Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. ஒரு காலத்தில் பாக்கியராஜை இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று சொல்வார்கள். மிகப் பொருத்தமான ஒன்றே. அது போலவே ஜெயராஜூம். நிகழ்வுகளையும், அரசியல் அலசல்களையும் ஒரு கதை போலவே எழுதிக் கொண்டிருக்கின்றார். பெரும் இராணுவத் தாக்குதல் ஒன்றைக் கூட இவர் ஒரு கதை போலவே எழுதியிருந்தார். அதனால் இவரின் எழுத்துகளை வாசிக்கும் போது, 'ஆள் கதை விடுகின்றாரோ...............' என்ற எண்ணம் தவிர்க்க முடியாமல் வந்து கொண்டேயிருக்கின்றது..........🤣. காலம் செல்வம் துன்னாலையைப் பற்றி பகிடியாக அவரின் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்த ஒரு துணுக்கு/விடயம் என்று நினைக்கின்றேன். பாடப்புத்தகம் ஒன்றில் இருக்கும் இலங்கைப்படம் ஒன்றில் சில பெரிய நகரங்களின் பெயர் மட்டுமே இருந்தது. அத்துடன் துன்னாலையும் அந்தப் படத்தில் இருந்தது. அது எப்படி என்று யாரோ கேட்டார்கள்.......... அதற்கு 'யாரோ ஒரு துன்னாலை ஆள் கல்விக் கந்தோரில் இதற்கு பொறுப்பாக வேலை செய்கின்றார்கள்......................' என்று காரணம் சொல்லியிருந்தார். இங்கே இரண்டு துன்னாலை ஆட்கள்..................😜. கலாநிதிப்பட்டம் பெற்றவர்களை விட அதை இடையில் விட்டவர்கள் தெளிவானவர்கள் போல...........🤣.
  2. சிங்கத்திற்கு பிறந்தபடியால் சிங்கபாகு என்று பெயர் வைத்ததில் ஒரு நியாயம் இருக்கின்றது............. ஆனால் சிங்கம் தூக்கிச் செல்ல முன்னேயே சிங்கவல்லிக்கு ஏன் சிங்கவல்லி என்று பெயர் வைத்தார்கள்........... அதானல் தான் சிங்கம் வந்து சிங்கவல்லியை தூக்கிக் கொண்டு போய், பின்னர் சிங்கபாகு பிறக்க வேண்டியதாகப் போய்விட்டதோ என்னவோ..................🤣. என்னுடைய முன்னோர்களிலும் சிங்கம் என்று வரும் பெயர்கள் இருக்கின்றன..............😜.
  3. உக்ரேனுடன் சமரசமா, சண்டையா, பேச்சுவார்த்தையா என்பதை விட, புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் என்று ஒரு இனிய செய்தியை சொல்லியிருக்கின்றார் புடின்......... உலகத்துக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு கொடுத்திருக்கின்றார்............ தடுப்பூசிக்கு பெயர் இன்னமும் வைக்கவில்லை என்று நினைக்கின்றேன், ஆனால் 'ஸ்புட்னிக் .....' என்று மீண்டும் ஆரம்பிப்பதற்கு சாத்தியம் இருக்கின்றது. யாரில் முதல் சோதிக்கப் போகின்றார்கள் என்கிறீர்கள்............... அந்த வடகொரியத் தோழர்களுக்கு தான் அதிர்ஷ்டம் போல...............
  4. நன்றாக இருக்கின்றது. வாழ்த்துகள் தியா!
  5. தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்வதற்கு வயது வரம்பு இல்லை, நியாயம். இலங்கையில் இளையோர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று எல்லா அரசுப் பணிகளுக்கும் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கின்றேன். பல நாடுகளில் இப்படி ஒரு வரம்பு இல்லை. அமெரிக்காவில் 67 என்பது ஒரு மைல்கல் போன்றது. விரும்பினால் அல்லது வீட்டில் இருப்பது தொல்லை அதிகம் என்றாலும், வேலைக்கு அதன் பின்னரும் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கலாம். போன வாரம் ஒரு மருத்துவரை இங்கு சந்தித்தேன். அவருக்கு 80 வயதுகள் இருக்கும். அவருடைய அலுவலக மேசையிலேயே விழுந்து அவரின் உயிர் போகும் என்று சொன்னார்.........
  6. 🤣............ அடுத்த மாதத்திலிருந்து எங்களின் தலைநகரில் முன்னுக்கு மடிப்புக் கலையாத, ஆனால் பின்பக்கம் தாறுமாறாகக் கிழிந்த சட்டைகளுடன் நிற்கப் போகின்றார்கள் இந்த இருவரும், இன்னும் சிலரும்............. ஒரு நாலு வருடங்கள் இவர்களின் கண்களில் படாமல் அப்படியே மேசைக்கு கீழேயே குனிந்து இருக்கவேண்டும்...............🤣.
  7. சுமந்திரன், கீதநாத் காசிலிங்கம், டக்ளஸ் இவர்கள் மூவரும் தினமும் ஒரு பரபரப்பான அறிக்கை விடுவதாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகின்றது ....................
  8. அவைகளை வாசித்திருக்கின்றேன், குமாரசாமி அண்ணா............... saturated vs. unsaturated and mono vs. poly....... என்று விளக்கங்கள் சொல்வார்கள். தேங்காயால் போனோம் என்று இருக்கட்டும்...............🤣.
  9. இவ்வளவு லேட்டாகவா இதைச் சொல்வது............. கடல் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் எல்லாம் இப்பொழுது புதிய கடல் தொழில் அமைச்சரின் பின்னால் போய் விட்டார்கள்................ என்ன டக்ளஸ் அண்ணை, நீங்கள்...............🤣. கடலுக்குள் பஸ்ஸை தாட்டது, வடமராட்சி கிழக்கு கடற்கரையில் மண்ணை அள்ளினது என்று ஏதாவது விசாரணையை ஆரம்பிக்கப் போகின்றார்கள்........ சும்மா சும்மா சவுண்டு விட்டால்...............
  10. இப்படி ஒரு நிதி இருந்தததாகவோ அல்லது பொதுமக்கள் அதை நாடலாம் என்றோ கூட பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், முதல் வந்த பெயர்களில் ஒருவருக்கு 300 இலட்சம் ரூபாய்கள் கூட கொடுக்கப்பட்டிருக்கின்றது. ரம்புக்வெலவிற்கும் இந்த நிதியிலிருந்து கொடுத்திருக்கின்றார்கள்...........🫣. சந்திரசேகரனின் பெயரும் இருந்தது.............. எப்படி எல்லாம் ஒரு தேசத்தை, வெளியே வேடமிட்டு, சுரண்டியிருக்கின்றார்கள்.................😌.
  11. 🙆‍♂️............... ட்ரம்பும் சொந்தம் தான் என்ற விசயம் வெளியே தெரியக்கூடாது என்று நினைத்தேன்.......... இப்ப அதுவும் தெரிந்துவிட்டது. அவரைச் சொந்தம் என்று சொல்ல கொஞ்சம் வெட்கமாக இருக்கின்றது...........😜. பல தலைமுறைகளாக எங்கள் குடும்பத்திற்கும், அவரின் குடும்பத்திற்கும் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்................ ஆஸ்திரேலியாப் பழங்குடிகளை முதன் முதலில் நேரே பார்த்த போது, 'காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்....................' என்று தான் தோன்றியது. அவர்கள் நாங்களே தான்.......... அவர்களின் சடாமுடிகளும், சாம்பல் பூச்சுகளும், குழாய் இசைக்கருவிகளும்,................ அநியாயமாக நம் மக்களை அங்கேயும் அழித்துவிட்டார்கள்..................
  12. காங்கேசந்துறைக்கும் பருத்தித்துறைக்கும் இடையில் ஒரு இடம் இருக்கின்றதே.......... அங்கு ஒரு துறைமுகத்தை அமைத்து, அங்கே கொண்டு போய் நிற்பாட்டுவம்.......................😜.
  13. 🤣.................. நானும், நீங்களும் விடுவது பீலாவே அல்ல............. எங்களின் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எங்கள் எல்லோருக்கும் மேலே ஒன்று விட்டிருக்கின்றார்............. அவர் 'ஆதித்தாய்' என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கின்றார். ஆபிரிக்காவில் இருந்த ஒரேயொரு தாயில் இருந்தே நாங்கள் எல்லோரும், முழு உலக மனிதர்களுமே, வந்தோம் என்று அந்தக் கதை போகின்றது................... அதை வாசித்த பின், எனக்கும் ஓபாமாவிற்கும் இடையில் ஒரு சொந்தம் இருப்பதை நான் உணர்ந்தேன்............😜. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் அவர்....... நல்ல ஒரு படைப்பு அது...... சும்மா ஒரு பகிடிக்காகவே மேலே உள்ளதை எழுதியிருக்கின்றேன். ஒரு பிரதேசத்தில் தலைமுறை தலைமுறைகளாக ஏதாவது விடயங்களில் முக்கியமானவர்களாக அல்லது செல்வாக்குள்ளவர்களாக இருக்கும் குடும்பங்களுக்கு இடையே ஒருவரை ஒருவர் தெரிந்து, பழக்கம் இருப்பது வழமை என்றே நினைக்கின்றேன். பெரிய கைகள் எங்கோ, எப்பவோ இணைந்த கைகளாகவும் இருந்திருக்கும். விடுபட்ட சொந்தங்கள் மீண்டும் சேர்வதும் நடப்பதுவே, இது மகிழ்வான ஒரு விடயம். யாழ்ப்பாணம் சிறிய இடம் என்றாலும், அதற்குள்ளேயே, ஒரு மீன் தொட்டிக்குள் வாழும் மீன்கள் போல, தங்களின் சிறு ஊர்களுக்குள் மட்டுமே வாழ்ந்து முடிக்கும் சில இடங்களும் உண்டு. என்னுடைய ஊர் அப்படியான ஒரு ஊர். 'எங்களுக்கு வெளியில் பெண் கொடுக்கமாட்டார்கள்..............' என்று எங்களை நாங்களே நக்கலும் செய்வோம்.
  14. நேற்றோ அல்லது முந்தாநாளோ இங்கு யாழில் இணைக்கப்பட்டிருந்த ஒரு இணையக் கட்டுரை ஒன்றில் கடைசிப் பந்தியில் கிட்டத்தட்ட இப்படி எழுதப்பட்டிருந்தது: இப்படியான ஏகாதிபத்திய, எதேச்சதிகார அமெரிக்காவிற்கு எதிராகப் போராட உலகில் உள்ள எல்லா இளைஞர்களும் ஒன்றாக அணிதிரள வேண்டும்........... இன்னமும் இப்படி எழுதுகின்றார்களா, அதை மக்களும் வாசிக்கின்றார்களா............ என்று நினைப்பு போனது. இந்த வசனம் அரதப்பழசு, எங்களை விடப் பழசு............... அந்த பத்திரிகைக்காரர்களிடம் சொல்லவேண்டும்............. அமெரிக்கா இப்பொழுது உலகெங்கும் சில்லறை வர்த்தகத்திலும் கால் வைக்கத் தொடங்கியுள்ளது என்று..............🤣.
  15. அப்ப லால்காந்த ஓனர் இல்லையா......................🤣 அல்வாய், திக்கம் முழுக்க தென்னை நிற்குது தானே என்ற பெருமையில், அமெரிக்காவின் உதவி தேவையில்லை என்று நீங்கள் சொல்லவில்லை தானே...............😜. எவ்வளவு ஆட்களையப்பா அநுரவும் சமாளிப்பது........... இந்தியா, சைனா, அமெரிக்கா, அல்வாயன்,............. ஜீலி வேற அடிக்கடி யாரையாவது சந்தித்தபடியே இருக்கின்றார்..............
  16. என்னது............... தென்னைக்கும் ஆலோசனை அமெரிக்காவிலிருந்தா............... நாங்களே இங்கே மெக்ஸிக்கோ தேங்காயா, கரிபியன் தேங்காயா என்று பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம். குருணாகாலில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு ஹைபிரிட் இனத்தை உண்டாக்கி இருக்கின்றார்கள். அது மூன்று வருடத்திலேயே ஒரு தடவையில் இவ்வளவு காய்கள், ஒரு வருடத்தில் இவ்வளவு காய்கள் என்ற விளக்கத்துடன் ஒரு கட்டுரை சில நாட்களின் முன் வந்திருந்தது. நல்ல நம்பிக்கையாகவும் இருந்தது. உடனடியாக மூன்று மில்லியன் கன்றுகள் தேவை, நாட்டின் தேங்காய் தட்டுப்பாட்டை நிரந்தரமாக தீர்த்து விடலாம் என்றும் அதில் இருந்தது. இதற்கு ஏன் அமெரிக்கா............
  17. அந்த நாட்களில் ஐந்து கோடி ரூபாய்களை ஒரே இரவில் பத்து கோடி ரூபாய்களாக மாற்றும் வல்லமை சிலருக்கு அங்கே இருந்தது............. இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால், முதலாவது என்ன தொகை கேட்டார்கள் என்ற திகைப்பை அகற்ற, இரண்டாவது ஏன் திரும்பவும் வந்தார்கள் என்பதன் பின்னணியை அறிந்து கொள்ள................
  18. 🤣................. பெருமையாக, மகிழ்வாக இருக்கின்றது நாங்களும் கொஞ்சம் பெரிய கை என்று இந்த உலகத்தில் யாரோ ஓரிருவராவது எங்களை நினைக்கின்றார்களே என்று...............😜.
  19. 🤣............ திண்மம், திரவம், வாயு என்று மூன்று பொருட்களும் இந்த இரண்டு வரிகளுக்குள் அடங்கி இருக்கின்றது போல, வசீ............................😜. இந்தப் படத்தால் (இனிமேல் பெயரைச் சொல்லமாட்டேன்.............🤣) சூர்யா நடிப்பதாக இருந்த மிகப்பெரிய ஒரு பான் - இந்திய திரைப்படம் அப்படியே நின்றுவிட்டது. சூர்யா மும்பையில் குடியேறியதற்கு இந்த புதிய முயற்சியும் ஒரு காரணம்............... ஆனால் இப்பொது எல்லாம் வீணாகப் போய்விட்டது............... படம் வெளியாகி அடுத்த நாளே தியேட்டர்களில் சத்தத்தின் அளவை குறைக்கச் சொல்லும்படி தயாரிப்பாளார்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது........... ஆனாலும் நடந்த சேதம் சேதம் தான்.........
  20. மிக்க நன்றி சாத்தான் உங்களின் நீண்ட பதிலுக்கு. உங்களைச் சிக்க வைப்பதற்காக எதையும் கேட்கவில்லை. இங்கு களத்தில் எவர் மேலும் அப்படியான ஒரு எண்ணமோ அல்லது திட்டமோ எனக்கு அறவேயில்லை. உலகின் எங்கோ ஒரு மூலையில் எந்த விதமான அரசியல்மயப்படுத்தலுக்கும் உட்படாமல் இருக்கும் பலரின் நானும் ஒருவன். இவை எல்லாமே முதலில் தகவல்கள் தான் என் போன்றவர்களுக்கு. இது வெறும் பொழுதுபோக்காகவே ஆரம்பத்தில் இருந்தது, ஆனால் இப்பொழுது நல்ல நட்பும், நேசமும் துளிர்க்கின்றது இங்கு வந்து போகும் எல்லார் மேலேயும், உங்கள் மீதும் தான்.................... உங்களின் அவதார் மற்றும் பெயரைப் பார்த்து 'ஆளவந்தான்' நந்தா போல இருக்கின்றதே என்று சிரித்துக் கொள்வேன்..............🤣. உங்களின் கருத்துகளும், அபிப்பிராயங்களும் சிந்திக்க வைக்கின்றன. நானும் இதையொட்டி தேடி இன்னமும் தெரிந்து கொள்கின்றேன்...............👍. எப்போதும் ஒற்றை வரியில் மட்டை அடி போல கருத்துகள் சொல்பவர்களுடன் உரையாடுவதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலை மிக விரவிலேயே வந்துவிடும், அது என்ன துறையாக இருந்தாலும். அதே போலவே சொந்தக் கருத்துகள் இல்லாமல், எப்போதும் பிற ஊடகங்களை அப்படியே பிரதி செய்தாலும், அங்கேயும் உரையாடல் முடிந்துவிடுகின்றது. உங்களின் நீண்ட எழுத்து உரையாடலை வளர்க்கின்றது. இது சிலரால் மட்டுமே முடியும், அத்துடன் அழகிய தமிழும்............❤️. கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றோம் அல்லது மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றோம் என்று நான் சொன்னது இங்கு களத்திலிருக்கும் எந்த நட்பையும் தனியே சுட்டி அல்ல, நீங்கள் உட்பட........... ஒரு சமூகமாகவே இப்படிச் செய்கின்றோம் என்று சொன்னேன். தனிநபர் தாக்குதல் அறவே கிடையாது. நீங்களாவது அநுரவை வெறுமனே புகழ்கிறீர்கள்............... நான் அநுரவிற்கே எனது வாக்கு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றேன்........................😜.
  21. நாலாவது வருடத்தில் நடந்த ஒரு விடயம். மூன்றாவது வருட பரீட்சைத் தாள்களை அந்த வாரம் தான் அந்தப் பேராசிரியர் திருத்திக் கொண்டிருந்தார் போல................... 'this is going from bad to worse..................' என்று ஆரம்பித்து மனிதன் அன்று முழு வகுப்பையுமே காறித் துப்பினார்............... பொதுவாக அவர் படிப்பிப்பது எதுவுமே எவருக்கும் விளங்காது, ஆனால் அன்றைய அவரின் பேச்சு நல்லாவே விளங்கியது............... அவருக்கு இப்ப ஒரு மெயிலைப் போட்டு, 'சார், கல்லுக்கு கீழ காவோலை போடுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்..............' என்று ஒருக்கால் கேட்டால், மனிதன் இதயத்தை பிடித்துக் கொண்டு விழுகுதோ தெரியவில்லை............... படிப்பில் இது அவரின் ஏரியா வேற.............🤣.
  22. இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுக்கு முப்படைகளின் பாதுகாப்பு கொடுப்பதற்கு கடந்த ஒரு வருடத்தில் செலவான தொகை........................ கிட்டத்தட்ட 1500 மில்லியன் ரூபாய்கள். இது ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டிருந்தது. முப்படைகளின் பாதுகாப்பை இப்பொழுது தூக்கியாகிவிட்டது. சில போலீஸ்காரர்கள் மட்டுமே இப்பொழுது பாதுகாப்பு கொடுக்கின்றார்கள்...... ரம்மி விளையாட்டில் (13 சீட்டு) கிடைக்கும் ஜோக்கர் கார்ட்டுகள் போன்றவை இந்த விடயங்கள்......... ஓரளவு நல்ல கார்ட்டுகளுடன், இவற்றையும் இடைக்கிடை செருகினால்............... 2028 இலும் டிக் தான்................
  23. இலங்கையில் இது ஒரு வகையான அடையாள எதிர்ப்பு என்றே தெரிகின்றது. நஷ்டஈடும் கொடுக்கமாட்டார்கள், சிறைத்தண்டனையும் கிடைப்பதில்லை. இனிமேல் இப்படிச் சொல்லமாட்டோம், செய்யமாட்டோம் என்ற உறுதி மொழிகளோடும், மன்னிப்போடும் வழக்கு முடிந்துவிடும் போல............ ரணிலின் ஆலோசகராக இருந்தவர் அவரின் பெண் தோழியின் நாய்க்குட்டியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக வந்த விவகாரத்திலும் இப்படித்தான் 100 மில்லியனோ ஏதோ மான நஷ்டஈடாகக் கேட்டிருந்தார். கடைசியில் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை. ஹிருணிகா, டயான, இப்படி பல பல 100 மில்லியன் வழக்குகள் சமீபத்தில் வந்து போயின.
  24. நீங்கள் யாரைச் சொல்கின்றீர்கள் என்று தெரிகின்றது, கடஞ்சா. திருவடிவேல் அவர்களைச் சொல்லி இவரைச் சொல்லுவதை வாழ்நாளில் இப்போது தான் முதன்முறையாகக் கேட்கின்றேன்................. இவரைச் சொல்லித்தான் திருவடிவேலைச் சொல்லுவார்கள் எங்களின் பக்கத்தில். அவர் கொஞ்சம் வசதி, சராசரியிலும் கூட என்று இல்லை........... அவரின் வசதி எங்கேயோ........... அவரிடம் நிறையவே எடுத்தார்கள். உறவினர்கள் அவரை வெளியில் இருந்து போய் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்களுக்கு இதைச் சொன்னவர்களிடம் கேட்டீர்கள் என்றால் காரணம் சொல்வார்கள். சிலர் இன்னமும் சில நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதால் பெயர்களைத் தவிர்த்து இருக்கின்றேன். சில நிகழ்வுகள் சினிமாவில் மட்டுமே வருமென்று நினைத்திருந்தோம்.................
  25. பொதுவாக முழுவதையும் நீக்குவதில்லை. சில பகுதிகளை, சொற்களை மட்டுமே நீக்குவதாக சொல்லுவார்கள். 'அவைக்குறிப்பிலிருந்து இந்தச் சொல் நீக்கப்பட்டது............' என்று தமிழ்நாட்டுச் செய்திகளில் பார்த்திருக்கின்றேன். ஆனால், அர்ச்சுனா முறையான அனுமதியே இல்லாமல் அந்த விடயத்தை பேசினார் என்று வரும் போது, முழுவதையும் நீக்கினாலும் ஆச்சரியம் இல்லை. 100 மில்லியன் ரூபாய்கள் கேட்டு சத்யன் வழக்கு தொடர்ந்திருக்கின்றார்............... இந்த நிலையில் அவைக்குறிப்பு இல்லாமல் போனாலும் நல்லது தான்..............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.