Everything posted by குமாரசாமி
-
முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாதாரங்கள் வேறுபடும். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களுக்கு தடையும் தட்டுப்பாடும் நிலவுகின்றது.அரசு மேய்ச்சல் நிலங்களை தனியாருக்கு விற்று விட்டது.இதையெல்லாம் யாரும் பேச மாட்டார்கள். பால் பொருட்கள் வெளி மாநிலங்களில் இறக்குமதியாகின்றது. கால் நடைகளுக்கான தீனிகளும் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதியாகின்றது. இதையெல்லாம் வளம் மிக்க தமிழ்நாட்டில் ஏன் எதற்காக என்றெல்லாம் விவாதிக்க மாட்டார்கள். இது மாநாடு அல்ல. ஒருவகை போராட்டம் மட்டுமே. மூலைக்கு மூலை மதுபானசாலைகள் இருக்கும் போது கள் உற்பத்தி செய்வதில் தப்பில்லை என்பது என் கருத்து.
-
சோழர் காலத்தில் ஏரிகள் எப்படி இயங்கின? நீர்ப்பாசன நுட்பத்தை காட்டும் கல்வெட்டு
எமது அரசர்கள் காலங்களிலையே நாகரீகங்களும் அறிவுபூர்வமான வளர்ச்சிகளும் இருந்துள்ளதை வரலாறுகள் பறைசாற்றி நிற்கின்றன. இருந்தும்..... எங்கடை சனம் வெள்ளைக்காரன் செய்வதெல்லாம் சரி. சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறை எதுவுமில்லை எண்ட பாணியில உருட்டல்கள் சொல்லி வேலையில்லை.😄 இதுக்கை கேம்பிறிச்சு ஒக்ஸ்போட்டு அந்த யூனி இந்த யூனி ஆதாரங்கள் வேறை 😎
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
முயற்சிகளுக்கும் நோபல் பரிசு உண்டா? 😧 ஒபாமா காலத்தில் நடந்த அரபு வசந்தம் தான் இன்றைய ஐரோப்பிய நாடுகளின் சீர்குலைவுக்கு காரணம். அரபு எனும் குளவிக்கூட்டை கலைத்து சிதறிடித்த புண்ணியவான் ஒபாமா. நிற்க... யுத்த நிறுத்த முயற்சிகளினால் பலன் இல்லை என்பதை கடந்த பதினைந்து வருடங்களாக இந்த உலகம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றது. முள்ளிவாய்கால் அழிவு போல் ஒரு நிரந்தர அழிவு வந்தால் மட்டுமே யுத்த நிறுத்தம் வரும் போல் உள்ளது. இதைத்தான் இரண்டாம் உலகப்போர் முடிவும் அறுவுறுத்தி நிற்கின்றது.
-
அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
கட்டாயம் குடுப்பினம். குடிக்காட்டில் அடுத்த மூண்டு வருசத்துக்கு நோபல் பரிசு கமிட்டி காலம் தள்ளேலாது 😁
-
செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும்; நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு
ஈழத்திற்கு ஆதரவாக இருந்த/இருக்கும் தமிழக உறவுகளை,பிரபல்யங்களை விமர்சிக்கலாம் ஆனால் எதிர்க்கக்கூடாது என்பது என் நிலைப்பாடு.
-
ரஷ்ய ஜனாதிபதி புட்டினால் பதவி நீக்கப்பட்ட ரஷ்ய அமைச்சர் உயிரை மாய்த்தார்
வழமை போல புட்டினார் ரோமன் அவர்களை போட்டுத்தள்ளி விட்டார்.🤣 கோசானின் கருத்து முன்னோட்டம். 😎
-
மனதுக்கு பிடித்த BGM Background Music
நெஞ்சை வருடும் சோக BGM https://youtu.be/kpOK8mzx3dI?si=7JuGFwhJgzdcA9dF
-
பாடசாலை சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லாமையால் மாணவன் கவனயீர்ப்பு போராட்டம்!
நாம் எல்லோரும் ஒரு காலத்தில் பாடசாலை கல்லூரி என சென்று வந்திருப்போம்.அப்போது நாம் கண்ட/ அனுபவித்த தறுதலை கூட்டங்கள் எத்தனை? எத்தனை? அதிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பண/ அரசியல்/ஏதோ ஒரு வகையில் பிரபல்யம் என்றால் அவ்வளவுதான்? ஆசிரியர்களும் சக மாணவர்களும் அடக்கி வாசிப்பார்கள். நடவடிக்கை எடுத்த ஆசிரியர்களுக்கு நன்றிகள். உங்கள் நேர்மையான நடவடிக்கைகளைதொடருங்கள்.
-
குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!
அந்த திட்டத்தில் என்ன தவறு இருக்கின்றது? புட்டினும் டொனால்ட் ரம்பும் இல்லாத காலத்தில் இந்த மேற்கத்திய உலகம் எதை சாதித்து காட்டியது? அன்றைய கொழுப்புவாத முதலாளிகள் உலகில் எல்லா இடங்களிலும் கலவரங்களை தூவிவிட்டதை தவிர வேறு என்ன நல்ல செயல்களை செய்தார்கள்? பகட்டுக்கு வறிய நாடுகளுக்கான/மூன்றாம் உலக நாடுகளுக்கான உதவி எனும் பெயரில் வறுத்த விசுக்கோத்தையும் கூப்பன் மாவையும் கொடுத்து இன்னொரு பக்கம் மனித சுதந்திரம் எனும் போர்வையில் இன கொலைகளையும் உள்ளூர் போராட்டங்களையும் அழிவுகளையும் ஊக்குவித்து குளிர் காய்ந்தவர்கள் அல்லவா? அகதி அந்தஸ்து தந்தவர்கள் என்பதற்காக வாய் மூடிக்கொண்டு இவர்கள் செய்வதற்கெல்லாம் நன்றிக் கடனாக ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் தூக்கிலிட்டு சாவதே மேல்.
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
இனியென்ன..... அஜித்குமார் செய்திகளும் சூடான விவாதங்களும் அடங்கி விட்டது. வழமை போல கரண்ட் வயர் கடித்து தற்கொலை செய்த சம்பவமும்.மாடியால் விழுந்து தற்கொலை செய்த மாணவியின் சம்பவமும் போல..... இந்திய அரசியலும் அதிலும் பிரத்தியேகமாக தமிழ்நாட்டு அரசியல் நடைமுறைகளும் அதன் கிளை அரசியல் அடாவடிகளின் நடவடிக்கைகள் தெரியாமல் கண்டபடி விவாதிக்கும் பாலகர் நீவீர். ஒருவர் செய்த குற்றத்திற்காக அப்பாவிகளை தேடி பிடித்து குற்றவாளிகளாக்கும் நாடு அது.
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?
சம்பந்தன் மறைவுடன் அவர் வரலாறுகளும் மறைந்து / அழிந்து விட்டது. ( ஏதாவது நல்லது செய்தால் தானே பெயர் நிலைத்து நிற்க) இது இன்றைய தமிழ் தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். ஆண்டவரே! சம்பந்தனின் அதிசய கண்டு பிடிப்பான சுமந்திரன் தெளிவு பெற்று உணர்வாராக.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி நில்மினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 💐
-
குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்!
நல்ல விடயம்.
-
உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
அதொண்டுமில்லை தம்பி ....கட்டாப்பாரை கருவாடு எண்டால் எனக்கு விருப்பம். அதுதான் ஒரு பாசல் வருமெண்டு வழிமேல் விழி வைச்சு பாத்துக்கொண்டிருக்கிறன் 😁
-
அமெரிக்காவின் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் எலான் மஸ்கின் புதிய கட்சி!
உலக நாடுகளோட போர் செய்ய மாட்டம் எண்டு சத்தியம் பண்ணச்சொல்லுங்கோ 😂
-
உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
சிறித்தம்பியருக்கு நான் பலகாரம் கட்டிக் குடுத்த நன்றிக்கடன் இப்பவும் இருக்குமெண்டு நினைக்கிறன்.....😎
-
உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
இதென்ன கடை போட வாங்கிக்கொண்டு வந்தது போல கிடக்கு... 🤣
-
பற்றியெரிகிறது கல்லுண்டாய்வெளி குப்பைமேடு – இரவிரவாகப் பெரும் பதற்றம்
🤣கல்லுண்டாய் குப்பை மேட்டிலை குமாரசாமியின்ரை கோவணத்தையும் கிழிச்சு தொங்க விடுறதுக்கெண்டே ஒரு கும்பல் அலையுது😂
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
நிகிதாவை உலுக்க தேவையில்லை. நிகிதா தானாகவே உலுக்க வெளிக்கிட்டால் அமைச்சர்கள்,உதவி அமைச்சர்கள்,உயரதிகாரிகள் தாங்க மாட்டார்களாம். அவர்கள் வீட்டில் ஒரு சொம்பு தண்ணீர் கூட கிடைக்காதாம். 😂 அப்படி பொது வெளியில் பெரியவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
-
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
யான் என்ன செய்வேன் ஐயனே? 😎 அன்னதான மடம் , அடியார் மடம் என புசித்துண்டு உடல் வளர்த்து அறுபத்தி மூன்று நாயன்மார்களின் குருபூசை என அலைந்து அன்னத்தை உண்டு வாழ்ந்த பழக்க தோசம். 😂 யான் என்ன செய்வேன் ஐயனே? 😎
-
சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்
இள வயது. இளம் இரத்தம். பயமறியா வயது அவர்களுக்கு. நாமும் அதே வயதை தாண்டி வந்தவர்கள் தான்.அனுபவப்பட்டவர்கள் தான். அனுபவிக்க வேண்டிய வயதில் அனுபவிக்க வேண்டும் எனும் கொள்கையுடையவன் நான். வாழ்க்கை என்பதே கரணம் தப்பினால் மரணம். அது இந்த இளைஞர்களுக்கு நடந்துள்ளது. ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும். எனது இடத்தில் யாழ்மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட தம்பி ஒருவர்(40) 10 நாட்களுக்கு முன் சிறு குளத்தில் மனைவியுடன் நீந்தி விளையாட சென்றிருக்கின்றார். இருவரும் சேர்ந்து நீந்திக்கொண்டிருக்கும் போது மூச்செடுக்க முடியாமல் தத்தளிக்க மனைவி தாங்கி பிடித்திருக்கின்றார்.அவலக்குரல் எழுப்பியிருக்கின்றார். அது மற்றவர்களுக்கு கேட்கவில்லை.கால் நிலத்தில் படாத நீர் நிலையில் மனைவியாலும் தாங்கி பிடிக்க முடியவில்லை. இயலாத கட்டத்தில் கையை விட்டுவிட்டார்.அப்படியே போனது போனது தான் இன்றும் உடலை கண்டு பிடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் காணாமல் போன அந்த தம்பி உதைபந்தாட்டம்,நீச்சல் என பல விளையாட்டுக்களில் ஈடுபாடு உள்ளவர். உடம்பில் கவனம் உள்ளவர். இவ்வளவு இருந்தும் என்ன பயன்/பலன்? விதி வலிமையானது.
-
ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
ஏன் சோலி...இருக்கிறது☝ இவ்வளவுதான்.😂 நான் வந்தவுடனையே பேப்பர் தந்திட்டாங்கள்.😎 சாவகச்சேரியிலை ஜேர்மனியை மாதிரி ஒரு சோசல் காசு தாற ஆபிஸ் திறக்கும் மட்டும் என்ர கால் தூசு கூட அங்கை படாது.
-
போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்
அஜித்குமார் படு*லை சித்தரிக்கப்பட்ட காட்சி போல...
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஜேர்மனியில் இன்று அதியுச்ச வெப்ப நாளாக சொல்கிறார்கள். இதே நிலை தொடராது. அப்படி ஒரு மாதம் தொடர்ந்தால் ஜேர்மனியின் பாதி சனத்தொகை குறைந்து விடும் போல் உள்ளது.🤣 பல பாடசாலைகளை மூடியே விட்டார்கள்.😉
-
யாழ். செம்மணி மனித புதைகுழி விவகாரம் : விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு – அரசாங்கம்
சிங்கள விசுவாச தமிழ் இணக்க அரசியல் தலைவர்கள் மாட்டுப்படுவார்களாக....