குமாரசாமி
கருத்துக்கள உறுப்பினர்கள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: ஈரான் நாட்டுப்புற சமையல்
Everything posted by குமாரசாமி
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தனிப்பட்ட தகவல்களை இங்கே பகிர வேண்டாம். நான் அப்படி எதுவும் பெரிதாக செய்யவில்லை.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
காங்கிரஸ்.....
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
உங்கள் கருத்திற்கு நான் எதிர் கருத்து வைக்கின்றேன். உங்கள் கருத்தை அடியென நீங்கள் நினைத்து குளிர்ச்சியடைந்தால் அதுவும் நல்லது என நான் நினைக்கின்றேன். எந்த பொல்லை உங்களுக்கு கொடுத்தார்கள் திருப்பி அடிப்பதற்கு....?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இது ஒரு தனிமனித தாக்குதல். இதை நிர்வாகமும் கண்டு கொள்ளாது. இருந்தாலும் பதில் எழுதுகின்றேன். கண் விழிகளை திறம்பட அகட்டி வாசியுங்கள். விடுதலைப்போராட்டம் ஆயுத வலிமையுடன் இருக்கும் மட்டுமே ஆயுத வலிமையை பற்றி கதைத்தோம். அதன் பின் ஆயுதத்தை மௌனிக்கின்றோம் என அறிவித்த பின்னர் யாருமே ஆயுத போராட்டத்தை பற்றி சிந்திக்கவில்லை. நிற்க...... நீங்கள் கூறும் ஆயுத போராட்டத்திற்குரிய ஆதரவுக்கரங்கள் உங்கள் வீட்டு ஆகாயத்திலிருந்தா கொட்டியது?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாட்டு அரசியல் திரியில் சீமான் அரசியலை மட்டும் தாக்கும் போது சீமான் ஆதரவாளர் வருவது நியாயமானதே:
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
திராவிடத்திற்கு சார்பாக கதைத்தால் அது எந்த கட்சியை சாரும்?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சீமான் பச்சோந்தியென்றால்....? திராவிட வைரம் கருணாநிதி எப்படி? என்ன மாதிரி?? படங்களுடன் செய்திகளுடன் ஆதாரங்களை இணைக்கவா? இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் அதே ஆயுதத்தை தூக்குவேன். இந்த திரி அரசியல்வாதிகளை வசைபாடும் திரியல்ல. இருந்தும் சீமானை வசை பாடினால் நானும் நீங்கள் தூக்கும் அதே ஆயுதத்தை தூக்குவேன்.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சீமானின் நாக்கு ஊத்தையை வழிப்பதற்கு முதல்... தமிழ்நாட்டு தேர்தல் அரசியலில் யாழ்களத்தில் சீமானை எதிர்ப்பவர்கள் தாங்கள் எந்தெந்த கட்சிகளை ஆதரிக்கின்றீர்கள் என சொன்னால் மேலும் கருத்தாடல் செய்ய வசதியாக இருக்கும். வெறுமனே சீமானை மட்டும் எதிர்க்கின்றோம் என்பவர்களுக்கு வேறொரு அரசியல் ஞானமும் கட்சியும் முன்னோடியாக இருக்க வேண்டும் அல்லவா?
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சரி இப்ப என்ன பிரச்சனை? 🤣 சீமான் இந்த தேர்தலிலும் தோற்கின்றார். ஆனால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் என்றுமே தோற்காது என நம்புகின்றேன். சீமான் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்கு மட்டும் நன்மையே தவிர இப்போதைக்கு வேறெதுவும் இல்லை.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்படியென்றால் இந்திய தேர்தலில் எந்தவொரு சீர்கேடுகளும் இல்லாத சுத்த ஜனநாயக தேர்தல் முறை என சொல்கின்றீர்கள் அப்படித்தானே?? 😁
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நீங்கள் சொல்லும் சப்பை மேட்டருக்காகவா கொழும்பு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பிணையும் பத்து லட்சம் ரூபாய் சரீர பிணையும் கொடுத்து விடுதலை செய்துள்ளது? 🤣
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
ஈழத்தமிழரின் ஆயுத போராட்டத்தை பயங்கரவாதிகளின் போராட்டம் அல்லது தீவிரவாதிகளின் போராட்டம் என்றே வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கிணைய வடகிழக்கு தமிழர் பிரதேசங்கள் யுத்த வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் வெளிநாட்டு உல்லாச பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்களா? சில வேளை சுற்றுலா பயணிகளையும் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் பகுதிகளுக்கு செல்ல அனுமதித்திருந்தால் படங்களும் காணொளிகளும் வெளியுலகிற்கு வந்திருக்கலாம். வன்னியில் யுத்தம் நடந்துகொண்டிருக்கும் போது மட்டக்களப்பு மற்றும் வடபகுதிகளுக்கு எந்தவொரு அசுமாத்தமும் தெரியவில்லை என்பது வேறு விடயம்.
-
பதவி விலகவுள்ள சிங்கப்பூர் பிரதமர்!
என்னது? சட்டங்களுக்கு பெயர் போன சிங்கப்பூரிலும் ஊழலா? 🧐
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
நானும் நீங்களும் இலங்கையில் இருந்து வந்தவர்கள். சுத்துமாத்து சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். எனக்கோ உங்களுக்கோ அது பெரிய விடயமல்ல. ஆனால் இந்த நிகழ்வை வெளியிட்டவர் வேறொரு நாட்டை சேர்ந்தவர்.அதுவும் அவர் ஒரு யுரியூப்பாளர். அவர் வெளியிட்ட காணொளி அவர் தம் நாடுகளுக்கும் அதன் தொடர்புடையவர்கள் வரைக்கும் சென்று நாறடிக்கும். அவர் தன் மீதி பணத்தையும் மீள கொடுத்து தனக்குத்தானே பெருமை சேர்த்தாரே தவிர......முதல் சொன்ன நாறடிப்பு என்றுமே மீள பெறப்பட மாட்டாது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
மற்ற நாடுகளில் இருப்பதால் இலங்கையிலும் அது இருக்கலாம் எண்டிறியள்? சரி...ஒகே 😂- சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣- தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣- பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம். இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு?- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.- பதிலடி கொடுத்தால், அதை தனியாக செய்வீர்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன் உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂- எனது அறிமுகம்
ஓம்... கரணவாய் மூத்த பிள்ளையார் கருணையால எல்லோரும் நலம். வாற வருசம் ஒரு பிளான் இருக்கு.பாப்பம் 😊- எனது அறிமுகம்
என்னது 15 வருசமா?😍 வாழ்த்துகள் வன்னியரே! 💪🏽 தாங்கள் இப்போது வேறு எங்கேயோ புகுந்து விளையடுற மாதிரி தெரியுது..😂- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் ஒவ்வொரு அரசவையிலும் தமிழ் உயர் அதிகாரிகளும்,அமைச்சர்களும் அங்கம் வகிக்கின்றார்கள். இன ரீதியாக ஏதாவது நல்ல விடயங்கள் நடந்ததா? அல்லது முன்னேற்பாடுகள் ஏதாவது எடுக்கப்பட்டதா? அண்மையில் கூட அண்ணன் டக்ளசை அடித்து விரட்டிய சம்பவ செய்திகள் தான் மிச்சம்...அதை விட அண்ணன் டக்ளஸ் அவர்களே தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் சரியில்லை என குற்றம் சாட்டிக்கொண்டிருப்பவர். 🤣 ஏதோ தான் சிங்களவன் மாதிரி- தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களும், கொழும்பில் தமிழர்கள் வாழ்வதும் ஒன்றா?
உங்கள் நண்பர் கேட்டது போலவே 80களில் என் அண்ணரிடமும் நான் கேட்டிருந்தேன். அதற்கு அவர் சொன்ன பதிலும் நீங்கள் சொன்னது போலவே இருந்தது. வணக்கம் ரஞ்சித்! இலங்கை இனப்பிரச்சனைக்கு மிக அவசியமான கருப்பொருளை இங்கே முன் வைத்திருக்கின்றீர்கள். எல்லோராலும் அலசி ஆராயப்பட வேண்டிய விடயமாகும். தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் ஒருவித தமிழின அழிப்பையே சிங்கள இனவாதிகள் செய்கின்றார்கள். - சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
Important Information
By using this site, you agree to our Terms of Use.