Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 16 Aug, 2024 | 09:02 PM எம்மவர்களைக் கொண்டே எம்மைப் பிரித்தாண்டு எமது ஒற்றுமையை சிதைத்து, எமது அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைத்து எம்மீது மீண்டும் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதற்கு எம்மிடமே ஆணை பெறுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர். எனவே நாம் விழிப்புடன் இருந்து எம்மை பலியிடத் துடிக்கும் சக்திகளைப் புறந்தள்ளி அவர்களின் விருப்பம் நிறைவேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் அறைகூவல் விடுத்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2024 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதன் முக்கிய வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க போன்றோர் அடிக்கடி வடக்கு - கிழக்குக்கு வருவதும் அங்குள்ள பல்வேறு கட்சிகளையும் தனிநபர்களையும் சந்தித்துப் பேசுவதும் இப்பொழுது கிரமமாக நடைபெற்று வருகின்றது. இதற்கு மேலதிகமாக தமிழர் தரப்புகளை கொழும்புக்கு வருமாறு அழைத்து அவர்களைச் சந்திக்க விரும்புவது ஒருபுறமும, சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் இவர்களைத் தேடித்திரிந்து சந்திப்பது இன்னொருபுறமுமாக அரசியல் நகர்த்தலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுமந்திரன் அண்மைக்காலங்களில் மீண்டும் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதும் அவற்றைப் பெரிய செய்தியாகப் பத்திரிகைகளுக்குக் கொடுப்பதும் பத்திரிகைகளும் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப்போகிறார் என்ற சாரப்பட கருத்துகளை எழுதுவதும் இப்பொழுது நடைபெற்று வருகின்றது. 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து தமிழர் தரப்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குள் பல சுற்றுப் பேச்சுகள் நடைபெற்றன. அதன் பிரகாரம் ஒரு தமிழ் பொதுவேட்பாளருக்கான தேவை இருக்கின்றது என்பதை எமது கூட்டணி ஏற்றுக்கொண்டது. அதேசமயம் தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள சிவில் அமைப்புகளும் இவ்வாறான ஒரு தேவை இருப்பதை தமது கலந்துரையாடல்கள் மூலம் உறுதிப்படுத்தின. அதன் பின்னர் இருதரப்பினரும் இணைந்து தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதுடன் பொதுவேட்பாளரை நிறுத்துவது என்ற இலக்கை நோக்கி முன்னேறினர். இந்தக் காரணங்களினால் அச்சமடைந்துள்ள தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பலமுனைகளிலும் காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுமந்திரன் தனிநபராக தனது கட்சியினரின் ஒப்புதலோ அல்லது தமிழ் மக்களின் ஒப்புதலோ இல்லாமல் தான் ஜனாதிபதியுடன் பேசுகிறேன் என்று கூறுவதும் 13 ஐ அவர் முழுமையாகத் தந்துவிடப்போகிறார் என்று சாரப்பட கருத்துகளை வெளியிடுவதும் தேர்தலில் மக்களை பிழையான பாதைக்கு இட்டுச்செல்வதற்கான ஒரு முயற்சியாகும். தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த ஜனாதிபதித்தேர்தல் களத்தைப் பாவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதே தமிழர் தரப்பின் நோக்கமாகும். ஆனால் அதனை எதிர்த்து நிற்பது போன்ற தோற்றத்தைக் காட்டி நிற்கும் சுமந்திரன் தமிழ் பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கருவை முன்னிறுத்தியே இந்த பேச்சு வார்த்தைகளை நடாத்தி வருகின்றார். சுமந்திரனுக்கு பேச்சுவார்த்தைகள் தொடர்பாக குறைந்தபட்ச அனுபவங்களாவது இருக்கும் என்று நான் கருதுகின்றேன். மஹிந்த ராஜபக்ச தரப்புடன் 17 சுற்றுப்பேச்சுகள் நடாத்தப்பட்டு அவை எவ்வாறு தோல்வியில் முடிந்தது என்பது அவருக்குத் தெரியும். இதேபோன்று நல்லாட்சி காலத்தில் இதே ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் புதிய அரசியல் சாசனத்திற்காக நான்கு வருடங்கள் பேசி அது எவ்வாறு தோல்வியில் முடிந்தது என்பதும் அவருக்குத் தெரியும். அதன் பின்னர், ரணில் விக்கிரசிங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நீங்கள் அனைவரும் தயாரா என்று கேட்டபொழுது மஹிந்த ராஜபக்ச உட்பட அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் அதன் பின்னர் அது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதே காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு - கிழக்கில் மாகாணசபைத் தேர்தல் நடக்கும்வரை ஒரு இடைக்கால சபையை உருவாக்கும்படியும் அதற்கான முழு ஏற்பாடுகளையும் அவருக்கு சமர்ப்பித்தும்கூட அது தொடர்பாகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்ற சமயத்திலும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் இலங்கை வந்தபோதும் 13 ஐ முழுமையாக நிறைவேற்றும்படி வற்புறுத்தியும்கூட எதுவும் செய்யவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருக்கின்ற ரணில் விக்கிரசிங்கவினால் அரசியல் சாசனத்தில் காணப்படும் 13 ஆவது திருத்தத்தில் உள்ள ஒருபகுதியைக்கூட நிறைவேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாத நிலையில், சுமந்திரன் போன்றோர் தொடர்ச்சியாக ரணிலை சந்திப்பதும் மாகாணசபை அதிகாரங்கள் அனைத்தையும் அவர் கொடுப்பார் என்பது போன்ற அறிக்கையை வெளியிடுவதும் தமிழ் மக்களை தவறான பாதைக்கு வழிநடத்தும் ஒரு முயற்சியாகும். முன்னர் 13 ஐ முற்றுமுழுதாக எதிர்த்து நின்ற சுமந்திரன் இப்பொழுது 13 தான் ஏதோ பெற்றுக்கொடுப்பதுபோல் படம் காட்டுவதும் தமிழ் மக்கள் அரசியல் ஞானசூன்யங்கள் என்றும் அவர்களுக்கு எதுவும் புரியாது என்ற பாணியில்; நடந்துகொள்வதும் அவரது அறிவு முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடாகும். கொரோனா காலத்திற்குப் பின்னர் நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்துவிட்டது என்ற சூழ்நிலையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி நிறுத்தப்பட்டது. ஆனால் ஜனாதிபதி இப்பொழுது தான் விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தான் விரும்பியவாறு ஒதுக்கும் நிலையைக் காணமுடிகின்றது. இதன்மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை இலகுவாகப் பெற்றுவிடலாம் என்று ரணில் கனவு காண்பதாகவும் தோன்றுகின்றது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஜெனிவாவிலும், நியூயார்க்கிலும் சுமந்திரனின் நடவடிக்கைகள் என்பது தமிழ் மக்களது கோரிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் எதிராகவே இருந்திருக்கின்றது. இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறுவதும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துவிட்டது என்று கூறுவதும் தொடர்ந்து அரசாங்கத்திற்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுப்பதிலும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் புரிந்துகொள்வதினூடாக நாம் ஏன் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது என்ற முடிவை எடுத்தோம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். தமிழ் மக்கள் நீண்டகாலமாக இலங்கை அரசியலை கண்காணித்து வருபவர்கள். அவர்களை ஏமாளிகள் என்றோ இலகுவாக ஏமாற்றிவிடலாம் என்றோ நினைப்பது மடைமைத்தனமானது என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எம் கையாலேயே எம் கண்களைக் குருடாக்கும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் : தமிழ் மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என்கிறார் சுரேஷ் | Virakesari.lk
  2. கடந்தகால மீறல்கள் மறக்கடிக்கப்படமுடியாதவை என்பதற்கான நினைவுச்சின்னமாக தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் - ஹரி ஆனந்தசங்கரி 16 Aug, 2024 | 08:57 PM (நா.தனுஜா) இலங்கையின் கடந்தகால மீறல்கள் ஒருபோதும் மறக்கப்படமுடியாதவை என்பதற்கும், எமது மீண்டெழும் தன்மைக்குமான நிலையான சின்னமாக பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் என கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு வியாழக்கிழமை (15) அடிக்கல் நாட்டப்பட்டது. இதுகுறித்து இந்த நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கிய பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார். அப்பதிவில் தமிழினப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட 100,000 க்கும் மேற்பட்டோரை நினைவுகூரும் நோக்கில் இந்நினைவுத்தூபி நிர்மாண நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதற்காக கனேடியத் தமிழர்களின் தேசிய பேரவை, பிரம்டன் தமிழர் அமைப்பு மற்றும் பிரம்டன் தமிழ் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். 'இலங்கை அரசாங்கத்தினால் சிறுவர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் வன்புணரப்பட்டனர். கிராமங்கள் பாரிய மனிதப்புதைகுழிகளாக மாற்றப்பட்டன. இனப்படுகொலை அரசாங்கத்தினால் காவு வாங்கப்பட்ட இந்த அப்பாவி உயிர்களை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம்' எனவும் அவர் அப்பதிவில் தெரிவித்திருக்கிறார். 'தமிழர்களின் கனடாவுக்கான பயணம் என்பது எமது தேசிய கதையின் ஓரங்கமாகும். இலங்கை அரசாங்கத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளின் விளைவாக நாட்டைவிட்டு வெளியேறிய தமிழர்களுக்கு ப்ரையன் மல்ரொனி தலைமையிலான அரசாங்கம் கனடாவின் கதவுகளைத் திறந்துவிட்டது. அதேபோன்று ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான அரசாங்கம் இலங்கை தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை மேற்கொண்டதுடன் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாயக்கூட்டத்தொடரைப் புறக்கணித்தது. ஒன்டாரியோவின் ஃபோர்ட் அரசாங்கம் தமிழினப்படுகொலையை பாடசாலை மாணவர்களின் பாடவிதானத்தில் உள்ளடக்கியது. ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளை அங்கீகரித்து ஏற்றதுடன், இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக பயண மற்றும் சொத்துத்தடைகளை விதித்தது' எனவும் மேயர் பற்ரிக் பிரவுன் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் நீதியையும், நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்வதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியிருப்பினும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதைப் புறந்தள்ளும் மிகமோசமான இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தொடர் போராட்டத்தில் கனடா எப்போதும் முன்நிற்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். அதேவேளை இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள கனடாவின் சுதேசிய உறவுகள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி, 'எமது கூட்டிணைவு மற்றும் உறுதிப்பாடு என்பவற்றுக்கான வலுவான அடையாளமாகத் திகழக்கூடியவகையில் பிரம்டனில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு மேமாதம் 18 ஆம் திகதியை தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாளாக அங்கீகரித்த முதலாவது தேசிய பாராளுமன்றம் என்ற வரலாற்று முக்கியத்துவத்தையும் கனடா உரித்தாக்கியிருக்கின்றது' எனத் தெரிவித்துள்ளார். கடந்தகால மீறல்கள் மறக்கடிக்கப்படமுடியாதவை என்பதற்கான நினைவுச்சின்னமாக தமிழினப்படுகொலை நினைவுத்தூபி திகழும் - ஹரி ஆனந்தசங்கரி | Virakesari.lk
  3. `இனி தீவிர `அரசியல்’ தான்..!’ - குஷ்பு-வின் திடீர் ராஜினாமா பின்னணி?! தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியினை குஷ்பு ராஜினாமா செய்திருக்கிறார். இது தொடர்பான டாப்பிக் தான் தற்போது அரசியல் டாக் ஆக உள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "திரைத்துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் குஷ்பு. இவர் கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தார். பின்னர் தலைமையுடன் ஏற்பட்ட உரசலின் காரணமாக தி.மு.க -விலிருந்து விலகினார். பிறகு 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சுமார் 6 ஆண்டுகள் அந்த கட்சியில் பயணித்தார். அதன் பின்னர் பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கலைஞர் கருணாநிதி ஆனால் தேர்தல் முடிவில் தோல்வியைச் சந்தித்தார். பின்னாளில் அவருக்குத் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த சூழலில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என குஷ்பு எதிர்பார்த்திருந்தார் என சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு தமிழிசை உள்ளிட்ட வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்தார். முன்னதாக உடல்நலக்குறைவின் காரணமாகப் பாதியிலேயே பிரசார களத்திலிருந்து ஒதுக்கினார். இந்தச்சூழலில்தான் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக குஷ்பு அறிவித்துள்ளார்" என்றனர். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, "அரசியலில் 14 ஆண்டுக்கால சேவைக்குப் பிறகு, இன்று ஒரு இதயப்பூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். உயர்ந்த கட்சியாக விளங்கும் பா.ஜ.க-வில் முழுமையாகச் செயல்படுவதற்காகத் தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து என் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றிகள். என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பா.ஜ.க உடன்தான் இருக்கும். தீவிர அரசியலில் ஈடுபட முடியாதபடி தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால்தான் முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன், நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டேன். குஷ்பு இப்போது நான் சுதந்திரமாக, முழுமனதுடன் சேவையாற்ற முடியும். சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். தீவிர அரசியலிலிருந்து என்னுடைய இந்த இடைவெளி, பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான எனது தீர்மானத்தை வலுப்படுத்தியுள்ளது. வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருக்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு" என்றார். அரசு தரப்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டு இருக்கும் தகவலில், 'கடந்த ஜூன் 28-ம் தேதியே குஷ்பு தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதனை ஜூலை 30ம் தேதி துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. தீவிர அரசியலில் ஈடுபடுவதற்குத்தான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக குஷ்பு சொன்னாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் நிர்வாகிகள் சிலர், "தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு அதிக முக்கியத்துவம் கிடைக்காத நிர்வாகிகளில், குஷ்புவும் ஒருவர். குறிப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். அதற்கு டெல்லியிலும் முயற்சி செய்து வந்தார். ஆனால் கிடைக்கவில்லை. இந்த அதிருப்தியிலிருந்தவரை கட்சித் தலைமை தீவிர பிரசாரத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தியது. குஷ்பூ அதன்படி ஒருசில பிரசாரங்களில் மட்டும் கலந்து கொண்டார். பிறகு உடல்நிலையைக் காரணம் காட்டி பிரச்சாரக் களத்திலிருந்து வெளியேறினார். அப்போது உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்தது உண்மைதான். எனினும் சீட் கிடைக்காத அதிருப்திதான் அவரை மிகவும் சோர்வடையச் செய்திருந்தது. மேலும் முன்னதாக வழங்கப்பட்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலும் அவருக்குப் பெரிதாக விருப்பம் இல்லை. இதற்குத் தன்னை தீவிர அரசியலில் ஈடுபடாமல் தடுப்பதற்காக எதிர் தரப்பினர் செய்த வேலை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மேலும் இதனால் தீவிர அரசியலிலும் ஈடுபட முடியவில்லை என குஷ்பு அப்செட்டில் இருந்தார். மறுபக்கம் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அண்ணாமலை தரப்பு அழைப்பதில்லை என்ற வருத்தமும் அவருக்கு இருந்தது. இதையடுத்துதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தார். இனி அவர் சொன்னது போலவே தீவிர அரசியலில் ஈடுபடுவார். இந்தச்சூழலில்தான் மேல் படிப்புக்காக அண்ணாமலை வெளிநாடு செல்ல இருக்கிறார். இந்த காலகட்டத்தில் செயல் தலைவரை நியமிக்க டெல்லி ஆலோசித்து வருவதாகப் பேச்சு அடிபடுகிறது. அதற்குப் பலரும் காய் நகர்த்தி வருகிறார்கள். தற்போது அந்த ரேஸில் குஷ்புவும் இணைந்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் செயல் தலைவர் நியமிப்பது என்பது வெறும் ஆலோசனை மட்டத்தில் தான் இருக்கிறது. அண்ணாமலை இன்னும் உறுதியாகவில்லை. வெளிநாடு சென்றாலும் அண்ணாமலையே தான் தலைவராக நீடிப்பார் என்ற தகவலும் சொல்லப்ப்படுகிறது. இணையதளம் வாயிலாக அவர் கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதேநேரத்தில் அண்ணாமலைக்கு எதிராக குஷ்பு அதிரடி அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஏற்கெனெவே அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் அவருடன் கைகோர்க்கவும் வாய்ப்பு உள்ளது. தமிழிசை போன்று குஷ்புவும் நேரடி அரசியலை விரும்புவதும் மகளிர் ஆணைய பதவி ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது" என்கின்றனர். https://www.vikatan.com/government-and-politics/is-khushboo-aiming-for-an-important-post-in-bjp?pfrom=home-main-row
  4. Published By: Vishnu 15 Aug, 2024 | 07:13 PM ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி 14ஆம் திகதி புதன்கிழமையும் யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. புதன்கிழமை (14) பிற்பகல் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் இந்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் துண்டுப் பிரசுரம் வழங்கல்! | Virakesari.lk
  5. ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரமும் இணைந்துள்ள படம் ‘தங்கலான்’. இரண்டு பேருக்குமே ஒரு பேர் சொல்லும் வெற்றி அவசியமாக இருந்த நிலையில், விக்ரமின் கெட்டப், ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், விறுவிறுப்பான ட்ரெய்லர் என இப்படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. நீண்ட நாட்களாக இறுதிகட்ட பணிகளில் இருந்த ‘தங்கலான்’ ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கதை 17-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வட ஆற்காட்டில் பண்டைய அரசர்கள் பிடுங்கிக் கொண்ட நிலங்களில் இருந்து எஞ்சிய இடத்தில் விவசாயம் செய்து வரும் ஒரு சிறிய பூர்வக்குடி இனக்குழுவின் தலைவன் தங்கலான் (விக்ரன்). மனைவி கங்கம்மாள் (பார்வதி), குழந்தைகள் என வாழ்ந்து வரும் தங்கலான், பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இப்போதைய கோலார் பகுதியில் தன்னுடைய மூதாதையர்கள் தங்கம் எடுத்துக் கொண்டிருந்ததையும், சிற்றரசன் ஒருவனின் பேராசையால் அவர்கள் தூண்டப்பட்டு, அப்பகுதியின் காவல் தேவதையாக விளங்கும் ஆரத்தி (மாளவிகா மோகனன்) என்ற பெண்ணால் தடுக்கப்பட்டதையும் கதையாக தன் குழந்தைகளுக்கு சொல்கிறார். இன்னொருபுறம் ஜமீன்தார் ஒருவரால் எஞ்சியிருக்கும் நிலமும் அபகரிக்கப்பட்ட நிலையில், தங்கலானின் குழுவினருக்கு உதவ முன்வருகிறார் க்ளெமென்ட் என்ற வெள்ளைக்காரர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கலானின் மூதாதையர்கள் எடுத்த அதே பகுதியில் தனக்கு தங்கத்தை எடுத்துக் கொடுத்தால், அதில் பங்கு தருவதாக உறுதியளிக்கிறார். இதற்கு ஒப்புக் கொள்ளும் தன்னுடைய கூட்டத்தில் இருந்த சிலரை அழைத்துக் கொண்டு அந்த வெள்ளைக்காரர்களுடன் புறப்படுகிறார். செல்லும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் என்னென்ன? அவர்களுக்கு தங்கம் கிடைத்ததா என்பதே படத்தின் திரைக்கதை. தலித் பூர்வக்குடி மக்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவான கோலார் தங்க வயலின் மறைக்கப்பட்ட வரலாற்றை தொன்மக் கதைகள் வழியே கற்பனை கலந்த ஒரு ஃபேன்டசி படைப்பாக கொடுத்துள்ளார் பா.ரஞ்சித். சாதிய ஒடுக்குமுறையையும், நில அரசியலையும் ரஞ்சித்தின் முந்தைய படங்களை விட ‘தங்கலான்’ ஒருபடி மேலே சென்று மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து பவுத்தம் மெல்ல அழிக்கப்பட்டது, அரசர்களுக்கு பின்னால் வந்த ஜமீன்தார்கள் நிலங்களை வஞ்சித்து பிடுங்கியது, தாய் வழிச் சமூகங்கள் பற்றிய குறியீடுகள் கதையின் ஓர் அங்கமாய் தங்கலானின் பயணத்தினூடே வழிநெடுக வந்துகொண்டிருக்கின்றன. முதல் பாதி முழுவதும் ரஞ்சித்தின் நேர்த்தியான திரை மொழி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது, ஆனால், படத்தின் மிகப் பெரிய பிரச்சினை இரண்டாம் பாதியில் இருந்துதான் தொடங்குகிறது. வெள்ளைக்காரர்களுடன் சேர்ந்து தங்க வேட்டைக்கு புறப்படுவது வரை சுவாரஸ்யமாக செல்லும் படம், அதன் பிறகு தங்கலானின் பயணம் தொடங்கிய பிறகு ஒரு சுழலில் சிக்கிக் கொண்டதைப் போல திரும்ப திரும்ப திரும்ப, எத்தனை முறை என்றே கணிக்க முடியாத அளவுக்கு, காட்சிகள் ரிப்பீட் ஆகிக் கொண்டே இருக்கின்றன. நடிப்பில் விக்ரம் அசாத்திய உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அர்ப்பணிப்பு என்ற வார்த்தை கூட குறைவுதான். அந்த அளவுக்கு அபாரமான உடல்மொழியும், உழைப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரும் பாய்ச்சல். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதகளம் செய்திருக்கிறார் பார்வதி. முரட்டுத்தனம் கொண்ட தங்கலானையே மிரட்டும் கங்கம்மா தமிழின் மறக்கமுடியாத பெண் கதாபாத்திரமாக பேசப்படும். பசுபதி, மாளவிகா மோகனன் என அனைவரும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் இன்னொரு ஹீரோ என்றால் அது சந்தேகமே இன்றி ஜி.வி.பிரகாஷ்தான். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை மிரட்டியிருக்கிறார். பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. சலிப்படையச் செய்யும் பல காட்சிகளில் படத்தை காப்பாற்றுவது ஜி.வி.யின் பின்னணி இசைதான். படத்தின் மற்றொரு பலம், கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு, தங்க வயல், பூர்வக்குடிகளின் வறண்ட பூமி, என ‘ரா’வாக காட்சிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். கலை இயக்கம், ஸ்டன்ட் உள்ளிட்ட அம்சங்களில் படக்குழுவின் அசாத்திய உழைப்பு தெரிகிறது. உதாரணமாக, படத்தின் ஆரம்பத்தில் விக்ரம் - மாளவிகா மோகனன் மோதும் காட்சி சிலிர்ப்பனுபவம். இரண்டாம் பாதியில் தங்கத்தை எடுக்க முயற்சிப்பது, அதனை மாளவிகா மோகனன் தடுக்க முயல்வது, இவை ஏன் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கின்றன என்று தெரியவில்லை. காட்சிகள் ஒரு முடிவே இல்லாமல் இலக்கின்றி நகர்வது கடும் சலிப்பை தருகிறது. க்ளைமாக்ஸ் இப்போது வரும், இதோ வந்துவிட்டது, இதுதான் க்ளைமாக்ஸ் என ஒவ்வொரு காட்சியிலும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு இழுத்துக் கொண்டே சென்றிருக்க தேவையில்லை. க்ளைமாக்ஸ் கடைசி 15 நிமிடங்கள் அபாரமாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முந்தையக் காட்சிகள் ஏற்படுத்திய சலிப்பால் அது முற்றிலுமாக எடுபடாமல் போவதை தவிர்க்க முடியவில்லை. யாரும் இதுவரை பேசத் துணியாத ஒரு வரலாற்றை எடுத்துக் கொண்டு, அதில் தொன்மம், வாய்வழிக் கதைகள் அடிப்படையிலே ஃபேன்டசியாக கொடுக்க முயன்றிருக்கிறது படக்குழு. முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் தமிழின் தவிர்க்க முடியாத ஒரு கிளாசிக் படைப்பாக ஆகியிருக்கும் இந்த ‘தங்கலான்’. தங்கலான் Review: பா.ரஞ்சித் - விக்ரமின் ‘வரலாற்றுப் புனைவு’ தரும் தாக்கம் என்ன? | Thangalaan Movie review - hindutamil.in
  6. இலங்கையின் தலையீடுகளால் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் - கனேடிய அரசு வலுவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என பிரம்டன் நகர மேயர் வலியுறுத்தல்! 14 Aug, 2024 | 11:41 PM (நா.தனுஜா) இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசாங்கத்தினால் எமது உள்ளக விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் எனத் தெரிவித்திருக்கும் கனடாவின் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன், இத்தலையீடுகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் வலுவானதொரு நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்டைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் வலியுறுத்தி பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இக்கடிதத்தின் உள்ளடக்கத்துக்குப் பதிலளிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் மேயர் பற்ரிக் பிரவுன், 'எமது உள்ளக விவகாரங்களில் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்' எனத் தெரிவித்துள்ளார். 'தமிழினப்படுகொலை தொடர்பில் பொறுப்புக்கூறவேண்டிய குற்றவாளிகளை இலங்கை அரசாங்கம் ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்கும் வரை உண்மையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பமுடியாது. இருப்பினும் இப்போர்க்குற்றவாளிகளை அவர்கள் இழைத்த மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறச்செய்வதற்குப் பதிலாக, இலங்கை அரசாங்கம் அவர்களைப் பாதுகாத்துவருகின்றது' எனவும் மேயர் பற்ரக் பிரவுன் விசனம் வெளியிட்டுள்ளார். அதேபோன்று இலங்கையில் தமிழ் மக்கள் அவர்களது அன்புக்குரியவர்களை நினைவுகூருவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்தாலும், கனடாவில் அவர்களால் (இலங்கை அரசாங்கத்தினால்) அதனைச் செய்யமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு 'அவர்கள் கனடாவில் நினைவுகூரல் நிகழ்வைத் தடுப்பதற்கு முயன்றால் அது வெளிநாட்டுத் தலையீடாகவே அமையும்' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அண்மையகாலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வெளியக தலையீடு தொடர்பில் கனேடிய அரசாங்கம் வலுவான நிலைப்பாடொன்றை எடுக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தலையீடுகளால் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் - கனேடிய அரசு வலுவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என பிரம்டன் நகர மேயர் வலியுறுத்தல்! | Virakesari.lk
  7. (நா.தனுஜா) புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனிடம் இலங்கை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடந்த மேமாதம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உங்களது பிரம்டன் நகர கவுன்சில் அலுவலகத்தில் உங்களை முதன்முறையாகச் சந்தித்ததையும், இலங்கையில் சுமார் 30 வருடகாலமாக நீடித்த யுத்தம் தொடர்பில் நாம் கலந்துரையாடியதையும் இப்போது நினைவுகூருகிறேன். அதன்படி கனேடியவாழ் இலங்கையர் குழுவொன்று உங்களது நிர்வாகத்தின்கீழ் உள்ள பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபி எனக்கூறப்படும் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்திருப்பதாகவும், அதற்கு பிரம்டன் நகர கவுன்சில் அனுமதி அளித்திருப்பதாகவும் பல்வேறு கனேடிய இலங்கையர் அமைப்புக்கள் எமது அவதானத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக எவ்வித இன, மதபேதங்களுமின்றி அனைத்து இலங்கையர்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறிருக்கையில் இத்தகைய நினைவுத்தூபியை நிர்மாணிப்பது பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மத்தியில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அவ்வமைப்புக்கள் கரிசனை வெளியிட்டிருக்கின்றன. அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது கனேடிய இலங்கையர் சமூகத்தினிடையேயான இனநல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிலும், இலங்கையின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையிலும் எதிர்மறைத்தாக்கத்தை ஏற்படுத்தும். அதேவேளை இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின்போது இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் எவையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட எந்தவொரு அமைப்புக்களினாலும் வெளியிடப்படவில்லை. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு அவசியமான அத்தியாவசியப்பொருட்களும், அரச கட்டமைப்புக்கள் இடையூறின்றி இயங்குவதற்கு அவசியமான நிதியும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டமை தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையில் இலவசக்கல்வி, இலவச சுகாதாரம், ஏனைய அரச மற்றும் தனியார் சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் தமிழர்கள் உள்ளடங்கலாக சகலராலும் சமத்துவமான முறையில் அனுபவிக்கப்படுகின்றன. சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடனான யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர் கொவிட் - 19 வைரஸ் பெருந்தொற்று, இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளுக்கு இலங்கை முகங்கொடுத்த போதிலும், யுத்தத்துக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளைக் களைந்து, அதன் பின்னரான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வந்திருக்கின்றது. எனவே தமிழர்கள் உள்ளடங்கலாக இலங்கையின் பல்லின சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும், கனேடியவாழ் இலங்கையர்களுக்கும் நன்மையளிக்கக்கூடியவகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அத்தோடு தமிழினப்படுகொலை நினைவுத்தூபி நிர்மாணம் போன்ற பிரிவினைகளை ஏற்படுத்தவல்ல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்குப் பதிலாக, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி இலங்கையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு உதவுமாறும் உங்களிடம் வலியுறுத்துகின்றேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்! | Virakesari.lk
  8. நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்கள் நால்வரை இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் கடுமையாகத் தாக்கி விரட்டி அடித்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராசப்பன் மகன் சந்திரகாசன் (70) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறுகாட்டுத் துறையில் இருந்து புஷ்பவனத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (70), ராஜேஷ் (26), பன்னீர்செல்வம் (50), வேல்முருகன் (36) ஆகிய நான்கு மீனவர்களும் நேற்று (ஆக.13) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கோடியக்கரைக்கு கிழக்கே 15 கடல்மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இரவு 10.30 மணியளவில் இரண்டு படகுகளில் அங்குவந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசத் தெரிந்த 6 நபர்கள் வேதாரண்யம் மீனவர்களின் படகை சூழ்ந்து கொண்டு அவர்களின் படகில் ஏறி நான்கு பேரையும் வாள்களை கழுத்தில் வைத்து மிரட்டியும், இரும்புப் பைப்புகளை கொண்டு தாக்கியும் உள்ளனர். அத்துடன், படகில் இருந்த 700 கிலோ வலைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதையடுத்து, காயமடைந்த நான்கு மீனவர்களும் இன்று மதியம் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு திரும்பினர். அவர்களின் முதுகின் பின்புறத்தில் இரும்பு பைப்பால் அடித்ததில் உள்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் உடனடியாக வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேதாரண்யம் மீனவர்கள் மீண்டும் மீண்டும் இலங்கை தமிழ் மீனவர்களால் தாக்கப்படுவது தமிழக மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேதாரண்யம் கடலோர காவல் நிலைய போலீஸார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். https://www.hindutamil.in/news/tamilnadu/1295336-sri-lankan-tamil-fishermen-chased-away-the-vedaranyam-fishermen-by-beating-them-with-iron-pipes.html
  9. யுக்ரேன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறதா ரஷ்ய ராணுவம்? 5 கேள்விகளும் பதில்களும் ரஷ்யாவில் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கைப்பற்றிவிட்டதாக யுக்ரேன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த தாக்குதலை ‘கடுமையான ஆத்திரமூட்டும் நடவடிக்கை’ என்று குற்றம்சாட்டியுள்ளார். யுக்ரேன் படைகளை ரஷ்ய எல்லையில் இருந்து துரிதமாக விரட்டியடிக்க வேண்டும் என்று ரஷ்ய ராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேன் - ரஷ்யா இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் நிலவி வருகிறது. ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் இந்தத் தாக்குதலை நடத்த யுக்ரேன் முடிவு செய்தது ஏன்? யுக்ரேனின் எல்லைக் கடந்த இந்த நடவடிக்கை தொடர்பாக இதுபோன்ற 5 கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான பதில்களை இந்த கட்டுரையில் நாங்கள் உங்களுக்குச் சொல்லவிருக்கிறோம். கர்ஸ்க் பகுதியில் என்ன நடந்தது? ஆகஸ்ட் 6 ஆம் தேதி, யுக்ரேன் எல்லையோரம் உள்ள ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதியில் யுக்ரைன் இராணுவ வீரர்கள் திடீரென தாக்குதலை துவங்கினர். இந்த தாக்குதல் எவ்வளவு பெரிது என்பது குறித்த துல்லியமான தகவல்களை சேகரிப்பது கடினம். ஆரம்பத்தில், இந்த நடவடிக்கை விளாடிமிர் புதினின் அரசாங்கத்தை எதிர்க்கும் ரஷ்ய குழுக்களின் ஊடுருவலாக தோன்றியது. இந்த குழுக்கள் யுக்ரேன் வழியாக ரஷ்யாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் எதிரிகளுடன் கடும் சண்டை நடந்ததாக ரஷ்ய ராணுவ பிளாகர்ஸ் (MIlitary Bloggers) தெரிவித்தனர். ரஷ்யாவின் சில கிராமங்கள் யுக்ரேன் வசம் பிடிப்பட்டதை அடுத்து, இந்த தாக்குதலில் ஈடுபட்டிருப்பது யுக்ரேன் படைகள் தான் என்பது தெளிவாக உறுதிசெய்யப்பட்டது என அதிபர் புதினிடம் கர்ஸ்க் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். ரஷ்ய எல்லையில் பாதுகாப்பு குறைவாக இருந்த இடத்தின் வழியே ரஷ்யாவுக்குள் ஊடுருவ யுக்ரேன் முடிவெடுத்ததாக தெரிகிறது. பெயர் குறிப்பிட விரும்பாத யுக்ரேனிய உயர் அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம், ‘நாங்கள் ஆக்ரோஷமாக உள்ளோம். எதிரி வீரர்களை முடிந்தவரை காயப்படுத்த முயற்சிக்கிறோம். ரஷ்யாவால் தனது சொந்த எல்லையை பாதுகாக்க முடியாது என்பதை நிரூபிப்பதன் மூலம் ரஷ்யாவை ஸ்திரத்தன்மையற்ற நாடாக மாற்ற விரும்புகிறோம்.’ என்றார். ரஷ்யாவின் குர்ஸ்க் மீது தாக்குதல் யுக்ரைன் நடத்தியது ஏன்? ஆரம்பத்தில் யுக்ரேன் இந்த தாக்குதல் குறித்து அமைதி காத்து வந்தது. பின்னர், ஆகஸ்ட் 10 ஆம் தேதி, அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மறைமுகமாக ஒப்புக்கொண்டார். 'யுக்ரேன் தொடர்ந்து போரை ஆக்கிரமிப்பாளர்களின் எல்லைக்குள் எடுத்து செல்லும்’ என்று அவர் தெரிவித்தார். ஆனால், ஆகஸ்ட் 12-ஆம் தேதி அன்று, சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் அளவிலான ரஷ்ய நிலப்பரப்பை கைப்பற்றியிருப்பதாக யுக்ரேன் அறிவித்தது. யுக்ரேனின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள ரஷ்யாவின் கவனத்தை திசை திருப்புவது இந்த ஊடுருவலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம் என்பதை பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கிறார்கள். கடந்த பல மாதங்களாக தனது கிழக்கு எல்லை வழியே ரஷ்ய இராணுவம் ஊடுருவுவதை தடுத்து நிறுத்த முடியாமல் தடுமாறுகிறது யுக்ரைன். ரஷ்ய இராணுவ படைகள் கடந்த மாதம் புவியியல் ரீதியாக முக்கியமான நகரமான சாசிவ் யார் (Chasiv Yar) பகுதியைக் கைப்பற்றி முன்னேறி வருகின்றன. யுக்ரேனின் நிலைமை வட-கிழக்கு மற்றும் தெற்கில் கடினமாகவே உள்ளது. தனது கிழக்கு பகுதிகளில் நிலைமையை இலகுவாக்குவதற்காக, ரஷ்யாவின் கர்ஸ்க் பகுதிக்குள் ஊடுருவ யுக்ரேன் முடிவு செய்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,யுக்ரேனின் துருப்புகளை திரும்பப் பெறுமாறு கோரும் ஆர்வலர்கள் ரஷ்ய இராணுவத்துடன் ஒப்பிடுகையில் யுக்ரேன் ராணுவம் எண்ணிக்கையிலும், ஆயுத ரீதியாகவும் சிறியது. ஆனாலும், யுக்ரேனிய ராணுவ அதிகாரிகள் இந்த ‘சூதாட்டம்’ போன்ற தாக்குதலை நடத்தி ரஷ்ய துருப்புக்களை சிதறடித்தனர். பிபிசியிடம் பாதுகாப்பு நிபுணரான பேராசிரியர் மார்க் கலியோட்டி இதுகுறித்து பேசுகையில், "யுக்ரேன் கடந்த சில மாதங்களாக போர்க்களத்தில் சிக்கியுள்ளது. போர்க்களத்தில் மிகச்சிறிய அளவிலேயே இயங்கி வந்தது. இப்போது, தாக்குதலை மேற்கொள்ள துணிந்து செயல்பட வேண்டி இருக்கிறது." என்றார். ஒரு யுக்ரேனிய தளபதி, தி எகனாமிஸ்ட் பத்திரிகையிடம் பேசுகையில், இது ஒரு சூதாட்டம் என்று கூறினார்: "எங்கள் முன்கள படைகளை, அவர்களின் மிகவும் அபாயகரமான எல்லை பகுதிக்குள் அனுப்பியுள்ளோம்." என்றார். ஆனாலும், யுக்ரேன் எதிர்பார்த்த அளவுக்கு இந்த தாக்குதல் வேகமான பலனளிக்கவில்லை என்றார். ‘ரஷ்ய தளபதி ஒன்றும் ஒரு முட்டாள் அல்ல. அவர்கள் தனது இராணுவத்தை முன்னோக்கி நகர்த்துகின்றனர். ஆனால் நாங்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக இல்லை. எங்களால் ஆயுத தளவாடங்களை 80 அல்லது 100 கிமீ வரை நீட்டிக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும்.’ என்று அவர் கூறினார். ரஷ்யாவின் பதிலடி என்ன? யுக்ரேன் தாக்குதலால் கர்ஸ்க் பகுதியில் இருந்து 1,20,000 பேரையும், அண்டை மாகாணாமான பெல்கொரோட்டில் (Belgorod) இருந்து மேலும் 11,000 பேரையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் உள்ளூர்வாசிகளுக்கு ஒரு நபருக்கு $115 வீதம் இழப்பீடு வழங்கியுள்ளது. அப்பகுதிகளில் அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண அதிபர் புதின் தலைமையில் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த சிறப்பு கூட்டத்தில் ஜெனரல் ஜெரசிமோவ் கலந்து கொள்ளவில்லை. புதினின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான பெடரல் பாதுகாப்பு சேவையின் (FSB) தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். சம்பவங்கள் குறித்த தனது சமீபத்திய அறிக்கையில், அமைதியான குடிமக்களை உக்ரைன் தாக்குவதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டினார். இதற்கு "தகுந்த பதிலடி" அளிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். யுக்ரேன் ரஷ்யாவிடம் இருந்து உண்மையான அச்சுறுத்தலை கடுமையான பதிலடி மூலம் எதிர்கொள்ள நேரிடும் என பேராசிரியர் கலியாட்டி (Galeotti) கூறியுள்ளார். "தனது வேண்டுகோள் மூலம் புதின் அவரது ஆயுதப் படையில் லட்சக்கணக்கான வீரர்களை சேர்க்க முடியும். மோதலை அதிகரிக்க ரஷ்யா வேறு வழிகளைக் கண்டறியும்" என்று அவர் கூறினார். சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவின் குண்டுவீச்சால் யுக்ரேனின் எரிசக்தி கட்டமைப்பின் பெரும்பகுதி அழிந்தது (அல்லது) சேதமடைந்தது. ரஷ்யாவின் இந்த தாக்குதல் இன்னும் தீவிரமானதாக மாறக்கூடும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்ய எல்லையில் யுக்ரேனிய துருப்புகள் யுக்ரேன் போரின் போக்கையே மாற்றிவிட்டதா? மார்க் கலியாட்டி, "ரஷ்யாவுக்கு யுக்ரேன் கைப்பற்றியுள்ள பகுதி சுமார் 50 மைல் நீளமும் 20 மைல் அகலமும் கொண்டதாகும். ரஷ்யாவின் ஒட்டுமொத்த பரப்புடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. ஆனாலும் இதன் அரசியல் தாக்கம் மிகவும் முக்கியமானது."என்று கூறினார். யுக்ரேன் தனது மேற்கத்திய நட்பு நாடுகளிடம், குறிப்பாக அமெரிக்காவிடம், அதன் இராணுவத்தால் தொடர்ந்து சண்டையிட முடியும் என்று காண்பித்துக் கொள்ள விரும்புகிறது என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். இது குறைந்தபட்சம் தற்காலிகமாக பேச்சுவார்த்தை நடத்தும் யுக்ரேனின் திறனை அதிகரித்துள்ளது. யுக்ரேனிய படைகள் ரஷ்ய எல்லைக்குள் 30 கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளதால், போர் நிறுத்தம் குறித்த எந்தவொரு பரிந்துரையையும் ரஷ்யா ஏற்பதற்கு சாத்தியமில்லை. யுக்ரேனின் இந்த நடவடிக்கை, ரஷ்யர்களிடையே போர் குறித்த சொல்லாடலை மாற்றியதுள்ளது. யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இனி "சிறப்பு இராணுவ நடவடிக்கை" என்று பெயரிடப்பட்ட முடியாத மோதலாக பார்க்கப்படும். ஏனெனில், யுக்ரேனின் நடவடிக்கை அவர்களை நேரடியாக பாதிக்கும் ஒன்றாக உருவெடுத்துள்ளது. "ரஷ்யாவில் ஊடகக் கட்டுப்பாடு அமலில் உள்ள சூழலிலும், மக்கள் சிலர் கேள்விகளைக் கேட்க துவங்கியுள்ளனர் என்பது கர்ஸ்க் பிராந்தியத்திலிருந்து வரும் தகவல்களில் இருந்து தெளிவாகிறது." என்று பிபிசியின் கிழக்கு ஐரோப்பிய செயதியாளர் சாரா ரெயின்ஸ்ஃபோர்ட் கூறுகிறார் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யா-யுக்ரேன் போரில் பல்பொருள் அங்காடி மீது ரஷ்ய தாக்குதல் (கோப்பு படம்) ஜெலன்ஸ்கி மற்றும் புதின் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கம் வரும்? ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய இரு நாடுகளின் அதிபர்களுக்கும் இதுவொரு ஒரு முக்கிய தருணம் ஆகும். விளாடிமிர் புதின், பெரும்பாலும் ஒரு சர்வாதிகார மற்றும் கடுமையான தலைவராகக் கருதப்படுகிறார். அவர் தனக்கு நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் குறிப்பாக பாதுகாப்பு சேவைகளை நம்பியிருக்கிறார். யுக்ரேனின் எதிர்பாராத தாக்குதல் அவர்களுக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இதில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை மறைப்பது கடினமாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் இடம்பெயர்ந்துள்ளதால், நிலைமை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது, அல்லது இது முழுமையான போர் அல்ல என்ற பிம்பத்தை கட்டமைப்பதும் இனி கடினமாகும். பல காரணங்களுக்காக, ரஷ்யாவிற்குள்ளான யுக்ரேனின் இந்த தாக்குதல் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-க்கும் சம அளவவில் பிரச்னையாக அமையலாம். யுக்ரேனில் போர் நடக்கும் மிக முக்கியமான இடங்களில் இருந்து ரஷ்யா தனது படைகளை பின்வாங்கினால் யுக்ரேனுக்கு அது சிறந்த பலனாக அமையும் என்று ஆய்வாளர் எமில் கஸ்தெல்மேயர் (Emil Kaszthelmeyer) கருதுகிறார். இது யுக்ரேனியர்களை சிறிது காலத்திற்கு உற்சாகமாக உணரவைக்கும் அதே வேளையில், அதன் கிழக்குப் பகுதியில் ரஷ்யா இன்னும் அதிகமான நிலங்களைக் கைப்பற்றுவதற்கு இது வழிவகுக்கக் கூடும். இங்கு இரு நாடுகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது, இன்னும் உறுதி செய்யப்படாத போதிலும் சில ரஷ்ய ராணுவ பிளாகர்ஸ் வெற்றிகள் குறித்து பேசுகின்றனர். போரில் தற்போது நிலவும் தேக்கநிலைக்கு தீர்வு காண்பதற்கு விஷயங்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேராசிரியர் கலியோட்டி கூறுகிறார். இருப்பினும், கொந்தளிப்புகள் வேகமாக ஏற்பட்டு வருகின்றன. ஆனால் இதன் முடிவு என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ரஷ்ய ராணுவம் யுக்ரேன் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறதா? 5 கேள்விகளும் பதில்களும் - BBC News தமிழ்
  10. நாமலுக்கு கோட்டா ஆதரவு Simrith / 2024 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:48 - 0 - 54 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆதரவை வழங்கியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். Tamilmirror Online || நாமலுக்கு கோட்டா ஆதரவு
  11. யானை, கை போன்று தமிழ்க்கட்சிகளின் சின்னங்களும் காணாமற்போகும் நிலைவரும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு எச்சரிக்கை தென்னிலங்கையின் பழம்பெரும் அரசியல் கட்சிகள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் காணாமற்போனது போல, தமிழர் பரப்பிலும் கட்சிகளின் சின்னங்கள் காணாமற்போகும் நிலைவரும். ஆதலால், தூயதமிழ்த் தேசியவாதிகளும், இளையோரும் புதிய அரசியல் கூட்டமைப்பாக உருவெடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் உள்ளதாவது: தென்னிலங்கையின் பழம்பெரும் கட்சிகளின் சின்னங்களான யானையும், கையும் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் காணாமற்போயுள்ளன. அதுபோன்று தமிழர் பரப்பிலும் சின்னங்கள் காணாமற்போகும் நிலை விரைவில் வரலாம். தூயதமிழ் தேசியவாதிகளும், இளையோரும் புதிய அரசியல் கூட்டமைப்பாக உருவெடுக்க வேண்டும். அதனைக் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட மூதவை வழிநடத்த வேண்டும். தமிழர்கள் புதிய செல்நெறியில் தமது அரசியல் பாதையை முன்கொண்டு செல்ல வேண்டும் என்பதைத் தற்போதைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. தமிழ்ப் பொதுவேட்பாளர் களத்தை எம்மினம் சரியாகப் புரிந்து கொள்ள உச்சப்பட்சப் பரப்புரைகளை எல்லாத் தளங்களிலும் முன்னெடுப்போம். எதிர்கால வரலாறு நிச்சயம் சுயநலங்களை கடந்து குறும்கட்சி அடையாளங்களை துறந்து, தமிழ் தேசிய திரட்சிக்காக அர்ப்பணித்த மனிதர்களை நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை - என்றுள்ளது. (ச) யானை, கை போன்று தமிழ்க்கட்சிகளின் சின்னங்களும் காணாமற்போகும் நிலைவரும் (newuthayan.com)
  12. 14 Aug, 2024 | 10:47 AM ராஜபக்ச பரம்பரையின் அடுத்த முடிக்குரிய வாரிசு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவால் ஒன்றை எதிர்கொள்கின்றார். நாமல் ராஜபக்ச வாக்குசீட்டில் இன்னொருமொரு நாமல் ராஜபக்சவை எதிர்கொள்கின்றார். செவ்வாய்கிழமை மாலை வரை 36 வேட்பாளர்கள் கட்டுப்பணம்செலுத்தியுள்ள நிலையில் இலங்கையின் வாக்காளர்கள் முன்னொருபோதும் இல்லாத நீளமான வாக்குசீட்டினை எதிர்கொள்கின்றனர். இந்த வாக்குசீட்டில் இரண்டு நாமல்கள் காணப்படுவது வாக்குசீட்டினை குழப்பம் மிகுந்ததாக மாற்றியுள்ளது.ஆகக்குறைந்தது நாமல் ராஜபக்ச விசுவாசிகளுக்காவது. ஒரே பெயருடைய வேட்பாளர்களை நிறுத்துவது என்பது கடந்தகாலங்களில் ராஜபக்சாக்கள் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயம். 2015 இல் அப்போதைய ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களை குழப்புவதற்காக ராஜபக்சாக்கள் சிறிசேன என்பவரை நிறுத்தினர் . மைத்திரிபால சிறிசேன போன்ற தோற்றமுடையவராக அவர் காணப்பட்டார். இந்த ஏமாற்று வேலையால் பலர் ஏமாறாத போதிலும் ராஜபக்சக்காள் நிறுத்திய ஏஆர் சிறிசேன 18174 வாக்குகளை பெற்றார். தற்போது தேர்தலில் களமிறங்கியுள்ள மற்றைய நாமல் வாக்குகளை சிதறடிப்பதில் பெயர் பெற்றவர். அவரது பெயரை சி;ங்களத்தில் எழுதினால் அது ராஜபக்சாக்களின் வாரிசின் பெயரை ஒத்ததாக காணப்படும். எனினும் ஆங்கிலத்தில் எச் என்ற எழுத்து மேலதிகமாக காணப்படுவது ஒருசிலரின் பார்வைக்கே அகப்படும். 2015 இல் இந்த நாமல் ராஜபக்ச மகிந்த ராஜபக்சவின் வாக்குகளை சிதறடிக்க முயன்றார்.போலி சிறிசேனவிற்கு அடுத்ததாக நான்காவதாக வந்தார்- 14000வாக்குகளை பெற்றார் எனினும் 2019 தேர்தலில் அவரால் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அதிக வாக்குகளை பெற முடியவில்லை. 2015 இல் நாமல்ராஜபக்சவின் சின்னம் சுமார் முப்பது நாற்பது வருடங்களிற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி.தற்போது அது ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம்.நாமல் ராஜபக்சவின் சின்னம் தபாலுறை. ஒருகாலத்தில் ஏகபோக கட்சியாக காணப்பட்ட தனது கட்சிக்குள் காணப்படும் கருத்துவேறுபாடுகளை எதிர்த்து போராடவேண்டிய நிலையில் உள்ள இளவரசர் நாமல் ராஜபக்ச தவறாக வழிநடத்துதல் , ஏமாற்றுதல், குழப்பம் போன்றவற்றையும் எதிர்த்துப்போராடவேண்டிய நிலையில் உள்ளார். இவை ஒரு வெற்றிகரமான இலங்கை அரசியல்வாதியின் முக்கிய பண்புகள் ஒரே பெயரில் வேட்பாளர் ; ஜனாதிபதி தேர்தலில் வித்தியாசமான சவாலை எதிர்கொள்கின்றார் நாமல் | Virakesari.lk
  13. 14 Aug, 2024 | 05:33 PM இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.14) ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியன்று கைது செய்தனர். 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை வரையிலும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கினர். அவர்களின் போராட்டம் ஐந்தாவது நாளாக புதன்கிழமையும் தொடர்கிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் பாம்பனில் இருநூறுக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் ஆழமற்ற கடற்பகுதிகளில் நங்கூரமிடப்பட்ட்டுள்ளன. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக ஆகஸ்ட் 20-ம் தேதி பாம்பன் பாலம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்துள்ளனர். மீனவர்களை விடுதலை செய்யக் கோரி பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தம் | Virakesari.lk
  14. 14 Aug, 2024 | 05:41 PM தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம் சிங்கவை வெல்ல வைக்கும் முயற்சியாக அமைவதாக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டினார். இன்று புதன்கிழமை (14) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் தமிழ் மக்களின் எதிர்பார்த்த கோரிக்கை அவர் ஊடாக பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இந்த உருவாக்கத்தின் பின்னணியில் சிவில் அமைப்புகள் புத்திஜீவிகள் பலர் பங்காற்றிய நிலையில் அவர்களுடன் இணைந்து பொதுக் கட்டமைப்பில் கையப்பமிட்ட தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியிடம் ஓடிச் சென்று பேசிய நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது. தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நியமித்த நோக்கத்தை தாண்டி அதன் கட்டமைப்பை சிதைத்து தற்போதைய ஜனாதிபதியும் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க வை சந்தித்ததன் மூலம் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் தமிழ் மக்களை அழித்த வரலாறுகளே அதிகமாக காணப்படுகின்ற நிலையில் தமிழ் கட்சிகள் ரணிலுடன் பேசுவது தமது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகும். 1983 கலவரம், அவசரகால சட்டம் பயங்கரவாத தடைச் சட்டம், மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் மற்றும் யாழ் பொது நூலக எரிப்பு போன்றவற்றில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது இரசித்துக்கொண்டிருந்தவர் வேறு யாரும் இல்ல ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரமசிங்க. இவற்றையெல்லாம் மறந்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் காலை நக்கி அரசியல் பிளைப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும் பணப்பெட்டி அரசியலை மேற்கொள்வதற்காகவா பேச்சுக்கு சென்றார்கள் என சந்தேகம் எழுகிறது. ரணில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்கிறேன் எனக்கூறி 83 பில்லியனாக இருந்த நாட்டின் கடனை சுமார் 100பில்லியனாக மாற்றிய பெருமை ரணில் விக்கிரமசிங்கவை சாரம். ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்துவதற்கும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் தேசிய மக்கள் சக்தியுடன் நாட்டில் உள்ள மக்கள் ஒன்று சேர ஆரம்பித்துள்ளனர். ஆகவே தமிழ் மக்களை ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் கட்சிகள் உறவை மேற்கொள்வது பொது வேட்பாளரை பாதுகாக்கவா அல்லது ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கவா என தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளர் மக்களை பாதுகாக்கவா? ; தோல்வி அடைந்த ரணிலை பாதுகாக்கவா? - சந்திரசேகரன் கேள்வி! | Virakesari.lk
  15. (எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தமது அரசாங்கம் ஆட்சியமைத்தால் கிழக்கிற்கு மத ரீதியான ஆளுநர் ஒருவரைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த அரசாங்கம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாமும் ஜனாதிபதியும் 100 நாள் வேலைத்திட்டத்துக்கமைய செயற்பட்டு வருகின்றோம். எனவே புதிதாக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு ஒன்றும் இல்லை. 18ஆம் திகதி கொட்டகலையில் எமது தேசிய சபை கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதைத் தீர்மானிக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அதற்கமைய அடுத்து தமது அரசாங்கம் ஆட்சியமைத்தால் கிழக்கில் மத ரீதியாக ஒரு ஆளுனரைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். மத ரீதியாக ஒரு அமைச்சர் கிடைப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார். எமது அரசாங்கத்தில் நாம் இலங்கையர் என்ற ரீதிலேயே சிந்திக்கின்றோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பாகுபாடு எம்மிடம் இல்லை. இலங்கையராக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே எமது நோக்கமாகும். ஆனால் இவர்கள் குறிப்பிடும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களது அரசாங்கம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை கணிப்பிட முடிகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோல்விடைவார் என்றும் அவருக்கு வெற்றி பெறத் தெரியாது என்றும் சிலர் கூறுகின்றனர். மத மற்றும் இன ரீதியான தீமானங்களை எடுப்பவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை செயற்பட இடமளிக்கவில்லை. தற்போதுள்ள எதிரணியினருடம் நாம் இருந்தால் அனைவரும் புத்தர். அவ்வாறில்லை என்றால் அனைவரும் கல்வர் என்ற நிலைப்பாட்டிலேயே அவர்கள் உள்ளனர் என்றார். இன, மத ரீதியாக பயணிக்க முற்படும் எதிரணி ரவுப் ஹக்கீமின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை - ஜீவன் தொண்டமான் விசனம் | Virakesari.lk
  16. Published By: Vishnu 14 Aug, 2024 | 06:13 PM (நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர், அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் செல்வது குறித்து சகல வேட்பாளர்களுடனும் பேரம் பேசுவது சிறந்த அணுகுமுறை எனவும், இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புதன்கிழமை (14) காலை 10.00 மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களுடன் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசிய விடயங்களை சுமந்திரன் உயர்ஸ்தானிகரிடம் விரிவாக எடுத்துரைத்தார். மூன்று பிரதான வேட்பாளர்களும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவதாகக் கூறியிருக்கும் பின்னணியில், அதில் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் விடயங்கள், அவற்றை அமுல்படுத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை உள்ளடக்கி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரிடம் (ரணில் விக்ரமசிங்கவிடம்) கையளித்த ஆவணம், 13 ஆவது திருத்தத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்கள் குறித்து அண்மையில் ஜனாதிபதி கையளித்த ஆவணம் என்பன பற்றி உயர்ஸ்தானிகரிடம் விளக்கிக்கூறிய சுமந்திரன், அவரிடம் அந்த ஆவணத்தையும் காண்பித்தார். அதேபோன்று இந்திய - இலங்கை ஒப்பந்தம் குறித்தும், 13 ஆவது திருத்தத்தில் இருந்த மற்றும் அதிலிருந்த எடுக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் விளக்கமளித்த சுமந்திரன், அவ்வாறு எடுக்கப்பட்ட அதிகாரங்களை மீளத்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருக்கும் நிலையில் அதற்கான நடைமுறைகள் பற்றியும் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார். அதில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட நிர்வாக அதிகாரங்கள் மற்றும் 'திவினெகும' உள்ளடங்கலாக சட்டங்களின் ஊடாக பறிக்கப்பட்ட அதிகாரங்கள் பற்றி எடுத்துரைத்த சுமந்திரன், இவற்றில் நிர்வாக ரீதியாகப் பறிக்கப்பட்ட அதிகாரங்களை தற்போது வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருப்பதாகவும், அது செயல்வடிவம் பெறுவதை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தார். அதனை செவிமடுத்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர், அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் செல்வது குறித்து சகல வேட்பாளர்களுடனும் பேரம் பேசுவது சிறந்த அணுகுமுறை எனவும், இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே அவற்றைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதால் இந்த பேரம் பேசலை தொடர்ந்து முன்னெடுக்குமாறும், அதன் பின்னர் சிறந்த தீர்வுத்திட்ட முன்மொழிவை முன்வைப்பவரை ஆதரிப்பது குறித்துத் தீர்மானிக்கமுடியும் எனவும் குறிப்பிட்டார். அதேவேளை இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்மக்கள் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் யார் என சுமந்திரனிடம் கேட்டறிந்த உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பேரம்பேசுமாறுதான் ஏனைய கட்சிகளுக்கும் தான் ஆலோசனை வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர்களுடன் அதிகாரப்பகிர்வு குறித்து பேரம் பேசுவதே சிறந்த அணுகுமுறை - சுமந்திரனிடம் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு | Virakesari.lk
  17. ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 13 ஆகஸ்ட் 2024 இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை பொது வேட்பாளராக அறிவித்துள்ளன. ஆனால், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக கூறி, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பொன்றை உருவாக்கி, அதனூடாக சுயேட்சை வேட்பாளராக பா.அரியநேத்திரன் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார். ''வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் தேசியம் சார்ந்த மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும். ஒரு கொள்கை அடிப்படையில் ஒரு குரலால் சர்வதேசத்திற்குச் செய்திகளைச் சொல்ல வேண்டும். சிதறி இருக்கின்ற கட்சிகள் ஒற்றுமைப்பட்டு ஒன்றிணைய வேண்டும்," பா.அரியநேத்திரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''கடந்த காலங்களில் ஜனாதிபதிகளை நாங்கள் ஆதரித்தும் இருக்கின்றோம். எதிர்த்தும் இருக்கின்றோம். தொடர்ச்சியாக நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். அதனால், இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் நாங்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை. வடகிழக்கில் ஒரு பிரச்னை இருக்கின்றது. அவர்களுக்கான ஒரு உரிமை கொடுத்தால் மாத்திரம்தான், இலங்கையின் பொருளாதாரம் மீண்டு, வெற்றியளிக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. இதை உணர்த்துவதற்காகவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நான் களமிறக்கப்பட்டுள்ளேன்," என அவர் கூறினார். இலங்கையின் ஜனாதிபதியாக தான் போட்டியிடவில்லை என கூறிய அவர், மாறாக வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான விடிவை எதிர்நோக்கிய ஒரு குறியீடாகவே போட்டியிடுகின்றேன் எனவும் அவர் கூறுகின்றார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தி தான் போட்டியிடுவதாக பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார். மலையக தமிழரின் ஜனாதிபதி வேட்பாளர் என்ன சொல்கின்றார்? தமிழ் பொது வேட்பாளர் என்ற விஷயத்தில், இலங்கையிலுள்ள மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவிக்கின்றார். நாட்டின் பிரஜாவுரிமை அற்ற சமூகமாக வாழ்ந்த மலையக சமூகம் பாரிய போராட்டங்களின் பின்னர் அந்த உரிமையை பெற்றதாக கூறிய அவர், மலையக மக்கள் தொடர்ந்தும் பல்வேறு அடிப்படை பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டார். அவ்வாறு வாழும் சமூகம் குறித்து சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் நோக்கிலேயே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்ததாக அவர் கூறுகின்றார். ''இலங்கையில் மலையக மக்கள் போராடியே வாக்களிக்கும் உரிமையை பெற்றார்கள். பல வருட காலத்தில் வாக்களிக்கும் உரிமை மாத்திரம் இல்லாது போகவில்லை. மறுக்கப்பட்ட காணி உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான போராட்டம் நடந்துக்கொண்டிருக்கின்றது. '' ''இலங்கையில் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் இறுதி 30 வருட காலம் வடகிழக்கு மாகாண மக்களின் பிரச்னை பேசப்பட்டது போல, சுதந்திரத்திற்கு பின்னர் அரசாங்கத்தினாலேயே சட்டரீதியாக பிற்படுத்தப்பட்ட இந்த சமூகத்தின் குரல் சர்வதேச அளவில் வெளிப்பட வேண்டும்." என எம்.திலகராஜ், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''தமிழ்ப் பொது வேட்பாளர் என கூறிக் கொள்வோரும் மலையக தமிழர்கள் தொடர்பில் பேசவில்லை. அந்த எண்ணம் கூட அடிப்படையில் வரவில்லை. கொள்கை வகுப்பாளர்களும் இந்த மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளவில்லை. இந்த மக்களின் பிரச்னைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும்," எனவும் அவர் கூறினார். காணி உரிமை பெருந் தோட்ட தமிழர்களுக்கான காணி உரிமை மறுக்கப்பட்ட நிலையில், அதனை வழங்குவற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்ட போதிலும் அது இதுவரை முழுமை பெறவில்லை. சுதந்திரத்திற்கு பிறகு அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை தேயிலை, ரப்பர் உற்பத்திகளுக்காக குத்தகை அடிப்படையில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கியது. இந்த நிலையில்,மலையக தமிழர்களின் வாழ்வாதாரம், பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான பகுதிகளை அண்மித்து காணப்படுகின்ற நிலையில், பெருந்தோட்ட நிறுவனங்கள் அந்த காணிகளை மக்களுக்கு வழங்க மறுத்துள்ளன. இன்றும் அந்த மக்கள்,பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு கீழ் வாழ்கின்றமையினால், இன்றும் லயன் அறைகளில் வாழ்கின்றனர். பெருந்தோட்ட பிரதேசங்களில் லயன் அறைகள் காணப்படும் பகுதியை மாத்திரம் பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்று, காணி உரிமையுடன் கூடிய கிராம முறையொன்றை உருவாக்கும் யோசனை ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் முன்வைத்திருந்தார். பொது வேட்பாளர் விவகாரத்தில் மலையக தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்களா? வடகிழக்கு தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் போது, மலையக மக்களையும் இணைத்ததாகவே தீர்வை பெற்றுக்கொள்வோம் என தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் பிபிசி தமிழுக்குத் தெரிவிக்கின்றார். மலையக மக்களைப் புறக்கணித்து, வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''மலையகத் தமிழர்களை முன்னிறுத்தியே வடகிழக்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் எப்போதும் செயற்பட்டுள்ளன. மலையக மக்களுக்கான உரிமை மறுக்கப்பட்ட போது அதற்காக நாங்கள் குரல் எழுப்பியுள்ளோம். ஆனால் இந்த விடயத்தில் நான் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன்.'' என்றார். மேலும், “எமது சகோதரர் திலகராஜ் அவர்கள் இந்த விஷயத்தை தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பிடம் கேட்டிருக்கலாம். அவரும் யாரோ திட்டமிட்டு ஒரு பேரினவாத ஜனாதிபதி வெற்றி பெறுவதற்காக போடப்பட்ட ஒரு கருவியே தவிர, அவர் சொல்கின்ற காரணமும் யாரோ ஒருவர் சொல்லி கொடுத்து சொல்கின்றாரே தவிர, அவரிடமிருந்து அது வரவில்லை. அது எங்களுக்கு தெரியும். எங்கள் விடுதலை போராட்டம் என்பது இன்று நேற்று நடைபெறவில்லை.'' “ஆகவே, நாங்கள் மலையக மக்களைப் புறக்கணித்து ஒதுக்கி விட்டு தீர்வை எடுக்க மாட்டோம். மலையக மக்களை மாத்திரமல்ல, தமிழ் பேசும் அனைவருக்கும் தீர்வை பெற்றுக்கொடுப்போம். எங்களுக்கு ஒரு தீர்வு வருகின்ற போது, அவர்களையும் இணைத்துக்கொள்வோம்," என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மக்களால் விமர்சிக்கப்படுகின்ற பா.அரியநேத்திரனின் எந்தவொரு கருத்திற்கும் இப்போது பதிலளிக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என எம்.திலகராஜ் கூறுகின்றார். அரசியல் பார்வயாளர்கள் சொல்வது என்ன? தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொண்டு வந்தால், மலையக தமிழ் சமூகத்திற்கு அது பாதுகாப்பு ரீதியான அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பு எண்ணியிருக்கலாம் என அரசியல் ஆய்வாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார். ''ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியாது, எனினும், தமது கோரிக்கைகளை தென்னிலங்கைக்கும், சர்வதேச சமூகத்துக்கும் எடுத்துரைக்கும் நோக்கிலேயே தமிழ் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார் என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தமிழ் பொது வேட்பாளர் முயற்சி அரசியல் ரீதியில் அக்னிப் பரீட்சையாகும். அதில் தோல்வி மற்றும் பின்னடைவு ஏற்படும் பட்சத்தில் அது தமிழர்களின் ஒற்றுமைக்கும் விடுக்கப்படும் பெரும் சவாலாகும்,” என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழ் பொதுவேட்பாளர் முயற்சியை வடக்கு, கிழக்குக்கு வெளியில் கொண்டுவந்தால் அது சிங்கள மக்கள் மத்தியில் வாழும் மலையக தமிழர்களுக்கு பாதுகாப்பு ரீதியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும், சில வேளை இனவாத தேர்தல் பிரசாரத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்ற அச்சம் தமிழ் தேசிய பொது கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மலையக தமிழர்களின் நலன்கருதி அவர்கள் வடக்கு, கிழக்குக்குள் இந்த கோஷத்தை மட்டுப்படுத்தி இருக்கலாம்,” என்றார். “அதேபோல வடக்கு, கிழக்குக்கு வெளியில் தமிழ் பொது வேட்பாளர் கோஷத்தை கொண்டுவர வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை அறிவித்துவிட்டன. எனவே, தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம் கருதியும் அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்." என்கிறார். ஜனாதிபதி தேர்தலென்பது தமிழ் பேசும் சமூகத்துக்கு பேரம் பேசுவதற்கு இருக்கும் சிறந்த வாய்ப்பாகும் என்று கூறியவர், மக்கள் போராட்டத்தின் பின்னர் தென்னிலங்கை அரசியல் களமும் மாறியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து பொதுக் கூட்டணி அமைத்து, பொதுக் கோரிக்கைகளை முன்வைத்து பிரதான வேட்பாளர்களிடம் பேச்சு நடத்தி இருக்கலாம் என ஆர்.சனத் கூறுகிறார். மேலும், "ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்ற நிலைப்பாட்டில் பிரதான வேட்பாளர்கள் இருப்பதால், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்க் கட்சிகள் பொதுவேட்பாளர் அணுகுமுறையை பின்பற்றியது நியாயப்படுத்தக் கூடியதாக இருக்கும் அதேவேளை, அவர்கள் வடக்கு, கிழக்குக்கு வெளியில் வந்து அது தொடர்பில் தீவிர பிரசாரத்தை முன்னெடுக்காமல் இருக்கும் அணுகுமுறை சிறந்ததே.'' என்கிறார். ''மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு பிரதான வேட்பாளர்கள் அனைவரும் உறுதியளித்துள்ளனர். இது நெடுநாள் கோரிக்கை, எனவே, பிரதான வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களுடன் பேரம் பேசுதலே மலையக மக்களுக்கு நன்மை பயக்கும்." என அரசியல் ஆய்வாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான ஆர்.சனத் தெரிவிக்கின்றார். இலங்கையில் தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளரை மலையகத் தமிழர்கள் புறக்கணித்தது ஏன்? - BBC News தமிழ்
  18. கீர்த்தி துபே பதவி,பிபிசி நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மாணவர்கள் போராட்டம் உச்சத்தை அடைந்த போது, ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் இருந்து டெல்லியை வந்தடைந்தார், அவர் ஏன் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை யூகிப்பது சுலபம் தான். வங்கதேசத்தில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, ஷேக் ஹசீனா இந்தியாவுடனான தனது உறவை பெரிதும் வலுப்படுத்தினார். அதே சமயம் பல துறைகளில் வங்கதேசம் இந்தியாவைச் சார்ந்திருப்பதும் அதிகரித்தது. வங்கதேசம் உணவுப் பொருட்கள் முதல் மின்சாரம் வரை அனைத்தையும் இந்தியாவிலிருந்து பெறுகிறது. இந்தியா வங்கதேசத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் துறையில் பெரும் முதலீடுகளை செய்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ரயில் பாதைகள் உள்ளன. மக்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எல்லையைக் கடந்து எளிதாக பயணிக்க முடிகிறது. இந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த போது, ஷேக் ஹசீனா அவரின் முதல் வெளிநாட்டு விருந்தினராக இருந்தார். கடந்த ஓராண்டில் இரு தலைவர்களும் 10 முறை சந்தித்துள்ளனர். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா 2009ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்தியா அங்கு பெரிய திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. ஷேக் ஹசீனா ஆட்சியில் இல்லாதது, அவர் மீதான மக்களின் கோபம், அந்நாட்டில் அதிகாரம் மாறிவரும் விதம் என அனைத்தும் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துகள் உள்ளன. குறிப்பாக இருதரப்பு ஒப்பந்தங்கள், எதிர்கால தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உட்பட அனைத்தும் பாதிக்கப்படும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். வங்கதேசத்தில் இந்தியாவின் முதலீடு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டாக்காவில் பணிபுரியும் வங்கதேச பெண்கள் வங்கதேசம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக வங்கதேசத்திற்கான இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா உள்ளது. 2023-24ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே 13 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றதாக இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பரில், இரு நாட்டு பிரதமர்களும் இந்தியாவின் ஆதரவுடன் மூன்று வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். அகௌரா-அகர்தலா ரயில் இணைப்பு, குல்னா-மங்லா துறைமுக ரயில் பாதை மற்றும் மைத்ரி வெப்ப ஆலை ஆகிய திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. வடகிழக்கு இந்தியாவை வங்கதேசத்துடன் இணைக்கும் முதல் ரயில் சேவை அகௌரா-அகர்தலா திட்டம். ``லைன் ஆஃப் கிரெடிட்’’ திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே சுமார் 1000 கோடி ரூபாயை வங்கதேசத்தின் ரயில்வே உள்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளது. அதானி குழுமத்தின் பெரும் பங்குகள் அதானி குழுமம் வங்கதேசத்தில் பெரிய முதலீட்டைக் கொண்டுள்ளது. `அதானி பவர்’ நிறுவனம் 2017 இல் `வங்கதேச பவர் டெவலப்மெண்ட்’ நிறுவனத்துடன் 25 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் அதானி பவர் நிறுவனம் ஜார்கண்டில் உள்ள கோடா ஆலையில் இருந்து 1,496 மெகாவாட் மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. கோடா பவர் ப்ராஜெக்ட் என்பது நாட்டின் முதல் பரிமாற்ற மின் உற்பத்தி நிலையமாகும். அதன் 100 சதவீத ஆற்றல் வங்கதேசத்துக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆலை 2023 ஆம் ஆண்டு முதல் வங்கதேசத்துக்கு மின்சாரத்தை அனுப்புகிறது. அதானி மட்டுமின்றி டாபர், மரிகோ, ஹீரோ மோட்டோகார்ப், டிவிஎஸ் மோட்டார் ஆகிய நிறுவனங்களுக்கும் வங்கதேசத்தில் முதலீடுகள் உள்ளன. 2007-2010 வரை வங்கதேசத்துக்கான இந்திய உயர் ஆணையராக இருந்த பினாக் சக்ரவர்த்தி கூறுகையில், “2007ல் நான் வங்கதேசத்தை மிகவும் கடினமான காலகட்டத்தில் பார்த்திருக்கிறேன், தற்போது நிர்வாக அமைப்பு சீர்குலைந்த காலகட்டம். ஆனால், வங்கதேசத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை புறக்கணிக்க முடியாது.” என்றார். இந்தியாவை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு வங்கதேசத்தின் சார்பு அதிகமாக உள்ளது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான திட்டங்கள் சில காலம் மட்டும் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் இந்தியாவின் முதலீடு ஆபத்தில் உள்ளது என்று கூறுவதும் புரிந்து கொள்வதும் சரியல்ல” என்கிறார். பட மூலாதாரம்,Getty Images இந்தியாவைச் சார்ந்திருக்கும் வங்கதேசம் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு அக்டோபர் 2023 இல் தொடங்கியது. இதனால் இரு நாடுகளிலிருந்தும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரி நீக்கப்படும். உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, இதன் மூலம் இந்தியாவுக்கான வங்கதேசத்தின் ஏற்றுமதி 297 சதவீதமும், இந்தியாவின் ஏற்றுமதி 172 சதவீதமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வங்கதேசத்தின் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, அதன் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் டிவிஎஸ் ஆகியவை வங்கதேசத்தில் இருசக்கர வாகனங்களுக்கான அசெம்பிளி ஆலைகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் வங்கதேச தொலைத்தொடர்பு நிறுவனமான ராபி ஆக்சியாட்டாவில் 28 சதவீத முதலீட்டைக் கொண்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் பிரபீர் டே கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் தொழில் முக்கியம். இது முதலீட்டாளருக்கும் அந்த நாட்டிற்கும் பயனளிக்கிறது, இந்தியாவுடன், சீனாவும் வங்கதேசத்தில் முதலீடு செய்துள்ளது. ஆனால் வங்கதேசம் இந்தியாவை சார்ந்திருப்பது மிக அதிகம். இந்தியாவில் இருந்து அன்றாட தேவைக்கான பொருட்களும் அங்கு செல்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், நிலைமை மீண்டும் பழைய நிலைக்கு வந்தவுடன் இந்தியாவில் இருந்து வர்த்தகம் மற்றும் முதலீடு நன்றாக இருக்கும்.” என்றார். இந்திய எல்லைகளில் புலம்பெயர்ந்தோர் வரவு அதிகரிக்கும் அபாயம் பட மூலாதாரம்,Getty Images வங்கதேசத்தில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில், அங்கு வாழும் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து, சிறுபான்மை இந்துக்களின் சொத்துகள் மற்றும் கோவில்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அங்குள்ள நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினரின் வணிக நிறுவனங்கள், கோயில்கள் பல இடங்களில் தாக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்த தாக்குதல்கள் எந்த மட்டத்தில் நடைபெறுகின்றன, அவற்றின் முழு நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வங்கதேசத்துடன் 4 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. வங்கதேசத்தில் இருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்பது இந்தியா எதிர்கொள்ளும் பெரிய சவால்களில் ஒன்று என்கிறார் பிரபீர் டே. "வங்கதேசத்துடனான வர்த்தகம் தொடர்பாக இந்தியாவுக்கு ஆபத்து இல்லை. ஏனெனில் நிலைமை மாறும்போது அது மாறும், ஆனால் அகதிகளின் அழுத்தம் இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார். வங்கதேசம் - இந்தியா இரு தரப்பு வர்த்தகம், முதலீடு தொடருமா? ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு என்ன நடக்கிறது? - BBC News தமிழ்
  19. நாடாளுமன்றத்தில் தற்போது நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், வக்பு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்திருந்தார். இது பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் செயல், மத சுதந்திரத்தில் தலையிடும் செயல் என எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. அதைத் தொடர்ந்து, இந்த திருத்த மசோதா மீது ஆய்வு மேற்கொள்ள 31 எம்.பி-க்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. மசூதி இந்த நிலையில், வக்பு திருத்த சட்ட மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், நாடு தழுவிய மிகப்பெரிய புரட்சியை பாஜக அரசு எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்திருக்கிறார். இது குறித்த அறிக்கையில், ``இஸ்லாமியப் பெருமக்களுக்குச் சொந்தமான நில உரிமையைப் பறித்து, அவர்களை நிலமற்ற ஏதிலிகளாக மாற்ற முயலும் மோடி அரசின் மற்றுமொரு மதவெறி சூழ்ச்சியே புதிய வக்பு வாரிய திருத்தச்சட்ட வரைவாகும். ஓர் இறையை ஏற்று, நபி வழி நின்று, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றி வருபவர்கள், தாங்களாக விரும்பி இறை வழிபாட்டுப் பணிகளுக்கோ, அல்லது இறைவன் திருப்பெயரால் மக்கள் தொண்டு செய்வதற்கோ மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளே ‘வக்பு’ என்பதாகும். இந்தியா என்றொரு நாடு விடுதலைப்பெற்று ஒருங்கிணைக்கப்படுவதற்கு முன்பிருந்தே, பல நூற்றாண்டுகளாக இஸ்லாமியச் செல்வந்தர்கள் பெருமளவில் தானமாக அளித்த நிலங்களே வக்பு நிலங்களாகும். அவை முழுக்க முழுக்க இஸ்லாமியப் பெருமக்களது இறை வணக்கப் பணிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நில உடைமைகளாகும். அவ்வாறு இஸ்லாமியச் செல்வந்தர்களால் இஸ்லாமிய இறைப்பணிக்காக வழங்கப்பட்ட உடைமைகளைப் பாதுகாக்க இஸ்லாமியச் சான்றோர்களால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளைகள்தான் வக்பு அமைப்புகள் ஆகும். சீமான் இந்தியா விடுதலைப்பெற்ற பிறகு வக்பு அமைப்புகளுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு, மாநில அரசுகளின் மூலமாக வக்பு வாரியங்கள் செயல்படுவதற்கும், வக்பு சொத்துக்களைப் பாதுகாக்கவும், நேர்மையாக நிர்வகிக்கவும் 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. தற்போது நாடு முழுவதும் அரசு அங்கீகாரம் பெற்ற 3 லட்சத்திற்கும் அதிகமான வக்பு அறக்கட்டளைகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றை ஒருங்கிணைக்கவும், கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் அந்தந்த மாநில அரசின் கீழ் வக்பு வாரியங்கள் செயல்பட்டுவருகின்றன. மேலும், வக்பு சட்டத்திலிருந்த குறைபாடுகளைக் களைவதற்காக ஏற்கனவே 1959, 1964, 1969, 1995-ம் ஆண்டுகளில் தேவையான திருத்தங்களும் கொண்டுவரப்பட்டன. இறுதியாக 2013-ம் ஆண்டு வக்பு சட்டத்தைப் பல்வேறு நிலைகளில் ஆய்ந்து, அதிலிருந்த ஒருசில குறைகளையும் நீக்கத்தேவையான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு, முழுமையான வக்பு சட்டம் தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், இந்து மதத்தினரிடம் இழந்த செல்வாக்கை மீட்பதற்காக பா.ஜ.க மேற்கொள்ளும் மதவெறி சூழ்ச்சியே தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவாகும். அதன்படி இஸ்லாமிய சமய சொத்துக்களைப் பாதுகாக்க முழுக்கவும் இஸ்லாமியர்கள் அங்கம் வகித்த வக்பு வாரிய குழுக்களில், புதிதாக 2 மாற்று மதத்தினரை நியமிக்கவும், வக்பு வாரிய நிலங்களை 12 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்திருந்தால், அந்த நிலங்களை ஆக்கிரமித்தவர்களே சொந்தமாக்கி பட்டா பெற்றுக்கொள்ள முடியும் என்பது உள்ளிட்ட 40 திருத்தங்களைக் கொண்டுவந்து வக்பு வாரியத்தின் அதிகாரங்களை முற்று முழுதாக நீர்த்துப்போகச் செய்ய பா.ஜ.க அரசு முயல்கிறது. அமித் ஷா, மோடி குடியுரிமை திருத்த சட்டத்தைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களை நிலமற்ற அகதிகளாக, நாடற்ற நாடோடிகளாக மாற்றவே இதை பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இஸ்லாமியர்களை அந்நியமானவர்கள் என்று நிறுவத் துடித்த மதவாத பா.ஜ.க அரசின் முயற்சிக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பது இஸ்லாமிய சமயத்தவரிடம் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் வக்பு நிலங்களாகும். இந்தியாவிலேயே பாதுகாப்புத்துறை மற்றும் தொடர்வண்டித்துறைக்கு அடுத்தபடியாக ஏறத்தாழ 10 லட்சம் ஏக்கர் அளவுக்கு நிலமுடையவர்களை இந்த நாட்டுக்குத் தொடர்பில்லாதவர்கள் என்று எப்படிக் கூற முடியும்? எனவேதான் சட்டத்தின் மூலம் அதை அபகரிக்க நினைக்கிறது பாசிச பா.ஜ.க அரசு. வக்பு வாரியம் என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பாகும். ஒன்றிய மற்றும் மாநில அளவில் வக்பு வாரியங்கள் உள்ளன. அதில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்படுபவர்கள். வக்பு தீர்ப்பாயம் வழங்கும் முடிவுகள் தவறெனக் கருதினால் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடும் செய்ய முடியும். எனவே, வக்பு தீர்ப்பாயம் வழங்கும் முடிவுகளுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை அணுக முடியாது என்பதும், வக்பு வாரியம் யாராலும் கட்டுப்படுத்த முடியாத கட்டற்ற அதிகாரம் படைத்த தன்னாட்சி அமைப்பு போலவும் பா.ஜ.க பரப்புவது அனைத்தும் பச்சைப் பொய்யாகும். பாஜக உண்மையில் வக்பு சொத்துக்களால் பயனடைவது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல. குத்தகைக்கு விடப்பட்டுள்ள வக்பு வாரிய நிலங்கள், வாடகைக்கு விடப்பட்டுள்ள வணிகக் கடைகள், மண்டபங்கள், ஓய்வெடுக்கும் அறைகள், மருத்துவ சேவைகள், அவசர ஊர்திகள், பேரிடர்காலத் துயர்துடைப்பு உதவிகள் என அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அதைவிட அதிகமாக இந்து மக்களுக்கும், ஏனைய மதத்தினருக்கும் உதவவும் பயன்படுத்தப்படுகிறது என்பதே நடைமுறை உண்மையாகும். வக்பு சட்டத்தில் குறைகள் உள்ளது என்றால் அதைக் கூற வேண்டியது இஸ்லாமியப் பெருமக்கள்தான். தங்களுக்கு இத்தகைய திருத்தங்கள் வேண்டும் என்று கேட்க உரிமை பெற்றவர்கள் அவர்கள்தான். ஒரு சில இடங்களில் நடைபெற்ற தவறுகளை வைத்து ஒட்டுமொத்த அமைப்பையும் சீர்குலைக்க நினைப்பது என்ன நியாயம்? ஒரு இந்து மடத்தில் தவறு நடந்தால் ஒட்டுமொத்த இந்து மடங்களையும் பா.ஜ.க அரசு மூடிவிடுமா? அல்லது மாற்று மதத்தினரை இந்து மடங்களில் நிர்வாகிகளாக நியமிக்கத்தான் அனுமதிக்குமா? நிர்வாகத்தில் ஊழல் என்பதற்காக சங்கரமடத்தையும், சிதம்பரம் கோயிலையும் அரசே நிர்வகிக்க வேண்டும் என்றால் அதனை பா.ஜ.க ஆதரிக்குமா? வக்பு நிலங்களை ஆக்கிரமித்தவர்களே அதனைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்ற மோடி அரசின் முடிவு, கோயில் நிலங்களுக்கும் பொருந்துமா? மோடி - சீமான் சச்சார் குழு கொடுத்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதாகக் கூறும் பா.ஜ.க அரசு, இஸ்லாமியர் நலன் காக்க சச்சார் குழு கொடுத்த அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றத் தயாரா? என்ற கேள்விகளுக்கு பா.ஜ.க உரிய விளக்கமளிக்க வேண்டும். எனவே, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை உடனடியாக பா.ஜ.க அரசு திரும்பப்பெறாவிட்டால், எப்படிக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியப் பெருமக்கள் மிகப்பெரிய எழுச்சியுடன் ஒன்றுதிரண்டு போராடினார்களோ, எப்படி புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடித் திரும்பப்பெறச் செய்தார்களோ, அப்படி இதற்கெதிராகவும், நாடு முழுவதும் மிகப்பெரிய மக்கள் திரள் புரட்சி போராட்டங்களை பா.ஜ.க அரசு எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கிறேன்" என்று சீமான் குறிப்பிட்டிருக்கிறார். `வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுங்கள்; இல்லையென்றால்..!' - பாஜக-வை எச்சரிக்கும் சீமான் | NTK chief seman warns BJP govt to withdraw waqf bill 2024 - Vikatan
  20. கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்தார். 4-வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் இன்று (திங்கள் கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார். பதவி விலகியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் கோஷ், “இறந்து போன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்க நான் விரும்பவில்லை” என்று கூறினார். முன்னதாக, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சஞ்சய் வசிஸ்ட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், “ஆக.18-ம் தேதிக்குள் மாநில போலீஸார் வழக்கை முடிக்கத் தவறினால், வழக்கு விசாரணை சிபிஐ-வசம் ஒப்படைக்கப்படும்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மம்தா உறுதி: கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தை இன்று (ஆக.12) நேரில் சந்தித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அப்போது, “மருத்துவரின் குடும்பம் விரும்பினால், இந்த கொலை வழக்கின் விசாரணையை மத்திய ஏஜென்சிகளிடம் வழங்கத் தயார் என்றும், மத்திய ஏஜென்சிகள் மூலம் விசாரணை செய்வதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், மம்தா பானர்ஜி தனது அறிவிப்பில், “மாநில காவல்துறை இந்த வழக்கின் குற்றவாளிகளை வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் வழக்கை முடிக்கத் தவறினால், வழக்கின் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைப்போம்” என்று தெரிவித்துள்ளார். சம்பவமும், போராட்டமும்.. - மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர், கடந்த 9-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட பெண் மருத்துவர் அங்கு முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்று வந்தார். இந்த கொலை தொடர்பாக காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராய் (33) கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை கொல்கத்தாவில் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கொலை சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளியை கைது செய்யக்கோரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கிய போராட்டம் பின்னர் மேற்குவங்கம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும் பரவியது. இதனால் மேற்குவங்கத்தில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று (ஆக.12) நாடு முழுவதும் மருத்துவமனைகளில் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள பத்து அரசு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடங்கியுள்ளனர். டெல்லியில் இயங்கிவரும் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, ஆர்எம்எல் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, விஎம்எம்சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனை, ஜிடிபி, ஐஎச்பிஏஎஸ், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி, தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் மருத்துவமனை பணியாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 லட்சம் மருத்துவ பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். FORDA மருத்துவர்கள் சங்கம் போராட்டம்: பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கோரி FORDA மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை இன்று நடத்தி வருகிறது. லோக் நாயக் மருத்துவமனை, டெல்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை போன்று நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளுக்கு வெளியே திரண்ட மருத்துவர்கள், பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். போராட்டம் தொடர்பாக பேசியுள்ள FORDA பொதுச் செயலாளர் சர்வேஷ் பாண்டே, “நாடு முழுவதும் உள்ள சுமார் 3 லட்சம் மருத்துவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மற்ற மருத்துவர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும். எங்கள் கோரிக்கைக்கு எழுத்துபூர்வ உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் மத்திய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்க வேண்டும் என்பது எங்களின் முக்கியமான கோரிக்கை” என்று கூறியுள்ளார். கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’ | Mamata visits residence of murdered RG Kar hospital doctor, says will hand over to CBI if Kolkata Police fail to crack case by August 18 - hindutamil.in
  21. சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தேனி காவல் துறை நடவடிக்கை தேனி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.அவரது கார் மற்றும் விடுதி அறையை சோதனை செய்த போது கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பழனிசெட்டிபட்டி போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் இன்று (ஆக.12) வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி பொதுமக்களை போராடிய தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செயப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (ஆக.9) தீர்ப்பளித்த நீதிபதிகள், “சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவும், அவர் மீது தொடர்ச்சியாக போடப்பட்டுள்ள வழக்குகளும் உள்நோக்கத்துடன் பதியப்பட்டவை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்துக்காக கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் தாமதமாக வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கின் அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர். சவுக்கு சங்கர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த காரணங்களை உத்தரவில் தெரிவிக்கவில்லை. சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானவையாக தெரியவில்லை. எனவே அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்பதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கூறியிருந்தது. மேலும், வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேனி மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தேனி காவல் துறை நடவடிக்கை | Theni Police action against YouTuber Shavukku Shankar under Goondas Act - hindutamil.in
  22. தமிழ் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது 12 Aug, 2024 | 03:03 PM ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொதுக் கட்டமைப்பினால் சுயேட்சை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (12) கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரான, த.சிற்பரன் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார். தமிழ் பொது வேட்பாளருக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது | Virakesari.lk
  23. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 1952ஆம் ஆண்டு இறப்பர் - அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதற்கு அமைவாக, இலங்கை சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து, அதற்குப் பதிலாக அங்கிருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்துள்ளது. இலங்கையில் 1952ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு இறப்பர் - அரிசி உடன்பாட்டுக்கு வழி சமைத்ததைப்போன்றே தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி சீனாவில் இருந்து அவ்வப்போது நன்கொடையாக அரிசியை கையேந்துவதற்கு வழிகோலியுள்ளது. அண்மையில் வடக்கு, கிழக்குக் கடற்றொழிலாளர்களுக்கு சீனாவின் நன்கொடையாக அரிசி விநியோகப்பட்டுள்ளது. இந்நன்கொடையில் மனிதாபிமானத்தை விட பிராந்திய அரசியல் மேலோங்கியிருப்பது வெளிப்படையானது. ஆனால், சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். இலங்கைக்கு சீனா நன்கொடையாக வழங்கிவருகின்ற அரிசி குறித்து பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், உலகில் அதிகளவில் அரிசியை உற்பத்தி செய்யும் நாடாகவும் அதிகளவில் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாகவும் சீனாவே முதலிடத்தில் உள்ளது. ஆனால், அண்மைக் கால ஆய்வுகளின் முடிவுகள் சீனாவின் அரிசியில் சூழல் மாசு காரணமாக கட்மியம் அங்கீகரிக்கப்பட்ட அளவை விடவும் பன்மடங்கு அதிகமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கட்மியம் உடலுக்கு அத்தியாவசியம் இல்லாத ஆபத்தான ஒரு பாரஉலோகம். உணவின் மூலம் உடலில் நுழைந்து நீண்டகாலம் தேங்கியிருக்கக்கூடிய இக்கட்மியம் சிறுநீரகங்களை செயலிழக்க வைப்பதோடு மார்பு, நுரையீரல், சதையம், சிறுநீரகம் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் தரப்பரிசோதனை செய்யப்படாத அரிசியை நுகர்வது குறித்து பொதுமக்கள் விழிப்பாக இருப்பது அவசியமாகும். இலங்கை 2023ஆம் ஆண்டு அரிசி உற்பத்தியில் தன்நிறைவைக் கொண்டிருந்தது. கடந்த பெரும்போகத்தில் மழைவெள்ளம் சில பிரதேசங்களில் நெற்செய்கையைப் பாதித்திருந்தாலும் இந்த ஆண்டினது ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படவில்லை. சீனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதை மாத்திரமே நோக்கமாகக் கொண்டிருப்பின் தனது சந்தேகத்துக்கு இடமான அரிசியை இலங்கையில் விநியோகிப்பதை நிறுத்தி இலங்கையிலேயே அதனைக் கொள்வனவு செய்து விநியோகிப்பதே சாலச்சிறந்தது. இந்நடைமுறை சரியான சந்தை வாய்ப்புகளின்றித் தவிக்கும் எமது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவதோடு ஆபத்தான பார உலோகங்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கவும் செய்யும். சோற்று அரசியல் சேற்றுக்குள் சிக்கி மென்மேலும் எமது மக்களின் வாழ்வு சீரழியாமல் இருக்க உரிய தரப்புகள் இது குறித்து உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலை விட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் - பொ. ஐங்கரநேசன் | Virakesari.lk
  24. Published By: Vishnu 12 Aug, 2024 | 07:01 PM (நா.தனுஜா) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்தியாவுடன் தமக்கு எந்தவொரு போட்டியும் இல்லை என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் தெரிவித்திருக்கும் சீனத்தூதுவர் சி சென்ஹொங் இந்தியாவுடன் மிகநெருக்கமாகப் பணியாற்றுவதற்கான காரணத்தைக் கேட்டறிந்திருக்கிறார். இலங்கைக்கான சீனத்தூதுவர் சி சென்ஹொங் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியனுக்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை (12) கொழும்பிலுள்ள சீனத்தூதரகத்தில் நடைபெற்றது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், சமகால அரசியல் நிலைவரம் மற்றும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடும் நோக்கிலேயே சீனத்தூதரகத்தினால் இச்சந்திப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அதன்படி எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு குறித்தும், தமிழ்மக்கள் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் தொடர்பான நிலைப்பாடு குறித்தும் சீனத்தூதுவர் சி சென்ஹொங் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தமிழ் பிரதிநிதிகள், தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினர். அதேவேளை ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்கவுள்ள பிரதான வேட்பாளர்கள் மூவரும் தாம் வெற்றியீட்டினால் தமிழ் மக்களுக்கு வழங்கவிருக்கும் தீர்வு குறித்து பெரும்பாலும் ஒரேவிதமான கருத்துக்களையே வெளியிட்டிருக்கிறார்கள் எனவும், ஆகவே சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வழங்க முன்வரும் வேட்பாளரை ஆதரிப்பது குறித்து ஆராயலாம் எனத் தாம் தீர்மானித்திருப்பதாகவும் அவர்கள் எடுத்துரைத்தனர். அதனை செவிமடுத்த சீனத்தூதுவர், தாம் வட, கிழக்கு தமிழ்மக்களுடன் நெருங்கிய தொடர்பைப்பேண விரும்புகின்ற போதிலும், தாம் சிங்கள மக்களுக்கு ஆதரவானவர்கள் என்பது உள்ளடங்கலாக தம்மைப் பற்றிய பல்வேறு தவறான கருத்துக்களும், புரிதல்களும் தமிழர்கள் மத்தியில் நிலவுவதாகக் கவலை வெளியிட்டார். அத்தோடு அண்மையில் தாம் வடமாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப்பொருட்களை வழங்கியமையானது எந்தவொரு அரசியல் நலனையும் எதிர்பார்த்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல எனவும், மாறாக அம்மக்கள் மீதான உண்மையான அக்கறையின் நிமித்தமே அந்நடவடிக்கைகயை முன்னெடுத்ததாகவும் அவர் விளக்கமளித்தார். அதனைத் தாமும் வரவேற்பதாகத் தெரிவித்த சுமந்திரன் மற்றும் சாணக்கியன், சகல தரப்பினருடனும் இணைந்து நட்புறவுடன் பணியாற்றுவதற்கே தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டனர். அதற்குப் பதிலளித்த சீனத்தூதுவர் 'நீங்கள் இந்தியாவுடன் அல்லவா அதிக நெருக்கத்தைப் பேணுகின்றீர்கள்?' என வினவினார். அதனை ஒப்புக்கொண்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், தம்மைப் பொறுத்தமட்டில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விவகாரமே மிகப்பிரதானமானது எனவும், அவ்விடயத்தில் இந்தியா குறிப்பிடத்தக்களவு கரிசனை காண்பிப்பதனால் தமிழ்மக்கள் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பைப் பேணுவதாகத் தெரிவித்தனர். அதேவேளை இங்கு கருத்து வெளியிட்ட சீனத்தூதுவர் சி சென்ஹொங், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமக்கு இந்தியாவுடன் எவ்வித போட்டியும் இல்லை எனவும், இலங்கையின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் சீனா ஈடுபடாது எனவும் உறுதியளித்தார். வட, கிழக்கில் இந்தியாவுடன் எமக்கு எவ்வித போட்டியுமில்லை : தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சீனத்தூதுவர் தெரிவிப்பு | Virakesari.lk
  25. Published:Today at 9 AMUpdated:Today at 9 AM சாவின் விளிம்பிலிருந்து உயிர்பிழைத்த இருவரின் பயணமே இந்த 'மின்மினி'. 2016-ம் ஆண்டு, நிகழ்காலம் என இரண்டு அத்தியாயங்களாகப் பிரிகிறது கதை. முதல் அத்தியாயம் பாரி (கௌரவ் காளை), சபரி (பிரவீன் கிஷோர்), பிரவீனா (எஸ்தர் அனில்) ஆகியோரின் பள்ளிப் பருவத்தைப் பேசுகிறது. ஒன்றாகப் படிக்கும் பாரி, சபரி இருவருக்கும் இருக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு, அது நட்பாகத் துளிர்க்கும் சமயத்தில் எதிர்பாராத விபத்து ஒன்று நடந்துவிடுகிறது. இது சபரியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகிறது. சபரியை மீட்டெடுக்கப் புதிதாக உள்ளே நுழையும் நட்பான பிரவீனா என்ன செய்தார், லடாக்கில் நிகழும் இரண்டாவது அத்தியாயத்தில் சபரி தன் வாழ்வை மீட்டானா என்பதே படத்தின் கதை. கதாபாத்திரங்களின் பள்ளி நாள்கள் 2015-ல் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது எடுக்கப்பட்டிருக்கின்றன. கதைப்படி அவர்கள் வளர்ந்த பின்னர் நடக்கும் நிகழ்வுகள் 8 வருடங்கள் கழித்து மீண்டும் அதே நடிகர்களை வைத்தே எடுக்கப்பட்டிருக்கின்றன. சினிமாவின் இந்த அரிதினும் அரிதான முயற்சிக்கு இயக்குநர் ஹலீதா ஷமீமுக்குப் பாராட்டுகள். பள்ளிப் பருவத்தில் குறும்புத்தனங்களும் சேட்டைகளும் சுறுசுறுப்பும் நிரம்பிய சிறுவனாக மிளிர்கிறார் கௌரவ் காளை. யார் வம்புக்கும் செல்லாத தனிமை விரும்பி, இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வலி என முதல் அத்தியாயத்தில் தேவையான உணர்வுகளைக் கடத்துகிறார் பிரவீன் கிஷோர். ஆனால் இரண்டாம் அத்தியாயத்தில் இமயமலை பைக் பயணம் போலத் தன் நடிப்பிலும் சிரமப்பட்டிருக்கிறார். சிறுமியாகப் பெரிதாகக் காட்சிகள் இல்லாவிட்டாலும் நிகழ்காலத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார் எஸ்தர் அனில். உதகமண்டலம், இமயமலை என இரு மலைப்பிரதேசங்களின் எழிலையும் அழகாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. கால இடைவெளிகளை கலர் டோனினால் வேறுபடுத்தி மென்மையான ஒளியுணர்வால் வருடியிருக்கிறார். முதல் பாதியில் ஒரு நல்ல ஹைக்கூவைச் சேகரிப்பது போலக் காட்சிகளைச் சிறப்பாகக் கோத்திருக்கிறார் ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா, தத்துவ புத்தகம் போல நீளும் இரண்டாம் பாதியின் சில காட்சிகளை இன்னும் கவனித்திருக்கலாம். அறிமுக இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான் இசையில் ‘இரு பெரும் நதிகள்’ பாடல் நமது பிளேலிஸ்ட்டில் இடம்பெற்று மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் காதல் ராகம். பின்னணி இசை ரசிக்க வைத்தாலும் நிசப்தமே இல்லாமல் எல்லா இடங்களிலும் வருவது, காட்சிக்கான இயல்பினையும் உணரமுடியாத நிலைக்கு சில இடங்களில் கொண்டு செல்கிறது. இது புது முயற்சி என்று தெரிந்தே நாம் திரைக்குள் வர, பள்ளிப் பருவக் காட்சிகள் குட்டி குட்டி கியூட் மொமெண்ட்களால் நம்மை இயல்பாகவே ரசிக்க வைக்கின்றன. அதிலும் பாரியின் கதாபாத்திர வடிவமைப்பு நம்மோடு நெருக்கமாகி பீல் குட் உணர்வைத் தருகின்றன. மலையாளி வார்டன் செய்யும் சில கட்டாய நகைச்சுவை காட்சி, துணை நடிகர்களின் சுமாரான நடிப்பைத் தவிர, இன்றைய திரைப்படத்தில் நாம் அரிதாகவே காணும் மென்மையான உணர்வினை படம் அளிப்பது கூடுதல் ப்ளஸ்! ஆனால் இரண்டாம் பாதி ஆரம்பித்தவுடன் முதல் பாதியில் இருக்கும் அந்த இயல்பு அப்படியே மிஸ்ஸிங்! ‘வாழ்க்கை என்றால் என்ன தெரியுமா’, ‘நட்சத்திர துகள்கள்’, ‘செலஸ்டியல் பாடி’ எனத் தத்துவ வகுப்புகளாக செயற்கைத்தனங்கள் விரிகின்றன. அதிலும் ‘நதிகள் இணைகின்றன’ என்று பாடலின் வரிகளையே மீண்டும் வாய்ஸ் ஓவர் வசனமாகவும் வைத்து ரிப்பீட் அடித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். பிழையே செய்யாத ஒருவனின் குற்றவுணர்வைப் போக்குவதாகவும், தன்னை மறந்து தன் திறமையை மறந்து வேறுபயணத்தில் இருக்கும் ஒருவனை மீட்பதாகவும் பின்னப்பட்ட தன்னுடைய கதைக்கு உணர்வுபூர்வமாக உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம். அதற்கான விதையாக முதல் பாதியில் வைத்த காட்சிகள் வேரினைப் பிடித்தாலும், இரண்டாம் பாதி கனி கொடுக்கவில்லை. திரைக்கதை இமயமலையின் வளைவுகளாகச் சிக்கலில் சுற்ற, அவர்களோடு சேர்ந்து நாமும் மாட்டிக்கொண்ட உணர்வைத் தந்து அயர்ச்சியை ஏற்படுத்துகிறது படம். மின்மினி படத்தில்... உண்மையைச் சொல்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற போதிலும் ஏன் நாயகி அதைச் சொல்லத் தயங்குகிறார் என்பதற்கு எந்தத் தெளிவான விளக்கமும் கடைசிவரை புலப்படவில்லை. இத்தனை வருடங்கள் காணாமல் போன நாயகனைத் தேடாத நாயகி, இமயமலைப் பயணத்துக்கு மட்டும் இணைவது ஏன் என்பதற்கான காரணங்களை எல்லாம் வெறும் வாய்ஸ் ஓவர்களாகக் கடந்து போயிருப்பதும் அதீத சினிமா உணர்வினைத் தந்துவிடுகிறது. புதுமையான முயற்சியாக மின்னும் இந்த ‘மின்மினி’ ஊட்டி காட்சிகளில் அழகாக மிளிர்ந்தது. இமயமலை சென்றபிறகும் அதன் ஒளியைக் குன்றவிடாமல் பத்திரப்படுத்தி இருந்தால் மறக்க முடியாத பயணமாகியிருக்கும். https://cinema.vikatan.com/kollywood/halitha-shameems-minmini-movie-review-2?pfrom=story-card

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.