உண்மை தான். ஆனால் ரணிலுக்கு நிபந்தனையற்ற ஆதரவு குடுக்கேக்கை இதை செய்யேலை தானே.நான் அறிந்தவரையில் அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டநீக்கம், பலாலி, காங்கேசந்துறை காணி விடுவிப்பு நூற்றுக்கு தொண்ணூறு வீதம்நடக்கும். எல்லாம் மாகாணசபைத்தேர்தலுக்கு முன்நடக்கும் (தேர்தல் காலத்தில் எல்லாம் செய்யமுடியாது தானே). கம்மன்பில தொடக்கம் ரணில்வரை இப்ப கூடக்கதைப்பதற்குக் காரணம் தேர்தல் காலத்தில் சிலது செய்யமுடியாது என்பதால் சும்மா வாயைப்புடுங்கி ஏதாவது லாபம் பாக்கலாம் என்று தான். வந்து ஒரு மாதத்திற்குள் எல்லாம் செய்யிறது என்டால் அதுகும் மூன்று அமைச்சர்களை வைத்துக்கொண்டு அது எவராலையும் முடியாது. இதை விட மாகாண சபைத் தேர்தலில் வடமாகாணசபையில் என்பிபிக்கு பெரும்பான்மை வந்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை. இதை வைச்சுநான் என்பிபிக்கு ஆதரவு என்று இல்லை. கள யதார்த்தம் இது தான். எங்கடை தமிழ்க்கட்சியளுக்கு தான் அரசியல் செய்ய எதுவும் இருக்காது (குறிப்பு: வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமில்லை என்று தான் படுகிறது. வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனியாக சர்வசன வாக்கெடுப்புநடக்கும் போலைஇந்தியா அழுத்தம் குடுத்தால். கிழக்கில் முஸ்லிம் சிங்களம் சேர்ந்து 60 வீதம் எனவே இணைப்பு சாத்தியம் இல்லை).