Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. காளியம்மாள் அவர்களா அந்தப் பிரபல பெண் தலைவர்......................?? சமீபத்தில் அங்கு நடந்த மாவீரர்கள் அஞ்சலி நிகழ்வில், 'ஒரு பத்து நிமிடங்கள் மட்டுமே தலைவருடன் பேசியதாலேயே சீமான் இப்படி ஆகினார்............' என்று பேசியிருந்தார் காளியம்மாள். பின்னர் சீமான் பேசும் போது, நீங்கள் எல்லோரும் பத்து நிமிடங்கள் என்று தான் நினைக்கின்றீர்கள், ஆனால் நான் நாட்கணக்கில் தலைவருடன் இருந்தேன் என்று அந்தப் பத்து நிமிட விடயத்தை மறுத்தார்............. வெறும் பத்தே நிமிடங்கள் மட்டும் தானா என்ற கேள்வி இப்பொழுது பொதுவெளியில் வந்துவிட்டது............
  2. 🤣............. இது தான் இவரைத் தேர்தெடுத்த மக்கள் இவரிடம் எதிர்பார்த்தது.............. உண்மையிலேயே. இவர் இப்படியே கைதட்டல்களுக்காக ஒரு வித்தைக்காரர் போல மரங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்க வேண்டியது தான்..............🫣.
  3. 👍..................... ராஜன் குறை அவர்களின் நல்லதொரு கட்டுரை. மக்களிடம் இறங்கிப் போகவேமாட்டீர்கள், ஆனால் மக்களாட்சி என்று சொல்வீர்களா............🤣. சமீபத்தில் விஜய் கனமழையின் போது செய்த செயலும், விட்ட அறிக்கையுமே போதும் இவரின் சிந்தனைப்போக்கை, தெளிவைத் தெரிந்து கொள்ள. ஆதவ்வின் பிரச்சனை வேறு. அவரின் பிரச்சனை உதயநிதியுடனான தனிப்பட்ட பிரச்சனை. அதற்காக அவர் எந்த எல்லைவரையும் போய் உதயநிதியை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார். விசிகவும், தவெகவும் ஆதவ்வின் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது திருமா கொஞ்சம் சுதாகரித்து ஆதவ்வை ஆறு மாதங்கள் பதவியிலிருந்து இடைநிறுத்திவிட்டார். ஆனால் விஜய் தான் ஆதவ்வின் அடுத்த இலக்கு. ஆதவ் அங்கே போகக்கூடும். விஜய்யை வேங்கைவயலிற்கு வாங்கள், களத்தில் இறங்குங்கள் என்று ஆதவ் கூப்பிடுகின்றார்............... நடக்கிற காரியமா இது................ முதலில் வேங்கைவயலில் என்ன நடந்தது என்று ஒரு திரைக்கதை எழுதி, விஜய் அதில் நடித்துப் பழகவேண்டும்.................. செந்தில் பாலாஜியா, ஆதவ்வா என்ற நிலையில் செந்தில் பாலாஜியின் பக்கம் சாய்ந்தார் உதயநிதி. இந்த இருவருமே சுத்தம் கிடையாது. டாஸ்மாக் மற்றும் பல வழிகளில் கட்சிக்கு அதிகப் பணம் யார் கொண்டு வருவார்கள் என்பதில் தான் இந்த இருவருக்குமே போட்டி. அத்துடன் செந்தில் பாலாஜி ஒரு படி கீழேயே நின்றும் விடுவார். ஆதவ் எல்லாப் படிகளும் ஏறவேண்டும் என்ற விருப்பில் இருக்கின்றார். விடுவாரா உதயநிதி.............. பட்டியலின மக்களுக்கு உரிமை என்று கோஷத்துடன் விசிகவில் சேர்ந்தார் ஆதவ். அது அவ்வளவாக எடுபடவில்லை. இப்பொழுது மன்னராட்சியை அழிக்கப் போவதாக விஜய்யை வேங்கைவயலிற்கு கூப்பிடுகின்றார்..................🫣.
  4. 'அவர்கள் செய்யாததையா இவர்கள் செய்துவிட்டார்கள்........................' என்பதே இன்றைய உலகில் ஒரு ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயம் ஆகிவிட்டது, கடஞ்சா............ எங்களுக்கு நாங்களே, எங்களுக்குப் பிடித்தவர்களுக்காக/பிடிக்காதவர்களுக்காக, நாங்கள் சொல்லிக் கொள்ளும் சமாதானங்கள் இவையோ என்றும் தோன்றுகின்றன...............
  5. 🤣....................... விவேக்கை முதலில் அனுப்புங்கப்பா............ அப்புறம் சுந்தர்................... அப்புறம் சத்யா................. நான் வீடியோவை இன்னமும் பார்க்கவில்லை, இவர்களின் பெயர்கள் விடுபட்டு விடுமோ என்று ஒரு ஆதங்கம் தான்...................😜.
  6. உங்களின் சில பதில்கள் தொப்பிக்குள்ளிருந்து புறா வருவது போல, அண்ணா.............🤣. இவர்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்............. அந்த நாட்டுக்கும், சனங்களுக்கும் இன்னொரு ஆப்கானிஸ்தான், தலிபானின் அடக்குமுறை ஆட்சி என்ற நிலை வராமல் இருந்தாலே போதும்...............
  7. 🤣................... 'இதுக்கு மேல நீ ஒரு எழுத்து வாசித்தாலும், நீ ஆள் குளோஸ்..............' என்று ஒரு டாக்டர் வந்து சொல்லும் வரை சகல செய்திகளையும் வாசித்துக் கொண்டே இருக்கப் போகின்றோம், கபிதன்................. நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும், குமாரசாமி அண்ணா. அசாத் போன்று பலர் வரலாற்றில் வந்து போயிருப்பார்கள். தொடர்ந்தும் அங்கேயே இருப்பார்களா............. ரஷ்யாவில் எந்தப் புலம்பெயர் சமூகமும் தொடர்ச்சியாக இருப்பதாக நான் தகவல்கள் எதுவும் பார்த்ததில்லை............. சீனாவிலும் இப்படியே. அந்த நாட்களில் பல்கலைப் படிப்பு முடிந்தவுடன் ஜப்பானுக்கு சில புலமைப்பரிசில்கள் கிடைக்கும். எந்த நாட்டிலும் கிடைக்கும் பணத்தின் அளவை விட ஜப்பான் கொடுக்கும் பணத்தின் அளவு பெரும்தொகை. படிக்கும் போதே 'ஒரு பணக்காரன்' ஆகிவிடலாம். அத்துடன் ஐந்து வருடங்கள் தான் மேற்படிப்பு என்றால், ஜப்பானில் சரியாக ஐந்து வருடங்களில் அதை முடித்தும் விடுவார்கள். ஆனாலும் படிப்பு முடிந்தவுடன் அங்கு எவரும் நிரந்தரமாகத் தங்குவதில்லை. ஜப்பானியச் சமூகத்தில் அந்நியர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு இடம் இல்லை என்றே சொல்கின்றனர். அங்கே படித்து முடித்தவர்கள் சிலர் இலங்கைக்கு திரும்பிப் போனார்கள், பலர் மேற்கு நாடுகளுக்கு போனார்கள். இதையொட்டியே என் எண்ணம் இருந்தது.....................
  8. கோஷானும் ஒரு காரணம் என்று இப்பொழுது தெரிகின்றது.................🤣. சென்னையில் விஜய்காந்திற்கு காலில் சில விரல்களை அகற்றிய அந்த வாரத்தில், இவருக்கும் அதே சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஞாபகம். நான் சிறுவயதில் இருக்கும் போது இவரை நன்றாகவே தெரியும். அப்பொழுது நல்ல திடகாத்திரமாகவே இருப்பார். பின்னர் இவரை ஊரில் நான் கண்டதில்லை. பின்னர் இவர்கள் வீடு வீடியோ கேசட்டுகள் வாடகைக்கு விடும் இடம் ஆகியது. அது ஒரு கதை.....................
  9. 🤣................ உங்களின் எழுத்து ஒரு தனிவகை.................👍. இந்த யூடியூப்காரர்கள் அர்ச்சுனா, அநுர அலை முடிந்தவுடன், வேற ஏதாவது ஒன்றை முன்னுக்கு கொண்டுவந்து நிற்பாட்டுவார்கள்.............. நியாய தர்மம் பார்க்காமல்............. சமீபத்தில் இந்தியாவில் ஒரு கணவன் - மனைவி யூடியூப்பர்கள் தங்களின் தளத்திற்கு ஆதரவு குறைந்தவுடன் தற்கொலை செய்துகொண்டனர். அது போல ஏதாவது முடிவுகளை இவர்களும் எடுக்காவிட்டால் சரிதான்..........
  10. 👍............. தானாகச் சேர்ந்த கூட்டமோ என்று ஒரு கணம் ஆடிப் போய்விட்டேன்............ எத்தனை எத்தனை இராணுவ முகாம்கள் அந்தப் பகுதியில்.............. எல்லாவற்றையும் மூடிப் போட்டு, எல்லா இராணுவத்தினரையும் கொண்டு போய் பலாலியில் இறக்கிவிடலாம்............
  11. அவர் சுகமடையவேண்டும். மிகவும் அதிக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று நினைக்கின்றேன். சென்னையிலும் சிகிச்சை பெற்றிருந்தார். உடம்பை அவ்வளவாகக் கவனித்திருக்கமாட்டார்......................😌.
  12. 🫣................... வருமானத்தை அதிகரிப்பதற்கு இதைவிட இன்னும் சில யோசனைகளை டயான கமகே சொல்லியிருந்தாரே................... கஞ்சாச் செடி வளர்ப்பது, அதுவும் பாராளுமன்றின் பின்னாலேயே கூட வளர்ப்பது, இரவு விடுதிகளை திறந்தே வைத்திருப்பது, மதுபானக்கடைகளை இரவிலும் நீண்ட நேரம் திறந்து வைத்திருப்பது............... இப்படி அவர் அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டிருந்தாரே................... டயானா சமூகவிரோதி ஆகிவிட, ரணில் பொருளாதார அறிஞர் ஆகினார்..................🤣.
  13. இராணுவம் வெளியேறினால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கற்கோவளம் மக்கள் போராடினார்களா....................😶. யாரிடம் இருந்து இவர்களுக்கு ஆபத்து வரும்................. இந்திய மீனவர்களிடம் இருந்தா, அவர்கள் கற்கோவளம் கடற்கரையில் வந்து இறங்கிவிடுவார்களா..................
  14. ஒரேயடியாக 'வாழ்க அநுர...........' என்று சுத்தியலால் உச்சி மண்டையில் அடித்தது போல சொல்லிவிட்டீர்கள்...........................🤣. அநுர இல்லாமல் சஜித்தோ அல்லது ரணிலோ வந்திருந்தாலும் எதுவுமே கிடைக்காது. அதே பனாட்டு காயப் போட்ட கதையைத்தான், காயட்டும் காயட்டும் என்று எப்பவும் அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். தேசிய மக்கள் சக்தி அரசியலமைப்பை மாற்றும் போல, அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்கும் போல........... ஆனால் மாகாணங்களுக்கு காணி, போலீஸ் அதிகாரம் கொடுக்கப் போகின்றோம் என்று ஆரம்பித்தால், அப்படியே அந்த புதிய அரசியலமைப்பை தூக்கிப் பாராளுமன்றக் குளத்துக்குள் போட்டுவிடலாம். இந்த யோசனை சர்வசன வாக்கெடுப்பில் தெளிவாக நிராகரிக்கப்படும். 'மச்சான், உங்களுக்கு என்ன தான்டா பிரச்சனை................' என்று தான் சிங்கள் நண்பர்கள் அன்று அங்கலாய்த்தார்கள். இன்றும் அதையே தான் கேட்பார்கள். அவர்களால் இதை உணர்ந்து கொள்ளமுடியாது. பெரும்பான்மை சமூகங்களால் இதை உணர்ந்து கொள்வது கடினம். விதிவிலக்காக, அவர்களில் ஓரிருவருக்கு புரியலாம், அந்த ஓரிருவரும் நோபல் பரிசுக்கு தகுதியானவர்கள் போன்று அரிதானவர்கள். அர்ச்சுனா இதைச் செய்யமுடியாது. அவரை ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக அனுப்பி எடுக்கலாம். அதுதான் அவரின் துறை. சமூகத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் பாராளுமன்றில் இருக்கும் மற்றைய தமிழ் பிரதிநிதிகள் சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய, இருக்க வேண்டிய உரிமைகள் பற்றி தொடர்ந்து சொல்லவேண்டும்.
  15. 👍................ எனக்கும் இது பெரும் குழப்பமாகவே இருக்கின்றது. சிறிதரனை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றார்கள், அதே நேரத்தில் சுமந்திரனை அதைவிட அதிகமாக வெறுத்துக் கருத்து எழுதுகின்றார்கள். இது வெறும் பிரச்சார மேடை போலத் தான் இருக்கின்றது............. ஒரு கருத்துக்களம் போல அல்ல..............
  16. ஆரம்ப தளம்பல்களின் பின், ஆட்சியாளர்கள் சுதாகரித்துக் கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன். தனியார் முதலாளிகளின் அரிசிக் குடோன்கள் எங்கே இருக்கின்றன என்பது ஒரு இரகசியத் தகவல் அல்ல. ஆனால், அவற்றை அரசு கையகப்படுத்தலாமா, இல்லையா என்பதே சட்டச் சிக்கல்.
  17. ஒரு மனிதன் ரஷ்யாவில் போய் தஞ்சமடைந்தான் என்ற செய்தியளவிற்கு வெறுமையான உணர்வுகளைத் தந்த செய்திகள் மிகக் குறைவு............................. இந்த உலகில் வேறு ஒரு நாடுமா அடைக்கலம் கொடுக்கவில்லை.......................
  18. 🤣.................... மக்கள் தேவை இருந்தால் கடவுளாகப் பார்ப்பார்கள். தேவை முடிந்தவுடன், கோவில் கதவையே உடைத்தும் விடுவார்கள்.................... இங்கே என்ன வெற்றியும், தோல்வியும்................. முடிவில்லாத அஞ்சலோட்டம் போல தடியை மாற்றி மாற்றிக் கொடுத்து ஓடிக் கொண்டேயிருப்பார்கள்......... சும்மா இருந்த கேதீஸ்வரன் மீதே போதைப் பொருட்களை மாணவர்களுக்கு விற்றார் என்று போகிற போக்கில் ஒரு குண்டைத் தூக்கிய வீசிய அர்ச்சுனா (அதையும் பலர் நம்பி சமூக ஊடகங்களில் கொண்டு திரிந்தனர்..............🫣), இன்னும் ஏன் சத்தியனை மட்டும் விட்டு வைத்திருகின்றார், இத்தனைக்கும் சத்தியன் மீது பல குற்றச்சாட்டுகள் ஏற்கனவே இருக்கின்றன................
  19. 🤣............ பாண், பருப்பு, அரிசி, வெங்காயம், பெட்ரோல்,................ இவை போன்றவை தான் எங்கள் நாட்டில் தலையாயவை ............. இவை இருந்தால், பின்னர் அரசியல் தீர்வு, புரட்சி, மறுமலர்ச்சி இப்படியானவற்றை பற்றி எல்லோரும் அங்கே கதைப்பார்கள். இவை போதியளவு, நியாய விலையில் கிடைக்காவிட்டால், நேரே காலிமுகத்திடல் தான்.................🤣. படித்தவர்களுக்கு என்றே சில பிரத்தியேக பிரச்சனைகள் இருக்கின்றன........... தலையை விட்டுவிட்டு வாலைப் பிடித்து இழுஇழுவென்று இழுப்பது..................😜. தேசிய மக்கள் சக்தி பட்டுத் தெளியும் என்று நினைக்கின்றேன்..............
  20. இந்த ஜோ பைடன் ஏன் ஆற்றில கொட்டுகின்றது போல ஒரு அளவேயில்லாமல் உக்ரேனுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார் என்று நானும் வெளி உலகம் போலவே யோசித்தன்................... கடைசியில் அது அசாத்துக்கு கொடுத்த விலை போல..............
  21. 👍...................... 'மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்................' என்று எங்கோ ஒரு தடவை முன்னர் வாசித்த பின், மழையைக் கண்டாலே இளங்கோவடிகளும், சிலம்பும் உடனே ஞாபகத்தில் வரும். ஆனால், அவ்வளவுதான்............. தேடி, பொறுமையாக இருந்து வாசிக்கும் பக்குவம் இன்னும் வரவேயில்லை. சும்மா சும்மா குறுக்கும் நெடுக்கும் ஓடியே வாழ்க்கை முடிந்து கொண்டிருக்கின்றது.............😌. மூன்று பெண்களுமே - கண்ணகி, மாதவி, மணிமேகலை - படைப்பில் புரட்சியே...........🙏. கடலுக்குள் என்ன இருக்கின்றது தெரியாமல் அந்தக் கடல் மேலே நீந்திக் கொண்டிருப்பது போல வாழ்க்கை போய்க் கொண்டிருக்கின்றது................
  22. ஓ.............. அந்த அரிசியா................ அதை இணையத்தில் மட்டுமே வாங்கி, சமூக ஊடகங்களில் மட்டுமே சமைத்துச் சாப்பிடமுடியும்.................................🤣.
  23. இப்போதைய அரிசித் தட்டுப்பாடு என்பது இரண்டு வாரங்களுக்கும் மேலாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம். அரிசி மாஃபியாக்கள் இதை திட்டமிட்டு பல வருடங்களாகவே செய்து வருகின்றனர். போன வருடம் என்று நினைக்கின்றேன், பர்மாவிலிருந்து அரிசியை அவசரமாக இறக்கினார்கள். அது தரமற்றது, அத்துடன் பர்மா அதிக விலைக்கு அதை இலங்கைக்கு விற்றது என்ற குற்றச்சாட்டுகளுடன் அது முடிந்தது. அரிசி மாஃபியாக்கள் எவ்வாறு நெல்லை மொத்தமாக விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்கின்றார்கள், அதை எவ்வாறு பதுக்கி வைத்திருக்கின்றார்கள் என்ற விபரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அவர்களின் பெயர்கள் கூட பகிரங்கப்படுத்துவிட்டன. ஆனாலும், அரசால் அவர்களின் கொள்வனவை தடுக்கவே அல்லது பதுக்கலை தடுக்கவோ முடியவில்லை. இப்போது இந்த பதுக்கல் முதலாளிகளில் ஒருவர் சஜித்தின் கட்சியினூடாக, தேசியப் பட்டியலினூடாக பாராளுமன்ற உறுப்பினராக ஆகியும் விட்டார்.............🫣. நீங்கள் இன்னொரு அரிசித் திரியில் எழுதியிருப்பது போல ஒரு நீண்டகாலத் திட்டம் வகுக்கப்படவேண்டும்.
  24. குமார் குணரட்ணம் எப்போதும் தயாராகவே இருக்கின்றார்.............. காலிமுகத் திடலில் ஒரு மாதம் கூடாரம் அடிக்க.............. இந்தச் சைனாக்காரப் பயல்களுக்கு வெறும் வாய் தான்............. இந்த நேரத்தில் கப்பல் கப்பலாக பச்சை அரிசியை அனுப்பி வைக்கலாம் தானே..................
  25. கார் லைசென்ஸை பிடிக்கின்றேன், பார் லைசென்ஸை பிடிக்கின்றேன் என்ற படங்கள் எல்லாம் தியேட்டரிலிருந்து ஒரு வாரத்திலேயே ஓடி விடும்............... ஆனால் அரிசிப் பிரச்சனை தெய்வம் போல........... நின்று கொல்லும்................🤣. அரிசியை உடனடியாக இறக்கிக் கொடுங்கப்பா.............. சந்தையில் இல்லாத அரிசிக்கு நீங்கள் என்ன கட்டுப்பாட்டு விலையைப் போட்டால் என்ன, போடாவிட்டால் என்ன...............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.