Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9545
  • Joined

  • Days Won

    16

Everything posted by யாயினி

  1. "எழுதுகிறவன் தான் எழுதுகிறவற்றைக் காட்டிலும் சிறந்தவனாக இருக்கவேண்டும்."
    --மாக்சிம் கார்க்கி
     
     
  2. இதில் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்; பெற்றோரை எங்கு அமைதியாக வைத்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..??
  3. கர்ப்பப்பைக்கு வெளியே வளர்ந்த குழந்தை : இலங்கை வைத்தியர்கள் சாதனை!!

    June 17, 2023
     

    இலங்கையில்..

    bby1.jpg?resize=600%2C338&ssl=1


     

    இலங்கையில் கொழும்பு சொய்சா பெண்கள் வைத்தியசாலையில் இன்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த முறையானது முப்பதாயிரத்தில் ஒருவருக்கு ஏற்படும் அரிதாக நிகழ்வென வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

    Hospital-1.jpg?resize=600%2C333&ssl=1


     

    இன்று வைத்தியசாலையில் பிரத்யேக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இது போன்ற கர்ப்பம் மிகவும் அரிதானது, முப்பதாயிரத்தில் ஒருவருக்கு தான் குடலில் நஞ்சுக்கொடி பொருத்தப்பட்ட குழந்தை பிறக்கும்.


     

    bby3.jpg?resize=600%2C338&ssl=1

     

    தேசிய வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் சத்திர சிகிச்சை நிபுணர்களை வரவழைத்து இந்த பாரிய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    hospital.png?resize=600%2C386&ssl=1

     

    கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் இருந்து குறித்த குழந்தையின் தாய் கொழும்பு வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    bby1.jpg?resize=600%2C338&ssl=1

    அங்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அவர்கள் இங்கு வந்த நிலையில், இன்று குழந்தையை ஆரோக்கியமாக பிரசவித்துள்ளார். தற்போது தாய் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார். குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளது. குழந்தை சிறந்த நிலையிலும் மற்றும் 2.300 கிலோ எடையுடன் பிறந்துள்ளது.

    posmoterm.jpg?resize=600%2C316&ssl=1

     

    குழந்தையின் நஞ்சுக்கொடி கருப்பைக்கு வெளியே சென்று குடலுடன் இணைக்கப்பட்டு இருந்தது. 28 வது வாரத்தில் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, இதற்காக சிறப்புக் குழு நியமிக்கப்பட்டு தாயின் உடல்நிலையை தொடர்ந்து பரிசோதித்து வந்துள்ளது.

    bby3.jpg?resize=600%2C338&ssl=1

    வயிறு மற்றும் சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள பகுதியில் இந்த குழந்தை இருந்தது. பல சோதனைகளின் பின்னரே சத்திரசிகிச்சையின் மூலம் குழந்தையை எடுத்துள்ளனர். 28 வார கர்ப்பத்தில், கருவின் போதுமான வளர்ச்சி இல்லாததால், தாய் 34 வாரங்கள் வரை மகளிர் சோய்சா மருத்துவமனையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

    hospital-1.png?resize=600%2C338&ssl=1

    இன்று, 16ம் திகதி, சிறப்பு வைத்திய குழுவினர், அறுவை சிகிச்சைக்கு பின், குழந்தையை வெற்றிகரமாக பிறந்துள்ளது. 34 வாரங்கள் வரை உயிருடன் இருக்கும் வயிற்றுத் துவாரத்தில் இருந்து கருவை வெளியே எடுப்பது சிக்கலான அறுவை சிகிச்சையாகும்.

    bby1.jpg?resize=600%2C338&ssl=1

    இந்த அறுவை சிகிச்சை மூலம் அதிக ரத்தப்போக்கு ஏற்படக்கூடும் என்பதால், கூடிய கவனத்துடனே இது செய்யப்பட்டது என வைத்தியர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    வவுனியா நெற்.

  4. 17 ஜூன் வீதி.
    🌷 🌿 🌷 🌿 🌷 🌿 🌷 🌿 🌷 🌿
    இன்றைய தினமாகிய 17 ஜூன் என்பது ஜெர்மனியருக்கு எமது 18 மே மாதத்தைப்போல மறக்கவொண்ணாத ஒரு துன்பியல் நிகழ்வுநடைபெற்ற ஒரு தினமாகும். இதை நினைவுகொள்ளும் விதத்தில் பெர்லினில் Tiergarten எனும் பகுதியில் ஒரு நீளமான வீதிக்கே Strasse des 17 Juni எனப் பெயரிட்டுள்ளனர்.
    *
    கிழக்கு ஜேர்மனியில் 17 ஜூன் 1953 இல் நடந்த எழுச்சியின் போது சுமார் ஒரு மில்லியன் மக்கள் கிழக்கு பெர்லின் மற்றும் GDR முழுவதும் GDR அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கு எதிராக அமைதியான போராட்டங்களில் கலந்து கொண்டனர். எழுச்சி வன்முறையாக அடக்கப்பட்டது மற்றும் பல ஆர்ப்பாட்டக்காரர்களில் 300 பேர் தங்கள் உயிர்களை இழக்கிறார்கள்.
     
  5.  
     
     
    ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.
     
    🌷 "இருவடை எடுத்து ஒருவடை என்பார்
    திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!"
    🌷 மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.
    🌷 இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.
    🌷 ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்..
    🌷 ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’
    🌷 இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம்.
    🌷 ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,
    🌷 ‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’
    🌷 வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது.
    🌷 டீக்கடையின் வரிகளும், ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம் தான் அதில் வித்தியாசம். சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை.
    🌷 நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி நிச்சயம்.
    🌷 ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்...
    ‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’
    🌷 எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும், வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும், சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்!!!
     
  6.  சங்கீதப்பாடல்கள் கேட்க விருப்ப படாதவர்களுக்காக; இதைக் கேட்டு மகிழுங்கள்.........😆

  7. இலங்கையில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை இங்கிலாந்து முறையாக அங்கீகரிக்க வேண்டும் - பிரித்தானியாவில் சிறப்பு மாநாடு
    1. யாயினி

      யாயினி

      சிறந்த எழுத்தாளனின் 7 பழக்கங்கள்
      -எர்னெஸ்ட் ஹெமிங்வே:
      1 எழுதத் தொடங்கு.
      அசல் வாக்கியங்கள் சிலவற்றையாவது எழுது.
      2 தினந்தோறும் தூங்கி எழுந்தவுடன் முதல் வேலையாக காலையில்ஒரு மணி நேரமாவது எழுது.
      3 எழுதாது இருக்கும்போது கதைபற்றி யோசிக்காதே. எழுத உட்காரும்போதுதான் உன் கதை உருவாக வேண்டும்.
      4 ஒவ்வொரு நாளும் முதலில் எழுதியதியதைத் தொடர்ந்து எழுதும்போது
      முதலில் எழுதியதை ஒரு முறையாவது படி.
      5 உணர்ச்சியை விவரிக்காதே. அதை நிகழ்த்து. வாசகன் உன் உணர்ச்சியை உணரச் செய்.
      6 பென்சிலைப் பயன்படுத்து.
      7 சுருக்கமாக எழுது.
      நாவல் என்றால் வளவள என்று எழுத வேண்டும் என்று அர்த்தம் இல்லை....
       
      படித்ததிலிருந்து...................
    2. யாயினி
    3. யாயினி
  8. நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது..
    அமெரிக்காவில் இருந்து,
     
    நான் பிறந்த
    லண்டன் மாநகருக்கு சென்றேன்..
     
    நான் இளமையில் பசியுடன், கிழிந்த சட்டையுடன்.. நடந்து சென்ற அந்த
    இலண்டன் வீதி தெருக்களில் தான் இப்போது..
    என்னை காண இலட்சக் கணக்கில்
    மக்கள் திரண்டனர்..
     
    ஆனால் நான் பிச்சைகாரனாய் இருந்த போது என்னை நேசித்த
    என் காதலியை தேடினேன்..
     
    அவள் இல்லை..
    அன்று வறுமை எங்களை பிரித்தது..
    இன்று திரையில் என்னை இலட்சக்கணக்கில் கண்கள்
    காண்கின்றன..
     
    நான் தேடுவதெல்லாம் வீதிகளில்
    ஏழையாய் நடந்து சென்ற போது என்னை ஐென்னல் வழியாக பார்த்து சிரித்த அந்த கண்களை தான்...
     
    பணம் நமக்கு எல்லாவற்றையும்
    கொடுக்கலாம், ஆனால்
    வறுமை நம்மிடம் இருந்து பறித்த
    சிலவற்றை
    பணத்தால் திருப்பி தர
    முடியாது... இப்போதும் வறுமை தான் வென்றது...!!
     
    -சார்லி சாப்லின்..
     
    1. யாயினி

      யாயினி

      Teach these 40 phrases to your sons and daughters so they can be more resilient, successful, and confident in life.
      1. Where there's a will, there's a way.
      2. Good manners don't cost anything.
      3. Always ask. They can only say no.
      4. You're not marrying one; you're marrying the whole family.
      5. Find the good in everybody.
      6. Don't cry before you try.
      7. There are no stupid questions, only stupid answers.
      8. Pretty is as pretty does.
      9. Treat others as you would like to be treated.
      10. You can't control what others do, only your own reactions.
      11. Don't buy what you can't afford.
      12. Remember that things don’t make you happy, people do.
      13. You catch more flies with honey than with vinegar.
      14. Two wrongs don't make a right.
      15. Watch what you step in.
      16. Cow turds are a cattlemen's dollar signs. It all depends on how you look at it.
      17. Teamwork makes the dream work.
      18. Life isn't about finding yourself. Life is about creating yourself.
      19. What we think determines what happens to us, so if we want to change our lives, we need to stretch our minds.
      20. Fair? The fair is two weeks in the fall.
      21. One man's trash is another man's treasure.
      22. The greatest day in your life is when you take total responsibility for your attitudes. That's the day you truly grow up.
      23. True freedom is understanding that we have a choice in who and what we allow to have power over us.
      24. You're only as old as you feel.
      25. A rolling stone gathers no moss.
      26. Early to bed and early to rise makes you healthy, wealthy, and wise.
      27. Happiness is not by chance but by choice.
      28. If you don’t like the road you’re walking, start paving another one.
      29. A rising tide lifts all boats.
      30. Don't judge a book by its cover.
      31. You’re braver than you believe, and stronger than you seem, and smarter than you think.
      32. The early bird catches the worm.
      33. Each day comes bearing its gifts. Untie the ribbon.
      34. Expecting the world to treat you fairly because you are a good person is a little like expecting the bull not to attack you because you are a vegetarian.
      35. Confession is good for the soul.
      36. You can't make an omelet without breaking a few eggs.
      37. The grass is greener where you water it.
      38. The greatest glory in living lies not in never failing, but in rising every time we fail.
      39. There is no single recipe for success. But there is one essential ingredient: Passion.
      40. Never lose hope. And never underestimate the power of prayer.
       
      Author Unknown
      May be an image of 2 people
       
       
    2. யாயினி
  9. 21 ஆம் நூற்றாண்டின் மோசமான காட்டுத்தீ பருவத்தை கனடா எதிர்கொள்வதாக அவசர தயார் நிலை அமைச்சர் Bill Blair கூறினார்.
    முழுமையான செய்தி: https://thesiyamnation.com/34565/
    To join our WhatsApp group: https://chat.whatsapp.com/LLoD3OeCNtpJoYmRsjUm3
    See more
  10. World Blood Donor Day: How often can one donate blood?....இன்று உலக இரத்த தான தினம்...

     
     
     
    The frequency of blood donation in males is 3 months and females is 4 months
     
  11.  

     
    பூக்கள் மட்டுமா அழகு🌺
    பச்சை இலைகள் கூட அழகு 🌿
    353679304_10160113298655376_527927049689
     
     
    353812221_10160113299010376_622721321350
     
     
    353830787_10160113298860376_705484362693
     
     
    354055512_10160113298770376_133427709515
     
     
    353829512_10160113299285376_690972751286
     
    +10
    அர்யுன் அண்ணா வீட்டு இலைகள்...
     
  12. சிஏ முடித்து ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில்ட் எம்பிஏ பட்டம் பெற்றுள்ள பட்டதாரியான, பார்வை மாற்றுத்திறனாளி அபூர்வ் குல்கர்னி உயரிய விருதான Sarvshresth Divyangian விருது பெற்றிருக்கிறார். 

     

     
    7 வயதில் பார்வை இழந்தும்; சிஏ, எம்பிஏ முடித்து மாற்றுத்திறனாளிகளின் குரலாக இருக்கும் அபூர்வ் குல்கர்னி!
     

     

    7 வயதில் பார்வை இழந்தும்; சிஏ, எம்பிஏ முடித்து மாற்றுத்திறனாளிகளின் குரலாக இருக்கும் அபூர்வ் குல்கர்னி! சிஏ முடித்து ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில்ட் எம்பிஏ பட்டம் பெற்றுள்ள பட்டதாரியான, பார்வை மாற்றுத்திறனாளி அபூர்வ் குல்கர்னி உயரிய விருதான Sarvshresth Divyangian விருது பெற்றிருக்கிறார.

     

     அபூர்வ் குல்கர்னி - அப்போது ஏழு வயதிருக்கும். பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அடிக்கடி பள்ளியில் தவறி கீழே விழுந்துவிடுவார். இது அவரது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கண் பார்வையும் மங்கத்தொடங்கியது. வழக்கமான வேலைகளைக்கூட செய்துகொள்ள முடியாமல் போனது. பள்ளியில் ஆசிரியர் கரும்பலகையில் என்ன எழுதுகிறார் என்பது அவருக்குத் தெரியவில்லை.

    ஏராளமான மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. கண் மருத்துவரையும் பார்த்தார்கள். கடைசியாக அவருக்கு ஏற்பட்டிருப்பது Stargardt நோய் என்பது கண்டறியப்பட்டது. இந்த மரபணு குறைபாடு ரெடினாவை பாதிக்கும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் கண் பார்வையை இழக்கமாட்டார்கள்.

    ஆனால், பார்வைத்திறன் மிகவும் மோசமாக இருக்கும். சிறுவயதிலோ அல்லது இளமைப் பருவத்தின் தொடக்கத்திலோ இந்த பாதிப்பு ஏற்பட ஆரம்பிக்கும். படிப்படியாக மோசமாகிக்கொண்டே போகும்.

    இந்த நோய் தாக்கம் காரணமாக அபூர்வின் அன்றாட வேலைகள் மாறிப்போயின. மற்றவர்களை சார்ந்து இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. புத்தகங்களை யாராவது  அவருக்குப் படித்துக்காட்ட வேண்டும். அவருக்கு பதிலாக யாராவது தேர்வு எழுதவேண்டும். மற்ற மாணவர்கள் விளையாடும்போது அவரை சேர்த்துக்கொள்ள மறுத்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு மரம் ஏறுவது, சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றில் ஆர்வம் பிறந்தது.

    “அந்த வயதில் இப்படி ஒரு சூழலை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது,” என்று அவர் சிறுவயது நாட்களை நினைவுகூர்ந்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடும்போது, “ஒரு வகையில் சிறு வயதிற்கே உரிய அறியாமையும் உற்சாகமும் எனக்கு கைகொடுத்தது.

    அந்த வயதில் எதையும் பெரிதாக ஆராய்ந்து பார்க்கமாட்டோம். இதுபோன்ற பிரச்சனையின் தீவிரதன்மை என்ன என்பது அப்போது எனக்குப் புரியவில்லை,” என்கிறார். பிரச்சனையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேற பழகிக்கொண்டார்.

    அதற்காக கூடுதல் முயற்சிகள் மேற்கொண்டார். ஒருகட்டத்தில் தொழில்நுட்பம் அவருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக மாறியது. பாடபுத்தகங்களில் இருக்கும் நூற்றுக்கணக்கான பக்கங்களை அவரோ அல்லது அவரது பெற்றோரோ ஸ்கேன் செய்தனர். இது ஆப்டிகல் கேரக்டர் ரீடரில் ஃபீட் செய்யப்பட்டது. மென்பொருள் உதவியுடன் அந்தப் பக்கங்களில் இருந்த வாசகங்கள் வாசித்துக்காட்டப்பட்டன.

    தொழில்நுட்பம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பது அபூர்விற்குப் புரிந்தது. அன்று முதல் மாற்றுத்திறனாளிகளின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அபூர்வ் தீவிரம் காட்டி வருகிறார்.

    அதேபோல், கொள்கை வகுப்பவர்களும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கத் தூண்டுகிறார். அபூர்விற்கு பார்வை குறைபாடு பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்து தற்போது 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவேண்டும் என்பதில் அவர் தீவிர முனைப்புடன் இருந்து வருகிறார்.

    தற்போது இவருக்கு 35 வயதாகிறது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் Sarvshresth Divyangian விருது பெற்றுள்ளார். தற்போது அபூர்வ் ஆய்வுப் பணிகளை வழிநடத்தி வருகிறார். அத்துடன் OMI Foundation-ன் Centre of Inclusive Mobility தலைவராகவும் இருக்கிறார். ஓலா ரைட்-புக்கிங் ஆப் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க உதவியுள்ளார்.

    ஊழியர்களை பணியமர்த்தும்போது மாற்றுத்திறனாளிகளையும் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் கலந்துரையாடியிருக்கிறார். “டாக்சியிலோ பேருந்திலோ ஏறி இறங்குவது மட்டும் பிரச்சனையில்லை. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதில் பிரச்சனைகள் இருப்பதுதான் உண்மை. இதற்குத் தீர்வு காணும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படவேண்டும்.

    இதில் என்னுடைய பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நினைத்தேன்,” என்கிறார். இந்த எண்ணத்தை செயல்படுத்தவும் செய்தார். “பேருந்துகளை வாங்கும்போதே இது தொடர்பான அம்சங்களைக் கவனிக்கும் வகையில் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர ஊக்குவித்தேன்,” என்கிறார்.

    அபூர்வ் On The Move என்கிற அறிக்கையை எழுதியிருக்கிறார். இது மாற்றுத்திறானிகளின் பயண அனுபவம் பற்றியது. உலக வங்கியின் நிபுணர்கள் இதை ஆய்வு செய்துள்ளனர். “முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பயண சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் இரண்டு அம்சங்களை நாம் கவனிக்கவேண்டியுள்ளது. இந்த சலுகையைப் பயனர்கள் போராடிப் பெறவேண்டியிருக்கிறது. அடுத்ததாக இப்படிப்பட்ட சலுகைகள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை,” என்கிறார் அபூர்வ்.

    “இப்படிப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய துறைகள் அரசிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு பல காலம் காத்திருக்கவேண்டியுள்ளது. இதுவும் இத்தகைய கொள்கைகள் நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது,” என்கிறார். ”நாங்கள் India Stack பயன்படுத்தி ஒரு தொழில்நுட்பத் தீர்வை உருவாக்கினோம். இதனால் மொத்த செயல்முறையும் டிஜிட்டல்மயமாக்கப்படுகிறது. எனவே, பயணம் செய்ய விரும்புபவர் அந்த குறிப்பிட்ட பயணத்திற்கான கட்டணத்தை மரியாதையான முறையில் செலுத்தலாம். மானியம் தொடர்பான பரிவத்தனை பேக் எண்டில் நடக்கும்.

    ஆபரேட்டருக்கு பணம் கிடைத்துவிடும். பயனர்களுக்கு நிதிச்சுமை இருக்காது. இந்தத் தீர்வை நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு சில குறிப்பிட்ட நகரங்களில் சோதனை முயற்சி செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக அபூர்வ் குழுவினர் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இத்தகைய நீண்ட பயணத்தைக் கடந்து வந்துள்ள அபூர்வ் ஆரம்பத்தில் ஒரு வேலையில் சேர மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

    அதிலும் இவர் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துள்ளார். மேலும், சார்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பும் முடித்திருக்கிறார். “நான் இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கும் நேர்காணலுக்கு சென்றிருந்தேன். ஆனால், அவர்கள் என் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. என் வேலையை திறம்பட செய்து முடிப்பதில் என் உடலில் இருக்கும் குறைபாடு எந்த விதத்தில் தடையாக இருக்கும் என்பதை மட்டுமே யோசித்தார்கள்,” என்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு மெழுகுவர்த்தி தயாரிப்பும் கூடை பின்னவும் கற்றுக்கொடுத்தால் போதாது என்று குறிப்பிடும் அபூர்வ் அவர்களுக்கு டிஜிட்டல் திறன்களில் பயிற்சியளிக்கப்படவேண்டும் என்கிறார்.

    அதேசமயம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குபவர்கள் அவற்றை மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கவேண்டும் என்கிறார். “வெப்3 தொழில்நுட்பம் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த உகந்ததாக இந்தத் தீர்வுகள் உருவாக்கப்படவேண்டும். அப்போதுதான் இதன் மதிப்பு உயரும். இதுபோன்ற தளங்கள் கிரியேடிவாக பயன்படுத்தப்பட ஊக்குவிக்கப்படும்,” என்கிறார்.

     

    ஆங்கில கட்டுரையாளர்: ஃபெரோஸ் ஜமால் | தமிழில்: ஸ்ரீவித்யா 1139 people loved this story

    Read more at: https://yourstory.com/tamil/visually-impaired-helps-disabled-apoor-kulkarni-inspiration-story?fbclid=IwAR00s8dmjfJFA75uyZf5DsMYINs7ZIj7kR-E55Am3iMLaL9v9sFRtT6rwI0

  13.  · 
    ஞாயிறு காலை...🖐️
     
    May be an image of 1 person and text that says 'கல்வியை புத்திசாலித்தனத்துடன் ஒருபோதும் குழப்ப வேண்டாம், நீங்கள் பிஎச்டி படித்து பின்னும் கூட முட்டாள்களாக இருக்கலாம். -ரிச்சர்ட் ஃபேயன்மேன்'
     
     
     
     
    1. Show previous comments  1 more
    2. யாயினி
    3. யாயினி
    4. யாயினி
  14. மட்டக்களப்பில் மீன் குழம்பால் பலியான இளம் தாய்

     

    PUBLISHED ON

    JUNE 9, 2023
    BYTAMIL
     
    23-6482caab778f8.jpg
     
     
     
     
     
     

    மட்டக்களப்பு – மாங்காடு பிரதேசத்தில்மீன் குழம்பு விசமானதில் 27 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

    மாங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 27 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

    குறித்த பெண் அவரது 4 மற்றும் 7 வயதான இரு குழந்தைகள் மற்றும் அவரது தாயார் ஆகிய 4 பேரும் மதிய உணவை உட்கொண்டதன் பின்னர் மயங்கியுள்ளனர்.

    இதையடுத்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடல் மீனினமான பேத்தை மீனை உட்கொண்டதன் காரணமாகவே இந்த துயரம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

    சம்பவத்தில் 27 வயதுடைய இளம் தாயார் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய 3 பேரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

  15. இங்கும் இந்த புகை மண்டலத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நேற்றும், இன்றும் அவசிமற்று குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்ட கால நோய் தொற்க்கு உள்ளானவர்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறும் அறிய முடிந்தது...
  16. Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு இன்று ஆரம்பம் ....
    Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழன் ஆரம்பம்
    THESIYAMNATION.COM
    Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழன் ஆரம்பம்
    தபால் மூல வாக்களிப்பு பெட்டி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் Torontoவில் நிகழ்ந்துள்ளது. Toronto நகர முதல்வர் இடைத் தேர்தலுக...
     
  17. மக்களுக்கு பயனுள்ள தகவல்களை நிர்வாகம் பின்ட் பண்ணி விடுவது நன்று.தகவல்களுக்கு மிக்க நன்றி யஸ்ரின் அண்ண..🖐️✍️
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.