Jump to content

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1604
  • Joined

  • Last visited

  • Days Won

    24

Everything posted by ரசோதரன்

  1. நன்றிகள் சுவி ஐயா.........🙏. சமீபத்தில் ஒரு பெரிய வங்காள எழுத்தாளர் 'I didn't write anything that I didn't see' என்று சொல்லியிருந்ததாக ஒரு இடத்தில் பார்த்தேன். அதன் பின்னரேயே இப்படி எழுதலாம் என்று நினைத்து, என் அனுபவங்களை சில மாற்றங்களுடன் முயன்று கொண்டிருக்கின்றேன். ஆனாலும் நடந்தவைகளை அப்படியே எழுத முடியாமல் இருக்கின்றது, சுவி ஐயா. உண்மையில் நடந்தவைகளிலும், நடந்து கொண்டிருப்பவைகளிலும் பல நிகழ்வுகள் பொதுவான நம்பிக்கைக்கு எதிரானவை. இந்தக் கதையில் வரும் சம்பவத்தில் கூட, அந்தப் பெண் உயிர் பிழைத்தாலும், அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள்.........😔. ஒரு குறுங்கதையிலோ அல்லது ஒரு சிறுகதையிலோ இந்த உண்மையிலேயே நடந்த முடிவை எழுதினால், அது மிகவும் செயற்கையான ஒரு முடிவாக தோன்றக்கூடும்.
  2. நட்சத்திரங்களுக்கு அப்பால் --------------------------------------------- உடனடியாக உங்களுடன் நாங்கள் கதைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது நேரம் இரவு 10:30 மணி. நேற்றிலிருந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இந்த இரண்டு நாட்களில் எங்களுடன் வேலை செய்யும் வேறு பலரும் மாறி மாறி எங்களுடன் வந்து நின்றனர். இன்றிரவு மற்றவர்களை வீடுகளுக்கு போகச் சொல்லி விட்டு நானும் நண்பனும் மட்டுமே அங்கே இருந்தோம். இங்கிருக்கும் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இது ஒன்று. உலகத்திலேயே மிகச் சிறந்தவற்றில் இது ஒன்று. அதி அவசர மற்றும் இதயம் சம்பந்தான பிரிவுகளிற்கு என்று இருக்கும் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் நண்பனின் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களாக இன்னொரு மருத்துவமனையில் இருந்த அவர், நேற்றிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டிருந்தார். இங்கு ஒருவருக்கு எப்பொழுது, எங்கே, என்ன சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் பங்கு பெரியது. நான்கு மருத்துவர்களும், ஒரு ஆலோசகரும், நண்பனும், நானும் ஒரு அறையில் அமர்ந்திருந்தோம். அந்த ஆலோசகர் நண்பனுக்கு அருகில் அமர்ந்திருந்தார். இன்னும் ஒரு நாலோ அல்லது ஆறோ மணித்தியாலங்கள் தான் நண்பனின் மனைவி தாங்குவார் என்று ஒரு மருத்துவர் மெதுவாக, ஒரு அமைதியுடன் சொன்னார். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டோம், ஒவ்வொன்றாக ஒவ்வொன்றும் செயலிழந்து போய்க் கொண்டிருக்கின்றன என்றனர் மற்ற மருத்துவர்கள். நண்பனின் மனைவியின் கையில் ஏற்கனவே ஊதா நிற காப்பு கட்டி விட்டதாகவும் சொன்னார்கள். நண்பன் அழுது கொண்டே வெளியில் ஓடினான், அவன் பின்னால் ஆலோசகர் ஓடினார். நடுகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நடுங்கியபடியே, அப்படியே நடந்தால், இங்கு மருத்துவமனையில் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியும் என்று கேட்டேன். அதன் பின் 24 மணி நேரங்கள் என்றனர். அதன் பின்னர் எங்கு கொண்டு போகலாம் என்ற பல தெரிவுகள் அடங்கிய ஒரு விபரக்கொத்தை கையில் கொடுத்தனர். பக்கங்களை புரட்டினாலும் எதையும் கோர்வையாக வாசிக்க முடியவில்லை. 'இப்ப என்ன செய்வது.........' என்று கேட்டான் என் தோளில் சாய்ந்திருந்த நண்பன். பல வயதுகள் இளையவன். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. 'ஒன்றும் ஆகாது........ அப்படியே என்றாலும் நான் பார்க்கின்றேன்........' என்றேன். இன்னும் அழுதான். இங்கு பொதுவாக எல்லா மருத்துவமனைகளிலும் இரவு எட்டு மணியுடன் பார்க்க வருபவர்களை தங்க விடமாட்டார்கள். ஆனால் இந்த மருத்துவமனையில் அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இங்கிருக்கும் நோயாளிகள் எல்லோருமே இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள். ஆதலால் உறவினர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள் எந்த நேரத்திலும் வந்து போகலாம். பலர் அங்கு இருக்கும் பெரிய வரவேற்பறை மற்றும் சில வெறுமையாக இருக்கும் அறைகளில் களைப்பிலும், அசதியிலும் கண்ணயர்ந்தும் விடுகின்றனர். அங்கு காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை அதே பரிதாபத்துடனும், இரக்கத்துடனும் பார்க்கின்றனர், ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் என்ன சொல்வதென்று ஒருவருக்கும் தெரிவதில்லை. நேற்றிலிருந்து இப்படியே இருப்பதால் எங்கள் இருவருக்கும் கொஞ்ச ஓய்வு தேவை என்று அங்கிருந்த அறை ஒன்றில் போய் இருக்குமாறு சொன்னார் அந்த நேரத்திற்கு வந்திருந்த தாதி ஒருவர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலேயே கதைத்தார். சிறிது நேரத்திலேயே நண்பன் கண்ணயர்ந்து விட்டான். ஆறாவது தளத்தின் பால்கனியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். முற்றிலும் கருமை, அந்தக் கருமையின் மேலே எண்ண முடியாத அளவு நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன. நட்சத்திரங்களை தவிர்த்து, அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளின் ஊடாக ஏதோ ஒன்று எல்லாவற்றிற்கும் மேலே இருக்குதா என்று தேடிக் கொண்டிருந்தேன். தாதி என்னை தட்டி எழுப்பும் போது ஆறு மணியாகி விட்டது. எழும்பியவுடனேயே நடுங்கவும் ஆரம்பித்து விட்டது. நண்பன் இன்னும் கண் முழிக்கவில்லை. தாதியைப் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை என்றார். ஒரு மாதம் வரை நண்பனின் மனைவி அங்கிருந்தார். பின்னர் 40 நாட்கள் உடலை அசைக்கும், நடக்கும் தெரபிகளுக்கு என்று அவரை வேறு ஒரு இடத்திற்கு மாற்றினர். அதன் பின்னர் மூன்று மாதங்களில் அவர்கள் இருவரும் இந்த நாடு போதும் என்று இந்தியாவிற்கே போய்விட்டார்கள்.
  3. மார்க் கியூபன் என்ன சொல்லியிருக்கின்றார் என்று பாருங்கள்: "Feeble, Capable and Ethical vs Vigorous, Unethical and Incapable of telling the truth. I'll vote ethical every time." அவர் ஒரு AI Analysis ம் செய்திருக்கின்றார்........ https://www.newsweek.com/mark-cuban-trump-biden-election-chat-gpt-x-twitter-1919360
  4. ஜோ பைடனை மாற்ற வேண்டி வந்தாலும், கமலா ஹாரிஸ் தவிர வேறு எவரையும் இப்பொழுது பிரேரிக்க முடியாத ஒரு சிக்கல் இருக்கின்றது. பல மாநிலங்களில் ஏற்கனவே வேட்பாளர்களின் பட்டியல் நிரப்பப்பட்டு விட்டது. ஜனநாயக் கட்சியில் ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸின் பெயர் மட்டுமே உள்ளது. இன்னும் நாலு மாதங்களே இருக்கின்றன, வேறு மாற்றங்களுக்கு போதிய நேரம் இல்லை. ஆனால், பைடன் வென்று பதவிக்கு வந்த பின் வேறு மாற்றங்கள் செய்யக் கூடியதாக இருக்கும்.
  5. 'நாட்டாமை' படத்தில் வரும் மிக்சர் சாப்பிடும் காட்சி இன்னும் சுற்றிக் கொண்டிருக்கின்றது............🤣
  6. போட்டிகளை சிறப்பாகவும், உற்சாகமாகவும் நடத்திய @கிருபன் க்கு நன்றிகளும், வாழ்த்துகளும். வெற்றி பெற்ற @பிரபா, @ஈழப்பிரியன் அண்ணை, @கந்தப்பு மற்றும் பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகள். போட்டிக்கு என்னை வெருட்டி இழுத்துக் கொண்டு வந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு என் நன்றிகள். சாரே......... @வீரப் பையன்26 சாரே............ நாளைக்கு என்ன செய்யிறது........ எனக்கு கையும், காலும் ஓடாதே....... நீர் ஒரு அதிசயப் பிறவி ஐயா........🙏.....
  7. ஏதோ ஆட்டுப் பாலை குடிக்கிற மாதிரி ஆலம் பாலை குடிக்கப் போகிறேன் என்று சொல்றீங்க..... அது பால் இல்லைங்க....... கல்லால் குத்தி அப்படியே காய விடவேண்டும்.........பேசாம ஒரு சூயிங்கம் பக்கற்றை வாங்குங்கோ.........🤣.
  8. ரிப்பீட்டட் ஆடியன்சஸ் கொஞ்சம் அதிகம் தான்........ நீங்களும், பையன் சாரும், நானும் சேர்ந்தே ஒரு 30,000 விசிட்ஸ் வரும் போல..............😜.
  9. ஆழ்ந்த இரங்கல்கள்.......... சிலருக்கு மட்டுமே மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும், அதையும் பயன்படுத்தாமல் விட்டவர்கள் அவர்களில் பலர். சம்பந்தர் ஐயாவும் அப்படியான ஒருவர் என்று முடிகின்றது அவரின் பயணம்.
  10. இல்லை சுவி ஐயா, இது என்னூரில் இருக்கும் இடம். முன்னர் இங்கு இப்படி நடப்பதில்லை. பாண்டவர்கள் நீர்க்கடன் முடித்த பின்னரயே பாஞ்சாலி கூந்தலை அள்ளி முடித்தார் என்று ஒரு சிறுகதை சில வருடங்களின் முன்னர் வாசித்திருந்தேன். அன்றிலிருந்து இந்தச் சொல் அப்படியே ஒட்டிக் கொண்டுவிட்டது. வீரப்பனின் கதை முடிந்தது சந்தியில் இருக்கும் அரச மரத்தடியில்....... ஏராளமான கதைகள் இரண்டு மரத்தடிகளிலும் இருக்கின்றன........👍
  11. அதிபர் ஜோ பைடன் - ட்ரம்ப் விவாதம் ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு அதிர்ச்சியாகவே முடிந்து விட்டது. ஜோ பைடனுக்கு இப்பொழுதே 81 வயது. அது அப்படியே எல்லா வகைகளிலும் வெளிப்படுகின்றது, தெரிகின்றது. அவரால் முடியாமல் இப்பவோ, எப்பவோ போட்டியிலிருந்தோ அல்லது பதவியிலிருந்தோ விலகினால், அடுத்தது யார் என்பது ஒரு பெரிய விடயம் இங்கே. கமலா ஹாரிஸ் தான் முறையான தெரிவு. ஆனால் அவர் தான் சரியான தெரிவு என்றில்லை. அவர் உட்பட ஏழு பேர்களை விவாதிக்கின்றார்கள்.
  12. நீர்க்கடன் --------------- கடற்கரையின் ஓரத்தில் கடலை பார்த்தபடி தீர்த்தமடம் இருக்கின்றது. ஊரில் மற்றும் அயல் ஊரில் இருக்கும் கோவில்கள் என்று எல்லாவற்றிலும் தீர்த்த திருவிழா என்றால் அது சமுத்திர தீர்த்தம் தான். தீர்த்தமடத்தின் கிழக்கே மிக அருகிலேயே அந்தியேட்டி மடம் இருக்கின்றது. பின்னர் ஒரு வீடு, ஒரு சின்ன வெறும் காணி, அதற்கப்பால் சுடலை இருக்கின்றது. தீர்த்தமடத்தின் மேற்கே ஒரு ஆலமரம், அதன் மேற்கே இன்னொரு அரைச்சுவர்கள் மற்றும் கூரையுடன் கூடிய ஒரு கட்டிடம். ஒரு புரோகிதர் அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒரே கூட்டம். அன்று சித்ரா பௌர்ணமி. அம்மாவை இழந்தவர்கள் தங்களின் அம்மாக்களுக்கு அங்கே நீர்க்கடன் செய்ய வந்திருந்தனர். இதுவரை தங்கள் அம்மாக்களுக்கு நீர்க்கடன் செய்யாதோர் அதைச் செய்ய இது ஒரு நல்ல இடமும், நேரமும் என்றனர். எனக்கு இந்த நடைமுறை முற்றிலும் புதியதாக இருந்தது. இங்கு இப்படி எதுவும் நான் இங்கு இருந்த காலங்களில் நடந்ததேயில்லை. அந்த ஆலமரத்தை கல்லால் குத்தி, வரும் மரத்தின் பாலை அப்படியே காய விட்டு, பின்னர் அதை சூயிங்கம் என்று வாயில் போட்டுக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆலமரத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. பின்னர் ஒரு தடவை, 84 ம் ஆண்டு என்று நினைக்கின்றேன், இராணுவம் எங்கள் ஊரையும், அயல் ஊர்களையும் சுற்றி வளைத்தது. பல இளைஞர்களை இராணுவம் கைது செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருந்தது. கைது செய்து கொண்டு வந்தவர்களை அந்த ஆலமரத்தின் அருகே இருக்கும் அரைச்சுவர்க் கட்டிடத்தில் ஒரு சுவரைப் பார்த்து முழங்காலில் இருக்க வைத்திருக்கின்றது. பின்னர் அவர்கள் எல்லோரும் அந்த இராணுவத்தால் சுடப்பட்டார்கள். இதில் ஒருவர், சுடப்படுவதற்கு முன் அல்லது சுடப்பட்ட பின், அன்று அங்கு எவருமே உயிர் தப்பாதபடியால் எது உண்மை என்று என்றும் தெரியப் போவதில்லை, ஓடிப் போய் தீர்த்தக் கடலில் விழுந்து இறந்திருந்தார். நாங்கள் போய் பார்க்கும் போது கடலின் நிறம் அதன் நீல நிறமாகவே இருந்தது. அது தன்னை உடனேயே சுத்தப்படுத்தி விட்டு, கரைக்கு வந்து போய்க் கொண்டிருந்தது. தீட்டே இல்லாத கடல். புரோகிதர் ஒரு தர்ப்பையை என் விரலில் கொழுவி விட்டு, இன்னொன்றை என் இடுப்பு வேட்டிக்குள் செருகி விட்டார். அப்படியே கடலில் இறங்கி, கிழக்கே பார்த்து அம்மாவை நினைத்து கும்பிட்டு விட்டு, இடுப்பில் இருக்கும் தர்ப்பையை கடலில் விடச் சொன்னார். கங்கா, யமுனா, காவேரி என்று ஏதோ சொன்னார். ஒரே கூட்டமாக இருந்தபடியால், ஒதுங்கி ஒரு ஓரமாகவே இறங்கினேன். நிமிர்ந்தால் சூரியன் சுள்ளென்று முகத்தில் அடித்தது. அம்மாவை எப்படி கும்பிடுவது என்று தெரியவில்லை. தோட்டங்களுக்குள்ளாலும், ஒழுங்கைகளுக்குள்ளாலும் என்னை துரத்திக் கொண்டு பள்ளிக்கூடம் வரை கொண்டு வந்து விட்டுப் போன அம்மாவின் முகம் மட்டும் தான் மனதில் வந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு நாளும் அடி விழவேயில்லை. இடுப்பில் இருக்கும் தர்ப்பையை எடுத்து கடல் நீரில் விடும் நேரத்தில், அதே இடத்தில் அன்றொரு நாள் முகம் குப்புற ஒருவர் மிதந்து கொண்டிருந்தது ஞாபகமும் வந்தது. அந்த நினைவையும் கலைக்காமல், அப்படியே தர்ப்பையை கடலில் விட்டேன்.
  13. 👍...... இதை யாராவது எதிர்பார்த்து இருக்க முடியுமா........ அவர்கள் நல்லாவே விளையாடினார்கள்....👍
  14. விடுங்க சார், எதுக்கு கவலைப்படுறீங்க............ கடைசி மூவரில் நீங்க ஒருவரா வருவீங்க என்று இங்க பேசிக் கொண்டிருந்தாங்க சார்........ நீங்க நடுவிற்கு மேலயே வந்திட்டீங்க........... இந்தியா இருக்கும் பக்கமா பார்த்து ஒரு கும்பிடு போடுங்க.........
  15. நேற்று நடந்த விவாதத்தின் பின் ஜோ பைடனின் ரேட்டிங் போல இன்று இங்கு என்னுடைய நிலை போய்க் கொண்டிருக்கின்றது.............
  16. 🤣........... தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக............. இல்லை, இல்லை...... எங்க இனத்தில் எவருமே ராஜினாமா செய்தது கிடையவே கிடையாது ........... ஆதலால் லாகூரில் மீண்டும் மோதுவதாக முடிவெடுத்திருக்கின்றோம்...........
  17. இப்ப பையன் சார் வந்து கரகம், காவடி என்று ஆடப் போகின்றாரே.......
  18. சரி என்று சொல்லிவிட்டார்கள்......... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது........ கீதாசாரம் தான் இப்ப கைகொடுக்கும்.............🤣
  19. 🤣.... எல்லா வளங்களையும் சரியாக உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள்...... இது தான் அது....... 🤣... ஒரு த்ரில்லர் ஆக்காமல் விட மாட்டார்கள் போல.........
  20. சரி, சரி........... இந்தியா இனி அடுத்த வருட சாம்பியன்ஸ் ட்ராபியில் லாகூரில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்............
  21. அதுவே தான்......👍. இன்னமும் சில தமிழ்நாட்டவர்கள் எங்களை 'சிலோன்காரர்கள்' என்று சொல்கின்றனர். அந்தச் சொல் அவ்வளவு ஒரு நல்ல உணர்வைக் கொடுப்பதில்லை. இலங்கையர்கள் என்று சொன்னால் நல்லாக இருக்குமே என்று தோன்றும்.
  22. போட்டி அங்கேயும் இங்கேயுமாக ஊசலாடுகின்றது. இந்தியா வென்றால் அக்சார் ஹீரோ......... தோற்றால் கோலி ஒரு கோழி முட்டை.........
  23. இந்த தடவை இஸ்ரேல் - பலஸ்தீன சண்டை ஆரம்பித்த போது, 'அருஞ்சொல்' இதழில் ஒரு கட்டுரைத் தொடர் வந்திருந்தது. ஐந்து பாகங்கள், சிறிது நீண்ட கட்டுரைகள். பல ஒற்றுமைகள் இருக்கின்றன, ஆனால் நாங்கள் பொதுவாக இதுவரை நினைத்திருக்கும் கோணத்தில அல்ல. இது இன்னொரு பார்வை. https://www.arunchol.com/karthik-velu-on-israel-history
  24. 🤣...... அங்க என்ன நடந்தாலும், இங்க களத்தில் கடைசி மட்டும் நிற்பம்............ ஆனால் நிலைமை சரியில்லை.........
  25. அந்த பொடியனை நேற்று கணக்கில எடுக்காமல் விட்டிட்டம்........ அவர் கொஞ்சம் அடிச்சிட்டார்....
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.