Everything posted by ரசோதரன்
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவிற்கு ரஷ்யாவிடமிருந்தூ ஏதோ சில பொருட்கள் மிகவும் மலிவு விலையில் அல்லது இலவசமாக கிடைக்கப் போகின்றன.............. ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போகமாட்டார்.... இது எல்லா நாடுகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும். ஒரு நாடு, ஒரு இனம் அதன் சுயநிர்ணய உரிமையை இழப்பது கொடுமையான, அநியாயமான ஒரு நிகழ்வு. எங்களுக்கு நடந்தது, இன்று உக்ரேனுக்கு நடக்கின்றது, இதே பலசாலிகளால் நாளை இன்னும் பலருக்கும் இதே நிலைமை வரும்................. பாதிக்கப்பட்டவர்களாவது பாதிக்கப்படுகின்றவர்களுக்கு ஒரு ஆதரவுக் குரலையாவது பதிவு செய்யவேண்டும்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣.............. என்னை விட உங்களுக்கு இன்றைய கிரிக்கெட் கொஞ்சம் கூடத் தெரிந்திருக்கின்றது.....................🤣.
-
சும்மா ஒர் பதிவு
மழைநீரை அப்படியே கடலுக்குள் ஓடவிடும் பாதகமான நிலை இன்று பல நாடுகளிலும் நகர்ப்புற வளர்ர்சிகளின் பின் வந்துவிட்டது. நிலத்தடி நீரின் மட்டம் மிகவும் கீழே போய் சுத்தமான குடி தண்ணீருக்கு அலையும் மக்கள் தொகை ஒரு பெரிய தொகை என்ற தரவுகளும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஒரு ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மழை நீரை தேக்கி, நிலத்துக்குள் விடும் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. இங்கு லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் பெரிய வெளிகளில் நீரைத் தேக்கி வைக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார்கள்................... அதை ஆரம்பித்த பின் மழை தான் பெய்யவில்லை............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தூக்கத்தில் இருந்து எழும்பும் போதே எனக்கு ஒவ்வொரு நாளும் துக்கம் தான் போல...........🤣. இப்ப அசரக்கூடாது........................ ஷியா உல் ஹக் காலத்திலிருந்தே பாகிஸ்தானைப் பிடிக்காது, இன்சமாம் உல் ஹக் காலத்திலிருந்தே அவர்கள் கடைசியாக வர வேண்டும் என்று நினைத்தனான் என்று முதலில் எனக்கு நானே சொல்லப் போகின்றேன்............🤣 ஒரு வேளை முதலாவது போட்டியை ஆண்டவனுக்கு விட்டுக் கொடுத்திருப்பார்களோ........ நாம தான் சரியாக கவனிக்கவில்லை போல..........😜.
-
ஒரு முட்டை ஆயிரம் டாலர்
அந்த நாட்களில் ஊரில் கோழி 'தூங்குது....' என்று சொல்வார்கள். அது மற்ற கோழிகளுக்கும் பரவி விடும் என்று தூங்குகிற கோழிகளை கொடுத்துவிடுவார்கள். அது போலத் தான் இந்த பறவைக் காய்ச்சல் நோயும் போல. என்னுடைய வீட்டில் வளர்க்கின்ற கோழிகளை சாப்பிடக்கூடாது என்ற ஒரு வழக்கம் இருந்தது......
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தப் பெரிய களத்தில் எட்டே எட்டுப் பேர்கள் தான் கேள்வியை விளங்கி பதில் எழுதியிருக்கினம்...................😜.
-
ஒரு முட்டை ஆயிரம் டாலர்
ஒரு முட்டை ஆயிரம் டாலர் ------------------------------------------ இப்ப இங்கே பல கடைகளில் முட்டை இல்லை சில கடைகளில் இருக்கின்றது ஆனால் எண்ணி எண்ணித்தான் வாங்கலாம் பலத்த கட்டுப்பாடு தட்டுப்பாட்டால் விலையும் பல மடங்காகிவிட்டது கோழிகளுக்கு காய்ச்சல் வந்தது என்று சும்மா சுகமாக நின்றவைகளையும் அழித்துப் போட்டார்கள் இப்ப புதுதாகக் குஞ்சுகளும் வேண்டாம் என்று அங்கே குடும்பக் கட்டுப்பாடு திட்டமும் வந்துள்ளது இது என்ன கலிகாலம் அமெரிக்காவில் முட்டைப் பொரியல் கூடக் கிடையாதா...... ஊரில் வீட்டில் கோழிகள் இருந்தன அப்பா முதன் முதல் ஒரு கோழி வாங்கித் தந்தார் ஒரு விதமான மஞ்சள் கலரில் வெள்ளைப் புள்ளிகள் போட்ட கோழி அது அது வீட்டுக்கு வரும் போது அதன் வயது நாலு மாதங்கள் இருக்கும் ஒரு நாள் முழுக்க கிளிசரியா மரத்தடியில் கட்டி வைத்து விட்டு அடுத்த நாள் அவிழ்த்துவிட்டேன் அப்படியே வீட்டை சுற்றிச் சுற்றியே நின்றது அடுத்த அடுத்த மாதம் முட்டை போட ஆரம்பித்தது முதல் முட்டை போடு முன் பெரிய எடுப்புகள் எல்லாம் எடுத்தது ஒரு அதிகாலையிலேயே தலைமாட்டில் வந்து பதுங்கியது அது கேரிக்கொண்டு திரியும் போதே முட்டை போடப் போகின்றது என்று ஆச்சி சொன்னார் அதைப் பிடித்து கடகத்தால் கவிழ்த்து வைக்க முட்டை போட்டது சுற்றி இருந்த மூன்று வீட்டுக்கும் அது முட்டை போட்ட விசயம் தெரிந்தது அப்படி ஒரு விடாத கொக்கரிப்பு பன்னிரண்டு முட்டை போட்டு விட்டு அது அடை என்று ஒரு மூலையில் குணுகிக்கொண்டு படுத்துவிட்டது பின்னர் அயலூரில் முட்டை வாங்கி அடை வைத்து குஞ்சுகள் வந்து வந்து அதன் குடும்பம் பெருகியது பின்னர் முட்டை நாங்கள் கடையில் வாங்கவே இல்லை சரி இங்கும் கோழி வளர்ப்போம் என்று விசாரித்தேன் அக்கம்பக்கத்தவர்கள் சம்மதம் சொல்லவேண்டும் முதலில் பின்னர் ஒரு பெரிய கூடு வேண்டும் கோழிகளுக்கு தீனி வாங்க வேண்டும் கடையில் மருத்துவரும் வந்து போவார் அப்பப்ப அந்த செலவும் இருக்கின்றது கோழிக் குஞ்சுகளும் வாங்க வேண்டும் அதை மறந்துவிட்டேன் எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் முதல் முட்டை கிடைக்கும் போது செலவு ஆயிரம் டாலர்கள் ஆகி விடும் என்று கணக்கு காட்டுகின்றது கலிகாலம் தான்!
- hens.png
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையன் சார், உங்களை இங்கு எல்லோரும் நன்கு அறிவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத, எந்த வித கணக்குகளும் போடாமல், அப்படியே நினைப்பதைச் சொல்லும், கள்ளம் கபடமற்ற ஒரு மனிதன் நீங்கள். என்னூரில் 'அவன் ஒரு அப்பிராணி......' என்று இப்படியானவர்களை சொல்லுவார்கள். ஒருவரை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் நல்ல நட்பின் அடிப்படையே. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.............. மற்றவர்களும் அப்படியே அவர்களாகவே இருந்து கொள்ளட்டும். மிகவும் முயன்று தமிழில் நீண்ட பந்திகள் எழுதுகின்றீர்கள்.......👍. சில சொற்களை தவிர்க்க முடிந்தால் தவிர்க்க முயலுங்கள்.....🙏. சிவப்பு புள்ளிகள் பற்றிக் கவலைப்பட ஒன்றுமேயில்லை, பையன் சார்............... ஒன்றை விரும்புவதை விட, வெறுப்பதற்கே மனிதனுக்கு அதிக வலு தேவைப்படுகின்றது. ஒரு மனிதன் வெறுக்கும் விடயங்களே அந்த மனிதனை அறியாமல் அந்த மனிதனை ஆட்கொள்கின்றது. வெறுப்பதனால் மனிதன் தன்னையே அழிக்கின்றான். 'விருப்பம்' அல்லது 'விருப்பம் இல்லை' என்று எதையும் சாதாரணமாக கடந்து போவது நல்ல ஒரு நிலை........ இல்லாவிட்டால் மற்றவர்கள் அவர்களின் செய்கைகளாலும், சொற்களாலும் எங்களை கட்டுப்படுத்துவது போலாகி விடும்.....🤝.
-
CM ஸ்டாலின், இபிஎஸ், சீமான், விஜய் ஆகியோர் வீட்டு குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள்…? நெஞ்சைத் தொட்டு உண்மையை சொல்லுங்க… அண்ணாமலை கேள்வி..!!
'மும்மொழிக் கொள்கை என்னும் முதிர்ச்சியின்மை முடிவுக்கு வருமா......' என்ற தலைப்பில் நல்லதொரு கட்டுரையை பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் மின்னம்பலத்தில் எழுதியிருக்கின்றார்: https://minnambalam.com/political-news/immaturity-of-the-trilingual-policy/ இந்தக் கட்டுரையில் மூன்றாவது மொழி என்பது மாணவர்களுக்கு எப்படி ஒரு சுமையாகின்றது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அத்துடன் மூன்றாவது மொழியோ அல்லது ஹிந்தியோ தெரியாமல் இருக்கும் தமிழ்நாடு எந்தத் துறையிலும் பின்னே நில்லாமல், மாறாக முன்னேயே, மற்ற மாநிலங்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக, போய்க் கொண்டிருக்கின்றது என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. கட்டுரையில் பேசப்படாத, ஆனால் இந்த தலைப்புக்கு தொடர்பான ஒரு விடயம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்களின் தெரிவாக என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பது. திராவிடம் பேசும், தமிழ்த் தேசியம் பேசும், இரண்டையும் கலந்து கொண்டிருக்கும் என்று பொதுவாழ்வில் மேடையேறும் மிகப் பெரும்பான்மையான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், பிரபலங்களும் தங்கள் பிள்ளைகளையும், சந்ததிகளையும் தமிழ் மொழி ஊடாகவோ அல்லது அரச பாடசாலைகளிலோ படிப்பிப்பதில்லை. தனியார் ஆங்கிலப் பாடசாலைகளிலேயே இவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கின்றனர். தரமான தமிழ் பாடசாலைகளே இங்கு இல்லை என்று அவர்களின் வசதிக்கேற்ப ஒன்றையும் சொல்லிவிடுகின்றனர். ஆனாலும், ஒவ்வொரு பரீட்சையிலும் மிகச் சிறந்த பெறுபேறுகளை தமிழ் மொழி மூலம் படிக்கும் பல மாணவர்கள் பெற்றுக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் இன்றைய தலைவரான நாராயணன், முந்தைய தலைவரான சிவன், இப்படி எண்ணற்றவர்கள் தமிழ்மொழி மூலமே கல்வி கற்றவர்கள். அதுவும் கூட, தமிழ்நாட்டில் பாடசாலைகளில் தமிழ் மொழி கட்டாயம் என்று சட்டத்தின் பின்பு தான், தமிழ் மொழியை தனியார் பாடசாலைகளில் இன்று படிப்பிக்கின்றார்கள். அதற்கு முன், அங்கு மாற்றீடாக வேறு மொழிகளையே, உதாரணம்: பிரெஞ்ச், சமஸ்கிருதம், படிப்பித்தார்கள். தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் வராதிருந்தால், திராவிடத் தலைவர்களினதும், தமிழ் தேசியத் தலைவர்களினதும் பிள்ளைகள் தமிழை ஒரு பாடமாகக் கூட படித்திருக்கமாட்டார்கள். சமஸ்கிருதத்தையே படித்திருந்திருப்பார்கள். சமஸ்கிருதமே பலரின் தெரிவாக இருந்தது, காரணம் மிக இலகுவாக அங்கு அதிக புள்ளிகள் கிடைக்கும் என்பதால். நடிகர்களிடம் ஏமாறுவது போலவே, இந்த அரசியல்வாதிகளிடமும் மக்கள் ஏமாறுகின்றனர்.
-
ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
உங்களின் சொந்த இடத்தில், ஊர் ஒத்துக் கொண்டால் பொது இடத்தில் என்று தாராளமாகவே வையுங்கள். அப்படியே அம்பேத்காரையும், பெரியாரையும் வாசியுங்கோ........... உங்களின் மாறாத கருத்துகளோ, அல்லது மாற்றுக் கருத்துகளோ எதுவென்றாலும் அறிந்து தெளிவதில் தான் பூரணம் கிட்டும் எவருக்கும். ஆனால்................ இந்தச் சீண்டல் முற்றிலும் தேவையில்லாதது. எதற்கு இந்த அறைகூவல்........... இது ஒரு அரையின் கூவல் போலவே தோன்றுகின்றது........... உங்களிடமே முதிர்ச்சி இல்லை, இதில் நீங்கள் என்ன வழிகோலிட முடியும்..............🫣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஏது.............................. இனிமேல் பங்குபற்ற முடியாதா.................... இங்கே எழுதவும் மாட்டீர்களா................... பையன் சார், போட்ட contractஐ எடுத்துப் பாருங்கோ...... அதன்படி இன்னும் குறைந்தது 20 வருடங்கள் நீங்கள் பங்குபற்ற வேண்டும், எழுத வேண்டும்...... அதற்குப் பிறகும் விடமாட்டோம், புது contract போடுவம்......................❤️.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்னுடைய நேரப்படி நடுச்சாமம் 1:00 மணிக்கு ஆரம்பிக்கின்றது................. நான் நல்ல நித்திரையில் இருந்தாலும், என்னுடைய அணி உசாராகவே விளையாடும்................. இப்பவே எட்டுப் பேருக்கும் புள்ளிகளை போட்டு விடலாம்.......................😜.
-
காற்றாடி
காற்றாடி - அத்தியாயம் ஆறு -------------------------------------------- சிவா அண்ணா சுகமடைந்து மீண்டும் வேலைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் எடுத்தது. அந்த இடைப்பட்ட காலப்பகுதியில் அவன் தியேட்டரில் இருக்கும் பெரும்பாலான நேரங்களில் திரைப்பட கருவிகள் இருக்கும் அறையிலேயே இருந்தான். அவன் இப்பொழுது தியேட்டரை கூட்டுவதில்லை. காட்சிகள் ஆரம்பிக்கும் போது கலரி வகுப்பின் முன் போய் நிற்க வேண்டிய வேலையையும் அவன் இப்போது செய்வதில்லை. செல்வம் என்னும் ஒருவர் இந்த வேலைகளுக்காக புதிதாக வந்து சேர்ந்திருந்தார். செல்வம் அவனை விட சில வயதுகள் கூடியவர். அதிகமாக கதைக்கமாட்டார். அவரைப் பார்த்தால் தியேட்டரில் வேலை செய்பவர் போல தெரிவதில்லை. அந்த தியேட்டருக்கே அவர் தான் முதலாளி போன்று தான் அவரின் உருவமும், உடுப்புகளும், பாவனைகளும் இருந்தன. சிவா அண்ணா வந்த பின்னரும் அவனை அந்த அறையிலே தங்களுக்கு உதவியாக அவர்கள் இருவரும் வைத்துக்கொண்டனர். சில வேளைகளில் அவனை மட்டும் அங்கே அறையில் விட்டுவிட்டு அவர்கள் இருவரும் வெளியே போய் ஒரு பத்து நிமிடங்கள் கழித்தும் வருவார்கள். அவர்கள் சிகரெட் புகைக்கவே வெளியே போகின்றார்கள் என்று அவனுக்கு தெரியும். ஆங்கிலப்படம் ஒன்று தியேட்டருக்கு வந்திருந்தது. அது மாணவர்கள் பலரும் பார்க்க வேண்டிய படம் என்று பாடசாலைகளில், தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து என்று கூட்டம் கூட்டமாக மாணவர்கள் காட்சிகளுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அவன் படித்த பாடசாலையில் இருந்தும் வந்திருந்தார்கள். அவனின் வகுப்பு மாணவர்களும் வந்திருந்தனர். அவன் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. முதன் முதலாக அவன் மனதில் ஒரு தயக்கமும், வெட்கமும் வந்திருந்தது. அவனுடன் படித்த மாணவிகளும் வந்திருந்ததே அந்த தயக்கத்திற்கு காரணமாகக் கூட இருக்கலாம் என்றும் தோன்றியது. ஒரு நாள் அன்று வரவேண்டி இருந்த படப்பெட்டி வரவில்லை. பல ரீல்களும் மிகவும் சேதமாகி விட்டது என்று அந்த தியேட்டர்காரர்கள் படப்பெட்டியை அனுப்பவில்லை. புதுப்படம் ஒன்று அடுத்த நாள் வருவதாக இருந்தது. இந்த விடயம் தெரியாமல் அவன் தியேட்டருக்கு போயிருந்தான். அங்கு செல்வமும், முகாமையாளரும் மட்டுமே இருந்தனர். வெளியில் ஒரு அறிவிப்பை போட்டு விட்டு, சிறிது நேரம் இருந்து விட்டு முகாமையாளர் வீட்டிற்கு போவதாகச் சொல்லிக் கிளம்பிவிட்டார். செல்வமும், அவனும் இன்னும் சிறிது நேரம் அங்கிருப்போம் என்று தியேட்டரின் முன் மண்டபத்தில் இருந்த படிகளில் அமர்ந்தார்கள். 'இங்கேயே எப்போதும் இருந்து விடப்போகின்றாயா............' என்று அவனைப் பார்த்துக் கேட்டார் செல்வம். அவனுக்கு செல்வம் என்ன கேட்கின்றார் என்று புரியவில்லை. அவன் பதில் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்தான். 'இல்லை........... இது தான் நீ எப்பொதுமே செய்யப் போகும் தொழிலா...........' என்று கேட்டார் அவர். 'எனக்கு இது மிகவும் பிடித்திருக்கின்றது................' என்றான் அவன். 'எனக்கும் இது பிடித்திருக்கின்றது. ஆனால் இதில் கிடைக்கும் உழைப்பு ஒன்றுக்குமே காணாதே..............' 'அப்ப நீங்கள் வேறு ஏதாவது தொழிலும் செய்கின்றீர்களா........... நான் பகல் நேரங்களில் வயரிங் வேலைக்கும் போய்க் கொண்டிருக்கின்றேன்.' 'ம்ம்ம்............ அதுவும் ஒரு நிரந்தர வேலை என்றில்லை தானே...........' அவன் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர் நிச்சயம் பணத் தேவைக்காக இங்கே வரவில்லை என்பது முன்னரே தெரிந்திருந்தது. ஆனால் இப்பொழுது அவனை என்ன செய்யச் சொல்லுகின்றார் என்பது அவனுக்கு சுத்தமாகவே விளங்கவில்லை. 'நீ ஏன் கப்பலுக்கு போகக் கூடாது...........................' கப்பலுக்கு போவது என்றால் என்னவென்று அவனுக்கு தெரியும். கப்பலுக்கு போய் வருபவர்கள் ஊருக்கு வந்து நிற்கும் நாட்களில் ஒரு ராஜா போலவே நடமாடுவதை அவன் பார்த்திருக்கின்றான். அவனின் சொந்தத்தில் கூட ஒருவர் போய் வந்துகொண்டிருந்தார். அவர் ஊர் வந்து நின்ற போது அவர்கள் வீட்டில் அவனுக்கு ஒரு சூயிங்கம் பாக்கெட் கொடுத்தார்கள். இன்னொரு சொந்தக்காரருக்கு ஒரு சட்டை கொடுத்தார்கள். அந்த சட்டையில் உட்புறம் முழுவதும் வெள்ளையாகவும், வெளியில் பளபளப்பாக இருந்ததையும் அவன் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கின்றான். இப்படியான ஒரு சட்டையை பின்னர் எங்காவது வாங்க வேண்டும் என்றும் நினைத்திருந்தான். அப்படி போய் வருபவர்களின் குடும்பமும் ஒரு திடீர் பணக்காரர்களாக ஆகிக் கொண்டிருந்தனர். அவனும் ஒரு தடவை போய் வந்தால் என்னவென்று அவனுக்கு தோன்றியது. 'எல்லோரும் கப்பலுக்கு போகலாமா, செல்வம் அண்ணா..............' 'ஆ................. எல்லோரும் போகலாம். கட்டுக் காசு கொஞ்சம் கொடுக்க வேண்டும். அதைவிட சில விசயங்களும் இருக்குது. நீ நல்லா படிக்கக்கூடியவன் என்று சொல்கின்றனர்................' 'படித்தனான் தான் அண்ணா, ஆனால் தொடர முடியவில்லை...........' என்று பழியைத் தூக்கி விதியின் மேல் மெதுவாகப் போட்டான். 'கொஞ்சம் படித்தாலே கப்பலில் ஆபிசராக, இஞ்சினியராக வரலாம்........... போக முன் படித்து சில சேர்டிபிக்கட்டுகளை எடுத்தால், அங்கு போய் கடகடவென்று முன்னுக்கு வந்துவிடலாம்....................' செல்வம் அண்ணா தொடர்ந்தும் நிறைய தகவல்களைச் சொன்னார். தன்னுடைய சித்தப்பா ஒருவர் கப்பல் வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவராக இருப்பதாகச் சொன்னார். அவரின் சித்தப்பா மூலம் அவனுக்கு அவர் உதவி செய்வதாகச் சொன்னார். அவன் கொஞ்சம் திரிகோண கணிதம் படித்து வைத்தால் நல்லது என்றும் சொன்னார். அந்த ஒற்றை வசனம் அவனை தூக்கி அடித்தது. அவன் தன் கணிதப் பிரச்சனையை அவரிடம் இன்னும் சொல்லவேயில்லை. அவரே தொடர்ந்து ஊரில் இந்த அடிப்படைகளை ஒருவர் படிப்பிக்கின்றார் என்று சொல்லி, அவனை அங்கே போகச் சொன்னார். ரவி அண்ணா என்னும் அந்த ஆசிரியர் மிகவும் மெல்லிய குரலில் பாடத்தை ஆரம்பித்தார். பாடம் நடந்து கொண்டிருக்கும் இடம் அவனின் நண்பன் ஒருவனுடைய வீட்டின் பின்பக்கம் தனியாக இருக்கும் ஒரு அறை. அங்கு ஏற்கனவே பல மேசைகளும், வாங்கில்களும் போடப்பட்டிருந்தன. நண்பனின் அப்பா ஒரு ஆசிரியர். அவர் ஒரு காலத்தில் இங்கு பாடம் சொல்லிக் கொடுத்திருந்தார். இப்போது அவர் பாடசாலையை தவிர வேறு எங்கும் படிப்பிப்பதில்லை. பெரும்பாலும் கிரேக்க எழுத்துகளில் பாடம் போய்க் கொண்டிருந்தது. (தொடரும்.........................)
- kaaththaadi-6.jpg
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லாவற்றையும் பார்த்த பின் எனக்கு என்ன தோன்றுகின்றது என்றால்.............. ஒன்றுமே தோன்றவில்லை, பயமாகத்தான் இருக்கின்றது................. ஐந்து வருடத்திற்கு பின் வந்து ஏதாவது விளக்கம் கேட்டாலும் என்று இப்பவே தயாராக இருக்க வேண்டும் போல..................🤣.
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
🤣............. அமெரிக்காவின் ஒரு வருடத்துக்கான வெளியிடப்படும் பாதுகாப்புச் செலவு கிட்டத்தட்ட 900 பில்லியன் டாலர்கள் என்று ஒரு கட்டுரையில் இருந்தது. அது நீங்கள் இணைத்திருக்கும் தரவுடன் ஒத்துப் போகின்றது. பாதுகாப்புச் செலவை எல்லோரும் அரைப்பங்காக குறைக்கவே சீனாவையும், ரஷ்யாவையும் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று கூப்பிடுகின்றனர். சீனா மிகக் குறைவாகவே செலவு செய்து கொண்டிருக்கின்றார்கள். ரஷ்யா இன்னும் மிகக்குறைவு. மற்றும் இவர்கள் எல்லோரும் மறைத்தும் சிலவற்றை செய்வார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற கடப்பாடும் இவர்களுக்கு கிடையாது................ மூன்று தாதாக்கள் ஒரு உடன்பாட்டிற்கு வருவது போலவே இது.....
-
இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?
உங்களின் துயரம் புரிகின்றது, அண்ணா, ஆனால் இது ஒரு தண்டனை இல்லை............... அம்மாவும் அன்றைய நிலையில் நீங்கள் அங்கே வரக்கூடாது என்றே நினைத்திருப்பார்............... 'Don't be hard on yourself..................' என்று சொல்லுவார்கள், அண்ணா........... நாங்கள் விடும் தவறுகளைக் கூட நாங்களே மன்னித்து கொள்ளவேண்டும் என்ற ஒரு அர்த்தத்தில், அங்கிருந்து முன்செல்ல வேண்டும் என்ற பொருளில். இதில் உங்களின் தவறு ஏதும் இல்லை, அண்ணா.............🙏.
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
இங்கு ஆடிக்காற்றில் அம்மியே பறந்து கொண்டிருக்கின்றது.................. இவர் ஜெலன்ஸ்கி தனக்கு வர வேண்டிய பணம் வரவில்லை என்று குறைப்படுகின்றார்..............🤣. அடுத்ததாக Social Security and Medicare தான் இவர்களின் இலக்குகளாக இருக்கும். மிகப் பெரிய தொகை அங்கு போய்க் கொண்டிருக்கின்றது. ஆனால் அமெரிக்கா ஏற்கனவே முதியவர்களை காப்பதிலும், கவனிப்பதிலும் வளர்ந்த நாடுகளில் மிக மெத்தனமாக இருக்கும் ஒரு நாடு. வாக்கு வங்கியும் அங்கேயே இருக்கின்றது. அங்கு விரயங்கள் அல்லது ஊழல்கள் இருந்தால், சீரமைப்புக்கு மக்களும் ஒத்துக்கொள்வார்கள், ஆனால் வெறுமனே பயன்களை மட்டும் குறைப்பதற்கோ அல்லது இல்லாமல் செய்வதற்கோ மக்கள் உடன்படமாட்டார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனக்கு இந்த விபரங்கள் அவ்வளவாகத் தெரியாது, ஆனால் இந்திய அணி முன்னர் இருந்த இந்திய அணிகளை விட மிகத் திறமையான அணி என்று பொதுவாக கேள்விப்பட்டிருக்கின்றேன். ஐபிஎல் போட்டிகள் கூட நான் பார்த்ததில்லை, ஆனால் இந்தியாவின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஐபிஎல் ஒரு பிரதான காரணம் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன். வளர்ந்தவுடன், அவர்களுக்கு செருக்கும் வந்து விட்டது போல............ இலங்கை அணி மீது ஒரு ஒவ்வாமை எப்போதும் இருந்தது/இருக்கின்றது. இது எங்களின் இனப்பிரச்சனையையும் தாண்டியது............. இதன் பின்னால் வேறு தனிப்பட்ட உளவியல் காரணங்களும் இருக்கின்றது போல.............
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
🤣............... நூறு நாட்கள் வேலை திட்டத்தில் வேலையும் கொடுக்கின்றார்கள் இல்லை, இதுவரை செய்த வேலைகளுக்கு சம்பளமும் கொடுக்கவில்லை என்று போன வாரமும் தமிழ்நாட்டில் ஒரு போராட்டம் நடந்தது.................... அங்கு, வசீ சொல்லியிருப்பது போலவே, மேட்டுக்குடி மக்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிக அதிகம்.................
-
டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது
இப்படியும் ஒரு விமானம் கவிழும் என்று நினைத்தது கூட இல்லை. பெரிதாக நசியாதது ஆச்சரியம் தான், அதனால் தான் எல்லோரும் தப்பியுள்ளார்கள்.................👍. இறங்கிய பின், தரையைத் தொட்ட பின், சறுக்கி கவிழ்ந்திருக்குது போல.......... இங்கு வீதிகளில் SUV மற்றும் பெரிய ட்ரக்குகள் எப்பவாவது சறுக்கி கவிழ்வது போல........
-
ஒரு காரின் கடைசி வாக்குமூலம்
🤣................. அதெல்லாம் ஒரு ஆறு மாதங்கள் கூட கவனிக்கமாட்டார் அதை வாங்கியவர்.............. 'நாய்க்கு வேலையும் இல்லை நடக்க நேரமும் இல்லை...............' என்று ஊர்ப்பக்கம் சொல்லுகின்றவர்கள் தானே....................🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அன்றிலிருந்து இன்று வரை என்னுடைய அணி இந்திய அணியே.............😜. 80ம் ஆண்டுகளில் கிரிக்கெட்டை மிக அதிகமாக பின்பற்றியிருக்கின்றேன் (ஆனால் கிரிக்கெட் விளையாடினது மிகக் குறைவு, உதைபந்தாட்டம் தான் அப்போது எப்போதும் விளையாடுவது....). இந்திய வீரர்களைத் தான் பிடிக்கும். பின்னர் கிரிக்கெட்டுடன் எந்த தொடர்புமே இருந்ததில்லை............... கடந்த டி - 20 உலகக் கோப்பை களப் போட்டி வரை. இந்திய அணி மீது இன்னமும் அதே அபிமானம் இருக்கின்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெல்லக் கூடும் என்ற ஒரு நினைப்பிலும் (எந்த விதமான ஆராய்வுகளும் இல்லாமலேயே), களப் போட்டி கலகலப்பாக இருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து இருக்கின்றேன். அதிலும் என்னுடைய தெரிவு இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல்................🤣.
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
🤣................. நூறு F-35 யுத்த விமானத்தை விற்றாலும், எட்டு பில்லியன் டாலர்கள் தான் வரும். அதில் செலவு போக இலாபம் இன்னும் குறைவாகவே இருக்கும். ஒரு வருடத்தில் ஆயிரம் பில்லியன் டாலர்களை எப்படிக் குறைக்கலாம் என்று யோசிக்கின்றார்கள், அண்ணா..............