Everything posted by alvayan
-
கனத்தைப் பேய்க் கவிதை…..
பலதடவை வாசித்திருப்பேன்...கனத்தை சந்தியில் உதெல்லாம் எடுவடாதப்பா..
-
கனத்தைப் பேய்க் கவிதை…..
நீங்கள் எங்கையோ போறியள்....🙃
-
பிஞ்சுக் காதல்…
சத்தியமா (ஆர் மேலும் சொல்லாமல்) பொய்யில்லை..
-
கனத்தைப் பேய்க் கவிதை…..
நன்றி...அந்தப் பேய் பொக்கட்டில் இல்லை...உள்ளாடையில்..அப்ப அதன்வடிவுக்கு கோல்ட் கலரடித்து..கொழுவி விடும் அலங்கார சாமான்.. அவ்வளவும் தெரியவில்லை கனத்தை சந்தியிலதான் வேலையைக்காட்ட வெளிக்கிட்டுது..
-
கனத்தைப் பேய்க் கவிதை…..
நன்றீ சார் உங்களுக்கு..
-
கனத்தைப் பேய்க் கவிதை…..
கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 2 hours ago கனத்தைப் பேய்க் கவிதை….. இந்துவில் படித்த காலம்.. இருப்பதுவோ நாரகேன்பிட்டி.. இது பொரளை மன்னிங்ரவுன்…. இது நம்ம அண்ணருடன் வாசம் சரித்திரம்..வேண்டா மே ஆடிவேல் விழாக்காலம்.. அடிபட்டு பிடிபட்டு.. அனுமதி பெற்று.. சம்மாங் கோட்டாரிடம் போயுமாச்சு.. இந்துக்கூட்டம் ஒருவம்புக்கூட்டம்.. வெள்ளவத்தை சந்து முந்து ரோட்டெல்லம் போய் கூடப் படிக்கிற பிகருகளின் வீட்டு பூந்தொட்டிகளை ரோட்டில் போட்டுடைத்து தூக்கிவைத்து…. உள்ள கடையெல்லாம் சாப்பிட்டு ஐஸ்கிறீம் குடித்துமுடிய மணி சாமம் ஒரு மணியாச்சு… என்னதான் சுத்து சுத்தினாலும் படுக்கைக்கு கட்டைக்கு வந்திடவேணும்.. இல்லையோ வீட்டிலை நிற்கின்ற மரத்து தடி பாவம்.. சரி ஒரு கரும்பு வாங்கி முழத்தில் .இரண்டாக்கியாச்சு போகும்பாதை திருடர் காடையர் உள்ள பாதையாகையால்..ஆயுதம் 154 இலக்க பஸ் எடுத்து கனத்தை சந்தியில் இறங்கி ஒரு மைல் வடக்கை நடக்கணும் கை இரண்டிலும் கரும்பு நிமிர்ந்த நடை.. கனத்தை பெரும் பேயுலாவும்..சுடலை.. என்பது அறிந்த கதை.. இனி… நடை தொடங்க மெல்லிய சலங்கைச் சத்தம்.. நிற்க கேட்கவில்லை… நடக்க சலங்கை ஒலி நிற்க இல்லை ஏம சாமம்… பேய் என்னோடை வருகுது கரும்பும் கையும் நடுங்குது.. ஓட ..சலங்கைச் சத்தம் துரத்துது நிற்க ..இல்லை. சலங்கைச் சத்தம் கேட்க கேட்க ஓடிவந்து ஒருமாதிரி அறைக் கதவை பூட்டியாச்சு.. சத்தம் இல்லை… சாரம் எடுக்கப் போக மீண்டும் சத்தம்.. கத்தியை கையிலை வைத்தபடி உடுப்பை கழட்டினால்.. சிரிப்பை அடக்க முடியவில்லை உள்ளங்கியில் (ஜட்டி)..தகடு கொழுவுப்படாமல்.. போட்ட கிணு கிணுத்த சத்தம் தான் கனத்தை பேய்… (மன்னிக்கவும்..பெண் பிரசைகள் வாற இடத்தில்…இப்படி ஒரு கிறுக்கல் போட்டதிற்கு…. எல்லாம் சிரிப்பதற்கு மட்டுமே)
-
தமிழ் பொது வேட்பாளருக்கான நிபந்தனை வரைவு தயாராகிறது - சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு
அட ..போங்கையா..😁 கனடாத் தமிழர்..அனுர திசநாயகத்தை தெரிவு செய்திட்டனமே...
-
என் இந்தியப் பயணம்
தொடருங்கள்.......தொடர்தொடர எனது வாழ்த்துக்கள்..
-
நானும் கவிதாயினியும்.....💕
தொடருங்கள்......! 👍
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இது வெட்டி ஒட்டினதுதான்....இந்த ...விமர்சனம் எனக்குப் பிடித்திருக்கு.. நேற்றைய மேட்ச் பற்றி...! IPL ஆரம்ப போட்டியே பெரிய போட்டியா அமைந்தது! டாஸ் வென்ற RCB கேப்டன் பாஃப் பேட்டிங் செய்வதா சொன்னார்! சேப்பாக்கத்துல பேட்டிங் தேர்ந்து எடுப்பது சரியான முடிவா இருக்குமா? என யோசித்தேன்! சீக்கா ஏற்கனவே பேட்டிங் பிட்ச் என சொல்ல, சேஸிங் பண்ணுவதே நல்லது! RCB க்கு நல்ல தொடக்கம் கிடைக்க தீபக் சஹரும், துஷாரும் உதவினர்! பேட்டிங் பிட்ச்ல பந்து தெரித்து ஓடியது! டூ ப்ளஸி ஆள் இல்லாத இடத்தில் தூக்கி தூக்கி அடித்தார்! கடைசில அதுவே அவரது விக்கெட்டுக்கு காரணமா அமைந்தது! அடுத்து ரஜாத் பட்டிதார்! மூன்றாவது வரிசைக்கு விக்கெட்டை தடுத்து நிறுத்தும் ஆள் வேணும்.அது இவர் இல்லை! மாற்று வீரரை தேடுங்க! இவரது அவுட் தான் திருப்புமுனை! மேக்ஸிக்கு முதல் பந்துலேயே அவுட் ஆகும் யோகம் காலங்காலமா இருக்குது! அதை கொடுத்ததே ஆர்சிபி தான்! 3 விக்கெட் போன பின் க்ரீன் வந்தார்.பொறுமையா ஆடினார்.அவருடைய 20 ரன்னை எடுத்துட்டு போய்ட்டார்! 2 கோடிக்கு வாங்கி இருக்க கூடிய வீரர்! பல கோடிக்கு வாங்கபட்டு இருக்கிறார்! கிங் கோலியின் அவுட் எதிர்பாராதது! எனக்கு வருத்தம் தான்! அடுத்து கீப்பர்கள் கார்த்திக் மற்றும் ரவாத் இருவரும் இணைந்து கீப்பரா அணிக்கு என்ன செய்யனுமோ அதை செய்தனர்! CSK பவுலிங் பற்றி...!சுழலுக்கு விக்கெட் கிடைக்காதது ஆச்சர்யம்! வங்க தேச வீரர் FIZZ தன் இயல்பா தான் பந்து வீசினார்! அவருக்கு விக்கெட்களை பெங்களுர் வீரர்கள் பரிசா வழங்கினர்! சஹர் மற்றும் துஷார் ஆகியோக்கு பயிற்சி வேண்டும்.இருவரின் ஒருவருக்கு பதில் ஷார்துல் அடுத்த மேட்ச்ல ஆடலாம்! ரச்சினுக்கு 2 ஓவர் கொடுத்து இருக்கலாம்! இலக்கு 174 என இருக்க ...!CSK சேஸிங்கை தொடங்கியது! வாவ்! ரச்சின் ரவிந்திரா...!பந்துகளை வீணாக்காம ஒரு தொடக்க வீரரா என்ன செய்யனுமோ அதை செய்தார்.கான்வே கொஞ்சம் நிதானமா விளையாடுவார்.ஆனா ரச்சின் அதற்கு நேர்எதிர்! இந்த தொடரில் நல்லா விளையாடுவார் போல! வாழ்த்துக்கள்! ருதுராஜ் அடிச்ச சில ஷாட்களும் அருமை! ஆனா அவர் அவுட்டான விதம் சரியில்லை! மூன்றாவது வரிசையில் ஜிங்க்ஸ்! எப்படி மூன்றாவது வரிசையில் ஆடனும் என பட்டிதாக்கு பாடம் எடுத்து போனார்! மிச்சேல் கர்ண் சர்மா பந்தீல் நேரா ரெண்டு சிக்ஸர்கள் அடித்தார்.தினேஷ் கார்த்திகும் இதே போல அடித்தார்.ஆனா மிச்சேல் அடிச்சது தான் சூப்பரா இருந்தது! இம்பேக்ட் பிளேயராக வந்த டூபே ஐந்தாவது வரிசையில் எப்படி பேட்டிங் பண்ணனும் என தோனியிடம் பாடம் கற்று இருப்பார் போல! நிதானமா ஆரம்பித்து இலக்கை அடைவது தான் ஐந்தாவது வரிசை வீரரின் கடமை! அதை சரியா செய்து முடித்தார். ஆறாவது வரிசையில் களம் இறங்கிய ஜடேஜா வந்ததும் ஒரு சிக்ஸர் அடித்து, நான் போன வருஷம் பைனல்ல எப்படி போனேனோ அப்படியே வந்து இருக்கேன் என சொன்னார்! எளிதாக வெற்றி பெற்றது CSK! இரு அணி வீரர்களில் யாரும் 50+ அடிக்காம அதிக ரன்கள் வந்தது இந்த மேட்ச்ல தான்! RCB பவுலர்கள் பற்றி...!வேகத்தில் விவேகம் இல்லை! சுழலில் தாகருக்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுத்தார்கள்.ஏன்னு தெரியலை! CSK 5 பவுலர்களை மட்டுமே யூஸ் பண்ணுனாங்க! ஆனா RCB சிராஜ், அல்ஜாரி வாரி வழங்க, உடனே பார்ட்டைம் பவுலரிடம் போனாங்க! தோனி இப்படி பண்ணவே மாட்டார்.கேப்டனா அவர் ஜெயிக்க இது ஒரு காரணம்! கடைசில வாரிவழங்கிய வேகங்கள் 4 ஓவர்கள் வீச, 2 ஓவர்ல 6 ரன்கள் மட்டுமே கொடுத்த தாகருக்கு வாய்ப்பு கிடைக்காம போச்சி! டூ ப்ளஸி உட்பட அனைத்து கேப்டன்களும் தோனியிடம் பாடம் கற்று கொள்ளுங்கள்! நேற்று காலை நான் சொன்னது போல பேட்டிங் மற்றும் பவுலிங் ரெண்டிலும் சமபலம் வாய்ந்த CSK விடம் பேட்டிங்கை மட்டும் நம்பி களம் இறங்கிய RCB தோற்றது! கடைசிவரை என் தோனி பேட்டிங் பண்ண வராதது எனக்கு ஏமாற்றம் தான்! வரும் போட்டிகளில் எதிரணி அதிக ரன்களை (200+)அடிக்க ஆசைபடுகிறேன்.அப்போதான் அந்த ஏழாம் நம்பர் வீரரின் சிக்ஸரை நான் பார்க்க முடியும்! கேப்டனா ருதுராஜ் பெற்ற முதல் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்! எனக்கு தோனி தான் எப்போதும் கேப்டன்! ஆட்ட நாயகன் முஸ்தபிசூர் ரஹ்மானுக்கும் என் வாழ்த்துக்கள்!
-
பிஞ்சுக் காதல்…
பிஞ்சுக் காதல்… பள்ளிப் பருவம் துள்ளித் திரிந்த காலம்.. மெள்ள எட்டிப் பார்த்தது காதல் ஆசை மெல்லத் தூண்டி விட்டான் சினேகிதம்… மெதடித்த மாணவி.. மாதவி நடிகையின் போட்டோக் கொப்பி போற வாற இடமெல்லாம் துப்புத் துலக்கியாச்சு.. என்னவென்று தொடங்குவது அய்டியாவையும் தந்தான் அந்தப் பாவிமகன் முதலில் வெற்றுத் தாளை கசக்கி காலடியில் போடு.. எடுத்தால் வெற்றி உனக்கென்றான்…. காலால் மிதிபட்டு கதியால் வேலிக்குள் கிடந்தது காகிதக் கசக்கல்… மூளையை கசக்கி பிழிந்து எப்பிடியோ பிறந்த நாள் கண்டு பிடிச்சிட்டம்.. பரிசு கொடுக்கும் அய்டியா.. பொடிநடையாய் நடந்து திருமகள் கடையில் கே.ஜி பேனையும் வாங்கியாச்சு… காலடியிலும்….போட்டு கையாலும் எடுத்துவிட்டது பிகர் இனி லைன் கிளீயர்.. அடுத்து ..கைக்குட்டை குடுக்கிற பிளான் நல்ல லேஞ்சி வாங்க நெல்லியடியில் அலைஞ்சு கண்மணியின் கையிலை கொடுத்து ஐ.லவ் யூவும் சொல்லியாச்சு… பதில் சிரிப்பே தவிர…. நோ ...வாய் மொழி… லேஞ்சி கொடுத்தால் காதல் முறியும்..என்பதை லேட்டாத்தான் வாசியாலை பேப்பரிலை…பார்த்தம் சாத்திரம் உண்மைதான்.. இரண்டாம்நாள் இன்னொருவர் மூலம் என் கையில் பேனாவும் லேஞ்சியும்.. ஏனாம் ஏற்கனவே அவவுக்கு லவ்வு இருக்காம்… அப்ப ஏன்… அவரு பசையுள்ள ஆளாம்.. நான்.. கே ஜீ ப்பேனைக்கும் லேஞ்சிக்கும் கடன் பட்ட ஆள்தானே…. எப்படி நான் மாதவிக்கு வலைவிரிக்க மூடியும் காதல் தோல்வியில் தாடி வளர்த்து வாழ்வே மாயம் பாடுவமென்றால் எட்டாம் வகுப்பு படிக்கிற எனக்கு தாடியும் வளருமோ மீசையும் வளருமோ… பிஞ்சுக்காதல்…இல்லை இது பிறரைப் பார்த்து ஆசைப்பட்ட நப்பாசை…. கூடா நட்பால் வந்தவினை பூவரசம் கம்பால் வாங்கித் தெளிந்து.. கொழும்புக்கு பெட்டி கட்டினதுதான்…மிச்சம் (கற் பனையன்றி வேறொன்றுமில்லை)
-
பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு
சஜீத் முசுலிம் வாக்குக்கு...வலை வீசுகிறாரோ..
-
மட்டக்களப்பின் இடம்பெற்ற வீதி விபத்தில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் பலி!
இப்படி எத்தனை இழப்புக்கள்...ஆத்மா சாந்தியடைக..
-
கண்டால் வரச் சொல்லுங்க…
வேண்டாங்க ...நான் அழுதிடுவேன்... இப்படிக்கு ஆறடி அம்பயர்.......! ஏன் சாரு...அந்தாளை ஞாபகப்படுத்தி தூக்கத்தை கெடுக்கிறியள்... நேசதுரை..மாஸ்டர்..திருப்பி அடித்திருந்தால்..நான் சிகிரியா மலைஉச்சியில் கிடந்திருப்பன்.. நல்ல சுவையான கவிதை ஆல்வாயான்......நீங்கள் நிறைய எழுதுங்கள்.....! நன்றி சுவியர்...கனடா வரமுன் இருந்த ஆற்றலை திருப்பி எடுக்க முயற்சிக்கின்றேன் ...ஊரை மறந்த்ததுபோல.. மறந்துவிட்டன...பார்ப்போம் நன்றி சகோதரி...கமராவைத்து தேடிக்கொண்டிருக்கின்றேன்..கண்டால் சொல்கின்றேன்...ஆமா சிற்றுவேஷன் கவிதை சாங்தான்..😎
-
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
போதுமையா...நன்றி உங்களுக்கு..
-
நானும் ஒரு அடிவிட்டன்
உண்மை...புங்கையூரன்...நினைத்தாலே இனிக்கும் இதயத்தில்...பூட்டியவைகளை திறந்துவிட ஆசைதான்..பயமாயிருக்கு..நன்றி உங்களுக்கு. அசாத்தியத் துணிவு...அடிபோட்டபின்தான் தெரிந்தது..அதன் தாற்பரியம்..நன்றி உங்கள் ரசனைக்கு ஆறடி அம்பயர் யார்தெரியுமோ ..உடுப்பிட்டி நேசதுரை அய்யா.. நன்றி ...சாமியார்...உங்கள் எழுத்துடன் ஒப்பிடுகையில்...அதாவது நறுக்கென்று ..நாலுவரியில்.. கிட்டத்தான் இருக்கிறியள்... மறக்கமுடியாத காலம்..அந்த ஆறடி அம்பயர்.. மதிப்புக்குரியநேசதுரை அய்யாதான்...என்னுடைய இளமைத்துடிப்பு..அப்படிச் செய்ய வைத்துவிட்டது.....இப்பவும் மனம் வேதனைப்படும்...எனினும் கடந்த காலம் இனிமையானது மிகவும் நன்றி அன்பான சகோதரிக்கு...கனடா வரும்ப்போது என்னிடம் இருந்த ஏழுத்தாற்ற்ல்...எனது வேலைகாரணமாக அறவே..அற்றுப்போனது....இப்போ யாழ்களம் தந்த துணிவில்... ஏதோ எழுதுகின்றேன்...அதில் உங்களனைவரினதும் ஆதரவு...என்னை பழைய நிலைக்கு கொண்டுவரும் ..என்ற நம்பிக்கை துளிர்கிறது....பார்ப்போம்..மார்ச்சு 30க்குள் எவ்வளவு வரும் என்று..மீண்டும் நன்றி உங்களுக்கு
-
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
இதைத்தான் சொல்வது வி கதை என்றூ...பழய ரெக்கோட்டை திரிப்பி திரிப்பி பாட்வதில் வல்லவர்...பரவாயில்லை..புலம்பெடர்தவர் ஒழித்தாலும் நல்லது செய்கிறோம்...நீங்கள் என்னவென்றால் இனத்தையே விற்று சாப்பிடுகிறியள்... இதிலை எது சிறந்தது...
-
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
இது உங்கள் விதண்டாவாதம்...பழைய ரெகார்டு மாதிரி ...கீறிய ரெகார்டு மாதிரி ..புலம்பாமல்..உங்கள் பிழைப்புக்கு நல்ல வழியை தேடுங்கள்.. இனம் தழைக்கும்..உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும்..நன்றி டொட்..
-
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
ஊரான் வீட்டுப்பிள்ளையென்ற்றூ..உதாசீனம் செய்வதில்லை நாம்.. உங்களைபோல இன்னுமொரு இனத்துக்காக நின்று நியாயம் கதைப்பதில்லை நாம்...உணர்வாளர் களை வாழ்த்தி வாழ்விடுங்கல்..உங்கள் உழைப்புக்காக அவர்களை தடுக்காதீர்கள்..
-
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
மிகவும் நன்றி அய்யனே...இதுதான் உணர்வு.... இது ஏமாற்றம்....எட்டாப் பழம் புளிக்கும்..கொதிப்பவன் கொதிக்கட்டும்...எரிப்பவன் எரிக்கட்டும்...காணாத இழ்ப்பா...நந்திபோல் குறுக்கிட்டு ..அவர்கள் உணர்வை மழுங்கடிக்காதீர்கள்..
-
கண்டால் வரச் சொல்லுங்க…
கண்டால் வரச் சொல்லுங்க… கார் களவெடுக்கும் தம்பி… கண்டால் வரச் சொல்லுங்க… கனடா…கார் களவெடுக்கும் தம்பியை.. கண்ட இடமும் அலையாமல் நேராய் வரச் சொல்லுங்க.. முத்தத்தில் மூணுகாரு.. மினுக்கிக் கொண்டு நிற்கும்… முதல் ஆளு..கமரி பார்க்கப் பளபளப்பா நிற்பார்.. பற்ரறி மாத்தவேணும்.. மூணு நாளைக்கு ஒருக்கால் ஒயில் விடவேணும்.. பார்ட்ஸ் எல்லாம் பழசு.. பார்த்துத் தூக்கு தம்பி.. அக்கூரா அடுத்து நிற்பார்.. ஆளு வாட்ட சாட்டமாய் இருப்பார்.. இப்பதான் அடிவாங்கி ஆசுபாத்திரியால் வந்திருக்கார்.. அவர் சுக நலம் இன்னும் எனக்கே தெரியாது… பார்த்து எடுடா தம்பி… பார்ட்ஸ் ஏதாவது கழண்டும் விழலாம்.. பலமான அடிவாங்கிய ஆள் தம்பி.. மூணாவது பி .எம் டபிள் யு.. தளுக்கி மினுக்கி சும்மா தகதக வென்று .. மினுங்குவார்… இவர் ..சுக நலம் நானறியேன்… வந்து மூன்று நாள்தான். என்னைக்கேட்டால் எதுவும் தெரியாது.. ஏனெனில் அது நிலக்கீழ் வீட்டுகாரனுடையது…. கராச்சுக்குள் .. இரண்டுபேர் நிக்கினம்.. இரண்டு பேரும் புது இறக்குமதி… தொட்டால் சுள்ளிடும்.. கிட்டப் போனாலே குய்யோ முறையோ என்று சத்தமும் போடுவினம்… அதைவிட … இந்தக் கார்களில் நீ கைவைத்தால் நான்தான்…வாங்கிக் கட்ட வேணும்.. அதாலை நான் நைற் வாச்சர். யாராவது ..கண்டால் வரச்சொல்லுங்க கனடா கார் கள்ளனை கண்டவுடன்… நான் இதில் சொன்னதையும் சொல்லிவிடுங்க….அவனை கண்டால் வரச்சொல்லுங்க.. காண ஆசையாய் ..இருக்கென்று.. வேண்டாமிந்த விபரீத ஆசை (யாவும் கற்பனையே)
-
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து நிதியுதவி
உண்மை...படங்காட்ட நம்ம சனம் நாடுமிடம்..யூ டியூப்பெர்ஸ்...அவைக்கு வருவாயே புலம் பெயர்ஸ்தான்...ஆனால் அடிக்கிற நக்கல்... எக்கச்சக்கம்..
-
நானும் ஒரு அடிவிட்டன்
ஆமா...ஓட்டம் கனடாவில்தான் நின்றது... நன்றி..உங்கள் ஆதரவிற்கு..
- அறிவித்தல்: யாழ் இணையம் 26 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
நானும் ஒரு அடிவிட்டன்
நன்றிங்க...உங்கள்..ஆரோக்கியமன ரசனைக்கு...இந்தமுறை...ஆண்டுவிழா மலரை ஒரு கை பாக்கிறது என்றுதான் இருக்கிறன்😁