Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ரசோதரன்

  1. ஆனால் காவோலை எத்தனை நாட்கள் நின்று பிடிக்கும், ரிஷி............ அத்துடன் காவோலைத் துண்டுகள் உக்கிப் போய்விட, அந்த இடத்தில், உள்ளே, வெற்றிடம் உருவாகிவிடும் அல்லவா, அதுவே பின்னர் முழு அமைப்பின் ஆதாரத்தையும் கெடுத்தும் விடலாம்.................. இது என்னவென்று எனக்குத் தெரியவில்லை.........கேட்டுப் பார்ப்போம்.............. அர்ச்சுனா - கிஷோர் என்று ஒன்றும் இருக்கின்றதா..............🫣. அந்த அதிர்வைக் கட்டுப்படுத்தவே காவோலையைப் போட்டோம் என்று சொல்லப் போகின்றார்கள், அண்ணா.......🤣. இது ஒரு பொன்னான சந்தர்ப்பம்............ அவர் சாவகச்சேரி மக்களுக்கு ஒரு கைமாறு செய்தே தீருவேன் என்று ஒற்றைக்காலில் வேறு நிற்கின்றார்.............🤣.
  2. ஜெயக்கொடி படித்து முடித்தார் என்றே நினைக்கின்றேன். அவரும் நானும் பல்கலையில் ஒரே வகுப்பே. அந்த வருடம் இரண்டு வகுப்புகளை பல்கலைக்கு உள்ளே எடுத்திருந்தனர், 1986 மற்றும் 1987ம் ஆண்டுகளில் பாடசாலை உயர்தர பரீட்சை எழுதியிருந்தவர்களை. ஜெயக்கொடி 1986ம் ஆண்டு வகுப்பைச் சேர்ந்தவர், நான் 87ம் ஆண்டு. பேராதெனியாவில் மிக இலகுவாக இந்த தகவல்களை உறுதி செய்து கொள்ளலாம். எல்லா தரவுகளிலும் மிக வெளிப்படையாக அவர்களின் இணையத்தில் இருக்கின்றன. நம்ப முடியாத விடயம் இவரும் அவர்களில் ஒருவர் என்று..............
  3. அர்ச்சுனாவின் ஏரியாவிலேயே கார்பெட் ரோடு என்ற பெயரில் காவோலை ரோடு போடுகின்றீர்களா............. என்ன துணிவு உங்களுக்கு...............
  4. 🤣............... உங்களுக்கும், எனக்கும் பொதுவான ஒரு பிரச்சனை இருக்கின்றது என்று நினக்கின்றேன். நாங்களும் இருவரும் தேவைக்கு அதிகமாகவே கதைகள், கவிதைகள் வாசிக்கின்றோம் போல..................😜.
  5. 🤣............. ஆடு-புலி-புல்லுக்கட்டு போன்றது இலங்கை மக்களின் கதை........... இந்தியா அவர்களின் நாட்டுக்குள் இதுவரை பார்த்திராத ஒரு படைப்புகள் நாங்கள்................ பாலத்தை போடட்டும், நாங்கள் யாரென்று காட்டுகின்றோம்................🤣. முருகனின் பட்டம் முறையானதே............... இப்ப எவராவது 'டாக்டர்' என்று சொன்னாலே, உடனே சிரிப்பு வருகின்றது.............
  6. 👍................ ஒரு சாதாரண மனிதனின் சாதாரண வாழ்க்கையையே அந்த மனிதனுக்கு சம்பந்தமும் ஆர்வமும் இல்லாத எத்தனை எத்தனை புறக்காரணிகள் தீர்மானிக்கின்றன.....................😌.
  7. கொண்டு வந்தால் கலாநிதியாகத்தான் கொண்டு வருவோம் என்று அடாத்தாகா இருக்கின்றார்கள் தேசிய மக்கள் சக்தி............................. ஆனால் இந்தக் கூட்டம் பல்கலையில் படிக்கும் காலத்தில் தாங்களும் படிக்கவில்லை, எங்களையும் படிக்க விடவில்லை................... பரவாயில்லை, மாற்றம் இப்பவாவது வந்ததே...........
  8. 🤣............... தரைவழிப் பாலம் ஒன்றே போதும்................ பாண்டிச்சேரியும் தங்களை தனிமாநிலம் ஆக்குமாறு கேட்டுக் கொண்டேயிருக்கின்றார்கள். அது ஒரு மாநிலம், இது ஒரு யூனியன் பிரதேசம் என்று மாற்றிவிடலாம். அமெரிக்கா மட்டும் தான் கனடாவை ஒரு மாநிலம் என்று, பகிடியாக ஆனால் உண்மையாக, சொல்ல முடியுமா............. இந்தியாவிற்கும் ஒரு கெத்து தேவைப்படுகின்றது........... எல். முருகனை புதிதாக டாக்டர் முருகன் என்று போட்டிருக்கின்றார்கள். ரணில் இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க மாட்டாரா...................😜.
  9. சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று நாமலை அறிக்கை விடச் சொன்ன பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களை நாமல் இப்பொழுது தேடிக் கொண்டிருப்பார் போல...................🤣.
  10. 👍................ கேள்விகள் மட்டுமே வந்து கொண்டிருக்கும்.............. அவருக்கு பதில்களும் தேவையில்லை, முடிவுகளும் தேவை இல்லை....................🫣.
  11. 👍.............. நல்ல ஒரு செய்தியும், முயற்சியும். எந்த மொழியை தெரிந்து கொள்வதும் அந்த மனிதர்களுக்குகிடையேயான உறவுகளை மேம்படுத்தும்.
  12. 🤣.................. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், நிழலி!
  13. அப்படியும் இருக்கலாம்.......... சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே.......... தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌. அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............
  14. ஊழல் என்பதை விட, அனுபவமின்மையே இது காட்டுகின்றது என்று சொல்லவே வந்தேன், அல்வாயன். முன்னைய ஆட்சியில் சீனி இறக்குமதியில் ஒரு ஊழல் நடந்ததே......... அது போல இந்த அரசில் நடவாது. பசில் போல எதிலும் பத்து வீதம் கமிஷனும் இங்கே கேட்கமாட்டார்கள், ஆனால் பொருள் வந்து இறங்குவதற்குள் மக்களின் சீவன்கள் போய்விடும்.....................
  15. இதுவே நடைமுறை. ஆனால், நாங்கள் நாலு மணிநேரத்தில் சுங்கத்திலிருந்து விடுவித்து விடுவோம் என்று அமைச்சர் முன்னர் சொல்லியிருந்தார். நடைமுறையில் நாலு மணிநேரம் என்பது இப்படியும் ஆகிவிடும் என்று இப்பொழுது அவர்களுக்கு புரிந்திருக்கும்................... அரிசி எந்த நாட்டிலிருந்து வந்தாலும், 'ஆறு கப்பல் வந்தாலும் நீறு கப்பல். அரிசிக் கப்பல் வந்தாலும் தவிட்டுக் கப்பல்....................' என்றே ஆகிவிடுகின்றது...............
  16. அசாத் மற்றும் அசாத் போன்ற கொடுங்கோலர்கள் இல்லாது போக வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகின்றோம் என்று நினைக்கின்றேன். அசாத்தின் வீழ்ச்சி ஒரு நல்ல சகுனம் என்றே நானும், பலரும் பார்க்கின்றோம். இங்கிருந்து சிரியா ஒரு புதிய பாதையில் போகலாம் என்று நம்புகின்றோம். கிளர்ச்சியாளர்கள் செய்வதாக நீங்கள் சொல்வது தமிழில் ஆதவனுக்கு ஈடான உலக ஊடகங்களில் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றது. அதனால் தான் நான் அவற்றை பொருட்படுத்தவில்லை. கிளர்ச்சியாளர்களில் எந்தப் பகுதியாவது அந்த அப்பாவி மக்களை இப்படிச் செய்கின்றார்கள் என்று தோன்றினால், அன்றே அவர்களுக்கு எதிராகவும் சொல்வேன், அவர்களை மூடி மறைக்கப் போவதில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடித்தளத்தில் இருந்து எங்கள் பார்வைகளையும், கருத்துகளையும் உருவாக்குகின்றோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான அடித்தளங்கள். என்னுடைய அடித்தளமானது 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்துவிடுவோம்..........................' என்பதில் இருக்கின்றது. என்னுடைய பார்வையும், கருத்தும் இங்கிருந்தே வருகின்றது. தேசியம், நாடு, மதம், இனம், பக்கச்சார்பு போன்றவற்றில் இருந்து அல்ல. குருநாகல் வைத்தியர் மொகமட் ஷாஃபி, அந்த ஈரான் பெண், கழுத்தில் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்ட கறுப்பின அமெரிக்கர் (George Floyd), சிரியாவின் Mazen Al-Hamada, ரஷ்யாவின் Alexei Navalny மற்றும் கோடிக்கணக்கான அப்பாவிகள், பலமற்றவர்கள் .............. இப்படியான ஒவ்வொரு மனிதர்களுக்காக வேண்டியே கண்கள் கலங்குகின்றன. அதையே தான் நான் முன்வைக்கின்றேன். மேற்குலகையோ அல்லது அமெரிக்காவையோ நான் சார்வதில்லை. 'அவர்கள் செய்தார்களே, அதைத்தானே இவர்களும் செய்கின்றார்களே..................' என்ற நியாயங்களும் என்னிடம் இல்லை. ஒருவரை அறிய ஒரு புள்ளியை, ஒரு கணத்தை மட்டும் பார்க்காமல், அவரின் தொடர்ச்சியை முழுவதுமாகப் பார்க்கவேண்டும்.
  17. நாங்களும் தான் ஒரு நூறு வருடங்கள் முன் வரையும் ஒரு பழங்குடியாகவே இருந்தோம். மூட நம்பிக்கைகளை இறுக்கமாகவே பின்பற்றிக் கொண்டிருந்தோம். பகுத்தறிவு என்று ஒன்று பரவலாக வந்தது பாரதியின் பிறப்பின் பின் தானே.............. சமூகத்தில் எதையும் நேர் கொண்ட பார்வையுடன் கேள்வி கேட்கலாம் என்ற துணிவை அவர் கொடுத்த பின் தான் சிலர் கேட்கத் துணிந்தனர். அங்கிருந்து தான் இங்கு வந்து நிற்கின்றோம். இதுவே தான் உலகெங்கும் நியதி. ஐரோப்பியர்கள் சில நூற்றாண்டுகள் முன்னரேயே சிந்திக்கத் தொடங்கினர். மத்திய கிழக்கு மக்கள் அந்த வகையில் சிறிது பின்தங்கிவிட்டனர். ஆனால் அதற்காக இன்றைய ஒன்றுக்கு ஒன்று மிகவும் நெருக்கமாக தொடர்புபட்ட நவீன உலகில் ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு குழுவையோ இப்படியான மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரங்கள் இல்லாத ஒரு கொடிய அடக்குமுறையில் ஆட்சி செய்வதை சகமனிதர்கள் பார்த்துக் கொண்டு வீணே இருக்கமுடியாது. இன்றைய நெருக்கமான தொடர்புகளால் விளைவுகள் எங்கும் பரவுகின்றது. அடிப்படைவாதங்கள் மட்டும் பரவவில்லை, அதன் பெயரில் நடக்கும் மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் பரவுகின்றன. உதாரணமாக, எங்கிருந்து போதைப் பொருட்கள் வருகின்றன............ சிரியாவில் கூட அது தான் அசாத்தின் கடைசி வருமானமாக இருந்தது. எல்லை நாடுகள் அசாத்தை கைவிட இதுவும் ஒரு காரணம். அடிப்படைவாதம், நம்பிக்கைகள் என்ற போர்வையில் சிலர் தங்களின் ஏகபோக வாழ்க்கைகளுக்காக எந்த எல்லைவரையும் போகின்றனர். இவற்றை எந்த வகைகளில் என்றாலும் நீக்க முடியுமா என்று தான் பார்க்கவேண்டும். 'அவர்கள் அப்படித்தான்.................' என்று அப்படியே விட்டுவிட முடியாது.
  18. 'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........
  19. ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே........... கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள் நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன் அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன் எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர் அழுது அழுது மகிழ்வாக இருந்தேன் இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
  20. 🤣................... கட்டணம் எவ்வளவு என்று கேட்டுச் சொல்கின்றேன். அது சரி, உங்களுக்குக்காக கையெழுத்து போடப் போடும் மற்ற மூவரும் யார்....... நாலு பேர்களில் நான் ஒன்று............🤣. ஊரில் அந்த நாட்களில் 'கலாநிதி ஸ்டோர்ஸ்' என்று ஒரு பலசரக்கு கடை இருந்தது.......... இந்தப் பட்டம் கொடுக்கும் வியாபாரத்திற்கு அது நல்ல தோதான பெயர்................😜.
  21. 👍.................... பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை தான். முழு ஆதரவும் கொடுத்து, எப்போதும் தூக்கிச் சீராட்டியதும் தமிழ்நாடு அரசு தான்............... சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் திடீரென தூக்கத்தில் இருந்து எழும்பி இருக்கின்றார்கள்................ இவர்களால் தான் சீமானுக்கு வேலை வருகின்றது................🤣 தெலுங்கு வழியாக வந்த தமிழர்கள் கோடிக் கணக்கில் இருக்கின்றார்கள் தமிழ்நாட்டில். கருணாநிதியின் குடும்பத்தையும் இப்படித் தானே சொல்கின்றனர். உதயநிதியும் 'தெலுங்கு பாய்' தான் இவர்களின் கணக்குப்படி.................. இதைத் தானே கஸ்தூரி சொல்ல ஆரம்பித்து, பின்னர் அவரைத் தேடிப் பிடித்தார்கள்.......😜.
  22. தினமும் நாலு அறிக்கைகள் விடவேண்டும் என்ற நிலையில் நாமல் இப்பொழுது இருக்கின்றார். கீதநாத்தும் இதே போல ஒரு கட்டாயத்தில் இருக்கின்றார். இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குவதே இதற்கு ஒரு முடிவாகும். அதையே தான் முகாம்களில் 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் எம் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். ஜெயலலிதா அவரின் கடைசி நாட்களில் இதற்கான முயற்சிகளை எடுத்தார்........... ஆனால் அவரின் திடீர் இறப்பின் பின், இந்தியக் குடியுரிமைச் சட்ட மசோதாவின் பின், இதைக் கண்டு கொள்வோர் இல்லை.........😌. அங்கேயே பிறந்து, படித்து, வளர்ந்து வரும் எம் மக்கள் குடியுரிமை இல்லை என்ற காரணத்தால் இழப்பவை மிக அதிகம். ஆசிரியப்பணி உட்பட எந்த அரச வேலைகளுக்கும் எம் மக்கள் தகுதியில்லாதவர்கள் ஆகிவிடுகின்றனர் அங்கே................😌.
  23. பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
  24. அடப் பாவிகளா................ அசாத் போன்ற ஒருவருக்காகவும் நியாயம் கதைப்பீர்களா.............. இங்கு நீங்கள் அசாத்திற்காக நியாயம் சொல்கின்றீர்கள் என்றால், உங்களுக்கு தீராத வெறுப்பு வேறு எங்கோ ஒரு இடத்தில் இருக்கின்றது என்று பொருள்........................🫣. அது உள்ளிருந்தே கொல்லும்.........
  25. 👍................ நல்ல ஒரு முடிவும், முன்னுதாரணமும்............ நாமலே பட்டம் இல்லாவிட்டால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று சொன்னதைத் தான் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது...................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.