Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 'எல் போர்ட்' அணி என்று ரணில் சொன்னதை இப்பொழுது பலரும் சுட்டிக் காட்டப்போகின்றனர்.............. அரிசியை இறக்குகின்றோம் என்றார்கள், நான்கு மணித்தியாலங்களில் சுங்கச் சோதனையை முடித்து விடுவோம் என்றார்கள்................... கடைசியில் அரிசிக் கப்பல்கள் இப்ப எங்கே நிற்குது என்றே தெரியவில்லை...........🫣. நன்றாகப் பாடத்தை படித்து பாடமாக்கிக் கொண்டு வரும் மாணவர்கள், பரீட்சையில் 'out of syllabus ' கேள்விகள் வந்தால் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடுவார்கள், அது போலவே இது..............😜.
  2. பெரிது பெரிதாக பலவற்றை வட்டமாக இருந்து கதைத்து விட்டு, கடைசியாக கல்முனையைச் சுற்றியே அரசியல் நடவடிக்கைகள் நிற்கப் போகின்றது.....................🤣. ஐந்து வருடங்கள் அப்படியே ஓடிவிடும்..............
  3. நகர அல்லது பிரதேச சபைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நினைக்கின்றேன். சந்தைகளை ஏலத்தில் குத்தகையில் விடுவது போல இதையும் வருடாவருடம் ஏலத்தில் விடுவார்கள் போல............
  4. 7.0 என்றால் பெரிது தான்........... இந்த தடவையும் தப்பிவிட்டோம்............... இங்குள்ள வீடுகள் தலைக்கு மேல இடிந்து விழுந்தால் கூட தப்பி விடலாம்............... ஆனால் பரணில் வைக்கப்பட்டுள்ள பழைய சாமான்கள் உச்சந்தலையில் விழுந்தால், எதுவென்றாலும் அச்சமில்லை அச்சமில்லை என்று பாடியவரை இப்பவே மேலே போய் பார்க்க வேண்டி வந்துவிடும்........................🤣.
  5. உங்களின் களப்பெயருக்கு காரணம் தம்மமாக இருக்குமோ என்று நினைத்ததுண்டு................... அக்காவின் நினைவுகள் தான் அதற்கான காரணம் என்று இப்ப நாங்கள் தெரிந்துகொண்டோம்..................🤣. என்ன ஆகினாலும், முடிவு துறவு தான்...............
  6. நீங்கள் சிரித்தாலும், உங்களின் மனக்கவலை புரிகின்றது, விசுகு ஐயா. அதை நீங்கள் எழுதியும் இருக்கின்றீர்கள். உங்களைப் போலவே இங்கு ஒரு அண்ணன் இருக்கின்றார். 'உன்னட்ட நான் இப்ப விளக்கம் கேட்கல்ல, நீ இதை இப்ப செய்வியோ அல்லது மாட்டியோ..............' என்று சொல்லி இடைக்கிடை ஏதாவது செய்யச் சொல்லிக் கேட்பார்.........
  7. 🤣.............. அப்ப உடுவில் முன்னாள் எம்பி தர்மலிங்கம் ஒரு தமிழ்ப் பெயரைத் தான் தன் மகனுக்கு வைத்திருக்கின்றார் என்கிறீர்கள்........................... சித்தார்த்தரின் மனைவியின் பெயரையும், என்னுடைய களப் பெயரையும் உற்றுப் பார்த்தீர்கள் என்றால், ஒரு உண்மை துலங்கும். இங்கே குளிர் குறைவான இடத்தில் ஒரு பெரிய மரமாக தேடிக் கொண்டிருக்கின்றேன்.............
  8. அப்படியே பிழையாக இருந்தாலும், இனி திருத்தி என்ன, திருத்தா விட்டால் என்ன............ இப்படியே போய்ச் சேர வேண்டியது தான்.................🤣. ஒரு நேபாளத்து நண்பன் புத்தர் உண்மையில் நேபாளத்தில் தான் பிறந்தார் என்று சொல்லியிருக்கின்றான். கொரிய நாட்டவர் ஒருவர் தங்களின் புத்தரே வேற ஆள் என்று சொல்லியிருக்கின்றார். வியட்நாம், சைனா இப்படி இன்னும் நிறையப் பேரை விசாரிக்கப் போகின்றேன்.
  9. ஏன் இன்னொருவர் இந்த வெயிலிலும் கோட் சூட் போட்டுக்கொண்டு திரிகின்றார் என்று கேட்டோமே........ அவருக்கு இப்படி நடக்கும் என்று அப்பவே தெரிந்திருக்கின்றது...............🤣. ரணிலின் மூளை தன்னந்தனியாகவே இந்த மாதிரி ஆட்களை கவிழ்க்கும் வழிகளை யோசிக்கக் கூடிய ஆற்றல் உள்ளது தான், ஆனால் வேறு எவரும் ஆலோசனைகள் வழங்கியும் இருப்பார்களோ..................😜.
  10. என்னுடைய மட்டத்தில் தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதிகம் இல்லை................ 'குடைக்கம்பி முறிந்தது.............' என்று ஒரு பாட்டில் வரும் அல்லவோ, அதைப் போன்ற ஒரு மொழிப் பிரவாகம் இருக்கும் என்று நினைக்கின்றேன். ஆனால் சிங்களத்தில் ஆள் அசத்துவார்........... நீங்கள் சொல்லியிருப்பது போலவே தொழிலில் நன்றாகவே கைதேர்ந்தவர்.............. ரஜனியின் தமிழ் கூட நன்றாக இருக்கின்றது என்று தானே சொல்லுகின்றார்கள்..............
  11. இதில் எது நடக்குதோ இல்லையோ, ஆனால் தொங்கிக் கொண்டிருக்கின்ற மனுஷனின் வேட்டியை யாழ் களத்தில் இழுத்து அவிழ்த்துவிடுவார்கள்.................
  12. இலஞ்சம் பெற்றார், போலி ஆவணங்களை சமர்ப்பித்தார் அல்லது உடந்தையாக இருந்தார் என்ற வகையில் அதிகூடிய தண்டனைகள் எங்கள் நாட்டுச் சட்டத்திலும் இருக்கும், ஆனால் இதுவரை அப்படி ஒரு தீர்ப்பும் வந்ததாக நான் அறியவில்லை. இங்கேயும் அந்த தீர்ப்புகள் வராது என்றே நான் நினைக்கின்றேன். ஆனால், இதில் எந்த தமிழ் பிரதிநிதிகளாவது ஈடுபட்டிருப்பது ஓரளவிற்கேனும் நிரூபிக்கப்பட்டால், இவர்களின் அரசியல் எதிர்காலம் அன்றுடன் முடிந்தது. தமிழ்நாட்டில் டாஸ்மாக்ஸ் கடைகளுக்கு மது வழங்கும் மிகப் பெரும் நிறுவனம் வைத்திருப்பது.................. டி ஆர் பாலு என்ற தகவலை பார்த்திருக்கின்றேன். திமுகவின் தூண்களில் அவர் ஒருவர். சமுதாயத்திற்கு விரோதி என்று நீங்கள் சொல்கிறீர்கள், நானும் அதையே சொல்கின்றேன், ஆனால் இதை ஒரு சட்டரீதியான வியாபாரம் என்று இலகுவாகக் கடந்து போகின்றவர்கள் தான் பெரும்பான்மையானவர்கள்..............😌.
  13. சட்டரீதியாக, முறையாக அனுமதி பெற்றிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் அல்ல, வளவன், அது ஒரு குற்றமே அல்ல. ஆனால் இது அறமா, ஒழுக்கமா, விழுமியா என்று எழுதப்பட்ட சட்டங்கள் அல்லாத வேறு அளவீடுகளை வைத்துப் பார்த்தால், இவை தகாத செயல்களே. சட்டத்தின் ஊடாகவோ அல்லது சட்டத்தை வளைத்தோ, ஆனால் இலஞ்சமோ அல்லது வேறு ஏதாவது பிரதிபலன்களோ கருதி, இந்த அனுமதிப் பத்திரங்களை தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி எவராவது பெற்றிருந்தாலோ அல்லது இன்னொருவருக்கு பெற்றுக் கொடுத்திருந்தாலோ அது தண்டனைக்குரிய குற்றமே. எங்களின் பிரதிநிதிகளின் கதையின் உள்ளே இன்னும் ஒரு அடுக்கும் இருக்கின்றது. வெளியில் ஒன்றும், உள்ளே வேறு ஒன்றுமாக அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்றே இது முடியும். நீங்கள் சொல்வது சரியே, 'கள்வர்கள்..................' என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் நடக்கப் போவதில்லை...........
  14. 🤣............. ஆனால் விக்கி ஐயா உரிமம் எடுத்துக் கொடுத்தது பிரபல வியாபாரி ஒருவரின் மகள் என்றும், அபலைப் பெண் அல்ல என்றும் ஒரு தகவல் யாழில் பகிரப்பட்டிருந்தது..................
  15. உங்களின் கேள்வியை இப்படியும் எழுதலாம்.....................🤣. பின்வருவனவற்றில் எது பிழையான கூற்று? 1. நாமல் தப்பி ஓட வெளிக்கிடுகின்றார் 2. நாமல் தன்னிடம் உள்ளவற்றை அரைகுறை விலைக்கு விற்க முயற்சிக்கின்றார் 3. நாமல் விற்பவற்றை வாங்கி சொத்து குவிக்கும் யாழ் மக்கள் இலாபம் அடையப் பார்க்கின்றனர் 4. மேற்கூறிய மூன்றும் தவறு என்று காசிநாத் சொல்லுகின்றார்
  16. 🤣................... இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்க வேண்டிய நாமலை கடைசியில் ஒரு நகைக்கடைக்காரராக, பயண முகவராக மாற்றியுள்ளனர் யாழ் மக்கள்...................🤣. இது குசும்பு தானே............... கீதநாத்தும் இல்லையென்று பொறுமையாக தெளிவுபடுத்தியிருக்கின்றார்......................
  17. காணோளி பற்றிய என் கருத்தை தான் அங்கே பதிந்திருந்தேன், நுணாவிலான். இதே போலவே தான் விக்கினேஸ்வரன் ஐயாவும் முதலாவது உரையை ஆற்றியிருந்தார் என்பதன் மூலம் இவை எல்லாம் கேட்பவர்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காகவே எழுதி வாசிக்கப்படும் உரைகள் என்று சொல்லியிருந்தேன். இவர்கள் போன்றவர்கள் எந்த காத்திரமான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள் என்று நான் நம்பவில்லை என்பதும் அதன் பொருள். அது தான் நாம் அறிந்த வரலாறும். இன்னும் இன்னும் அகலமாக தமிழ்நாட்டில் முகாம்களில் இருக்கும் அகதிகள், வெளிநாடுகளில் ஒற்றைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள், உலகம் முழுவதும் இடம் பெயர்ந்தவர்கள் என்று ஒரு பரந்த பார்வை இருப்பது போல கூட இந்த உரை தெரியலாம். ஆனால் பாரளுமன்றத்தில் ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளிலேயே அர்ச்சுனா தன்னை மட்டுமே சுற்றி வரும் ஒருவர் என்பது தான் மீண்டும் மீண்டும் தெரிகின்றது. நித்தியின் அல்லது ஜக்கியின் ஒரு பேச்சை கேட்டீர்கள் என்றால், அவையும் அசத்தலாகவே இருக்கும். எல்லாவற்றையும் தொகுத்து, அந்த மனிதர்களையும் சேர்த்துப் பார்த்தால், இவை எல்லாம் வெறும் ஏமாற்றுகளாகவே தெரியும், முடியும். 'ஒருவரின் கருத்து அவரைத் தாண்டிப் போவதில்லை.................' என்று ஒரு வரி இருக்கின்றது. ஒரு மனிதனின் நடவடிக்கைகளை தாண்டி, அவர் சொல்லும் கருத்துகளுக்கு மதிப்பேதும் இல்லை என்று இதைப் பொருள் கொள்ளலாம்.
  18. ரஹ்மான் - சைரா பானு பற்றி தவறான தகவல்கள் யூடியூப்புகளில் வெளியாகியது. ரஹ்மான் ஒரே ஒரு அறிவிப்பு மட்டுமே அவர் வக்கீலினூடாக வெளியிட்டார். யூடியூப் வீடியோக்களை உடனடியாக நீக்க தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று. அடுத்த 24 மணி நேரத்தில் 700 வீடியோக்கள் நீக்கப்பட்டன. ரேணுகா பெரேராவைக் கைது செய்ததாலும் இப்படியான ஒரு பயனும் கிட்டலாம். பொதுஜன பெரமுன இதுவரை பேசாத இனவாதமா இனிமேல் புதிதாகப் பேசி பிரபலமடையப் போகின்றது........... நாமலை விடவும், மகிந்தவையும் விடவா இவர்களின் கட்சியில் இருந்து வேறு எவராவது இனவாதம் பேசப் போகின்றார்கள்............ ஒரு சின்ன தயக்கம் என்றாலும் இப்பொழுது வருமல்லவா................ வாலிபாலில் வலைக்கு மேலே இரண்டு கைகள் தடுத்துக் கொண்டிருக்கும் போது பந்தை அடிப்பதற்கும், தடுப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் போது அடிப்பதற்கும் இடையேயான வித்தியாசம் போன்றது இது..........
  19. 🤣.............. எங்களின் களத்து பஞ்சாயத்து எல்லாவற்றையும் விட பெரிய பஞ்சாயத்து...............
  20. ஆரம்பம் இப்படித்தான் இருக்கும். ஆனால் தொடர்ந்து நாலு பக்கங்களாலும் வளைத்தால், சிலர் மாட்டுப்பட்டு உண்மையைச் சொல்லக்கூடும். பின்னர் அவர்களே 'நான் மட்டுமா....... ஏன் அவனும் தானே............' என்று கைகாட்டவும் கூடும். தேசிய மக்கள் சக்தி இப்பொழுது இவை போன்றவற்றில் தான் மும்முரமாக இருக்கின்றது. ஒரு சில மாதங்களில் இவற்றை ஒரு பக்கம் போட்டு விட்டு, மற்ற முக்கிய திட்டங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
  21. 👍................ 2024ம் ஆண்டில் அனுமதி கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரையும் விசாரித்தும் பார்க்கலாம் தானே............ ஒவ்வொரு மாவட்ட அளவிலும் விசாரணையை நடத்தலாம். உதாரணமாக, கிளிநொச்சியில் 16 விசாரணைகள்...........
  22. இணையத்தளம் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதை இப்படியும் சொல்லலாம் போல...............🤣. இலங்கையில் மொத்தமாக எத்தனை பேர்கள் வரி கட்டுகின்றார்கள், ஒரே நேரத்தில் எத்தனை பேர்கள் தளத்தின் உள்ளே நுழைகின்றார்கள்............. என்ன டிசைனோ................😜.
  23. 🤣.............. உப்பு இல்லாவிட்டால் விரைவாக கெட்டுப் போய்விடும் என்ற அர்த்தத்திலும் சொல்லியிருப்பார்கள் போல, விசுகு ஐயா. உப்புக் கருவாடு, ஊறுகாய் போன்றன..........
  24. தமிழ்நாட்டிலும் இப்பொழுது பெய்த கனமழையில் தூத்துக்குடி பக்கம் இருக்கும் உப்பளங்கள் கடலாக மாறிப் போனதாக செய்திகளில் காட்டிக் கொண்டிருந்தார்கள். இலங்கையிலும் உப்பளங்கள் கடலாகி விட்டன போல. இரண்டு நாடுகளிலும் உப்பு திறந்தவெளிகளிலேயே சேமித்து வைக்கப்படுகின்றது. மலை உப்பு ஆரோக்கியம், கலர் உப்பு ஆரோக்கியம் என்று விதம்விதமாக வேறு சில வகை உப்புகளும் கடைகளில் விற்கப்படுகின்றது. விலையும் அதிகம். அவர்களின் காட்டிலும் இப்பொழுது மழை.............
  25. சிபாரிசு செய்த அரசியல்வாதிகளின் பெயர்கள் விசாரணையின் பின்னர் வெளியிடப்படும் என்று அரசு இன்று அறிவித்திருக்கின்றது: https://www.dailymirror.lk/breaking-news/Government-assures-to-release-names-of-politicians-who-recommended-issuing-of-liquor-licenses/108-297490

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.