Everything posted by பிழம்பு
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம் விஜயகலா மகேஸ்வரன் தெரிவிப்பு! (ஆதவன்) கடந்த காலங்களில் வாக்களிக்க தவறியமையால் பல பிழையான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். கோத்தாபய போன்ற கடந்த கால அரச தலைவர்களால் நாடு சோமாலியாவாக மாறியது. -இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வந்திருந்த அரசதலைவர் ரணில் விக்கிரமங்க பொதுமக்களுக்கு காணி உறுதிகளை வழங்கியிருந்தார். அந்த நிகழ்வில் உரையாற்றும்போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தேர்தலில் தோற்றபோதும், அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றார். இன்று அநுரகுமார திஸாநாயக்க, சஜித் எனப் பலர் தேர்தலில் போட்டியிட வருகின்றார்கள். அன்று நாட் டைப் பொறுப்பெடுக்கும் வாய்ப்பு இருந்த போது அனைவரும் பின்வாங்கினர். ஆனால் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பெடுத்தார். அடுத்த தேர்தலே எனது அரசியல் பயணத்தின் இறுதி தேர்தலாகும். அதன் பின்னர் நான் அரசியலில் இருந்து விலகி விடுவேன் - என்றார். (ச) பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம் (newuthayan.com)
-
யாழில் மாணவிகள் உடம்பில் தழும்புகள்:
யாழ்ப்பாணம், தீவக கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். பெண்கள் பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். கடந்த 3 வருடங்களாக தாம் கடுமையாக தாக்கப்பட்டு வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். அகப்பை காம்பு, தடியால் தாக்குவது, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர். ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களுக்காகவே அருட் சகோதரி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன், பாடசாலை மாணவிகளுடன் உரையாடக்கூடாத கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து திட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர். 11 மாணவிகளும் இன்று ஊர்காவற்றுறை பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்டமருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டனர். மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது. (அ) யாழில் மாணவிகள் உடம்பில் தழும்புகள்: (newuthayan.com)
-
மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் : மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
28 MAY, 2024 | 02:55 PM மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு திங்கட்கிழமை (27) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குறித்த சம்பவத்தில் கடந்த தவணையின் போது 30,26, 22, 23, வயதினையுடைய 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பது தொடர்பாகவும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் நீண்ட சமர்ப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணை, மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் பாரப்படுத்தல், குறித்த வழக்கு தவணைகளில் தவறாது ஆஜராகுதல், உள்ளிட்ட பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தனர். மேலும், மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆந் திகதி வரை வழக்கினை ஒத்திவைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகியதோடு, சாய்ந்தமருது பொலிஸாரால் மத்ரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டுள்ளார். மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் : மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் | Virakesari.lk
-
தமிழ் பொதுவேட்பாளர் முன்னெடுப்புக்கு யாழ். வணிகர் கழகமும் ஆதரவு !
28 MAY, 2024 | 04:41 PM தமிழ் பொதுவேட்பாளரின் அவசியத்தை முன்னிறுத்தி அது விரைவாகவும் வீரியமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை யாழ். வர்த்தக சங்கத்தினர் முன்வைத்துள்ளனர். தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள், சமூக அமைப்புகளுடனான உரையாடலின் ஒரு கட்டமாக திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வணிகர் கழகத்துடனான சந்திப்பு நடைபெற்றது. பொதுவேட்பாளர் விடயத்தில் தொடர்ச்சியான செயற்பாட்டில் இருக்கும் சமூக (சிவில்) அமைப்புகளின் கூட்டிணைவு சார்பாக கலந்துகொண்ட பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் செயலாளர் உட்பட்ட முக்கிய உறுப்பினர்களுக்குமான கலந்துரையாடல் யாழ் வர்த்தக சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான நோக்கம் அதன் முக்கியத்துவம் தொடர்பாக விரிவாக பேசப்பட்டிருக்கிறது. சந்திப்பின் ஆரம்பத்திலேயே பொதுவேட்பாளரின் அவசியத்தை முன்னிறுத்தி அது விரைவாகவும் வீரியமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டை வர்த்தக சங்கத்தினர் முன் வைத்திருக்கின்றனர். இது பொதுவேட்பாளர் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியிலும் சமூக நிறுவனங்கள் மத்தியிலும் தன்னியல்பாக தோன்றியுள்ளமையின் வெளிப்பாடு என சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இச்சந்திப்பில் பொதுவேட்பாளர் முன்னெடுப்பில் தொடர்ச்சியாக இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புகளின் கூட்டிணைவில் யாழ் வர்த்தக சங்கமும் இணைந்து செயற்படுவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பான தமது அறிக்கையை முன்வைப்பதாகவும் ஊடகங்கள் ஊடாக தமது உடன்பாட்டையும் இதன் அவசியத்தையும் வெளிப்படுத்தி தொடர்ந்து இக்கோரிக்கையை வலுப்படுத்துவதில் பங்காற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்கள். தமிழ் பொது வேட்பாளர் விடயத்தின் முக்கியத்துவம் கருதி வேறு பல சமூக நலன் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் செயற்படும் அமைப்புகளும் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழ் பொதுவேட்பாளர் முன்னெடுப்புக்கு யாழ். வணிகர் கழகமும் ஆதரவு ! | Virakesari.lk
-
பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 04:10 PM தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும், அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு அவ்வாறு தெரிவித்தார். தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரியமானதும், தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளனர். தமிழ் தேசிய பரப்பிலேயே கார்த்திகைப் பூ குறித்த ஒரு காலத்தில் மாத்திரம் பூக்கின்ற தனித்துவமான மலர் என்பதை கருத்தில் கொள்ளாது குறித்த நிறுவனம் கால்களுக்கு அணியும் பாதனைகளில் அதனைப் பதித்து தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தியுள்ளது. குறித்த விடயமானது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே பார்க்கிறேன். குறித்த நிறுவனம் விற்பனைக்கு விட்டுள்ள பாதணிகளை மீள பெற வேண்டும். அத்துடன் அது தொடர்பாக தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்தார். பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன் | Virakesari.lk
-
பொது வேட்பாளர் என்பது தமிழர் மத்தியில் ஒரு மாயை - மோகன்
28 MAY, 2024 | 04:28 PM பொது வேட்பாளர் என்பது தமிழர் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துகின்ற விடயம். ஜனாதிபதித் தேர்தலிலே தமிழர்கள் கடந்த காலத்தில் தமது விரல்களைச் சுட்டுக் கொன்றதை மறக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன். என ரணில் 2024 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டமும் கலாசார நிலையாட்டு விழாவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இந்நிலையில் தேர்தலை மையமாக வைத்து அபிவிருத்திகள் நடைபெறுகின்றது எனும் கருத்துக்கள் எதிர்க் கட்சிகளினது தாங்க முடியாத அவர்களின் மனச் சஞ்சலமாகும். ஏனெனில் தற்போது திறக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைகள் அனைத்தும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட வேலைகளாகும். எனவே தேர்தலை மையமாக வைத்துக் கொண்டு அபிவிருத்திகள் நடைபெறுகின்றதென்பது ஏற்க முடியாத கருத்தாகும். தமிழர்களை வாக்களிக்க விட்டிருந்தால் நிட்சயமாக தமிழர்களின் தலைவிதி மாறியிருக்கும். தற்போது எங்களுக்கு நாங்களே சூனியம் செய்து கொண்டு நாம் சகலதையும் இழந்து கொண்டிருக்கின்றோம். அதேபோன்றதொரு நிலையை தமிழர்கள் மீண்டும் ஏற்படுத்தி விடக் கூடாது என நான் கருதுகின்றேன். ஏனெனில் நடைபெற்ற ஜனாதிபதித் தெரிவிலே தமிழ் தரப்பு எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்து. அந்த எதிர்ப்பின் வெளிப்பாடுகளை நாங்கள் தற்போது மறைமுகமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். தற்போதைய ஜனாதிபதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்திருந்தால் மாவட்ட அபிவிருத்திக்குழு, வடக்கு, கிழக்கு மாகாண சபை அனைத்தும் சரியான முறையிலே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். ஊழல்கள் திருட்டுக்கள் சர்வாதிகாரங்கள் நிறைந்திருக்காது என்பது எனது கருத்தாகும். எனவே தமிழ் தரப்பு இதுபோன்ற தவறுகளை இனிமேலும் செய்யக்கூடாது, சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி ஜனாதிபதித் தேர்தலிலே ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கையாகும். எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையே உள்ள பரீட்சையமான உறவை வைத்துக் கொண்டு ரணில் 2024 செயலணியின் தலைமைப் பெறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்மால் முடிந்த அபிவிருத்திகளை அதிகளவு செய்து கொண்டிருக்கின்றோம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார். பொது வேட்பாளர் என்பது தமிழர் மத்தியில் ஒரு மாயை - மோகன் | Virakesari.lk
-
தமிழ்த்தேசிய இனம் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் - சிறீதரன்
Published By: DIGITAL DESK 7 28 MAY, 2024 | 05:16 PM தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், இறுதிப்போரில் இலங்கை அரசாங்கம் எமது மக்களை ஆயுத முனையிலும் பட்டினியாலும் இனப்படுகொலை செய்த போது கஞ்சிக்காக வரிசையில் நின்றோம் அதனை எமது தற்கால சமூகத்திற்கு நினைவு படுத்தும் முகமாக சிரட்டையில் கஞ்சி காய்ச்சி தன்னெழுர்ச்சியாக மக்கள் வழங்கியபோது பொலிஸார் கதற கதற கைது செய்தனர். பல்கலைக்கழக மாணவர்கள் கஞ்சி காய்ச்சும் போதும் அதனை சப்பாத்து கால்களினால் தட்டி ஊத்தினர்.கேட்டால் கஞ்சிக்கு சுகாதாரம் இல்லை என்று அதனையும் கடந்து கடந்த 23மற்றும் 24ம் திகதிகளை பார்க்கும் போது தன்சல என்ற போர்வையில் இராணுவமும் அவர்களுடன் சேர்ந்த ஒட்டுக்குழுக்களும் எந்த சுகாதார முறையும் அற்று மிக மோசமாக செய்திருந்தனர். 2009ற்கு பின்பு இவ்வாறு வலிந்து திணிக்கப்படுகிறது. தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அவர்களுக்கே உரித்தான மொழி ,வணக்க பண்பாட்டு முறைகள் உள்ளன. சிங்கள அடையாளங்களையும் சிங்கள பண்பாட்டு முறைகளையும் இலங்கை அரசு இங்குள்ள படைகள் மூலம் திணிக்க முயல்கிறது. அதனை இந்த முறை வெளிப்படையாக செய்தது. இவ்வாறு செய்த நிலையில் எமது மக்கள் தங்களை மறந்து செயற்பட்டது. மன வேதனை தருகிறது. கிளிநொச்சி, யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பு பகுதியில் மக்கள் வேடிக்கை பார்த்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எமது கஞ்சிப்பாணைக்கும் கஞ்சிக்கும் நடந்த அடாவடியை மறந்து வரிசையில் மக்கள் நிற்கின்ற போது அந்த நிகழ்வை பார்க்கும் போது எமது இனத்திற்கு இதுவும் ஒரு சாபக்கேடு நாம் போராடுகின்ற இனமாக இருந்தால் சில விடயங்களை எதிர்க்க வேண்டும். கறுப்பின மக்கள் தென்னாபிரிக்காவில் வெள்ளையர்களுக்காகவே போராடும் போது ஒரு பேருந்தில் ஒரு பெண்ணை வெள்ளையர்கள் தள்ளி வீழ்த்திய போது ஒட்டுமொத்த வெள்ளையர்களும் வெள்ளையர்கள் பயன்படுத்தும் போக்குவரத்தை தடுத்தனர்.நாங்களும் சில விடயங்களை போராட்டம் மற்றும் செயற்பாடுகள் மூலம் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சிறிதரன், கேள்வி -பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சி மெளனம் காக்கிறது. தமிழரசுக்கட்சி மெளனம் காக்கவில்லை நான் உட்பட பலர் வெளிப்படையாக பேசியிருக்கிறோம் எமது கட்சிக்குள் இரு நிலைப்பாடுகள் உள்ளன. மத்திய குழுவிலும் கலந்துரையாடியிருக்கின்றோம் முடிவு எட்டப்படவில்லை. இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை அறிவித்தாலும் முடிவு எடுக்கப்படும். எந்தவொரு வேட்பாளராக இருந்தாலும் 2002ம் ஆண்டு ஒஸ்லோவில் எடுக்கப்பட்ட சமஷ்டி முடிவை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆதரித்திருந்தார்.அதனை இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் அவரும் ஏனைய வேட்பாளரும் முன்வைக்கட்டும் அது வரை எமது இனத்திற்கு நடந்த அநீதிக்கு நீதியை வேண்டி தெளிவாக சொல்வதற்கு பொது வேட்பாளரை கொள்கைக்காக களம் இறக்க வேண்டும். கேள்வி -ஜனாதிபதியின் வடக்கு விடயத்தில் நீங்க மாத்திரம் கலந்து கொள்ளவில்லை கிளிநொச்சி வைத்தியசாலையில் குறித்த கட்டிடம் ஆரம்பிக்கப்படுகின்ற போது அத்திவாரம் வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டேன் அந்த படத்தை வைத்து பல அரசியல் கட்சிகள் தமது இயலாமையை வெளிப்படுத்தியிருந்தனர்.தேர்தல் வருகின்ற போது தேர்தல் பரப்புரையாக ரணில் விக்கிரமசிங்க வைத்திருப்பதான குற்றச்சாட்டும் உண்டு. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு தெளிவாக முன் வைக்கவில்லை விக்கினேஸ்வரனை சந்திக்கும் போதும் நையாண்டி பதிலையே முன் வைத்தார் வேலை வாய்ப்பு ஏன்றால் போதும் என்று இங்குள்ளவர்களுக்கு எனவும் தெரிவித்தார் தமிழ்த்தேசிய இனம் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் - சிறீதரன் | Virakesari.lk
-
திருநெல்வேலியில் உணவகம் ஒன்றின் சோற்று பொதியில் மட்டைத்தேள் - உணவகம் சீல் வைப்பு
Published By: VISHNU 28 MAY, 2024 | 07:22 PM கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பொதியில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது. இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகம், திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் எவையும் பின்பற்றாமல் சுகாதார சீர் கேட்டுடன் உணவகம் இயங்கிவருவது அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றையதினம் திங்கட்கிழமை (27) கடை உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000/= தண்டம் அறவிட்டதுடன் கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு கட்டளை வழங்கினார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் குறித்த உணவகம் இன்றைய தினம் சீல் வைத்து மூடப்பட்டது. திருநெல்வேலியில் உணவகம் ஒன்றின் சோற்று பொதியில் மட்டைத்தேள் - உணவகம் சீல் வைப்பு | Virakesari.lk
-
விக்னேஸ்வரனின் வீட்டில் ரணில் இரகசிய கலந்துரையாடல்!
விக்னேஸ்வரனின் வீட்டில் ரணில் இரகசிய கலந்துரையாடல்! (இனியபாரதி) நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் வீடு தேடிச் சென்று, அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க (25)இன்று மாலை சந்தித்தார். இதன்போது எதிர்வரும் அரச தலைவர் தேர்தல் தொடர்பில் அவருடன் ஆராய்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ப) விக்னேஸ்வரனின் வீட்டில் ரணில் இரகசிய கலந்துரையாடல்! (newuthayan.com)
-
இந்துக்களை படுகொலை செய்வதற்காகவே 4 இலங்கையர்கள் இந்தியா சென்றுள்ளனர் - வீரசேகர
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும், இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக நான்கு இலங்கையர்கள் கடந்த 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். குறுகிய காலத்தில் இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும். இல்லையேல் இலங்கையிலும் எதிர்காலத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை போன்ற அடிப்படைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டு மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை கண்டுப்பிடிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகிறார்கள். குண்டுத்தாக்குதல் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் நிறைவுப் பெற்றுள்ளன. நீதிமன்றத்துக்கும் அறிக்கை செய்யப்பட்டுள்ளன. குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதான சூத்திரதாரியை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஒருபுறம் குறிப்பிட்டுக் கொண்டு மறுபுறம் புலனாய்வு பிரிவினரை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். குண்டுத்தாக்குதல் தொடர்பில் சகல தகவல்கள் கிடைத்திருந்தும் எவ்வித நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காக பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை. குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முன்னர் பயங்கரவாதி சஹ்ரானின் தரப்பினர் கிழக்கு மாகாணத்தில் 10 அடிப்படைவாத செயற்பாடுகளிலும்,குண்டுத்தாக்குதல் ஒத்திகைகளிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஒத்திகையின் போது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஹ்ரானின் சகாக்களை பார்வையிடுவதற்கு ஒருசில அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்கும் சென்றிருந்தார்கள். இதன்போது எழுந்து கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இந்தியாவில் தாக்குதல்களை நடத்த இவர்கள் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.ஆகவே அடிப்படைவாத செயற்பாடுகள் குறித்து மீண்டும் அச்சம் எழுந்துள்ளது.இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ற என்று கேள்வியெழுப்பினார். இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.மொஹமட் நுஸ்ரத், மொஹமட் நஃப்ரான்,மொஹமட் ரஸ்தீன் ,மொஹமட் ஃபரிஷ் ஆகிய நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் அகமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் உறுப்பினர்களாவர்.இவர்கள் இந்த மாதம் 18 ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றுள்ளார்கள். இவர்கள் 4 இலட்சம் ரூபாவுக்காக தாக்குதல்களை நடத்த சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களையும் , இந்துக்களையும் படுகொலை செய்வதற்காக இவர்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளதாகவும் 3 அல்லது நான்கு மாதங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பின் அடிப்படைவாத கொள்கைகளுக்கு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுக்கள் அறிக்கைகளை சமர்ப்பித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளன.ஒருசில இஸ்லாமிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மதரஸா பாடசாலைகள் பற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.ஆனால் அரசாங்கம் முழுமையாக பரிந்துரைகளை செயற்படுத்தவில்லை.ஆகவே பரிந்துரைகளை அலட்சியப்படுத்தாமல் செயற்படுத்த வேண்டும் இல்லையேல் இலங்கையில் மீண்டும் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற அடிப்படைவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்றார். இந்துக்களை படுகொலை செய்வதற்காகவே 4 இலங்கையர்கள் இந்தியா சென்றுள்ளனர் - வீரசேகர | Virakesari.lk
-
இலங்கையில் பின்னடைவான நிலையில் சிறுபான்மையினரின் மத சுதந்திரம் - சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டு
இலங்கையில் பின்னடைவான நிலையில் சிறுபான்மையினரின் மத சுதந்திரம் - சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டு Published By: VISHNU 23 MAY, 2024 | 01:00 AM (நா.தனுஜா) இலங்கையில் மத சுதந்திரம் என்பது கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுவதாகவும், மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத ரீதியிலான நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவினால் இலங்கையில் மதசுதந்திரம் மீதான சவால்கள் தொடர்பில் அண்மையில் நிகழ்நிலை முறைமையிலான கருத்துக்கோரல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச மதசுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் பிரதி தவிசாளர் பிரெடெரிக் ஏ.டேவி, ஆணையாளர்களான டேவிட் ஹரி மற்றும் ஸ்டீபன் ஸ்னெக் ஆகிய மூவரடங்கிய குழாம் இதற்குத் தலைமைதாங்கியது. அதன்படி இலங்கையின் மதசுதந்திர நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்குழாமில் உள்ளடங்கும் பிரதிநிதிகள், 'போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் இலங்கை அதன் இன, மத வன்முறை வரலாற்றுடனான சமரசத்தைத் தொடர்கின்றது. இலங்கையில் மத சுதந்திரம் தொடர்பான நிலைவரம் கரிசனைக்குரிய மட்டத்திலேயே காணப்படுகின்றது. குறிப்பாக தமிழ் கத்தோலிக்கர்கள், தமிழ் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன மத ரீதியிலான அமைதியின்மையைத் தீவிரப்படுத்தியுள்ளன. பயங்கரவாத்தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் மற்றும் நிகழ்நிலைக்காப்பு சட்டம் என்பன உள்ளடங்கலாக மத சிறுபான்மையினரை இலக்குவைக்கக்கூடியவாறான பல்வேறு கொள்கைகள் இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள கோயில்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மதவழிபாட்டுத்தலங்களை அபகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தீவிர அமைதியின்மையைத் தோற்றுவித்துள்ளன' எனச் சுட்டிக்காட்டினர். அத்தோடு தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரசாங்கத்தின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மத சுதந்திர செயற்பாட்டாளர்கள், இன-மத சமூகக்குழுக்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரை சந்தித்துக் கலந்துரையாடியதாகவும், அவற்றை அடிப்படையாகக்கொண்டு மத சுதந்திரத்தைப் பொறுத்தமட்டில் இலங்கையை விசேட கண்காணிப்புக்கு உட்படுத்தவேண்டிய பட்டியலில் வைக்கவேண்டுமெனப் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்துக்குப் பரிந்துரைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து இக்கருத்துக்கோரலில் மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் (பேர்ள்) நிறைவேற்றுப்பணிப்பாளர் மதுரா ராசரத்னம், இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேச (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் மத சுதந்திர ஆணைக்குழுவின் தலைவர் மைக் கேப்ரியல், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் இணை ஸ்தாபகர் ஷ்ரீன் ஸரூர் மற்றும் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன் ஆகியோர் பங்கேற்று சாட்சியம் அளித்தனர். இலங்கையின் மத சுதந்திர நிலைவரம் தொடர்பில் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு: ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இலங்கையின் மனித உரிமைகள் சட்டத்தரணியும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தவருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, முல்லைத்தீவு, குருந்தூர்மலை விவகாரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல எனவும், மாறாக தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான பிரச்சினை எனவும் சுட்டிக்காட்டினார். அதேவேளை கடந்த 2016 ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தினால் கலகொட அத்தே ஞானசாரருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை நினைவுகூர்ந்த அவர், சிறுபான்மை மதத்தை அவமதித்தமைக்காக பௌத்த தேரர் ஒருவருக்கு இத்தகைய தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை எனத் தெரிவித்தார். இருப்பினும் ஞானசார தேரரினால் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவந்த நடவடிக்கைகளையும், அவற்றுக்கு ஊடகங்கள் வழங்கிய முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய ஹிஜாஸ், இருப்பினும் ஞானசாரர் நீண்டகாலமாக கைதுசெய்யப்படவில்லை எனவும் விசனம் வெளியிட்டார். முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதமாக பயங்கரவாதத்தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் என்பன பயன்படுத்தப்பட்டமை குறித்தும், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம்களின் மத சுதந்திரம் வெகுவாக ஒடுக்கப்பட்டமை குறித்தும் விரிவாக விளக்கமளித்த அவர், தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமும் மத சுதந்திரத்தை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தக்கூடும் என சந்தேகம் வெளியிட்டார். மதுரா ராசரத்னம் 'இலங்கை அரசியலமைப்பின் ஊடாக சகல மதங்களுக்குமான சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும், அதில் பௌத்த மதத்துக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே முதலிடம் அளிக்கப்பட்டுள்ள பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காக அரச கட்டமைப்புக்கள் தமிழ் இந்துக்கள், தமிழ் கிறிஸ்தவர்கள், சிங்கள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மத, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை மிகத்தீவிரமாக ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தன. இந்நடவடிக்கைகளே மூன்று தசாப்தகால யுத்தத்துக்குத் தூண்டுதலாக அமைந்தன. யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர்கள் வாழும் வட, கிழக்கு மாகாணங்களை அரச அனுசரணையுடன் சிங்கள, பௌத்தமயமாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன' என இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் மதுரா ராசரத்னம் சுட்டிக்காட்டினார். மைக் கேப்ரியல் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேச (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் மத சுதந்திர ஆணைக்குழுவின் தலைவர் மைக் கேப்ரியல் இலங்கையில் கிறிஸ்தவ சமூகம் முகங்கொடுத்துவரும் மதரீதியான ஒடுக்குமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார். '2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் வன்முறை சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன. இருப்பினும் கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படாததைப்போன்று மேற்படி ஒடுக்குமுறைகளுடன் தொடர்புடையோரும் எவ்வித நடவடிக்கையுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். கத்தோலிக்க தேவாலயங்கள் பதிவுசெய்யப்படவேண்டும் எனவும், அன்றேல் வழிபாட்டு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படவேண்டும் எனவும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன' என அவர் தெரிவித்தார். அலன் கீனன் 'அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதான அழுத்தங்கள் அண்மையகாலங்களில் வெகுவாக அதிகரித்துவருகின்றன' எனக் குறிப்பிட்ட சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன், வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் மற்றும் முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரம் ஆகிய இரண்டையும் அண்மையகால உதாரணங்களாக சுட்டிக்காட்டினார். இலங்கையில் பின்னடைவான நிலையில் சிறுபான்மையினரின் மத சுதந்திரம் - சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டு | Virakesari.lk
-
சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்த வட்டுவாகல் பாலத்தை நினைவுகூர்ந்தார் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்
சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்த வட்டுவாகல் பாலத்தை நினைவுகூர்ந்தார் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்; காணாமல்போனோரின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் விசனம் 23 MAY, 2024 | 02:05 AM (நா.தனுஜா) இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும், இதன்போது காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகர் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த சனிக்கிழமையுடன் 15 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், முதன்முறையாக தெற்காசியப்பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தார். இவ்விஜயத்தின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட அவர், பல்வேறு முக்கிய தரப்பினருடன் விரிவான சந்திப்புக்களையும் நடத்தியிருந்தார். அதன்படி முள்ளிவாய்க்கால் விஜயத்தின்போது வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை 'வட்டுவாகல் பாலம்' எனும் மேற்கோளுடன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், '15 வருடங்களுக்கு முன்னர் வட, கிழக்கில் விடுதலைப்புலிகளால் கையகப்படுத்தப்பட்டிருந்த பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் இப்பாலத்தைக் கடந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது இந்த நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்' எனக் குறிப்பிட்டுள்ளார். 'இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மிகக்குறுகியதொரு பகுதிக்குள் சுமார் 300,000 தமிழர்கள் அடைபட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருப்பதுடன், போர் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதற்கு முன்னைய சில மாதங்களில் சுமார் 40,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது' எனவும் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை எனவும், அவர்களே வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோர் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் 6 மாதமேயான குழந்தை உட்பட பல குழந்தைகளும், சிறுவர்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். 'இந்த 30 வருடகால யுத்தத்தில் இருதரப்பினரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத , வலிந்து காணாமலாக்குதல்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களைப் புரிந்துள்ளனர். இவற்றால் சுமார் 100,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என குறைந்தபட்சம் 60,000 பேர் காணாமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்' எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்த வட்டுவாகல் பாலத்தை நினைவுகூர்ந்தார் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்; காணாமல்போனோரின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் விசனம் | Virakesari.lk
-
உலக பொருளாதார பேரவை வெளியிட்ட சுற்றுலா தரவரிசையில் இலங்கைக்கு 76 வது இடம்
23 MAY, 2024 | 11:39 AM உலக பொருளாதார பேரவை ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலாசெயல்பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 76 ஆவது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, இலங்கை சுற்றுலா சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு, கலாச்சார வளங்கள் மற்றும் பொழுதுபோக்கு அல்லாத செயற்பாடுகள் பிரிவுகளில் மோசமான மதிப்பெண் பெற்றுள்ளது, அதே நேரத்தில் போட்டித்தன்மை மிக்க விலை மற்றும் பயணம், சுற்றுலா சமூக பொருளாதார தாக்கம் ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் பட்டியலில் 2021 ஆம் ஆண்டு 74-வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 119 நாடுகளில் தரவரிசையில் 76 ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இலங்கை 77 ஆவது இடத்தை பிடித்திருந்தது. இதேவேளை, இலங்கையின் போட்டியாளர்களான வியட்நாம் (59வது), தாய்லாந்து (47வது), இந்தோனேசியா (22வது) மற்றும் மலேசியா (35வது) ஆகியவை சுட்டெண்ணில் இலங்கைக்கு மேலே தரவரிசையில் உள்ளன. மேலும், தெற்காசியாவில் இந்தியா (39வது) முதலிடத்திலும், இலங்கை இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. உலக பொருளாதார பேரவை வெளியிட்ட சுற்றுலா தரவரிசையில் இலங்கைக்கு 76 வது இடம் | Virakesari.lk
-
திருகோணமலையில் கார் விபத்து : மகள் பலி, மகன் காயம், தாயும் தந்தையும் உயிர் தப்பினர்
23 MAY, 2024 | 03:17 PM திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவன் பகுதியில் இன்று வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுமியின் சகோதரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்துச் சம்பவத்தில் நிதர்சன் ஆதித்யா (வயது 6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாகவும், சிறுமியின் சகோதரனான நிதர்சன் அதிரேஸ் (வயது 4) படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையில் குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். திருகோணமலையில் கார் விபத்து : மகள் பலி, மகன் காயம், தாயும் தந்தையும் உயிர் தப்பினர் | Virakesari.lk
-
மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு கோரிக்கை
23 MAY, 2024 | 02:50 PM வட மாகாணத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் மாங்குளம் ஆதரவைத்தியசாலை வளாகத்தை அண்டிய பகுதியிலே அமைக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட இருக்கின்றது. எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தந்து இந்த வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ளார். இந்நிலையில், வைத்தியசாலை முன்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற பெயர் பலகையில் மாங்குளம் என்பது தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனை மாற்றுமாறு பல தடவைகள் உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இன்றுவரை அது மாற்றப்படவில்லை. எனவே, திறப்பு விழாக்கு முன்னதாக தமிழ் மொழியினை சரி செய்து பெயர்ப் பலகையினை மாற்றி திறப்பு விழாவினை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் தமிழ் எழுத்து பிழையை திருத்துமாறு கோரிக்கை | Virakesari.lk
-
கிளிநொச்சியில் சகோதரியின் காதலனால் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் - சந்தேக நபர் தலைமறைவு
23 MAY, 2024 | 05:04 PM கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் தனது சகோதரியின் காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த தகவல் பொலீஸாருக்கு பரிமாறப்பட்டு கிளிநொச்சி பொலீஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது. கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி சகோதரியின் காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்படடுள்ளதாகவும் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் குறித்த நபர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கிளிநொச்சியில் சகோதரியின் காதலனால் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் - சந்தேக நபர் தலைமறைவு | Virakesari.lk
-
படையினர் அக்கிரமங்களில் ஈடுபட்டதை தொடர்ந்தும் மறுக்கின்றது இலங்கை - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்
படையினர் அக்கிரமங்களில் ஈடுபட்டதை தொடர்ந்தும் மறுக்கின்றது இலங்கை - பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு செப்டம்பரில் மீண்டும் மனித உரிமை பேரவை ஆணைவழங்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் Published By: RAJEEBAN 23 MAY, 2024 | 04:32 PM இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்துவைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மே 18ம் திகதி 2009இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச விசாரணைகள் மற்றும் ஏனைய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என மே 17ம் திகதி ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் இதன் காரணமாக உண்மை நீதி இழப்பீடு போன்றவற்றை வழங்குவதற்கு பதில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகத்தினரையும் மௌனமாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ளார். பாதிக்கப்ட்ட மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கும் துஸ்பிரயோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் மேலும் சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் என்பது புலனாகின்றதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார். மே 18ம் திகதி நினைவேந்தல் தினத்திற்கு முன்னர் வடக்குகிழக்கில்நினைவேந்தல் நிகழ்வுகளை இலங்கை பொலிஸார் குழப்ப முயன்றனர் யுத்தத்தின்போது நிலவிய பட்டினி நிலையை குறிக்கும் விதத்தில் வழங்கப்படும் கஞ்சியை தயாரித்து வழங்கியமைக்காக நால்வரை கைதுசெய்து ஒருவாரம் தடுத்துவைத்திருந்தனர் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. காணாமல்போனவர்களின் உறவினர்கள் சிலரும் ஏனையவர்களும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதை தடை செய்யும் விதத்தில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்தனர் என சர்வதேச மனித உரிமைகள்கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் பொலிஸார் தலையிட்டு நிகழ்வுகளை தடுத்தனர் அல்லது மக்கள் அங்கு செல்வதை தடுத்தனர் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படி வலிந்து காணாமலாக்கப்பட்டமை இலங்கையில் இடம்பெற்றது என்பதையும் அதன் அளவையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் உடனடி நம்பகதன்மைமிக்க விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்,பாரியமனித புதைகுழிகளை தோண்டுவதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும்,எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை அரசாங்கம் ஒரு சுதந்திரமான வழக்குரைஞர் அதிகாரத்தை ஏற்படுத்த வேண்டும் பயங்கரவாததடைச்சட்டம் உட்பட துஸ்பிரயோகங்களிற்கு வழிவகுக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள் ஐக்கியநாடுகள் அமைப்புகள் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களிற்கு கடும் வேதனையைதுன்பத்தை ஏற்படுத்தும் வலிந்து காணாமலாக்கப்பட்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் மேலும் இது நாட்டில் மேலும் துஸ்பிரயோகங்கள் நிகழும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கான ஆணையை செப்டம்பர் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை புதுப்பிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் அந்த குற்றங்களிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள வழக்குரைஞர்கள் இந்த ஆதாரங்களை பயன்படுத்துவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். படையினர் அக்கிரமங்களில் ஈடுபட்டதை தொடர்ந்தும் மறுக்கின்றது இலங்கை - பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கு செப்டம்பரில் மீண்டும் மனித உரிமை பேரவை ஆணைவழங்கவேண்டும் - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் | Virakesari.lk
-
மன்னார் வங்காலையில் நிலப்பரப்பிற்குள் உட்புகுந்த கடல் : அச்சத்தில் கிராம மக்கள் !
மன்னாரில் கடல் அரிப்பால் இயற்கை அனர்த்த அபாயத்தை எதிர்கொள்ளும் வங்காலை கிராமம் 23 MAY, 2024 | 05:48 PM மன்னார் மாவட்டத்தில் தென் கடலுக்கு அருகாமையில் காணப்படும் வங்காலை கிராமத்துக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் படகுகளையும் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மீன்வாடிகளில் காணப்படும் கடற்றொழில் உபகரணங்களையும் பாதுகாப்பான இடங்களில் வைக்கும் செயற்பாட்டில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் சீரற்ற காலநிலையால் புதன்கிழமை (22) மன்னாரிலும் கடல்சார் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. வங்காலை கிராமத்தை அண்டிய தென் கடல் திடீரென வங்காலை கடற்றொழிலாளர்களின் முக்கிய பிரதான பாதையை மேவி கிராமத்தை நோக்கி கடல் நீர் உட்புகத் தொடங்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடருமானால் அப்பகுதியில் கடல் அரிப்பால் பெரும் ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் கடல்நீர் கிராமத்துக்குள் புகாதிருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அக்கிராமத்து மக்களால் நீண்ட காலமாக உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடல் அரிப்பு தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டுச் செல்வதாகவும் அபாயத்தை எதிர்நோக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர். நீண்ட கால பயன்பாட்டில் உள்ள மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் நேற்று புதன்கிழமை (22) முதல் மறு அறிவித்தல் வரை பணிக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், தற்போது பயன்பாட்டில் உள்ள நீண்டகால மீன்பிடி படகுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஊடாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மன்னாரில் கடல் அரிப்பால் இயற்கை அனர்த்த அபாயத்தை எதிர்கொள்ளும் வங்காலை கிராமம் | Virakesari.lk
-
மன்னாரில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக சுவீகரிக்கும் கம்பெனிகள்: பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை சந்தித்தார் சுமந்திரன்
23 MAY, 2024 | 06:15 PM மன்னார் தீவக பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான காணிகளை தொடர்ச்சியாக சில காணி இடைத்தரகர்கள் ஊடாக சில தனியார் கம்பெனிகள் சட்ட விரோதமாக சுவீகரிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக கலந்தாலோசிக்கும் முகமாக மன்னார் மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் பாதிக்கப்பட்ட தனியார் காணி உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை (23) மன்னார் மெசிடோ அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மன்னார் நடுக்குடா, கொன்னையன் குடியிருப்பு போன்ற பகுதிகளில் பாரம்பரியமாக தாங்கள் வசித்துவரும் காணிகளை தனியார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக வேலிகள் அடைத்து கையகப்படுத்துவதாகவும், இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தனியார் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தனியார் காணி ஒன்றை கொள்வனவு செய்யும் சில நிறுவனங்கள், அந்த காணிகளை மாத்திரமின்றி அதை சூழவுள்ள காணிகளையும் சுவீகரிப்பதாகவும் கூறியுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக எடுக்கவேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றி தனியார் காணி உரிமையாளர்களுக்கு சட்டத்தரணி சுமந்திரனால் தெளிவுபடுத்தப்பட்டதுடன், இந்த பிரச்சினை தொடர்பாக வழக்கு தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை தயாரிப்பது தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது. அதேவேளை இம்மாதம் சட்ட விரோதமாக காணி சுவீகரிப்பில் ஈடுபட்ட நிறுவனத்துக்கு எதிராக முதல் கட்டமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தனியாருக்கு சொந்தமான காணிகள் தனி நபர்களாலும் சில நிறுவனங்களாலும் அபகரிக்கப்பட்டு, கனிய மணல் அகழ்வுக்கு வழங்குவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மன்னாரில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக சுவீகரிக்கும் கம்பெனிகள் : பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை சந்தித்தார் சுமந்திரன் | Virakesari.lk
-
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை வெடிபொருள்கள் இருக்கின்றன என்று காரணம் கூறுகின்றது இராணுவம் (புதியவன்) வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குள் வெடிபொருள்கள் இருக்கின்றன என்று தெரிவித்து அந்தப் பகுதிகளுக்குச் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த மார்ச் 22ஆம் திகதி வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய கிராமங்களான ஜே/244,245,252, 253, 254 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து 234 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டது. நில உரிமையாளர்களும் அழைக்கப்பட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இருந்தபோதும் அந்த நிலங்களுக்கான பாதை விடுவிக்கப்படவில்லை. இராணுவ முட்கம்பி வேலிகளும் அகற்றப்படவில்லை. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலங்களை உரிமையாளர்கள் இராணுவச் சோதனைச் சாவடி ஊடாக 5 கிலோ மீற்றர் தூரம் கால்நடையாகப் பயணித்தே பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்த விடயத்தை நிலங்களின் உரிமையாளர்கள் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதனால் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குப் பாதை திறக்கப்பட்ட போதும் முட்கம்பி வேலிகள் அகற்றப்படாமலேயே காணப்பட்டன. முட்கம்பிகள் அகற்றப்படாதமை மற்றும் ஏதேனும் காரணத்தைக் கூறி விடுவிப்புச் செய்ததாகக் கூறப்படும் நிலங்களைப் படையினர் மீள ஆக்கிரமிக்கக்கூடும் என்று அஞ்சுவதாக அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்கத் தூதுவரிடம் நிலங்களின் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். தற்போது விடுவிக்கப்பட்ட 234 ஏக்கர் நிலங்களில் 55 ஆயிரம் சதுர அடி நிலங்களில் வெடிபொருள்கள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டு அந்தப் பகுதிகளுக்குள் நில உரிமையாளர்கள் பயணிக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.(ஏ) வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை (newuthayan.com)
-
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்!
Published By: DIGITAL DESK 3 22 MAY, 2024 | 04:12 PM மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரே சூழில் பிறந்த நான்கு குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்ற தாயே இந்த குழந்தைகளை கடந்த ஏப்பிரல் மாதம் 5 ஆம் திகதி பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை (22) காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சினி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன், குழந்தை நல வைத்திய நிபுணர் மதன் ஆகியோர் இங்கு கருத்து தெரிவித்தனர். இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு ஒரே சூழில் நான்கு குழந்தைகள் பிறக்கும் செயற்பாடானது 5 இலட்சத்து 70ஆயிரம் தாய்மார்களிலேயே இடம்பெறுவதாகவும் அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே அவ்வாறான விடயமும் சாத்தியமாக காணப்படும். இந்நிலையில், இயற்கையாக கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை இந்த தாய் பிரசவித்ததானது மருத்துவதுறையில் மிகவும் அரிதான விடயமாக பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார். பிறந்த நான்கு குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி தெரிவித்தார். இதேநேரம் தமது பிரசவத்திற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது தமக்கு சகல வழிகளிலும் உதவியவர்களுக்கு நான்கு பிள்ளைகளை பிரசவித்த தாயார் இதன்போது நன்றி தெரிவித்தார். ஒரே சூழில் பிறந்த 4 குழந்தைகளும் சுகதேக ஆரோக்கியத்துடன் உள்ளன - மட்டு. போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் | Virakesari.lk
-
மன்னார் வங்காலையில் நிலப்பரப்பிற்குள் உட்புகுந்த கடல் : அச்சத்தில் கிராம மக்கள் !
மன்னார் வங்காலையில் நிலப்பரப்பிற்குள் உட்புகுந்த கடல் : அச்சத்தில் கிராம மக்கள் ! 22 MAY, 2024 | 03:32 PM நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) மதியம் திடீரென கடல் நீர் உட்புகுந்துள்ளது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் இன்று (22) காலை மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் உட்புகுந்ததோடு, கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்துள்ளது. எனினும் படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். திடீரென கடல் நீர் உள்வாங்கப்பட்டமையினால் வங்காலை மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் வங்காலை பங்குத்தந்தை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று நிலமையை பார்வையிட்டதோடு, உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். மன்னார் வங்காலையில் நிலப்பரப்பிற்குள் உட்புகுந்த கடல் : அச்சத்தில் கிராம மக்கள் ! | Virakesari.lk
-
எனக்கு எதிராக கருத்தடை குற்றச்சாட்டுகளை முன்வைத்த தாய்மார்கள் தற்போது மன்னிப்பு கோருகின்றனர்- குருநாகல் மருத்துவர் ஷாபி சிகாப்தீன்
குருநாகல் வைத்தியசாலை மருத்துவர் ஷாபி சிகாப்தீன் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்திய தாய்மார்கள் தற்போது தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சில தாய்மார்கள்; போது தாங்கள் எனக்கு எதிராக முறைப்பாடு செய்தவர்கள் எனவும் தங்களை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் என தெரிவித்துள்ள அவர் சிசேரியன் சத்திரசிகிச்சையின் போதுஅவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர் என குறிப்பிட்டுள்ளார். தன்னை போதைப்பொருள்குற்றவாளி மாகந்துரே மதுசுடன் சிறையில் ஒன்றாக தடுத்துவைத்திருந்தனர் என வைத்தியர் ஷாபி சிகாப்தீன் தெரிவித்துள்ளார். நான் அவருடன் ஒன்றாக உணவை பகிர்ந்துகொண்டேன், அவருக்கு அருகில் உறங்கினேன் என தெரிவித்துள்ள வைத்தியர் வெள்ளை உடையணிந்த அரசியல்வாதிகளிடம் காணமுடியாத மனிதாபிமானத்தை அவரிடம் கண்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனது மருத்துவ தொழில்துறையை சார்ந்தவர்களே என்னை கைவிட்டனர் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அனுரத்த பாதெனிய அவர்களில் ஒருவர் எனவும் குறிப்பிட்டுள்ளார். எந்த தொழில்துறையிலும் தங்களின் நன்மைக்காக செயற்படும் நபர்கள் இருப்பார்கள் நேர்மையாக பேசுவதென்றால் இந்த பாதெனிய என்ற நபர் அந்தநேரத்தில் இலங்கை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்தலைவராக பணியாற்றியவர் இந்த விடயத்தில் இன்றுவரை மௌனமாக உள்ளார் எனவும் வைத்தியர் ஷாபி சிகாப்தீன் தெரிவித்துள்ளார். எனினும் வைத்தியர் பாதெனியவின் மனைவி இரண்டாவது தடவை கருத்தரித்த போது நானே பிரசவம் பார்த்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர்களை சமானியர்கள் தெய்வத்திற்கு ஒப்பிடுகின்றனர் ஆனால் அதே தொழில் என்னை பேய்களிடம் ஒப்படைக்க பயன்படுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ள வைத்தியர் ஷாபி சிகாப்தீன் இந்த மோசமான நினைவுகள் எங்களிற்கு தேவையில்லை நாங்கள் ஆன்மீக ரீதியில் வளமான இலங்கையை கட்டியெழுப்புவோம் எனவும் தெரிவித்துள்ளார். எனக்கு எதிராக கருத்தடை குற்றச்சாட்டுகளை முன்வைத்த தாய்மார்கள் தற்போது மன்னிப்பு கோருகின்றனர்- குருநாகல் மருத்துவர் ஷாபி சிகாப்தீன் | Virakesari.lk
-
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
22 MAY, 2024 | 08:07 PM நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் (21.05.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நயினாதீவு ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா எதிர்வரும் 2024.06.07 தொடக்கம் 2024.06.22 வரை நடைபெறவுள்ளதோடு அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் திருவிழாக் காலங்களில் வழமைபோல் யாழ் பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் வரையிலான இலங்கை போக்குவரத்து சேவை மற்றும் தனியார் பஸ் சேவைகளின் ஒருவழிக் கட்டணம் 187 ரூபா என தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை குறிகட்டுவானில் இருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 80 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நேரத்திற்கமைய தனியார் போக்குவரத்து மற்றும் இலங்கை போக்குவரத்து பேருந்து சேவை காலை 6.00 மணி தொடக்கம் மாலை 7.30 மணிவரையிலும் நடைபெறவுள்ளது. கடற்போக்குவரத்தில் ஈடுபடும் படகுகள்,படகுகளை உரியமுறையில் பேணுவதுடன் படகில் ஏற்றிச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துதல் மற்றும் பயணிகளுக்குரிய வசதிகள் இல்லாத படகுகளை சேவையில் ஈடுபடுவதை தவிர்த்தல் வேண்டும். ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள கள் விற்பனை நிலையம் திருவிழாக்காலத்தில் பூட்டப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் திருடர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்தலுடன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்த பிரதேச சபையினால் அடையாள அட்டைகள் வழங்கப்படுதல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது. அத்தோடு குறிக்கட்டுவான் வீதி குன்றும் குழியுமாக உள்ளமையினால் அதனை சீர்செய்வது தொடர்பாகவும், சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை, பொலிஸ் பாதுகாப்பு, கடற்போக்குவரத்தில் பாதுகாப்பு அங்கிகளை அணிவதை உறுதிப்படுத்தல், பாடசாலை மாணவர்களின் சாரணர் தொண்டர் சேவை, தரை மற்றும் கடற்போக்குவரத்து நேர அட்டவணையை காட்சிப்படுத்தல், மின்இணைப்பு, யாசகம் பெறுவோர் உள்வருவதை கட்டுப்படுத்தல், நடமாடும் வைத்திய சேவை, சுகாதாரம் மற்றும் குடிநீர் தேவை, மின்சாரத்தேவை, அமுதசுரபி அன்னதான ஒழுங்குகள், அம்புலன்ஸ் சேவை மற்றும் புனரமைக்கவேண்டிய வீதிகள் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, பிராந்திய வைத்திய அதிகாரி.திரு.கேதீஸ்வரன், அறங்காவலர் சபைத் தலைவர் (நாகபூசணி அம்மன் ஆலயம்) திரு.பரமலிங்கம் மற்றும் பிரதேச செயலாளர் (வேலணை), சுகாதாரத் துறைசார் பங்குதாரர்கள், இலங்கை போக்குவரத்து சபை உத்தியோகத்தர்கள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் தரப்பினர், பிரதேசசபை பங்குதாரர்கள், துறை சார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் | Virakesari.lk
-
நீர் வற்றியுள்ள விக்டோரியா நீர்த்தேக்கம்
நீர் வற்றியுள்ள விக்டோரியா நீர்த்தேக்கம் Published By: VISHNU 22 MAY, 2024 | 07:34 PM நாடு முழுவதும் கடும் மழைபெய்வதன் காரணமாக நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிந்தாலும், நீர் மின் உற்பத்திக்கு அதிக அளவில் நீர் வழங்கும் மிகப் பெரிய நீர்த்தேக்கமான விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வற்றிய நிலையின் காணப்படுகிறது. 22 ம் திகதி புதன்கிழமை பிற்பகல் எடுக்கப்பட்ட இப் படங்கள் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் எவ்வாறு வற்றியுள்ளது என்பத்தை காட்டியது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர் வற்றியுள்ளதன் காரணமாகப் பழைய தெல்தெனிய நகரின் சில பழைய பகுதிகளைக் காட்டுகிறது. கண்டி மாவட்டம் உள்ளிட்ட மத்திய மலையகப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்ற போதிலும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்போஷன பகுதிகளுக்கு போதிய மழை பெய்யாத காரணத்தினால் விக்டோரியா நீர்த்தேக்கம் வறண்டு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நீர் வற்றியுள்ள விக்டோரியா நீர்த்தேக்கம் | Virakesari.lk