Everything posted by குமாரசாமி
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
ஜேர்மனி கடந்த 20 வருசமாய் ரஷ்யாவுக்கு தடைக்கு மேலை தடை போட்டுக்கொண்டுதான் இருக்குது. ஒரு பிரயோசனமும் இல்லை. ரஷ்யாவுக்கான தன் சந்தைய மூடி தன் பொருட்களையே நாசமாக்கியதுதான் மிச்சம்.
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
அப்பிடி போடி அரிவாளை.... எத்தனை இடர்கள் வந்தாலும் ஒரு நாடு தன்னை தக்க வைக்க இயற்கை வழங்களே உதவி செய்யும். இது அமெரிக்காவிற்கும் பொருந்தும்.
-
அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
இந்த இரண்டு வருட போர் காலத்தில் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் ரஷ்யாவையும் அது கைப்பற்றிய இடங்களையும் வெற்றி கொள்ள முடியவில்லை என்றால்.......? அது சரி அமெரிக்கா உக்ரேனுக்காக தன்ரை கஷ்ர நஷ்டங்களை மனதுக்குள் அடக்கி வைத்து கோடிகளை செய்ததற்கான காரணம் ஏன்? 🤣
-
ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
-
கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர்
ஏதோ உள் விளையாட்டு பெரிசாய் நடந்திருக்கு. கனடா அரசாங்கமும் இதை மறைக்க முயற்சிக்கலாம்.
-
அதிக வட்டி வருமானத்திற்கு அறவிடப்படும் வரி! கேவலமான செயலென கொதித்தெழும் பொருளாதார நிபுணர்
13,14,15,16,17,18,19 வயது பருவங்களிலை சம்பளமில்லாத வேலையும் செய்யேல்லையோ? 😎 மதகுல.....தேத்தண்ணி கடைக்கு முன்னால நிண்டு சேக்கஸ் காட்டினதெல்லாம் கணக்கில எடுபட மாட்டாது. 🤣
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அப்படி காட்டமான விமர்சனங்கள் வைக்கப்படும் அந்த பொதுவெளி ஊடகங்களுக்கு போய் உங்கள் வீரத்தை காட்டலாமே?அதை விட்டுட்டு சும்மா யாழ்களத்திற்குள் நின்று சின்னப்பொடியளுடன் புடுங்குப்பட்டுக்கொண்டு....😂 முடிந்தால் x சென்று உங்கள் நியாயத்தை வீரத்தை காட்டுங்கள் பார்க்கலாம் 🤣
-
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை
உலகத்திலையே உண்மையான தைரியம் கொண்ட நாடெண்டால் அது சிறிலங்காதான் 😎
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழரின் புதைகுழி.....காஸா பலஸ்தீனியர்களின் புதை குழி.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
ஒட்டு மொத்த ஈழத்தமிழரும் சீமான் பின்னால் என யார் சொன்னார்கள்?
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
அந்த வெய்யில் வெக்கைக்கு வேர்த்து ஒழுக கோட் சூட் போட்டுக்கொண்டு கழுத்தை இறுக்கி ரையும் கட்டிக்கொண்டு திரியேலும்....ஆனால் குளிருக்கை வேட்டி கட்டேலாதாம்.😂
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
நீவீர் கவிஞன் யா 🤣
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
கருத்து பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது போலும்.... 😂 அடங்குகவே...😂 அமைதி கொள்கவே-..🤣 இன்று போய் நாளை வா 🤣
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
விளங்கவில்லை.
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
எல்லாம் ஏஜென்சி வழி காட்டல்.😎 கிழக்கு ஜேர்மனியில் வாழ்ந்த வியட்நாம் அகதிகள் மற்றும் தென்னாமரிக்க நாடுகளை சேர்தவர்கள் அனைவரும் ஈழத்தவர்களை விட பல படிகள் முன்னேறி விட்டார்கள். இன்று வியட்நாமியர்களுடன் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளும் வியாபார உறவுகளை மேற்கொள்கின்றார்கள் என்றால் புலம் பெயர் வியட்னாமியர்களும் அவர்களின் அரசுகளுமே காரணம். பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ கொள்கையோ சமதர்ம கொள்கையோ எங்கும் காரணமல்ல. விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும் இல்லாமையே முக்கிய காரணம்.
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
கிழக்கு ஜேர்மனிக்கு வரும் போது உயிராபத்தா? விளக்கம் தேவை தமிழர்கள் மட்டுமல்ல பல நாட்டுக்காரர்களும் போடர் பாயவில்லை. கடவுச்சீட்டில் முத்திரை பதித்த பின்னர் சட்டப்படி மேற்கு ஜேர்மனிக்குள் உட் புகுந்தார்கள்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
வணக்கம் அப்பன்! நான் வேடிக்கை பார்க்க வரவில்லை. போட்டியில் கலந்து கொள்ளும் அளவிற்கு நேரகாலமும் இல்லை. மன நிலையும் இல்லை. ஆனால் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது ஒரு சிலரின் வேட்டியை உருவ பின் நிற்க போவதும் இல்லை. 😂
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
எந்த தமிழர்களை பற்றி கேட்கின்றீர்கள் என புரியவில்ல?
-
அப்பா உடனே வாங்கோ.
அப்ப சிலோன் பிரச்சனை இழுபட்டு கொண்டு போறதுக்கு எந்த நம்பர் பிரச்சனை எண்டு ஒருக்கால் சொல்லுங்கோ கந்தையர்....😎
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
நீங்கள் ஊரில் பள்ளிக்கூடம் போய் படிக்கும் போது புட்டின் வந்தாரா? அல்லது இருந்தாரா? 😛 ஊரில் கம்யூனிச கொள்கைகளை படித்ததின் மூலம் வந்த கேள்வி .
-
அப்பா உடனே வாங்கோ.
ஓ......ஐயாவுக்கு எண் சோதிடத்தில நம்பிக்கையோ? 😎
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தேர்தல் அரசியல் என வந்தால் சகலதும் சகஜம். கோத்தபாய அவர்களும் இன/மத அரசியலைத்தான் செய்தார். அப்போது நீங்கள்????? 😷
-
சாதி வெறியர் யார்? கண்ணுக்கே தெரியாமல் சாதி வெறி எப்படி வேரூன்றியுள்ளது?
நான் சாதியொன்றில்லை. இருந்தால்.... அது அழிக்கப்பட வேண்டும் என்கிறேன். அனால் நீயோ...? வருடா வருடம் தலித் இனம் என தனியாக கொண்டாடி தலித்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றாய்.
-
அமெரிக்காவில் இந்திய மாணவிகள் இருவர் கைது.
சரியான ஐடியா கந்தையர்....👍🏼💪🏽👍🏼💪🏽 இதற்கு கம்யூனிச அரசாட்சியே சிறந்தது. 😎 சமதர்ம கொள்கை. தூர நோக்குடன் உருவாக்கப்பட்ட கொள்கை. அது முதலாளித்துவத்திற்கு ஒவ்வாதது.😂
-
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹாரி
டயானா இறப்பிற்கு பின் இவர் சொந்த உறவுகளாலேயே புறக்கணிக்கப்பட்டார் என நினைக்கின்றேன். மகாராணி அவர்கள் அரச மரியாதையும்,தாயில்லா பிள்ளை எனும் நிலையை கடைப்பிடித்தாலும் வேற்று இனத்தவரை மணம் முடித்ததுடன் எல்லாம் கெட்டுவிட்டது என நினைக்கின்றேன். 😁