Everything posted by ரசோதரன்
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தமிழர்கள் திராவிடர்கள் என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தமிழ் தேசியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையில் சில சிக்கலான வேறுபாடுகளும் இருக்கின்றன. இன்றைய திராவிடம் என்பது மரபு என்றில்லாமல் ஒரு கருத்தியல் ஆகவே இருக்கின்றது. ஆரியத்திற்கு எதிரான ஒரு கருத்தியலே இன்றைய திராவிடம். இந்தக் கருத்தியலை மரபு வழியாக திராவிடர் என்று கருதப்படும் ஏனையோர், தமிழர்கள் தவிர, கவனத்தில் கொள்வதில்லை. தெலுங்கு மக்களோ, கன்னட மக்களோ அல்லது கேரள மக்களோ இந்த வகையில் சிந்திப்பது மிகவும் அரிது. ஆகவே இன்றைய திராவிடத்தின் எல்லை தமிழ்நாடு என்ற அளவிலேயே இருக்கின்றது. அது தமிழ்நாட்டில் வாழும் எல்லா தென்இந்திய மக்களையும் ஒரு அணியில் கொண்டு வரும் ஒரு கருத்தியல். தமிழ்த்தேசியம் மிகவும் இறுக்கமானது. எந்த தேசியமும் இறுக்கமானதே. தமிழ்நாட்டில் இருக்கும் எட்டரைக் கோடி மக்களில் எத்தனை கோடி மக்கள் 'உண்மையான தமிழர்கள்' என்று கணக்கிட்டு, மேற்கொண்டு செல்வது தமிழ்த்தேசியம்.
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
👍.............. நிச்சயம் சிறி அண்ணா........... இந்த வாரம் அனுப்பிவிடுகின்றேன்...............
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தமிழ்நாடு வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்காமல் தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டதன் பின்னணியே இது தான் என்றும் சொல்கின்றனர்............ புஸ்ஸிக்குத்தான் வெளிச்சம்..... ஆனாலும் அந்த சாத்திரியார் (கடலூர் சந்திரசேகரர்) தேசியம், திராவிடம் இரண்டுக்கும் அப்பாற்பட்டவர்.... கட்சியின் பெயரிலிருந்து 'க்' குற்று எழுத்தை முதலில் தூக்கியவரும் அவரே என்கின்றனர். கடைசியில் தமிழ் இலக்கணமாவது இவர்களிடமிருந்து தப்பியது.........
-
கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான்
👍............ கூட்டம் சேர்வது உண்மையே, விசில்கள் பறப்பதும் உண்மையே, ஆனால் இவர்களால் ஒரு எல்லையை தாண்ட முடியுமா என்பது தான் பெருத்த சந்தேகமாக உள்ளது. சீமானால் தாண்டவே முடியாது என்ற முடிவிற்கு நான் வந்து பலகாலம் ஆகிவிட்டது. அவருக்கு விசில் அடிப்பவர்கள் பலர் அவருக்கு வாக்குப் போடுவதில்லை. இனி ஒரேயடியாக தேய்வு காலம் தான் அவருக்கு. விஜய்யால் ஒரு மாற்றமும் வராது என்றால், அவரை ஏன் தான் எவரென்றாலும் தேர்ந்தெடுக்க வேண்டும்.......... அதிகாரத்தை மட்டும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதால் என்ன பயன்.... முத்துராமலிங்க தேவர் குருபூஜையின் போது விஜய் நடந்து கொண்டது ரஜனி செய்வது போலவே உள்ளது. மக்கள் இதை அறிந்தவர்களே, அவர்கள் திமுகவையோ, அல்லது அதிமுகவையோ விலகி, இவரிடம் போகாமல் இருப்பதற்கு இப்படியான விடயங்களே போதும். ட்ரம்ப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரி. இவருக்கு இங்கு காட்டப்படும் ஆதரவு ஒரு பெரிய அடிப்படைக் கேள்வியையே உண்டாக்கியிருக்கின்றது. மனித பண்பாட்டு வளர்ச்சி என்பது ஒரு நீர்க்குமிழியா.......... அதை மிக இலகுவாக ஒருவரால் ஒரு தேசமெங்கும் உடைத்து விடமுடியுமா.............
-
கூமுட்டை.. சாலை நடுவே நின்னா லாரி அடிச்சி செத்துப்போவ.. விஜயை மறைமுகமாக விமர்சித்த சீமான்
🙄........... நேற்று நியூஸ் 18 தொல்.திருமாவை ஒரு பேட்டி எடுத்திருந்தனர். மிகவும் கண்ணியமாக, நிதானமாக அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லியிருந்தார், உரையாடியிருந்தார். விஜய்யின் பல பாசாங்குகளை சரியான விதத்தில் எடுத்துச் சொல்லியிருந்தார். சீமான் வழமை போலவே கூடி இருப்போர் கைதட்ட வேண்டும் என்று பொரிந்து தள்ளியிருக்கின்றார். சீமானின் ரசிகர்கள் தவிர்த்து, பொதுவானவர்கள் இதைக் கேட்டு முகச்சுழிப்பு ஒன்றையே காட்டுவார்கள். இதையே தான் விஜய்யும் செய்தார். ஒரு சினிமா போல 'ப்ரோ, பாயாசாம் - பாசிசம், ............' என்று கைதட்டல்களுக்காக சாரம், பொருள் எதுவுமின்றி வெறுமனே ஒரு ஃபர்பாமன்ஸ் காட்டி விட்டு போய்விட்டார்............ இப்படியே போனால் இந்த இருவரும் - சீமான மற்றும் விஜய் - தேறப் போவதில்லை.
-
கனடாவில் நகைகடை கொள்ளை
'எல்லோர் கையிலும் துப்பாக்கிகள்............' என்னும் அமெரிக்காவின் உள்ளூர் திட்டத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்............ இங்கு வீடு புகுந்து களவு எடுப்பதெல்லாம் மிகக் குறைவு ஏனென்றால் வீட்டிற்கு களவெடுக்க வருகிறவரும் கிளிண்ட் ஈஸ்ட்வுட், வீட்டில் இருக்கிறவரும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தான்.........🤣. ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்....... அப்படியே களவு போனாலும், போலீஸ் வந்து 'பொருள் தானே போனது........... உயிர் இன்னமும் இருக்குது தானே........' என்பது போல இலேசாக எடுத்துக் கொள்வார்கள்........🤨.
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
🤣.............. மேலதிகமாக இன்னும் ஒரு 400 மில்லியன் ரூபாவும் கொடுக்கப் போகின்றார்களாம். சீனர்கள் கழுதை, குரங்கு என்று நாடு நாடாக போய் வாங்குகின்றார்கள். 430 மில்லியன் ரூபாய்களை கொடுத்து விட்டு இப்ப என்னத்தை விலைக்கு கேட்கப் போகின்றார்களோ.............
-
அவசர வெள்ள நிவாரணமாக சீனாவிடமிருந்து இலங்கைக்கு 30 மில்லியன் ரூபா உதவி
🤣............... யார் மறந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல, அண்ணை.........😀. அநுர பெயில் அண்ணை, நான் பாஸ்............... அந்த வித்தியாசத்தை வைத்துத் தான் அவர் ஜனாதிபதியானவர்..............🤣. (பிறகு அவர் வேறு இடம் போய் பாஸாகியும் விட்டார்.........)
-
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்
தோல்வி வலியாக இருப்பதற்கு சந்தர்ப்பம் மிகக்குறைவு, ஏராளன். புதிய பிரதமர் ஹரிணி சரியாக எண்ணி ரணில் மாஸ்டர் இதுவரை 17 தடவைகள் தோற்றிருக்கின்றார் என்று சொல்லியிருக்கின்றார். தோல்வி ஒன்றும் புதிதல்ல நம்ம மாஸ்டருக்கு. பதவி போனதும் கூட பரவாயில்லை............. 16 சமையல்காரர்களும் கூடப் போய் விட்டார்களே........ அது தான் தீராவலி.......😜.
-
பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்
🤣............ ரணில் மாஸ்டர் கணிதமும் படிப்பிப்பாரா............... சொல்லவேயில்லை........... அந்த நாட்களில் எங்கள் பாடசாலையில் ஒரு ஆசிரியர் இருந்தவர். அவர் எல்லாப் பாடங்களும் - தூய கணிதம், இரசாயனவியல், வர்த்தகம் - படிப்பிப்பார். ரணில் மாஸ்டரும் வரவர அப்படி ஆகிக் கொண்டிருக்கின்றார்...............
-
சீனாவுக்கு லட்சக்கணக்கில் கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்; காரணம் தெரியுமா?
சில காலத்திற்கு முன் சீனாவிற்கு இலங்கையிலிருந்து ஒரு வகை குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் ஒன்று வந்தது. சீனர்கள் அந்தக் குரங்குகளை கொல்லப் போகின்றார்கள் என்று எதிர்ப்புகளும் எழுதப்பட்டது........... ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மிகச் சிறந்தவற்றை சீனர்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள் போல................
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🙃................ சேத்துக்குள்ள மீனை சரியாக தேடிப் பிடிக்கிறது என்பது இதுதானோ.............🤣.
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
ஓ............... அவரா......... 'வேற வழி தெரியல்ல, ஆத்தா.......' என்ற நிலைமை தான் என் நிலை இப்ப........... அதுவும் சரி தான், அண்ணை.........
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
🤣........... கமல், ரஜனி, சிவாஜி, எம்ஜிஆர்........... இப்படி நிறைய இருக்குதே, வசீ. இதில் எம்ஜிஆரைத் தவிர மற்றதெல்லாம் தோற்றது அல்லது ஓடிய கூட்டம்............. உங்களுக்கு வேறு கற்பனை அதிகம்........... நீங்களே சொல்லிவிடுங்கள்.............
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣........... இந்தக் காட்சியில் பையன் சார் ஃபோன் போட்டது அண்ணனுக்கா அல்லது தளபதிக்கா.......
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
மூன்று நட்சத்திரங்கள்.......... மூன்றெழுத்தில் தான் தமிழர்களின் மூச்சே இருக்கின்றது என்கின்றார்கள்....... எல்லாருமே மூன்றெழுத்துகள்...........
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
அநுரவை வைச்சு செய்வீர்கள் என்று நினைத்தால், எல்லாரும் என்னை வைச்சு செய்யிறங்களே, இது நியாயமா................🤣. மார்க்கிஸிஸம், மரவள்ளிக் கிழங்கு தோட்டம் என்று போகாமல், அநுரவின் ஆட்சி நல்லாத்தானே ஆரம்பித்திருக்குது...........😜. ரணில் தான் 'நானும் ரௌடிதான் ..............' என்று விடாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றார். உனக்கு சட்டம் தெரியுமா, உனக்கு அரசியலமைப்பு தெரியுமா ............. இப்படியே இவர் கேட்டுக்கேட்டு ஒரு நாள் பக்கத்தில் நிற்கிற ஒரு ஆளை பாய்ந்து கடித்து விடப்போகின்றார்.............. இந்த நிலாம்டீன் தான் அநுரவைப் பார்த்தால் நடிகர் விஜய் மாதிரி இருக்குது, அதால தான் சனம் கூட்டமாக அள்ளுப்படுகின்றது என்று ஜனாதிபதி தேர்தலில் சொன்னவர்.......... இதைக் கேள்விப்பட்ட உண்மையான விஜய், அநுர வென்றவுடன், உடனே தனது கட்சியின் முதலாவது மாநாட்டை நடத்தினார் என்பது வரலாறு..............😜.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣.......... எங்கள் ஊரில் போசா என்று தான் சொல்லுவோம்......... அண்ணன் தான் தெர்மகோல் என்ற சொல்லையே எனக்கு அறிமுகப்படுத்தினார்.............. அண்ணனை மீண்டும் ஒரு தடவை பாருங்கள்.........
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣............ என்ன குமாரசாமி அண்ணை..........அங்கே நாலு பேப்பர், இங்கே நாலு பேப்பர் என்று ஆடு கடிச்ச மாதிரி மேலால வாசித்து வாசித்து, கசக்கி எறிந்த கடதாசி குப்பையாகக் கிடக்குது எங்களின் தலைகளுக்குள்.......... ஏதோ பொழுது போனால் சரி தான்..............
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
அண்ணை, கடும் ரகசியம் ஒன்று........... அவர் போய் வருகிற அந்தக் கார் அரசாங்கக் கார் இல்லை...... நாங்கள் நாலு பேர்கள் சேர்ந்து வாங்கிக் கொடுத்தது..............🤣. பெட்ரோல் வாங்க காசு கொடுத்து விட்டே பெருமை பேசும் இந்த உலகில், காரையே வாங்கிக் கொடுத்து விட்டு நாங்கள் கம்மென்று இருக்கின்றோம்...........😜 இலங்கையில் இப்ப இருப்பது ஒரே ஒரு பிரச்சனை தான்.......... கார் பிரச்சனை மட்டுமே.......... அங்கே எந்தக் காரை யார் வைத்திருக்கின்றார்கள் என்பதே அங்குள்ள ஒரு பிரச்சனை..............😀 முழு இலங்கையையும் ஒரு 'சொப்பன சுந்தரி' என்று இந்திய நண்பர்கள் சொல்லிச் சிரிப்பார்கள்.......... இப்ப எவர் வைத்திருக்கின்றார்கள் என்று கேட்பார்கள்............. கோவிட் தொற்றுக் காலத்தில் ஐங்கரநேசன் ஒரு அறிக்கை விட்டிருந்தவர். அதை வாசித்த பின், வாழ்நாளில் இனி ஐங்கரநேசனின் ஒரு சொல்லைக் கூட வாசிக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். அடக் கடவுளே............ இன்றைக்கு விரதம் உடைந்து, வாசிக்க வேண்டியதாகப் போய் விட்டதே...........🤣.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣.......... பையன் சார், அதிமுகவில் இணைய நானும் தயார் தான், ஆனால்............. எடப்பாடியார் தலைமையை ஏற்கமுடியாது. எங்கள் அண்ணன், மதுரைச் சிங்கம் செல்லூர் ராஜூ அண்ணனின் தலைமையில் புதிய 'அகில உலக அதிமுக' ஒன்றை உருவாக்கினால், இன்றைக்கே சந்தாப்பணம் அனுப்புவதாக உள்ளேன்......😜. 'சென்னை ஒரு வெண்ணை........... இனி மதுரை தான் தலைநகர்.........' என்று ராஜூ அண்ணனுக்கு ஒரு உரை எழுதிக் கொடுப்பதாகவும் உள்ளேன். புதிய கட்சிக்கொடியில் ஒன்று இரண்டு மிருகங்கள், பறவைகள் இருக்காது. எல்லோரையும் அரவணைக்கின்றோம் என்று காட்டுவதற்காக கொடியில் ஒரு மிருகக்காட்சிசாலையே இருக்கும். இப்படி இன்னும் கவர்ச்சிகரமான பல திட்டங்கள், செயற்பாடுகள் இருக்கின்றன............ ராஜூ அண்ணனுக்கு வாக்களியுங்கள்........... ராஜாவாக வாழுங்கள்!
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣.............. ஆ........ பார்த்தன்...........பார்த்தன்....... அந்த அபிநயம் பிடிக்கிற பிள்ளைக்கு தான் நான் ரசிகன்.............😜. ஆனால் அந்தப் பிள்ளையை இப்ப அவர்கள் வெளியில் கொண்டு வருகிறதே இல்லையே............ மன்னார்குடிக்கு எதிராக ஒரு போராட்டம் அறிவிக்க வேண்டும், அந்த பிள்ளையை அடுத்த முதலமைச்சர் வேட்பாளாராக அறிவியுங்கள் என்று.......... பையன் சார், எவ்வளவு நேர்மறையாக இருக்க முடியுமோ அவ்வளவு நேர்மறையாக இருக்கின்றீர்கள். நம்பிக்கை தான் ஒரே பலம் என்பது போல. உங்கள் எண்ணப்படியே நடந்தால் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே...............👍.
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
படப்பிடிப்பு முடிந்து விட்டது............ இனிமேல் விஜய் தான் ஊர் ஊராக போக வேண்டும், கமல் டார்ச் லைட்டுடன் ஊர் ஊராக போனது போல............... தமிழ்நாட்டு மக்களின் மீது நம்பிக்கை நல்லாவே இருக்கின்றது............. எல்லாம் முடிய, உதயசூரியனிலோ அல்லது இரட்டை இலையிலோ நிற்கும் 'அவர்களின் ஆட்கள்' பார்த்து வாக்குப் போடுவார்கள்............
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
அடுத்த தலைவரை தெரிவு செய்யும் கூட்டத்திற்கு நைம் காசிம் போகவில்லை போல........... அதால இவரையே தலைவராக தெரிந்து எடுத்துவிட்டார்கள்.................
-
புதிய தலைவரை அறிவித்தது ஹெஸ்புல்லா!
🤣........... தாந்திரீகம், அதர்வணம் என்று சில உட்பிரிவுகள் எங்களுக்குள்ளும் இதற்கான வசதி வாய்ப்புகளுடன் இருக்கும்............... தேடிப் பார்க்க வேண்டும்...........😜.