Everything posted by ரசோதரன்
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
🤣............... பெருந்தோட்டத்துறைக்கும் ஒரு தமிழர் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்றார் - சுந்தரலிங்கம் பிரதீப். அங்கே நிச்சயம் ஒருவர் வேண்டும் தானே.............. திருகோணமலையில் அருண் தான் மிக அதிக வாக்குகள் பெற்றிருந்தார் - 38, 368. Trincomalee District NPP Arun Hemachandra – 38,368 Roshan Akmeemana – 25,814 SJB Imran Maharoof – 22,779 ITAK Shanmugam Kugathasan – 18,470
-
கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!
கமல் என்னும் நடிகர் மீது எனக்கு நல்லதொரு அபிப்பிராயம் இருக்கின்றது, வளவன். பார்வையாளர்களை நம்பி பல நல்ல படங்களில் நடித்திருக்கின்றார். நீங்கள் சொல்லியிருப்பது போலவே சில கூட்டணிகளில் இன்னும் நல்லாவே செய்திருக்கின்றார். ஆனாலும் பல படங்கள் தலையை சுத்தியும்விடும். விஸ்வரூபம் - 2, இந்தியன் - 2 , மன்மதன் அம்பு, உத்தம வில்லன்,................. இப்படி பல. சில படங்கள் மிகச் சிக்கலானவை - குணா, ஹே ராம்,............. போன்றவை. என்ன ஆனாலும் இவரின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைத்து இவரின் படங்களுக்கு போவேன். சில படங்களுக்கு ஒரு படம் நல்ல தரமாக இவரிடம் இருந்து வந்துவிடும் என்ற அந்த ஒரே நம்பிக்கையில்............... *********************************** நாங்கள் இருவரும் 'ஹே ராம்' பார்த்துக் கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட இப்படி நடந்தது: 'ஏங்க, இது ஹிந்திப் படமா.............' 'இல்லை, பெங்காலி................' 'என்ன............... பெங்காலிப் படமா.............' 'இல்லையனை, அவர்கள் பெங்காலியில் கதைக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன்...........' 'அப்ப தமிழில் கதைக்க மாட்டார்களா...........' 'வங்காளத்தில் பெங்காலியில் தான் கதைப்பார்கள்..............' நான் என்னுடைய வீட்டுக்காரியின் முகத்தை படம் முடியும் வரை பார்க்கவேயில்லை. படம் முடிய, எனக்கு அவர் பதிலாக சொன்ன வசனம் - இனி கமல் படம் என்றால் நான் வரவேமாட்டேன்.......🤣.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
👍.............. குமார் குணரட்ணம் இன்று ஜேவிபியிலிருந்து விலகி Frontline Socialistic Party என்று ஒன்றை நடத்துகின்றார் என்று நினைக்கின்றேன். சமீபத்தில் ஒரு பல்கலையில் ஜேவிபியினருக்கும், குமாரின் ஆட்களுக்கும் இடையில் தகராறு ஆகியது என்று செய்திகளில் இருந்தது. ஆமாம், அவர்களின் அடையாளத்தை ஏற்றுக் கொண்டாலே அங்கே அவர்களில் ஒருவராக முடியும். அந்த அடையாளத்தை அவர்கள் இலங்கையர்கள் என்னும் அடையாளம் என்கின்றனர், ஆனால் அது உண்மையில் அப்படியான ஒன்றில்லை, மாறாக அது ஒரு சிங்கள பௌத்த அடையாளமே என்பது வெளிப்படையே. தமிழ்நாட்டில் தமிழிசையின் பேச்சுகளை, பேட்டிகளை கேட்டிருப்பீர்கள் தானே............... சங்கடம், அருவருப்பு இப்படி பலதும் கலந்த ஒரு உணர்வு வரும். இலங்கையிலும் அப்படியான சிலர் முன்னரும் இருந்தவர்கள், புதுதாகவும் சிலர் உருவாகின்றனர் போல.................
-
கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!
🤣............... 'பாபா'வா நீங்கள் கடைசியாக தியேட்டரில் போய் பார்த்தது...............🤨. இப்படியே தப்பி தப்பி இருந்தால் இது என்ன நியாயம்.................. நாங்கள் அதற்குப் பிறகும் ஒரு நூறு இருநூறு துன்பக்கேணிகளில் விழுந்து விழுந்து நீந்திக் கொண்டே இருக்கின்றோம்........... இந்தியன் 2 இல் தாத்தா எங்களைக் கதற விட்டார் என்றால், கங்குவாவில் அவர்களே கதறுகின்றார்கள்.......... ஆனால் நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம்........... அடுத்தது என்ன தல படமா............🤣.
-
கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!
கங்குவாவிற்கு காட்டும் எதிர்ப்பை ஒரு கவுன்சிலருக்கு காட்டுவதில்லையே என்று சொல்வது அவ்வளவு சரியான ஒரு உவமையாக, ஒப்பீடாகத் தெரியவில்லை. ஒரு நாயகனின் நாலு படங்கள் ஓடினாலே புரட்சி, செம்மல், தளபதி என்று வகைவகையாக பட்டங்களும் கொடுத்து, அடுத்த முதலமைச்சர் என்று கொண்டாடுவதும் இதே மக்களே. அவர்கள் ஒரு நல்ல கவுன்சிலருக்கு இந்தப் பட்டங்களும் கொடுப்பதில்லை, கவுன்சிலரை அடுத்த முதலமைச்சர் என்று சொல்வதும் இல்லை. கொடுக்கும் போது அளவுக்கதிகமாகவே கொடுக்கின்றனர், பின்னர் எடுக்கும் போதும் பறித்து எடுத்துக் கொள்கின்றனர். இந்த தொழிலில் இருக்கும் அபாயம் இது. தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கும் இதே அளவு அபாயம் இருக்கின்றது. நன்றாக விளையாடினால் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள், இல்லாவிட்டால் 'வீட்டுக்கு போ..................' என்று கல்லெறிவார்கள். ஒரு கடையில் அரிசி நன்றாக இல்லை என்றால், மக்கள் அங்கே அரிசி நன்றாக இல்லை, அங்கே போகாதே என்று தான் சொல்லுவார்கள். அது போலவே இந்த வியாபார நோக்கில் எடுக்கப்பட்டு சந்தைக்கு வரும் சினிமாக்களுக்கும் நடக்கின்றது.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நன்றிகள் வாதவூரான்....................👍. எங்களின் காலத்தில் பின்னால் அந்த விடுதி இருந்திருக்கவில்லை என்றே நினைக்கின்றேன். ஒரு சின்ன மண்மலை இருந்ததாக ஞாபகம். அந்த இடத்தில் கட்டப்பட்டதற்குத் தான் நிஷ்மியின் பெயர் வைத்துள்ளனர் போல................. எங்களின் காலத்தில் அக்பருடன் நியூ விங்க் மற்றும் சி-குவாட்டர்ஸ் என்பன இருந்தன.
-
கரண்ட் வந்தது
மிக்க நன்றி மோகன் அண்ணா...................🙏. ஒரு பொழுதுபோக்கிற்கு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றே யாழில் இணைந்தேன்............... கடைசியில் இப்போது இது இல்லாவிட்டால் மூச்சு விடுவதே கொஞ்சம் சிரமமாக இருக்கின்றதே..........🤣.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அமைச்சரவையில் இஸ்லாமிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்றோ, அல்லது இலங்கைத் தமிழ் பிரதிநித்துவம் வேண்டும் என்றோ ஜேவிபியினர் உளமார நினைக்கப் போவதில்லை. அவர்கள் அவர்களின் 'தோழர்களை' மட்டுமே அதிகாரம் உள்ளவர்களாக ஆக்குவார்கள். இது எந்த இடதுசாரிப் போக்கு உள்ள அமைப்புகளுக்கும் பொருந்தும். மற்றவர்கள் அவர்களுக்கு ஆதரவாக, அனுதாபிகளாக மட்டுமே இருக்கலாம். ஆனாலும் ஒரு ஜனநாயக ஆட்சியில் பலரின் பிரதிநிதித்துவமும் வேண்டும் என்ற ஒரு அரசியல் சரிநிலைக்காக சில பிரதி அமைச்சர் பொறுப்புகள் இந்த இரண்டு சமூகங்களுக்கும் வழங்கப்படும் என்றே நான் நினைக்கின்றேன். 'அக்பர் ஹால்' என்னும் ஒரு இடம் பற்றி இங்கு சிலருக்கு தெரிந்திருக்கும். கோஷானும் சமீபத்தில் வேறொரு திரியில் இதைக் குறிப்பிட்டிருந்தார். இது பேராதனை பொறியியல் பீட மாணவர்கள் தங்கும், வசிக்கும் இடம். இந்த ஹாலையும் இதைச் சுற்றி இப்போது புதிதாக கட்டப்பட்டவற்றையும் ஜேவிபியினர் 'நிஸ்மி ஹால்' என்றே அழைக்கின்றனர். நிஸ்மி என்பவர் 80ம் ஆண்டுகளில் அவர்களின் மாணவர் தலைவராக இருந்து அன்றைய அரசால் காணாமல் ஆக்கப்பட்டவர். அன்று அவர் அநுரவிற்கு பல படிகள் மேலே. நிஸ்மி ஒரு சிங்களவர் இல்லை, அவர் ஒரு இஸ்லாமியர். தமிழ், சிங்களம் இரண்டு மொழிகளிலும் மிகச் சிறந்த பேச்சுத் திறமை கொண்டவர் என்கின்றனர். ஒரு மிகப் பெரிய ஆளுமை என்றும் சொன்னார்கள். அவர்களில் ஒருவராக இருந்தால், எவரையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன்.
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
வணக்கம் ராஜன் அம்மான்! உங்களின் முதலாவது பதிவே கலக்குதே.............🤣. சீமான் ஒருமையிலும், ஏக வசனங்களிலும் தொண்டர்களை திட்டினால், எல்லோரும் அதைப் பொறுத்துக் கொண்டு அவருடனேயே இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது தானே..............
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அமைச்சர்கள் ஆகியிருக்கும் தெரிந்த அல்லது கேள்விப்பட்ட சிலர் அவர்களின் நீண்டகால உறுப்பினர்களே. ஒரு தொழிற்சங்கம் போன்று முடிவுகள் எடுத்திருக்கின்றார்கள் என்றே தெரிகின்றது. என்னுடைய காலத்தில் இவர்களை ஜெப்பாஸ் என்று அழைத்ததில்லை. பெரும் இழப்புகளைத் தாண்டி இவர்கள் மீண்டும் துளிர் விட்டுக் கொண்டிருந்த காலம் அது. பின்னர் அப்படி அழைத்திருக்கக்கூடும். இல்லை, இவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதில்லை. ஆனால் கண்களில் ஒரு அனல் பறந்து கொண்டே இருக்கும். பெரும் சந்தேக குணமும் உள்ளவர்கள். அந்த நாட்களில் பல்கலையில் இவர்களைப் போன்ற இனவாதிகளை பார்ப்பது மிகவும் அரிது. அது ஒரு ஆச்சரியமே.......... இது என்ன ஒரு புது வகையான மார்க்ஸிஸம் என்று தோன்றியது...............
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
எப்படியும் உங்களின் தம்பியை பிரதமர் ஆக்கியே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள்...........🤣. அங்கே போனால் என்ன, போகாவிட்டால் என்ன அண்ணை, இப்ப ஒன்றாக முழுநேரம் யாழ் களத்தில் நிற்பதில் தானே இரு வாழ்க்கைகளும் வந்து நிற்கின்றன.............😀.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
🤣............. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள்............ அப்படியே எழுதிய விரல்களும் என்பதையும் அதனுடன் சேர்த்து விடவேண்டும்............. கிறுக்குகின்ற புத்தி............🤣.
-
அநுர அரசில் சம்பளமின்றி பணியாற்றவுள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தமிழ்வின்னில் வரும் செய்திகளை நம்பாதீர்கள்............... இவர்கள் ஒரு ஊடகப் பொய்யர்கள்........... எங்களின் அரசியல் பொய்யர்கள் போலவே............... வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், உடுப்பிட்டி வீதியில் 'தமிழ்க் கடை' என்று ஒரு கடை இருக்கின்றது. அங்கு பனம் பொருட்கள் மற்றும் இதே போன்ற பொருட்களை மட்டுமே விற்கின்றனர். அங்கு பனங்கட்டி எப்போதும் கிடைக்கும். சடையாண்டி வைரவர் கோயிலின் முன்னே இந்தக் கடை உள்ளது. முன்னொரு காலத்தில் இந்தக் கடையின் பெயர் சித்தி விநாயகம் ஸ்டோர்ஸ் என்று ஞாபகம்..................
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
🤣............. 'வெளிநாட்டுக் காசு அல்லது வீட்டிலிருந்து காசு வந்து கொண்டிருக்கும் சில தமிழ் மாணவர்கள்............' என்று அங்கே ஒரு தேவையுடனேயே எழுதியிருக்கின்றேன், அல்வாயன்............. இந்த இரண்டு வழிகளிலும் காசு வரத்து இல்லாமல், அரசாங்கம் கொடுக்கும் அந்தச் சிறிய மகாபொல கொடுப்பனவை வைத்தே நான்கு வருடங்களும் படித்து முடித்த தமிழ் மாணவர்களும் பலர் இருந்தனர். அவர்களுக்கு இந்த 'நாலு ரூபாய் சாப்பாட்டுச் சட்டம்' இருந்தாலும் ஒன்று தான், இல்லாவிட்டாலும் ஒன்று தான்......... எப்போதும் நாலு ரூபாய் வரிசை மட்டுமே.............. இதில் நான் எந்த வகை என்று சொன்னால், அது ஒரு 'பில்டப்' ஆகப் போய்விடும்............🤣. 🤣............. அண்ணா, உங்கள் பெயரில் இருக்கும் 57 நான் நினைக்கும் 57 தான் என்றால், ஜெயக்கொடிக்கு உங்களை விட 10 வயதுகள் குறைவு............... ஆமாம், அவர் கொஞ்சம் வயதானவர் தான்.............😜.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
👍................. மீண்டும் மீண்டும் கட்டுக்கதைகளையும், வதந்திகளையும் பரப்பும் ஊடகங்களை முற்றாக தவிர்க்க வேண்டும், பையன் சார். உங்களின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. அத்துடன் தமிழ் கொலைகளைச் செய்யும் ஊடகங்களும் தவிர்க்கப்படவேண்டும். முக்கியமாக ஆதவன் போன்ற செய்தித் தளங்கள். தமிழ், தமிழ் என்று நாங்கள் சொல்லிக் கொண்டே, இவைகளை எப்படி ஆதரிக்க முடியும்............. ஒரு தனிநபர் தமிழில் தவறுகள் விடுவதை புரிந்து கொள்ளலாம். தமிழ்மொழி மிகக் கடினமான ஒரு மொழி.... ஆனால் ஒரு ஊடகம் என்று குழுவாக இருப்பவர்கள், இயங்குபவர்கள் இதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது.............. மொழி மீது ஒரு பற்றும், மரியாதையும் அவர்களுக்கு இல்லை என்றே இதை எடுக்கவேண்டும்.
-
உரிமைக் குரல் - சுப.சோமசுந்தரம்
மணிப்பூரில் மீண்டும் கலவரம் என்ற செய்தியை நேற்று இரவு பார்த்தேன்...........😌. நல்லவர்கள் என்ற பெயருடன் பொறுப்புமிக்க இடங்களில் இருப்பவர்களால் தான் அதிக துன்பம் ஏற்படுகின்றதோ என்று சில வேளைகளில் தோன்றுகின்றது.......... கொடுமைகளைச் செய்பவர்கள் செய்பவற்றைச் செய்து விட்டு இந்த நல்லவர்கள் எனப்படுவர்களின் பின்னால் ஒளிந்து கொள்கின்றனர்............
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உண்மை தான், கோஷான்............. பாக்கு நீரிணைக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் இப்படி எத்தனை எத்தனை பில்டப்புகளை எங்கள் வாழ்நாளில் நாங்கள் பார்த்துவிட்டோம்................. அவர்களாகவே கொடுக்கும் பில்டப்புகள் போதாதென்று, இந்த ஊடகங்கள் இன்னும் சில படிகள் மேலால் போய், அவர்களை தேரில் ஏற்றி இழுத்துக் கொண்டு திரிகின்றன. அநுர அவரது மாளிகைக்கு தினமும் வரும் மரக்கறிகளை வேண்டாம் என்று சொல்லி விட்டார் என்று ஒரு பில்டப்பு..................🫣. அப்துல் கலாம் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் உண்மையிலேயே இப்படியான ஒன்றைச் செய்திருந்தார். இப்போது அப்துல் கலாம் ஆகிவிட்ட அநுர, அடுத்ததாக ஆபிரகாம் லிங்கன் ஆவார் எங்கள் ஊடகங்களில்..............
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
சில விடயங்களில் இவர்கள் மாறவே மாட்டார்கள். இந்தியாவில் பிஜேபி அரசு ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை கொண்டு இழுப்பது போல........... வலு அமைச்சர் ஆகியிருக்கும் குமார ஜெயக்கொடி எங்களுக்கு ஒரு வருடம் முந்தியவர். ஆனாலும் நாங்களும், அவர்களும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். அந்த வருடம் இரண்டு வகுப்புகளை ஒன்றாக உள்ளே எடுத்திருந்தனர். அமைச்சரவையில் அநுர குமார, குமார ஜெயக்கொடி என்று 'நாலு ரூபாய் சாப்பாட்டுச் சட்டம்' கொண்டு வந்தவர்கள் பலர் இருக்கின்றர் என்று நினைக்கின்றேன்..............🤣
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
🤣................. 'உடனடித் தீர்ப்புகள்...............' வழங்கப்படும். அவர்கள் எல்லோருமே நடமாடும் நீதிமன்றங்கள் போல...........🤣. 'உங்களுக்கு பொருத்தமானது எதுவோ அதையே நீங்கள் பெற்றுக் கொள்கின்றீர்கள்..............' என்று சொல்வார்கள். இலங்கைக்கு இப்போது இது தான் பொருத்தமானது போல...... இங்கு அமெரிக்காவில் நாங்களும் தான் ட்ரம்பை அதிபராக்கியிருக்கின்றோம். ஆற்றிலோ குளத்திலோ போய் விழாமல், உயிருடன் தானே இன்னமும் உலாவிக் கொண்டிருக்கின்றோம்................😜.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
🤣.................. கடைசியாகக் கிடைத்த தகவல்களின் படி, சுமந்திரனை இன்னும் ஒரு மாதத்திற்கு இணையத்தில் தாறுமாறாக அடிக்கலாம் என்றும், அதுவரை மற்ற எந்த நடவடிக்கைகளைப் பற்றியும் பேசத் தேவையில்லை என்றும் முக்கியமானவர்கள் சிலர் கூடி முக்கியமான ஒரு முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. ஆதலால் இப்போதைக்கு அநுர எங்களிடமிருந்து தப்பிப் பிழைத்து இருக்கட்டும்.................😜.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
🤣................ எனக்கு இவர்களை, இவர்களின் கொள்கைகளை, இவர்களின் நடவடிக்கைகளை ஓரளவிற்கு தெரியும். முதலில் அந்த பாராளுமன்ற கண்டீனில் கைவப்பார்கள். எந்த விதமான விசேட சாப்பாடும் போட விடமாட்டார்கள். நான் முன்னர் ஒரு தடவை இங்கே எழுதியிருந்தேன், எங்களுக்கு பல்கலை விடுதியில் என்ன நடந்தது என்று. அப்பொழுது நாலு ரூபாய்கள் தான் மதியச் சாப்பாடு, ஆனால் அதை வாயில் வைப்பதே கஷ்டம். தமிழ் மாணவர்களில் சிலர், வெளிநாட்டுக் காசு அல்லது வீட்டிலிருந்து காசு வந்து கொண்டிருந்தவர்கள், கண்டீன் ஆட்களுடன் பேசி 10 ரூபாவிற்கு ஒரு ஸ்பெஷல் சாப்பாடு ஏற்பாடு செய்தனர். பின்னர் ஒருநாள், கண்டீன் ஆட்களுக்கு அடி விழுந்ததா அல்லது விழவில்லையா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் நாலு ரூபாய் சாப்பாடு மட்டுமே என்று எழுதாத சட்டம் ஒன்று வந்தது. நீங்கள் சொல்வது போலவே, கலிபோர்னியாவில் இருந்து போய் அதை சாப்பிட வேண்டுமா............
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
👍............ சம்பளத்தை வாங்குங்கோ.............. ஆனால் 16 சமையல்காரர்களும் கூடவே வேண்டும் என்று அடம்பிடிக்காதேங்கோ என்று தான் மக்கள் சொல்லியிருக்கின்றார்கள்...........🤣 ஜெயலலிதா தனக்கு மாதம் ஒரு ரூபா சம்பளம் போதும் என்று ஒரு தடவை சொல்லிச் செய்திருந்தார். பின்னர் அவரும் சசிகலாவும் நின்ற அந்த ஒரு படத்தில் போட்டிருந்த நகைகளே பல கிலோ கணக்காக இருந்தது.......... இப்படி எத்தனையோ பேர்கள் வந்து போய்விட்டனர். எவரும் தியாகிகளாக மாற வேண்டும் என்றில்லை.... சாதாரணமாக இருந்து விட்டுப் போனாலே போதும்..........
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தமிழ்வின்னையும், ஆதவனையும் நம்பி ஆற்றில் இறங்கலாமா..................🤣. என்னுடைய ஊர் ஒட்டுகளில் இருந்து வரும் உலகப் பொருளாதாரக் கொள்கை உரையாடல்கள் போன்றன அவை.................
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
அப்படியாயின் பிரதி அமைச்சர்களை நியமிப்பார்கள் போல, ஏராளன். அநுர, ஹரிணி மற்றும் சிலரால் அவர்களின் கீழ் இருக்கும் இவ்வளவு துறைகளையும் தனியே நிர்வகிப்பது மிகச் சிரமமான ஒரு விடயம்.
-
அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
சிலருக்கு மிக அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றது. பல இராஜாங்க அமைச்சர்களையும் நியமித்தால் அன்றி இது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று.