Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 🤣............... யாராவது சர்ட்டிபிகேட் கேட்டால்................... கலாநிதி 'டாக்டர்' என்றால் அடித்து பிடித்து இங்கேயே தயார் செய்யலாம், ஆனால் மருத்துவ டாக்டர் என்றால் இந்தியா போய்த்தான் வரவேண்டும் போல...............😁.
  2. எலான் மஸ்க்கின் நம்பிக்கைக்கு உரியவர்களில் இவர் முதன்மையானவர். டெஸ்லாவிலும் வேலை செய்தார் என்றும் எங்கோ வாசித்ததாக ஞாபகம்...... டெஸ்லா ஆட்டோ-பைலட் சிஸ்டம் இவருடையது போல..................👍. இவர், விவேக், எலான்................ பயங்கரமான கூட்டு. மிகக்கடுமையாக வேலை செய்வார்கள். இவர்கள் மிக அதிகமாக வேலை செய்வதால், நாங்கள் குறைவாகவே செய்தாலே போதும்.............🤣.
  3. வடக்கு கோளம் முழுக்க இது வைரஸ் காலம் போல, கிருபன். இங்கும் எல்லோரும் சீறிச்சீறிக் கொண்டே வருகின்றார்கள், போகின்றார்கள், விளையாடுகின்றார்கள்.......... (நிழலி செய்வதையும் செய்கின்றார்கள்.................🤣) எவரையும் விடாது இது............. ஆனால் இதை விட்டால் எங்களுக்கு விடுமுறையும் கிடையாதே.......
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஏராளன்! தேவமைந்தனுக்கு முதல்நாள் ஏராளன் பிறந்தார் என்று ஞாபகத்தில் சேர்த்துக் கொள்கின்றேன்...........❤️.
  5. நீங்கள் சொல்வது சரியே, கோஷான். இவர்கள் சிலர் இவர்கள் செய்த பணிகளால் அன்று முக்கியஸ்தர்கள் மற்றும் உலகிற்கு தெரிந்தவர்கள். ஒரு விலை கொடுத்தே அவர்கள் வெளியே வரவேண்டி இருந்தது. இந்தப் புரிதல்களும், அவர்களின் தன்னலமற்ற பணிகளையும் அப்படியே விட்டுவிட்டு, அவர்களை துரோகிகள் என்ற எல்லைவரை இழுத்துக் கொண்டு போவதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். புதிதாக வந்த ஒருவர் சேவை செய்கின்றார், புரட்சி செய்கின்றார் என்கின்றார்கள். உண்மையில் இதுவரை அவர் அப்படி என்னதான் செய்துவிட்டார்.................. அப்படியே எப்பவாவது ஏதாவது காத்திரமாக செய்து விட்டாலும் கூட, இறுதிப் போரில் அங்கேயே நின்று மக்களுக்கு இவர்கள் செய்த சேவைகளை அவை மிஞ்சிவிடுமா............... பல தாக்குதல்களில், நடவடிக்கைகளில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஒன்றே என் பார்வைக்கு தெரிகின்றது. என் பார்வை பிழையாகக் கூட இருக்கலாம். ஒரு சமூகமாக, எப்போதும் மிகவும் உணர்ச்சிவசப்படுகின்றோம், யாரையாவது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றோம், தொடர்ச்சியாக அவதானிப்பதை தவிர்க்கின்றோம் அதனால் நாங்கள் கொண்டாடுவதை கேள்விக்கு உட்படுத்தாமல் நம்பத் தலைப்படுகின்றோம்.............
  6. 🤣................... காய்ச்சல் போல தெரியும், ஆனால் இது காய்ச்சல் இல்லை, நிழலி................... இது உடம்புச் சூடு............. நீங்கள் கொஞ்சம் சூட்டு உடம்புக்காரர் போல................ மருந்து மாத்திரை தேவையில்லை.............. அதுவா அடங்கும்...............😜. ** டாக்டரா, இல்லையா என்று என்ற பிரச்சனை இன்னமும் முடியவில்லை. நீங்கள் வேற புதிதாக ஒரு டாக்டரை இறக்கி விட்டிருக்கிறீர்கள்............... 🤣................. நிழலி இந்தக் கதவால் வந்தால், நான் அந்தக் கதவால் ஓடி விடுவேன், விசுகு ஐயா............
  7. 👍............ இங்கு எல்லோரையும் எனக்கு பிடித்திருக்கின்றது என்று முன்னரும் சொல்லியிருக்கின்றேன்............ நம்புங்கள்..............🤣. இது தான் என்னைப் போன்றவர்களுக்கு அர்ச்சுனா மீது இருக்கும் பயம்....................😌. அமைச்சருடன் சந்திப்பு, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை என்று சொல்லி இவ்வளவு விளமபரப்படுத்தி விட்டு, தொண்டர் ஊழியர்களின் செய்து கொண்டிருக்கும் வேலையை நிரந்தரமாக ஆக்குகின்றேன் என்று சொல்லிவிட்டு.................... இப்பொழுது புது வேலை கொடுக்கப் போகின்றாராம்...............🫣. 'ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்..................' இது என்ன கொடுமை........
  8. என்னால் இங்கு ஒரு கட்சியை மட்டுமே அதிகமாக ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. ஆதாலால், நான் மற்றைய கட்சிக்கு இதுவரை வாக்களிக்கவில்லை. ஆனால், நான் வாக்களிக்காத கட்சியும் அவர்களின் பிரசுரிக்கப்பட்ட கொள்கை மற்றும் வேலைத் திட்டங்களுடன் ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். அவர்களின் ஆட்சியில் அப்படி புதிதாக எவை நடந்தன, பழையன எவை நடக்கவில்லை என்று கூட்டிக்கழித்துப் பார்த்தால், ஒரு சில பிரிவு மக்களின் மனநிலையில் தான் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏறபட்டதே தவிர, இங்கிருக்கும் பொறிமுறைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றே நான் உணர்கின்றேன். இது ஒரு முற்று முழுதான முதலாளித்துவ நாடு. எந்த வீதியும் இங்கு இலாபம் என்ற ஒன்றையே நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது. சமூக மாற்றங்கள் கூட முதலாளிகளாலேயே உண்டாக்கப்படுகின்றன என்ற ஒரு தோற்றம் தான் இங்கு உருவாக்கப்பட்டிருக்கின்றது. உள்நாட்டில் இரண்டு கட்சிகளினதும் கொள்கைகளின் நடைமுறைப்படுத்தப்படும் எல்லை மிகவும் சுருங்கியது, பலவீனமானது.
  9. தற்காலிக வேலைகளை நிரந்தரம் ஆக்குவதற்கு நானும் ஆதரவே, வசீ........... ஆனால், இவர்கள் தற்காலிக வேலையில் இருக்கவில்லை. தொண்டர் ஊழியர்களாகவே, பலர் சம்பளம் இல்லாமல் கூட இருந்திருக்கின்றார்கள். அதனாலேயே நான் Volunteer Job பற்றியும், தொண்டர் ஆசிரியர்கள் பற்றியும் இங்கே எழுதியிருந்தேன். தொண்டர் ஆசிரியர் பிரச்சனை நான் பாடசாலையில் மாணவனாக இருந்த காலத்தில் கூட அங்கே இருந்தது. இவர்களுக்கு கூட பயிற்சிகள் வழங்கி, பணி வழங்கி, அதை நிரந்தரமாக்கலாம் என்று தான் நானும் சொல்கின்றேன். ஆனால் இதை ஒரு அரசியல் விவாதம் ஆக்குவது முறையல்ல என்றும் சொல்கின்றேன். அனுபவத்தில் சில வேலைகளை மட்டுமே கற்றுக் கொள்ளலாம். பல வேலைகளுக்கு வேறு விதமான அடிப்படைகளும் தேவை என்பதை சொல்லவே அந்த உதாரணங்களைச் சொல்லியிருந்தேன்.................👍.
  10. அனுபவத்தில் வேலை பழகலாம் என்பதற்கு சில உதாரணங்கள்: சமீபத்தில் இரண்டு தடவைகள் இது செய்திகளில் வந்து இருந்தது. தமிழ்நாட்டில் மருத்துவமனை துப்பரவு பணியாளர்கள் நோயாளிகளுக்கு ஊசி குத்து ஐவியினூடாக திரவங்கள் ஏற்றியிருந்தார்கள். இப்பொழுது விசாரணை போய்க் கொண்டிருக்கின்றது. இன்னொரு நிகழ்வில், மருத்துவரும் தாதிகளும் இல்லாமல், இவர்களே ஒரு பிரசவம் பார்த்தது. இங்கேயும் விசாரணை போய்க் கொண்டிருக்கின்றது. நான் சிறுவயதில் இருந்த போது எங்களூரில் மிகக் கைராசியான 'பரியாரி' ஒரு மருத்துவரே அல்ல. அவர் ஒரு மருத்துவமனை ஊழியர். வீட்டில் வைத்து மருந்து கொடுத்தார், கட்டுப் போட்டர்,................ நானும் போயிருக்கின்றேன். நான் மருத்துவமனையில் வேலை செய்யவும் இல்லை, உயிரியல் படிக்கவும் இல்லை......... ஆனால், கிட்டத்தட்ட எந்த நோய்க்கும் மருந்து சொல்லும் அளவிற்கு தகவல்களை, புத்தகங்களை வாசித்து வைத்திருக்கின்றேன். முதற்கட்டமாக சிலரை தேடிக் கொண்டிருக்கின்றேன்................🤣🤣.
  11. தொண்டர் ஊழியர்கள் என்று சம்பளம் கூட இல்லாமல் நியமனம் செய்துள்ளார்கள் நம்ம அரசியல்வாதிகள்.........🫢. அடப் பாவிகளா, இங்கு எங்களின் பிள்ளைகள் பாடசாலைக் காலங்களில் Volunteer Job என்று போனால், பல இடங்களில் அதற்கு ஒரு சின்ன சம்பளமும் கொடுக்கின்றார்கள்................. சம்பளம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, இது ஒரு அனுபவம் என்றே பிள்ளைகள் அதை இங்கு எடுத்துக்கொள்கின்றனர்...............
  12. அவரையும் என்னையும் ஏனப்பா தொடுத்துவிடுகிறீர்கள்..................🤣. பெரிதாக அமெரிக்க உள்நாட்டில் மாற்றம் ஒன்றும் இருக்காது, பெயர் மட்டும் மாறி இருக்கும் என்று சொல்லவே நினைத்தேன்............... இங்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது, இந்த நாடு காலத்தால் மாறுகின்றதே தவிர இரண்டு கட்சிகளாலும் மாறவில்லை என்பதே என் அனுபவம்...............
  13. இல்லை கபிதன், என் நினைவில் சில விசயங்கள் திரும்பத் திரும்ப வந்து போய்க் கொண்டேயிருக்கின்றன. புதுக்குடியிருப்பு மருத்துவனையில் இருந்து இறுதி யுத்தத்தின் போது தகவல்கள் உலகெங்கும் போய்க் கொண்டிருந்தது. நாங்கள் என்ன செய்யலாம் என்று பலர் கலங்கி நின்றனர். சத்யனையும், அங்கு நின்ற மற்ற மருத்துவர்களையும் மறக்கவே முடியாது. பின்னரும், இலங்கை அரசால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு என்ன நடந்தது என்று அறிய, மற்றைய மருத்துவரின் புத்தகத்தை மக்கள் வாசிக்கவேண்டும். அவர் இங்கு வந்த போது, சில சந்திப்புகளை நடத்தியிருந்தார். நான் சிலவற்றுக்குப் போயிருந்தேன். அதுவும் கண்ணீர்க் கதை தான்........ இன்று எல்லாமே வெறும் கட்சி அரசியலும், பக்கச்சார்பு என்றும் ஆகிவிட்டது..............😌.
  14. தப்பிப்பிழைத்ததால் தான் சிலருக்கு சத்யன் மேல் சந்தேகம்................ நான் இதைப் பகிடியாக எழுதவில்லை. இவருடன் இறுதிப் போரின் போது கூட இருந்த இன்னொரு வைத்தியர் இங்கே அமெரிக்கா வந்து சேர்ந்தார். அவர் ஒரு புத்தகம் கூட எழுதி வெளியிட்டிருக்கின்றார். அவரை எல்லோரும் மறந்துவிட்டார்கள். சத்யன் அங்கேயே தங்கி விட்டபடியால், மத்தளத்திற்கு இரண்டு பக்கங்களும் அடி என்பது போல போய்க் கொண்டிருக்கின்றது.....................
  15. மெக்சிக்கோ புதிதாக ஒரு கால்வாய் தோண்டுகின்றார்களாம். அது அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் துறைமுகங்களுக்கு போட்டியாக.......................... என்ன, இந்த மனுஷனுக்கு அமெரிக்க மேற்கில் இருப்பவர்களை பிடிக்காது, அமெரிக்க மேற்கில் இருப்பவர்களுக்கும் இவருடன் ஒத்துவராது. அதனால், மெக்சிக்கோ தோண்டட்டும் என்று விட்டாலும் விட்டுவிடுவார்..................... எப்படி என்றாலும் பெரும்பாலும் எல்லாமே வெறும் படம் தான்...........😜.
  16. அடுத்த மாதத்திலிருந்து அமெரிக்க லிபரல் கிடையாது......... நாங்கள் கன்சர்வேட்டிவ் ஆகின்றோம்..... ஆதலால் தயவுடன் எங்களை உலகில் சிக்கலில் இருக்கும் லிபரல்களுடன் பின்னிப் பிணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.............. அத்துடன் அமெரிக்கா அடுத்த நான்கு வருடங்களுக்கு நாலு கால்களில் பாய முடிவெடுத்தும் உள்ளது (Make America Great Again and Again). இடையில் சிக்குபவர்கள் சின்னாபின்னமாக சிதறப் போகின்றார்கள்...........🤣.
  17. இதையெல்லாம் ஒத்துக்கவே முடியாது.......... வியாசர் எழுதியதில் இப்படி ஒன்று இல்லவே இல்லை........... மூன்று கோடாலிகள், மூன்று நடிகைகள் கதைகள் போல இங்கே மூன்று மலைகள்................🤣. யாரோ உட்கார்ந்து யோசித்திருக்கின்றார்கள்............ வசீ எழுதியதை வைத்து நாங்கள் இப்ப யோசித்துக் கொண்டிருக்கின்றோம்................😁.
  18. வெறுமனே சிபார்சுகளின் மூலமே தொண்டர்களாக இணைந்தவர்கள் என்றால், அந்த விடயம் அர்ச்சுனாவிற்கு நன்கு தெரிந்தும் இருக்கும், பின்னர் அர்ச்சுனா விடுகின்ற புஸ்வாணங்களில் இதுவும் ஒன்றே என்ற அளவில் இதுவும் கடந்து போகும்...............
  19. 🫣....................... கச்சதீவை மட்டும் மீட்டால் போதாது. நெடுந்தீவூ, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை என்று அந்தப் பகுதி முழுவதையும் நீங்கள் மீட்டெடுத்தால் தான் தமிழக மீனவர்கள் ஒரு தொல்லையும் இல்லாமல் அங்கே போய் மீன்பிடிக்க முடியும்...............🫣. சமீபத்தில் ஏதோ ஒரு மத்தியகிழக்கு நாட்டில் சிறையிலிருந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்தார்கள். அவர்களை அங்கே ஆறுமாதங்கள் அடைத்து வைத்திருந்தார்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக. அந்த கடலையும் ஸ்டாலின் போய் மீட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்............. 'ஓ மை காட், என்னது.............. நாங்கள் அங்கே போய் மீன்பிடிக்க முடியாதா..............' என்ற ரஜனிகாந்த் வகை உணர்ச்சியையே இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள், பிரமுகர்கள், நடிகர்கள் என்று ஒருவர் தப்பாமல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்..............
  20. 👍................... தொண்டர் ஊழியர்கள் என்றால் தொண்டர் ஆசிரியர்கள் போன்ற ஒரு பணியாளர்களே. தொண்டர் ஆசிரியர்கள் தங்கள் வேலையை நிரந்தரமாக்க வேண்டி அடிக்கடி போராடுவார்கள், அத்துடன் அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கும் சம்பளமும் மிகக்குறைவே. அவர்களின் கல்வித் தகமை மற்றும் தொழிற் பயிற்சிகளும் மிகக்குறைவே. அது போலவே இந்த சுகாதாரத்துறை தொண்டர் ஊழியர்களும். இதில் முடிந்தவர்களை நிரந்தரப் பணியில் அமர்த்துவது நல்ல ஒரு விடயம் தான், ஆனால் ஏற்கனவே இலங்கை அரசசேவை தேவைக்கு மிக மிக அதிகப் பணியாளர்களுடன் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ஒரு அறிக்கை கூட வந்திருந்தது. அர்ச்சுனா இரட்டைக் குடியுரிமை, இந்தியா வம்சாவளி மக்கள், தமிழ்நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் என்று சும்மா வாய்க்கு வந்த எல்லாவறையும் சமூக ஊடக தேவைகளுக்காக கலந்தடிக்காமல், அமைதியாக இப்படியான வேலைகளைச் செய்வது அவருக்கும், அவரைத் தெரிந்தெடுத்த மக்களுக்கும் நன்மை பயக்கும்................👍.
  21. 👍................... இதை மறந்து விட்டார்களோ என்று ஒரே கவலையாக இருந்தது............... பரவாயில்லை, மக்களுக்கு இது இன்னமும் ஞாபகத்தில் இருக்கின்றது.........................🤣. எலான் கலிஃபோர்னியாவை விட்டு டெக்சாஸிற்கு குடிபெயர்ந்ததிற்கு கலிஃபோர்னியா வரிகள் மட்டும் ஒரு காரணம் இல்லை............. எலான் எது சொன்னாலும் முடியவே முடியாது என்று சொல்வதாக கலிஃபோர்னியா முடிவெடுத்திருந்ததும் இன்னொரு பிரதான காரணம். நியூயோர்க்கும் சில விசயங்களில் கலிஃபோர்னியா போலவே.......... ஆனால் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை........... டெக்சாஸிலிருந்து நிலத்திற்கு கீழால் ஃபுளோரிடா போய் அங்கேயிருந்து கடலுக்கு கீழால் லண்டனுக்கு போகலாம்............... 😜.
  22. சிறி அண்ணா, நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.
  23. 👍............... தியா, இங்கு அமெரிக்காவில் நண்பர்களுக்கு புத்தகத்தை நீங்கள் அனுப்புவதாக இருந்தால், உங்களால் முடிந்தால் எனக்கும் ஒரு புத்தகம் அனுப்பிவிடவும். அப்படி முடியாவிட்டால், நான் சென்னையிலிருந்து ஏதோ ஒரு வழியில் வாங்கிக் கொள்கின்றேன்.................👍.
  24. கசங்கின சட்டையுடன் சுமந்திரன் நிற்கின்றாரே என்று இன்னொரு சந்திப்பை பற்றி இங்கு களத்தில் கருத்து எழுதும் போது நாங்கள் எழுதியிருந்தோம்.................... உடனேயே எங்களின் குறை தீர்க்கப்பட்டுவிட்டது.............🤣.
  25. 🤣.............. எங்களின் பிரார்த்தனைகள் இன்னமும் பயணித்துக் கொண்டே இருக்கின்றன என்று தான் நினைத்திருந்தேன்............. ஆனால் ஒரு சில பிரார்த்தனைகள் ஒரு கடுகதிப்பாதையில் சரியாகச் சேருமிடம் போய் சேர்ந்தும் இருக்கின்றன..............😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.