Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. நீங்கள் யாரைச் சொல்கின்றீர்கள் என்று தெரிகின்றது, கடஞ்சா. திருவடிவேல் அவர்களைச் சொல்லி இவரைச் சொல்லுவதை வாழ்நாளில் இப்போது தான் முதன்முறையாகக் கேட்கின்றேன்................. இவரைச் சொல்லித்தான் திருவடிவேலைச் சொல்லுவார்கள் எங்களின் பக்கத்தில். அவர் கொஞ்சம் வசதி, சராசரியிலும் கூட என்று இல்லை........... அவரின் வசதி எங்கேயோ........... அவரிடம் நிறையவே எடுத்தார்கள். உறவினர்கள் அவரை வெளியில் இருந்து போய் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்களுக்கு இதைச் சொன்னவர்களிடம் கேட்டீர்கள் என்றால் காரணம் சொல்வார்கள். சிலர் இன்னமும் சில நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதால் பெயர்களைத் தவிர்த்து இருக்கின்றேன். சில நிகழ்வுகள் சினிமாவில் மட்டுமே வருமென்று நினைத்திருந்தோம்.................
  2. பொதுவாக முழுவதையும் நீக்குவதில்லை. சில பகுதிகளை, சொற்களை மட்டுமே நீக்குவதாக சொல்லுவார்கள். 'அவைக்குறிப்பிலிருந்து இந்தச் சொல் நீக்கப்பட்டது............' என்று தமிழ்நாட்டுச் செய்திகளில் பார்த்திருக்கின்றேன். ஆனால், அர்ச்சுனா முறையான அனுமதியே இல்லாமல் அந்த விடயத்தை பேசினார் என்று வரும் போது, முழுவதையும் நீக்கினாலும் ஆச்சரியம் இல்லை. 100 மில்லியன் ரூபாய்கள் கேட்டு சத்யன் வழக்கு தொடர்ந்திருக்கின்றார்............... இந்த நிலையில் அவைக்குறிப்பு இல்லாமல் போனாலும் நல்லது தான்..............
  3. கேதீஸ்வரன் ஏன் அர்ச்சுனாவின் மீது வழக்கு போடவில்லை என்று ரதி சில நாட்களின் முன்னர் கேட்டிருந்தார்.................. சத்யன் 100 மில்லியன் ரூபாய்கள் என்று ஒரே போடாக போட்டுவிட்டார்............
  4. 🤣........................ காவோலை வீதியில் நீங்கள் பதிந்த கருத்துகளில் இருந்தும், இந்தப் பதிவில் இருந்தும் நீங்கள் எந்த பஸ்களில் போய் வந்திருப்பீர்கள் என்று ஓரளவிற்கு தெரிகின்றது...................🤣.
  5. 'கங்குவா' படம் தான்.............🫣. மாவை பாராளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று ஒரு சாதனை இருப்பதாகச் சொல்வார்கள்........அர்ச்சுனாவும் ஐந்து வருடங்களில் ஒரு சாதனை வைக்கப் போகின்றார்........... அதிகப் பேச்சுகள் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டதாக...............
  6. அன்று இரண்டு பிரபலமான வேலும்மயிலும் அங்கே இருந்தார்கள். ஒருவர் அப்போது வடமராட்சி வடக்கு அரசாங்க உதவி அதிபர், மற்றயவர் வல்வை ஊரணி மருத்துவமனை மருத்துவர். ஆனால், இவர்கள் இருவருக்கும் இப்படி நடந்ததாக எனக்கு ஞாபகமில்லை. அந்தக் காலத்தில் நான் ஊரிலேயே இருந்தேன். இது ஒரு பிழையான தகவலாக இருக்கலாம், பின்னர் இதுவே மீண்டும் மீண்டும் பல இடங்களில் உதாரணமாக எடுத்துச் சொல்லப்படும் என்றே இதை இங்கே பதிகின்றேன். ஆனால், அந்த நாட்களில் எங்களின் எலான் மஸ்க்குகள் என்று சொல்லப்படக் கூடிய சில பெரும் பணக்காரர்கள் ஊரில் (வல்வெட்டித்துறையில்) இருந்தார்கள். அவர்களுக்கு இப்படி நடந்ததுவே..........
  7. Pavement design codes, bridge design codes, building codes................. இப்படியானவை பலதரப்பட்ட நிலைமைகளுக்கும், காலநிலைகளுக்கும், தரைத் தோற்றங்களுக்கும் சேர்த்தே வரையைப்பட்டவை. சிராபுஞ்சியில் வீதி போடுவது என்றாலும், ராஜஸ்தான் பாலைவனத்தில் வீதி போடுவது என்றாலும், இவற்றில் அதற்கான விதிமுறைகளும், அளவுகளும் இருக்கின்றன. இந்த இடங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணமும், இலங்கையில் பெரும்பகுதியும் 'பச்சை தண்ணீர்' இடங்கள்......... சிக்கலற்ற இடங்கள்................
  8. தீவிரமான குற்றச்சாட்டுகள் என்று அவர் மேல் சுமத்தப்படுவது அவர் இலங்கை அரசின் முகவர் என்பதும் மற்றும் அதனுடன் இணைந்து வரும் செயல்களும். உதாரணமாக, அவர் ரணிலின் கையாள் எனச் சொல்லப்படுவது. மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் கூட, அது எவர் எவருக்கு ரணிலால் கொடுக்கப்பட்டது என்ற தகவல் இவருக்கு முன்னரே தெரிந்த ஒரு விவகாரம் என்று சொல்லப்படுவது. எந்தப் புள்ளியிலும் எங்களின் ஒற்றுமை குலைவிற்கு அவரையே காரணமாக சுட்டுவதும் இதில் அடங்கும். இந்த விபரங்கள் என்னுடையதும், என் போன்றவர்களதும் தெளிவிற்காகவே அன்றி, ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரித்து இன்னொருவரை மூர்க்கமாக எதிர்ப்பதற்காக அல்ல. உங்களின் நீண்ட பதிலுக்கு மிக்க நன்றி, சாத்தான். ** களத்தில் நடந்த தேர்தல் போட்டியில், சிறிதரன் மற்றும் சுமந்திரன் இருவரும் வெல்வார்கள் என்றே தெரிவு செய்திருந்தேன். அப்படித்தான் விரும்பி இருந்தேன். நாட்டில் தேசிய மக்கள் சக்தியும், தமிழர் பிரதேசங்களில் தமிழரசுக்கட்சியுமே எனபதும் இன்னொரு தெரிவு..............
  9. நான் இதை யோசித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன், சாத்தான். இங்கு நான் இருக்கும் இடத்தில் நாங்கள் ஒரு ஐம்பது பேர் வரையில் மிகவும் நெருக்கமாக இருக்கின்றோம். இன்னும் ஏராளமான நம்மவர்கள் இருக்கின்றனர், ஆனால் ஐம்பது பேர்கள் ஒரு நெருங்கிய நட்பில் இருக்கின்றோம். அதில் நால்வர் சுமந்திரனை தீவிரமாக எதிர்ப்பவர்கள் என்று சொல்லலாம், இன்னுமொரு நால்வர் அவரை ஆதரிக்கின்றனர். மிகுதியானவர்கள், நான் உட்பட, சுமந்திரனுக்கும் மற்றவர்களுக்கும் அப்படி என்ன தான் வித்தியாசம் இருக்கின்றது என்று நம்பகமான தகவல்களை, செயல்களை தேடிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே ஒட்டுமொத்தமாக எல்லோரும் இவரை விமர்சிக்கின்றார்கள் என்றில்லை. டக்ளஸ் போன்றோரைத் தான் ஒட்டுமொத்தமாக எல்லோரும் விமர்சிக்கின்றார்கள். சுமந்திரனிற்கு தலைக்கனம், எடுத்தெறிந்து நடப்பவர், தான்தோன்றித்தனமானவர் என்று சொன்னால், அவை ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படக் கூடியவையே என்றே அவரின் பொதுவெளி நடவடிக்கைகளை வைத்துச் சொல்லலாம். ஆனால் அவர் மீது சொல்லப்படும் வேறு தீவிரமான குற்றச்சாட்டுகளை என்னாலும், என் போன்றோர்களாலும் ஏற்றுக்கொள்வது, சான்றுகள் இல்லாமல் அல்லது ஊடக தர்மம் அறவே அற்ற ஊடகங்களின் சாட்சியங்களுடன், சிரமமே. சுமந்திரனில் இருக்கும் அதே அளவு சந்தேகம், ஒவ்வாமையே என் போன்றோருக்கு சிறீதரனிலும் இருக்கின்றது. அதனாலேயே இதில் ஒருவரை அடித்து, மற்றவரை அணைக்கும் போக்கு ஏன் என்று கேட்கத் தோன்றுகின்றது.
  10. 🤣............. அடடா, இப்ப இப்படியொரு பிரச்சனை வரப் போகுதே........... அசாத்தை அழிக்கின்றார்களோ, இல்லையோ, என்னை கொளுத்தி விடுவார்களே............. நீங்கள் இல்லாவிட்டால் நான் களத்திலேயே இல்லை, அண்ணா.............❤️. அதே போலவே தான் பெயர் வைத்த நிலாமதி அக்காவும், தமிழ்ப் பெயருடன் மட்டும் தான் உள்ளே வர வேண்டும் என்று அவரே இந்தப் பெயரை பொருத்தமாக வைத்தார்............🙏.
  11. 👍.................. நான் இங்கு இணைந்து இது பத்தாவது மாதம். பல வருடங்களாக முன் பக்கத்திற்கு வந்து, அங்கிருந்து ஏதாவது வாசித்து விட்டுப் போய்க் கொண்டிருந்தேன். இந்த விடயங்களை, அரசியலை கவனிக்கவில்லை. உங்களின் எழுத்துகளை, கருத்துகளை முன்னரும் வாசிப்பேன். சாத்திரியாரின் தொடர் வாசித்திருக்கின்றேன். நெடுக்காலபோவான், வல்வை சகாறா, தனிக்காட்டு ராஜா போன்ற சில பெயர்கள் அந்தப் பெயர்களின் காரணமாகவும் மனதில் தங்கியது................... ஆனால், இப்படியான 'அரசியல் மயப்படுத்தலை' கவனிக்கத் தவறிவிட்டேன்............. யாழ் களத்திற்கு இப்படியான ஒரு பெறுமதியும் இருப்பது மிகவும் சந்தோசம்...........❤️. யாழ் களத்தின் கட்டமைப்பும், இங்கு வந்து போகும் பல கள நட்புகளின் திறமைகளும், பன்முக ஆளுமைகளும் வியக்கத்தக்கவை என்று முன்னரும் சொல்லியிருக்கின்றேன்..................👍.
  12. 🫢............. இங்கு சம்பளத்திற்கும் எழுதுகின்றார்களா................... ஏற்கனவே ஒரே ஆள் பல அடையாளங்களுடன் இங்கே வந்து போகின்றார்கள் என்ற தகவலே சாடையாக தலையைச் சுற்ற வைத்தது................🤣. இந்த சம்பள விசயம் காலுக்கு கீழே பூமியை வழுக்க வைக்கின்றது............. சாரு பாவம்....... ஆறு மாதங்கள் ஆராய்ச்சி செய்து நல்ல நாவல்களாக எழுதினாலும், 50 பிரதிகள் கூட விற்பனை ஆகவில்லை, ஆயிரம் ரூபாய் கூட வருகுதில்லை என்று மொத்த தமிழ் சமூகத்திற்கும் சாபம் விட்டுக் கொண்டிருக்கின்றார்..... அவர் இங்கே வந்து சேரலாம் போல...........
  13. 🤣.......... ஊர்த் திருவிழாவில் ஒன்றிரண்டு எலி வாணங்களை கூட்டத்துக்குள்ளும் விட்டுவிடுவார்கள்...... அது போல இருக்கின்றது உங்களின் கேள்வி...............😜. ஒரு தடவை ஒருவரின் சீலை பற்றி எரிந்தும் விட்டது..........
  14. @Kavi arunasalam கவிஞரே, எனக்கு இது இப்பொழுது தான் தெரியும்...............❤️. தரம் மிகவும் அதிகமாக இருக்கின்றதே என்று பலதடவைகள் நினைத்திருக்கின்றேன்.........👍. மிக்க நன்றி உங்களின் ஆக்கங்களை பகிர்வதற்கும், எங்களின் ஆக்கங்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கும்..............❤️.
  15. அர்ச்சுனாவை தேர்தலிற்கு முன்னரே பணியிலிருந்து இடைநிறுத்தி இருந்தார்கள். ஆதலால் அர்ச்சுனாவின் வக்கீல் வாதாடி வென்றுவிடுவார். அர்ச்சுனாவின் வக்கீலுக்கு சுக்கிரதிசை போல.............
  16. சிங்கள மக்கள் மொத்தமாக உங்களைத் தூக்கி வெளியே வைத்துவிட்டார்கள்............... அதை நீங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை..............
  17. உண்மையே.............. சமூகமாவது, நலமாவது, ஒருவர் என்ன விரோதச் செயல்கள் செய்தாலும் கண்டுகொள்ளமாட்டோம், ஆனால் இன்னொருவரை விடாமல் அடிப்போம் ........... என்ற அணுகுமுறை வியக்கவைக்கின்றது..........🫢.
  18. 👍............... Geosynthetics க்கு மாற்றீடாக ஒரு அவசரகாலத்தில், தற்காலிகமாக இந்த முறையைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள் போல................... @நீர்வேலியான் இந்த துறையில் மிகவும் அனுபவம் உள்ளவர்.
  19. நீங்கள் சொல்வது சரியே..... ஆனாலும், சிலர் தலைக்கு ஒரு விக் வைத்திருப்பார்கள், உதாரணம்: ஸ்டாலின். அந்த விக்கால் அவருக்கு என்ன பயன், அதன் தேவை தான் என்ன..... அது போலவே பட்டங்களும் சிலருக்கு தேவைப்படுகின்றன போல...
  20. அவர் அப்படி நடக்கவில்லை என்று முன்னரும் சொல்லியிருக்கின்றார். குற்றம் சொல்பவர்களும் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். அவருடன் பாடசாலையில், கல்லூரிகளில் படித்தவர்கள் என்று பலர் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்............. நாமலிடம் பரீட்சைகளில் சித்தி எய்தும் திறமை அவ்வளவாகக் கிடையாது என்பது ஒரு அபிப்பிராயமாகவே இருந்து வருகின்றது. அவருடைய சாதாரணதர, உயர்தர மற்றும் வேறும் சில பரீட்சை முடிவுகள் பொதுவெளியில் கிடைக்கக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.............................
  21. 25 கோடி அமெரிக்க டாலர்கள் என்பது சிறிய தொகை........... 2000 கோடி இந்திய ரூபாய்கள். உதாரணமாக, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனை வரி மற்றும் கலால் வரியாக மட்டும் கடந்த ஒரு வருடத்தில் பெற்ற தொகை: 45855 கோடிகள். புத்தகத்திலேயே இவ்வளவு இருக்கின்றது என்றால், தமிழ்நாட்டிலேயே அரசியல்வாதிகளின் பெட்டகங்களுக்கு எவ்வளவு போகும்.............. அசாத்திற்கு அவரது பங்காக கடைசி வருடத்தில் கூட சில பில்லியன் டாலர்கள் கிடைத்ததாக, அந்த மருந்துப் பொருள் விற்பனை மூலம், தகவல் வெளியாகி இருந்தது. அசாத்தும் , குடும்பமும் அதை ரஷ்யாவிற்குள் கொண்டு போயிருக்கமாட்டார்கள். பெரும் தொகையை வேறு எங்கோ அனுப்பி இருக்கின்றார்கள்.................. அவர்களின் உயிர்களுக்கு அதுவேதான் உத்தரவாதம் ஆகக்கூட இருக்கலாம்.................
  22. நீங்கள் இப்படியான ஒரு ராசாவாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் என்றைய விருப்பமும்............ ஆனால் போலிப் பெருமைக்காக உங்களை அவர்களில் ஒருவராக காட்டிக்கொள்ள நீங்கள் எவ்வளவு பிரயத்தனங்கள் செய்கின்றீர்கள்...................😌. பண்ணைப்புரமும், அந்த தாயும் எந்த கோவிலுக்கும் ஈடானதே என்ற ஒரு இறுமாப்புடன் நீங்கள் வாழ்ந்திருக்கவேண்டும்........................
  23. இந்தக் காவோலைக்கு பின்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதுங்கி இருக்கின்றார்கள் என்கிறீர்கள்.......... அவர்கள் ஊழலால் உழைக்கின்றார்கள், அதில் திளைக்கின்றார்கள் என்கிறீர்கள்................ அர்ச்சுனா சார், நோட் த பாயிண்ட்.......... நீங்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர், உங்களைத் தான் கந்தையா அண்ணா நேரடியாகவே குற்றம் சாட்டுகின்றார்................😜.
  24. 👍................ தேசிய மக்கள் சக்தியிலேயே ஏதோ சில காரணங்களால் இன்றிருக்கும் கல்வி முறையில் சோபிக்க முடியாத, ஆனால் மிகவும் தெளிவான சிந்தனையும், தூரநோக்கும் உள்ள சிலர் இருக்கக்கூடும். இவர்களின் 'பட்டம் முக்கியம்' என்ற நிலைப்பாட்டால், அவர்களால் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய பயன்கள் இல்லாமல் போக்கப்படுகின்றன. இது சரியென்றே நானும் நினைக்கின்றேன்.
  25. 🤣.................. இதுக்கு நான் ஜெயக்கொடிக்கு ஆதரவாக ஆஜராகாமலேயே விட்டிருக்கலாம்..........😜. இலங்கையில் படித்தால் உடனேயே சபாநாயகர் ஆகலாம், மருத்துவர் ஆகலாம்............. ஆனால் பொறியியலாளர் ஆக வேண்டும் என்றால், படித்த பின்னர் தெருவிலும் போய் சில வருடங்கள் இறங்கி நிற்கவேண்டும்................ நான் அங்கே நிற்கவில்லை.................😜. கதையோடு கதையாக ஒரு விசயம்.............. அநுரவும் உங்களுக்கு ஒரு அண்ணன் முறையே.......... அதுக்காக அவரை குத்தக் கூடாது என்றில்லை................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.