Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வாலி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  3,777
 • Joined

 • Days Won

  10

Everything posted by வாலி

 1. சிறுமிக்கு பாராட்டுக்கள். வழக்குப் பதியாமல் விட்டது இந்தியக் காவல்துறை வரலாற்றில் செய்த முதல் நற்செயலாக இருக்கலாம்.
 2. நாம் அந்தக்காலத்தில விளையாடாத விளையாட்டுக்களே இல்லை எவடம் எவடம் புளியடி புளியடி 1,2,3 பம்பலப்பிட்டி கோழியும் பிராந்தும் பசுவும் புலியும் உருளைக்கிழங்குப் பிரட்டல் ஒரு குடம் தண்ணி வாத்து ஒரு பூ பூத்தது இதுகளோட டப்பாங் கொட்டை
 3. புருசனை கொல்ற அளவுக்கு கள்ளக் காதல் சுதி ஏத்தியிருக்கு.
 4. நாங்களும் திருவலை எண்டு சொல்றனாங்கள். ஆனால் செய்தி என்று எழுதுதும் போது மரூஉ சொற்கள் தவிர்க்கப்படல் வேண்டும். இப்பிடி சில சொற்கள் உண்டு: கருவப்பிலை, செந்துருக்கம், வாத்தி, பருத்துறை
 5. அது திருகுவலை இல்லை துருவுபலகை. தமிழை அரைகுறை செய்தியாளர் மற்றும் இணையத்தளங்களில் இருந்து ஆண்டவா நீதான் காப்பாற்ற வேண்டும்.
 6. இந்த லொகான் ஒரு பெரிய விபசார வலையமைப்பை வைத்திருக்கின்றார். இலங்கையின் முன்னாள் மாடல் அழகி மிசைல் என்னும் பெண் இவரின் மூலம் பெற்ற வாடிக்கையாளருக்கு இவர் தலையீடு இல்லாமல் தொடர்ந்தும் சேவைசெய்ததை கண்டுபிடித்து அந்த பெண் மீது அசிட் வீசி அழகை குலையச் செய்தவர். இவர் இலங்கை அழகிகளை வெளிநாட்டுக் கணவான்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடுசெய்யும் புரோக்கர்.
 7. நீட் நல்லதோ கெட்டதோ எனக்குத் தெரியாது. எனக்கு விளங்கியவரையில் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் அதிகம். இந்த மருத்துவக் கல்லூரிகளுக்குள் தமிழகம் அல்லாத மற்ற மாநிலத்துக்காரரை புகுத்துவதற்கான தேர்வுதான் நீட் என நினைக்கின்றேன். அதனால் மற்ற மாநிலத்துக்காரர்கள் இதை எதிர்க்க மாட்டார்கள் மாறாக வரவேற்பார்கள். கிட்டத்தட்ட எங்கட தரப்படுத்தல் மாதிரி என எண்ணுகின்றேன்.
 8. மலர் டீச்சர் இன்பேர்சன் கிளாசும் குடுக்கிறவவவா?
 9. தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து தமிழ் பேசிவரும் தெலுங்கர்களை மலையாளிகளை கன்னடர்களை நாங்கள் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த அடையாளத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் ஆயத்தமாக இல்லை. இவர்கள் தங்களை ஒருபோதும் தமிழர் என்ற அடையாளத்துக்குள் வர ஆயத்தமாக இல்லை. தமிழகத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வருவதால் தம் மொழிவாரி மாநிலங்களுக்குச் செல்லப்போவதும் இல்லை. தமிழகத்தை தங்கள் ஆட்சிக்குள் வைதிருப்பதற்கு திராவிடம் என்ற சொல் அவர்களுக்குத் தேவை. தமிழ் தான் திராவிடம் என்று வடமொழியில் சொல்லப்பட்டது என்றால் அதை தமிழ் என்றே சொல்லிவிட்டுப்போவதில் என்ன சிக்கல் இருக்கின்றது? அது நிற்க ஒரு நல்ல சித்தாந்தத்துக்கு திராவிடச் சித்தாந்தம் என்று பெயர்வந்து விட்டது வைத்துக்கொண்டாலும், அந்தச் சித்தாந்தம் ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செய்யும் அரசியலுக்குப் பயன்படுவதான் துயரம். இவர்கள் நினைப்பது போல உதய்ணா எல்லாம் தமிழகத்தின் முதல்வராகிவிட முடியாது. இப்படியே போனால் அடுத்த தலைமுறை திராவிடச் சித்தாந்தங்களில் இருந்து வெளியில் வந்துவிடும்.
 10. குழந்தைகள் தேவையா? ஓம்! குழந்தைகள் தேவையில்லை என்று எம் முன்னோர் முடிவெடுத்திருந்தால் இன்று நாங்கள் இல்லை.
 11. விசியம் தெரியாம கல்லை செய்யேக்க லம்டா, காமா, பீட்டா, மியூ போன்ற கிரேக்க எழுத்துக்களையும் சேத்திட்டினம் போலை.
 12. இங்க கனடாவிலையும் ஒராள் பிளேன் பிளேனா இறக்கிறார். நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுக்குள்ள வச்சாலும் நக்குத்தண்ணி நக்குத்தண்ணிதான் என்று முன்னோர்கள் சொன்னது வீணாகவில்லை.
 13. மதன் டைரீஸ் இல் வந்த வீடியோவில் ஆடியோ இருந்தது.
 14. அந்த வீடியோவில் KTR காட்டு காட்டு என்று கூறுகின்றார் அந்தப் பெண்ணும் காட்டுகின்றார். இது இருவரும் இணைந்து செய்ததுதான். அப்பெண் உண்மையானவளாக இருந்தால் போலீசுக்குப் போயிருக்கவேண்டும் இது ஒரு honeypot ஏற்பாடுதான்
 15. KTRக்காக குரல் கொடுக்க என்னுடன் இந்த உலகில் இன்னொரு சீவனும் இருக்கு என்று நினைக்கையில் பெருமையா இருக்கு!
 16. அழகான பொண்ணா இருப்பாங்க போலிருக்குது!! எதுக்கும் கழட்டினால் தான் பார்த்து சொல்லலாம்! வடிவா வடிவில்லையா எண்டு!
 17. நீங்கள் நியாயத்த கதைக்கேக்க நாங்கள் என்னத்த பறையிறது! இலங்கை தமிழ் அகதிகளுடன் இஸ்லாமியப் பயங்கரவாத நாடுகளில் இருந்து கனடா மற்றும் அய்ரோப்பிய நாடுகளுக்கு வரும் அகதிகளை ஒரே பார்வையில் வைத்து பார்க்கக்கூடாது. எந்தவொரு நாட்டிலும் அடைக்கலம் தந்த அந்நாட்டுக்கு நன்றியில்லாமல் மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் தமிழ் அகதிகள் ஈடுபடுவதில்லை. இதன் அடிப்படையில் ஆப்கான் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இருந்து பயங்கரவாதிகளை கனடா இறக்குமதி செய்துள்ளது
 18. சிபிசி தேர்தலுக்கு முந்தய கணிப்பில் பழைமைவாத கட்சி தாராளவாத கட்சியைவிட சற்று முன்நிலைக்கு வந்துள்ளது. கொவிட் கொடுப்பனவுகளை மட்டும் நம்பியே ட்ருடோ தேர்தலில் இறங்கியுள்ளார். இவரிடம் மீண்டும் ஆட்சி போனால் கனடாவை யாருமே காப்பாற்ற முடியாமல் போய்விடும். https://newsinteractives.cbc.ca/elections/poll-tracker/canada/
 19. திமுக அரசு புரட்டினோம் கவிழ்த்தோம் எண்டு இல்லாமல் நிதானமாகவே செல்கின்றது என எண்ணத் தோன்றுகின்றது. நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துவிட்டாலும் திமுக அரசு உடனடியாக அரசுடமையாகக் கையகப்படுத்தினால் அதனை அதிமுகவினர் அரசியலாக்கி ஆதாயமடையக்கூடும். அம்மா வாழ்ந்த பங்களாவை திமுக அரசுடமையாக்கிவிட்டது என்று கிளம்பினால் அடிமட்ட அதிமுக தொண்டர்களிடம் அது அதிகம் எடுபடும். அதிமுக என்ற அரசியல் கட்சி திமுக எதிர்ப்பு ஒன்றை மட்டுமே வைத்து தனது இருப்பை இதுவரை தக்கவைத்துகொண்டுள்ளது என்பதை நாங்கள் இங்கு கருத்தில்கொள்ளவேண்டும். தற்போதுள்ள அரசியல் சூழலில் அதிமுக என்ற கட்சி பாஜகவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது. அக்கட்சியின் தலைவர்களின் மனநிலையைவிட நேர் எதிரான மனநிலையிலேயே கட்சித்தொண்டர்கள் இருப்பதாக அறியமுடிகின்றது. ஆனாலும் கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தொண்டர்கள் கட்சியை கைவிட்டிருக்கவில்லை. இந்த நிலை எதிர்காலத்தில் தொடர்ந்துகொண்டிருக்க வாய்ப்பு இல்லை. அதிமுக தொண்டர்களிடம் ஒரு வெற்றிடம் வரும்போது அதை திமுக சார்பாக மாற்றி திமுகவை பலப்படுத்தவே ஸ்டாலின் முனைவார். கொடநாடு விடயத்தில் அதிமுகவின் முக்கிய புள்ளிகளை குற்றவாளிகளாகக் காண்பித்து அல்லது உறுதிப்படுத்துவதன் மூலம் அம்மாவுக்கு (அல்லது அம்மாவின் ஆன்மாவுக்கு) அவர்கள் துரோகம் இழைத்துவிட்டதாக அதிமுக தொண்டர்களிடம் அவர்களைப் பிரித்துவிடலாம். அதன் பின்னர் கொடநாடு பங்களாவை ஜெயலலிதா நினைவுப் பூங்கா ஆக்கிவிட்டால் இலகுவாக ஸ்டாலின் தனது திட்டத்தை அடைந்துவிடுவார் என எண்ணத்தோன்றுகின்றது.
 20. இந்த திரியில் எழுதப்படும் பின்னூட்டங்களுக்கும் திரியின் தலைப்புக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது என்று புரியவில்லை. இது குறித்து நிர்வாகம் தெளிவாக முடிவெடுக்கவேண்டும். திரியின் தலைப்பை திசைதிருப்ப முயற்சிக்கும் எந்தவொரு கருத்தும் அதன் முதன் முயற்சியிலேயே அது யாராக இருந்தாலும் வெட்டப்படவேண்டும். திரிகளிலே பந்தி பந்தியாக ஒரே கொள்கைகளை எழுதுவதும் காவித்திரிவதும் வாசிப்பவர்களை சலிப்படைய வைக்கும். இதனாலேயே பலதிரிகளை பார்ப்பதும் இல்லை கருத்து எழுதுவதும் இல்லை. நிர்வாகம்தான் இதை சரிசெய்யமுடியும். இப்படியே போனால் புதிய கருத்தாளர்களை யாழ் களம் கவரமுடியாமல் போய்விடும்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.