான விசயங்களை இடதுகை புறங்கையால் ஒதுக்கி விட்டு முன்னர் போலவே போய்க் கொண்டேயிருக்கலாம்...............
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
வில்லவன், ஒவ்வொரு பூனையின் ரியாக்ஷனும் அருமை.........👍. நீங்கள் ஒரு சித்திரக்கதை எழுதினால் மிக நல்லாக வரும்.........
-
உக்ரேன் ஜனாதிபதியை பாராட்டிய ட்ரம்ப்!
🫢........ இதே வார்த்தையை நீங்கள் தமிழில் எழுதியிருந்தால், உங்களை கூண்டில் அடைத்திருப்பார்கள்.........🤣.
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
நல்லதொரு கட்டுரை. நேற்று இரவு நியூஸ் 18 செய்திகளிலும் பார்த்தேன். நேற்றைய நாள் இரண்டு விடயங்களுக்காக மறக்கவே முடியாத ஒரு நாளாகிவிட்டது.
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
ஊரில் இருந்த ஒரு வீட்டிற்கு இரண்டு பக்கங்களில் கோவில்கள் இருந்தன. பெரிய அரசமரங்கள் வீட்டின் முன் மூலை ஒன்றிலும், பின் மூலை ஒன்றிலும் நின்றன. ஒரு தடவை வந்த ஷெல் ஒன்று முன் மூலை அரசமரத்தில் பட்டு அரசமரம் சிதறியது. சன்னங்கள் சுற்றிவர பொழிந்தது. நாங்கள் எல்லோரும் தப்பினோம், அந்த அரசமரத்தை பலி கொடுத்து. இதையெல்லாம் கடந்து வந்தது, மூன்றாம் உலகப் போரில் அமெரிக்காவுடன் சேர்ந்து சிதற வேண்டும் என்பதற்காக போல...............🤣. அந்த நேரத்தில் கடைசி ஆசை என்னவென்று கேட்பார்கள் தானே............... சின்னச் சின்னதாக நிறையவே இருக்கின்றன.................🤣.
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
பெரிய பூனை இன்றிரவு நித்திரை வராமல் உருண்டு பிரண்டு கொண்டிருக்கும்........ விடிவிடிய அது இன்னொரு கதை சொல்லும்........🤣
-
பூனைகளின் பேச்சுவார்த்தை
🤣........... நீங்கள் அலுவல்கள் காரணமாக இங்கே வருவது குறைவாக இருந்த சமீப நாளொன்றில், 'செத்தகிளிக்கு செட்டை முளைத்து அது பறக்குது. எங்கே வாலி...........' என்று யாரோ தேடினார்கள்..........🤣.