Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ரசோதரன்

  1. 'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
  2. 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன. அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே. ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.
  3. சரியான கணக்கு வழக்கு வெளியே வந்தால், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு போய் விடுவார் போலத் தெரியுதே............... நாங்களும் இடதுசாரிகள், நீங்களும் இடதுசாரிகள்................ இப்படியும் சொன்னர் இவ்வளவையும் செய்துவிட்டு......................
  4. அதுவே தான். எம்ஜிஆர் திரைக்கு வெளியேயும் அதே பிம்பத்தை வைத்திருக்க வேண்டிய ஒரு நிலையில் இருந்தார். ஆனால் ரஜனி திரை வேறு, தன் சுயம் வேறு என்று காட்டியும், அவர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக தமிழ் சினிமாவில் இருந்தார் என்பது பெரும் ஆச்சரியமே. ரஜனியின் திரை வாழ்க்கை மாறியது போலவே, தமிழ் சினிமாவின் போக்கும் ரஜனியால் மாறியது. எம்ஜிஆர், சிவாஜி ஆதிக்கத்தின் பின்னர் 70களின் நடுப்பகுதியில் இருந்து தமிழ் சினிமா வேறு ஒரு திசையை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. ஆனால், ரஜனியின் 'முரட்டுக்காளை' மற்றும் கமலின் 'சகலகலா வல்லவன்' தமிழ் சினிமாவை மீண்டும் பழைய பாதையிலேயே போக வைத்தது. ஷங்கர் இதற்கே வண்ணம் தீட்டினார். மணிரத்னம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆங்கிலப் படங்களின் தாக்கத்தினால், இந்தப் போக்கிலிருந்து வெளியேற முயன்றார். ஓரளவிற்கே அவரால் தமிழ் சினிமாவை ரஜனி போன்ற கதாநாயகர்களிடமிருந்து விடுவிக்க முடிந்தது. பாலா வந்த பின்னர் தமிழ் சினிமா மாறியது. பாலா போல பலர் வந்தனர், வந்து கொண்டிருக்கின்றனர். நாயகர்களின் பிம்பங்களையும் தாண்டி மாற்றுச் சினிமாக்கள் இன்று பலவும் வந்து நன்றாக ஓடுகின்றன. புதிய முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. அத்துடன் ரஜனியும், விஜய்யும் நிற்கின்றார்கள். பான் - இந்திய திரைப்படங்கள் இன்று ரஜனி போன்ற நட்சத்திர நடிகர்களுக்கு ஒரு அளவுகோலாகிவிட்டது. அல்லு அர்ஜூனாவின் 'புஷ்பா - 2' எட்டு நாட்களில் ஆயிரம் கோடி வசூல் என்பது புதுச் சாதனை. எந்த தமிழ் நடிகரும், ரஜனி உட்பட, 1000 கோடி வசூலை இன்னும் எட்டவில்லை. அமீர் கான், பிரபாஸ், ஷாரூக், அல்லு அர்ஜூன் என்று இது இன்னொரு வரிசை. ரஜனியோ, விஜய்யோ இதில் இல்லை. இன்றைய நிலையில் இவர்கள் வரவும் முடியாது. தமிழ் சினிமா ஆயிரம் கோடி வசூல் கொண்டு வரும் ஒரு புதிய நட்சத்திரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றது....................
  5. இந்த இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய சாதனையை செய்திருப்பது பெரும் வியப்பே............❤️. தமிழ்நாட்டில் இந்த விளையாட்டிற்கு நல்லதொரு சூழல் அமைந்திருக்கின்றது...............👍.
  6. stent ஒன்றை அடைபட்ட இடத்தில் வைத்திருப்பார்கள், அண்ணா.............. பின்னர் சில மருந்துகளை கொடுத்திருப்பார்கள். சுரண்டி எல்லாம் எடுக்க முடியாது....................
  7. எனக்கு தெரிந்த ஒருவருக்கு இந்த மாதிரியான வைத்திய முறைகள் தெரியும்............. ஆனால் அவர் மருத்துவர் இல்லை................. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தான் அவர்............ கோவிட் காலத்தில் உடம்புக்குள் இருக்கும் சார்ஸ் வைரஸிற்கே நேரே மருந்தடிக்க வெளிக்கிட்டவர் அவர்................ இல்லை, கொலஸ்ட்ரோல் நீக்க இப்படியான முறை ஒன்று இல்லை, அது முடியாது என்றும் நினைக்கின்றேன். எடையை, உடல் பருமனை குறைப்பதற்காக liposuction என்று ஒன்றுள்ளது. அது வேறு.
  8. சபாநாயகர் ஒரு பெரிய sabbatical leave ஆகப் போட்டு விட்டு, போய் எங்காவது பட்டம் பெற்றுக் கொண்டு வரலாம்............. அவராகவே பதவி விலகினார் என்றால் அது முறை..............
  9. 👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
  10. ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தில் மாற்றம் இல்லை என்பது சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் உடனேயே மின்கட்டணத்தை குறைக்கின்றோம் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்து, பின்னர் மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று சொல்வதை தான் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். உறுதிமொழிகள், வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசி விட்டு, இப்பொழுது வெறும் கையை மட்டும் விரித்து விரித்து காட்டினால் மக்கள் அதிருப்தி அடைவார்கள் தான்................ எல்லாமே மாஃபியாவா நாட்டில்.....................🫣.
  11. கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு இப்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் நினைவிடம், சிலை, கல்லறை என்று வைத்தால், பின்னர் என்றோ ஒரு நாள் அவை அழிக்கப்படும் போல................ தாங்கள் கொடுங்கோலர்கள், மக்கள் விரோதிகள் என்று அறியாமல் ஒரு மாய உலகத்துக்குள்ளேயே வாழ்ந்து இருக்கின்றார்கள்....................
  12. கே. சச்சிதானந்தனின் கவிதை ஒன்று. இதை ஜெயமோகன் அவரது தளத்தில் வெளியிட்டிருக்கின்றார். எங்கும் போரால் நிறைந்திருக்கும், அப்பாவி மக்களை ஆதரவற்றவர்களை பலவீனமானவர்களை கொன்று குவிக்கும் இன்றைய உலகிற்கு ஏற்ற ஒரு கவிதை இது வென்றோம் என்றவர்களே தோற்றவர்கள் ஆகின்றனர். https://www.jeyamohan.in/208930/ ********************************************************** இறுதிவிருப்பம் ---------------------- நான் அசோகன் பிணக்குவியல்களின் துயரம் நிறைந்த காவல்காரன் சகோதரர்களின் தலைகளை மிதித்து ரத்தநதியை கடக்கும் துரியோதனன் குருதிகலசத்தை கிரீடமாக்கிக்கொண்ட வெறும் ஊன்தடி என் கழிவிரக்கம் பாலைவெளியில் அலையும் ஆண்மையற்ற காளை என் மனமாற்றம் குருதி படிந்த வாளின்மீது சுற்றப்பட்ட காவி தர்மச்சொற்பொழிவாற்றும் இக்கனவுகளால் என் பாவத்தை மறைக்கமுடியாது அவையும் என் கீர்த்தித்தூண்களென்றாகும் என் தீமையின் விரைத்தெழல்கள். என் சக்கரத்தின் ஒவ்வொரு ஆரக்காலும் நான் ஒடுக்கிய ஒரு வம்சத்தின் முதுகெலும்பு என் சிம்மங்களின் ஒவ்வொரு சடைமயிரும் நான் எரித்த நகரங்களின் சிதைச்சுவாலை. இருபோர்களிலும் நான் தோற்றேன் எனக்கு மரணதண்டனை அளியுங்கள் என் இறுதிவிருப்பம் இதுவே இப்புவியின் இறுதி அரசன் நானேயாகவேண்டும்.
  13. 🤣................ நானாவது ஒரு பதில் எழுதினேன்......................😜. முற்றிலும் பகிடியே, அண்ணா. உங்களின் கேள்விகள் மரம் அரியும் வட்ட வாள் போன்றது........ சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருக்கும்........................👍.
  14. உண்மையே கிருபன், இது ஒரு அளவேயில்லாமல் வால் போல நீண்டு வளர்ந்து கொண்டே போகுதே.......... இளங்குமரனும் மிகவும் துடிப்பானவர் என்று சொன்னர்கள்............. அவர் ஊழியர்களுக்குகாக நிற்கவேண்டும் அல்லவா..........
  15. 🫣................... இது இன்னுமொரு மருந்தே இல்லாத நோயாகக் கிடக்குதே ........................
  16. 11 இலட்சம் மக்கள் சட்டவிரோதமாக இருக்கின்றார்கள் என்று ஒரு கணக்கு சொல்லுகின்றனர். ஆனால் அதில் இரண்டு லட்சம் மக்களைக் கூட கைது செய்து வெளியேற்றுவதற்கு தேவையான வளங்கள் அதற்கு பொறுப்பானவர்களிடம் இல்லை என்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயம் மற்றும் தொழிற்துறைகளில் இவர்களின் இடத்தை யார் நிரப்பப் போகின்றார்கள்.................. அமெரிக்கர்களும், இந்தியர்களும் குனிந்து புல்லுப் பிடுங்கப் போவதில்லை........ எனக்குத் தெரிந்த அளவில் என்னுடைய சுற்றுவட்டாரத்தில் புல்லு வெட்டிக் கூட்டும் ஒரே ஒரு 'இந்தியன்'.............. நான் மட்டுமே............🤣.
  17. ஒரு சிரிப்புக்காகவே அதை எழுதினேன், கோஷான்.......... கூகிள், மைக்கிரோசாஃப்ட் இப்படி எல்லாமே அவர்களாலேயே நிரம்பி இருக்கின்றது என்றும் அதில் சொல்லியிருந்தேன். தொழில்நுட்ப துறை மட்டும் அல்ல, மருத்துவர்கள், விஞ்ஞானிகள்................ இப்படி இந்தியா அமெரிக்காவிற்கு துறைசார் நிபுணர்களையும், பணியாளர்களையும் உருவாக்கும் ஒரு தொழிற்சாலை ஆகிவிட்டது. இரு பக்கங்களும் வெற்றி - வெற்றி என்று கருதுகின்றார்கள்...........
  18. 🤣.............. போன தடவை ட்ரம்ப் வந்து ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை. இந்த தடவை தனிப்பட்ட சில கணக்கு வழக்குகளை அவர் தீர்க்க வேண்டியிருக்கின்றது. அவருக்கு வேற வேலைகளுக்கு நேரமே இருக்காது. உலகம் முழுக்க சண்டைகள் வேற................ அவர் சும்மா ஏதாவது சொல்லிவிட்டு நாலு வருடத்தில் போய்விடுவார்.................. அர்ச்சுனா திரியிலேயே இலவசப் பிரச்சனை என்ன ஓட்டம் ஓடினது........... அர்ச்சுனாவிற்கு இது தெரிந்தால், இப்ப உடனடியாக ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்குள்ள போகப் போகுது..............
  19. அண்ணா, நீங்கள் எலிக்கு தேங்காய்த் துண்டு காட்டுகிறீர்கள்............. மீனுக்கு புழு ஒன்றை தூக்கிப் போடுகிறீர்கள்................ நாங்கள் மாட்டுப்பட்டால் நீங்கள் எங்களை வைச்சு செய்வீர்கள் என்பது மட்டும் உறுதி............🤣.
  20. நீங்கள் சொல்லும் இந்த வட்டத்தை, சுழற்சியை நோக்கித் தான் இலவசங்கள் வழங்கும் நாடுகள் போய்க் கொண்டிருக்கின்றன. அவர்களின் எதிர்கால நம்பிக்கையையும், திட்டமும் அதுதான். என்றோ ஒரு நாள் அதை அடைந்து விடுவோம் என்ற திட்டங்களே இன்றைய இலவச சமூகநலத் திட்டங்கள். ஆனால், ஒரு நாட்டில் மொத்த தேசிய உற்பத்தி போதுமானதாக இல்லாத போது, வட்டம் முழுமையாகது. அங்கே தான் அந்நியக் கடன்கள் வந்து இடைவெளியை நிரப்புகின்றன. தமிழ்நாடு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிக விரைவாக முன்னுக்கு போய் நிற்கின்றது. இலவச அரிசி, குறைந்த விலை ரேஷன் அரிசி, பாடசாலைகளில் இலவச உணவு, புத்தகங்கள், அரச கல்லூரிகள்.......... இவை தான் அதற்கான காரணங்கள்.
  21. நீங்கள் இப்போது ஒரு அதிதீவிரவாதியாகி விட்டீர்கள்.....................🤣. வளர்ந்து வரும் நாடுகளில், வளர்ந்த நாடுகளில் கூட சில பிரிவினருக்கு, சமூக நலத்திட்டங்கள் தேவை, கந்தையா அண்ணா. இந்த நலத்திட்டங்கள் இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த ஒரு செலவிலேயே தேவையான மக்களை சென்றடையவும் வேண்டும். அரச ஊழியர்களின், சில அல்லது பல ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றவர்கள் உட்பட, தான்தோன்றித்தனமான எஜமான மனப்போக்கை இல்லாதொழிக்க இலவச நலத்திட்டங்களை தொடரக் கூடாது என்பது சரியான ஒரு வழியாகத் தெரியவில்லை. எலித் தொல்லை போக வேண்டும் என்று வீட்டைக் கொளுத்தலாமா..............
  22. 🤣............... சத்யன் என்று எழுதுவதை வைத்துச் சொல்லுகிறீர்கள் போல............. கேதீஸ் என்றும் எழுதி விடுகின்றேன்................😜. வயதில் இவர்கள் இருவருக்கும் இடையில் நான் வருகின்றேன்........... இல்லை, இவர்கள் இருவரும் என் நண்பர்கள் இல்லை. ஆனால் இவர்களை ஓரளவிற்கு நன்றாகவே எனக்கு சில தொடர்புகள் மூலம் தெரியும். அர்ச்சுனா மீது வழக்குப் போடலாம் தான்......... கேதீஸ் ஏன் தயங்குகின்றார் என்று தெரியவில்லை.
  23. இல்லை, கபிடல் டெலிவிஷன் என்பவர்களுக்கு அர்ச்சுனா ஒரு நீண்ட பேட்டி கொடுத்திருந்தார். அதில் தான் இந்தக் குற்றச்சாட்டை அவர் சுமத்தியிருந்தார் என்று நினைக்கின்றேன். இது வவுனியாவில் உள்ள சில மருந்துக்கடைகளினூடாக நடைபெற்றது என்றும் அவர் சொல்லியிருந்ததாக ஞாபகம். தனிமனிதர்களை இப்படியாக எழுந்தமானத்தில், ஆதாரங்கள் இன்றி பொதுவெளியில் குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவே தான் குருநாகலில் மருத்துவர் மொகமட் ஷாஃபிக்கும் நடந்தது, வேறொரு தீவிர குற்றச்சாட்டை அவர் மேல் அவருடன் வேலை செய்த பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் சுமத்தியிருந்தார். பின்னர் அது நாடெங்கும் பற்றியெரிந்தது. ஷாஃபியின் குடும்பமே அழிந்தது என்று தான் நினைத்தேன், ஆனால் அவர் இறுதிவரை போராடி தான் ஒரு நிரபராதி என்று நிரூபித்தார்................ கேதீஸ்வரனுக்கும், சத்யனுக்கும் பிரச்சனைகள் இருக்கலாம். அது பதவிப் போட்டியாகவும் இருக்கலாம். ஆனால் சத்யன் இந்த ஆதாரமில்லா, அபாண்டமான குற்றச்சாட்டை கேதீஸ்வரனின் மேல் வைக்கவில்லை என்றே என் ஞாபகம்.
  24. 👍..................... ஊடகங்கள் அந்தப் பிரபல பெண் தலைவர் பெயரை கடைசி மட்டும் சொல்கின்றார்களே இல்லை, பையன் சார்..................... என்னுடையது வெறும் ஊகம்தான்.............
  25. லாட்டரி, டாஸ்மாக், மணல் மாஃபியா................... இதுவே தான் பல அரசியல் கட்சிகளினதும் அட்சயபாத்திரம்.................. இவை சற்றே சறுக்கினால், உடனே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறிவிடுகின்றனர்....................🫣. இன்றைய தேதிக்கு தமிழ்நாட்டில் என்ன செய்வதென்று தெரியாமல் அதிகமாக முழித்துக் கொண்டிருப்பவர்................... புஸ்ஸி ஆனந்த்.................. ஆதவ்வின் குறி இப்ப அங்கே தான்...........🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.