Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. செல்லம்மாப்பாட்டி. (சிறுகதை) செல்லம்மா பாட்டிக்கு வாடிக்கை யாளர்கள்ரஎல்லாம் சின்னப் புள்ளைங்க தான் காலங்காத்தால அஞ்சுமணிக்கி அடுப்புப்பத்தவைச்சி குழிப்பணியாரம் இட்லி சூடா பாசிப்பருப்பு சாம்பார் தேங்காசட்ணி காரச்சட்டிணியோட தெருவோரத்துல கடைபோட்டுருக்கும் சின்னபுள்ளக கொடுவாய் கூடக்கழுவாம தூக்குபோணியும் காசுமா வந்து நிக்கும் அப்பத்தா எனக்கு ரெண்டு இட்லி மூணுபணியாரம்ன்னு. அவுகளோட அம்மா மாருக செலபேரு கூட வருவாக செலபேரு புள்ளகிட்ட குடுத்து விட்டுருவாக. பல்லக் கூடவெளக்காம பிள்ளக பணியாரம் வாங்க வந்துடும். சின்னபுள்ளகளுக்காகவே காரமில்லாத சாம்பார் சட்டிணி இருக்கும் காரசாரமா வேணுங்குறவுக காரச்சட்டிணி சுள்ளுன்னு தனியா இருக்கும் வாங்கிக்கலாம். அம்புட்டும் அம்புட்டு ருசியா இருக்கும் வீட்டுல எல்லாராலயும் தெனம் இட்லி சுடமுடியாது. பச்ச புள்ளகளுக்கு செல்லம்மா இட்லிக்கடைதான் கைகொடுக்கும். அதேமாதிரி வயசானவுகளும் வந்து பக்கத்துல ஒக்காந்து சுடச்சுட வாங்கிச்சாப்புடுவாக ரம்சான் மாசத்துல மாத்திரம் சாயங்காலமும் கடை தெறக்கும் பாட்டி. நோம்பு தொறக்குற நேரத்துல இட்லி பணியாரம் மொத்த மொத்தமா வாங்கிட்டுப்போவாக பாய் மாருக அதேபோல மசூதிக்கும் வாங்கிட்டுப்போயி எல்லாருக்கும் வாசல்ல தானமாக் குடுப்பாகஅப்ப எல்லாம் நல்ல வருமானம் பாட்டிக்கு ஆனா என்ன மாவாட்டி இடுப்பு ஒடஞ்சுபோயிடும். அப்பெல்லாம் கிரைண்டர் வரல . எல்லாம் கைலதான் ஆட்டனும் பாய்மாருக விசேசத்துக்குக் கூட வீட்டுல போயி இட்லி வடை பணியாரம் செஞ்சுகுடுக்கும். நல்லா கவனிப்பாக சேல துணிமணி காசெல்லாம் நல்லா குடுப்பாக. காலையில பத்துமணிக்கு வியாபாரம் முடிச்சிட்டு காசக் கொண்டுபோயி நாடார்கடைல மொதநா வாங்குன அரிசி பருப்பு உளுந்து காய்கறிக்கெல்லாம் காசக்குடுத்துட்டு அன்னிக்கி வேணுங்குறத வாங்கிட்டு வரும் பாட்டி. அப்புறம் ஊரைவைச்சிட்டு சாயங்காலமா மாவாட்டும். கடையிலயே நெலவரத்தைபாத்துட்டு சோறுவடிக்கும் இட்லி பணியாரம் மீந்துபோச்சுன்னா அதுதான் அன்னிக்கிசாப்பாடு பாட்டிக்குக் மகனுக்கும் பாட்டி அவரோட புருசன் போனதில இருந்து இதை வைச்சித்தான் பொழப்பு ஓட்டுச்சு அவ்வளவு செரமத்துலயும் மகன மாவாட்ட விடாது. அதுதான் ஆட்டும். ஒடம்பு கிடம்பு அதுக்கு சரியில்லாமபோச்சுன்னா கடை தொறக்காது. சின்னபுள்ளக சாப்புடுறது ஒட்டுவாரொட்டி மாதிரி புள்ளைகளுக்கு நோவு ஒட்டிக்கிடும்னு சொல்லும் . பாட்டி கடதொறக்கலைன்னா சின்ன புள்ளகள அவுக அம்மா மார்களால சமாதானப்படுத்த முடியாது இந்தகஸ்டத்துலயும் மகன நல்லாப் படிக்கவைச்சாங்க பாட்டி. அவனும் நல்லாபடிச்சி நல்ல வேலைக்கிப்போனான் வேலைக்கிபோனதும் அவன் செஞ்ச மொதவேலை கடையமூடும்மா. நீ கஸ்டப்பட்டது போதும்ன்னு சொன்னான். அதுக்கு பாட்டிசொல்லிச்சி வருமானத்துக்காக கடை வைச்சோம்தான். ஆனா அதைவிட முக்கியமானது அந்த சின்னபுள்ளக வயிறு ரொம்புறது. அந்த பாக்கியம் எல்லாருக்கும் கெடைக்காதுன்னு சொல்லுச்சு. அவனும் வேறவழியில்லாம கிரைண்டர் மிக்ஸி யெல்லாம் வாங்கிக்குடுத்தான். கடை ஓடிச்சி. அப்பத்தான் கலியாணம் பேசுச்சு பாட்டி மகனுக்கு. ந்ல்ல இடம் கெடச்சது. அவங்கபோட்ட ஒரே கண்டிசன் இட்லிக்கடைய மூடனும்றது இப்ப பாட்டியால ஒண்ணும் சொல்ல முடியல ஒத்துகிச்சி. கலியாணத்துக்கு மொதநாளு பெரிய விருந்து . விருப்பம்போல உணவு அதான் பப்பெட் சாப்பாடு . பொண்ணுவீட்டுல இருந்து ஏற்பாடு பண்ணிருந்தாக. பாட்டி மகன் கிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்டுச்சு. அந்த விருந்துல ஓரமா இட்லியும் பணியாரமும் வைக்கனும் அத நாந்தான் செய்வேண்ணு சொல்லிடுச்சு. அவனும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டான் விருந்தும் ஆரம்பிச்சிச்சு. விருந்துக்கு வந்த இவன் கூட வேலபாக்குறவுக சாம்பிளுக்கு சாப்பிட ஆரம்பிச்சு. அடாடா விருந்து அப்ப அப்ப நடக்குறதுதான் . பாட்டி இட்லி பணியாரம் வித்யாசமா .ரொம்ப நல்லாருக்கேன்னு சாப்பிட ஆரம்பிச்சு....வந்தவுகல்ல பாதிப்பேருக்குமேல இட்லி பணியாரம் பக்கம் வந்துட்டாக சீக்கிரமே தீந்துபோச்சு. விருந்துக்கு வந்தவுகளெல்லாம் இதைப்பத்தியே பேசுனாக பாட்டிக்கு ரொம்பச்சந்தோசமாஆச்சு. அங்க வந்திருந்த ஒரு முக்கிய பிரமுகர் சொன்னாரு. செஞ்ச தொழில மறக்காம இருக்குறது பெரிய விசயம். ஏன்னா செய்யிற தொழில்ல ரொம்ப புண்ணியம் தாரது இதுதான் அதுல கவுரவக்கொறச்சல் ஏதுமில்ல. மனசாறப் பாராட்டுறேன்னாரு. இதை ஒருத்தரு யூடுயூப்ல எடுத்து அப்லோடு பண்ணாரு. லைக்கும் கமெண்டும் குவிஞ்சிச்சி. பாட்டிக்கு ரொம்பசந்தோசமா ஆயிடுச்சி. இப்ப சம்பந்திக சொன்னாங்க பாட்டி தாரளமா கடை வச்சிக்கட்டும்னு. சீக்கிரமே பாட்டி இட்லிக்கடை தொறந்துச்சு அப்புடி கொஞ்சநாளு ஓடுச்சு ஒருநா செல்லம்மாப் பாட்டி செத்துபோச்சு அன்னிக்கி கடைதெறக்கல அப்பயும் ரெண்டு சின்னப்புள்ளக தூக்குப்போணியோட கடைக்கிட்ட நின்னுக்கிட்டு இருந்துச்சுக ஒரு அம்மா வந்துசொல்லிச்சு பாட்டி இனிமே கடதொறக்காதுன்னு அதுகளுக்குப்புரியல அதுல ஒண்ணு வீட்டுக்கேபோயிடுச்சு. அங்க எல்லாரும் அழுதுகிட்டு இருந்தாக. எதுக்குன்னு அதுக்குப்புரியல. அதுபாட்டுக்கு பாட்டிகிட்டபோயி பாட்டி எந்திரிச்சி வா வந்து இட்லிகுடு பசிக்குத்துன்னு சொல்லி அழுதுச்சு பாத்தவுக கண்ணு கலங்கிடுச்சு] கவிச்சிகரம் அ.முத்துவிஜயன் சந்திரோதயம் ·
  2. கவிஞர் பளநிபாரதியவர்களின் கவிதை ஒன்று படிக்கும் போது இங்கு பதிவிடத் தோன்றியது அதனால் இங்கு இணைக்கிறேன்..எமது நாடு பற்றியது. அங்கே நான் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் அது கருணையற்ற நிலம் பிரிவின் யுகாந்த வெள்ளத்தில் அது மூழ்கடிக்கப்பட்டது காதலற்ற சொற்களின் முள்வேலியால் சுற்றி வளைக்கப்பட்டது அங்கே நான் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் காதலர் சந்தித்த மரங்கள் வெறுமையின் காலவெளியில் கல்மரங்களான காடு கைவிடப்பட்ட இதயங்கள் நடுகற்களாக புதையுண்டிருக்கின்றன சபிக்கப்பட்ட காதலர் அங்கே கற்களை உண்ணும் புறாக்களாக அலைந்து திரிகிறார்கள் அங்கே நான் உன்னை அழைத்துச் செல்லமாட்டேன் வாழ்வை விட அழகானவள் நீ மரணத்தைவிட உறுதியானவன் நான் அங்கே நான் உன்னை ஒருபோதும் அழைத்துச் செல்லமாட்டேன் #பழநிபாரதி
  3. இதிலும் பார்க்க இப்படியானவர்கள் ஏதோ ஒன்றை சாப்பிட்டு கொண்டு அங்கயே இருந்திருக்கலாம்....
  4. வேறு விதமான வெத்து இலை களும் போட பழகீட்டினம் என்று கேள்வி .ஆகவே அந்த வெத்திலையின் தாக்கம் என்றும் சொல்லலாம்..எல்லாம் ஒவ்வொரு விதமான சக்தியைக் கொடுப்பவை தானே.விடுங்கோ..😀
  5. யோ புரட்சி நாய்களுக்கு இடையே நடாத்தப்பட்ட ஓட்டப்போட்டியின் போதான பதிவுகள். இந்தப் பகுதிக்குள் இணைப்பது தவறு என்று நினைக்கிறேன்..இப்படியும் ஒரு போட்டி பாருங்கள்..மிருகவதை.😒
  6. அந்தப் பிள்ளையின் இறப்பால் துயர் உற்று இருக்கும் குடுமபத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு..🙏 இதில் கருத்து பகிரும் உறவுகள் தயவு செய்து இந்தப் பதிவோடு விட்டு விடுங்கள்..ஒரு பெண் பிள்ளையின் இறப்பில் கூட உங்களுக்கு வேண்டாத விமர்சனம் வேணுமா..உங்களால் ஏன் அந்த பிள்ளையை உங்கள் சகோதரியாக இல்லை ஒரு பெண் பிள்ளையாக தன்னும் நினைக்க முடியாதிருக்கிறது..?தவறாக நான் எதுவும் பகிரவில்லை..கடந்த சில நாட்களாக இந்தப் பகுதி படும் பாட்டை பார்த்து விட்டு தான் இந்தக் கருத்தை பகிர்கிறேன்.
  7. சத்தியமா எனக்கும் இந்தப் படம் ஒட்டுறதில பிரச்சனை இருக்கிறது.உள் பெட்டிப் பக்கம் படம் ஒட்டினால் ஒன்றில் வராது அப்படி இல்ல என்று வந்தால் பாதி படம் மற்றும் பந்தியாக ஏதும் இணைத்தாலும் பாதி தான் பார்க்க கூடியதாக இருக்கும்.சில வேளைகளில் கொஞ்சம் பெரிதானவற்றை இணைக்கும் போது இப்படியான தவறுகள் ஏற்படுகிறதோ தெரியாது..
  8. உடற்றும் பிணி – அருணா சிற்றரசு சிறுகதை | வாசகசாலை வாசகசாலைJanuary 5, 20240 1,060 7 நிமிடம் படிக்க Facebook X Share via Email Print “ உங்களுக்கு இவன் மட்டும்தானா? இல்ல..! வேற குழந்தைகள் இருக்கா?” இந்தக் கேள்விக்குள் காத்திருக்கும் மாபெரும் இன்னலைக் கூடுமானவரைக் கணித்து விட்டாள் ரோகினி. மகனைப் பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் இந்தக் கேள்வியைச் சாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அதை அப்படிக் கடக்கவில்லை. “வேறொரு பிள்ளை இருக்கிறதா?! மனதைத் தேற்றிக்கொள். உன் மகனுக்கு நாள்பட்ட நோய் ஒன்று உறுதியாகிவிட்டது” என்பதைச் சொல்வதற்கான முன்னோட்டமாகத்தான் அவர் அப்படிக் கேட்டிருப்பார் என்ற உறுதிக்கு மிக அருகில் இருந்தாள். “இந்த மருந்துகளைக் கொடுங்கள். ஆறு வாரம் கழித்துதான் நோயை உறுதி செய்ய முடியும்” எனச் சொல்லி அனுப்பி விட்டார் மருத்துவர். பத்து வயது மகனை இடுப்பில் தூக்கிக் கொண்டு இதயம் கனக்க படிக்கட்டுகள் வழி இறங்கினாள். மின் தூக்கி பற்றி சிந்திக்க அவளிடம் போதிய நிதானம் இல்லை. மகனின் நோய் அறிகுறிகள் அத்தனையும் பொல்லாத நோய் ஒன்றிற்கான அம்சங்களை ஐந்தாறு பொருத்தங்களுடன் வைத்திருந்தது. துள்ளித் திரிந்த மகன் திடும் என நோயில் விழுந்ததில் தடுமாறித்தான் போயிருந்தாள் ரோகினி. துவண்டிருந்த மகன் அவளின் இடது பக்க கழுத்தில் முகம் வைத்து சிரமத்துடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவனின் நீண்ட கால்கள் அவள் இடுப்பிலிருந்து முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டிருந்தன. இடுப்பில் வைக்கும் வயதைக் கடந்த குழந்தை அவன். நோய்க்குள் விழவில்லையென்றால் இந்நேரம் படிகளைத் தாவிக் கடந்திருப்பான். இரண்டு நாள்கள் முன்பு வரை இல்லாத அந்த நோய் இப்போது ஆட்சி அதிகாரம் கைப்பற்றிய கொடுங்கோலன் போல் விருப்பம் போல் அவர்களை ஆட்டுவிக்கத் துவங்கியது. காத்திருப்போர் அறையில் ஓர் இருக்கையில் மகனை உட்கார வைத்துவிட்டு, தான் பதிவு செய்திருந்த வண்டிக்காக காத்திருந்தாள் ரோகினி. அந்த அறை முழுவதும் நோய். படிக்கட்டுகள், வாயிலோரம், ஜன்னலோரம் என மூலை முடுக்கிலும் நோய்கள். ஒருவர் முகத்திலும் இளக்கமே இல்லை. கையில் வண்ண வண்ண கோப்புகளுடன் நோய்களைத் தாங்கியிருந்தனர். பெரியவர்களின் நோய்க்கு இல்லாத சிறப்பு வகை கூர்மையும் வலுவும் குழந்தைகள் நோய்க்கு உண்டு. அங்கே நிற்பவர்கள் அத்தனை பேரும் பிஞ்சுகளின் நோய்களைச் சுமந்து கொண்டு நின்றனர். பிறந்து ஐந்து நாள்களே ஆன குழந்தை ஒன்றின் மணிக்கட்டு நரம்புகளில் மருந்தேற்றத்திற்கான ஊசி, தைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. சீரழிந்த வாழ்வொன்றின் மிச்சமாக இருந்த நடுவயதுப் பெண் ஒருத்தி தன் மகளின் மூத்திரப்பையை அதற்கென வடிவமைத்த தோல்பை ஒன்றில் வைத்திருந்தாள். அவள் மகளின் கழுத்து ஒரு பக்கம் தொங்கியபடி நடுங்கிக் கொண்டே இருந்தது. அந்த நடுக்கத்துடன் ஏதேதோ தன் அம்மாவிடம் அவள் பேசிக்கொண்டே இருந்தாள். ‘ஆம்.. இல்லை’ என்ற தொனியில் மகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே தங்கள் முறை வருகிறதா என டோக்கன் அழைக்கும் பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த அம்மா. தன் பிள்ளையின் பரிசோதனை முடிவை வாங்கிய ஒரு தந்தை அப்படியே சரிந்து அமர்ந்தார். தலையில் கைகளை வைத்து முடிகளைப் பிய்த்துக் கொண்டு பின் மெல்ல முகத்திற்கு கைகளைச் சரித்தார். மொத்த முகத்தையும் தன் இரண்டு கைகளுக்குள் புதைத்தவர் பின் இரண்டு கண்களையும் தேய்த்துக் கொண்டார். அவருக்கு நேர் எதிரே ஐந்து வயது என சொல்லத்தக்க பெண் குழந்தை ஒன்று வெள்ளை நிறக் கவுனில் நீலப் பூக்கள் விரவ நின்று கொண்டிருந்தாள். அவளின் அம்மா யாருடனோ மிகத் தீவிரமாக கைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். அந்த நீலப்பூ குழந்தை ரோகினியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தது. ரோகினியும் அவள் பார்வையை அகற்றவில்லை. நீலப்பூவை ஊடுருவும் போதே ரோகினிக்கு அக்குழந்தையின் உருவம் வேறு ஒருவரின் சாயலைக் குழைத்துத் தந்தது. ரோகினியுடன் ஏழாம் வகுப்பு படித்த இலக்கியாவின் தங்கையின் சாயல் அது. இலக்கியாவின் பெயர் நினைவில் இருக்கிறதே தவிர அவள் தங்கையின் பெயர் நினைவில் இல்லை. அந்த ஆண்டில் புது மாணவியாகச் சேர்ந்தவள் இலக்கியா. அவள் பள்ளிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தன் தங்கையையும் அழைத்து வருவாள். தூக்கித்தான் வருவாள் என்று சொன்னால் இன்னும் பொருந்தும். பிறந்து சில நாள்களே ஆன குரங்குக் குட்டி போலவே அவள் தங்கை இருப்பாள். பார்த்தாலே சொல்லிவிடலாம் தக்கை கூட அவளை விட கூடுதல் எடையாக இருக்கும் என. வட்டமான முகத்தில் கன்னங்கள் மட்டும் உப்பலாக இருக்கும். கண்களில் உயிரே இல்லாமல் இதோ இப்போது சாகப்போகிறேன் என்ற அறிவிப்பை ஒவ்வொரு நாளும் தெரிவித்துக் கொண்டிருக்கும். இலக்கியா சரியாகப் படிப்பதில்லை என ஆசிரியர்கள் திட்டிக் கொண்டிருந்தாலும் சிறுநீர் கழித்து விட்ட தன் தங்கையின் உடைகளைச் சரிசெய்து கொண்டிருப்பாள். விளையாட வந்தாலும் இடுப்பில் தங்கை, அங்காடிக்கு வந்தாலும் இடுப்பில் தங்கை, ஆற்றுக்கு வந்தாலும் இடுப்பில் தங்கை என தங்கையை அவள் உடலின் ஒரு பாகமாகவே வைத்திருந்தாள். இலக்கியாவின் தங்கையைத் தானும் தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரோகினிக்கு. கோவிலுக்குத் தூக்கி வந்திருந்த ஒரு வெள்ளிக் கிழமையில் இலக்கியாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் ரோகினி. ஒரு கட்டத்தில் “ஒரு முறைதான் தருவேன், இனி கேட்கக்கூடாது” என்ற நிபந்தனையுடன் தங்கையைக் கைமாற்றினாள் இலக்கியா. தன் இடுப்பில் வாங்கியபோதுதான் ரோகினி உணர்ந்தாள். அவள் நினைத்திருந்த வகையான எடை அல்ல அது. நன்கு கனத்தாள் தங்கை. அவள் மீது அழுகிக்கொண்டிருக்கும் தோலின் வீச்சம் இருந்தது. அவளின் உதடுகள் ஈரமற்று வெடிப்புகளுக்குள் புதைந்திருந்தன. எங்கேயாவது அமர வைத்தால் அப்படியே அமர்ந்து கொண்டிருப்பாள் தங்கை. கால்கள் மட்டும்தான் வேலை செய்யாது. மார்பு கூடாக முன்னோக்கி நீண்டு ஒரு கைப்பிடி அளவில் இருக்கும். கழுத்திற்கு கீழ் எலும்புகளின் இருப்பு அப்பட்டமாய்த் தெரியும். வயிறு உருண்டையாக உருட்டிக்கொண்டு சுரக்குடுக்கை போல் வடிவாய் இருக்கும். கைகள் அளவு குறைந்து உடலில் பெயருக்குக் குத்திவைத்தது போல் இருக்கும். குரல் ஏதோ ஒரு சிறு பிராணியின் குரல் போல் இருக்கும். அன்றுதான் ரோகினிக்கு அந்தத் தங்கை பேசுவாள் என்றே தெரியும். அதை விட அதிசயம் அவள் பாடியதைக் கேட்டது. பாஞ்சாலங்குறிச்சி படத்தின், “ஒன் ஒதட்டோர செவப்பே” பாடலை முழுவதுமாக பாடி முடித்தாள் அந்தக் குட்டிக்குரங்கு. வீட்டிற்கு செல்வதற்குள் இலக்கியாவைக் கரைத்து அவள் தங்கைக்கு இருக்கும் நோய் பற்றித் தெரிந்து கொண்டாள் ரோகினி. அவளுக்கு இதயத்தில் ஓட்டை, வெகு சீக்கிரமே மரணித்து விடுவாள் இது மட்டுமே ரோகினிக்கு விளங்கியது. அடுத்த நாள் முதல் இலக்கியாவின் வருகையில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தாள் ரோகினி. இடுப்பில் தங்கையுடன் வந்தால் அவள் இன்னும் சாகவில்லை. தங்கை இல்லாமல் வந்தால் அவள் செத்துவிடாள். இந்தக் கணக்கில் ஒவ்வொரு நாளையும் அனுப்பிக் கொண்டிருந்தாள் ரோகினி. ஒரு நாள் பள்ளியில் உணவு இடைவேளையில் குட்டிக்குரங்கு சாப்பிடாமல் மேசையில் முகம் சாய்த்துப் படுத்துக் கிடந்தது. தூரத்தில் இருந்து அதைக் கவனித்துக் கொண்டிருந்த ரோகினியை அதுவும் தலைசாய்த்த வண்ணமே பார்த்துக்கொண்டிருந்தது. ரோகினிக்கு மெல்ல அதன் கண்களில் இருந்த கருவிழி ஒளி மங்குவதைப் போல் தோன்றியது. ஒரு கட்டத்தில் கருவிழி மொத்தமும் மறைந்து வெள்ளைத் திரையாகப் பரவியிருந்தது. கருவிழி எப்படியும் மேல்நோக்கித்தான் புதைந்திருக்கும் மீண்டும் கீழிறங்கும் எனக் காத்துக் கொண்டிருந்தாள் ரோகினி. ஆனால், கருவிழி புருவங்களைப் பிதுக்கி தலைக்கேறி குட்டிக்குரங்கின் ரிப்பன் வழியாகக் காற்றில் கலந்தது. இலக்கியாவிற்கு அதன் பிறகு சுமை தூக்கும் சுமை இல்லவே இல்லை. இலக்கியாவிற்கு இடது பக்க இடுப்பு மட்டும் கூடுதல் குழிவாகவே வளர்ந்தது. அந்தச் சிறிய மரணம் கொடுத்த விடுதலை மிகப்பெரியது. தங்கை இல்லாமல் எப்பொழுதும் சோகம் அப்பிக் கிடந்தாலும் இலக்கியாவின் முகத்தில் சுடர் ஒன்று பிரகாசித்தது. ஏழாம் வகுப்பின் இறுதித் தேர்வில் இருந்த சோகம் எட்டாம் வகுப்பின் முதல் நாளில் இலக்கியாவிடம் அவ்வளவாக இல்லை. எட்டாம் வகுப்பின் காலாண்டுத் தேர்வில் வடிந்த அவ்வப்போதைய சோகமும் அரையாண்டு முடிந்ததும் முற்றிலுமாக இல்லை. தங்கையின் ஞாபகங்களை ஏற்படுத்திய பொருள்களும் வீட்டில் குறையத்துவங்கி மாலை போட்டிருந்த புகைப்படம் மட்டுமே தங்கை என்று மாறியது. வருடங்கள் ஓட ஓட வீடுகள் மாறியதில் தொலைந்த அந்தப்படத்துடன் தங்கையும் தொலைந்து விட்டாள். அந்தக் குட்டிக்குரங்கிடம்தான் முதன் முதலில் சாவின் சாயலைப் பார்த்திருந்தாள் ரோகினி. அதே சாயல் அந்த நீலப்பூவிடமும் இருந்தது. நீலப்பூவின் அம்மாவை நினைத்து வருந்தினாள் ரோகினி. சாவைக் கடக்கலாம்; நோயைக் கடக்க முடியாது என்று முடிவெடுத்தவாறே தன் மகனைப் பதற்றத்துடன் தழுவிக் கொண்டாள். ரோகினியின் காதல் கணவன் விபத்தில் மரணித்த போது அவள் மகனுக்கு வயது ஐந்து. “சீக்கிரம் வந்துவிடுகிறேன்” என போனில் சொல்லியவன் அடுத்த பத்து நிமிடங்களில் உயிருடன் இல்லை. அழுது துடித்து, இரவுகளுக்கு அஞ்சி, துக்க விசாரிப்புகளில் காயப்பட்டு என முதல் இரண்டாண்டுகள் தன் உடலில் ஏதோ ஓர் திசுவில் மட்டும் உயிரை வைத்துக் கொண்டு அப்பனைக் கேட்டு அழும் மகனை மடைமாற்றிக் கொண்டிருந்தாள். சந்தன முல்லையும் கணவனின் சோப்பு மணமும் அவளைக் கண்டம் துண்டமாக வெட்டிப் போடும். நினைவுகளை அதி பாதாளத்திலிருந்தும் மீட்டுக் கொணர்பவை வாசனைகள். முல்லைப்பூவின் மணத்தில் அவனின் நுனி நாக்கின் ருசி அவளின் அடித்தொண்டைக்குள் இறங்கியிருக்கும். அவனின் சோப்பு வாடையில் அவன் பின்னங்கழுத்தை முகர்ந்திருப்பாள். அத்தனையையும் கண்கள் விரிந்த நிலையில் ஏதோ ஓர் இறந்த காலத்தில் தீவிரப்புணர்வுக்கான நிகழ்வொன்றின் மீதிமிச்ச நினைவுகளுடன் தனக்குள் நிகழ்த்திக் கொள்வாள். நிகழ்காலத்திற்குத் திரும்பும்போது விழியோரம் உப்பு பூத்திருக்கும். இப்போது அந்த இறந்த கணவனே மீண்டு வந்தாலும் ரோகினி ஏற்கப்போவதில்லை. அவனின் இல்லாமையால் அவள் ஏற்படுத்தி வைத்திருந்த அந்த துர்வாழ்வு அவளுக்கு இணக்கமாக மாறிவிட்டிருந்தது. அப்பன் பற்றிய நினைவே மகனிடம் இல்லாத வண்ணம் முழுவதுமாகத் துடைத்து எடுத்தாள். அப்பனின் உருவப்படம் கூட வீட்டில் இல்லை. காலம் அதற்கான சகல உடன்பாட்டையும் வார்த்திருந்தது. வாழ்வின் நிரந்தரமின்மையை ஓரளவிற்கு அனுபவங்கள் வழிக் கற்றிருந்தாலும் மகனின் நோய் அவளைக் கத்தி கொண்டு செதுக்கிக் கொண்டிருந்தது. வண்டி வந்துவிட்டதாக கைபேசி காட்டியது. மகனைத் தூக்கிக் கொண்டு வெளியேறினாள். இரவு ஒன்பது மணி. நல்ல கோடைக்காலம் என்பதால் அந்த இரவு கூடுதல் இதமாக இருந்தது. காரின் ஏசியை அணைத்து விட்டு சன்னலை விரியத் திறந்தாள். மகன் அவள் மடியில் உறங்கி விட்டான். மகனின் நோய் எங்கெல்லாம் சென்று முடிய வாய்ப்புள்ளது என கூகுள் வழித் தேடினாள். வழக்கம் போலவே கூகுள் கட்டற்று கால் பரப்பி எல்லாத் திசைகளிலும் கைகாட்டியது. அவளை மேலும் கலவரப்படுத்தியதே தவிர சிறிதும் ஆற்றுப்படுத்தவில்லை. போனை பைக்குள் போட்டுவிட்டு காருக்கு வெளியே முகம் நீட்டினாள். புறநகர்ப் பகுதியை அடைந்திருந்ததால் பெட்ரோல் டீசலற்ற காற்று அவள் வியர்வையை ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தது. வியர்வையைத் தின்னும் காற்று, தாகத்தைத் தணிக்கும் தண்ணீர், பசியைக் கொல்லும் உணவு இவையெல்லாமே துன்பம் வளர்த்து நிம்மதி கொடுப்பவை. வியர்வையின்றி உணரும் காற்று அவ்வளவாக சிலாகிக்கப்படுவதில்லை. தாகமற்ற தண்ணீர் பழக்கத்தில் சேருமே தவிர நரம்புகளை ஊடுருவாது. பசியற்ற உணவிற்கு உணவுப்பாதையே கிடையாது. நாள்பட்ட நோய்க்கு ஆட்பட்ட நபர்களைப் பற்றி சிந்திக்கத் துவங்கியது ரோகினியின் ஆன்மா. அவளின் பெரியப்பா ஒருவரைப் புற்று நோயின் கைகளுக்குள் கொடுத்து விட்டு அதன் பிடி தளர்த்த பெரியம்மா பட்ட வேதனையை நினைத்துக் கொண்டாள். பெரியப்பா ஒரு சிறந்த பேச்சாளர். அவருக்கு வந்ததோ தொண்டையில் புற்று. கடைசி ஓராண்டு காலம் அவர் காகிதங்கள் வழிதான் பேசினார். அவரை முழுவதுமாக குணமாக்க முடியாது என்றும், சாவை ஓராண்டிற்கு வேண்டுமானால் தள்ளிப்போடலாம் என்றும் மருத்துவர்கள் சொல்லி விட்டனர். இலட்சங்களைக் கொட்டி அவரை நோய்ப்படுக்கையில் உயிர் மட்டும் கண்களில் இருக்க தன்னுடன் வைத்திருந்தாள் பெரியம்மா. அவரால் நோயின் கொடுமையைத் தாளவே முடியவில்லை. தன்னால், “இதற்கு மேல் சிகிச்சைகளைத் தாங்க முடியாது. நான் இறக்கத்தயாராக இருக்கிறேன்” என பெரியப்பா எழுதியே கொடுத்து விட்டார். ஆனாலும், பெரியம்மாவிற்கு அவரைப் பிரிய மனமில்லை. ஒரு நாள் பெரியம்மா குளித்துக் கொண்டிருந்தபோது தனது கை நரம்புகளை வெட்டிக்கொண்டு பெரியப்பா ரத்தமாகக் கிடந்தார். மருத்துவர்களை ஓடி அழைத்து பெரியம்மா கதறும்போது, “என்னை மன்னித்துவிடு” என்று சொல்லும் விதமாக கையெடுத்துக் கும்பிட்டு விட்டு பெரியப்பா இறந்து போனார். அப்படியாகப் பயணித்த நினைவுகள் ரோகினியின் தோழியின் தந்தையிடம் வந்தன. ஓராண்டு சிகிச்சை அளித்தால் இரண்டாண்டு உயிரோடு இருப்பார் என்ற சிகிச்சை நிலை. அப்பாவை எப்படியாவது காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை தோழிக்கு. போதிய பணவசதி இல்லை. அதுவரை ஆகிய செலவிற்கே லட்சங்களில் சொந்த பந்தங்களிடம் கடனாகி இருந்தது அந்தக் குடும்பம். மேல் சிகிச்சைக்கு வீட்டை விற்றால் பணம் புரட்டலாம் . வீட்டை விற்கச் சொல்லி தோழி அவள் அம்மாவிடம் போராடிக் கொண்டிருந்தாள். அம்மா அந்த எண்ணத்திற்கு உடன்படவில்லை. எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத தன் கணவனுக்கு அப்படியொரு கொள்ளை நோய் வந்ததில் முற்றிலும் இடிந்திருந்தார் அம்மா. ஆனாலும் ஒரு கட்டத்தில் ஒரு முடிவிற்கு வந்திருந்தார். நோய்ப்படுக்கையில் கிடந்த கணவனே மன்றாடிக் கேட்டும் அம்மா வீட்டை விற்க சம்மதிக்கவில்லை. அந்த வீடு ஒன்றுதான் அவர்களின் சொத்து அதை விற்று கணவனின் உயிரை மீட்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிந்து விட்டது. மரணத்தின் தள்ளி வைக்கப்பட்ட உறுதி பிள்ளைகளின் எதிர்காலம் நோக்கி அம்மாவைச் சிந்திக்க வைத்தது. கணவனின் மரணத்திற்கு முற்றிலும் தன்னைத் தயார் படுத்தி வைத்திருந்தார் அந்த அம்மா. கடைசிக் காலத்தில் அந்த அம்மாவின் கைகளால் உணவு ஏதும் வாங்காமலேயே வீம்புடன் இறந்தார் அப்பா. கடன்களையெல்லாம் அடைத்து பிள்ளைகளை யார் தயவுமின்றி வளர்த்து ஆளாக்கினார் அம்மா. இவர்களையெல்லாம் மனக்கண்ணில் ஓட்டி முடிக்கையில் தன் கட்டிலில் மகனுடன் படுத்திருந்தாள் ரோகினி. ஆறு வாரங்கள் இன்னும் பெயர் சூட்டப்படாத அந்த நோயுடன் வாழ வேண்டும். அது பழக்கப்பட்ட அறைதான் என்றாலும் அன்று முற்றிலும் புதிய சூழலை ஏற்றிருந்தது. ரோகினியின் உடல் மீது அளவான தகிப்பில் நெருப்பு ஒன்று கனன்று கொண்டே இருந்தது. மகனின் மார்பில் அடிக்கடி கை வைத்து அவனின் இருப்பை உறுதி செய்து கொண்டாள். நன்கு தூங்கிக் கொண்டிருந்த மகன் திடீரென எழுந்து அமர்ந்தான். பதறியெழுந்து அவன் முகம் வடித்தாள் ரோகினி. குபுக்கென்று வாந்தி எடுத்தான். அப்படியே கைகளில் ஏந்தி வாங்கினாள். அவனை மெல்ல இறக்கியவாறே வாந்திக் கைகளுடன் கழுவும் அறைக்குச் சென்றாள். கைகளில் சூடாக இருந்த அந்த வாந்தியில் மகனின் உயிரின் பாகங்கள் ஏதேனும் இருக்கக்கூடுமோ எனத் தயங்கிக்கொண்டே கைகளையும் அவனையும் கழுவினாள். எவ்வளவு கடினம் என்றாலும் ஆறு வாரங்கள் என்பது கரையப் போவதுதான் என்பதை மூன்றாம் நாளில் உறுதிப்படுத்திக் கொண்டாள். மகனின் துள்ளலற்ற வீடு சிறையாகத் தோன்ற ஆரம்பித்ததும் ஒரு வார முடிவில் சிறைக்குள் வாழ முடிவெடுத்து விட்டாள். நோய்ப்படுக்கை ஒன்றை இரண்டாம் வாரத்தில் நேர்த்தியாக ஏற்படுத்தி இருந்தாள். மகனைக் கட்டி அணைக்கும் போதெல்லாம் விம்மும் மார்பை கல்லாகிப்போக பழக்கிக் கொண்டிருந்தாள். மகனை நினைவாக்கிக் கொள்ளும் திட்டம் ஒன்றும் அவளிடம் ஏற்பட்டு இருந்தது. மகனும் தானும் சேர்ந்தே மரணித்து விடலாமா என்ற எண்ணமும் அவளிடம் இல்லாமல் இல்லை. மரணத்தின் தரிசனம் திட்டமிடலுக்கு ஆட்படுவதே இல்லை என்ற ஆன்ம அறிவால் அசட்டுத் தனங்களில் ஈடுபடவில்லை. திகிலுற்ற மனங்களின் வடிகாலான பேய்க்கனவுகளுக்கு பஞ்சமில்லாமல் போனது. நிற்கும் இடங்களிலெல்லாம் மரமாய் நிலைப்பது, அடுப்பங்கறை காரியங்களை கருக்கி வைப்பது, அலுவலகப் பணிகளில் தவறுகள் செயவது என பேதலித்த கணங்களிலும் எதையோ ஒன்றைப் பற்றிக் கொண்டாள். ஆறாம் வாரத்தின் முடிவில் மகனின் நோயை ஏற்பதற்கான சகல ஏற்பாடுகளுடன் மருத்துவரைச் சந்திக்க மகனுடன் சென்றாள். அவளை மட்டும் அறைக்குள் அழைத்தார் மருத்துவர். அவளின் இதயத்துடிப்பு நோயின் பெயரைக் கேட்பதற்காகவே விரைந்துக் கொண்டிருந்தது. அந்தப் பெயர்தான் இனி அவளின் துயரத்திற்கான பீடம். மருத்துவர் தீவிரமாக பரிசோதனை முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவளின் முகத்தை அவர் பார்த்த போது தீர்க்கமான தெளிவொன்றை வைத்திருந்தாள். “நாம பயந்த அந்த நோய்தான்னு உறுதியாகிருக்கு. அதுக்கேத்த மருந்துகளை ஆரம்பிக்கிறேன்” என்று கூறிக்கொண்டே நீட்டியும் சுழித்தும் ஏதேதோ எழுதினார். தன்னை வருத்தி வருத்தி அவள் சேர்த்திருந்த வலு கண்கள் வழி குமிழ்களாக வடிந்தன. நல்ல பெரிய பெரிய கண்ணீர்த்துளிகள். தேக்கப்பட்டிருந்த அத்தனை ஆற்றாமையும் பெருகிப் பொழிந்தது. வெளியே அமர்ந்திருந்த மகனை கண்ணாடிக் கதவுகளின் வழி பார்த்தாள். அப்படியே அவன் அப்பாவின் சாயலில் தெரிந்தான். கண்ணீர் செய்த சித்து வேலையாக இருக்கலாம். கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் பார்த்தாள். அதுநாள் வரை மகனிடம் இல்லாத சாயல். அப்பன் அப்படியே அப்பிக் கிடந்தான். வெளியே வந்து மகனைத் தன்வசம் இழுத்து அணைத்துக் கொண்டாள். மின் தூக்கியைப் பயன்படுத்த அதனுள் நுழைந்து பூஜ்யத்தை அழுத்தினாள். கதவு மூடியது. மூடிய கதவில் அவளும் மகனும் பிரதிபலித்தனர். மகன் முகத்தில் சவக்களையில் கணவன். அச்சம் அவள் நரம்புகளை விறைப்பாக்கியது. காலணிக்குள் கால்கள் குளிர்ந்து வழுக்கியது. மின் தூக்கி 3 என இறங்கிக் கொண்டிருந்தது. அவகாசம் இல்லாதவளாய் மகன் முகத்தில் இருந்த கணவனின் சாயலை அவன் தலைமுடியைக் கலைத்து அழித்துப் பார்த்தாள். அவனிடத்திலிருந்து அப்பன் போகவே இல்லை. மின் தூக்கி 2 என இறங்கியது. மகனின் கன்னங்களைப் பிசைந்து அவன் முகத்தை வேறொன்றாக வடித்துப் பார்த்தாள். அப்பன் போகவே இல்லை. மின் தூக்கி 1 என இறங்கியது. ரோகினியின் சுடிதாரின் கழுத்து வரம்புகள் நனைந்து அடர் நிறமாக மாறியிருந்தது. மகனின் முகத்தை இரண்டு கைகளாலும் உள்வாங்கி அவன் கண்களை ஆழக் கடந்து அவனுள் சென்றவள், சட்டென தன் நெற்றிப்பொட்டை அவன் நெற்றியில் ஒட்டினாள். அப்படியே ரோகினியின் சாயல். மின் தூக்கி பூஜ்யத்தில் வந்து நின்றது. கதவு இரண்டாகப் பிளந்தது. பெரிய பாதை கிடந்தது. அம்மாவும் மகனும் வெளியேறினர். ******* Read more at: https://vasagasalai.com/udatrum-pini-sirukathai-aruna-chitrarasu-vasagasalai-86/?fbclid=IwAR0aw0uLIb3dInIz3C9Gv6JZ5nzigsOwz_OeNunKC03W3HoEPCNzm0fi56k
  9. ஏன் உங்கள் நண்பர் உங்களை திரும்ப, திரும்ப வைத்தியர் மாரிடமே அனுப்பி விட பார்க்கிறார்..✍️
  10. கொஞ்சம் குளிர் தொடங்கிட்டு ஆனாலும் பனி தான் இன்னும் சரியாக கொட்டவில்லை.அனேகமாக சித்திரைக்கு பின்னரும் வைத்து கொட்டித் தள்ளும் என்று எதிர் பார்க்கலாம்.
  11. ஊர்லாப்பிற்கு மிகவும் நன்றிகள் ..🖐️
  12. அனைத்து உறவுகளுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.🙏
  13. உலகம் பூரா சுளற்ட்சி முறையில் எல்லாமே நடந்து கொண்டு தானே இருக்கிறது.இதில் என்ன புதிதாக சொல்ல இருக்கிறது.அவ்வப்போது நடக்க வேண்டியது நடக்கும். ✍️🖐️
  14. Dr. Sirkazhi S. Govindarajan 28m · டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், கேப்டன் விஜயகாந்துடன் மீனாட்சி திருவாளையடல் என்ற படத்தில் பணிபுரிந்தார். இதில் சிவனாக கேப்டன் விஜயகாந்த் அவர்களும், அகத்தியராக டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரமும் நடித்துள்ளனர். அந்த நல்ல மனிதர் இன்று நம்மிடையே இல்லை. "இசைமணி" சீர்காழி கோவிந்தராஜன் குடும்பத்தினர் சார்பாக கேப்டன் விஜயகாந்தின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி...
  15. மதுரையில் அரிசிஆலை நடத்தி வந்த குடும்பத்தில் இருந்து சினிமா ஆர்வத்தில் சென்னைக்கு வந்து விட்டார் விஜயராஜு. வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் சாப்பாட்டுக்கே கஷ்டம்... ஊரில் இருந்தும் எந்த உதவியும் பெற மனமில்லை. இரண்டொரு படங்கள் நடித்த பின்னும் கூட அடுத்த வாய்ப்புகள் வரவில்லை. மீண்டும் கஷ்டம்.... ஒரு வழியாக ரஜினி கமலுக்கு இணையாக எந்த சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்தார் கேப்டன். அப்போதெல்லாம் நான்கு கேட்டகிரியாக ஷுட்டிங் ஸ்பாட்டில் உணவுகள் தரம் பிரித்து வழங்கப்படும். ஹீரோ, ஹீரோயின், டைரக்டர், கேமரா மேன் போன்றோருக்கு ஒரு வகை, அசிஸ்டன்ட் கேட்டகிரிக்கு தனி, லைட்மேன் போன்றோருக்கு தனி, கடைசியா ட்ரைவர், மற்ற சிப்பந்தி வேலை பார்ப்பவர்களுக்கு தனி... இதுதான் காலங்காலமாக இருந்த வழக்கம். ஆனால் விஜயகாந்த் அவர்கள் படப்பிடிப்பில் மட்டும் அனைவருக்கும் ஒரே வகையான சாப்பாடு, விஜயகாந்த் மட்டன் சாப்பிட்டால் கடைசி பணியாள் வரை மட்டன் சாப்பாடு, அவருக்கு மீன் பொறித்தால் கடைசி பணியாள் வரை மீன் கொடுக்க வேண்டும். சாப்பிடுறதுல என்னைய்யா ஆள் பாத்து கொடுக்குறிங்க ன்னு சொல்லி அத்தனை பேருக்கும் ஒரே சாப்பாடு ன்னு கொண்டு வந்தது விஜயகாந்த்... தயாரிப்பாளர் தலைல அந்த செலவை கட்டல.... என் சம்பளத்துல இருந்து அத பண்ணுங்க... மிச்சத்தை மட்டும் கொடுங்கனு சொல்லிட்டு போயிடுவார்... கோடம்பாக்கத்துல அவரோட அலுவலகத்துல அணையா விளக்கு மாதிரி அடுப்பு எரிஞ்சுட்டே இருக்கும்... பசின்னு வர்ற அத்தனை பேரும் சாப்டுட்டு போயிட்டு இருப்பாங்க. சிலர் லாம் மெஸ் ன்னு நினைச்சு உள்ள வந்துட்டு சாப்டுட்டு ரூபாய் கொடுக்க போனப்போ இது விஜயகாந்த் சார் ஆஃபீஸ் ங்க ன்னு சொல்லி அனுப்பி வைப்பாங்களாம். அந்த அளவுக்கு பிறர் பசியை போக்கிய வள்ளல். காலாகாலமா கடன்ல மட்டும் இருக்குனு கணக்கு காட்டுன நடிகர் சங்க கடனை யெல்லாம் அடைச்சு அத நல்ல நிலைக்கு கொண்டு வந்த சிறந்த நிர்வாகி ‌. எதிர்கட்சி தலைவர் அளவுக்கு வெகு விரைவில் வந்த அரசியல்வாதி... அவருக்கு சினிமால நடிக்க வந்த அளவுக்கு நிஜத்துல நடிக்க வரல. அவரோட இயல்பை எல்லா இடத்துலயும் வெளிப்படுத்தினார். அது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. சிரிச்சாலும் வெள்ளந்தியான சிரிப்பு... ஒருத்தரோட கஷ்டம்னாலும் அத பாத்து கண்ணீர் விட்டு அழுற மனசு... அப்படிப்பட்ட ஒரு மனுஷன். அரசியல்வாதிகளில் வள்ளல் ன்னு MGR யை சொல்லுவாங்க... நான் அவரை பாத்ததில்ல... ஆனா வாழும் வள்ளலா பாத்தது விஜயகாந்த் அவர்களைத்தான்... பல லட்சக்கணக்கான பேரின் பசியை போக்குன, கண்ணீரைத்துடைத்த விஜயகாந்த் மதுரை மாநாட்டுல சொல்றார். "என் சொந்த காசுலதான் கட்சி துவங்குறேன். காசு வரும் போகும். இது இல்லாமலே போனாலும் பரவால்ல... மனுசன் என்னய்யா அதிகபட்சமா தேட போறான் சாப்பாடுதான... இத்தன லச்சம் பேரு இங்க வந்துருக்கிங்க, உங்க ஒவ்வொருத்தர் வீட்லயும் ஒரு வேளை சோறு வாங்கி சாப்டாலும் என் ஆயுள் பத்தாது. அவ்வளவு அன்பை தேடி வச்சுருக்கேன்" ன்னு சொன்னார். ஆழ்ந்த இரங்கல் கேப்டன்... உங்கள் நல்ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்... தினம் ஒரு தகவல் DAILY INFORMATION
  16. கால நிலை மாற்றங்கள் மற்றும் உணவுகளினால் ஏதாவது பிரச்சனைகள் வந்திருக்கலாம்..அவர்களுக்கு அது புரியாமல் அல்லது தெரியாமல் இருந்திருக்கலாம்..வயது போனவர்கள் பாவங்கள்..
  17. இறுதி வணக்கம் ! சில விடைபெறல்கள் வலிகளில் இருந்து விடுதலை ! நேசமித்திரன். ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
  18. ஓ..நல்லது.நீங்கள் சொன்னீர்களா..? பிரச்சனையே இல்லை.அனேகமான புத்தக வெளியீடுகள் ஒரு நாட்டில் மட்டும் நடப்பது குறைவு தானே.அதனால் தான் கனடாவில் வெளியீடு நடந்தா(ல்) அறியத்தரவும் என்று சொன்னேன்.
  19. மேலோட்டமாக பதியப்பட்டு இருந்த தகவலைக் கொண்டு வந்து உங்களின் பக்கத்து வீட்டில் ஒட்டி விட்டேன்..அது இண்டைக்கு இங்கன நிக்கிற றபிக் பொலிஸார் தூக்கிட்டினம் போல காணம்..சிவனே என்று இருந்திட்டா போதும் போல ஆகிடுது.. எனிவே..எனது நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..எப்போ கனடாவில் வெளியீடு அறியத் தாருங்கள்.🖐️
  20. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தம்பி.🖐
  21. முடிந்தால் உங்கள் சக பணியாளர்களோடு ஆலோசித்து அடுத்து வரும் பணிகளில் பராமரிக்க கூடியவர்களுக்கு மரக்கன்றுகளை கூட கொடுக்கலாம்.புத்தண்ணாவும் கடந்த காலங்களில் ஊக்குப்பாக செய்திருக்கிறார்தானே.அண்மையில் கொழும்பில் நடந்த திருமண வீடு ஒன்றில் அன்பளிப்பாக மரக்கன்றுகளை கொடுத்திருக்கிறார்கள்.முன்னாள் ஒவிபரப்பாளர் ஒருவரின் முகப் புத்தகத்தில் காணக் கூடியதாக இருந்தது.
  22. பக்கத்து வீட்டு அய்யாவை அஞ்சலா ஒழுங்கான சைக்கயாறிக் டொக்ரரிட்ட காட்டாமல் வைத்திருந்தது எவ்வளவு தப்பு...சுமே அக்கா பக்கத்து வீட்டில பாதியையா, இல்ல முழுசா படம் எடுத்து இங்க சொருகி விட்டு இருக்கிறியள்..அது இரண்டாவது தப்பு.பிறைவேசி.✍️😆
  23. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிழலியண்ணா.✍️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.