Everything posted by யாயினி
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
இரும்பு சத்துக்கள் கூடியது.. @highlight All reactions
-
மோதல்களால் சூழ்ந்துள்ள உலகம் : மனிதநேயத்திற்கு பாதுகாப்பான புகலிடம் இந்தியா – பிரதமர் மோடி
காமடி பண்ண எங்கே கற்றுக் கொண்டீர்கள் என்று இப்போ தான் தெரியுது.😀
-
நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி
Canada Cp24.. https://www.cp24.com/world/british-man-dies-and-several-passengers-are-injured-when-turbulence-hits-a-singapore-airlines-flight-1.6894334
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
வாதவூரனுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏
-
பிறந்தநாளில் 20 வயது யுவதிக்கு எமனாக வந்த இராணுவ வாகனம் - யாழில் சம்பவம்!
ஓ..நோ..எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாதவூரன்.🙏
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
இது உண்மை தான்.ஒரு லட்சம், இரண்டு லட்சமல்ல.பல லட்சங்களை காட்ட வேணுமாம்.அடிக்கடி ஊருக்கு போய் வருபவர்களிடம் அங்கு நடக்கும் அனைத்தையும் அறியலாம்.
- வினா விடை
-
வினா விடை
இந்தப் பதிலை எல்லாம் வினா - விடையில் எப்போ சேர்த்தார்கள்....🤭
-
இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 3
இருநூறு வருடகால மலையகச் சமூகமும் இலக்கியமும் : ஒரு காலக்கணக்கெடுப்பு – பகுதி 3 January 31, 2024 | Ezhuna மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன. இனக்கலவரமும் இலக்கிய வெளிப்பாடும் மலையகத் தமிழர் வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் தொட்டு தொழிற்சங்க அடிப்படையிலும் இன, வர்க்க அடிப்படையிலும் பல்வேறுவிதமான எழுச்சிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம்பெற்று வந்துள்ளன. அவ்வாறு எழுச்சி பெறுகின்ற ஒவ்வொரு காலப்பகுதியிலும் அதற்கெதிராக அவர்களை ஒடுக்குவதற்கான நடைமுறைகளும் திட்டமிட்டு இடம்பெற்று வந்துள்ளன. இந்தியர் எதிர்ப்பு வாதம், இனவாதம் போன்ற கருத்து நிலைகள் இதில் முதன்மை வகித்தன. இவ்வாறு வளர்ந்து வந்த ஒடுக்குமுறைகள் எழுபதுகளில் தீவிர இனவாதமாக மாற்றம் பெற்றன. 1972, 1981, 1983 ஆம் ஆண்டுகளில் பாரிய இனவெறிச் சம்பவங்கள் நடைபெற்றன. ஓ.ஏ. இராமையா (2018:2016) 1973ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் நாடு முழுவதும் சிறுபான்மை தமிழர்களுக்கெதிராக மிகவும் மோசமான முறையில் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு ஆகிய பிரதேசங்களில் வாழும் தமிழர்களின் சொத்துக்களுக்குப் பெரும் அழிவுகள் ஏற்பட்டதோடு பலர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இது மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களது வரலாற்றில் மிக மோசமான பாதிப்புகளையும் சிதைவுகளையும் ஏற்படுத்தியது. பௌத்த இன மேலாண்மைச் சிந்தனையின் உச்சக்கட்ட தாக்குதலை மலையகத் தமிழர்கள் எதிர்கொண்டனர். மலையகத் தேசியவாதச் சிந்தனைகள் வளர்ச்சிபெற்று வந்த காலப்பகுதியிலேயே இவ்வாறான சம்பவங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இனக்கலவரம் குறித்த இலக்கியப் பதிவுகளை கணக்கிடும்போது கவிதைகள் சிலவற்றில் அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், சிறுகதைகள் மற்றும் நாவல்களில் இவ்விடயம் பெரிதும் உருக்கொள்ளவில்லை. மலையகத்தில் தெளிவத்தை ஜோசப் எழுதிய ‘நாங்கள் பாவிகளாய் இருக்கிறோம் அல்லது 1983’ என்ற நாவல் இதனை வெளிப்படுத்தும் இலக்கியப் பதிவாகக் கொள்ள முடியும். இந்நாவல் 1983 இனக்கலவரத்தை பிரதானப்படுத்தி எழுதப்பட்டிருந்தாலும் மலையகத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடூரங்களை மையப்படுத்தியதாக அமையவில்லை. மலையகத் தமிழர் செறிவாக வாழும் நுவரெலியா, பதுளை மற்றும் அவர்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழக்கூடிய கேகாலை, இரத்தினபுரி போன்ற பிரதான நகரங்களிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் மலையக மக்கள் இனக்கலவரங்களால் பெரிதும் தாக்கப்பட்டனர். எனினும் இந்நாவல் கொழும்பை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்டமை கவனிக்கத்தக்கதாகும். ஆகவே மொத்தமாக அவதானிக்கும்போது இனக்கலவரத்தையும் அதன் பின்னணிகளையும் அடிப்படையாகக் கொண்ட மலையக இலக்கியங்கள் பெரிதும் கவனப்படுத்தப்படவில்லையென்றே குறிப்பிட முடியும். எண்பதுகளின் இலக்கிய முகிழ்ப்பு : இனத்துவம், வர்க்க நிலை, தொழிற்சங்கச் சிதைவுகள் எண்பதுகளின் ஆரம்பத்தில் இனமுரண்பாடுகளும் இனவாத நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டபோது மலையகத் தமிழர்களிடையே இனத்துவச் சிந்தனைகள் வெளிக்கிளம்புகின்றன. இனவொடுக்குமுறைகளுக்கு எதிராக மலையகத் தமிழர்களின் இனப்பிரச்சினையை பேசும் வகையிலான கவிதைகளும், மற்றும் அரசியல் தலைவர்களிடையே இனவாதச் சிந்தனைகள் செயற்படுவதை எள்ளலாக சிறுகதைகளில் சொல்லும் இலக்கியப் பண்புகளும் வளர்ந்திருந்தன (மு.சிவலிங்கம்). எண்பதுகளில் மலையக இலக்கியத் தளத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பண்புநிலை மாற்றமானது மலையக புவியியல் பிரதேசங்களில் எல்லை நிலங்களில் வாழக்கூடிய மக்களைப் பற்றிய இலக்கியப் படைப்புகள் உருப்பெற்றமையாகும். குறிப்பாக மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி முதலிய பகுதிகளில் வாழக்கூடிய மக்களைப் பற்றிய பதிவுகள் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கின. இப்பகுதிகளில் மலையகத் தமிழர்கள் சிங்களவர்களுடனும் சில பிரதேசங்களில் முஸ்லிம் மக்களுடனும் இணைந்து வாழுகின்றனர். இவர்கள் குறித்த இலக்கிய உருவாக்கம் இக்காலப்பகுதியிலேயே இடம்பெறுகின்றன. மாத்தளை மலரன்பன், அல் அலீமத் ஆகியோரது படைப்புகளில் இதனை அவதானிக்கலாம். மாத்தளை மலரன்பனது எழுத்துக்களில் மலையகத் தமிழர் சிங்களவர்களுடன் இணைந்து அந்நியோன்யமாக வாழ்வதையும் அவர்கள் ஒன்றாக இணைந்து அங்கு எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் காணமுடிகிறது (கோடிச்சேலை-1989, பிள்ளையார் சுழி-2008). பெரும்பாலும் இறப்பர் தோட்ட வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட இக்கதைகளில் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களைப் போலவே அங்கு வேலை செய்யும் சிங்களத் தொழிலாளர்களையும் சமாந்தரமாகப் படைத்துள்ளார். இச்சிறுகதைகளில் சிங்களவர், தமிழர் உறவைச் சிறப்பாகப் பேணும் நோக்கில் பாத்திரங்களை உருவாக்கியிருப்பது சிறப்புக்குரியதாகும். (1983) இனக்கலவரத்திற்கு பின்னர் ஏற்பட்ட இலக்கியப் படைப்புகளில் இனத்துவ நல்லிணக்கத்தை பேணும் இலக்கிய உருவாக்கத்தைக் காணமுடிந்தது. வர்க்கநிலை 1980களில் மலையக இலக்கிய உருவாக்கப் போக்குகளில் இனத்துவ சிந்தனைகள் முனைப்பு பெறத் தொடங்கியபோதும் அதனைக் கடந்த வர்க்கநிலைப்பாட்டை வலியுறுத்தும் இலக்கிய அமைப்புகளும் உருவாகாமலில்லை. 1982ம் ஆண்டு வெளிவந்த ‘தீர்த்தக்கரை’ சஞ்சிகை இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. தீர்த்தக்கரை என்ற பெயரில் இயங்கிய குழுவினர்கள் மார்க்சியப் பார்வை கொண்டவர்களாகவும் மலையகத் தமிழர்களது வரலாற்றையும் அவர்களின் விடுதலையையும் வர்க்க அணுகுமுறையில் நோக்குபவர்களாகவும் செயற்பட்டனர். இவர்களால் வெளியிடபப்ட்ட தீர்த்தக்கரை சஞ்சிகையும் இக்கருத்துநிலையைக் கொண்ட ஆக்கங்களைச் சுமந்தவையாகும். குறிப்பாக இதில் இயங்கிய எல். சாந்தகுமார், எல். ஜோதிகுமார் ஆகியோர் மலையகச் சமூகம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர். மலையகத் தமிழரது வரலாற்றில் தீர்க்கமான கருத்துநிலைகள் கலை இலக்கியத் தளங்களில் இக்காலத்தில் உருவாகத் தொடங்கியது. தொழிற்சங்கச் சிதைவுகள் கவிதை இலக்கியத்துறையில் மல்லிகை.சி. குமார், சு. முரளிதரன் போன்ற கவிஞர்கள் தீவிரமாக சமூக விமர்சனத்துடன்கூடிய கவிதைகளை எழுதினர். இவர்களது கவிதைகள் சிறந்த கவித்துவத்துடனும் வீரியத்துடனும் மலையகத்தைப் பேசின. அதுவரைக்காலமும் தொழிற்சங்க பலத்துடன் மக்களை நிர்வகித்து வந்த தலைமைகள் மற்றும் நிர்வாகிகளை விமர்சித்தும் மக்களின் விடிவுக்கான சரியான பாதைகளை கண்டறிவதற்கான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துவதாக அவை அமைந்தன. “தொழிற்சங்கங்கள் புகுந்ததும் துயர்மூச்சு போனதா? சில சமயங்களில் இவைகள் துரைசங்கங்களாகும்” (சு. முரளிதரன் : தீவகத்து ஊமைகள்) “தொழிற்சங்கங்கள் உன் நிழலில் ஒதுங்கின” (சு. முரளிதரன்: தியாக யந்திரங்கள்) முதலிய கவிதைகளில் தொழிற்சங்கங்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைவதையும் அவற்றின் போக்குகள் எவ்வாறு மக்கள் சார்பற்ற நிலைக்கு மாறியுள்ளன என்பதையும் அவதானிக்கலாம். ஞானசேகரன் போன்ற நாவலாசிரியர்களின் இக்கால நாவல்கள் தொழிற்சங்கங்களின் சிதைவுகளையும் அவை அரசியல் கட்சிகளாக மாறுவதையும் பிரதிபலித்தன. ஒரே தோட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் தங்களுக்கிடையே தொழிலாளர்களை பகிர்ந்து கொள்வதனால் தோட்டங்களில் தொழிற்சங்கப் போட்டியும் பகைமையும் வளர்க்கப்பட்டு தொழிலாளர்கள் பல துண்டுகளாகும் நிலையேற்பட்டது. மேலும் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் தீவிரமாக உருவாகிய தொழிற்சங்கங்கள் பின்னரைப் பகுதியில் சிதைவுறுகின்ற அவலநிலை உருவாகியது. தொழிற்சங்கங்கள் பலம் இழக்கத்தொடங்கியது மட்டுமல்லாது அவை கட்சிகளாக மாறுகின்ற காலப்பகுதியில்தான் இந்நாவல் வெளிவருகிறது (சு.தவச்செல்வன் : 2018). மலையக தமிழர்களது இலக்கிய உருவாக்க வளர்ச்சியில் இக்காலப்பகுதியில் கோட்பாட்டு ரீதியான படைப்பாக்க அணுகுமுறை முளைவிடத் தொடங்கியது. குறிப்பாக மார்க்சிய இலக்கியக் கோட்பாட்டுப் புரிதலுடன் எழுதுகின்ற போக்கு உருவாகத் தொடங்கியது. சாந்திகுமாரின் ‘மலையக சமூகம்’ பற்றிய ஆய்வுக்கட்டுரை தொடங்கி தீர்த்தக்கரை சஞ்சிகையில் சிறுகதைகள் படைத்த ஆனந்த ராகவன், பிரான்சிஸ் சேவியிர், கேகாலை கையிலைநாதன் ஆகியோர் எழுதித் தொகுத்த தீர்த்தக்கரைக் கதைகள் வரை இதன் அடிப்படைகளை உணரலாம். மலையக மக்களின் வாழ்க்கையையும், உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் சிறுகதைகள் தீர்த்தக்கரையில் வெளிவந்தன. திறமையுள்ள இளைய எழுத்தாளர்களின் படைப்புகள் அவை (வல்லிக்கண்ணன்:1995). தீர்த்தக்கரை சஞ்சிகையின் தொடக்கமாக அமைந்த இக் கோட்பாட்டெழுத்துக்கள் தொடர்ந்து தொண்ணூறுகளில் நந்தலாலாவாக உருமாறுகின்றது. தீர்த்தக்கரையிலிருந்து விரிந்த தளத்தில் ஆரம்பகால நந்தலாலா சஞ்சிகை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த கோட்பாட்டு ரீதியான இலக்கிய படைப்புகளும் இலக்கியப் புரிதல்களும் அக்காலப்பகுதியில் படைப்புத்துறையில் அதிகமாக பங்களிப்புச் செய்த மல்லிகை சி. குமாரது படைப்புகளிலும் வெளிப்பட்டது. மலையகத் தமிழர்களது சமூக அரசியலையும் அதன் பிரதானிகளையும் நன்கு புரிந்துகொண்ட எழுத்தாளராக மல்லிகை சி. குமாரை மதிப்பிடலாம். மலையக இலக்கியத்தில் மக்கள் இலக்கிய கோட்பாட்டைத் தொடக்கி வைத்தவர் சி.வி. வேலுப்பிள்ளையென்றால் இருபத்தோராம் நூற்றாண்டு படைப்பிலக்கியத் துறையிலும் அதனை வளர்த்தெடுத்துச் சென்றவர் மல்லிகை சி. குமாராவார். அவரது ‘மாடும் வீடும்’ கவிதைத்தொகுதி, பத்திரிகைகள், இதழ்களினூடாக வெளிவந்த சிறுகதைகள் மற்றும் நாவல்களில் மலையகத் தமிழர்களது வாழ்வியல் கூறுகளின் நுட்பமான பதிவுகளைக் காணமுடியும். இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தில் மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலக்கியப் படைப்பாக்கங்கள் உருவாகுகின்றன. குறிப்பாக மாத்தளை கார்த்திகேசு (வழி பிறந்தது-1992), புலோலியூர் சதாசிவம் (ஒரு நாட் பேர்-1995), தி. ஞானசேகரன் (லயத்துச் சிறைகள்-1994), மாத்தளை ரோகினி (இதயத்தில் இணைந்த இரு மலர்கள்-1997) ஆகிய நாவலாசிரியர்கள் பல்வேறு கோணங்களில் மலையகத் தமிழர்களின் பின்னணிகளை தமது எழுத்தில் பதிவு செய்தனர். இக்காலப்பகுதியில் முகிழ்த்தெழுந்த மற்றுமொரு கவிஞர் இராகலைப் பன்னீர் மலையகத் தொழிலாளர்களது விடுதலைக் கருத்துநிலையை அடிப்படையாகக் கொண்டு கவிதைகள் படைத்தவராக அறியப்படுகிறார் (புதிய தலைமுறை-1999). மலையக இலக்கியம் பற்றிய தேடல் மற்றும் ஆய்வு முயற்சிகள் முதன் முதலாக இக்காலப்பகுதியிலேயே தொடக்கி வைக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது (மலையகத் தமிழர் இலக்கியம்-1994). சாரல் நாடன் மற்றும் அந்தனி ஜீவா போன்றோர் ஆரம்பகால மலையக இலக்கியம் மற்றும் இலக்கிய ஆளுமைகளைப் பற்றி பதிவு செய்யத் தொடங்கினர். மலையகத்தில் தோற்றம் பெற்ற நாவல்களை அடிப்படையாகக் கொண்ட பல்கலைக்கழக புலமைநிலைப்பட்ட ஆய்வை பேரா.க. அருணாசலம் தொடக்கி வைக்கின்றார் (மலையகத் தமிழ் நாவல்கள் அறிமுகம்-1999). இரண்டாயிரத்துக்குப் பின்னரான சமூக மாற்றமும் இலக்கியப் பரிமாணமும் தொண்ணூறுகளில் தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்படுகின்றன. இதனையடுத்து தோட்டங்களை தனியார் கம்பனிகள் குத்தகைக்கு எடுத்துக்கொள்கின்றன. இதனால் தொழிலாளர்கள் மீதான நிர்வாகங்களின் கெடுபிடிகள் அதிகரித்தன. இச்சூழ்நிலைகள் இரண்டாயிரமாம் ஆண்டை நெருங்கும்போது பல பரிமாணங்கள் அடைந்தன. இரண்டாயிரமாம் ஆண்டுகளில் மலையகத்தில் ஏற்பட்ட பிரதான மாற்றங்களாக; தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளாக மாற்றமுற்றமை, பிரதான தொழிற்சங்கங்களில் ஏற்பட்ட பிளவுகள், மற்றும் புதிய தொழிற்சங்கங்கள் உருவாகியமை, தொழிலாளர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வேறு வழிகளைத் தேடத்தொடங்குதல், இதனால் தேயிலை தொழிற்துறை மீதான ஈடுபாடு குறைவடைதல், வேறு தொழில்களை நாடுதல், நகர்ப்புற தொழில்கள் மீதான கவனம், தொழிலுக்காக கொழும்புக்கு இடப்பெயர்வு, வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுதல், புலம்பெயர்வு ஆகியன அதிகரித்தமை ஆகியனவற்றைக் குறிப்பிடலாம் (சு. தவச்செல்வன்:30). மலையகத்தில் மத்தியதர வர்க்கமானது இரண்டாயிரத்துக்குப் பின்னரேயே பெரும்படையாக எழுச்சிபெறுகின்றது. இவர்கள் தொழிலாளர்களிலிருந்து அந்நியமாகின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கின்ற நிலப்பகுதிகளிலிருந்து வெளியேறியதோடு அவர்களது பண்பாட்டிலிருந்தும் அந்நியமாயினர். இவற்றோடு மட்டுமல்லாது இலங்கையில் உலகமயமாக்களின் தாக்கம் இரண்டாயிரத்துக்குப் பின்பே மலையகத்தில் அதிகமாக உணரப்பட்டது. இவ்வாறான சமூக மாற்றங்கள் தொழிலாளர்களிடையே பல்வேறு சிக்கல் வாய்ந்த நிலைமைகளை உருவாக்கியதோடு தொழிலாளர்களை உதிரிகளாக்கின. தொழிற்சங்க போர்வைகளைப் பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மட்டுமே தக்கவைத்துக்கொண்ட அரசியல் கட்சிகள் மக்களது வாக்குகளை சேகரிப்பதிலேயே கவனம் செலுத்தத் தொடங்கின. பெருந்தோட்டங்களில் சடுதியாக இடம்பெற்ற இந்த இடப்பெயர்வுகள், புலம்பெயர்வுகள் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் யுவதிகளையும் கொழும்பு போன்ற பிரதான நகரங்களுக்கு தொழில்தேடிச் செல்வதற்கு வழிவகுத்தன. இவ்வாறு தொழில் நாடி இடம்பெயர்ந்தவர்கள் பலர் அப்பகுதிகளில் நிரந்தரவாசிகளாகவும் மாறினர். இரண்டாயிரத்துக்குப் பின்னர் மலையகச் சமூகத்தில் கல்வி சார்ந்த விழிப்புணர்வுகள் ஏற்பட்டமையால் பாடசாலைக் கல்வி வளர்ச்சியேற்பட்டது. பெருந்தோட்ட மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் அதிகம் நாட்டம் கொண்டமையால் பாடசாலைக் கல்வியில் வெற்றிபெற்ற சிலர் உயர்கல்வி நாடிச்சென்று பல்வேறு பதவிநிலைகளைப் பெற்றனர். கல்விநிலை சார்ந்த இந்தச் சமூக நகர்வானது (Social Mobility) ஒரு சில மாற்றங்களைக் கொண்டுவந்தன. குறிப்பாக அதிகமான ஆசிரியர்களைக் கொண்டதொரு மத்தியதர வர்க்கம் உருவானது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடரும் உயர்கல்வி வாய்ப்புகளை சிலர் பெற்றாலும் பெரும்பாலான மாணவர்கள் இடைவிலகினர். இடைவிலகியவர்கள் தோட்டங்களைவிட்டு கொழும்பு போன்ற புறநகர் பகுதிகளில் தொழில் புரிந்தனர். சிறுவர் தொழிலாளர்கள் (Child Labour) என்றதொரு பிரிவினரும் இதில் உருவாகினர். எஞ்சியோர் தோட்டத் தொழிற்துறையிலேயே பேர் பதிந்து கொண்ட புதிய தலைமுறைத் தொழிலாளர்களாயினர். மேற்குறிப்பிட்ட சூழ்நிலைகள் தோட்டத் தொழிற்துறை சார்ந்த தொழிலாளர்களது எண்ணிக்கையில் பெருமளவான வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் இடம் பெற்ற இவ்வாறான சமூக மாறுதல்களை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு இலக்கியப் படைப்புகள் வெளிவந்தன. குறிப்பாக மு. சிவலிங்கத்தின் ‘ஞானப்பிரவேசம்’, ‘விட்டில் பூச்சிகள்’, ‘மார்கழிப்பனி’, ‘நிலைமை கொஞ்சம் மாறும்போது’ போன்ற சிறுகதைகளை உள்ளடக்கிய ‘ஒரு விதைநெல்’ (2005), தெளிவத்தையின் சிறுகதைகள் மற்றும் பதுளை சேனாதிராஜாவின் ‘குதிரைகளும் பறக்கும்’ (2014) போன்ற சிறுகதைகளில் கொழும்புக்கு வேலைக்குச் சென்று அவ்வீடுகளில் பிரச்சினைக்கு உள்ளாகின்ற சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் பிரச்சினைகளும், வீட்டு வேலைக்குச் செல்கின்ற பெண்கள் பற்றிய பிரச்சினைகளும் பேசப்பட்டுள்ளன. புதிய தலைமுறை எழுத்தாளர்கள் இருபத்தோராம் நூற்றாண்டில் முதலாவது தசாப்த காலப்பகுதியில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியின் காரணமாக மலையக இலக்கியத்துக்கு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் சிலர் பங்களிப்புச் செய்யத் தொடங்கினர். நவீன இலக்கிய வாசிப்பு, புதிய இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய தேடல், உயர்கல்வித் தொடர்புகள் மற்றும் இக்காலப்பகுதியில் இயங்கிய சமூக அரசியல், இலக்கிய இயக்கச் செயற்பாடுகளின் உந்துதல் முதலிய காரணிகளால் இவர்கள் உலகளாவிய இலக்கிய படைப்புகளை வாசித்து தமது படைப்புத்தளத்தை உருவாக்க முயற்சித்தனர். குறிப்பாக மாரிமுத்து சிவகுமார், வே. தினகரன், சண்முகம் சிவகுமார், சு. தவச்செல்வன், சிவனு மனோஹரன், பிரமிளா செல்வராஜா, மு. கீர்த்தியன், செ.ஜெ. பபியான், வே. கிருஸ்ணபிரியன், எட்டியாந்தோட்டை கருணாகரன், லுனுகலை ஸ்ரீ, எஸ்தர் லோகநாதன் போன்றவர்கள் இக்காலப்பகுதியில் இயங்கிவரும் புதிய தலைமுறை எழுத்தாளர்களாவர். புதிய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துக்களில் பல்வேறு கோட்பாடுகளின் செல்வாக்கு காணப்படுகின்றன. குறிப்பாக மார்க்சியம், பெண்ணியம், பின்நவீனத்துவக் கோட்பாடுகளின் செல்வாக்கு இவர்களது எழுத்துக்களில் வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மலையக மக்களிடையே இடம்பெற்ற உலகமயம் மற்றும் தனியார் மயமாக்கல் பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட வாழ்க்கை முறைகளின் பிரதிபலிப்புகளை இவ்வெழுத்தாளர்களின் படைப்புகளில் காணமுடிகிறது. இப்படைப்பாளிகளின் படைப்புகள் நூலுருவில் பின்னர் வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. மலைச்சுவடுகள் (மாரிமுத்து சிவகுமார்), சிவப்பு டைனோசர்கள், டார்வினின் பூனைகள் (சு. தவச்செல்வன்), ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடாங்கி, மீன்களைத்தின்ற ஆறு (சிவனு மனோஹரன்), குதிரைகளும் பறக்கும், உயிருதிர்காலத்தின் இசை (பதுளை சேனாதிராஜா), பீலிக்கரை, பாக்குபட்டை (பிரமிளா செல்வராஜ்), மல்லியப்பூ சந்தி (திலகர்), நாளை வரும் மழை (மு. கீர்த்தியன்), உயிர்த்தெழச் சொல்லுங்கள் (செ.ஜெ. பபியான்), மோட்ச முழக்கம் (லுனுகலை ஸ்ரீ), அவமானப்பட்டவனின் இரவு (எட்டியாந்தோட்டை கருணாகரன்), வேரின் பிரசவங்கள், மூதன்னையின் பாடல் (கிருஸ்ண பிரியன்) முதலான படைப்புகள் குறிப்பிடத்தக்கவையாகும். புதிய தலைமுறை எழுத்தாளர்கள் இக்காலத்தில் மலையகத்தில் எழுதத் தொடங்கியிருந்தாலும் அறுபதுகள் தொடக்கம் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பதோடு அவர்களது படைப்புகளும் வெளிவந்துகொண்டிருந்தன. குறிப்பாக மு. சிவலிங்கம், தெளிவத்தை ஜோசப், மாத்தளை மலரன்பன், மல்லிகை சி. குமார், இரா. சடகோபன், அல் அஸீமத் ஆகியோர் தொடர்ந்தும் எழுதிவருகின்றனர். இவர்களது எழுத்துக்களில் தற்கால அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் செயற்பாடுகளைப் பற்றிய விமர்சனங்கள் அதிகம் காணப்படுகின்றன. மு. சிவலிங்கம் (ஒரு விதைநெல்), மல்லிகை சி. குமார் (வேடத்தனம்), மல்லியப்பு சந்தி திலகர் (மல்லியப்பூ சந்தி) ஆகியோரது சமகாலப் படைப்புகளில் தமது அரசியல் தலைமைகள் மீதான எதிர்ப்பு, தலைவர்களின் ஏமாற்றுத்தனங்கள் போன்ற விடயங்களை எள்ளலுடன் முன்வைக்கும் உத்திமுறைகளை காணலாம். மலையகத் தமிழர்களது வரலாற்று நிலைப்பட்ட எழுத்துகள் இரண்டாயிரமாம் ஆண்டுகளின் முதல் கால்நூற்றாண்டு எழுத்து முயற்சிகளில் குறிப்பிடத் தகுந்த புதிய விடயமாக இம்மக்களது வரலாற்று நிலைப்பட்ட எழுத்துக்களின் வரவைக் குறிப்பிடலாம். முன்னதாக எண்பதுகளில் சி.வி. வேலுப்பிள்ளை (நாடற்றவர் கதை), பீ.ஏ. காதர் (இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்) போன்றோர் மலையகத் தமிழர்களது வரலாற்றை எழுத ஆரம்பித்தனர். இதன் தொடர்ச்சியாக இரண்டாயிரமாம் ஆண்டின் இரண்டாவது தசாப்தத்தில் மலையகத் தமிழர்களது வரலாற்றையும் அதன் மூலங்களையும் தேடும் முயற்சி இடம்பெற்றது. குறிப்பாக கோப்பிக்கால மக்கள் வாழ்வியல் மற்றும் வரலாற்றை ‘கண்டிச் சீமையிலே’ என்ற நூலினூடாக இரா. சடகோபன் எழுதியுள்ளார். ‘மலையகத் தமிழர் வரலாறு’ என்று நேரடியாகவே சாரல்நாடன் எழுதியுள்ளார். மலையகத் தமிழர்களது முதலாவது நூல், முதல் பத்திரிகை எழுத்து, முதல் பெண் ஆளுமை, முதல் நாவல் எழுத்து போன்றவற்றை தேடி எழுதுகிறார் மு. நித்தியானந்தன். ‘தூரத்துப் பச்சை’ நாவலுக்குப் பின் மலையகத் தமிழர்களது வரலாற்றை புனைவாக்கியுள்ளனர் சிலர். மு. சிவலிங்கத்தின் ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை’ மற்றும் மாத்தளை சோமுவின் ‘கண்டிச் சீமை’ ஆகிய நாவல்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. எனினும் மாத்தளை சோமுவின் நாவல் மலையக மக்களது வரலாற்று எழுதுகைக்கு முரணாகவே அமைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. மேற்குறிப்பிட்ட வரலாற்றுநிலைப்பட்ட எழுத்துகள் புனைவு (பஞ்சம் பிழைக்க வந்த சீமை, கண்டிச்சீமை) அபுனைவு (கண்டிச்சீமையிலே, கூலித்தமிழ்) ஆகிய இருநிலைப்பட்டவையாக அமைகின்றமை கவனிக்கத்தக்கது. மலையக சமூகம் மற்றும் கலை இலக்கியம் தொடர்பான ஆய்வுத்துறை வளர்ச்சி மலையகம் குறித்த பல்வேறு வகைப்பட்ட ஆய்வுத்துறைகளின் வளர்ச்சி இரண்டாயிரமாம் ஆண்டுகளுக்குப் பின்னரே மிகத்துரிதமாக இடம்பெறுகிறது. மலையக இலக்கியத்துடன் தொடர்புபட்ட விமர்சனங்கள் மற்றும் ஆய்வுகள், சமூக அரசியல் ஆய்வுகள், இலக்கியங்கள் குறித்த ஆராய்ச்சிகள், பண்பாட்டுத் துறை ஆய்வுகள் என பல்வேறு வகையில் விரிந்தன. இவை தனிப்பட்ட ஆய்வுகள், நிறுவனம் சார்ந்த ஆராய்ச்சிகள் என இருநிலைப்பட்டன. மேற்குறிப்பிட்ட ஆய்வுகளை பல்கலைக்கழகங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பெரிதும் மேற்கொண்டிருந்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அந்தனி ஜீவா, சாரல்நாடன், க. அருணாசலம் போன்றோரால் ஆரம்பிக்கப்பட்ட மலையக இலக்கியம் பற்றிய ஆய்வுகள் சி.வி பற்றிய எழுத்துகள், நடேசய்யர் பற்றிய ஆய்வுகள் முதலியவற்றோடு மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள், மீனாட்சியம்மாள் பற்றிய அறிமுகம், வாய்மொழி இலக்கிய ஆய்வுகள் என்று தொடர்ந்தன. மலையக இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகளுடன் கூடிய விமர்சனங்களையும் இக்காலப்பகுதியில் இணைத்து மேற்கொண்டவராக லெனின் மதிவானம் விளங்குகிறார். ‘ஊற்றுக்களும் ஓட்டங்களும்’, ‘மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கி (2012)’, ‘மலையகம் தேசியம் சர்வதேசம் (2010)’ என்பவை மதிவானத்தின் குறிப்பிடத்தக்க நூல்களாகும். வ. செல்வராஜ் , ஜெ. சற்குருநாதன், மொழிவரதன் போன்றோரும் இலக்கிய மேடைகளில் ஆய்வுகளை மேற்கொண்டதோடு சில சஞ்சிகைகளிலும் விமர்சனங்களை எழுதி வருகின்றனர். இருபத்தோராம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் எழுதத் தொடங்கிய பெ. சரவணகுமார், சு. தவச்செல்வன், எம்.எம். ஜெயசீலன் ஆகியோரது எழுத்துகள் முன்னைய ஆய்வாளர்களிலிருந்து வேறுபட்ட தளங்களை நோக்கி விரிவடைவதை இக்காலத்தில் அவதானிக்க முடிகிறது. மலையக இலக்கிய ஆய்வுத்துறையில் இயங்கும் மேற்குறிப்பிட்டோரின் எழுத்துக்களைத் தவிர்த்து இலங்கையிலுள்ள தமிழ் பல்கலைக்கழகங்களில் பட்டக்கல்வி மாணவர்களின் ஆய்வேடுகள் மலையகக் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கூத்துக்கள் என்று பரந்து விரிந்த தளங்களிலும் தலைப்புகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்நிலைப் பட்டம் மற்றும் முதுநிலைப் பட்ட ஆய்வேடுகளில் இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் பெரும்பாலான ஆய்வுகள் நூல் வடிவம் பெறாமையாலும் வெளியிடப்படாமையாலும் அவை சமூக வாசிப்புக்குட்படுத்தப்படவில்லை. பல்கலைக்கழக புலமைநிலைப்பட்ட ஆய்வுகளில் குறிப்பாக மலையகக் கல்வித்துறை சார்ந்த பிரச்சினைகள் அதிகம் கையாளப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கல்விசார் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை நிறுவன மயப்படுத்தப்பட்ட கல்விசார் கல்விப் பிரச்சினைகளுக்கே முக்கியத்துவமளித்துள்ளன. மாறாக மலையக சமூகநிலைப் பிரச்சினைகளோ, மக்கள் பிரச்சினைகளோ முன்னிலைப்படுத்தப்பட்ட தன்மை மிக மிகக் குறைவு. பண்பாட்டுத்துறை ஆய்வுகள் மலையக மக்களிடம் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்த கலை வடிவங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் வளர்ச்சிபெற்று வடிவமாற்றம் பெற்றன. நாட்டார் பாடல், கும்மி, கோலாட்டம், ஒப்பாரி போன்ற வாய்மொழிப் பாடல் மற்றும் நடன வடிவங்களும் காமன்கூத்து, அர்ச்சுணன் தபசு, பொன்னர் சங்கர், பவளக்கொடி, காத்தவராயன் கூத்து, கெங்கையம்மன் கூத்து போன்ற கூத்து வடிவங்களும் காலமாற்றத்திற்கேற்பவும் மலையக புவியியல் அமைப்புக்கேற்பவும் வளர்ச்சி பெற்றிருந்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து இக்கலைவடிவங்கள் தொடர்பான ஆய்வுகள் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக காமன் கூத்து பற்றிய கண்ணோட்டங்கள் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படத் தொடங்கியன. சந்தனம் சத்தியநாதன், மாத்தளை வடிவேலன், அ. லெட்சுமணன், சோபனாதேவி, ஹரிஸ், பொன். பிரபாகரன் போன்றோரால் காமன் கூத்துப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்பண்பாட்டு நிலைப்பட்ட ஆய்வுகளில் பொன். பிரபாகரனின் ‘காமன்கூத்து ஓர் அரசியல் பொருண்மிய ஆய்வு’ என்ற நூலானது மலையகத் தமிழர்களது தேசிய கூத்தாக காமன் கூத்தை நிறுவும் முயற்சியாக அமைவதோடு மலையகத் தேசியத்தை நிறுவதற்கான அடிப்படை கூறுகளை காமன்கூத்து எவ்வாறு கொண்டிருக்கிறது என்பது பற்றியதுமாகும். மலையகப் பண்பாட்டுத்துறை ஆய்வுகளில் 1993ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வு நூல்கள் மிக முக்கியமானவை. ந. வேல்முருகு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ‘மலையக மக்களின் சமய நம்பிக்கைகளும் சடங்கு முறைகளும்’ என்ற ஆய்வு நூல் மலையக மக்களது சமய வழிபாட்டு நம்பிக்கைகள் அவர்களின் வாழ்க்கை மரபுகளுடன் ஒன்றிணைந்து காணப்படும் தன்மைகளை வெளிக்கொணர்ந்தது. தொடர்ச்சியாக இதே ஆண்டில் உதயம் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்து நிலையும்’ என்ற ஆய்வுத்தொகுதி பண்பாட்டுத்துறை குறித்த புதிய திசைவெளிகளை காண்பிப்பதாய் அமைந்தது. குறிப்பாக பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்வாய்வுகள் ஒன்பது ஆய்வாளர்களின் பதினொரு வெவ்வேறு கலை மற்றும் பண்பாடு குறித்த தேடலாகவும் பதிவுகளாகவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. முடிவுரை மலையகத் தமிழர்களது இருநூறு வருட வரலாறானது கோப்பிக் காலம் முதல் இன்றுவரை (1823 – 2023) கணிக்கப்பட்டு ஒரு காலக்கணக்கெடுப்பு இக்கட்டுரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்துச் சமூக நிலையையும் அச்சமூக நிலைமைகளை அக்காலகட்டத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்கள் எவ்வாறு பிரதிபலித்து வந்துள்ளன என்பதையும் இக்கட்டுரை மதிப்பீடும் செய்துள்ளது. இம்மதிப்பீட்டில் முடிவுரையாக சில கருத்துகளை முன்வைக்க வேண்டியுள்ளது. ஆங்கிலத் துரைமாரின் எழுத்துக்களிலிருந்தே மலையக எழுத்துகள் தொடக்கம் பெற்றுள்ளமையை இத்தேடலின் வழியாக உறுதிசெய்துகொள்ள முடிகிறது. குறிப்பாக கோப்பிக் கால மலையகத் தமிழர் சமூகத்தின் நிலைமைகளை வெளிப்படுத்தும் ஆவணங்களாக துரைமாரின் எழுத்துகளே நமக்கு கிடைக்கின்றன. இரண்டாவதாக, மலையகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கமாக சேர்ந்து இயங்கத் தொடங்கிய காலத்திலேயே அவர்கள் மத்தியில் இலக்கிய உருவாக்கமும் இடம்பெறத் தொடங்கிவிட்டன. இன்று வரையிலும் கூட மலையகத் தமிழர்களது பிரச்சினைகளை அல்லது மக்கள் இலக்கியப் பணிகளை மேற்கொண்டதில் அதிக பங்கு மலையகத் தொழிற்சங்கவாதிகளுக்கே உண்டு. மலையக இலக்கியத்தின் செழுமையான பக்கங்களை வளர்த்தெடுத்தவர்கள் தொழிற்சங்கவாதிகளாகவோ அல்லது அதனுடன் தொடர்புபட்டவர்களாகவே அமைகின்றனர். மலையக மக்கள் வரலாறும், தொழிற்சங்க அரசியல் வரலாறும், இலக்கிய வரலாறும் ஒன்றாகவே பயணிக்கின்றன. மலையக அரசியலின் தொடக்கத்தை இருநிலைப்பட்டதாகவே அறிய முடிகிறது. தொழிற்சங்க உருவாக்கத்துடன் கூடிய மக்கள் அரசியல் ஒரு தொடக்கமென்றால், இந்திய நலன்பேணும் முதலாளித்துவ நலன் சார்ந்த அரசியல் மற்றொரு தொடக்கம். முதலாவது தொடக்கம் இடையிலேயே முறியடிக்கப்பட்டு இரண்டாவது அரசியல் தளம் மேலோங்கி வந்திருந்தாலும் இடதுசாரி பாரம்பரியத்துடன் கூடிய மக்கள் அரசியல் ஒவ்வொரு காலத்திலும் செயற்பட்டே வந்துள்ளது. அது இலக்கியத்திலும் பேசப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மலையக அரசியலின் வரலாற்றுப் போக்கில் சில இடங்களில் ஏற்பட்ட உடைவுகளே அரசியல் ரீதியாக தீர்க்கமான முடிவுகளை எட்ட முடியாமைக்கான காரணமாகவும் அமைந்துள்ளன. இரண்டாயிரத்துக்கு பின்னரான சமூக மாற்றங்கள் சடுதியானவை. இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் காலாண்டை எட்டியிருக்கும் இருபத்திரண்டு ஆண்டுகளில் மலைய இலக்கியத் துறையில் பன்முகத்தன்மை கொண்ட படைப்புகள், ஆய்வுகள் வெளிவந்திருந்தாலும் அவை குறித்து இங்கு விரிவாக நோக்கப்படவில்லை. குறிப்பாக இக்காலத்தில் மலையக கல்வித்துறை வளர்ச்சியுடன் இணைந்து ஆய்வுத்துறை வளர்ச்சிபெற்றமை விசேடத்துவ அம்சமாக கருதமுடிகிறது. இருநூறு வருடகால மலையக சமூகமும் இலக்கியமும் பற்றிய இக்காலக்கணக்கெடுப்பு ஒரு முன்னோடி முயற்சியாகவே அமைகிறது. இம்மதிப்பீட்டினை மேலும் விரிவுபடுத்தி நோக்கவும் இடமுண்டு. சான்றாதாரங்கள் சடகோபன் இரா (2014), கண்டிச் சீமையிலே, கோப்பி கால வரலாறு (1823-1893) வீரகேசரி வெளியீடு. ஜெயவர்த்தனா. கு. (2009), இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம், தமிழில் க. சண்முகலிங்கம், குமரன் புத்தக இல்லம். சாரல் நாடன் (2011), மலையகத் தமிழர் வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். சிவராஜா அம்பலவாணர் (1997), இலங்கை வாழ் (இந்திய வம்சாவளி) மலையகத் தமிழரின் வரலாற்றின் ஆரம்பம் பற்றிய சில குறிப்புகள். மலையக தமிழாராய்ச்சி மாநாட்டு மலர். வேலுப்பிள்ளை சி.வி (1983), மலைநாட்டு மக்கள் பாடல்கள், கலைஞன் பதிப்பகம். நித்தியானந்தன். மு. (2014), கூலித்தமிழ், க்ரியா. மோகன்ராஜ். க. (2014) இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், ஈழ ஆய்வு நிறுவனம். சாரல் நாடன். (2014), இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள், குமரன் புத்தக இல்லம். ஜெயவர்த்தனா. குமாரி. (2011), இலங்கையின் இனவர்க்க முரண்பாடு, குமரன் புத்தக இல்லம். நல்லம்மா (1928), மகளிரும் வாக்குரிமையும், இலங்கை இந்தியன் பத்திரிகைக் கட்டுரைகள், The Ceylon Indian. மீனாட்சியம்மாள், கோ.ந. (1940), இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை. கணேஷ் பிரஸ். நடேசய்யர். கோ. (2017), இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம், மீள்பதிப்பு குமரன் புத்தக இல்லம். நடேசய்யர். கோ. (1939), தொழிலாளர் சட்ட புஸ்தகம், கணேஷ் பிரஸ். லெனின் மதிவானம் (2012), ஊற்றுக்களும் ஓட்டங்களும், பாக்கியா பதிப்பகம். சாரல் நாடன் (2013), இலங்கைத் தமிழ்ச் சுடர் மணிகள், சி.வி. வேலுப்பிள்ளை, குமரன் புத்தக இல்லம். அந்தனி ஜீவா (2005), மலையகத் தொழிற்சங்க வரலாறு, மலையக வெளியீட்டகம். தவச்செல்வன். சு. (2016), கொலைச்சிந்தும் கலகக்குரலும், தாயகம் சஞ்சிகை. சாரல் நாடன் (2015), மலையக விடிவெள்ளி கோ.ந. மீனாட்சியம்மாள், குமரன் புத்தக இல்லம். முத்துலிங்கம். பெ. (2012), தொகுப்பாசிரியர், மலையக முச்சந்தி இலக்கியம், பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், கயல்கவின் வெளியீடு. தவச்செல்வன். சு. (2019), புனைகதையும் சமூகமும், மழை வெளியீடு. சிவானந்தன். அரு. (2020), சென்று வருகிறேன் ஜென்ம பூமியே, பாக்யா பதிப்பகம். பன்னீர் செல்வம், சி. (2006), ஒரு சாலையின் சரிதம், மக்கள் கண்காணிப்பகம், தமிழ்நாடு. கந்தையா. மு.சி. (2015), சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள், விடியல் பதிப்பகம். தோழர் ஓ.ஏ. இராமையாவின் நிழலும் நிஜமும், (2018), தோழர் ஓ.ஏ. இராமையா ஞாபகார்த்த மன்றம். மலரன்பன் (1989), கோடிச்சேலை. மலரன்பன் (2008), பிள்ளையார் சுழி, எஸ். கொடகே சகோதரர்கள். முரளிதரன். சு. (1986), தியாக யந்திரங்கள், மலையக வெளியீட்டகம். முரளிதரன். சு. (1988), கூடைக்குள் நேசம், மலையக வெளியீட்டகம். முரளிதரன். சு. (2001) தீவகத்து ஊமைகள், மலையக வெளியீட்டகம். தீர்த்தக்கரை கதைகள் (1995), நந்தலாலா வெளியீடு, அன்ன பதிப்பு. அருணாசலம். க. (1999), மலையகத் தமிழ் இலக்கியம், தென்றல் பப்ளிகேசன். சாந்திகுமார். எல். (2022), காலமும் மனிதர்களும். சாரல்நாடன் (2022), வானம் சிவந்த நாட்கள், குமரன் வெளியீடு. செவ்வொளி. (2016) மலையகத்தின் சமகால இலக்கிய பண்பாடு சார்ந்த சிந்தனை, ஆய்வரங்க சிறப்பு மலர், சென்.ஜோசப் கல்லூரி மஸ்கெலியா. https://ezhunaonline.com/compilation/200-years-of-literary-journey-of-up-country-part-3/
-
Head Injury - தலைக்காயம் - பொது மக்களுக்கான ஒரு முக்கியமான மற்றும் அவசியமான விழிப்புணர்வு.
- யாழில் முதியவர் உயிர்மாய்ப்பு
கவைலக்கு உரிய விடையமும், கவனிக்கபட வேண்டிய விடையமும் .- முன்னாள் போராளியின் வெற்றிப்பயணம் | இப்படித்தான் வாழ வேண்டும் | Orvasanai | IBC
- ஆபத்தான தலைவலிகள் - எப்படி கண்டுபிடிப்பது??DANGEROUS HEADACHES - HOW TO IDENTIFY IT?? Dr Prabhu
- நாவினால் சுட்ட வடு( சிறுகதை)
நாவினால் சுட்ட வடு( சிறுகதை) அன்று வெளியூரில் இருக்கும் அவரது நண்பர் ஒருவர் அவரைப்பார்க்க வருவதாகப்போனில் சொன்னார். இவரும் சரி வாருங்கள் பஸ்விட்டு இறங்கியபின் போன் செய்யுங்கள் என்று சொன்னார். அவரும் சரி இன்று மாலை வருவேன் வந்து இறங்கிவிட்டுப் போன் செய்கிறேன் என்று சொன்னார். அவரும் சொன்னதைப்போலவே அன்றுமாலை வந்து பஸ்சில் இறங்கியபின் இவருக்குப்போன் செய்தார். அப்போது இவர் சொன்னார் போனில் லொக்கேசன் அனுப்பியிருப்பதாகவும் அதை அருகில் இருக்கும் ஆட்டோகாராரிடம் சொல்லி ஆட்டோபிடித்து வந்து சேருமாரும் இவர் சொல்ல அவர் சரி என்று சொல்லி விட்டு போனை கட்செய்தார்சிறிதுநேரத்தில் அவர் மீண்டும்தொடர்புகொண்டு “ அவன் 300 ரூ கேட்கிறான். அது அதிகம் பேசாமல் நீ உன் பைக்கை எடுத்துக்கொண்டு வந்து என்னைக் கூட்டிட்டுப்போ” என்றார்அதற்கு இவர் சொன்னார். ”அது சிரமம் நீ பேசாமல் அவர் கேட்டதொகையை தருகிறேன் என்று சொல்லி அந்த ஆட்டோவில் ஏறிவா நீ இங்கு வந்ததும் பணத்தை நான் தருகிறேன்” என்று சொன்னார் அதற்கு அவரும் ”சரி அதுபோல் செய்கிறேன்” என்றார். ஆனால் அவர் சொல்லி 45 நிமிடம் ஆகியும் அவர் வந்து சேரவில்லை. எனவே யோசித்துவிட்டு மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர் “ நான் நடந்து வந்துகொண்டிருக்கிறேன் நீ கொடுத்தாலும் காசு தான் நான் கொடுத்தாலும் காசுதான் ஆனால் அவன் கேட்பது அநியாயம் அதனால் நடந்து வந்துகொண்டிருக்கிறேன் பக்கத்தில் வந்துவிட்டேன் இங்கேயாவது வந்து அழைத்துப்போ” என்று சற்று கோபத்துடன் சொன்னார் அதைக்கேட்டு இவருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. சரி நடந்து போய் அழைத்து வருவோம் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு அழைக்கப் போனார் வீட்டுக்குக்கொஞ்சதூரத்தில் அவர் பெரிய பையைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு சற்றே நொண்டியபடி நடந்து வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் இவர் சொன்னார்” வீணாக ஏன் சிரமம் ஆட்டோ பிடித்து வரவேண்டியதுதானே? “ என்றார் அதற்கு அவர் இவரைத்திட்டத்தொடங்கிவிட்டார். ”சரியான கஞ்சன் நீ காசுசெலவாகும் என்று அத்தனை சொல்லியும் திரும்ப நடந்தே வந்திருக்கிறாய் மனுசனா நீ இந்தா இந்தப்பையை பிடி “ என்றார் இவரோ”கொஞ்சம் சிரமம் பார்க்காமல் நீங்களே உங்கள்பையைக்கொண்டுவாங்க” என்றதும் அவர் கோபம் உச்சமடைந்தது. “உன்னப்போய்ப்பார்க்கவந்தேனே அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு ஜமுக்காளத்தில் வடிகட்டிய கஞ்சனா இருக்க மனுசனா நீ மனுசன் கஸ்டத்தைப்புரிஞ்சிக்கமாட்டியா” என திட்டத் தொடங்கினார். அப்போது இவர் சொன்னார் ”வாங்க வீட்டுலபோய் பேசிக்கலாம் திட்டுறதை வீட்டுல வந்து திட்டுங்க என்றார் அழமாட்டாத குறையாக அவர் கோபம் தனியவில்லை கோபத்துடனே வீட்டுக்கு வந்து உள்ளே வந்தவுடன் இவரின் மனைவியிடம் கோபத்தோடு சொன்னார் ”இந்தக் கஞ்சனுடன் எப்படிம்மா குடித்தனம் நடத்துற” என்று கோபத்துடன் கத்தினார் அப்போது அவர் மனைவிசொன்னாள் “ அது கிடக்கட்டுமுங்க அண்ணா இந்தாங்க தண்ணி சாப்பிடுங்க “ என்று சொல்லி தண்ணீர் கொடுத்தாள் இவர் அதை கையில்வாங்கிக்கொண்டு மீண்டும் ஏதோ சொல்லதொடங்கியவுடன் அவள் சொன்னாள் “ ””உங்களுக்கு விசயம்தெரியுமா நேற்றுத்தான் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ச்சார்ஜ் ஆகி வந்தார் அவர் பைக் கார் எதையும் ஓட்டக்கூடாது அதுமட்டுமல்ல பாத் ரூமில்கூட கதவைப்பூட்டக்கூடாது தனியாக எங்கும் போககூடாது”” என்றவுடன் ”என்னம்மா சொல்ற அதிர்ச்சியா இருக்கு என்ன ஆச்சு அவருக்கு?”” என்று கண்கலங்ககேட்டபோது அவள் சொல்லத்தொடங்கினாள் “போனமாசம் இன்னேரம் எங்க இருந்தோம் தெரியுமா?” என நடந்ததைச் சொல்லத் தொடங்கினாள் அந்தச் சிறப்பு மருத்துவத்திற்காகப் பெயர்பெற்ற அந்த மருத்துவமனையின் நோயாளிகளின் உடனிருக்கும் உறவினர்கள் காத்திருக்கும் பகுதியில் அவள் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள். அவளின் கணவன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். தன்னுடைய இஸ்டதெய்வம் குலதெய்வம் இன்னும் கண்ணில் கண்ட மற்றும் தோன்றிய தெய்வங்களை யெல்லாம் வேண்டிக்கொண்டு கவலையோடு காத்திருந்தாள். அவளின் கணவன் நிலை மிகவும் மோசமாக இருந்தது இன்னும் என்ன வியாதி என்று கண்டுபிடிக்கப்படவில்லைஇது ஆரம்பித்து ஒரு 10 நாட்கள் இருக்கும். அன்றய தினம் பணிக்குப்போய்விட்டு வீடு திரும்பிய அவர் வரவேற்ப ரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டி ருந்தார். இவள் சமையல் அறையில் சமைத்தபடி பேசிக் கொண்டிருந்தாள். பேசிக்கொண்டிருந்த அவரிடம் இருந்து கொஞ்சநேரமாகச் சப்தம் எதுவும் வரவில்லை. ”பேசிக்கொண்டே தூங்கிவிட்டார் போல” என்று நினத்துக்கொண்டு சமையலைத் தொடர்ந்தவள் ஏதோ ஒரு வேலையாக வரவேற்பரைக்கு வர அவர் சோபாவில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். அவர் கிடந்த கோலம் ஏதோ வித்யாசமாகத்தெரிய போய் தூக்கிப் பார்த்தபோது அவருக்கு சுயநினைவு இல்லை உடனே இவளுக்கு படபடப்பாகி என்ன செய்வது என்று தோன்றாமல் அழ ஆரம்பித்தாள். வீட்டிலிவர்கள் இருவர் மட்டுமே இருக்க என்ன செய்வதென்று தெரியவில்லை உடனே அவரது கைப்பேசியை எடுத்து கடைசியாகப் பேசிய நண்பரை அழைத்தாள் பதட்டத்டோடு” அண்ணா இவர் மயங்கிவிழுந்துட்டார் என்னன்னு தெரியல உடனே வாங்க “ என்று திக்கித்திணறிச்சொல்லி முடிக்குமுன் அழுகை முந்திக்கொண்டது ஆனால் அவர் உடனே ஏதோ ஆபத்து என்று உணர்ந்து தன் நண்பரையும் வரச்சொல்லிவிட்டு அங்கு விரைந்தார் சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்து சூழ்நிலை பார்த்துவிட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லிவிட்டு அவர் முகத்தில் நீர்தெளித்து அவரை நினைவுக்குக் கொண்டுவர முயன்றார்கள். ஆனால் நினைவு திரும்ப வில்லை. அதற்குள் ஆம்புலன்ஸ் வர அவரை இரண்டாவது மாடியில் இருந்து ஒரு சேரில் அமரவைத்து கீழே கொண்டு வந்து பின் ஆம்புலன்ஸில் ஏற்றினர். அவர்கள் பல்ஸ் சோதனை செய்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்கள். அந்த மருத்துவமனை ஒரு அரசு மருத்துவமனை. அங்கே கொண்டுசென்றதும் அவருக்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொஞ்சநேரத்தில் அவருக்கு நினைவு திரும்பியது ஆனால் அவருக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை. எனவே அங்கு அனுமதிக்கப்பட்டு கண் காணிப்பில் வைக்கப்பட்டார். அதற்குள் இவரை அறிந்தவர்கள் நண்பர்கள் என தகவல் பறந்து பெரும் கூட்டம் அங்கே கூடிவிட்டது. வந்தவர்கள் எல்லாம் தங்களுக்குள் இவரைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள் ” நல்ல மனுசன் எல்லோருக்குக் உதவ ஓடிவருவாரு இவருக்குப்போய் இப்படியா” என்றும் “ ஒரு கெட்டபழக்கமும் இல்ல சிகிரெட் தண்ணி கிண்ணி எதுவும் தொடமாட்டாரு அதுவுமில்லாம மலையேறும் பயணம் ( ட்ரெக்கிங்) அடிக்கடி போறவரு அதுனால ஹார்ட் பிராபளம் இருக்குக்காது கொஞ்சவயசு வேற என்னதான் ஆச்சுன்னு தெரிய்லையே” என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.அதற்குள் மருத்துவமனை ஊழியர்கள் ”அவர் நல்லாயிட்டார் ஒன்னும் பிரச்சனை யில்லை தொந்தரவு செய்யாமல் போங்க” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். நேரம் இரவு 8 மணிக்கு மேலாக கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்தது. 24 மணிநேரக் கண்காணிப் பில் அவர் வைக்கப்பட்டார். அன்று இரவு அவருக்குக் கடுமையான காய்ச்சல். அதனால் அதற்கு மருந்துகள் கொடுத்து கவனித்துகொண்டிருந்தார்கள். காய்ச்சல் குறையவில்லை. மறுநாள் இரத்தம் யூரின் மற்றும் எக்ஸ்ரே எல்லா டெஸ்ட்டுகளுமெடுத்தபின்னே மருத்துவர் இவளை அழைத்துச்சொன்னார் “ அவருக்கு ஹீமோகுளோபீன் இறங்கிட்டே இருக்கு காரணம் தெரியவில்லை அதனால அவரை மேல் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பப்போகிறோம் தயாராகிக்கொள்ளுங்கள் “ என்று அவளிடம் சொன்னார் அவளுக்கு படப்படப்பாக வந்தது . கூட வந்திருந்த நண்பர்களிடம் பேசக்கூட முடியாமல் அழத் தொடங்கினாள். அதற்குள் அவள் பெண் நண்பர்கள் வந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். அவரை சிறப்பு மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லப்போகின்றார்கள் என்று தெரிந்தவுடன் அதில் ஒரு பெண் இவளிடம் சொன்னாள்”” நீயும் கூடப்போகனுமே உனக்கு வேண்டிய துணிமணி பணம் வீட்டில் போய் எடுத்து வந்து தயாராக இருக்கனுமே வா வீட்டுக்குப்போய்ட்டு வரலாம்” என்று சொல்லி இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றாள் வீட்டுக்குபோய் வேண்டிய வற்றை எடுத்துக்கொண்டு சாமி அறையில் போய் காசு முடிந்துபோட்டு வேண்டிக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தாள். அங்கு சிறப்பு மருத்துவமனைக்குப்போக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தகவல் அறிந்து அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. ஆம்புலன்சில் அவருடன் இவள் மற்றும் நண்பர்கள் இருவர் ஏறிக்கொள்ள சிறப்பு மருத்துவமனை விரைந்தது அங்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால் அங்கு அனைத்தும் தயார் நிலையில் இருந்ததன அங்கு போய் சேர்ந்ததும் அவர் சிறப்பு கண்காணிப்பு பிரிவு( ஐ.சி.யூ)வில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிகிச்சை தொடங்கியது. ஆனால் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை சிறப்புமருத்துவமனையில் பலவிதமான மருத்துவப்பரி சோதனைகள் நடத்தப் பட்டன.ஆனாலும் வியாதி என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஹீமோ குளோபின் மாத்திரம் குறைந்து கொண்டிருந்தது மீண்டும் அவருக்கு மயக்கம் வந்து போய்க் கொண்டி ருந்தது மருத்துவர்களுக்கே ஒரு சவாலாக விளங்கியது. என்ன வென்று கண்டுபிடிக்கப் படவில்லை.இவளுக்கு அழுது அழுது கண்கள் வீங்கிவிட்டது. கூட இருந்தவர்கள் வற்புறுத்திச் சாப்பிடச்சொன்னார்கள். அவள் மனசு ஏற்காததால் முடியவில்லை அப்போது கூட இருந்தவர்கள் சொன்னார்கள்.” அவருக்குப்பிரச்சனை நீயும் போய் ப் படுப்பது என்று முடிவு செஞ்சுட்டயா ஏதாவது பேருக்காவது சாப்பிடு ”” என்று திரவ உணவாக பழரசம் போன்றவற்றை வற்புருத்திக்கொடுத்துக் குடிக்கச்சொன்னார்கள். கொஞ்சம் சாப்பிட்டாள். இப்போதும் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை பிரச்சனை கண்டு பிடிக்கப் படவில்லை. இதற்கு நடுவே இவரை அனுப்பியமருத்துவமனையில் இவரைப் போலவே அறிகுறியுடன் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவருக்கும் இதே பிரச்சனை. மயக்கம் ஹீமோ குளோபிபின் குறைவு என்ற பிரச்சனைகளுடன் . அது மருத்துவர்களை யோசிக்கவைத்தது. அவருடைய வீடு ஏற்கனவே வந்தவரின் வீட்டின் பின்புறம் இருந்தது. ஒரே பிரச்சனையில் இருவர் ஒரே இடத்திலிருந்து. இது மருத்துவர்களை யோசிக்கவைத்தது. இவரும் சிறப்பு சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சிறப்புமருத்துவமனையிலும் இது பிரச்சனையை உருவாக்கியது. அங்கு மருத்துவ நிபுனர்கள் கூடி ஆராய்ச்சி செய்தனர். இதற்குஇடையில் முதலில் வந்த நோயளிக்கு நிலைமை மிக மோசமாக அவர் சிறப்பு தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார் அதற்குள் அடுத்த திடுக்கிடும்தகவல். அதே பிரச்சனை யுடன் மூன்றாவதாக ஒருவர் மருத்து வமனைக்கு வந்தவுடன் பிரச்சனை பெரிதாகியது அப்போது அது தனிமனிதனின் பிரச்சனையில் இருந்து சமூகப் பிரச்சனை ஆகியது.இந்தத்தகவல் பரவ அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் பீதிக்குள்ளானார்கள் எல்லோர் மனதிலும் கவலை அப்பியது. இன்னும் யாருக்குப்பிரச்சனை வரப்போகிறதோ என்று பரபரப்பாகியது. மருத்துவமனைகள் எச்சரிக்கை செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டன. தகவல் சிறப்பு மருத்துவமனைக்கும் பறந்தது. அங்கும் இதைப்போல ஓரிரு நோயாளிகள் வந்திருந்தார்கள்இது அனைவரையும் கலக்கமடையச்செய்தது இப்பொழுது இவள் மிகவும் பீதிக்குள்ளானாள். அதி தீவிர கண்காணிப்புசிகிச்சைப் பிரிவுக்கு அவள் கணவன் மாற்றப்பட்டதும் மேலும் இரு நோயாளிகள் அதே பிரச்சனையுடன் வந்ததும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்போதுதான் அவள் தெய்வங்களை வேண்டத்தொடங்கினாள். இதற்கு நடுவே இளம் மருத்துவர் ஒருவர் வந்து நோயாளியைப் பார்த்து விட்டுச்சொன்னார். ”இது ஒரு விதப்பூச்சிக்கடியினால் வரும் பிரச்சனை,எனவே அந்தக்கோணத்தில் சிகிச்சையை தொடங்கலாம் என்று அறிவுருத்தினார். பின் முதலில் வந்த நோயாளியிடம் ”சமீபத்தில் பூச்சி கடி ஏதாவது ஏற்பட்டதா ?”எனக் கேட்டார் அப்போது அவர் நினைவுக்கு வரவில்லை எதுவும் . அதனால் அவரின் மனைவி வர வழைக் கப்பட்டுவிசாரித்தார். “ சமீபத்தில் உங்கள் கணவரைப் பூச்சிகள் ஏதும் கடித்ததாகச்சொன்னாரா? “ எனக்கேட்கஅவள் யோசித்துவிட்டுச்சொன்னாள் “ அவரது கம்புக்கூட்டில் சின்னதாக ஒரு பூச்சி கடித்த தடம் அவர் காண்பித்தார் ஒருநாள் லேசாகச்சிவந்து வீங்கியிருந்தது ஆனால்மறுநாள் சரியாகிவிட்டது” என்றாள். அதேபோல் மற்ற இரண்டுநோயாளிகளும் விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கும் இதே அனுபவங்கள் இருந்தன. ஒருவருக்கு தொடையிலும் இன்னொருவருக்குக் கழுத்துப்பகுதியிலும் கடித்ததாக அறியப்பட்டது இந்தத்தகவல்கள் பரிசீலிக்கப்பட்டுபின் பூச்சிக்கடி நிபுனர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டபோது பல தகவல்கள் வந்தன. “ இது ஒருவகைப்பூச்சிக்கடியால் வருவது அந்தப்பூச்சிக்கு லெப்டோரொம்பீடியம் என்றுபெயர் அதைசிக்கர் என்றும் சொல்லுவார்கள்(Leptorombidium also known as chigger) மருத்துவ உலகில், என்றும் அந்தப்பூச்சி எலிவளைகளுக்கு அருகே கூடு கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் என்றும் பெரும்பாலும் அது லார்வா நிலையில் இருந்து வளரும்போது எலிகளைத்தான் தாக்கும் சில நேரங்களில் எலிகள் இல்லாத சூழ்நிலையில் இடம் பெயர்ந்து மனிதனையும் கடிக்கும். இது மனிதர்களைக் கடிக்கும்போது குறிப்பிட்ட சில இடங்களில் தான் கடிக்கும் அதவாது கைஅக்குள் தொடைஇணையுமிடம் கழுத்துப்பகுதி போன்ற இடங்களில் கடித்து உள்ளே சென்று இரத்தத்தில்கலந்து பின் ஹீமோகுளோபினை சாப்பிட ஆரம்பிக்கும். “ என்று தெரியவந்தது ””மேலும் சொல்லத்தொடங்கினாள் ””இப்போது பிரச்சனை தெரிந்துவிட்டது. மருத்துவம்? அதுவும் பலவித கலந்தாய்வுகளுக்குப்பின் கிடைத்தது மருந்துகள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்தது. கிட்டத்தட்ட 21 நாட்கள் சிகிச்சைக்குப்பின் சரியாகத் தொடங்கியது. நல்ல வேளையாக இது பரவும் நோய் அல்ல என்பது நிம்மதி. மேலும் லார்வா நிலை கடந்து பூச்சி ஆகிவிட்டால் அது இவ்வளவு பாதிப்பைத்தராது என்றும்,ஆராய்ச்சிகள் சொன்ன தகவல் நிம்மதி அளித்தது இப்போது ஓரளவு சகஜ நிலைக்குத்திரும்பினார்கள் மூன்று நோயாளிகளும். அதற்கிடையில் அந்த பூச்சிகளை ஒழிக்கும்மருந்துகள் வரவழைக்கப்பட்டு அந்தப்பகுதிகளில் தெளிக்கப்பட்டன.அதன் பின் யாரும் பாதிக்கப்படவில்லை. இது பெரும்பாலும் மழைக் காலங்களில் வருவதாக அறியப்பட்டது ஓரளவு சரியானபின்னே வீட்டுக்கு அனுப்பினார்கள் அப்போது சொன்னதுதான்இவை 1) தொடர்ந்து மருந்துகள் சாப்பிடவேண்டும்2) தனியாகப்பயணம் கூடாது 3)வண்டிகள் எதுவும் ஓட்டக்கூடாது 4) பாத் ரூமில்கூட தாப்பா போடக்கூடாது 5)மற்றவர் பார்வையிலேயே இருக்க வேண்டும். பொழைச்சது பெரும்பாடாப்போச்சுது ஏதோ வேண்டிக்கொண்ட சாமிகள் மருத்துவர் வடிவில் வந்துகாப்பாற்றின”” என்றாள் இதைக்கேட்டவுடன் வந்தவர் கண்களில் நீர் வழியத்தொடங்கியது. “வெவரம் தெரியாம நான் கண்டபடி பேசிட்டேனே என்னை மன்னிப்பாயா” என்று கைகளைப்பிடித்துக்கொண்டு அழுதேவிட்டார் அப்போது இவர் சொன்னார். “ பரவாயில்லை நடந்தது அறியாமல்தானே பேசினீர்கள் தவறில்லை” ‘’ என்ன இருந்தாலும் நான் அப்படிப்பேசி இருக்கக்கூடாது “என்று சொல்லும்போது அவர் கண்களில் இருந்து வழிந்தநீர் இவர் கைகளை நனைத்தது அ.முத்துவிஜயன் All reaction- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
நாட்டின் மக்களின் அன்றாட பொருளாதாரத்தையும் நாங்கள் நினைத்துக் கொள்ள வேணுமல்லவா...போற இடமெல்லாம் எங்களுக்கு சுமுகமாகத் தான் எல்லாம் இருக்கும் என்றும் என்று இல்லைத் தானே..அதே நேரம் அவர்கள் நடை முறைப்படுத்த நினைத்தாலும் சந்தர்ப்பம் சூழ் நிலை எப்படியோ தெரியாது தானே.என் மனதுக்கு தோன்றியது.- Tamil baker Tharshan Selvarajah..
Tamil baker Tharshan Selvarajah, who arrived in France from Sri Lanka in 2006, will be the first Eelam Tamil to carry the Olympic torch at this year’s relay. Selvarajah will be one of 10,000 people to carry the torch. Speaking to France 24, Selvarajah said the decision came as a “good surprise” and said he was “very lucky” to be selected. The torch will be travelling through over 400 French towns and territories including Guadeloupe, Martinique, New Caledonia and Réunion before the opening ceremony of the Paris Olympic Games on 26 July. Last year, Selvarajah won the title of having the best baguette in Paris. Selvarajah beat off 176 other baguettes and bagged a €4,000 prize. He is currently delivering the bread to the presidential palace. Credit @tamilguardian Storiesoftm ஏற்கனவே பதியபட்டு இருந்தால் வெட்டிக் கொள்ளலாம்.. ✂️ All reactio- நான் வாசித்த சிறுகதை ANAS TAMIL MEDIA
- உலகில் அதிக நேரம் உறங்கும் மக்களை கொண்ட நாடுகள் பட்டியலில் இலங்கை!
வீரகேசரி, தினக்குரல் எல்லாம் எங்க இருந்து இந்த கணக்கெடுப்பு எடுக்கீனம்..✍️.🤭- OTP - A Tamil Comedy Movie | Trailer | Sri Lankan Tamil | Pakidiya Kathaippam Productions 2023
- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
வயது போனால் இப்படித் தான் கற்பனைகள் வரும்.😆- தொழிலாளர்களை அடித்து துன்புறுத்திய தோட்ட அதிகாரி.
ம்ம்ம்..தமண்ணாவின் நிழச்சியில் ஏற்பட்ட பிரச்சனையின் போது மனோ கணேசனது முகப் புத்தகத்தில் நிறைய மக்கள் பல்வேறு பட்ட கருத்துக்களை பகிர்ந்திருந்தார்கள்..அதில் ஒரு கருத்துக்கு சிரிப்பு குறியீடு போட்டு இருந்தார்..அதற்கும் மக்களில் சிலர் நீங்கள் ஒரு பொறு;ப்பான பதவியிலிருந்து கொண்டு இப்படி செய்யலாமா...என்று கேட்டதற்கு தற்போதைய காலத்தில் சிரித்து விட்டு கடந்து செல்வதை விட வேறு வழி இல்லை என்ற மாதிரி பதில் அமைந்திருந்தது..எல்லோருமே நேரத்திற்கு தகுந்த மாதிரி தான்..- சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கைப் பாரம்பரிய உணவை சமைத்து அசத்திய இலங்கைத் தமிழர்!!
பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சாதம், தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து வழங்கியுள்ளார். இலங்கையின் பாரம்பரிய உணவு எனினும், “இதற்கு முன் ஏன் இலங்கை உணவை வழங்கவில்லை” என நடுவர்கள் கேள்வியெழுப்பியிருந்ததுடன் அதற்கு பதிலளித்து பேசிய Darrsh தனது இலங்கை பாரம்பரியத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தினார். எனினும், அவரை ஊக்கப்படுத்திய நடுவர்கள் MasterChef Australia நிகழ்ச்சி தமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க உதவுவதாக தெரிவித்திருந்தனர். தனது தந்தை மற்றும் பாட்டியின் சமையலில் Darrsh ஈர்க்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, இலங்கை உணவுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ‘MasterChef Australia’ பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது நபர் Darrsh ஆவார். முன்னதாக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா அவுஸ்திரேலிய சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறை சமைத்ததுடன் நடுவர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.vavuniyanet.com/news/383651/சர்வதேச-அரங்கில்-மீண்டும/?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR0S2PMRgETcyoaTJyuy7TRb82SGXn6k4p8_nnirfq5k3FNR-pz2RCNySCw_aem_ASs7gFDfjmtdw_KFbAOgQqOwhuTxUr6i4dDJ9mZUmjCrE9e7pXmEjXTvw46Ak4sn2fsGyQ4TeISnhRNMaH234IZc- மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 1
அடுத்து வரும் தொடர்களும் இந்தப் பகுதியிலே இணைக்கப்படும்...2🔽 மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 2 March 13, 2024 | Ezhuna மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன. இனவாதமும் தொழிலாளர் போராட்டங்களும் மலையக மக்களை பேரினவாத அடிப்படையில் நோக்குதலும் அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலும் ஆரம்ப காலத்திலிருந்தே இனவாத தலைவர்களாலும் அரசாங்கங்களினாலும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளமையைக் காணலாம். 1948 இல் மலையக மக்களது குடியுரிமையைப் பறித்ததும் இனவாதத்தின் அடிப்படையிலே ஆகும். இதை விட 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் நாடு முழுவதும் இடம்பெற்ற இனக்கலவரங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதை விட இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது. பாதுகாப்பற்ற சூழல் தொடர்ந்து நிலவி வருகின்றது. மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்த டி.எஸ். சேனநாயக்க அரசாங்கம் 1945 ஆம் ஆண்டுக் காலப்பகுதில் முன்னெடுத்த ‘தொழிலாளர்களை தோட்டங்களிலிருந்து விரட்டியடித்தல்’ என்ற நடவடிக்கைகளுக்கு சிறந்த உதாரணங்களாக நேஸ்மியர் மற்றும் உருளவள்ளி தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட இனவாதக் குடியேற்ற நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம். தான் உருவாக்கிய தோட்டங்களில் தொடர்ந்து வாழ்வதற்கு மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியவர்களாக இருந்துள்ளனர். 1942 ஆம் ஆண்டில் கந்தப்பளை பகுதியில் இடம் பெற்ற காணிப் பறிமுதல், தொழிலாளர்களை தோட்டங்களில் இருந்து வெளியேற்றியமை போன்ற நடவடிக்கைளும் இனவாத அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டன. களனிவெளி பகுதியிலுள்ள நேஸ்மியர் தோட்டம் புளத்கோபிட்டிய நகரத்திற்கு அண்மையில் காணப்படுகின்றது. இந்தத் தோட்டம் 820 ஏக்கர் பரப்பினைக் கொண்டதாகவும் தேயிலை மற்றும் இறப்பர் பயிரிடப்படும் பிரதேசமாகவும் காணப்பட்டது. 1900 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்தக் காட்டுப்பகுதி துப்பரவு செய்யப்பட்டு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. 1942 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி 515 பேர் இங்கு வாழ்ந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டு இவர்களை உடனடியாக தோட்டத்தை விட்டு வெளியேறும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வாழ்ந்த இடங்களைச் சுற்றி முள்ளுக்கம்பி வேலியும் அமைக்கப்பட்டது. எனினும் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் வழிகாட்டலில் மூன்று வாரங்களுக்கு மேலான வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. களனிவெளி, கேகாலை, அவிசாவளை, யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் இவ்வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு நல்கினர். அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா, ஹட்டன், நுவரெலியா பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் ஆதரவுப் போராட்டத்தை முன்னெடுத்தனர். நாற்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் தோட்டத்திலிருந்து வெளியேற்ற முற்படும் விரோதச் செயலுக்கு எதிராக சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் தொழிலாளர்கள் முன்னெடுத்தனர். அவர்களுக்கு எதிராக 110 வழக்குகள் தொடுக்கப்பட்டன. 14 வழக்குகள் பெண் தொழிலாளர்களுக்கு எதிரானதாக இருந்தன. தொழிலாளியான எஸ். செல்வநாயகத்திற்கு இரண்டு மாதக் கடூழியச் சிறைத் தண்டனையும் ஏனையோருக்கு இரண்டு முதல் மூன்ற வார கடூழியச் சிறையும் வழங்கப்பட்டன. மலையக மக்களின் போராட்ட வரலாற்றில் முதன் முதலாகச் சிறை சென்ற தொழிலாளி எஸ். செல்வநாயகம் என பத்திரிகைகள் எழுதின. தொடர்ச்சியான போராட்டம் காரணமாகவும் பிரிவுக் கவுன்சிலுக்கு மேன் முறையீடு செய்யப்பட்டதன் அடிப்படையிலும் இப் போராட்டம் வெற்றி கொள்ளப்பட்டது. தொழிலாளர்களின் உறுதியும் ஒற்றுமையுமே இப் போராட்டம் வெல்வதற்குக் காரணமாகியது. 1946 ஆம் ஆண்டு புளத்கோபிட்டிய நகரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் உருளவள்ளி தோட்டத்தில் இன்னுமொரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை – இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தோட்டத்தில் வாழ்ந்து வந்த தொழிலாளர்கள் தமது தேவைக்காக மரக்கறித் தோட்டத்தை அமைத்து நீண்ட காலமாகப் பயிர் செய்து வந்த நிலையில், அந்தப் பகுதியில் இனவாதக் குடியேற்றத்தை மேற்கொள்ளும் பொருட்டு தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. தொழிலாளர்கள், வெளியேற மறுத்ததன் காரணமாக கைது செய்யப்பட்டனர். இதன் விளைவாக பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உருளவள்ளி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எட்டியாந்தோட்டை மற்றும் கேகாலைப் பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் பேருக்கு மேற்பட்டவர்கள் சுமார் இருபது நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தி நான்கு அம்சக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க பிரதமராகி தனிச்சிங்கள மசோதவைக் கொண்டு வந்ததோடு வாகனங்களில் ஸ்ரீ எனும் எழுத்தை பயன்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தார். தமிழ் தலைவர்கள் இதனை எதிர்த்தனர். இதன் காரணமாக நாட்டில் இனவாதத் தாக்குதல்கள் தொடங்கின. ஏறத்தாழ நூற்றி ஐம்பது பேர் கொல்லப்பட்டனர். மலையகத்திலும் தாக்குதல்கள் இடம்பெற்றன. பொகவந்தலாவை நகரில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக பொலிசார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக பிரான்சிஸ் மற்றும் ஐயாவு ஆகியோர் மரணித்தனர். 1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் முழுமையான ஆதரவுடன் புஸ்ஸெல்லாவ டெல்டா பகுதியில் தாக்குதல்கள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல இடங்களில் இத்தகைய வன்முறைகள் இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்டன. 1977 ஆம் ஆண்டு மே மாதம், பத்தனை டெவன் தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டம் நில உரிமைக்காகவும், தோட்டங்களைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட பெரும் போராட்டமாகும். இப்பகுதியில் காணப்பட்ட ஏழாயிரம் ஏக்கர் தேயிலைக் காணியை இனவாத அடிப்படையில் பிரித்துக் கொடுக்க எடுக்கப்பட்ட முயற்சி போராட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இப் போராட்டத்தில் இருபத்து இரண்டு வயது நிரம்பிய இளம் போராளி சிவனு இலட்சுமணன் தியாகி ஆனார். இனவாத நிலப்பறிப்பு முயற்சி ஒன்றிணைந்த போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அதே இடத்தில் இன்று தனியார் குடியேற்றங்களும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நபர்கள் தங்குவதற்கான உல்லாச விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளமையைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். 1997 ஆம் ஆண்டு இரத்தினபுரி வேவல்வத்த தோட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல், லயன்களுக்கு தீ வைத்தமை, 2007 ஆம் ஆண்டு இரத்தினபுரி பம்பேகம தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு விரட்டப்பட்டமை, 2000 ஆம் ஆண்டு பிந்துனுவெவ படுகொலைகளுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இடம்பெற்ற கூட்டத்தின் போது காராளன், மணிவண்ணன் உள்ளிட்ட நான்கு தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமையும் இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே ஆகும். இவை சில உதாரணங்கள் மட்டுமே ஆகும். பேரினவாத அரசாங்கம் அதற்கு ஆதரவான பொலிஸ் மற்றும் இராணுவ அமைப்புகள் திட்டமிட்ட வகையில் இத்தகைய மக்கள் விரோதச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்ட போதிலும் தொழிலாளர்களின் மன உறுதியும் போராட்ட குணாம்சமும் அனைத்ததையும் எதிர்கொண்டன என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும். கூலி அல்லது சம்பள உயர்விற்கான போராட்டங்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமக்கான உரிமைகள், சலுகைகள், அனைத்தையுமே போராட்டங்கள் மூலமே பெற்றுக் கொண்டனர் என்பதே வரலாற்று உண்மையாகும். அவற்றுள் முக்கியமானது சம்பள உயர்விற்கான போராட்டமாகும். பல்வேறு போராட்டங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், அவர்கள் 1000 ரூபாவை அடிப்படை நாளாந்தச் சம்பளமாகப் பெற முடியாதவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு முதல் இடம்பெறுகின்ற சம்பள உயர்வுப் போராட்டங்கள் சிறந்த விளைவுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. மக்கள் விரோதத் தொழிற்சங்கங்களே இதற்குப் பிரதான காரணமாக அமைகின்றன. இதனை விளங்கிக்கொண்டு மாற்று வழிகளைத் தேடுவதும் மக்கள் சார்பான தொழிற்சங்கச் செயற்பாடுகள் மற்றும் அரசியலை முன்னெடுப்பதுமே சரியான வழியாகும். முல்லோயா போராட்டம் முல்லோயா தோட்டம் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தோட்டம் மலையக மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக முன்னெடுத்த வேலை நிறுத்தமும் கோவிந்தன் எனும் தொழிலாளி தியாகி ஆகியமையுமாகும். முல்லோயா வேலைநிறுத்தப் போராட்டம் மலையகத் தொழிற்சங்க வரலாற்றின் முக்கிய சாதனையாக அமைகின்றது. மலையகத்தில் தொழிற்சங்கங்கள் வேரூன்றி வளர்வதற்கும் தொழிலாளர்கள் பலம் பெறுவதற்கும் இப்போராட்டம் அடிப்படையாக அமைந்தது. அக்காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூலி ஆண்களுக்கு ஐம்பத்து நான்கு சதமாகவும், பெண்களுக்கு நாற்பத்து மூன்று சதமாகவும், பிள்ளைகளுக்கு முற்பத்து இரண்டு சதமாகவும் காணப்பட்டது. அது வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்குப் போதுமானதாக அமையவில்லை. இதனை முன்வைத்து முல்லோயா பகுதியிலிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமக்கான கூலியை பதினாறு சதத்தால் உயர்த்துமாறு கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த தோட்டத்தில் வாத்தியராக இருந்த திரு. ஜெகநாதன் என்பவர் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட்டமையை அறிய முடிகின்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒழுங்கமைப்பதிலும் தொழிலாளர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதிலும் இவரது பங்கு அதிகமாவே இருந்திருப்பதைக் காணமுடியும். இவ் ஆசிரியர் அக்காலத்தில் உத்வேகத்துடன் இயங்கிய லங்கா சம சமாஜக் கட்சியின் உறுதியான செயற்பாட்டாளராக இருந்துள்ளமையே இதற்கான பிரதான காரணமாகும். முல்லோயா தோட்டத்தின் சொந்தக்காரனாகவிருந்த வெள்ளைக்காரன் டபிள்யூ.ஈ. ஸ்பார்லிங் குறித்த ஆசிரியர் மீது கடுமையான கோபம் கொண்டதோடு அவர் தங்கியிருந்த லயன் அறையிலிருந்தும் தோட்டத்திலிருந்தும் வெளிறுமாறு கட்டளையிட்டான். தொழிலாளர்கள் இதற்கும் எதிர்ப்புக் காட்டினர். வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக தோட்ட நிருவாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதென தொழிற்சங்கத் தலைவர்கள் தீர்மானித்ததன் அடிப்படையில் முக்கிய தொழிற்சங்கத் தலைவராகவிருந்த திருவாளர் பி.எம். வேலுசாமி முல்லோயா தோட்டத்துக்குச் சென்றார். நிருவாகம் பேச்சு வார்த்தைக்கு இணக்கம் தெரிவிக்காததோடு தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வழங்கவும் மறுத்தது. தொழிலாளர்கள் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் தொழிலாளர்கள் ஒன்று கூடுவது, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றனவற்றை வெள்ளைக்கார துரையும் அவனுக்குக் கீழிருந்த நிருவாகமும் அங்கீகரிக்கவில்லை. தொழிலாளர்களோ தமது கோரிக்கையில் உறுதியாகவிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். போராட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தது தொழிற்சங்கமே என்பதை அறிந்துகொண்ட வெள்ளைக்கார துரையும் அவனுக்குக் கீழிருந்த நிருவாகமும் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டமை, வேலை நிறுத்தம் செய்யக்கூறி தொழிலாளர்களைத் தூண்டியமை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து கண்டி பொலிசார் மூலமாகத் தொழிற்சங்கத் தலைவர் திரு.பி.எம். வேலுச்சாமியைக் கைது செய்தனர். மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென தோட்டத் தொழிலாளர்களை எச்சரித்தனர். இவ்விரு சம்பவங்களும் தொழிலாளர்களின் உணர்வை மேலிடச் செய்தது. லங்கா சமசமாஜக் கட்சி, தொழிலாளர்களுக்குச் சாதகமாக இருந்து, தொழிலாளர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தத்தை ஊக்குவித்தது. இதன் காரணமாக அக்காலத்தில் அரச சபை உறுப்பினராகவிருந்த அபே குணசேகர என்பவர் சமசமாஜக் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களையும் தொழிலாளிகளின் போராட்டத்தக்கு எதிரான கருத்துகளையும் முன்வைத்தார். இவர் வேலை நிறுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் தொழிலாளர்களை அடக்கவும் பொலிசாருக்கு ஆதரவாகச் செயற்பட்டமையை அறிய முடிகின்றது. நாளுக்கு நாள் வேலை நிறுத்தம் உத்வேகமடைந்தது. நிலமைகள் மோசமடைவதைக் கண்ட தோட்ட நிருவாகம் தொழிலாளர்களை அடக்க நினைத்தது. பல்வேறு அடாவடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தொழிலாளர்களைப் பிரிப்பதற்கு தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொழிலாளர்களின் உறுதி, வேலை நிறுத்தச் செயற்பாடுகள் ஒரு புறமாகவும், மறுபுறம் நிருவாகத்தின் கெடுபிடிகள் காரணமாகவும் முல்லோயா தோட்டத்தில் அமைதியின்மை தோன்றியிருந்தது. அக்கால அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொழிலாளர்களுக்கு எதிராக இருந்தமை, வெள்ளைக்கார துரைமார்களின் அடக்கியாளும் மனநிலை, தொழிலாளர் விரோதப் போக்கு, பொலிசாரின் நடவடிக்கைகள் போன்றன நிலமைகளை மேலும் மோசமாக்கின. தொழிலாளர்களைப் பிரிப்பதற்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தை அடக்கவும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. தொழிலாளர்கள் உறுதியுடன் இருந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். தோல்வி கண்ட தோட்ட நிருவாகமும் பொலிசாரும் அமைதியை ஏற்படுத்துதல், பிரச்சினையைக் கட்டுப்படுத்தல் என்ற போர்வையில் தொழிலாளர்கள் மீதான வன்முறையை ஏவி விட்டனர். தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். தொழிற்சாலையிலிருந்து கையில் பெரிய கம்பு ஒன்றுடன் வந்துகொண்டிருந்த முல்லோயா தோட்டத் தொழிலாளி கோவிந்தன் மீது டி.ஜி. சுரவீர என்ற பொலிஸ்காரன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டான். இதனால் படுகாயமடைந்த அந்தத் தொழிலாளி மரணமடைந்தான். அவனது செங்குருதி, அவன் உருவாக்கிய தோட்ட மண்ணில் கரைந்தது. கோவிந்தன் வீரத் தியாகி ஆகினான். கண்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ரொபினின் பணிப்புரைக்கு அமையவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனக் கூறப்பட்டது. எனினும் தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட கொலையாகவே இதனை அடையாளப்படுத்த முடியும். இந்தப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் பொருட்டு பொலிசும் தோட்ட நிருவாகமும் பயன்படுத்திய இன்னொரு உபாயம் இன ரீதியான பிரிவை தொழிலாளர்களிடையே ஏற்படுத்த முனைந்தமையாகும். இதற்கென பபுன் என்ற பெயருடைய பொலிஸ் உத்தியோகத்தர் பயன்படுத்தப்பட்டமையையும் பதிவுகள் மூலம் அறிய முடிகின்றது. எவ்வாறாயினும் இன அடிப்படையில் தொழிலாளர்களைப் பிரிப்பதற்கு எடுத்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்தது. தியாகி முல்லோயா கோவிந்தன் சுட்டுக் கொல்லப்பட்டதை நேரில் கண்ட பெரியசாமி என்ற தொழிலாளி பாதையில் வேகமாக ஓடியபோது அவர் மீது பொலிஸ் வாகனமொன்றை மோதச்செய்து படுகாயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவமும் பதிவாகி உள்ளது. கோவிந்தனை படுகொலை செய்ததைக் கண்ட சாட்சியாக இருந்த தொழிலாளியின் உயிரைப் பறிக்கச் செய்யப்பட்ட சதியாகவே இதனைக் காண முடியும். இச்சம்பவம் இடம்பெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் பதினாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொழிலாளர்கள் தங்கியிருந்த லயன் அறைகளுக்குச் சென்று வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறும் அவ்வாறு செய்யத் தவறின் துப்பாக்கியால் சுடப்படுவீர்கள் எனக் கூறி மிரட்டியுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்து முடிந்த பின்னர் ஜனவரி பன்னிரெண்டாம் திகதி முல்லோயா தோட்டத்தின் நடுப்பிரிவுக்குச் சென்ற பொலிசார் வேலைக்குத் திரும்புமாறு கூறி எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழிலாளர்களின் உறுதியும் தொழிற்சங்கத்தின் வழிகாட்டலும் இத்தகைய எச்சரிக்கைளுக்கு அடி பணியாத நிலையைத் தோற்றுவித்திருந்தது. தொழிலாளர்களின் உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தும் பொருட்டும் கொலைக் குற்றத்தைத் திசைமாற்றும் பொருட்டும் இன்னொரு உத்தி கையாளப்பட்டமையை அறிய முடிகின்றது. அதாவது தொழிலாளர்கள் தோட்டத்தின் நிருவாகத்துக்குச் சொந்தமான பகுதியில் அனுமதியின்றி மரக்கறித் தோட்டச் செய்கையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பதின்மூன்று தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். மனிதாபிமானமற்ற வகையில் அவர்களை ஒரு வாகனத்தில் அடைத்து கண்டி நோக்கிக் கொண்டு சென்றமை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தெழிலாளர்கள் நீதி மன்றத்தின் முன்னிலையில் கொண்டு செல்லப்படாமல் நீதிபதியின் தீர்ப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர். மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றில் பல்வேறு பாடங்களையும் அனுபவங்களையும் தந்த முல்லோயா போராட்டம் பிற்காலத்தில் தொழிலாளர்கள் அடக்குறைக்கு எதிராகப் போராடும் உத்வேகத்தையும் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உரிமைக்காகப் போராடிய தியாகிகளின் வரலாற்றின் முதலாவது பதிவாகவும் கோவிந்தனின் அர்ப்பணிப்பு அமைகின்றது. முல்லோயா போராட்டத்தைத் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைள் தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உதாரணங்களாக சில: அ. ஏப்ரல் மாதம் றம்பொடை தோட்டத்தில் சுமார் எழுநூறு தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தோட்டத்துரையின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். வெலிஓயா தோட்டத்தில் தோட்ட நிருவாகியின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிரான போராட்டம். ஆ. மே மாதம் நேஸ்பி தோட்டத்தில் இடம்பெற்றப் போராட்டம் – இது தொழிலாளர்களுக்கிடையே மோதல்களைத் தோற்றுவித்திருந்தது. நீட்வுட் தோட்டப் போராட்டம் – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்தில் இரண்டு பொலிசாரும் தாக்கப்பட்டனர். ரதல்லை தோட்டப் போராட்டம் – தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து பிரச்சினைகளைக் கொடுத்து வந்த பெரிய கங்காணிக்கு எதிரான போராட்டம். வேவஸ்ஸ போராட்டம் – பாரியளவில் மேற்கொள்ளப்பட்ட இப்போராட்டம் தோட்டத் துரையை வெளியேற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டது. ஊவா பகுதியெங்கும் பரவிய இப்போராட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென் அன்றூஸ் தோட்ட போராட்டம் – தோட்டத்துரையின் அடக்குமுறையை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டது. முல்லோயா போராட்டத்தின் விளைவாக தொழிலாளர்களுக்குச் சாதகமான உடன்படிக்கை ஒன்றும் துரைமார் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தொழிலாளர் சபையினை (Workers Council) ஏற்படுத்துவது எனவும் மேலும் தோட்டங்களுக்குள் பொலிசார் பிரவேசிக்கும் போது ஆயுதங்களைக் கொண்டு செல்லக் கூடாது என்றும் தோட்டப் பிரச்சினைகள் தொழிலாளர் சபையுடன் பேசி தீர்க்கப்பட வேண்டும் எனவும் உடன்பாடு காணப்பட்டது. தொழிலாளர் போராட்டத்தின் மூலமாக வென்றெடுத்த கோரிக்கை இதுவாகும். பஞ்சப்படி போராட்டம் 1965 – 1970 காலப்பகுதியில் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பதவியில் இருந்தது. அந்த அரசாங்கத்தின் பொருத்தமற்ற பொருளாதார நடவடிக்கையினால் தேசிய வருமானம் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் காணப்பட்டது. பெருந்தோட்ட நடவடிக்கைள் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் எவ்விதமான அக்கறையும் மேற்கொள்ளப்படவில்லை. முதலாளித்துவ நாடுகளுடனான தொடர்பும் தாராள பொருளாதார முறையும் இறக்குமதிகளைச் சார்ந்து நிற்கும் பொருளாதாரக் கொள்கையும் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாதகமாகவே அமைந்தன. பல்வேறு போராட்டங்களின் விளைவாக அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஆனால் வழமை போல பெருந்தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். வாழ்க்கைச் சுமைக்கேற்ப 17 ரூபாய் 50 சதம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்களால் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டமே பஞ்சப்படி போராட்டமாகும். நாளொன்றுக்கு 67 சதம் சம்பள அதிகரிப்பைக் கோரி பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது. இதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்கவில்லை. போராட்டம் தொடர்ந்தது. பிரதமராகவிருந்த டட்லி சேனநாயக்க இந்தப் போராட்டம் தொடர்பாக எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சம்பள நிருணய சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு கூறி ஒதுங்கிக் கொண்டார். 1966 ஆம் ஆண்டு நாற்பத்தைந்து நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டம் மலையகம் முழுதும் வியாபித்து இருந்தது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தப் போராட்டத்திற்கான தலைமையை ஏற்றிருந்தது. இந்தக் கோரிக்கை தொடர்பாக இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த மயிலிட்டியா தோட்டத்தில் மூன்று மாத காலம் வேலை நிறுத்தம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 10 சதம் சம்பள உயர்விற்கு ஒத்துக் கொண்டது. போராட்டம் தோல்வியில் முடிந்தது. மக்கள் விரோதத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு இதுவும் சிறந்த உதாரணம் ஆகும். இத்தகைய நடவடிக்கை தொழிற்சங்கம் மீதான பற்றுதலையும் வலுவிழக்கச் செய்தது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த ஆறு வருடங்களாக இது தொடர்பில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபா என்பதைக் கூறி வந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை. தனியார் கம்பனிகள் அரசாங்கத்துக்கு மேலான அதிகாரத்தைக் கொண்டிருப்பது போல தோன்றுகின்றது. இன்றைய விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றன தொழிலாளர்களை மேலும் அழுத்துகின்றன. உரிய சம்பளத்தை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து போராட வேண்டியது அவசியமாகின்றது. இன அடையாளம் மற்றும் காணி, வீட்டு உரிமைக்கான போராட்டங்கள் தொழிற்சங்கம் அமைத்தல், வேதன அதிகரிப்பு, தோட்டங்களைப் பாதுகாத்தல் போன்றனவற்றின் அடிப்படையில் மலையகத் தொழிலாளர் முன்னெடுத்த போராட்டங்களின் அடுத்த கட்டமாக தேசிய இன அடையாளத்தை வென்றெடுப்பதற்கான போராட்டங்கள் மேலெழுந்துள்ளன. இந்திய வம்சாவளி என்ற அந்நிய நாட்டின் அடையாளத்தை நீக்குவதோடு இந்நாட்டை உருவாக்கிய மக்களை ‘மலையகத் தமிழர்’ என அடையாளப்படுத்த வேண்டும் என்ற கருத்து முன்னிலை பெற்று வருகின்றது. இதற்கான பிரகடனமும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இந்நாட்டில் வாழ்கின்ற நான்கு தேசிய இனங்களில் ஒன்றாகக் கருதப்பட வேணடும் என்ற கோரிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் மலையக மக்களுக்கான காணி, வீட்டுரிமை பற்றிய போராட்டங்களும் இன்னொரு கட்டத்துக்கு வளர்ச்சியடைந்துள்ளன. வீடுகளை அமைப்பதற்கான பத்து பேர்ச்சஸ் காணியும், விவசாயம் மற்றும் தோட்டச் செய்கைக்கான இருபது பேர்ச்சஸ் காணியும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்கள் 1980 ஆண்டு முதல் மக்கள் சார்ந்த செயற்பாட்டாளர்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய கோரிக்கைகளை வென்றறெடுக்க, கடுமையானதும் தொடர்ச்சியானதுமான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைகின்றது. என்ன செய்ய வேண்டும்? இயற்கையோடும் வறுமையோடும் போராடிய மலையக மக்கள் முதலாளிகளின் அடக்குமுறைகளுக்கும் இனவாத நடவடிக்கைகளுக்கும் எதிராக போராடியதன் விளைவாகவே பல்வேறு உரிமைகளைப் பெற முடிந்தது. ஐக்கியம், ஒருமைப்பாடு, தன்னலங்கருதாத செயற்பாடுகள், தலைமைத்துவம், துணிவு போன்ற காரணிகளே வெற்றிகளைப் பரிசாகத் தந்தன. தொழிற்சங்கத் தெரிவு, வேறுபாடுகளை மறந்தமை, ஒருவருக்காருவர் ஒத்தாசை நல்கியமை போன்றன அதற்கு வலுவூட்டின. மக்கள் சார்பான தொழிற்சங்கம், அவற்றின் செயற்பாடுகள், மக்கள் தலைவர்களின் துணிவு மிக்க முடிவுகள் போன்றனவும் பங்களித்தன. ஆனால் இன்றைய சூழலில் இவை யாவும் நிர்மூலமாக்கப்பட்டு சிதைவடைந்த நிலைக்குச் சென்றுள்ளதைக் காணமுடியும். ஐக்கியம் சிதறடிக்கப்பட்டுள்ளது. போராட்டப் பலம் பலவீனமாக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைகளும் அரசியல் செயற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து நம்பிக்கையற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளன. தோட்டங்களை தனியார் கையேற்ற பின்னர் எவ்வித அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படாமல் அவை காடுகள் மற்றும் புதர் நிலங்களாக மாற்றப்படுகின்றன. தனியார் தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் வெளியேற வேண்டுமென்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புசல்லாவை பகுதியிலுள்ள றம்பொடை தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகின்றனர். முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் சீரற்ற கல்வி முறையால் சுயநல எண்ணம் மேலோங்கியுள்ளது. தொழிலாளர் உதிரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். கடுமையான உழைப்பாலும் போராட்டத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட மலையகம் திட்மிடப்பட்ட வகையில் சிதைக்கப்படுகின்றது. எனவே இதனை மாற்றியமைக்க சகலரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும். இந்த நோக்கத்துக்காக பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்குதல். தொழிலாளர் கல்வித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல். உழைக்கும் மக்கள் சார்பான தொழிற்சங்கத்தின் முக்கியத்துவத்தை அறியச் செய்தல். அரசியல் அடிப்படையில் ஆளுமையுள்ள சமூகமாக தலை நிமிர்வதற்குரிய, மக்கள் நலன்சார்ந்த கட்சியைக் கட்டியெழுப்புதல். சலுகை அரசியலை மட்டுமன்றி உரிமை சார்ந்த விடயங்களை வென்றடுப்பதற்கான வேலைத் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்தல். பேரினவாத முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக செயற்படும் ஏனைய அரசியல் கட்சிகள், ஜனநாய அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுதல். சுய உற்பத்தி, நுகர்வு, பண்டப்பரிமாற்றம் போன்ற பொருளாதார நடவடிக்கைகளைப் பலப்படுத்துதல். மலையக மக்களின் வரலாறு மற்றும் கலை, பண்பாட்டு அம்சங்களைப் பாதுகாக்கும், மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல். மலையகத்தின் இயற்கைச் சூழலை, வளங்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பை மக்களின் ஒத்துழைப்புடன் கட்டியெழுப்புதல். போதையற்ற இளைஞர்கள் என்ற இலக்கை அடைவதற்கு விளையாட்டு மற்றும் பயனுள்ள பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். பெண் தலைமைத்துவத்தை உருவாக்குதல். மாணவர் இயக்கங்கள், சிறுவர் அமைப்புகளைப் பலப்படுத்துதல். புதிய பண்பாட்டுப் பயணத்தினை சகல மாவட்டங்களுக்கும் விஸ்தரித்தல். முடிவுரை மலையக மக்களின் வரலாறு என்பது போராட்டங்களால் வடிவமைக்கப்பட்டதாகும். தற்போதைய நிலையில் மலையக மக்கள் அனுபவித்து வரும் உரிமைகள் மற்றும் சலுகைகள் இத்தகைய போராட்டங்களால் வெற்றி கொள்ளப்பட்டவையாகும். சாதாரண வேலை நிறுத்தம் தொடக்கம் பல நாட்கள் நீடித்த பரந்துபட்ட வேலை நிறுத்தம் வரை இத்தகைய போராட்டங்களின் தன்மைகள் படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளன. போராட்டங்களின் உச்சமாக உயிர்த் தியாகங்கள் இடம் பெற்றுள்ளன. எனவே மலையக மக்களின் வரலாறு செங்குருதியால் புடம் போடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட முடியும். இத்தகைய வீரம் மிகுந்த போராட்டங்களின் திரட்சியாகவே மலையகத்தை அடையாளப்படுத்த வேண்டும். பிற்போக்கு தொழிற்சங்கம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் இத்தகைய தனித்துவ வரலாறு மேலும் வளர்ச்சி பெறாத தேக்க நிலையைத் தோற்றுவித்துள்ளது. மேலும் மாறி மாறி பதவிக்கு வந்த, பேரினவாதம் மற்றும் மதவெறி கொண்ட அரசாங்கங்களின் நடவடிக்கைகளும் போராட்டத்தின் வளர்ச்சியைத் தடை செய்துள்ளன. மேலும் திறந்த பொருளாதாரக் கொள்கை, தனியார்மயம், பொருத்தமற்ற கல்வி போன்றன காரணமாகவும் போராட்டக் கலாசாரம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது. மக்கள் சார்ந்த அரசியலை முன்னெடுப்பவர்கள் இது குறித்து மிகச் சரியான தீர்மானத்தை மேற்கொண்டு போராட்ட வாழ்க்கைப் பண்பாட்டையும் வரலாறையும் மீளவும் வளர்த்தெடுக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானதாக உள்ளது. மலையக மக்களின் போராட்டங்களில் இன்னொரு வளர்ச்சிப்படியாக இன அடையாளத்திற்கான போராட்டங்களும் காணி, வீட்டுரிமைக்கான போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. மலையகம் 200 அதனை சாத்தியமாக்குவதற்கு கடந்த கால வெற்றிகளை படிப்பினைகளாகக் கொள்வது சிறந்த விளைவுகளைத் தரும். உதவிய நூல்கள் இராஜேந்திரன் சிவ. 2019. தடை மலைகளை உடைத்தல், செம்பதாகை சஞ்சிகை, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, கொழும்பு. கந்தையா மு.சி. சிதைக்கபட்ட மலையகத் தமிழர்கள், 2015 விடியல் பதிப்பகம், கோயம்புத்தூர். சாரல் நாடன் (1988). தேசபக்தன் கோ. நடேசையர் : ஒரு வரலாற்று ஆய்வு, மலையக வெளியீட்டகம் கண்டி. புதிய நீதி (2021). மலையகத் தமிழ் மக்களும் மாற்று அரசியல் மார்க்கமும், புதிய நீதி வெளியீட்டகம், கொழும்பு. ரோகிணி மாத்தளை (1993). உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள், இளவழகன் பதிப்பகம், சென்னை. லோரன்ஸ். அ (2006). மலையக சமகால அரசியல் தீர்வு, மலையகம் வெளியீட்டகம், தலவாக்கலை. Nadesan N. (1993). A history of Up country Tamil People in Sri Lanka, Nandalala Publication, Hatton. தொடரும்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
All react- மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 1
மலையக மக்களின் போராட்ட வரலாறு – பகுதி 1 March 6, 2024 | Ezhuna மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கோப்பித் தோட்டங்களிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கூலி வேலைக்காக அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. 'இந்திய வம்சாவளித் தமிழர்கள்' எனும் பெயரோடு ஆரம்பித்த இரு நூற்றாண்டுப் பயணம் 'மலையகத் தமிழர்' எனும் தேசிய அடையாளமாக இவர்களை முன்னிலைப்படுத்தும் அரசியற் பாதைக்கு வழி செய்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்து அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றில் வீழ்ச்சிகளும் உண்டு; எழுச்சிகளும் உண்டு. இதனை நினைவுபடுத்துவதாகவும் மீட்டல் செய்வதாகவும் 'மலையகம் 200' நிகழ்வுகள் உலகு தழுவியதாக நடைபெற்றன. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பின்னடைவுகள், செல்ல வேண்டிய தூரம் போன்ற விடயங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தன. அதற்கேற்ப, விம்பம் அமைப்பு எழுநாவின் அனுசரணையுடன் கட்டுரைப் போட்டியொன்றை நடத்தியது. இப் போட்டியில் வெற்றி பெற்ற வெவ்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைகள் 'மலையகம் 200' எனும் தலைப்பில் தொடராக எழுநாவில் வெளியாகின்றன. “சிலோன் நாட்டில் முன்னேற்றமடைந்து வரும் கோப்பிப் பயிர்ச் செய்கையானது உண்மையிலேயே மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தோற்றப்பாடாக உள்ளது. இந்தத் தீவில் இத்தகைய நிலமைகளை முன்னர் கண்டிருக்க முடியாது. சிங்கள மக்களின் நம்பிக்கையின் படி பூதங்களே மனித குலத்துக்காக இவற்றை உருவாக்கி இருக்கக்கூடும்” -Ceylon Miscellany 1866- “தேயிலை வளருகின்ற இடங்கள்; அது மலைகளாக இருக்கலாம் அல்லது பள்ளத்தாக்குகளாக இருக்கலாம். அவை புனிதமானவையாகும்.” -Drinking of Tea : Rules of Health, Japan. (12th century)- இருநூறு வருடங்களுக்கு மேற்பட்ட மலையக மக்களின் வரலாறு தொழிலாளர்களின் கண்ணோட்டத்தில் ஆராயப்பட வேண்டும். அதுவே உண்மையானதாக அமையும். இந்தியாவிலிருந்த இடம் பெயரத் தொடங்கிய காலம் முதல் இன்று தனது வாழிடம் மற்றும் தொழில்சார் உரிமைகள் தொடர்பாக றம்பொடை தோட்ட மக்கள் (புஸ்ஸல்லாவ) முன்னெடுக்கும் போராட்டம் வரை இடம் பெற்றுள்ள நிகழ்வுகள் அனைத்தும் சமூக விஞ்ஞான அடிப்படையில் அணுகப்பட வேண்டும். அயராத உழைப்பு, தொழிற் சங்கங்கள் அமைப்பதற்கான முயற்சிகள், மக்கள் எழுச்சி, வேலை நிறுத்தங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், உயிர்த் தியாகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மலையக வரலாற்றைப் படைத்தளித்த உழைப்பாளர் சார்பாக, அவர்களின் எதிர்கால நன்மைக்காக ஆராயப்பட வேண்டும். வெளிக் கொணரப்படும் விடயங்கள் பல்வேறு வடிவங்களில் மீண்டும் மக்களுக்கு கொண்டு செல்லப்படுவதோடு அதனூடாக நாட்டில் சமமாக வாழ்வதற்குரிய போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதும் அவசியமானதாக உள்ளது. போராட்ட வரலாற்றைக் கற்றல் என்பது சுயலாபத்திற்காகவன்றி அல்லது மனனஞ் செய்யும் கல்வி நடவடிக்கைகளிற்காகவன்றி மக்கள்சார் செயலுக்கான தூண்டுதலாக அமைய வேண்டும். இந்த நாட்டினை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்திலும், உள்ளூர் ஆட்சியாளர்களின் கைகளுக்கு ஆட்சி அதிகாரம் கைமாற்றப்பட்ட பின்னரும் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் பேரினவாத அடிப்படையிலும், முதலாளித்துவ அணுகுமுறையின் அடிப்படையிலும் ஈவிரக்கமின்றிய சுரண்டலை முன்னெடுத்த முறைகள் தொடர்பிலும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட சம்பவங்கள் தொடர்பிலும் விரிவான தேடல்களை முன்னெடுப்பது கட்டாயமானதாக அமைகின்றது. இதைவிட மலையக மக்களை ஒன்றிணையவிடாது செயற்படுகின்ற மக்கள் விரோத அரசியல், தொழிற்சங்கச் செயற்பாடுகள், மற்றும் ‘துர்நாற்றத்திற்கு வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளத் தூண்டுகின்ற’ அரச சார்பற்ற நிறுவனங்களின் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். முதலாளித்துவ ஆட்சி முறை, தாராளவாதம், தனியார்மயம், பேரினவாதம், அடக்குமுறைச் சட்டங்கள் போன்றன எவ்வாறு இந்த நாட்டின் தொழிலாளர், விவசாயிகள், கீழ் மத்திய தர வர்க்கத்தினரை ஈவிரக்கமின்றி சுரண்டிக் கொழுக்கின்றன என்பதையும் இவர்களை ஒன்றிணையவிடாது தடுத்து நிற்கின்றன என்பதையும் சரியாக விளங்கிக் கொள்வதன் மூலமே எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக இந்நாட்டின் நலனுக்காக உழைத்த மலையகத் தொழிலாளர்கள் தமது போராட்ட வரலாற்றையும் ஒற்றுமையின் மூலமாக வெற்றி கொண்ட உரிமைகள் பற்றியும் ஆழமாக விளங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே எதிர்காலப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமானதாகும். மலையக மக்களின் வரலாற்றை கற்பதற்குரிய வாய்ப்புகள் வரையறைக்குட்பட்டதாகவே காணப்படுகின்றன. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பல நூல்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட வேண்டியனவாக உள்ளன. மேலும் ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட நூல்கள், தோட்டங்களின் அழகு – இயற்கைக் காட்சிகள் – துரைமாரின் வாழ்க்கை பற்றியே அதிகம் பேசுகின்றன. மனிதர் அண்டாத பகுதியை வளமுள்ள பணத்தினை அள்ளித் தருகின்ற பசுஞ் சோலைகளாக மாற்றிய தொழிலாளர்கள், அவர்களது தொடர்ச்சியான போராட்டங்கள், உயிர் தியாகங்கள் போன்றன குறித்த பதிவுகள் குறைவானாகவே காணப்படுகின்றன. அவற்றை மீளவும் தேடித் தொகுப்பது காலத்தின் தேவையாகும். தனது சமூக வரலாற்றை மறந்த இனம் வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. மானுட வரலாறையும் உலக வரலாறையும் ஆழமாகக் கற்கும் அதே வேளையில் இலங்கையின் வரலாற்றையும் மலையக மக்களின் வரலாற்றையும் சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் அணுகிக் கற்க வேண்டும். ஆனால் எமது கலைத்திட்டங்களில் மலையக மக்களின் வரலாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதிலும் பேரினவாதமும் மதவாதமும் மேலோங்கிக் காணப்படுகின்றது. வரலாறு திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் பணிகளில் ஈடுபடுவோர், கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் போன்றோர் மலையக மக்களின் வரலாற்றை மாணவர்கள் கற்பதற்கான விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். பல்வேறு கலை நுட்பங்களின் மூலமாக உழைக்கும் மக்களுக்கு வரலாறு குறித்த புரிதலை ஏற்படுத்துதல் முக்கியமான பணியாக அமைகிறது. மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை வரையறை செய்து கொள்வதற்கு இத்தகைய அணுகுமுறை பெரிதும் பயன்படும். இந்தக் கட்டுரையானது மலையக மக்கள் மீதான அடக்குமுறைகள் குறித்தும் அதற்கெதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் பற்றியும் ஆய்வு செய்வதற்கான அடிப்படைகளை உள்ளடக்கி உள்ளது. இதனை மேலும் விரிவுபடுத்தி ஆய்வு செய்வதும், கற்றுக் கொண்டவற்றை பல்வேறு செயல்நுட்பங்களின் அடிப்படையில் மக்களிடம் கொண்டு செல்வதும் மிகவும் பயனள்ளதாக அமையும். இடம்பெயர்ந்து வருவதற்கு முன்னர், இந்தியாவில் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சி தொடங்கும் காலத்தில், நிலபிரபுத்துவ சமூகத்தின் ஒடுக்கு முறை பரவலாகக் காணப்பட்டது. நிலமற்ற விவசாயிகள் பல்வேறு அடக்கு முறைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. அதேவேளையில் காலனித்துவ ஆட்சி வளச்சுரண்டலையும் இலாப நோக்கையும் அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டமையால் விவசாயம், கிராமியக் கைத்தொழில் போன்றன வீழ்ச்சியடைந்தன. வறுமை, பஞ்சம், கொள்ளை நோய்கள், சாதிய அடக்குமுறைகள் மென்மேலும் அதிகரித்தன. 17 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பனி பலமுள்ளதாக இருந்தது. அதன்மூலம், பல்வேறு உடன்படிக்கைகள் ஆங்கிலேயருக்குச் சார்பாக மேற்கொள்ளப்பட்பட்டன. மதராஸ், ஆங்கிலக் கம்பனியின் மையமாக இருந்தது. கல்கத்தா நகரத்தில் அமைக்கப்பட்ட வில்லியம் கோட்டை காலனித்துவத்தின் செயல் மையமாக விரிவுபடுத்தப்பட்டது. தென் இந்தியாவுக்கான திறவு கோல் என்று அழைக்கப்பட்ட திருச்சிராப்பள்ளி கோட்டை இன்னுமொரு நிலையமாக இருந்தது. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தாலும் படைத்துறை ஒப்பந்தங்கள் மூலமாக மக்களை அடக்கும், அடிமைப்படுத்தும் நடவடிக்கைள் இலகுவாக்கப்பட்டன. இராணுவ மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள், சட்டங்கள், அடக்குமுறை நடவடிக்கைகள் மூலமாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட காலனித்துவ ஆட்சி தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டன. ஆங்கிலேயர் இந்தியாவை முழுமையாக தமது ஆட்சிக்குக்கீழ் கொண்டு வந்த போது பொருளாதார நிலை மிகவும் சீரழிந்து காணப்பட்டது. அதேவேளை இங்கிலாந்து ஆட்சி முறை முதலாளித்துவத்தின் கோர முகங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தது. இங்கிலாந்துக்கான பொருளாதார அணுகுமுறை இந்திய மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதாக இருந்தது. இதன் விளைவாக வறுமை தாண்டவமாடத் தொடங்கியது. நிலவரி முறைகள், குத்தகைப் பணம் என்பன காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. ஏழை விவசாயிகள் செத்து மடிய நேரிட்டது. பல இடங்களில் ஜமீந்தாருக்கு எதிரான போராட்டங்கள் இடம் பெற்றன. ஜமீந்தார்கள் விரட்டப்பட்டனர். எனினும் அத்தகைய நிலங்களை கிழக்கிந்திய கம்பனியே பெற்றுக் கொண்டது நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ ஆட்சி முறை ஏற்படுத்திய சமூகப் பொருளாதார விளைவுகள் வறுமை நிலையையும் மரணத்தையும் அதிகரித்துச் சென்றன. வறட்சியும் குடிநீர் இன்மையும் இவற்றை மேலும் தீவிரப்படுத்தின. இலஞ்சமும் ஊழலும் நிறைந்த நீதிமன்ற முறையானது பிரித்தானியச் சுரண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் சாதகமாக அமைந்தது. புதிதாக ஆக்கப்பட்ட சட்டங்களும் விதிகளும் அடிமை முறையை பலப்படுத்துவனவாகவே அமைந்தன. இத்தகைய சூழலில் கண்டிச் சீமை (சிலோன்), பினாங்கு, பிஜி, மொரிசியஸ் போன்ற இடங்களுக்குச் சென்றால் சுகமாக வாழலாம் என்ற வதந்திகள் கிராமங்களில் பரவத் தொடங்கியது. கிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. பொய்யும், ஏமாற்றும் மக்களை கிராமங்களிலிருந்து வெளியே தள்ளியது. சென்றவர்கள் திரும்பி வராத காரணத்தால் உண்மை நிலை என்ன என்பதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. சியாம் இரயில் பாதையை அமைக்கும் பொருட்டு பலியான பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பற்றிய செய்திகள் இந்தியக் கிராமங்களை சென்று சேராததைப் போல கண்டிச் சீமையிலும், மலேசியாவிலும், பிஜி தீவுகளிலும், மொரிசியசிலும் எதிர் நோக்கிய துன்பங்களும், அடக்குமுறைகளும் கிராம மக்களால் விளங்கிக்கொள்ளப்படவில்லை. இத்தகைய நிலையானது ஆங்கிலேயத் துரைமார்களுக்கும் ‘ஆள் கட்டப் புறப்பட்ட’ கங்காணிகளுக்கும் வாய்ப்பாகப் போய்விட்டது. நாசுக்காகப் பேசி ‘ஆள் கட்டும்’ கங்காணிகளுக்கு வழங்கப்பட்ட பணமும் பொய் வாக்குறுதிகளும் வறுமை நிலையிலிருந்த மக்களை கிராமங்களிலிருந்து வேகமாகத் தள்ளிக் கொண்டு போனது. வாக்குறுதிகளை நம்பிச் சென்றவர்கள் மீளாத நிலை இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்வதற்குக் காரணமாகியது. ‘தேயிலைச் செடிக்குள் தேங்காயும் மாசியும்’ கிடைக்கும் என நம்பி வந்தனர் என்பதெல்லாம் வெறும் கட்டுக் கதையே ஆகும். நேர்வழியில் உழைத்தால் தேங்காயையும் மாசியையும் வாங்கி உண்ணலாம் என்ற நம்பிக்கையே இவர்களை இடம் பெயரச் செய்தது என்பதே உண்மையான வரலாறாகும். இன்றைய சூழலில் கூட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றால் அதிக பணம் உழைக்கலாம் என்று நம்பிச் சென்று பிணமாகத் திரும்புவோரையும், காணாமல் போவோரையும், அதேவேளை அங்கு சென்று உழைப்பதற்காக ‘ஏஜென்சி’ மற்றும் ‘விசா’ காரியாலயங்களில் வரிசையில் காத்திருப்போரையும் நன்கு அவதானித்தால் அக்காலத்தின் நிலமைகளை இலகுவில் புரிந்துக் கொள்ள முடியும். பயணத்தின் போது முதலாளித்துவமும் காலனி ஆதிக்கமும் இலாபமீட்டுவதற்காக எதையும் செய்வதற்கு தயாராக இருந்தமையை உலக வரலாற்றைக் கற்பதன் மூலமாக அறிந்து கொள்ள முடியும். அதற்குச் சிறந்த உதாரணமாக கண்டிச் சீமைக்கான பயணத்தைக் குறித்துக் காட்ட முடியும். அந்த வகையில் இந்தியக் கிராமங்களில் தொடங்கிய பயணம் முதலில் திருச்சி, துறையூர், சேலம், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி, அறந்தாங்கி, தஞ்சாவூர், விழுப்புரம், அரக்கோணம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ‘ஏஜென்சி ஆபிசுகளை’ அடைந்தது. பல்வேறு பொய்களைக் கூறி ‘ஆள் கட்டும்’ இடங்களாக அவை செயற்பட்டன. ஒப்பந்தக் கூலிகளைத் திரட்டவதற்காக ஆங்கிலத் துரைமார்கள் வழங்கிய பணத்தின் பெறுமதியை கங்காணிகளின் சிரித்த முகங்களும், ‘தங்கப் பற்களும்’ வெளிப்படுத்தின. அந்த நிலையங்களிலிருந்து இராமேஸ்வரம் கரையை அடையும் வரை பல நூறு கிலோ மீற்றர் தூரம் கால் நடையாகவே பயணித்த வரலாற்றை காலனித்துவ அடக்குமுறையினால் விளைந்த துன்பத்தின் இன்னுமொரு விளைவாகவே அடையாளங்காட்ட முடியும். எல்லாவிதமான துன்பங்களையும் தாங்கிக் கொண்டு கண்டிச் சீமையை அடைந்து விட்டால் இன்பமாக வாழலாம் என்ற உந்துதலே முக்கிய சக்தியானது. வரிசையாகப் பயணித்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், வறுமையின் அடையாளமாக தலைகளில் வைக்கப்பட்ட சிறு மூட்டையும் கங்காணிகளின் ஏச்சும், உரத்த சத்தங்களும் ஒரு மனித பேரவலத்தின் சாட்சியமாகவே அமைந்தன. அத்தனை துன்பங்களை எதிர்கொண்டமையையும் நம்பிக்கையுடன் பயணத்தைத் தொடர்ந்தமையையும் வாழ்க்கைக்கான போராட்டத்தின் தொடர்ச்சியாகவே அடையளங்காணலாம். உயிர்வாழ போராடுதல் என்பதே இதன் அடிப்படையாகும். கரையைக் கடத்தலும் இறங்குதலும் கப்பல் மற்றும் படகுகள் மூலமான பயணமானது மக்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டத்தின் உச்சத்தைத் தொட்டுச் செல்லும் சான்றுகளாகும். சிறு கப்பல்கள் மூலமான பயணம் புதிய அனுபவமாகவும், அச்சம் தரும் நிகழ்வாகவும் அமைந்து விட்டது. வாந்தியும் வயிற்றோட்டமும், ஒத்துவராத பயண நிலமைகளும், உயர்ந்து எழும் கடலலைகளின் காரணமாக ஏற்பட்ட பீதியும், குளிர் நடுக்கமும், கடல் நீரின் சாரலும் இவற்றால் ஏற்பட்ட விளைவுகளும் உழைக்கும் மக்கள் மீதான பாரிய அடக்குமுறைகளே. அளவுக்கதிகமாகப் பயணிகளை ஏற்றியதன் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் மிகச் சரியான வகையில் இடம்பெறவில்லை. அவை தொடர்பான செய்திகளும் குறைவாகவே காணப்படுகின்றன. தொழிலாளர்களில் சில ஆயிரம் பேர் விபத்துகளால் பலியாகும் சம்பவங்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு ஒரு பொருட்டாகவே அமைவதில்லை. அவர்களுக்கு இலாபமீட்டல் மட்டுமே குறிக்கோளாக இருக்கும் என்பதற்கு மலையகத்தில் இடம்பெற்ற சம்பவங்களையும் சியாம் இரயில் பாதையை அமைப்பதற்காக உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் மரணங்களையும் சிறந்த உதாரணங்களாகச் சுட்டிக்காட்ட முடியும். ஆதிலட்சுமி என்ற படகு மன்னார் வங்காலையிலிருந்து ஏறத்தாழ 150 டொன் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுடன் பயணித்த போது கடலில் மூழ்கிய சம்பவத்தை வரலாறு பதிவு செய்கிறது. 05.02.1864 அன்று அப்படகு கடலில் மூழ்கிய வேளையில் அதில் பயணித்த 120 தொழிலாளர்களில் 14 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாக செய்தி எழுதப்பட்டுள்ளது. அதே போல ‘சாரா ஆர்மி டேஜ்’ என்ற சிறு கப்பல் சிலாபத்துக்கு அருகில் சீறி எழுந்த பேரலையில் சிக்குண்டு மூழ்கியதில் 560 தொழிலாளர்கள் உயிரிழந்தமையை அக்காலத்தின் ஆளுநர் ஹென்றி வார்டின் பதிவு செய்துள்ளார். தமது உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழலிலும் கடுமையான போராட்டத்துடன் பயணித்து சிலோனை வந்தடைந்த தொழிலாளர்களின் வரலாறு, அடிப்படையில் போராட்டங்கள் நிறைந்தவை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். மன்னாரிலிருந்து மலையகத்திற்கு மன்னாரில் வந்திறங்கிய தொழிலாளர்களுக்கு இலங்கையை ஆட்சி செய்த காலனித்துவ முதலாளிகளின் நிருவாகத்தில் மென்மேலும் துன்பங்களே வந்து சேர்ந்தன. மன்னாரிலிருந்து ஏறத்தாழ 250 கிலோ மீற்றர் தூரத்தை கால் நடையாகவே நடந்து வந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும். அடர்ந்த வன்னிக் காட்டைக் கடந்து அனுராதபுரம், மாத்தளையைக் கடந்து கண்டிச் சீமையை அடைந்த வரலாறு உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கான போராட்டத்தின் அடுத்த படி நிலையாகும். மன்னாரிலிருந்து கொழும்பிற்கு சிறு கப்பல்கள் மூலமாகப் பயணித்து அங்கிருந்து புகையிரதம் மூலமாக கண்டிக்குச் செல்லும் வழி இருந்த போதிலும், போக்குவரத்துக்கான பணம் போதாமை காரணமாகவும், கங்காணிகளின் வட்டிப் பணம் கடனாக மாறும் என்ற காரணத்தாலும் கால்நடைப் பயணத்தையே மலையக மக்கள் மேற்கொண்டனர். கொலரா, மலேரியா, அம்மை போன்ற கொடிய நோய்களின் தாக்கம் காரணமாக வரும் வழியிலேயே பலர் மரணித்தனர். நோய்வாய்ப்பட்டவர்களை காட்டுப் பாதையிலேயே விட்டு வந்த நிகழ்வுகளை கேர்னல் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் பதிவு செய்துள்ளார். இதை விட தேள், பாம்பு போன்றனவற்றின் தீண்டுதலுக்குட்பட்டும் பலர் மடிந்தனர். குடிநீர் இன்றிய பயணமும் பசியும் மரண பயமும் உயிர் வாழ்வதற்கான பாரிய போராட்டமாகவே அமைந்தன. கண்டிச் சீமைக்குச் சென்றுவிட்டால் தொழில் செய்து வாழலாம் என்ற நம்பிக்கை மேலெழுந்து இருந்தமையே இம்மக்கள் போராடியதற்குக் காரணமாகும். ஆரம்ப காலம் பல்வேறுபட்ட இழப்புகளுக்குப் பின்னர் மலையகப் பிரதேசத்தை அடைந்த போது ஆங்கிலத் துரைமார்களினதும் கங்காணிகளினதும் அடக்குமுறையின் புதிய வடிவங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. மனிதக் காலடியே படாத காடுகளை அழித்து பசுஞ் சோலைகளை அமைப்பதற்காக தொழிலாளர்கள் தனது உயிரையே கொடுத்தனர். உழைப்பின் சாராம்சம், அதன் குவிப்பு மலைகளின் உச்சி வரை விரிந்தது. துரைமார்கள் ஆனந்தம் கொண்டாடக் கூடியதாக அனைத்தும் அமைக்கப்பட்டது. தேயிலை எனும் பச்சைத் தங்கம், இறப்பர் எனும் பால் கொட்டும் மரம் என்பன தன்னலங்கருதாத உழைப்பினால் சாத்தியமானது. ஆங்கிலத் துரைமார்கள் மலையகத்தின் எழிலை இரசித்து எழுதிய அளவுக்கு மக்களின் உழைப்புத் திரட்சியின் விளைவை பதிவு செய்ய முடியாமல் போனதற்கான காரணம் காலனித்துவ மன நிலையும் உழைப்புச் சுரண்டலின் தேவையுமாகும். “ஆங்கில முதலாளிகளால் குறிப்பாக தோட்டத் துரைமார்களால் அடையாளங்காணப்பட்ட பகுதிகள், இது வரை மனித குடியேற்றம் நிகழாத இடங்களாக இருந்தன. அவற்றை தேயிலைத் தோட்டங்களாக உருவாக்கிய கூலிகள் தனித்தன்மை கொண்டவர்களாவர்” எனக் குறிப்பிடுகின்றார் ஹென்றி வில்லியம். இவ்வாறு உருவாக்கப்பட்ட தோட்டங்கள் மூடிய நிலையிலேயே காணப்பட்டன. சகலதும் தோட்டத்துக்குள்ளே எனும் நிலை உருவாக்கப்பட்டிருந்தது. தொழிலாளர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியாதவாறு தோட்ட முகாமைத்துவம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மனிதாபிமானமற்ற, அடக்கு முறை சார்ந்ததாகவே நிருவாக நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. தொழிலாளர்கள் அதிகாலை முதல் மாலை இருள் பரவும் வரை தொடர்ந்து உழைக்கக் கூடிய வகையில் தோட்ட நிருவாகம் ஒழுங்கமைக்கப்பட்டது. தொழிலாளர்கள் வாழும் லயன் அறைகள், தொழில்முறை யாவும் அடக்குமுறையுடன் கூடிய நடவடிக்கைகளுக்குத் துணை புரிவனவாகவே அமைக்கப்பட்டன. வாழ்வதற்குப் பொருத்தமற்ற வீடுகள், சாதிய அடிப்படையிலான குடியிருப்புகள், உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட வெள்ளைக்காரன் பங்களா, ‘ஸ்டோர்’ நிருவாகிகளுக்கு அமைக்கப்பட்ட வீடுகள் போன்றனவற்றைச் அதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். குறைவான கூலியை வழங்கியதன் மூலம் தொழிலாளர்களைக் கடன் நிலையிலேயே வைத்திருந்தமை தோட்டங்களை விட்டு வெளியேற முடியாத சூழலை ஏற்படுத்தியது. கங்காணியினதும் துரைமார்களினதும் அடக்குமுறைக்குச் சாதகமாகவே, வழங்கப்பட்ட கூலியும் அமைந்திருந்தது. கங்காணிக்கு உரித்தான கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கியமை, பிழையான கணக்கு விபரங்கள் போன்றன கடன் சுமையை மேலும் இறுக்கியது. துண்டு முறையும் பற்றுச் சீட்டும் தொழிலாளர்களை தோட்டத்துக்குள்ளேயே அடக்கி வைத்தன. வெளியேற முயன்றவர்கள் கங்காணிகளால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். அடிமை முறையைப் பேணக்கூடியதாகவே சகல நடவடிக்கைளும் ஒழுங்கமைக்கப்பட்டன. தொழிலாளர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. இதன் காரணமாக நாளாந்த வாழ்வில் பல துன்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. நிருவாகத்திற்கு எதிரானவர்கள் ‘பற்றுச் சீட்டின்றி’ வெளியேற்றப்பட்டனர்; தாக்கப்பட்டனர். தொழிலாளர்கள் தமது கோபத்தை, வெறுப்பினைக் காட்டக் கூடியதாக மலைகளெங்கும் சாமிகளை உருவாக்கிக் கொண்டனர். அத்தகைய சாமிகளுக்கு சிவப்புப் பட்டு அல்லது துணியைக் கட்டியிருந்தனர். ‘நாசமா போக…அவன் வீட்டுல எழவு விழுக….கடவுளே நீ இருந்தா பார்த்துக்க’ என மண்ணை வாரி இறைத்துச் சாபமிட எவ்வித தடையும் இருக்கவில்லை. ஆனால் இந்த அடிமை முறை வாழ்வு நீண்ட காலத்திற்கு நிலைக்கவில்லை. தொழிற் சங்கம் என்ற சக்தி அவர்களை ஒன்று திரட்டியது. போராட்டம் எனும் ஆயுதத்தைக் கையிலெடுக்க வழி ஏற்பட்டது. வாழ்வதற்கான போராட்டம் என்பது தொழில் உரிமைக்கான போராட்டங்களாக வளர்ச்சி பெற்றமையானது தியாகங்களின் அறுவடையே எனத் துணியலாம். தொழிற்சங்கப் போராட்டங்கள் ஏறத்தாழ நூறு ஆண்டுகள் நீடித்த அடக்குமுறையுடன் கூடிய அடிமை முறை வாழ்வை மாற்றியமைப்பதில் தொழிற்சங்க நடவடிக்கைகள் பெரிதும் பங்களித்தன. தோட்டப்பகுதிகளில் தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு தொழிலாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாரிய சவாலுக்குரியதாகவே காணப்பட்டன. தொழிலாளர்கள் ஒன்று கூடுவதை துரைமார்களும் கங்காணிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. தொழிலாளர்களின் ஒருங்கிணைவு, பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தங்களது அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமையும் என்பதையும் தோட்ட நிருவாகம் நன்கு அறிந்திருந்தது. ரஷ்யப் புரட்சியின் விளைவுகளும் பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் இயக்கச் செயற்பாடுகளும் தோட்டத்து ராஜாக்களுக்கு பல எச்சரிக்கைகளை ஏற்கனவே வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றிணைவதற்கான முக்கிய சக்தியாக தொழிற்சங்கம் காணப்பட்டது. தொழிற்சங்கங்கள் தொடர்பான விளக்கத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதில் தேசபக்தன் கோ. நடேசையர் முக்கிய பங்கினை வகித்தார். 1905 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகளும் இதற்கு வாய்ப்பாக அமைந்தது. ‘தேசபக்தன்’ கோ. நடேசையர், இந்தியாவின் குஜராத் எனுமிடத்தில் பிறந்த மணிலால் மங்கன்லால் (28.07.1881 – 08.01.1956) எனும் தேசியவாதி, பொதுவுடைமைச் செயற்பாட்டாளனின் கருத்து மற்றும் நடவடிக்கைகளினால் கவரப்பட்டவராக இருந்தார். மணிலால் அவர்களால் வெளியிடப்பட்ட வாராந்தரப் பத்திரிகையான இந்துஸ்தானி தனிநபர் சுதந்திரம், ஒன்றிணையும் உரிமை மற்றும் இனங்களுக்குமான சமத்துவம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டிருந்தது. மணிலால் 1907 முதல் 1910 வரையிலான காலப்குதியில் மொறிசியஸ் நாட்டில் சட்டத்துறை சார்ந்த கடமைகளை முன்னெடுத்தார். அந்த நாட்டில் வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதற்கான அடிப்படைகளை வழங்கி இருந்தார். அவரது போராட்ட அரசியல் செயற்பாடுகள் காரணமாக பிஜி நாடு அவரை அங்கிருந்து வெளியேற்றியது. அவர் இலங்கையில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை நேரடியாகக் கண்டறிந்தார். நடேசையர் அவர்களும் அவரது மனைவியான மீனாட்சியம்மாள் அவர்களும் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கும் தொழிற்சங்கத்தை அமைத்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் மணிலால் பெரிதும் உதவினார். எனினும் மணிலால் சிலோனில் தங்கியிருக்க பிரித்தானிய ஆட்சியாளர்கள் அனுமதி அளிக்கவில்லை. ஆரம்ப காலங்களில் தொழிற்சங்கங்களை அமைப்பது என்பது இலகுவானதாக அமையவில்லை. வெள்ளைக்காரத் துரைமார் மற்றும் கங்காணிகளின் கண்டிப்பு, நோட்டம் விடுதல், கருங்காலிகளைப் பயன்படுத்துதல், காவல்காரனைப் பயன்படுத்துதல், பேச்சுக் கொடுத்துப் பார்த்தல் என பல உத்திகளைப் பயன்படுத்தி தொழிற் சங்கம் பற்றி கதைப்போரை கண்டறிதல், தோட்டத்தை விட்டு பற்றுச்சீட்டில்லாமல் வெளியேற்றல், கட்டி வைத்து அடித்தல், பொலிஸ்காரர்களின் ஒத்துழைப்புடன் அடக்குமுறையை முன்னெடுத்தல், காயப்படுத்துதல், காவலில் வைத்தல், சிறைக்கு அனுப்புதல், சுட்டுக் கொல்லுதல் என நீண்டது அடக்குமுறை. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து துன்பங்களை ஏற்று தொழிற் சங்கத்தை அமைத்த தொழிலாளர்களின் போராட்ட வல்லமை இறுதியில் வெற்றியடைந்தது. இரகசியச் சந்திப்பு, இரவில் கூடுதல், வேலைத்தலத்தில் கதைத்தல் போன்ற நுட்பங்களை அவர்கள் கண்டறிந்தனர். தோட்டத் துரைமார்கள், கங்காணிகள், காட்டிக் கொடுப்போர் ஆகியவர்களோடு பொலிசும் இணைந்து எதிர் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும் தொழிற்சங்கம் அமைப்பதில் தொழிலாளர் வெற்றி பெற்றமை போராட்ட வரலாற்றில் உச்சம் தொட்ட நிகழ்வு எனக் குறிப்பிடலாம். தொழிற் சங்கங்களை அமைப்பதற்கான போராட்டங்கள் தொழிலாளர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழிமுறையாக தொழிற்சங்க இயக்கம் அமைந்தது. தனியாகவும் கூட்டாகவும் செயற்பட்டதன் விளைவாக தொழிற்சங்க நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டன. இலங்கை இந்தியன் காங்கிரஸ், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், செங்கொடிச் சங்கம் போன்ற தொழிற் சங்கங்கள் இவ்வகையில் தோற்றுவிக்கப்பட்டவையே ஆகும். கம்பனித் தோட்டங்களில் தொழிற்சங்கங்களை ஆரம்பிப்பதை விட தனியார் தோட்டங்களில் தாபிப்பது பெரும் சவாலுக்குரியதாக இருந்தது. தோட்டச் சொந்தக்காரனும் பொலிசாரும் இணைந்து தொழிற் சங்கங்களுக்கு எதிராக செயற்பட்டதன் விளைவு பல தொழிலாளர்கள் காயப்படுவதற்கும், உயிரிழப்பதற்கும் காரணமாக அமைந்தன. தோட்டங்களுக்கு அருகில் காணப்பட்ட கிராமங்களில் வாழ்ந்த இனவாதக் காடையர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை தாக்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளன. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களில் கொட்டியாகலை தோட்டத்தில் 1939 ஆம் ஆண்டில் இடம் பெற்ற போராட்டம் முக்கியமானதாகும். மது விற்பனை மற்றும் சூது விளையாட்டு ஆகியவற்றுக்கெதிராக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வெள்ளைக்காரத் துரையால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதிராக பல அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இறுதியில் தொழிலாளர் வெற்றியடைந்தனர். பிற்காலத்தில் தொழிற்சங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பினை இப்போராட்டம் பெற்றுக் கொடுத்தது. அக்காலத்து தொழிலாளர் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றிய ஜிம்சன் பின், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை இந்தியத் தொழிலாளர் முன்னெடுத்த முக்கியப் போராட்டமாகவும் பிற்காலத்தில் பல வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு வித்திட்டதாகவும் குறிப்பிடுகின்றார். அதே காலத்தில் பொலிஸ் மா அதிபராகச் செயற்பட்ட பி.என். பேங்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளதை நடேசன் எஸ். (1993) தனது நூலில் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார். “பல்வேறு காரணிகளின் செல்வாக்குக் காரணமாக தொழிலாளர்கள் அரசியல் சிந்தனையுடன் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. அவர்கள் தற்போதைய வாழ்க்கை மற்றும் தொழில் ஆகியன தொடர்பில் திருப்தியாக இல்லை. அதன் காரணமாக வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். தோட்டத் துரைமார்கள் இத்தகைய போராட்டக்காரர்களை வெளியேற்ற நீதிமன்ற ஆணைகளைப் பெற்றுள்ளனர். ஆகவே பொலிஸார் எத்தகைய நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.” பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டங்களின் போது தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே தீர்மானங்கள் மேற்கொள்ளபட்டுள்ளன என்பதை இதன் மூலமாக அறிய முடிகின்றது. கண்டி, நுவரெலியாப் பகுதிகளில் தொழிற்சங்கம் அமைக்கும் போராட்டம் வெற்றி அடைந்தாலும் இரத்தினபுரிப் பகுதியில் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது கடினமாகவே இருந்தது. 1945 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து வருகை தந்த குட்டிப்பிள்ளை எனும் பெயருடைய செயற்பாட்டாளனின் முயற்சியால் மயிலிட்டியா தோட்டதில் இலங்கை இந்தியன் காங்கிரஸ் அமைக்கப்பட்டது. பல்வேறு அடக்குமுறைகளை வெற்றி கொண்ட எண்ணூறு தொழிலாளர்கள் தொழிற்சங்க அங்கத்தவர் ஆனார்கள். தொழிலாளர் போர்க்குணம் வெற்றியடைந்தது. 1953 ஆம் ஆண்டு சாமிமலைப் பகுதியைச் சேர்ந்த மீரியாகோட்டை தோட்டத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டத்தில் தோட்ட முதலாளிக்கு ஆதரவாகச் செயற்பட்ட பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தமையால் பதினேழு தொழிலாளர்கள் காயமடைந்ததோடு பி. வெள்ளையன் என்ற தொழிலாளி மரணமானார். அவ்வாறே 1957 ஆம் ஆண்டு தொழிற்சங்க காரியாலயம் ஒன்றை உடபுசல்லாவ நகரில் அமைப்பதற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக கொம்பாடி மற்றும் பொன்னையா ஆகிய இரு தொழிலாளர்கள் தியாகி ஆனார்கள். இந்த தொழிற்சங்க காரியாலயத்தை அமைப்பதற்கு எதிராக நகர வர்த்தகர்களும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் தொடர் போராட்டத்தின் மூலமாக தொழிற்சங்க காரியாலயம் அமைக்கும் உரிமையும் வென்றெடுக்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டு நாவலப்பிட்டிக்கு அருகிலுள்ள மொன்டிசிரஸ்டோ தோட்டத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டம் உக்கிரமாக முன்னெடுக்கப்பட்ட போது ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன் ஆகிய தொழிலாளர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். தொழிற்சங்கத் தலைவர்கள் கிராமத்தைச் சேர்ந்த காடையர்களால் தாக்கப்பட்டனர். தொழிற்சங்கத்தை கட்டி எழுப்புவதற்கு பெரும் தடையாக இருந்த தோட்டத் துரைமார்கள் மற்றும் முதலாளிகள் தொழிற்சங்க செயற்பாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உதாரணமாக, பத்தனை டெவன் தோட்டத்தில், தொழிலாளர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்த போது தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். மு. வைத்திலிங்கம் என்ற தொழிலாளி கொலை செய்யப்பட்டார். தோட்டத் தொழிலாளர்கள் வேலை நேரத்தில் சுகயீனம் அடைகின்றபோது, விபத்துகளை சந்திக்கும் போது, அல்லது கரப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது, வாகனம் கோரிப் பெறுவது என்பது கால தாமதத்தை ஏற்படுத்தும் செயலாகும். அதற்கான அனுமதி பெறுவது, போக்குவரத்துப் பாதைகள் முறையாக இல்லாமை, இனவாதம் போன்ற காரணங்களால் உரிய வேளைக்கு வைத்தியசாலைக்குச் செல்லாமையினால் பலர் உயிரிழந்துள்ளனர். தோட்ட வைத்தியசாலைகளிலும் முறையான மருத்துவ உதவியைப் பெற முடியாது. வாகன வசதியைப் பெறுவதற்குக் கூட பாரிய போராட்டங்களை தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ளனர். பதுளை, குயினஸ்டவுன் நகருக்கு அண்மையிலுள்ள சினாக்கொல்லை தோட்டத்தில் 1970 ஆம் ஆண்டு இதற்கான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சுமார் தொண்ணூறு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப்போராட்டத்தை அடக்குவதற்கு வழமை போல பொலிஸ் உதவி கோரப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதில் லெட்சுமண் அழகர் மற்றும் பெருமாள் இராமையா ஆகியோர் உயிரிழந்தனர். பாரிய போராட்டம் வெடித்தது. தொழிலாளர் போராடி வென்றனர். ஆரம்ப காலத்தில் தொழிங்சங்கங்கள் தொழிலாளர் சார்பாக செயற்பட்ட போதிலும் 1950 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்தப் போக்கிலிருந்து நழுவிச் சென்றமையைக் காண முடியும். அவை தொழிலாளர் ஒற்றுமையைச் சிதைத்ததோடு சில சந்தர்ப்பங்களில் தோட்ட நிருவாகத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட போக்கும் பதிவாகி உள்ளது. 1956 ஆம் ஆண்டில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகிய அப்துல் அசீஸ், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் தொழிற்சங்கத்தை அமைத்தார். இவ்விரு தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக பல மோதல்கள் இடம் பெற்றுள்ளன. ஐக்கியத்துக்காகப் போராட வேண்டிய தலைமைத்துவம், தொழிலாளர்களிடையே முரண்பாடுகளை விதைத்த வரலாறு இன்று வரை தொடர்வதைக் காணலாம். தொழிற்சங்கப் பலம், தொழிலாளர் நலன், உரிமைகளுக்காகப் போராடுதல், ஐக்கியத்தை வலுப்படுத்தல் போன்ற மகோன்னதமான தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கைவிட்ட தொழிற்சங்கங்களை இன்றும் காண முடியும். மலையகச் சமூகம் தனது அடையாளத்தை வென்றெடுக்க முடியாமல் இருப்பதற்கும் தொழிங்சங்க உரிமைகளை தொடர்ந்து பாதுகாத்து மேம்படுத்திக்கொள்ள முடியாமல் வலுவிழந்து நிற்பதற்கும் இத்தகைய பிற்போக்குத் தொழிற்சங்கங்களே காரணமாகும். 1956 ஆம் ஆண்டு மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த நல்லதண்ணி தோட்டத்தில் தொழிற்சங்க மோதல் காரணமாக நாற்பது தொழிலாளர்கள் கைது செய்யப்பட்னர். தோட்ட நிருவாகத்தின் கையாட்களால் இளம் தொழிலாளி பெ. கருமலை என்பவர் கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டில் நிகழ்ந்த தொழிற்சங்க மோதல் காரணமாக இருபத்து மூன்று வயது நிரம்பிய அப்புஹாமி ஏப்ரகாம் சிங்கோ எனும் பெயருடைய தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையைத் தொடர்ந்து தொழிலாளர்கள் நாற்பத்தெட்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. ஒரு தோட்டத்தில் ஒரு தொழிற்சங்கம் மட்டும் என்ற நிலையை மாற்றி தொழிலாளர்களின் தெரிவுக்கேற்ப மாற்றுத் தொழிற்சங்கத்தையும் அமைக்கலாம் என்ற உரிமை இந்தப் போராட்டத்தின் மூலமாக வெற்றி கொள்ளப்பட்டது. தோட்டத் துரைமார்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாகவும் தொழிலாளரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. நிருவாகத்திற்கு ஆதரவான ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதன் மூலமாக தொழிலாளரிடையே காணப்படும் ஒற்றுமையைக் குலைக்க மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 1959 ஆம் ஆண்டு மாத்தளை எல்கடுவ தோட்டத்து தொழிலாளி காலக்கார முத்துசாமி கொலை செய்யப்பட்டார். அதே பகுதியில் 1964 ஆம் ஆண்டு கந்தே நுவர தோட்டத்தில் நிருவாகத்திற்கு ஆதரவாகச் செயற்பட்ட பிற்போக்குத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அழகர் மற்றும் ரெங்கசாமி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். செங்கொடிச் சங்கத்துக்கு எதிராக, நிருவாகமும் மக்கள் விரோதத் தொழிற்சங்கமும் செயற்பட்ட போதிலும் பெரும்பாலான தொழிலாளர்கள் செங்கொடிச் சங்கத்தையே ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. துரைமார் மற்றும் பொலிஸார் இணைந்து தொழிலாளருக்கு எதிராகச் செயற்பட்டது போல தோட்டத்தில் வேலை செய்யும் கணக்குப்பிள்ளை, கண்டாக்கு, தொழிற்சாலைக் காவல்காரன் போன்ற ‘சிறு துரைமார்’களின் கெடுபிடி காரணமாகவும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1967 ஆம் ஆண்டு மடுல்கலை சின்ன கிளாப்போக்கு தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் அழகன் சோணை என்ற தொழிலாளி கணக்குப்பிள்ளையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், மயிலிட்டியா தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது தொழிற்சாலை காவலாளி துப்பாக்கியால் சுட்டதில் அந்தோனிசாமி எனும் தொழிலாளி தியாகி ஆனதும், 1970 ஆம் ஆண்டில் மாத்தளை கருங்காலி (நாளந்தா) தோட்டத்தில் காவல்காரன் சுட்டதில் மரணமான பார்வதி (18 வயது), கந்தையா, இராமசாமி என்ற சிறுவன் ஆகியோர் மரணமானதும் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். தொடரும். https://ezhunaonline.com/compilation/trade-union-movement-in-upcountry-sri-lanka-part1/ - யாழில் முதியவர் உயிர்மாய்ப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.