Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. நீதிமன்றங்களில் 1,131,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதால், சட்டத்தை நிலைநாட்டும் செற்பாட்டில் கணிசமான காலதாமதம் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைபாட்டு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய 5,785 வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,572 வழக்குகளும், மேல் நீதிமன்றங்களில் 6,286 வழக்குகளும், வணிக மேல்நீதிமன்றங்களில் 6,146 வழக்குகளும், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்களில் 3 வழக்குகளும்,மேல்நீதிமன்றங்களில் 27,324 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் 262,665 வழக்குகளும், சிறுவர் நீதவான் நீதிமன்றங்களில் 1260 வழக்குகளுமாக ஒட்டுமொத்தமாக தீர்க்கப்பட வேண்டிய 1,131,818 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, அதிகாரிகள் குழுவில் சுட்டிக்காட்டினர்.AN Tamilmirror Online || ‘1,131,818 வழக்குகள் நிலுவையில் உள்ளன’
  2. 27 Feb, 2025 | 05:00 PM (எம்.மனோசித்ரா) சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். எனது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு தினமும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வைத்தியர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் சிறைச்சாலை அதிகாரிகள் வெளியிலிருந்து உணவைப் பெற்றுக் கொள்ள எனக்கு அனுமதியளிக்கவில்லை. இதற்கு முன்னர் 4 சந்தர்ப்பங்களில் சிறை தண்டனை அனுபவித்த போது நான் இவ்வாறு நடத்தப்படவில்லை. உண்மையில் இது அரசாங்கத்தின் முடிவா அல்லது சிறை அதிகாரிகளின் தன்னிச்சையான செயலா? என்னைப் போன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள கைதிகள் பலரும் மனிதாபிமானமற்ற முறையிலேயே நடத்தப்பட்டுகின்றனர். இன்று சமூக வலைத்தளங்களை அதிகமாக உபயோகப்படுத்துவோர் செல்வாக்கு மிக்கவர்களாகவுள்ளனர். அவ்வாறானவர்களது அழுத்தங்கள் காரணமாகவே எனக்கான மருத்துவ தேவைகள் கூட புறக்கணிக்கப்பட்டன. கைதிகள் இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். மருத்துவ தேவைகள் காணப்படும் கைதிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றார். சிறைச்சாலைக்குள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன் - கலகொட அத்தே ஞானசார தேரர் | Virakesari.lk
  3. 8 Feb, 2025 | 04:40 PM யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் நேற்று வியாழக்கிழமை (27) மாலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ள நிலையில் குறித்த முச்சக்கரவண்டியானது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதியுள்ளது. இந்த விபத்தில் பாரிய சேதங்கள் இல்லாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மேலும், குறித்த சந்தியில் நாளாந்தம் தொடர்ச்சியாக வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது, ஆகையினால் குறித்த சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! | Virakesari.lk
  4. கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர் கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர் 28 Feb, 2025 | 06:23 PM யாழ்ப்பாணம் - கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக சுத்திகரிக்கும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை (28) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது திட்டப் பணிப்பாளரும் பொறியியலாளருமான எஸ்.மாலதி மற்றும் பொறியியலாளர் விஜயகாந் தலைமையிலான குழுவினர் ஆளுநரை வரவேற்றனர். அதனை தொடர்ந்து, குடிநீர் விநியோகத் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார். அதன் பின்னர், கடல் நீரை உள்ளெடுக்கும் நிலையம், சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். இது தொடர்பாக திட்டப் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்கள் ஆளுநருக்கு விளக்கமளித்தனர். கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர் | Virakesari.lk
  5. 28 Feb, 2025 | 05:02 PM (நமது நிருபர்) தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாகச் செயற்படுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றுபட்டு ஒன்றினைந்து செயற்படுதல் விடயத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அறிந்து தெளிந்து உணர்ந்து பொதுவான விடயங்களில் ஒன்றுபட்டு செயற்படுவது சாலச்சிறந்தது. இந்த குழுவை நம்மத்தியில் உருவாக்கி செயற்பட தங்கள் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றேன். இது தமது இனத்தின் பிரச்சனைகளை சீர்தூக்கிபார்த்து கலந்துரையாடி முடிவுகளை எடுக்க உதவும் என்று நம்புகின்றேன். இவ்வாறான ஓர் குழுவாக பாரளுமன்றத்தில் செயற்பட உங்களது மேலான ஒத்துழைப்பை தருமாறு வேண்டிநிற்கின்றேன் என்றுள்ளது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள கோரிக்கை | Virakesari.lk
  6. “போலீஸ் சம்மனுக்கு ஆஜராக மாட்டேன்... என்ன செய்ய முடியும்?” - சீமான் திட்டவட்டம் ஓசூரில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓசூர்: “போலீஸார் அனுப்பியுள்ள சம்மனுக்கு ஆஜராகியே வேண்டும் என்றால் கூட நான் ஆஜராக மாட்டேன். என்ன செய்ய முடியும்?” என்று நடிகை விஜயலட்சுமி வழக்கு விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக வேண்டும் என போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகததால் அவரது வீட்டின் கதவில் போலீஸார் சம்மனை இன்று (பிப்.27) ஒட்டினர். கதவில் ஒட்டப்பட்ட அந்த சம்மனை, அங்கிருந்த காவலர் கிழித்ததாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டு காவலாளி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்ததாகவும் செய்திகள் வெளியானது.இது தொடர்பாக ஓசூரில் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: “என்னால் வரமுடியாது. சென்னை வந்தவுடன் வருவதாக கூறியிருந்தேன். நான் எங்கும் ஓடவில்லை. தினமும் செய்தியாளர்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறேன். இன்று ஓசூரில் இருக்கிறேன் என்பது குறித்து போலீஸாருக்கும் தெரியும். நான் வருகிறேன் என்று கூறியும், வீட்டில் சம்மன் ஒட்டி வைத்து, என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு எல்லாம் நான் அச்சப்பட மாட்டேன். நடிகையின் புகார் குறித்த வழக்கை ரத்து செய்யக் கோரி நான்தான் வழக்குத் தொடர்ந்தேன். இருவரையும் உட்கார வைத்து விசாரணை செய்ய வேண்டும். ஜெயலலிதா, எடப்பாடி முதல்வராக இருந்த, கடந்த 10 ஆண்டுகள் அந்த நடிகை (விஜயலட்சுமி) வரவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, என்னை அவர்களால் சாமளிக்க முடியாத நேரங்களிலும், தேர்தல் சமயங்களிலும் இந்த நடிகையை வரழைத்து விடுகின்றனர். இந்த வழக்கில் உடனடியாக ஆஜராக என்ன அவசரம் இருக்கிறது? கடந்த 15 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் விசாரணை செய்கின்றனர். இதையே தான் சொல்லி வருகிறேன். இந்த வழக்கில், போலீஸார் அனுப்பியுள்ள சம்மனுக்கு ஆஜராகியே வேண்டும், என்றால் கூட நான் ஆஜராக மாட்டேன். என்ன செய்ய முடியும்?,” என்று அவர் கூறியுள்ளார். பின்னணி என்ன? - முன்னதாக, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளித்திருந்தார். அதையடுத்து போலீஸார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நடிகை விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, முதல்கட்டமாக வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று (பிப்.27) சீமானின் வழக்கறிஞர்கள் அவரது சார்பாக நேரில் ஆஜராகினர். சீமான் தற்போது கிருஷ்ணகிரியில் கட்சி ரீதியான பணியில் ஈடுபட்டிருப்பதால் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி காவல்துறையில் விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. “போலீஸ் சம்மனுக்கு ஆஜராக மாட்டேன்... என்ன செய்ய முடியும்?” - சீமான் திட்டவட்டம் | Cannot appear on police summons, say ntk leader Seeman - hindutamil.in
  7. சீமான் மீதான வழக்கு: சம்மன் கொடுத்த இடத்தில் நடந்த சம்பவம்... பின்னணி என்ன? நடிகை விஜயலட்சுமி, கடந்த 2011-ம் ஆண்டு ஜீன் மாதம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால் ஏழு தடவை கர்ப்பம் அடைந்து அதை கலைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் சீமான் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அதன்‌பேரில் வளசரவாக்கம் போலீஸார், சீமான் மீது மோசடி , கொலை மிரட்டல் , பாலியல் பலாத்காரம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட (417,420,354,376, 506(1)) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சீமான் தரப்பு நடிகை விஜயலட்சுமியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த வழக்கில் மனவருத்தமடைந்த நடிகை விஜயலட்சுமி, வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறினார். அதனால் சீமான் தரப்பு, முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி சீமான் தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.. அதுமட்டுமின்றி சீமான் மீது உள்ள வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்திருக்கிறது. நீதிமன்றத்தில் உத்தரவின்பேரில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீஸார் கடந்த சில தினங்களாக விசாரித்தனர். அப்போது விஜயலட்சுமி, சீமானுக்கு எதிரான சில முக்கிய ஆதாரங்களையும் தகவல்களையும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சீமானிடம் விசாரிக்க அவருக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திலிருந்து கடந்த 24-ம் தேதி முதல் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் பிப்ரவரி 27-ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணக்கு ஆஜராகும்படி குறிப்பிட்டிருந்தது. ஆனால் சீமான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதோடு, அவர் தரப்பில் வழக்கறிஞர்கள் டீம் காவல் நிலையத்தில் ஆஜராகி, ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக சீமான் ஆஜராகி எழுத்துபூர்வமாக விளக்கம் கொடுத்துவிட்டார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதாக போலீஸாரிடம் கூறினர். ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர்களின் விளக்கத்தை வளசரவாக்கம் போலீஸார் ஏற்றுக் கொள்ளவில்லை. நடிகை விஜயலட்சுமி அதனால் பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டில் இரண்டாவது சம்மனை வளசரவாக்கம் போலீஸார் ஒட்டினர். போலீஸார் அங்கிருந்து சென்றதும் சீமான் வீட்டிலிருந்து வந்தவர், அந்த சம்மனை கிழித்தெறிந்தார். அதனால் நீலாங்கரை இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான போலீஸார், சம்மன் கிழிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த சீமான் வீட்டுக்குச் சென்றனர். அப்போது சீமான் வீட்டுக்குள் போலீஸார் நுழைய முற்பட்டனர். அவர்களை காவலாளி ராஜ் தடுத்தார். அப்போது போலீஸாருக்கும் சீமான் வீட்டு காவலாளி ராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கைகலப்பாக மாறியது. அதைத் தொடர்ந்து காவலாளி ராஜை போலீஸார் பிடித்து போலீஸ் வாகனத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது ராஜிடம் கைத்துப்பாக்கி இருப்பதைக் கவனித்த போலீஸார் அதை பறித்தனர். ஆனால் ராஜ், நான் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்னுடைய பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வைத்திருக்கிறேன் என்று கூறினார். அப்போது ராஜிக்கும் போலீஸாருக்கும் போலீஸ் வாகனத்துக்குள்ளேயே கடும் போராட்டம் நடந்தது. இறுதியில் ராஜிடமிருந்து போலீஸார் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து சீமான் வீட்டிலிருந்த சுபாகர் என்பவரும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரையும் போலீஸார் பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. சீமான் இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் கூறுகையில், ``நாங்கள் சம்மனை ஒட்டிவிட்டு நாளை (28-ம்தேதி) ஆஜராகும்படி கூறிவிட்டு வந்துவிட்டோம். அதன்பிறகு சம்மனை சீமான் வீட்டிலிருந்தவர்கள் கிழித்திருக்கிறார்கள். இந்தத் தகவலைத் தெரிந்து விசாரிக்க நீலாங்கரை போலீஸார் சென்றபோதுதான் அவர்களை காவலாளி ராஜிடம், ஊழியர் சுபாகரும் மிரட்டியிருக்கிறார்கள். நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். சீமான் வீட்டில் நடந்த சம்பவத்தை நீலாங்கரை போலீஸார் விசாரிக்கிறார்கள்" என்றனர். இதுகுறித்து நீலாங்கரை போலீஸாரிடம் கேட்டதற்கு, ``சம்மனை ஏன் கிழித்தீர்கள் என விசாரித்துக் கொண்டிருந்தபோது அவதூறாக எங்களை காவலாளியும் அங்கிருந்த ஊழியரும் பேசினர். அதனால் அவர்களைப் பிடித்து வழக்கு பதிவு செய்திருக்கிறோம். காவலாளி ராஜிடமிருந்து துப்பாக்கி ஒன்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றனர். சீமான் மீதான வழக்கு: சம்மன் கொடுத்த இடத்தில் நடந்த சம்பவம்... பின்னணி என்ன? | Complaint case against Seeman: police arrested Seeman house security - Vikatan
  8. எதிர்வரும் 27ஆம் திகதி பொன் அணிகலன்களின் போர் ஆரம்பம்!.. சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் மாசி மாதம் 27,28, மற்றும் பங்குனி 01 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய மூன்று தினங்களிலும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென் பற்றிக்ஸ் கல்லூரி 175வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வாண்டு பொன் அணிகள் போரின் வரலாற்றில் முதன் முறையாக மூன்று தின போட்டியாக இது நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் தொடரின் தொடர்ச்சியாக 32வது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி 08/03/2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கும், அருட் திரு G.A. பிரான்சிஸ் யோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான 5வது இருபதுக்கு இருபது (T-20) கிரிக்கெட் போட்டி மார்ச் 12 புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டிகளில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 35 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 31 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. ஒரு போட்டி கைவிடப்பட்டது. ஒரு நாள் போட்டியில் (மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள்) 23 தடவைகள் சென் பற்றிக்ஸ் கல்லூரியும் 7 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டி இடைநிறுத்தப்பட்டது. T-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மூன்று தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன. இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு செல்வன் பற்குணம் மதுஷன் அவர்களும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு செல்வன் சிதம்பரலிங்கம் மதுஷன் அவர்களும் தலைமை தாங்குகின்றனர். (ப) எதிர்வரும் 27ஆம் திகதி பொன் அணிகலன்களின் போர் ஆரம்பம்!..
  9. வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது! பிரிட்டனுக்கு அனுப்புவதாக ஆசைகாட்டி பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: பிரிட்டனில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பிரிட்டனுக்கு அழைப்பதாகவும், இதற்கு முற்பணமாக யாழ்ப்பாணம் கம்பர்மலையில் வசிக்கும் தனது தாயாரிடம் 5 லட்சம் ரூபாவை வழங்குமாறும் கூறியுள்ளார். இதன்படி அந்த இளைஞரும், மேற்படி பெண்ணிடம் ஐந்து லட்சம் ரூபாவை வழங்கியதுடன், பிரிட்டனில் உள்ளவராலும், அவரின் தாயாராலும் கூறப்பட்ட திகதிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். இதன்பின்னரே அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதையடுத்து, யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய அந்த இளைஞர் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஆசைகாட்டி பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது!
  10. ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இருப்பினும் வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான தீர்வுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. எம் மக்களுக்கு முரண்பாடற்ற தீர்வு கிடைக்கும் வரையில் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு எந்த தெரிவுகளும் தமக்கு கிடையாது. யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழர் பிரதேசங்களில் ஆக்கிரமிப்புக்கள் இன்றும் தொடர்கின்றன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, சுதந்திரத்தின் பின்னரான 76 வருடங்களாக இந்த நாட்டை இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் மாத்திரமே ஆட்சி செய்தன. பெயர்கள் மாறுபட்டாலும் அந்த இரண்டு கட்சிகளே ஆட்சி செய்துவந்துள்ளன. இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் கடந்த 76 வருடங்களை காட்டிலும் மாறுபட்ட காலகட்டமாக தற்போதைய நிலை இருக்கின்றது. இனப்பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசிய வாதம் தொடர்பில் அவர்களின் கருத்துக்களை கேட்காவிட்டாலும் அவர்களின் கொள்கையை முன்னெடுப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால் தாம் ஆட்சிக்கு வந்தால் இனவாதத்தை முற்றாக இல்லாமல் செய்வதாக கூறினர். இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணம் இனவாதமாகும் .இதனை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். காலம்காலமாகஇனவாதத்தால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிறந்த ஆரம்பத்தை அரசாங்கம் முன்வைக்கும் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். இந்த மாகாணங்களுக்காக விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. வடக்கில் வீதி அபிவிருத்திருக்காக 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்கள் உள்ளன. அதன்படி ஒரு மாவட்டத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபாவே கிடைக்கும். அடிப்படை உட்கட்டமைப்புக்கு குறைந்தப்பட்சம் 1300 மில்லியன் ரூபாவாவது தேவையாகும். அதேபோன்று யாழ். நூலக அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. அத்துடன் கச்சேரிக்கான மூலதன செலவை எடுத்துக்கொண்டால் யாழ்ப்பாணத்திற்கு 187 மில்லியன் ரூபாவும், மன்னாருக்கு 189 மில்லியனும், வவுனியாவுக்கு 100 மில்லியனும், முல்லைத்தீவுக்கு 126 மில்லியனும், கிளிநொச்சிக்கு 179 மில்லியனும் ஒதுக்கப்படுகின்றது. எனினும் அம்பாந்தோட்டைக்கு 500 மில்லியனுக்கும் அதிகமாகவும், மாத்தறைக்கு 400 மில்லியனுக்கும் அதிகமாகவும், கம்பஹாவுக்கு 500 மில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. கேகாலை, இரத்தினபுரி,அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் அவ்வாறே அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் எமது மாவட்டங்களுக்கு 200 மில்லியனுக்கும் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இவை. இங்கே என்ன செய்தியை கூற விரும்புகின்றீர்கள். இந்த மாவட்டங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கூறினாலும் அதற்கு மாற்றமான வகையிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கீழுள்ள கல்வி அமைச்சின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 20 ஆயிரத்திற்கும் மேல் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. ஏன் இவ்வாறு வேறுபட்ட வகையில் கொடுப்பனவு, இது கல்வியை இராணுவ மயமாக்கும் விடயம்தானே. கடந்த அரசாங்கத்தின் இந்த கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்தும் தற்போதும் அடக்குமுறையான செயற்பாடுகளே இருக்கின்றன. கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் நிதி கேந்திரமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டு, அந்த பொறுப்பை இந்தியா ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் சர்வதேச ரீதியில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியா இதை ஏற்றுக்கொள்ளுமா? இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா அவற்றை பெற்றுக்கொள்ள விரும்புகின்றது. ஆனால் நீங்கள் வேறு நிறுவனங்களுக்கு கொடுக்க முயற்சிக்கின்றீர்கள். இந்நிலையில் இந்தியா கிழக்கில் அபிவிருத்திகளை செய்யுமா? நீங்கள் இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. விவசாயத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு துறைகளை எடுத்துக்கொண்டால் வடக்கு மற்றும் கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களம், உயர் பாதுகாப்பு வலயங்களாக பெரும்பாலான காணிகளை கைப்பற்றியுள்ளன. பொதுமக்கள் தமது விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. அந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் மயிலத்தமடு போன்ற இடங்களில் தமிழ்ர்களின் பால் பண்ணை தொழிலுக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மயிலத்தமடு மேய்ச்சல் தரை பகுதிக்காக மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் முன்னைய அரசாங்கங்களின் வரவு செலவுத் திட்டத்தை போன்றதாகிவிடும். இந்த அரசாங்கத்தின் கொள்கை முன்னைய அரசாங்கங்களின் கொள்கை மற்றும் செயற்பாடுகளில் இருந்து மாறுபடாது. நாங்கள் கடந்த அரசாங்கங்களின் வரவு செலவுத்திட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தோம். இவ்வாறான அடிப்படை பிரச்சினைகள் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுக்கின்றனர். இந்த அரசாங்கத்தின் ஊடாக பாரிய மாற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எம் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் இந்த வரவு செலவுத்திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தீர்வுகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. அரசாங்கமானது எங்களுக்கு குழப்பமில்லாத தீர்வை வழங்கும் வரையில் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதை தவிர எங்களுக்கு வேறு தெரிவுகள் கிடையாது என்றார். அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு எந்த தெரிவுகளும் எமக்கு கிடையாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk
  11. 26 Feb, 2025 | 04:55 PM யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இருந்து கைதடி நோக்கி செல்லும் வீதியில் கடந்த 21ஆம் திகதி விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் ஒன்று இன்று புதன்கிழமை (26) கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கைதடி - தச்சன்தோப்பு பகுதியில் குறித்த வாகனம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி மரணச் சடங்கின் இறுதி ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை இந்த வாகனம் மோதியதில் அறுவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து வாகனத்தின் உரிமையாளர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார். மேலும், வாகனத்தின் உரிமையாளர் கொழும்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழில் மரணச் சடங்கின் இறுதி ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை மோதிய வாகனம் மீட்பு! | Virakesari.lk
  12. 26 Feb, 2025 | 05:34 PM (எம்.மனோசித்ரா) 'உலகலாவிய விசேட முன்னேற்றங்கள்' குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை (27) இந்தியா செல்லவுள்ளார். உலகலாவிய முக்கிய இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் நாளை வெள்ளிக்கிழமை புதுடில்லியில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ள இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீவன் ஹாபர், அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி எபொட் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன் போது தென்னாசியா தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரையாற்றவுள்ளார். அத்தோடு இவ்விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட சந்திப்பிலும் கலந்து கொள்ளவுள்ளார். அத்தோடு இந்தியாவிலுள்ள முக்கிய தொழிலதிபர்களுடனான சந்திப்பிலும் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார். ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்துக்குள் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது முக்கிய விஜயம் இதுவாகும். எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்கிறார் | Virakesari.lk
  13. 26 Feb, 2025 | 05:36 PM எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று புதன்கிழமை (26) குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நா.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வி.மணிவண்ணன், சமத்துவக் கட்சியின் தலைவர் மு.சந்திரகுமார், ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பின் சார்பில் நாவலன், பா.கஜதீபன், உள்ளிட்ட சிலர் இதில் கலந்து கொண்டனர். குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்கவில்லை. குறித்த கூட்டணியில் தமிழ் மக்கள் கூட்டணி இணைவதா இல்லையா என்பது தொடர்பிலான முடிவு கட்சியின் செயலாளர் நாயகத்துடன் பேசி விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் சார்பில் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்ற சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல் | Virakesari.lk
  14. விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: 27-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன் சென்னை: நீதிமன்ற உத்தரவையடுத்து, நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் (பிப்.27) நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி சென்னையில் உள்ள வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார். அதையடுத்து போலீஸார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விஜயலட்சுமி புகாரை திரும்பப் பெற்றாலும்கூட பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கைதாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, போலீஸார் மீண்டும் விசாரணையில் இறங்கிஉள்ளனர். முதல்கட்டமாக வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு நேற்று சம்மன் அனுப்பி உள்ளனர். விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: 27-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக போலீஸார் சம்மன் | Police summon Seeman in vijayalakshmi - hindutamil.in
  15. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் தலைமன்னாரில் இருந்து அகதிகளாக புறப்பட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் அரிச்சல்முனை கடலோரப் பகுதியை சென்றடைந்துள்ளனர். தீடையில் தத்தளித்தவர்களை கடலோரக் காவல்படையினர் மீட்டு கடலோர காவல் குழும பொலிஸாடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (a) Tamilmirror Online || இராமேஸ்வரம் சென்ற இலங்கை அகதிகள்
  16. யாழ்ப்பாணம் 23 மணி நேரம் முன் தமது இஷ்டப்படி வேலைத்திட்டத்தை செய்யும் அதிகாரிகள் - மீனவர்கள் குற்றச்சாட்டு! மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என சுழிபுரம் கெங்காதேவி கடற்றொழிலாளர் சங்க மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 10 இலட்சம் மற்றும் 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. இரண்டு நிதியையும் பயன்படுத்தி எமது துறைமுகத்தை புனரமைப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் இரண்டு நிதியும் ஒரு திட்டத்திற்கு வழங்க முடியாது என்று கூறி 10 இலட்சம் ரூபாவினை எமக்கு வழங்காது திருப்பி அனுப்பிவிட்டனர். எட்டு இலட்சம் மட்டுமே எமக்கு வழங்கப்பட்டது. எட்டு இலட்சம் ரூபாவிற்கான வேலைத்திட்டத்திற்கான வரைபை நாங்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். இருப்பினும் அவர்கள் எமது திட்டத்தை புறந்தள்ளிவிட்டு தமது எண்ணத்திற்கு ஏற்றாற்போல் அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் செய்கின்ற அபிவிருத்தியால் எமக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. கிடைத்த 8 இலட்சம் ரூபா நிதியினை அநியாயம் செய்கின்றனர். படகுகளை நிறுத்தி வைக்கும் பகுதிக்குள் அதிக மண் உள்ளதால் அந்த பகுதி உயரமாக காணப்படுன்றது. இதனால் அந்த பகுதிக்குள் தண்ணி இல்லாத காரணத்தால் படகுகளை துறைமுகத்தின் உள்ளே கொண்டுவந்து நிறுத்தி வைக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. ஆகையால் நாங்கள், இரண்டு புறமும் உள்ள தடுப்புகளை நீக்குமாறு எமது வேலைத்திட்டத்தை முன்வைத்தோம். இரண்டு பகுதிகளிலும் உள்ள தடுப்புகளை நீக்கினால் மண் வெளியே செல்லும். இதன்போது படகுகளை துறைமுகத்துக்குள் கொண்டுவரக்கூடிய நிலை ஏற்படும். ஆனால் அவர்கள் அதனை செய்யாமல் வெறுமனே ஆழப்படுத்தலில் ஈடுபடுகின்றார்கள். நாங்கள் பல தடவைகள் கூறியும் எமது கருத்துக்களுக்கு செவி சாய்க்கவில்லை. 121 மணித்தியாலங்கள் ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி ஆழப்படுத்துவதே அவர்களது வேலைத்திட்டம் என்று கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு ஆழப்படுத்தினாலும் மீண்டும் அந்த இடம் மூடுப்படும். இது குறித்து யாழ். மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர் கெங்காதரன் தர்சனுக்கு தெரியப்படுத்தினோம். ஆனால் அவர் எமது கருத்துக்களை செவிமடுக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த காரணத்தால் அதற்கு பழிவாங்கும் முகமாக ஆழப்படுத்தும் பகுதியில் 5 மீற்றர் எல்லையை குறைத்து ஆழப்படுத்துமாறு, வேலைத்திட்டத்தை செய்பவர்களிடம் கூறியுள்ளார். அத்துடன் எமது கடற்பகுதியில் சுற்றுலா மையம் அமைப்பதற்கு அனுமதி கேட்டனர். சுற்றுலா மையம் அமைத்தால் எமது கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு பல தடவைகள் அழைப்பு மேற்கொண்டு அனுமதி வழங்குமாறு கோரினர். நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதற்கும் சேர்த்து பழிவாங்குவது போல் உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் விரைவில் இதனை கருத்தில் எடுத்து எமக்கு உகந்த வேலைத்திட்டத்தை, எமது வரைபடத்தின்படி செய்துதர வேண்டும் என்றனர். (ப) #Eelam #srilanka #jaffna #uthayandigital #news
  17. ’வேலை முடிந்தது‘ ’வேலை சரி’ குறுஞ்செய்தியால் சிக்கல் 'வேலை முடிந்தது.' 'வேலை சரி’ .ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் என்று கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவாவைக் கொன்ற பிறகு, சந்தேக நபரான வழக்கறிஞர் வேடமணிந்த பெண், அவரது சகோதரருக்கு ’வேலை முடிந்தது’ 'வேலை சரி’ என்று குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கணேமுல்ல சஞ்சீவாவை சுட்டுக் கொன்ற பிறகு தப்பி ஓடிய வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, தனது தம்பியுடன் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு வந்ததாகவும் பொலிஸார் அறிந்துள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய கொலைக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அல்ல, மாறாக வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான பெண்தான் என்ற தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளது. Tamilmirror Online || ’வேலை முடிந்தது‘ ’வேலை சரி’ குறுஞ்செய்தியால் சிக்கல்
  18. தேங்காய் விலை ரூ. 250 தொட்டது! யாழ்ப்பாணத்தில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 250 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெள்ளை ஈயின் தாக்கம் காரணமாகவும், காலநிலை மாறுதல்கள் காரணமாகவும் தேங்காயின் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதையடுத்தே தற்போது ஒரு தேங்காயின் விலை 250 ரூபாவைத் தொட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
  19. காணி மோசடிகள் உட்பட பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரித்து, நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தவர் என்று அறியப்படும் யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் குணரோஜனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான இணைப்பு பிரிவுக்கு பொறுப்பதிரியாக அவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் குணரோஜன் காணி மோசடிகள், பண மோசடிகள் உள்ளிட்ட வழக்குகளை துரிதமாகவும் நிரூபிக்க கூடிய வகையிலும் முன்னேடுத்து நீதிமன்றின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என்று பலராலும் பாராட்டுப்பெற்றவர். தென்னிலங்கை அரசியல்வாதிகளின் செல்வாக்குமிக்க மோசடிக் கும்பல்கள், யாழ்ப்பாணத்தில் காணி மோசடிக்கு உடைந்தையாக இருந்த சட்டத்தரணிகள் போன்ற பலம்பெற்ற தரப்புகளுக்கு எதிராக துணிச்சலாக விசாரணைகளை அவர் முன்னெடுத்திருந்தார். அவருடைய நடவடிக்கைகள் காரணமாக அச்சமடைந்த பல தரப்பினரும், குணரோஜனை இடமாற்றம் வேண்டும் என்று மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்ததுடன், கடந்த காலங்களில் கடிதங்களையும் அனுப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது. பல்வேறு மோசடிகள் தொடர்பில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்த குணரோஜன் திடீர் இடமாற்றம்!
  20. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், கூல்பார், உணவகங்கள், தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் கடந்த 10ஆம் திகதி திருநெல்வேலி பகுதியில் உள்ள கூல்பார்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது கூல்பார் ஒன்றில் திகதி காலாவதியான சோடாக்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டறியப்பட்டு, அவை பொது சுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கூல்பார் உரிமையாளரிற்கு எதிராக பொதுசுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் மேலதிக நீதிவான் நீதிமன்றில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. உரிமையாளரிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு, உரிமையாளரை குற்றவாளி என இனங்கண்ட நீதிவான் எஸ். லெனின்குமார், ரூபா 30ஆயிரம் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார். கூல்பார் உரிமையாளரிற்கு எதிராக 30,000 தண்டம்!
  21. மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் அந்த கடற்பகுதியில் மீனவரின் படகு ஒன்று விபத்துக்குள்ளாகியதில் நபரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (25) அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில், கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. எட்டு இலட்சம் ரூபா வேலைத்திட்டத்திற்கான வரைபை நாங்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். இருப்பினும் அவர்கள் எமது திட்டத்தை புறந்தள்ளிவிட்டு தமது எண்ணத்திற்கு ஏற்றாற்போல் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டனர். இதனால் ஆபத்து என்றும் நாங்கள் கூறினோம். ஆனால், கரையோர பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளர், எமது திட்டவரைபை புறந்தள்ளிவிட்டு பழிவாங்கும் நோக்குடன் தனது விருப்பப்படி அபிவிருத்தியில் ஈடுபட்டார். நாங்கள் கேள்வி கேட்டதன் காரணத்தால் அபிவிருத்தி பணிகளை 5 மீற்றர்கள் தூரம் குறைத்து செய்யுமாறும் வேலையை செய்பவர்களுக்கு கூறினார். இந்நிலையில் இன்று காலை இருவர் படகு ஒன்றில் தொழிலுக்கு சென்றுவிட்டு திரும்பினர். இதன்போது அந்த அபிவிருத்தி செய்த இடத்தில் படகு மோதியதில் படகில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் 20 வயது இளைஞன் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு பிறகும் உரிய அதிகாரிகள் எமது கருத்து கேட்காவிட்டால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். எனவே உரிய அதிகாரிகள் விரைவில் இதனை கருத்தில் எடுத்து எமக்கு உகந்த வேலைத்திட்டத்தை, எமது வரைபடத்தின்படி செய்துதர வேண்டும் என்றனர். யாழில் பொறியியலாளரின் தன்னிச்சையான செயற்பாட்டால் விபத்துக்குள்ளான இளைஞன் ! | Virakesari.lk
  22. பாலியாறு நீர்வழங்கல் திட்டத்திற்கு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனினும் தற்போது பரீசினைக்குட்படுத்தி இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கிடு செய்யுமாறு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண மாவட்ட மக்கள் முகம்கொடுத்துவரும் நீர்விநியோகப் பிரச்சனை தொடர்பாக தாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறீர்கள் என நான் திடமாக நம்புகிறேன். கடந்த ஏழு தசாப்தங்களாக யாழ்ப்பாண மாநகர பிரதேச, தீவக மற்றும் தென்மராட்சி மக்கள் குறிப்பாக நியாயமான சுகாதாரமான நீர் விநியோகத்திற்கு ஏங்கியிருக்கிறார்கள். வட மாகாணசபை, யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கான நீர்விநியோகத்துக்கென வருடம் முழுவதும் கடலைச் சென்றடையும் நீரை திசைதிருப்பும் திட்டமாக பாலியாறு நீர்விநியோகத் திட்டத்தை முன்மொழிந்திருந்தது. அந்தத் திட்டத்தை செலவுச் சிக்கனமான, சாத்தியமான அவசரமான ஒன்றாக பரிசீலித்து ஏற்றுக்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு சிபாரிசு செய்தது. 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாலியாறு நீர்வழங்கல் திட்டத்திற்கென ரூபா 250 மில்லியன் ஒதுக்கப்பட்டு, திட்டப்பணிமனையும் உத்தியோக பூர்வமாக வெள்ளாங்குளத்தில் 2024 மே மாதம் பதினைந்தாம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடர் நிறைவேற்றலுக்கான நிதி ஒதுக்கீடு எதுவும் 2025ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாமையை ஈட்டு மிகவும் கவலையும் ஏமாற்றமும் அடைகிறோம். இந்தத் திட்டம் கைவிடப்பட்ட மாதிரியான தோற்றப்பாடு காணப்படுகின்றது. எனவே இந்தத் திட்டத்தின் நிறைவேற்றலுக்கான போதிய நிதியை தற்போது பரிசீலிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்து அதன் துரித நிறைவேற்றத்திற்கான பணிப்புரையை வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது பாலியாறு நீர் திட்டத்திற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுங்கள் - வடக்கு மாகாண அவைத் தலைவர் ஜனாதிபதிபதியிடம் கோரிக்கை | Virakesari.lk
  23. 25 Feb, 2025 | 06:22 PM (நா.தனுஜா) இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், திங்கட்கிழமை (24) தொடக்க அமர்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், இலங்கை தொடர்பில் எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை. இந்நிலையில் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் என்பவற்றின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட அவர்களது கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றிருப்பதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு இம்முயற்சிகள் சிவில் சமூக அமைப்புக்கள் ஊடாக மேலும் வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான பரந்துபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நல்லிணக்கப்பொறிமுறை தொடர்பான ஆலோசனை செயலணியின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மீது கவனம் பாய்ச்சுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய இருவழி அணுகுமுறையானது கடந்தகால ஆயுதமோதல் மற்றும் வன்முறைகளின் தாக்கங்களை உரியவாறு கையாள்வதற்கு ஏற்றவாறு எதிர்கால வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கான அடித்தளத்தை இட்டிருப்பதாகவும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தினால் பொறுப்புக்கூறல் கோரிக்கை சர்வதேச அவதானம் பெற்றுள்ளது - ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டு | Virakesari.lk
  24. 25 Feb, 2025 | 07:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நீதிமன்றத்தில் சந்தேக நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கடந்த வாரங்களில் பல்வேறு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவை எனது பாதுகாப்பு தொடர்பான கரிசனையை ஏற்படுத்துகின்றது.ஆகவே இரண்டு பாதுகாப்பு உத்தியோஸ்த்தர்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி உரையாற்றும் போது மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் நான் எதிர்கொண்ட சம்பவமொன்று எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக காணப்படுகிறது.இம்மாதம்( பெப்ரவரி) 12ஆம் திகதி இரவு யாழ். வலம்புரி ஹோட்டலில் என் மீதும் மற்றும் எனது செயலாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் நான் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளேன் .சந்தேக நபரையும் கைது செய்தனர். எனினும் திடீரென எனக்கு எதிராக வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை பாராளுமன்ற உறுப்பினராக நான் செயற்படுவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்குகின்றது. கணேமுல்லை சஞ்சீவ நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று கடந்த வாரங்களில் பல்வேறு கொலை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இவை எனது பாதுகாப்பு தொடர்பான கரிசனையையும் ஏற்படுத்துகின்றது. இந்நிலையில் எனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் சிறப்புரிமையை முன்வைக்க எதிர்பார்க்கின்றேன். ஆகவே எனக்கு இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை ஒதுக்குமாறு கோருகின்றேன். இந்த வேண்டுகோளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்வதுடன், இந்த அவசர நிலைமையை கருத்தில்கொண்டு உங்களின் சாதகமான பதிலையும் உடனடியாக எதிர்பார்க்கின்றேன் என்றார். இதன்போது பதிலளித்த சபாநாயகர், சிறப்புரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுமாயின் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார். 2 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்குங்கள் : அர்ச்சுனா வேண்டுகோள் ! | Virakesari.lk
  25. தி.மு.க - த.வெ.க இரண்டில் எதில் இணைகிறார் காளியம்மாள்? -அறிவிப்புக்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப்! நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்... எளிமையான முகம், நகைச்சுவை கலந்த பேச்சு போன்றவையால் அரசியல் மட்டத்தில் நன்கு அறியப்பட்ட காளியம்மாள், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலக்கப்போவதாக சில வாரங்களாக பரவலாக பேசப்பட்டு வந்தன. இதோ, அதோ என அவரது விலகல் விவகாரம் நீண்ட இழுபறியாக இருந்து வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பதன் மூலம் விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் காளியம்மாள். காளியம்மாள் - சீமான் அவரது அறிவிப்பு அரசியல் வட்டத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. பலரும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர். ஆனால் காளியம்மாள் மற்றும் அவரது கணவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அடுத்து காளியம்மாள் என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., த.வெ.க இதில் எந்த கட்சியில் சேரப்போகிறார் என்பது போன்ற பேச்சுக்கள் கிளம்ப, ஆளாளக்கு ஒன்றை பேசி வருகின்றனர். இந்த நிலையில் காளியம்மாள் செயல்பாடுகள் குறித்து உள்விபரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம், "நாகப்பட்டினத்தில் காளியம்மாள் வசித்து வருகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட போது தனி திறன் பிரச்சாரத்தால் எல்லோர் மத்தியிலும் கவனம் பெற்றார். பின்னர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து முரணால் அமைதியானார். இப்படியான சூழலில் காளியம்மாள் த.வெ.க-வில் இணையப்போவதாக சொல்லப்பட்டன. ஆனால் எதையும் வெளிப்படையாக அவர் வாய் திறக்கவில்லை. அமைச்சர் அன்பில் மகேஸ் நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆன பிறகு அதிருப்தியில் இருக்கும் காளியம்மாளை தி.மு.க-விற்கு இழுக்க தூண்டில் வீசப்பட்டது. இது தொடர்பாக ராஜீவ்காந்தி மூலம் காளியம்மாளிடம் பேசப்பட்டது. இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நாகையில் அமைச்சர் அன்பில் மகேஸ், ராஜீவ்காந்தி, காளியம்மாள் உள்ளிட்டோர் சந்தித்து பேசி கொண்டதாக தகவல்கள் பரவின. இதை காளியம்மாள் மறுக்கவும் இல்லை.பனையூர் பயணம்.. கிட்டத்தட்ட அவர் தி.மு.க-வில் இணையப்போவதாக தி.மு.கவினரே பேச ஆரம்பித்தனர். இதற்கிடையே த.வெ.க-வில் இருந்து அழைப்பு வர பனையூர் சென்ற காளியம்மாள் ஆனந்திடம் பேசியதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் தி.மு.க தரப்பிடம் எந்த ஒரு முடிவையும் சொல்லாமல் காளியம்மாள் இழுத்தடித்து வந்தார். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருந்தால் இந்நேரம் காளியம்மாள் தி.மு.க-வில் இணைந்திருப்பார். நாம் தமிழரில் இருந்த போது தி.மு.கவை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். அதையும் அவர் யோசித்தாக தெரிகிறது. இந்த நிலையில் அவருடைய விலகல் எப்படி பேசு பொருளாக இருக்கிறதோ அதே மாதிரி மாற்றுக் கட்சியில் சேர்வதும் பேசு பொருளாக இருக்கும் அதுவரை பொறுத்திருக்க வேண்டும்" என்றனர். மேலும் சிலரோ, "தி.மு.க-வில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் அதன் பிறகு தன் முடிவை அவர் தெளிவாக சொல்லவில்லை. தி.மு.க-விடம் சில டிமாண்ட்கள் காளியம்மாள் வைக்க அதற்கு அவர்கள் கிட்டதட்ட ஓகே சொல்லி விட்டனர். அதே சமயத்தில் த.வெ.க-வுடனும் பேச்சு வார்த்தை நடத்தியதாக அவரது தரப்பை சேர்ந்தவர்களே பேசி வந்தனர். இப்படி இரு பக்கமும் வலையை வீசியதை தி.முக தரப்பு ரசிக்கவில்லை. காளியம்மாள் ஓவர் பில்டப் கொடுக்கிறார் அவரா ஒரு முடிவுக்கு வரட்டும் அதுவரை கண்டுகாதீங்கனு மாவட்ட முக்கிய பிரமுகர் ஒருவரிடம் அன்பில் மகேஸ் சொல்லியதாகவும் தகவல்கள் வெளியாகின. காளியம்மாள் இந்த நிலையில் எந்த கட்சியில் இணைந்தால் தனக்கான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்பதை காளியம்மாள் உணர்ந்திருக்கிறார். அதற்கேற்ற முடிவை அவர் எடுத்து விட்டார் என்கிறார்கள். ஒரு வேளை தி.மு.க-வில் அவர் இணைந்தால் நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் காளியம்மாள் தான் என்கிறார்கள். இதனால் வேட்பாளர் கனவில் இருக்கும் மாவட்ட முக்கிய பிரமுகர் சற்றே கலக்கத்தில் உள்ளார். காளியம்மாள் விலகல் குறித்து ஏற்கனவே எழுப்பிய கேள்விக்கு இது களையுதிர் காலம் என்றார் சீமான். ஆனால், கச்சிதமாக காய்களை நகர்த்தி அரசியலில் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார் காளியம்மாள். அவர் தி.மு.க-வில் சேர்வார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை முடிந்து விட்டது. விரைவில் முறைப்படியான அறிவிப்பு வரும்" என்றனர். தி.மு.க - த.வெ.க இரண்டில் எதில் இணைகிறார் காளியம்மாள்? -அறிவிப்புக்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப்! | Nagapattinam: DMK or TVK, which party is Kaliammal joining? - Vikatan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.