Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. கமல் - சிம்பு திரைப்படத்தை பற்றி இப்படியும் விமர்சனம் இருக்கின்றது. https://youtu.be/4YDTEcU3DQo?si=POGG6p2dk8VU-fBc
  2. வெளிநாட்டிலை இருந்து தங்கடை ஊர் திருவிழாவுக்கு போறவையள் அர்ச்சனைக்கு வைச்ச ஒரு மாம்பழத்தை லச்சக்கணக்கிலை காசு குடுத்து ஏலத்திலை எடுக்கினம்.கழுத்திலை தங்கச்சங்கிலி வேற மினுங்குது.....உதுகளை பார்க்கிற அங்கை இருக்கிற சனம் ஐயோ நாங்களும் கனடாவுக்கு லண்டனுக்கு சுவீஸ்க்கு போகப்போறம் எண்டு துடிப்பினம் தானே? 😄 இதுக்குள்ள..... இஞ்சை புலம்பெயர் நாடுகளிலை இருக்கிறவையள் கடவுளே இஞ்சை ஒருத்தரும் வராதேங்கோ.....இஞ்சை சரியான கஷ்டம்...நிம்மதியில்லாத வாழ்க்கை எண்ட புலம்பல் வேற....😂
  3. 1 தொடக்கம் 9 வரையிலான எண் சோதிடத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. காரணம் எனது அனுபவத்தில் அந்தந்த எண்களுக்குரியவர்களுக்கு ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு என்பதை அவதானித்துளேன். உதாரணத்திற்கு திகதி எண் 1ல் பிறந்தவர்கள் எல்லா விடயங்களிலும் உச்சத்தில் இருப்பார்கள். இதே போல் ஏனைய திகதிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்களை நான் பார்த்துள்ளேன். ஐரோப்பியர்கள் 13ம் இலக்கத்தை கொஞ்சம் ஒதுக்கி வைப்பார்கள்.பல விடுதிகளில் 13ம் இலக்க அறை இருக்காது.
  4. இப்படியான செயல்களை நவநாகரீக மேற்குலகத்தினர் சர்வ சாதாரணமாகத்தானே செய்கின்றனர்? அங்கே தலை வெட்டோ அல்லது கைகால் முறிப்புகளே இல்லை. ஒருவருக்கு பிடிக்கவில்லை இல்லையே ஒத்து போகவில்லை என்றால் விலகி போகின்றார்கள். மறு வாழ்வை,மறு துணையை தேடுகின்றார்கள். துணைவிக்கு தன்னை பிடிக்கவில்லை. இன்னோருவருடன் தொடர்பு என்றால் தலையெடுப்பது தீர்வல்ல.அது காட்டுமிராண்டித்தனம் என்பது என் கருத்து.
  5. இதே மாதிரி சம்பவம் ஒன்று கனடாவிலும் பல வருடங்களுக்கு முன் நடந்ததாக ஞாபகம் இருக்கு.அதை செய்ததும் தமிழர் தான். ஏன் தான் இப்படியான காட்டுமிராண்டி வேலைகளை செய்கின்றார்களோ தெரியவில்லை.
  6. மாம்பழத்தை ஏலம் எடுக்க குடுத்த காசை ஏதாவது சிறு பிள்ளைகளை முதியவர்களை பராமரிக்கும் இல்லங்களுக்கு குடுத்திருக்கலாம்.
  7. ரஷ்யாவால் உக்ரேனுக்கு விழும் ஒவ்வொரு அடியும் ஜேர்மன்,பிரான்ஸ்,இங்கிலாந்து விடும் சேட்டைகளுக்கு.... 😁
  8. எனது வாழ்வில் ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்க்கை பூச்சியமாகவே இருந்தது. காரணம் குடும்ப அங்கத்தவர்களது உயிரிழப்பு. சொத்துக்கள் இருந்தும் நிர்க்கதியாகியிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு உறவுடன் எண்கணித சாத்திரியிடம் அழைத்து செல்லப்பட்டேன். அன்று அவர் கூறிய எனக்கான ஆருடங்கள் சரியானதாகவே இருக்கின்றது. நான் வெளிநாடு செல்வேன் என ஒரு துளி கூட எதிர்பார்க்கவில்லை.அதற்கான அவசியமும் இருந்திருக்கவில்லை. அதிலும் இன்று நான் செய்யும் வேலை பற்றி கனவிலும் சிந்தித்தது இல்லை. சாத்திரகாரர் நீ உனது சொத்துக்களை அனுபவிக்க மாட்டாய் எனவும் வேலையோ ஒரு இடத்தில் நின்று/ இருந்து செய்யும் வேலையும் ஆக இருக்காது எனவும் கூறினார். நானும் அவரை நக்கலாக பார்த்து விட்டுத்தான் சுபாஸ் கபேயில் ஐஸ் சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். ஆனால் அந்த சாத்திரி சொன்னது நிஜவாழ்வில் நடக்கின்றது. நான் எழுதியது மற்றவர்கள் சாத்திரங்களை நம்ப வேண்டும் என்பதற்காக அல்ல. என் அனுபவம் மட்டுமே.
  9. உக்ரேனியர்கள் உழைக்கா விட்டாலும் ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தும் தொடர்ந்து உக்ரேனுக்காக உழைத்துக்கொண்டே இருக்கும்.😁 பிரான்ஸ்,இங்கிலாந்து,ஜேர்மனி அதை செவ்வனே செய்கின்றது.செய்யும். செய்ய வேண்டிய கடப்பாடு அவர்களுக்குள்ளது. எம்மைப்போல் நாட்டை விட்டுட்டு ஓடியவர்கள் பட்டியலில் உக்ரேனியர்களும் அடங்குவர்.😂 உக்ரேன் விடயத்தில் நீங்கள் கூறியதுதான் சரியான கருத்து. 👍 மற்றும் படி உலகில் இல்லாத அத்துமீறல் என உக்ரேனில் புதிதாக ஒன்றுமில்லை. நீதிமான்களும் உக்ரேனுக்காக மட்டும் கண்ணை திறக்க வேண்டிய அவசியமும் இல்லா.😎 ஒரு பக்கம் ரஷ்யாவை செத்த கிளி என்கிறார்கள். 😜 இன்னொரு பக்கம் உங்களை போன்றோர் ரஷ்யா 200 செக்கனில் ஜேர்மனி,பிரான்ஸ்,இங்கிலாந்து போன்ற நாடுகளை அழிப்பார்கள் என்பதால் தான் தங்கள் பாதுகாப்பிற்காக உக்ரேனுக்கு உதவுகின்றார்கள் என நியாயம் பிளக்கின்றீகள். எனவே முதலில் உங்களுக்குள் கூடி பறைஞ்சு ஒரு முடிவிற்கு வாருங்கள் கந்தையர்! மனிதாபிமானத்திற்காக உக்ரேன் மீது பரிதாபப்படுகின்றீர்கள் என நினைக்கின்றேன். மனிதாபிமானம் என வந்தால் நானும் அவர்களுக்காக பரிதாபப்படுகின்றேன். அரசியல் என பார்த்தால் உலகில் உள்ள நாடுகளை விட உக்ரேனில் அதுமீறல்களும் பரிதாபங்களும் கொட்டிக்கிடக்கவில்லை. மற்றும்படி உங்கள் மனிதாப உணர்வு எழுத்துக்களுக்கு நன்றி ரசோதரன்.🙏
  10. உக்ரேனும் உக்ரேன் மக்களும் தனித்து நின்று போராடினால் பாராட்டலாம். வாழ்த்தலாம்.வணங்கலாம். 😁 உக்ரேனுக்கு பின் பலமாக நிற்பது ஐரோப்பிய ஒன்றியம். அதன் இராணுவ உதவிகளும் பண உதவிகளும் தொழிநுட்ப உதவிகளும் எண்ணிலடங்காதவை. அதிலும் ஐரோப்பாவில் இருக்கும் முன்னணி நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு உக்ரேனுக்கு உதவிகள் செய்கின்றன.அதிலும் ஜேர்மனியின் உதவிகள் கணக்கற்றவை. அதிலும் அமெரிக்கா உக்ரேனுக்கான ஆயுத விடயத்தில் தளம்பினாலும் உளவு விடயத்தில் அமெரிக்கா தான் முன்னணி வகிப்பதாக கூறுகின்றார்கள். இப்படியிருக்கும் போது தனியே உக்ரேனை மட்டும் பார்த்து பிரமிப்பது சரியல்ல. 😂 இப்படியாக பல உந்து சக்திகள் ஈழப்போராட்டத்திற்கும் இருந்திருக்குமேயானால் இன்றைய நிலை வேற லெவல்ல இருந்திருக்கும்.
  11. ஆர் சிந்து பாடினாலும் உள்ளுக்கை போய் இருக்கப்போறது குமாரசாமி
  12. போராட்டம் தோல்வியடைந்து விட்டது எனும் போது அதுவும் பேசப்பட வேண்டும்.
  13. https://youtube.com/shorts/EnpLFLqwmyk?si=6dz02Rm_7V1AzLRM வேடன் வேட்டையாட வந்தவன். 😎
  14. ஒரு மொழி இன்னொரு மொழியை ஆக்கிரமித்தால் மட்டுமே பிரச்சனைகள் உருவாகும். இசை அதற்கு விதி விலக்கு. https://youtu.be/3KRps4OR5Ek?si=64812iyxXGHEYbrt
  15. https://www.youtube.com/watch?v=qpWHNA2loyA https://youtu.be/qpWHNA2loyA?si=M8fjH0gC2N0POK1t திராவிடத்தின் கையை பிடித்து களைத்து போயிருக்கும் எமக்கு கேரள கை நமக்கு கொடுக்குமா பார்க்கலாம்.
  16. ஒரு கால கட்டத்தில் இயக்க வேற்றுமை இல்லாமல் எல்லா புலம்பெயர் உறவுகளும் கொடுத்தார்கள் என நினக்கின்றேன். நான் சொல்ல வருவது பண பற்றாக்குறையாலும் மனமின்மையாலும் போராட்டம் தடைப்படவில்லை என்பதை மட்டுமே.
  17. பாணர் பண்டைக்காலந்தொட்டு இசைக்கலையில் ஈடுபட்ட மரபினராக பாணர் விளங்கியுள்ளனர் என்பதை சங்க இலக்கியங்களின் வாயிலாக அறிய முடிகின்றது. இவர்களின் குலப்பெருமையினையும் பழமையினையும் ‘பாணன் பறையன் கடம்பன் துடிய’ என்ற புறநானூற்று அடிகள் புலப்படுத்துவதைக் காணலாம். மேலும், துடி அடிப்பவன் துடியன் என்றும், பறை கொட்டுபவன் பறையன் என்றும் குறிப்பிடப் பெற்றது போல பண் இசைப்பவன் பாணன் என்று அழைக்கப் பெற்றான் என்பதை அறிய முடிகின்றது. பாணர்களில் ஆடவரை சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இன்னிசைகாரர், பாணரென்ப (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.12, ப.329) என்கிறது பிங்கல நிகண்டு. பாணருள் இசைப்பாணரும், யாழ்ப்பாணரும், மண்டைப்பாணரும் (வாழ்வியற் களஞ்சியம், தொகுதி.12, ப.329) இருந்தனர் என்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இவர்களில் இசைப்பாணர் பாடற்பாணர், அம்பணவர், அகவர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணர் யாழிசைத்துப் பாடுபவராவர். அவர்கள் வாசித்த யாழில் பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் ஆகியவை சிறப்பாகக் கூறப்படுகின்றன. இந்நால்வகை யாழுள் பேரியாழ் வாசித்த பாணர் பெரும்பாணர் என்றும், செங்கோட்டியாழ் என்ற சீறியாழ் வாசித்த பாணர் சிறுபாணர் என்றும் அழைக்கப்பட்டனர். யாழ்ப் பாணர் யாழேயன்றிக் குழலையும் இசைக்கருவியாகக் கொண்டு தம் கலைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது. இதனை, “குழலினும் யாழினும் குரல்முத லேமும் வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும் அரும்பெறன் மரபிற் பெரும்பாண் இருக்கை” (சிலப்.35௩7) என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. https://www.muthukamalam.com/essay/literature/p239.html
  18. புலம்பெயர் நாடுகளில் இறுதிக்கட்ட போருக்கென குடும்பத்திற்கு 2000 என சேகரித்த நிதிகள் எங்கே போனது? அந்த பணம் சேகரித்த பின்னர் பெரிய எதிர்ப்பு சண்டைகள் எதுவுமே நடக்கவில்லை.
  19. எமது இனத்தின் விடுதலைப்போரை எதனுடன் ஒப்பிடுவது என விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. உக்ரேன் போருக்கும் எமது இன விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? உக்ரேனுக்கு இருப்பது வேறு பிரச்சனை. எம் இனத்திற்கு இருப்பது வேறு பிரச்சனை.
  20. அந்த வட்டங்களை இனியும் காவிக்கொண்டு திரியக்கூடாது. அப்படியான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். Michael Jackson நிற வெறிக்காக போராடி வெற்றி பெற்றவர் என்பதை மறக்க கூடாது.
  21. நல்ல விடயம். ரொனி பிளேயரும், சந்திரிக்கா,கதிர்காமர் போன்றோர் இல்லாதிருந்தால் இன்று ஈழத்தமிழரின் நிலமை வேறு நல்லவிதமாக இருந்திருக்கும்.இருந்திருக்கலாம்.
  22. வேடன் மலையாளத்தில் ஏற்கனவே பிரபல்யம். 4 கிராம் கஞ்சா தான் இவரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. தேடி பார்த்ததில் ஏற்கனவே ஈழம் சம்பந்தமாகவும் சாதி அடிமை சம்பந்தமாகவும் பல பாடல்களை பாடியுள்ளார் என தெரிய வருகின்றது. யார் கம்பு சுத்தினாலும் ஈழத்தமிழர்களுக்கு விடிவு வரணும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.