Everything posted by பிழம்பு
-
கண்டி பாடசாலையொன்றில் இயங்கிய வதைமுகாமிலிருந்து இளைஞர்களை டிரக்கில் கொண்டு அவர்களை எப்படி கொலை செய்தனர்- 1988- 89 இல் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் முன்னாள் அதிகாரியின் வீடியோ
பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 10 Apr, 2025 | 04:31 PM 1977 முதல் 1994 ஆம் ஆண்டுவரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சி பாவிகளே, பட்டலந்த வதை முகாமின் சூத்திரதாரிகளும் கூட. எனவே, பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார். பட்டலந்த வதை முகாம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ”நல்ல வழியில் நாம் அரசியலை முன்னெடுத்து வந்த வேளை 1983ஆம் ஆண்டு எமது கட்சி தடைசெய்யப்பட்டது. ஜுலை கலவரத்தை அடிப்படையாகக்கொண்டே எமது கட்சி மீது தடை விதிக்கப்பட்டது. அன்று ஏற்பட்ட கறுப்பு ஜுலையென்பது இன்றளவிலும் கறுப்பு புள்ளியாகவே இருந்துவருகின்றது. தடையை நீக்குமாறு ஜனாதிபதி முதல் பலரிடம் கோரிக்கை விடுத்தோம். பலன் கிட்டவில்லை. இதற்கிடையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு எமது உறுப்பினர்களை கொன்றொழித்தனர். நாட்டை நாசமாக்குகின்ற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டவேளை, நாடு காட்டிக்கொடுக்கப்பட்ட வேளையில்தான் அதற்கு எதிராகவே 1987 மற்றும் 1989களில் எமது வீரமறவர்கள் வீறுகொண்டெழுந்தனர். அவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்பட்டவர்கள் விதைக்கப்பட்டவர்களாக மீண்டெழுந்திருக்கின்றார்கள். உண்மையை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது. உண்மைகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன. பட்டலந்த வதை முகாம் கொலையாளிகள், சித்திரைவதை செய்தவர்கள், இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் மலையக மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் நீதி கிடைக்கப்பட வேண்டும்" என்றார். பட்டலந்த வதை முகாமின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் | Virakesari.lk
-
‘கலிப்சோ’ ரயில் சேவை நானுஓயாவிலிருந்து ஆரம்பம்
கலிப்சோ ரயிலின் முதல் நாள் வருமானம் 7 இலட்சம் ரூபா. 10 Apr, 2025 | 04:07 PM நானுஓயா மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையே திறந்தவெளி காட்சிக்கூடங்களைக் கொண்ட “கலிப்சோ" ரயில் சேவையின் முதல் நாளில் 720,000 ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக ரயில் திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வஜிர பொல்வத்தகே தெரிவித்துள்ளார். இந்த ரயில் தனது முதல் சேவையை செவ்வாய்க்கிழமை (08) காலை நானுஓயாவிலிருந்து தெமோதரை ரயில் நிலையத்துக்கு ஆரம்பித்தது. இதன்போது, 172 இருக்கைகள் வெறுமையாக இருந்ததோடு, 72 பயணிகள் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் 153,000 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டிருக்கும். கலிப்சோ ரயில், வழித்தடத்தில் இயற்கை அழகை வெளிப்படுத்தும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது திறந்தவெளி காட்சிக்கூடங்கள், உணவு, இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வசதிகளைக் கொண்டுள்ளது. பயணத்தின் விசேட அம்சமாக சுற்றுலாப் பயணிகள் உலகப் புகழ்பெற்ற ஒன்பது வளைவுப் பாலத்தின் அழகை அனுபவிக்க நிறுத்தப்படும். அத்தோடு, ரயில் பல சுரங்கப்பாதைகள் வழியாகச் செல்லும். இந்த ரயில் பயணம் 4 1/2 மணித்தியாலங்களை கொண்டமைந்துள்ளது. இந்த ரயில் பயணம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து புறப்பட்டு தெமோதரை ரயில் நிலையத்தை பிற்பகல் 12.25 மணிக்கு சென்றடையும். மீண்டும் தெமோதரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1:15 மணிக்கு புறப்பட்டு நானுஓயாவை மாலை 5:35 மணிக்கு சென்றடையும். நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது. கலிப்சோ ரயிலின் முதல் நாள் வருமானம் 7 இலட்சம் ரூபா | Virakesari.lk
-
உடுத்துறை கடல் பகுதியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!
உடுத்துறை கடல் பகுதியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு! வடமராட்சி-உடுத்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடலின் போது, சுமார் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, கேரள கஞ்சா கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கு படகுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி-உடுத்துறை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் பெறுமதியானது 121 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லியான் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர், கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதன்கேனி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. உடுத்துறை கடல் பகுதியில் 304 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!
-
வேலணை பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்த பசு! - சபை வாயிலில் உரிமையாளர் போராட்டம்!
09 Apr, 2025 | 05:13 PM (எம்.நியூட்டன்) உரிமையாளரால் மேய்ச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் அந்த பசுவை பிரதேச சபையினர் சட்டத்தின்படி பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை நகர்ப்பகுதியில் கால்நடை பண்ணை நடத்திவரும் பெண் உரிமையாளர் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து இன்று புதன்கிழமை (9) ஆர்ப்பாட்டம் செய்ததால் அப்பகுதியில் சில மணிநேரம் குழப்பநிலை ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது : வேலணை நகர்ப் பகுதியில் பால் உற்பத்தியை சுயதொழிலாகக் கொண்டு பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவரது பசு கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், வேலணை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த சிறு தாவரங்களை சேதப்படுத்தியதாக கூறி பிரதேச சபையின் ஊழியர்கள் அந்த பசுமாட்டினை பிடித்து, முதற்கட்ட நடவடிக்கையாக உரிமையாளர் தேடி வரும் வரை சட்ட விதிமுறைகளுக்கேற்ப தமது பராமரிப்பில் வைத்திருந்துள்ளனர். இந்நிலையில் அந்த பசுமாட்டின் உரிமையாளர் இரண்டாவது நாளான இன்று பிரதேச சபையின் பொறுப்பில் பசுமாடு இருப்பதை அறிந்து, பிரதேச சபை சட்டத்துக்கு விரோதமாக பசுவினை பிடித்து கட்டிவைத்துள்ளதாக தெரிவித்து, பசுவை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மேலும், தான் மாடு வளர்ப்புத் தொழிலை பல இலட்சங்கள் முதலீடு செய்து மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு மாடுகளின் நலன் கருதி, அவற்றை அவிழ்த்துவிட்டதாகவும் அவ்வாறான நிலையில், ஒரு பசு பிரதேச சபையின் வளாகத்துக்குள் சென்ற காரணத்துக்காக பிடித்து கட்டிவைக்கப்பட்டுள்ளது எனவும் அந்த பெண் கூறியுள்ளார். இது சட்டமுரணானது. இவ்வாறான செயற்பாடுகள் எமது தொழிலை பாதிக்கின்றன. எனவே, சட்டத்துக்கு முரணாக பிரதேச சபையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பசு மாட்டை தண்டப் பணம் அறவிடாமல் விடுவிக்க வேண்டும் எனவும், இனியொரு முறை இவ்வாறு மாடுகள் பிடிக்கப்படக்கூடாது எனவும் கோரியே போராட்டத்தில் ஈடுபட்டதாக தொடர்ந்து அந்தப் பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேலணை பிரதேச சபையின் செயலரிடம் கேட்டபோது, எமது பிரதேசத்தில் கால்நடைகளால் வருடாவருடம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. கட்டாக்காலி மாடுகள் ஒருபுறமிருக்க வளர்ப்பு மாடுகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாலும் பிரச்சினைகள் நாளாந்தம் ஏற்படுகின்றன. வளர்ப்பு பிராணிகளை கட்டி வளர்க்கவேண்டியது உரிமையாளர் ஒவ்வொருவரதும் பொறுப்பு. குறிப்பாக, வங்களாவடி சந்தி பகுதியை அண்டிய சூழலில் மாலை 6 மணிக்கு பின்னர் நாளாந்தம் 50க்கு மேற்பட்ட மாடுகள் வீதிகளில் தமது இரவு நேரத்தை கழிக்கின்றன. இதனால் நாளாந்தம் விபத்துக்களும் ஏற்படுகின்றன. ஒருசில பாரிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. இதேநேரம் வீட்டுப் பயிர்களை அழிப்பதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன. இவ்வீதியில் உறங்கும் மாடுகளில் அதிகமானவை வளர்ப்பு மாடுகளாகவே இருக்கின்றன. இதை கட்டுப்படுத்துமாறும் தொடர்ச்சியாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. நாம் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே செயற்பட்டு வருகின்றோம். எமது சபைக்கு கட்டாக்காலி மாடுகளானாலும் சரி வளர்ப்பு மாடுகளானாலும் சரி ஆபத்துக்கள், சேதங்களை ஏற்படுத்தும் வகையில் அவை இருந்தால் அல்லது சபைக்குள் நுழைந்தால், அவற்றை பிடிப்பதற்கும் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் உண்டு. கடந்த மாதம் நடைபெற்ற வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் உலவுகின்ற மாடுகள் மற்றும் கட்டாக்காலிகள் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை? அல்லது அது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அதன் பின்னர், இவ்வாறான அசௌகரியங்களை ஏற்படுத்தும் கால்நடைகளை கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எவரும் மாடுகளை பிடிக்க வேண்டாம், தண்டப்பணம் அறவிட வேண்டாம் என கூறவில்லை. நடவடிக்கை எடுக்குமாறே வலியுறுத்தியிருந்தனர். இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்ட பெண் இவ்வாறான சம்பவம் தொடர்பில் பல முறை பிரதேச சபைக்கு தண்டம் செலுத்தியுள்ளார். ஒரு தடவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு தண்டமும் செலுத்திய ஒருவர் ஆவார். அவ்வாறான சம்பவம் ஒன்றே இன்றும் நடந்துள்ளது. நாம் சட்டப்படியே செயற்பட்டோம். எவரது கால்நடை விலங்குகளும் இன்னொருவரது வீடுகளுக்கோ அல்லது பொது நிறுவனங்களின் வளாகத்துக்குள்ளோ சென்றால் அல்லது நாசப்படுத்தினால் அதை பிடித்து, அதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, வளர்ப்பு மாடுகளை ஒவ்வொருவரும் தத்தமது வளர்ப்பிடங்களில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே தவிர அவற்றை கட்டவிழ்த்து விடுவது இவ்வாறான பிரச்சினைகளையே ஏற்படுத்தும் எனவும் பிரதேச சபையின் செயலர் தெரிவித்தார். அத்துடன் அந்த பசு மாட்டின் உரிமையாளர் பிரதேச சபையின் சட்டங்களின் பிரகாரம், பசுமாடு சபையினுள் நுழைந்ததற்கான தண்டப்பணமாக 5,600 ரூபாவினை செலுத்தியே இன்றும் தனது பசுமாட்டை மீட்டுச் சென்றுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். வேலணை பிரதேச சபையினுள் அத்துமீறி நுழைந்த பசு! - சபை வாயிலில் உரிமையாளர் போராட்டம்! | Virakesari.lk
-
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது : முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் -
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது : முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் - பீற்றர் புரூவர் மற்றும் மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் தெரிவிப்பு. 09 Apr, 2025 | 08:33 PM இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது என்றும் முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் என்றும் இலங்கைக்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் முன்னாள் சிரேஷ்ட பணிக்குழுப் பிரதானி பீற்றர் புரூவர் மற்றும் இலங்கையிலுள்ள பன்னாட்டு நாணய நிதியத்தின் தற்போதைய வதிவிடப் பிரதிநிதியான மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் நான்கு ஆண்டு கால பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நடுப்புள்ளியை இம்மார்ச் மாதம் குறிக்கின்றது. அதன் தொடக்கத்திலிருந்து இரு ஆண்டுகளில் கடினமான ஆனாலும் மிகவும் தேவையான மறுசீரமைப்புக்கள் குறிப்பிடத்தக்க நன்மைகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கை மக்களின் அர்ப்பணிப்பிற்கும் தியாகத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மிகவும் அவதானிக்கத்தக்க விடயம், எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்து என்பவற்றிற்கு இனிமேல் வரிசைகள் காணப்படாது என்பதுடன் அட்டவணைப்படுத்தப்பட்ட மின்துண்டிப்புக்களும் இல்லை. பொருளாதாரமானது வலுவாகவும் விரைவாகவும் மீண்டெழுந்துள்ளது – 2024இல் அது 5 சதவீதம் வளர்ச்சியடைந்து 2018இல் உச்சத்திலிருந்து 2023இன் தாழ்வின் எல்லைக்குச் சென்ற வெளியீட்னெ; அரைவாசிக்குக் கீழிருந்து இழப்பு வெறும் 18 மாதங்களிலேயே மீண்டுள்ளது. வானுயர்ந்து சென்ற பணவீக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்காக வரி வருவாய்கள் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் உயர்வடைந்து, வட்டிக் கொடுப்பனவுகள் நீங்கலாக அரசாங்கத்தின் மீதி (ஆரம்ப மீதி) ஏறத்தாழ 6 சதவீதப் புள்ளிகளால் மேம்பட்டுள்ளது. பல குடும்ப அலகுகள் இன்னும் தாக்கத்தினை முழுமையாக உணராத போதிலும் பேரண்டப்பொருளாதாரத் திருப்பமானது குறிப்பிடத்தக்கதாகும். வெளிநாட்டு கடன்கொடுநர்கள் மூலம் வழங்கப்பட்ட படுகடன் நிவாரணம் இலங்கை மக்கள் தோல்கொடுக்க வேண்டிய சுமையினை குறைத்துள்ளது. வெளிவாரி கடன்கொடுநர்கள் படுகடனின் ஐ.அ.டொலர் 3 பில்லியனை கைவிட்டுள்ளதுடன் அண்மைய காலத்தில் நிலுவையாகவிருக்கின்ற அல்லது ஏற்கனவே தவணை கடந்த மற்றுமொரு ஐக்கிய அமெரிக்க டொலர் 25 பில்லியன் தொகையினை மிகவும் குறைக்கப்பட்ட வட்டி வீதங்களுடன் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேல் மிக நீண்டகால வீச்சில் நீடித்துள்ளனர். இலங்கையின் வர்த்தகப்படுத்தக்க படுகடன் சாதனங்கள் பன்னாட்டு முறிச் சுட்டிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளமையினாலும் இலங்கையின் கொடுகடன் தரமிடலானது குறைந்தது 3 படிமுறைகளினாலேனும் உயர்த்தப்பட்டமையினாலும் அவை மீண்டும் முதலீட்டாளர்களைக் கவருகின்றன. 2023இல் 30 சதவீதம் கொண்ட உச்சத்திலிருந்து தற்போதைய 8 சதவீதத்திற்கு உள்நாட்டு கடன்பெறுதல் செலவில் சடுதியான வீழ்ச்சிகளுடனும் பன்னாட்டுச் சந்தைகளில் நாட்டிற்கான இடர்நேர்வு “விரிவு” குறிகாட்டி 70 சதவீதம் கொண்ட உச்சத்திலிருந்து 5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளமை என்பவற்றைக் கொண்டு சந்தைகள் இலங்கையின் மறுசீரமைப்புகளுக்கு கைமாறளித்துள்ளன. பொறுப்புமிக்க பன்னாட்டு சந்தை அணுகலினை அடுத்த சில ஆண்டுகளில் எட்டக்கூடியதாக இருக்க வேண்டும். இலங்கை மக்கள் கடந்தகால கொள்கைத் தவறுகளுக்காகவும் முடக்கத்தை ஏற்படுத்திய துரதிஸ்டத்திற்காக போதுமானளவு தயாராகாமைக்கும் வருந்தத்தக்கவிதத்தில் உயர் விலையினைச் செலுத்துகின்றனர். நிலைபேறற்ற குறைவான வரிகள் மற்றும் மக்களைவிட பெரும்பாலும் தொழில்முயற்சிகளுக்கு நன்மையளித்த பாரிய வரி விலக்களிப்புகள் என்பன நிகழவுள்ள விபத்தொன்றாகவிருந்தது. வரிசெலுத்துநர்கள் வருமானத்தையும் சொத்துக்களையும் கொண்டு சமமாகப் பங்களிப்பதற்கு அவர்கள் கோரப்பட்டிருந்தும் கூட, அதன் அத்தியாவசிய பணிகளுக்கு இன்று நிதியிடுவதற்கு அரசாங்கத்தின் மேம்பட்ட இயலுமையின் அடுத்த பக்கம் உயர்வான சுமைக்கு அவர்கள் தோல்கொடுக்க வேண்டியிருந்ததாகும். அதேபோன்று எரிபொருள் மற்றும் மின்சாரம் எனபவற்றின்; முழுமையான செலவு தற்போது அரசாங்கத்தின் உதவுதொகைகளின்றி அதன் பயன்பாட்டாளர்கள் மூலமே ஏற்கப்பட்டு, அரிதான அரசாங்க மூலவளங்கள் சமூகப் பாதுகாப்பு போன்ற முன்னுரிமைத் துறைகளை நோக்கி திசைப்படுத்தப்பட்டிருப்பதற்கு இயலச்செய்யப்பட்டுள்ளது. இன்னும் மிகவும் பாதிக்கப்படும் நிலையிலிருக்கின்ற இலங்கை முழுமையாக சுயமாக சிக்கலிலிருந்து விடுபடக்கூடியதாகவிருப்பதை உறுதிசெய்வதற்கும் 2022இல் எதிர்கொண்ட அபாயகரமான நிலைமைகளுக்கு மீண்டும் செல்வதைத் தடுப்பதற்கும் இவ்வகையான தியாகங்கள் அவசியமானதாகக் காணப்படுகின்றன. 2023 தொடக்கம் பன்னாட்டு நாணய நிதிய நிதியிடல், நிகழ்ச்சித்திட்டத்திற்கு முன்னர் இலங்கையர்கள் அனுபவித்த மிக மோசமான விளைவுகளை தவிர்ப்பதற்குத் துணையளித்துள்ளது. பன்னாட்டு நாணய நிதியம் ஆதரவளித்த பொருளாதார நிகழ்ச்சித்திட்டம் ஏனைய பல்தரப்பு மற்றும் இருதரப்பு பங்காளரிடமிருந்து நிதியிடலை வினையூக்கச்செய்கின்ற மறுசீரமைப்புக்களுக்கு அர்பணிப்பதற்கு நம்பகமான கட்டமைப்பொன்றினைத் தொடர்ந்தும் வழங்குகின்றது. கடன்கொடுநர்கள் வழங்குகின்ற படுகடன் நிவாரணம் மறுசீரமைத்தலின் பின்னர் எஞ்சியிருக்கின்ற படுகடனைத் தீர்ப்பதற்கு இலங்கையினை இயலச்செய்யுமென அது அவர்களுக்கு உத்தரவாதமளித்தது. கடந்த தேர்தல் இடம்பெற்றதன் பின்னர், பன்னாட்டு நாணய நிதியம் அவர்களின் கொள்கை முன்னுரிமைகளின் சிலவற்றை அதிகாரிகள் நிறைவுசெய்வதற்கு உதவுவதற்காக நிகழ்ச்சித்திட்டத்தை மீள அளவமைப்பதற்கு புதிய அரசாங்கத்துடன் விரைவாக நெருங்கிப் பணியாற்றியது. வெற்றிகரமான வருவாய்த் திரட்டல் முயற்சிகளுக்கு நன்றி. இது, நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை மக்களுக்கு சில நிவாரணத்தை வழங்குவதற்கும் வேறு அத்தியாவசியத் தேவைகளை வழங்குவதற்கு அரசாங்கத்தின் இயலுமையினை காக்கின்ற விதத்தில் அரசாங்கத்திற்கு அது சாத்தியமாகவிருந்தது. தனிப்பட்ட வருமான வரி கட்டமைப்பு சீராக்கப்பட்டு, கடந்தகால உயர்வான பணவீக்கத்திற்கு பகுதியளவில் ஈடளிப்பதற்கு அரசாங்கத் துறைச் சம்பளங்கள் உயர்த்தப்பட்டு வருவதுடன் பாற்பண்ணை உற்பத்திப் பயன்பாட்டாளர்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்பட்டன. இந்;நடுநிலைப் புள்ளியில், மறுசீரமைப்பினைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதும் கடந்தகால தவறுகளைத் தவிர்ப்பதும் முக்கியத்துவம் மிக்கதாகும். தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்திற்கு முன்னர் பன்னாட்டு நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டங்களின் சுமார் அரைவாசியளவு இலங்கை முன்கூட்டியே முடிவுறுத்திமையினால் அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் குறைவான செயலாற்றம் இடம்பெற்றது. இவ்வளர்ச்சி முடக்கல் சுழற்சியை நிறுத்தி, நிச்சயமற்ற உலகளாவிய நிலைமையிலும்கூட மீட்சி தொடர்ச்சியாக இருக்கக்கூடிய விதத்திலும் அனைத்து இலங்கையர்களும் அதிலிருந்து நன்மையடையும் விதத்திலும் பொருளாதாரத்தை முகாமைசெய்வதும் முக்கியமானதாகும். நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்குகின்ற வளர்ச்சி மற்றும் அரசிறை மற்றும் படுகடன் நிலைபெறுதன்மை என்பவற்றிற்கான பாதை தொடர்ந்தும் குறுகியே காணப்படுகின்றது. கொள்கைத் தவறுகளுக்கு இடமளிக்கக்கூடாது. வரி விலக்களிப்புக்களை மட்டுப்படுத்தல் மூலமானவை உள்ளடங்கலாக அத்தியாவசிய அரசாங்கப் பணிகளுக்குத் தேவையான வருவாய்களைத் தொடர்ந்தும் வழங்குவது மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கும். எரிபொருள் மற்றும் மின்சாரம் என்பவற்றிற்கான செலவு – மீட்பு விலையிடலை மீளமைத்தல் மற்றும் சமூக ரீதியான ஆதரவை மிகவும் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி நன்கு இலக்கிடுவதை நிச்சயப்படுத்தல் என்பன மூலம் அரிதான அரசாங்க மூலவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது. பொருளாதார மீளெழுச்சியில் போதுமானளவு பங்கேற்பதற்கு வறியவர்களுக்கும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவேண்டும். இலங்கையின் நீண்ட கால உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர்வதற்கு நடுத்தரகால வளர்ச்சிக்கு ஆதரவளித்தலில் மூலதனச் செலவிடல் மிகவும் எதிர்வுகூறத்தக்கவிதத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். வரவிருக்கும் கடமைகள் பேராவல்மிக்கவையாயினும் நிறைவேற்றப்படத்தக்கவையாகும். இடம்பெறுகின்ற மறுசீரமைப்பு உத்வேத்தைத் தக்கவைத்தல் முழுமையான மீட்சிக்கு முக்கியமானதாக அமைந்திருந்து இத்தலைமுறைக்கு மாத்திரமின்றி எதிர்காலத் தலைமுறையினருக்கும் நன்மைபயக்கக்கூடியதாகவுமிருக்கும். அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதில் வலுவான மற்றும் நீடித்த மீட்சியொன்றினைப் பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் பொருட்டு உறுதியானதொரு பங்காளராகப் பன்னாட்டு நாணய நிதியம் தொடர்ந்தும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர். இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் பலனளிக்கின்றது : முழுமையான மீட்சியை நோக்கி நகர்வது அவசியம் - பீற்றர் புரூவர் மற்றும் மார்தா ரெஸ்பயே வொல்டெமைகல் ஆகியோர் தெரிவிப்பு | Virakesari.lk
-
முல்லைத்தீவில் நீதிமன்ற அனுமதியுடன் எரியூட்டப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வள்ளங்கள்
09 Apr, 2025 | 05:16 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் களப்பு பகுதியில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் தொடர்ச்சியாக முன்வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தொடர்ச்சியாக சில மாதங்களாக கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் மற்றும் மீனவ அமைப்புகள் விசேட அதிரடிப்படை கடற்படை என அனைத்து தரப்பினரும் இணைந்து பல்வேறு சுற்றி வளைப்புகளையும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு மற்றும் கைது நடவடிக்கைகளில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உள்நாட்டு நிர்மாண விதிகளுக்கு முரணாக தயாரிக்கப்பட்ட வெட்டு வள்ளங்கள் எனப்படுகின்ற 20 வள்ளங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்றைய தினம் (08) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நந்திக்கடல் களப்பில் அதிகரிக்கின்ற சட்டவிரோத தொழில்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற குறித்த உள்நாட்டு நிர்மாண விதிமுறைகளுக்கு முரணாக தயாரிக்கப்பட்ட பல்வேறு தினங்களில் கைப்பற்றப்பட்ட வெட்டுவள்ளங்கள் எனப்படுகின்ற 20 வள்ளங்கள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் எரியூட்டப்பட்டன. நந்திக்கடல் களப்பை அண்மித்த பகுதியிலே இந்த வள்ளங்கள் இருபதும் எறியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த 03.04.2025 அன்று கைது செய்யப்பட்ட எட்டு வள்ளங்களும் 02.04.2025 அன்று கைது செய்யப்பட்ட ஏழு வள்ளங்களும் 28.02.2025 அன்று கைது செய்யப்பட்ட மூன்று வள்ளங்களும் 25.02.2025 அன்று கைது செய்யப்பட்ட இரண்டு வள்ளங்களுமாக 20 வெட்டு வள்ளங்கள் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக நந்திக்கடல் களப்பு பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் மீனவர்களை சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாது சட்டபூர்வமாக மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தனது வாழ்வாதாரத்தை முன்னெடுக்குமாறு கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் மீனவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவில் நீதிமன்ற அனுமதியுடன் எரியூட்டப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வள்ளங்கள் | Virakesari.lk
-
நல்லூரில் பாத்தீனியத்தை அழிக்க நடவடிக்கை
09 Apr, 2025 | 03:08 PM யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் பாத்தீனிய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புகுழு கூட்டம் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பாடசாலை இடைவிலகல் மற்றும் ஒழுங்கீனங்கள், சிறுவர்கள் பாடசாலைகளில் சமூகத்தில் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், சிறுவர்கள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களின் முக்கியத்துவம் தொடர்பாகவும், பாடசாலையில் புதிய மாணவர்களை இணைக்கும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அதேவேளை பாடசாலை மட்டத்தில், கிராம மட்டத்தில் பாதீனியம் அதிகளவு காணப்படுவதனால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் நல்லூர் மற்றும் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் இல்ல முகாமையாளர்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் சார் சமூக நலன் விரும்பிகள் ஆகியோர் பங்குபற்றினார்கள். நல்லூரில் பாத்தீனியத்தை அழிக்க நடவடிக்கை | Virakesari.lk
-
புதுக்குடியிருப்பு - மாணிக்கபுரம் கிராமத்தில் மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து கசிப்பு வியாபாரிகளின் வீடுகள் முற்றுகை ; ஆறு பேர் கைது!
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் கசிப்பு வியாபாரம் அதிகரித்து காணப்படுவதாக கடந்த 6 ஆம் திகதி மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று குடும்பங்கள் மக்களால் இனங்காணப்பட்டு அவர்களின் வீட்டுப் படலைகளில் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டன. இந்த நிலையில் இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் வீடுகளில் வைத்து கசிப்பு வியாபாரம் செய்து வந்த குறித்த மூன்று குடும்பங்களின் வீடுகள் புதுக் குடியிருப்பு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிப்படையினரின் சுற்றி வளைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (9) காலை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இந்த சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதன்போது 16. 5 லீற்றர் கசிப்பு 3 வீடுகளிலும் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களையும் சான்றுப் பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டு வருகின்றார்கள். புதுக்குடியிருப்பு - மாணிக்கபுரம் கிராமத்தில் மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து கசிப்பு வியாபாரிகளின் வீடுகள் முற்றுகை ; ஆறு பேர் கைது! | Virakesari.lk
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்!
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக கூட்டமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) அன்று பிற்பகல் 3 மணியளவில் செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற உள்ளது. மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக நிகழ்வுகள் இம்முறை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச சபை பிரிவிலும் தனித்தனியாக நடாத்தப்பட்டு வரும் நிலையில் ஏறாவூர் பற்று மற்றும் ஏறாவூர் நகருக்கான பொதுக் கூட்டமும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், சிறிநேசன், வைத்தியர் சிறிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர். நீண்ட காலத்திற்கு பிறகு செங்கலடி ஐயன்கேணி கிராமத்தில் நடைபெற உள்ள மேற்படி நிகழ்வில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இக் கூட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று தொகுதி கிளை அழைப்பு வந்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டமும் வேட்பாளர் அறிமுகமும்! | Virakesari.lk
-
பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்
“அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை!” - உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பினராயி விஜயன் வரவேற்பு திருவனந்தபுரம்: மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பை உறுதிப்படுத்தக் கூடியது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பினராயி விஜயன், "மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பையும், சட்டமன்றத்தின் ஜனநாயக உரிமைகளையும் நிலைநிறுத்துகிறது. அமைச்சரவையின் ஆலோசனையின்படி ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த தீர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. சட்டமன்றத்தின் அதிகாரங்களை ஆளுநர்கள் அபகரிக்கும் போக்குக்கு எதிரான எச்சரிக்கையாகவும் இந்தத் தீர்ப்பு அமைகிறது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் 23 மாதங்கள் வரை கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளன. இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் கேரளா ஈடுபட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, கேரளா எழுப்பிய இதுபோன்ற பிரச்சினைகளின் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார். கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கேரள ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமது கான் அனுமதி வழங்க மறுத்ததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது கவனிக்கத்தக்கது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது. முதல் முறையாக மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அல்லது, குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம். சட்டப்பேரவை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்க வேண்டும். அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துறைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது. அந்த வகையில், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் கருதுகிறது. 10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்திவைத்த ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது, எனவே அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. 10 மசோதாக்கள் சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு அவை மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம். ஆளுநர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த உச்ச நீதிமன்றத்தின் சில கருத்துகள்: > ஆளுநர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்ப விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் > அரசியல் நோக்கங்களால் வழிநடத்தப்படாமல், ஒரு நண்பராகவும், வழிகாட்டியாகவும், தத்துவஞானியாகவும் தனது செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் > ஆளுநர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முன்னோடி. அவர் ஒரு ஊக்கியாக இருக்க வேண்டும், தடுப்பவராக இருக்கக்கூடாது. > ஆளுநர்கள் அரசியலமைப்பின் மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டும் > ஆளுநர்கள் தங்களது அரசியலமைப்பு பதவிப் பிரமாணத்தின்படி நடந்து கொள்ள வேண்டும் > ஆளுநர்கள் தங்கள் நடவடிக்கைகள் மக்களின் அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளதா என்பதை தங்களுக்குத் தாங்களே ஆய்வு செய்ய வேண்டும். ஆளுநர்களுக்கு காலக்கெடு: ஆளுநர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநர்களிடம் சமர்ப்பிக்கப்படும்போது, ஒப்புதலை நிறுத்தி வைத்தால், ஒரு மாதம். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக ஒப்புதலை நிறுத்தி வைத்தால், மூன்று மாதங்கள். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாக்கள் ஒதுக்கப்பட்டால், மூன்று மாதங்கள். ஆளுநர்களால் மறுபரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் விஷயத்தில், ஒரு மாதம். இவை அதிகபட்ச காலக்கெடு. ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். “அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை!” - உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பினராயி விஜயன் வரவேற்பு | Upholds federal system: Kerala CM welcomes SC verdict RN Ravi witholding bills - hindutamil.in
-
சிறைக்கே மீண்டும் சென்றார் வியாழேந்திரன்
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை (௦8) பிணையில் விடுவிக்கப்பட்டார். ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீரப் பிணைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையில் விணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக ரூ.1.5 மில்லியன் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அவரது விளக்கமறியல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை, ஜூன் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற, செவ்வாய்க்கிழமை (08) மாலை வரையிலும் தவறியமையால், அவர், சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார். Tamilmirror Online || சிறைக்கே மீண்டும் சென்றார் வியாழேந்திரன்
-
யாழ். உடுப்பிட்டியில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு!
யாழ்ப்பாணம் 17 மணி நேரம் முன் யாழ். உடுப்பிட்டியில் இன்று கன்றுகளை ஈன்ற பசு! மிக அரிதாக இடம்பெறும் சில நிகழ்வுகளில் பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி, உடுப்பிட்டி இலக்கணாவத்தை பகுதி விவசாயி ஒருவர் விலங்கு வேளாண்மையிலும் ஈடுபட்டு வருகின்றார். இவ் விவசாயியின் பசு மாடு நேற்று முன்தினம் மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது. இரண்டு நாம்பன் ஒரு பசுக் கன்று ஈன்றுள்ளதானது இலங்கையிலேயே முதலாவதாக இருக்கலாம் என விவசாயி மகழ்ச்சியாக தெரிவித்தார். இதேவேளை இம்மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருக்கிறமை குறிப்பிடத்தக்கது. யாழ். உடுப்பிட்டியில் இன்று கன்றுகளை ஈன்ற பசு!
-
குடியிருக்க வீடு காணி இல்லை - நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர்!
குடியிருக்க வீடு காணி இல்லை, பேருந்து நிலையத்திலேயே சில வாரமாக தங்கியிருந்த நிலையில் ஜனாதிபதிக்கு தமது நிலை சென்றடையும் வரை நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர். நேற்று (06) மாலை அச்செழு, அச்சுவேலியில் இருந்து நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். ஏழு வயதான ஆண் பிள்ளை மற்றும் ஆறு வயதுடைய பெண் பிள்றையுடன் கணவன், மனை நால்வராக குறித்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இந் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்காவின் கவனத்திற்கு சென்றடையும் வரை நடை பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இ.கலீபன் நடைபயணி தெரிவித்தார். ஆனாலும் இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வடமாகாண ஆளுநரை சந்தித்துள்ளனர். இதன் போது ஆளுநர் நா.வேதநாயகன் இவர்களுக்கான காணியனை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு மருதங்கேணி பிரதேச செயலர் க.பிரபாகரமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொண்டு ஆவண செய்யுமாறு கோரியுள்ளார். ஆளுநரின் கோரிக்கைக்காக்க மருதங்கேணி பிரதேச செயலர் க.பிரபாகரமூர்த்தி நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (ப) குடியிருக்க வீடு காணி இல்லை - நடை பயணத்தை ஆரம்பித்த இளங் குடும்பத்தினர்!...
-
கண்டி பாடசாலையொன்றில் இயங்கிய வதைமுகாமிலிருந்து இளைஞர்களை டிரக்கில் கொண்டு அவர்களை எப்படி கொலை செய்தனர்- 1988- 89 இல் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் முன்னாள் அதிகாரியின் வீடியோ
08 Apr, 2025 | 05:23 PM 1988-89ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டி பாடசாலையொன்றில் இயங்கிய வதை முகாமிலிருந்து இளைஞர்களை டிரக்கில் கொண்டு சென்று வழியில் அவர்களை கீழே தள்ளிவிட்டு அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த பின்னர் அவர்கள் பெட்ரோலை ஊற்றி கொலை செய்தனர் என காணாமல்போனவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் செயலாளர் எம்சி இக்பால் தெரிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை நீதிக்கான திட்டம் உட்பட பல சர்வதேச அமைப்புகளும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். எம்சிஎம் இக்பால் இந்த வீடியோவில் மேலும் தெரிவித்துள்ளதாவது. எனது மனதில் நினைவில் இருக்கும் விடயங்களில் ஒன்று கண்டியின் பாடசாலையொன்றில் காணப்பட்ட வதை முகாம் பற்றியதாகவும். பல இளைஞர்கள் அங்கு சித்திரவதை செய்யப்பட்டார்கள். ஒரு லொறி நிறைய பிரம்புகள் அந்த கல்லூரியில் உள்ள வதை முகாமிற்கு கொண்டு செல்லப்படுவதை பார்த்தவர்கள் எமக்கு சாட்சியமளித்திருந்தனர்.இளைஞர்கள் மாணவர்களிற்கு அடித்து சித்திரவதை செய்வதற்காக அதனை பயன்படுத்தியிருக்கவேண்டும். தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களை பேசச்செய்வதற்காக அவர்களிற்கு அடிப்பார்கள் அதன்பிறகும் அவர்கள் பேசாவிட்டால் பிரம்பால் அடிப்பார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும் சித்திரவதை செய்யப்பட்டவர்களை டிரக் ஒன்றில் ஏற்றி வேறு எங்கோ கொண்டு செல்வார்கள் இ அவர்களை வேறு முகாமிற்கு கொண்டு செல்வதாக தெரிவிப்பார்கள். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் வழியில் என்ன நடந்தது என எங்களிற்கு தெரிவித்தார். 'அவர்கள் எங்களின் கைகளை கட்டி லொறியில் ஏற்றினார்கள். தனிமையான இடத்தில் செல்லும்போது அந்த டிரக்கிலிருந்து ஒவ்வொருவராக தள்ளிவிடுவார்கள். பின்னால் இரண்டு வாகனங்கள் வரும் ஒன்றில் ஆயுதமேந்திய பொலிஸார் காணப்படுவார்கள் மற்றையதில் பெட்ரோலுடன் பொலிஸார் காணப்படுவார்கள். டிரக்கிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டவர் தப்பியோட முயலும்போது பின்னால் வரும் வாகனத்திலிருக்கும் பொலிஸார் அவர்கள் மீதுதுப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபடுவார்கள். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் துடிதுடித்துக்கொண்டிருக்கும் போது பின்னால் வரும் வாகனத்தில் உள்ளவர் பெட்ரோலை ஊற்றி தீ மூட்டுவார்இ இதனை போகும் வழியெல்லாம் தொடர்ந்து செய்வார்கள். இவ்வாறு ஒருவரை தள்ள முயன்றவேளை அவரை உயிருடன் எரிப்பதற்கு பெட்ரோல் இல்லாத நிலை காணப்பட்டது அதன் காரணமாகவே அவர் தப்பினார். அவரை முகாமிற்கு கொண்டு சென்றவர்கள் அவர் அதிஸ்டசாலி என்றார்கள் அவரை வேறு ஒரு நாள் அழைத்து வருவதே அவர்களின் நோக்கம். எனினும் அதிஸ்டவசமாக மற்றுமொரு நாள் அவருக்கு வரவில்லை அவர் அந்த வதை முகாமிலிருந்து தப்பினார்இ உயிர் பிழைத்தார்.அவரே பின்னபு எங்களின் ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார். இது கண்டியின் அனிவத்தை என்ற பகுதியில் இடம்பெற்றது.கண்டியில் அந்த பகுதியில் வீதிகள் இருள்மயமாக காணப்பட்டன. கண்டி பாடசாலையொன்றில் இயங்கிய வதைமுகாமிலிருந்து இளைஞர்களை டிரக்கில் கொண்டு அவர்களை எப்படி கொலை செய்தனர்- 1988- 89 இல் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து சமூக ஊடகத்தில் முன்னாள் அதிகாரியின் வீடியோ | Virakesari.lk
-
‘கலிப்சோ’ ரயில் சேவை நானுஓயாவிலிருந்து ஆரம்பம்
08 Apr, 2025 | 03:23 PM "கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட தொடருந்து சேவையானது நானுஓயா மற்றும் தெமோதரை புகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த தொடருந்து அதன் பயணத்தை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு நானுஓயா புகையிரத நிலைய வளாகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுவதுடன் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா ரயில் பெட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ரயில் உணவு, இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளது. தற்போது நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மலையக தொடருந்து பாதையின் அதிசயங்களை பார்த்து இரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாகவே இந்த ரயில் சேவையை ஆரம்பித்ததாகவும், தெமோதரை வரை இயங்கும் ரயில் மீண்டும் பண்டாரவளை வரையிலும், பின்னர் தெமோதரையிலிருந்து பதுளை வரையிலும் இயக்கப்படும் என்றும் இந்த ரயிலில் பயணித்த ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த தெரிவித்தார். மேலும், விரைவில் மேலதிகமாக "கலிப்சோ" ரயில்களை சேவையில் இணைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டார். ‘கலிப்சோ’ ரயில் சேவை நானுஓயாவிலிருந்து ஆரம்பம் | Virakesari.lk
-
இதய நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு!
08 Apr, 2025 | 03:45 PM இதய நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக இதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகளவானோர் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு உள்ளிட்ட இதய பாதிப்புக்கள் காரணமாக உயிரிழக்கின்றனர். 20 சதவீதமானோர் கரோனரி ஆர்டரி என்ற இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இதயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக தினமும் சுமார் 200 நோயாளிகள் வைத்தியசாலைக்கு செல்கின்றனர். இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவையே காரணம். ஆரம்பகாலத்தில் இருந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் இதய நோய் உருவாகும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கலாம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயம் என அவர் தெரிவித்தார். இதய நோய் காரணமாக வருடாந்தம் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழப்பு! | Virakesari.lk
-
தமிழ் மக்கள் பொறுப்பை உணராவிட்டால்.. சரித்திரத்தில் இல்லாமல் ஆக்கப்படுவோம்.. கஜேந்திரகுமார் எம்பி தெரிவிப்பு
08 Apr, 2025 | 03:16 PM தமிழ் மக்களுக்கு உள்ளூராட்சி தேர்தல் ஆனது தமிழின இருப்புக்கான தேர்தலாக பார்க்கப்படுகின்ற நிலையில் தமிழ் மக்கள் தமது பொறுப்பை உணராவிட்டால் சரித்திரத்தில் இல்லாமல் ஆக்கப்படுவோம் என என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.. நேற்று திங்கட்கிழமை யாழ் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் பேரவை இணைந்து நடாத்திய உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி என்கின்ற ஜேவிபி யின் மாயையில் சிக்கி தமிழ் மக்கள் ஒரு பகுதியினர் ஈர்க்கப்பட்டமை உண்மையான விடயம். தமிழ் மக்களுக்கு தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக ஆறு மாத காலங்கள் போதும் என நினைக்கிறேன். தென் இலங்கைக்கு வேண்டுமானால் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தல் ஒரு சாதாரண தேர்தலாக அமையலாம் ஆனால் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் உள்ளூராட்சி மன்ற அதிகாரம் என்பது தமிழ் மக்களின் உரிமை போராட்டம் சார்ந்த பிரச்சனை. சிங்கள தேசியவாதம் விதைக்கப்படுகின்ற நிலையில் தமிழ் தேசியவாதத்தை பாதுகாப்பதற்காகவும் தமிழ் மக்களின் இருப்புக்களை பாதுகாப்பதற்கான ஒரு தேர்தலாக உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலை பார்க்க வேண்டும். 2009 மே 18 உரிமை போராட்டம் மெளனிக்கக்கப்பட்ட பின் சிலர் உரிமைப்போயாட்டத்த்தை விலக்கி தமிழ் தேசிய நீக்க அரசியலை செய்ய ஆரம்பித்தனர். அதன் விளைவாக தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்த கட்சிகளை மெல்ல மெல்ல உடைத்து சிங்கள தேசியத்திற்கு உயிரோட்டம் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். அவ்வாறான ஒரு சந்தர்ப்பமாக நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட ஏக்கிய ராஜ்சிய என்ற ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை தமிழ் மக்களுக்கான தீர்வாக திணிக்க முயற்சியில் ஈடுபட்டார்கள். அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அரசியலில் இருந்து நீக்கி இருக்கின்ற நிலையிலும் ஏதோ ஒரு வகையில் சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்துவதற்காக காட்சியின் பொதுச் செயலாளராக வந்துள்ளார். வீட்டில் இருக்கும் கிருமியை அகற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்களுக்கு இருக்கின்ற நிலையில் அதற்கான முடிவுகளை அவர் சார்ந்த கட்சிக்கு வழங்க வேண்டும் தமிழ் மக்களால் ஜனநாயக வாக்குகளின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று தமிழரசு கட்சியை ஆக்கிரமித்து உள்ள நிலையில் அதிலிருந்து விடுபட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கட்டி எழுப்புவதற்காக எம்முடன் பலர் கைகோத்துள்ளார்கள். எங்களுடன் கூட்டாக இணைந்துள்ள தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்பு கிளை தலைவர் சட்டத்தரணி கேவி தவராசா எனது தந்தையார் காலத்தில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி மூலம் தமிழ் மக்களுக்கான தீவிர அரசியலில் ஈடுபட்டவர். எங்களுடன் இணைந்துள்ள தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் தமிழ் தேசிய பற்றுடன் சுமார் 52வருட கால தீவிர அரசியலில் ஈடுபடுவரும் நிலையில் அவரும் எங்களுடன் கைகோத்துள்ளார். பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் தமிழ் தேசியத்திற்காக தமிழ் ஈழப் போராட்டத்திற்காக பல வழிகளில் உதவியவர் . முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜ் மறைவுக்குப் பின்னர் தலைவர் பிரபாகரனால் அடையாளப்படுத்தப்பட்ட ஒருவர் அவரோடு மூத்த சட்டத்தரணி தமிழின உணர்வாளர் ஸ்ரீகாந்தா அவர்களும் எம்முடன் இணைந்துள்ளனர். எமது கூட்டானது உள்ளூராட்சி மன்ற கூட்டாக மட்டும் அமையாது தொடர்ந்து தமிழ் தேசிய இருப்பை பாதுகாப்பதற்கும் தமிழினத்திற்கான குரலாகவும் இணைந்து பயணிப்போம். ஏனெனில் தமிழ் தேசிய நிலைப்பட்டில் உள்ளவர்களை இணைத்து ஏனையவர்களை நிராகரிப்பதன் மூலமே தமிழ் தேசியத்தை பாதுக்க்கலாம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்த பின்னரே எமது கூட்டினை அமைக்க வேண்டிய தேவையை உணர்ந்தோம். ஆகவே தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்டத்திற்காக உயிரிழந்த மாவீரர்களின் தியாகங்களை நினைத்துப் பாருங்கள் கை கால் இழந்தவர்களின் தியாகங்களை நினைத்துப் பாருங்கள் உங்கள் கைகளால் வழங்கப்படும் வாக்குகள் உண்மையான தமிழ் தேசியத்தை பாதுகாப்பதாக அமைய வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் மக்கள் பொறுப்பை உணராவிட்டால்.. சரித்திரத்தில் இல்லாமல் ஆக்கப்படுவோம்.. கஜேந்திரகுமார் எம்பி தெரிவிப்பு . | Virakesari.lk
-
வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள சவால் !
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முடிந்தால் பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி கேளுங்கள் என வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சவால் விடுத்துள்ளார். அதன் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு, மண் அபகரிப்பு, மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியல் அமைப்பு, தமிழ் மக்களுக்கு இவ் அரசு என்ன செய்துள்ளது என்பதனை பற்றி நான் கேட்கின்றுன். முடிந்தால் நீங்கள் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கேள்விகளை கேளுக்கள் என்று மேலும் சவால்விடுத்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் திங்கட்கிழமை (07) மாலை மண்டூர் கணேசபுரம், கண்ணகி விளையாட்டுக் கழக மைதான அரங்கில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே இரா. சாணக்கியன் மேற்கண்டவாறு சவால் விடுத்துள்ளார். வட, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாணக்கியன் விடுத்துள்ள சவால் ! | Virakesari.lk
-
உயிர் பலியில் முடிந்த ரோலர் கோஸ்டர் சவாரி; வருங்கால கணவர் கண்முன் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
Published:Today at 3 AMUpdated:Today at 3 AM பிரியங்கா - நிகில் டெல்லியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் புதன்கிழமை 24 வயது பெண் ஒருவர் ரோலர் கோஸ்டரிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாணக்யபுரியைச் சேர்ந்த விற்பனை மேலாளரார் பிரியங்கா. கடந்த புதன்கிழமை மதியம் தனது வருங்கால கணவர் நிகிலுடன் கபாஷேராக்கு அருகிலுள்ள ஃபன் அண்ட் ஃபுட் வில்லேஜ் பொழுதுபோக்கு பூங்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு இருந்த நீர் விளையாட்டுகள் எனப் பல்வேறு விளையாட்டுகளில் பங்கெடுத்து மகிழ்ந்தனர். அதின் ஒருபகுதியாக, ரோலர்-கோஸ்டர் சவாரியை மேற்கொண்டனர். அது உச்சிக்கு சென்றபோது, அதன் ஸ்டாண்ட் உடைந்து, பிரியங்கா நேராக கீழே விழுந்தார். அதில் பிரியங்காவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நிகில், பிரியங்காவின் குடும்பத்தினருக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். நிகில் அளித்த தகவல்களின் அடிப்படையில் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிரியங்காவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ரோலர் கோஸ்டர் சித்திரிப்பு படம் பிரியங்காவின் சகோதரர் மோஹித், ``அந்தப் பூங்காவில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை. என் சகோதரி மிகவும் தாமதமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதனால்தான் அவர் உயிர் இழந்தார். இப்போதுதான் அந்தப் பூங்காவின் ஒரு பகுதி, ரோலர் கோஸ்டர் உட்பட, பழுதுபார்ப்பதற்காக மூடப்பட்டிருக்கிறது." என்றார். விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. உயிர் பலியில் முடிந்த ரோலர் கோஸ்டர் சவாரி; வருங்கால கணவர் கண்முன் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
-
யாழில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பண மோசடி செய்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்
06 Apr, 2025 | 02:09 PM யாழ்ப்பாணத்தில் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக வட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவரிடம் ஒரு கோடி அறுபது இலட்சம் ரூபா பணத்தினை கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த பணத்தினை வாங்கிய நபர் அவரை வெளிநாட்டுக்கும் அனுப்பாமல், அந்த பணத்தினை திருப்பியும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தார். அந்தவகையில் மேற்படி குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எம்.உதயானந்தன் தலைமையிலான குழுவினர் சந்தேகநபரை கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இந்நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். யாழில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான பண மோசடி செய்த சந்தேகநபருக்கு விளக்கமறியல் | Virakesari.lk
-
வைத்தியரால் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகம் ; விசாரணைகள் ஆரம்பம்
06 Apr, 2025 | 03:51 PM நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் வைத்தியரால் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் 31 ஆம் திகதி பெண்ணொருவர் தனது தாயாருடன் பல்வலி மற்றும் தோல் நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது, தன்னை பரிசோதித்த வைத்தியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மூலம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். அதன்படி, கடந்த 2 ஆம் திகதி இந்த பெண்ணை சட்ட வைத்திய அதிகாரி பரிசோதித்தார். எனினும், வைத்திய அறிக்கையில் திருப்தியடையாமையினால், விசேட மருத்துவ குழுவால் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வைத்தியரால் பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகம் ; விசாரணைகள் ஆரம்பம் | Virakesari.lk
-
பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
யாழ்.பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல் - சிரேஷ்ட மாணவர்கள் இருவர் விளக்கமறியலில். 06 Apr, 2025 | 04:05 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு சில புதுமுக மாணவர்களையும் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாக்கிய சிரேஷ்ட மாணவர்கள், தலைக்கவசத்தாலும் தாக்கியுள்ளனர். தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு உள்ளான நாத்தாண்டிய பகுதியை சேர்ந்த மாணவன் ஒரு காது கேட்கும் திறனை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரு சிரேஷ்ட மாணவர்களை கைது செய்து விசாரணைகளின் பின்னர் யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து இரு மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்கள் தொடர்பிலும் தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , தலைமறைவாகவுள்ள அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.பல்கலை புதுமுக மாணவன் மீது தாக்குதல் - சிரேஷ்ட மாணவர்கள் இருவர் விளக்கமறியலில் | Virakesari.lk
-
IPKF நினைவிடத்தில் மோடி அஞ்சலி
பத்தரமுல்லையில் உள்ள IPKF நினைவிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் அமைதி, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த இந்திய அமைதி காக்கும் படையின் துணிச்சலான வீரர்களை நாங்கள் நினைவு கூர்கிறோம். அவர்களின் அசைக்க முடியாத துணிச்சலும் அர்ப்பணிப்பும் நம் அனைவருக்கும் உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது. R Tamilmirror Online || IPKF நினைவிடத்தில் மோடி அஞ்சலி
-
தேசிய ரீதியாக நடைபெற்ற போட்டியில் 06 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த கிளிநொச்சி!
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆண்டிற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான (மாற்றுத் திறனாளிகளுக்கான) தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி இன்றையதினம் 03.04.2025 மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தேசிய மட்டத்தில் 25 மாவட்டத்திலிருந்தும் இதில் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். 06 தங்கப் பதக்கத்தையும் , 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டது. குறித்த விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 21 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர். குறித்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் பங்குபற்றியிருந்தனர். (ப) தேசிய ரீதியாக நடைபெற்ற போட்டியில் 06 தங்கப் பதக்கங்களை சுவீகரித்த கிளிநொச்சி!.. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுகளில் கிளிநொச்சி முதலிடம்! மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் 6 தங்கப் பதக்கங்களையும் 10 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனையீட்டியுள்ளது. சமூக சேவைகள் திணைக்களத்தால் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை ஹோமகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 25 மாவட்டத்திலிருந்தும் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இந்தப் போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்டம் 5 முதலிடங்களையும் 4 இரண்டாமிடங்களையும் 5 மூன்றாமிடங்களையும் பெற்று தேசிய ரீதியில் மூன்றாவது இடத்தைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டம் சாதனை படைத்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் இரண்டு தங்கப் பதக்கங்களையும் மூன்று வெற்றிச் சான்றிதழ்களையும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுகளில் கிளிநொச்சி முதலிடம்!
-
இராணுவத்தின் பிடியிலிருந்த பரந்தன் தொழிற்சாலையின் 15 ஏக்கர் காணி விடுவிப்பு
கிளிநொச்சி 23 மணி நேரம் முன் இராணுவத்தின் பிடியிலிருந்த பரந்தன் தொழிற்சாலையின் 15 ஏக்கர் காணி விடுவிப்பு பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் காணிகளில் 15 ஏக்கர் பரப்பளவான காணிகள் நேற்று முறைப்படி விடுவிக்கப்பட்டுள்ளன. காணி விடுவிப்புத் தொடர்பான ஆவணங்கள், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம் 553ஆவது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரியால் கையளிக்கப்பட்டன. இராணுவத்தின் பிடியிலிருந்த பரந்தன் தொழிற்சாலையின் 15 ஏக்கர் காணி விடுவிப்பு