Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. ஜேர்மனிய அணியை முற்று முழுதாக மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இருந்தாலும் தற்போதைய அணி நன்றாகவே விளையாடி உள்ளார்கள். பல சந்தர்ப்பங்களை தவற விட்டிருந்தாலும்.... ஜேர்மனி உதைபந்தாட்ட அணி நல்லதொரு விளையாட்டு அணி.. நன்றாக விளையாடி கடைசி நிமிடங்களில் மட்டுமே தோற்றவர்கள். ஸ்பானிய அணி வீரமானவர்கள் என்றால் ஜேர்மனிக்கு பத்து கோல்கள் அல்லவா அடித்திருக்க வேண்டும்? 🤣
  2. துருக்கி ஐரோப்பிய உதைபந்தாட்ட நிகழ்விலிருந்து வெளியே சென்றதில் மட்டற்ற மகிழ்சி.👍🏼 விளையாட்டில் அரசியல் இல்லை என்பவர்களுக்கு நல்ல செருப்படி.
  3. இன்றைய ஈழ அரசியலில் என்னென்ன முன்னேற்றங்கள் நடந்துள்ளன என்பதை பற்றி கொஞ்சம் தயவு செய்து சொல்லுங்கள்.
  4. நிச்சயமாக ஓலாவ் காணாமல் போவார். தேர்தலில் வெற்றி பெற முன்னரே கட்சி ரீதியாக பெரிதாக பேசப்பட்ட அரசியல்வாதியல்ல இவர். இவர் கட்சியில் இருந்த பல முன்னோடிகள்,அனுபவசாலிகளை புறம் தள்ளி விட்டு பதவிக்கு வந்தவர். இவர் சார்ந்த கட்சியின் பழையவர்கள் இன்றும் பதவியில் இருந்திருப்பேர்களாயின் உக்ரேன் போர் வருவதற்கு சாத்தியங்கள் மிக மிக குறைவாக இருந்திருக்கும். முன்னர் இவர் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும் போது ஈராக் மீதான இரண்டாம் கட்ட போரை முற்று முழுதாக எதிர்த்த கட்சி. இதனால் அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் பெரிய விரிசல் ஏற்பட்டது. எனக்கு தெரிந்தவரை இவரை யாருக்கும் பிடிப்பதில்லை.இவர் அமர்ந்திருக்கும் கட்சி கொள்கை நல்ல கொள்கை. ஆனால் இன்று அதில் அமர்ந்திருப்பவவர்கள் இன்றைய உலக அரசியலுக்கு ஒவ்வாதவர்கள்.
  5. இவையெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட வேண்டிய விடயங்கள்.மதத்தின் பெயரால் நடத்தும் கோமாளி கூத்தாளர்களை தூக்கியெறிய வேண்டும். கொடுமையிலும் கொடுமை என்னெண்டால் அதில ஒண்டு வைரவர் மாலையோட காட்சி தருது.🤣 அடி செருப்பாலை....
  6. சம்பந்தனின் மரண நிகழ்வுகள் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அவர் தம் ஆதரவாளர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும். சம்பந்தனின் மரண நிகழ்ச்சிக்கு பின்னரும் சம்பந்தனின் அரசியல் வாழ்வை யாராவது மெச்சுகின்றனர் என்றால்.....!!!! மேலதிக விபரம் இல்லாமல் அவர்களின் சுயரூபத்தை சுலபமாகவே கணக்கிடலாம்.
  7. கிந்தியன் என்ன விசயங்களுக்காக ஆளை கூப்புடுறான் எண்டு ஒருக்கால் கவனிச்சு பாருங்கோ.🤣
  8. ஈழத்தில் எதிரியாக இருந்தாலும்,அனாதையாக இருந்தாலும் ஒரு மரண நிகழ்வு நடந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரும் கூடி நின்று மரண நிகழ்வை நடத்துவர். ஆனால் ஒரு பழம்பெரும் எமது அரசியல்வாதி இறந்த பின் நடக்கும் கொடுமைகளையும் , பல இணைய தளங்களில் வரும் கருத்தோட்டங்களை பார்க்கும் போது.......இப்போதிருக்கும் தலைவர்கள் சுதாகரித்து கொள்வார்களாக.....
  9. இதில் ஜேர்மனி தோல்வியுற்றது மிக மிக கவலையான விடயம் மட்டுமல்ல பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். அதில் என் காரணம் என்னவென்றால் ஜேர்மனி சொந்த மண்ணில் விளையாடுகின்றது.அதனால் இந்த நாட்டுமக்கள் ஒரு வித்தியாசமான பெருமைமிக்க உணர்வுடன் நாடு முழுவதும் உற்சாகமாக கார் ஊர்வலங்கள் வருவார்கள்.நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் உற்சாகமாக திரிவர்.வியாபர நிலையங்களும் களைகட்டும். ஜேர்மன் கொடி எங்கும் பறக்கும்.நாடே உற்சாகமாக இருக்கும். ஆனால் இப்போது ஜேர்மனி தன் நாட்டில் தோல்வியை சந்தித்து விட்டது. இனி இந்நாட்டு மக்களும் ஏனோ தானோ என்றுதான் திரிவர்.ஊர்மனைகளில் இருந்த கலகலப்பு இல்லாமல் போய் விட்டது. ஜேர்மனி தோற்றாலும் பரவாயில்லை. இறுதி ஆட்டத்திற்கு வந்து தோற்றிருக்கலாம்.
  10. உண்மைதான்... இந்த உக்ரேன் பிரச்சனை ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றிக்கொண்டிருக்கின்றது. குறிப்பாக ஜேர்மனியில் வாழும் உக்ரேனியர்களால் நாட்டிற்கு பெரிய செலவுகள் என பத்திரிகைகள் நேரடியாகவே எழுதுகின்றன. பிரித்தானிய தேர்தல்,அமெரிக்க தேர்தல்,பிரான்ஸ் தேர்தல் முடிவுகள் நல்லதாக அமைத்தால் உலகம் நிம்மதியாக வாழும்.
  11. மன்னிக்கவும். நான் வேறொருவருக்கு பதில் எழுதுவதாக நினைத்து உங்களை உள் இழுத்து விட்டேன். மன உழைச்சல் ஏற்படுத்தியமைக்கு வருந்துகின்றேன்.
  12. காலா காலமாக வாக்களித்தவர்கள் கூட அஞ்சலி செய்ய வரவில்லை போலிருக்கின்றது. உண்மையில் 2009க்கு பின்னர் மக்கள் வாக்களித்து தான் இவர்கள் பாராளுமன்றம் சென்றார்களா என்ற சந்தேகம் வருகின்றது.
  13. அஞ்சலிக்காக பலாலி விமான நிலையம் ஊடாக யாழை வந்தடைந்தது சம்பந்தனின் சடலம். கட்சி தொண்டர்கள் விமான நிலையம் வருகை தராத காரணத்தால் இராணுவத்தினரால் சடலம் காவிச் செல்லப்பட்டது.
  14. இது எங்கள் கொலனி என மார்தட்டிக்கொண்டு திரியும் இவர்கள் அங்கு நடக்கும் பிரச்சனைனைகளை தீர்க்கும் வரைக்கும்:
  15. நான் என் வெற்றிக்காக விவாதிக்க வருபவனல்ல. ஜேர்மனியில் மதம் சார்ந்த கட்சிகளுக்கே முதலிடம்.அவர்கள் தான் அதிகமாக ஜேர்மனியை ஆட்சி செய்திருக்கின்றார்கள். முதலாவது கட்சி CDU Christian Democratic Union of Germany இரண்டாவது கூட்டு கட்சி CSU Christian Social Union in Bavaria இவர்களை மீறி ஜேர்மனி இயங்காது. வெளியில் தெரியா விட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் பக்கா மதவாதிகள்
  16. நீங்கள் பல இடங்களில் அடிக்கடி ஆட்சி அமைப்பதை பற்றியே கருத்தெழுதுகின்றீர்கள். ஒரு அரசியலில் அதுவல்ல முக்கியம். சீமான் 7வீதம் 8வீதம் முன்னேறியதற்கே கதறிய நீங்கள் 16 வீதம் என்பதை கடந்து போகின்றீர்கள். உங்களை நினைத்து கொடுப்புக்குள் சிரித்து விட்டு இடம் மாறுவதை தவிர வேறு வழியில்லை. ஒரு நாட்டில் பதினாறு வீத அரசியல் வெற்றி என்பது குறைந்த விடயமல்ல.
  17. ஜேர்மனியிலும் மதம் சம்பந்தப்பட்ட சாதாரண வைத்தியசாலைகளும் உயர்தர வைத்திய சாலைகளும்,பாலர் பள்ளிகளும் உயர்தர பள்ளிகளும் உள்ளன. எல்லாம் சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் ஏதாவது பிரச்சனை வரும்போது சட்டம் எனும் போர்வையில் மத நோக்கக்கள் பூசிய மாதிரியும் தெரியும் பூசாத மாதிரியும் தெரியும்.
  18. உளமார தெரிந்த படியால் தான் இவரை நினைத்தாலே மூக்கின் மேல் கோபம் கோபமாக வருகின்றது. இவர் நலமாக உயிருடன் இருக்கும் போதே சம்பந்தனை வாய்க்கு வந்தபடி யாழ்களத்தில் திட்டியிருக்கின்றேன்.
  19. ரஷ்யாவில் மதம் தனிப்பட்ட விடயம். வீதிகளில் மத போராட்டங்களோ அல்லது மத பிரசாரங்களோ எல்லாம் தடைசெய்யப்பட்டது..சோவியத்யூனியன் காலத்தில் மத மக்குகளுக்கு இடமே இல்லை
  20. விசுகர்! அவர்கள் சொல்லும் வெள்ளை நாடு என்பதிலும் தவறில்லை. ஏனெனில்..... இவர்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகள் மீது படையெடுத்து அந்த நாட்டு மக்களை அடிமைகளாக வைத்திருக்கா விட்டால், அந்த நாடுகளின் சொத்துக்களை கொள்ளையடிக்காமல் விட்டிருந்தால், இன்றும் அவர்கள் தம் கொலனி நாடுகள் என பெருமை அடிக்காமல் இருந்தால்..... எனவே.... மூன்றாம் உலக நாடுகளின் பிந்தங்கிய நிலைக்கு இவர்களும் பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆகின்றார்கள்.
  21. எந்த நாட்டில் மதம் சம்பந்தமான அரச விடுமுறைகள் இருக்கின்றனவோ அந்த நாடுகள் மதம் சார்பான நாடுகள் அல்லவா?
  22. உலகம் முழுக்க நல்ல கார்கள் ஓடுது.....ஆனாலும் எனக்கு பிடிச்ச கார் எண்டு ஒண்டு இருக்கெல்லே? 😀
  23. எனக்கு கிடைக்காதது வேற ஒருத்திக்கும் கிடைக்கக்கூடாது எண்ட கொள்கையாய் இருக்கலாம்.😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.