Everything posted by குமாரசாமி
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
சிங்கள கட்சிகளுக்கு நான் ஆதரவாளன் இல்லை. இருந்தாலும் புதிய நோக்கோடு புதிய கட்சியின் அனுர ஆட்சியை கொஞ்சம் விட்டு பார்க்கலாம் என்ற எண்ணம் என்னிடம் இன்றும் உண்டு. அனுர இனவாதி என்பதற்காக டக்ளஸ் தேவானந்தா மீது வெள்ளை அடிப்பதை ஏற்க முடியாது. 😎
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்
குத்தியனுக்கு அழிவிலையும் வாழைமர எரிச்சல் சுடர் விட்டு எரியுது.🤣
-
டொனால்ட் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையில் நாளை சந்திப்பு!
மச்சான் செலென்ஸ்கிக்கு இந்தமுறை ஐரோப்பிய ஒன்றிய கூட்டுவள் பயங்கர ரெயினிங் குடுத்துத்தான் அனுப்பியிருக்கினம். இருந்தாலும் செலென்ஸ்கியர் பழைய சேட்டையை புளோரிடாவிலையும் விடுவாராய் இருந்தால்......இரண்டு காதாவடிப்பக்கமும் செக்கச் சிவக்க உக்ரேனுக்கு திரும்பி வருவது நிச்சயம். டொனால்ட் ரம்ப் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான முடிவையே உக்ரேன் சந்திக்கும் என பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 😂
-
ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் முன்னறிவிப்பு: பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும்.அரசாங்க செலவினங்களும் ஏற்றுமதிகளும் வளர்ச்சியை ஆதரிக்கின்றன - பணவீக்கம் மெதுவாகக் குறைகிறது.
உக்ரேன் யுத்தம் ஆரம்பிக்க முதலே கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னரே ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.முதலில் இவர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யாமல் தடை செய்து விட்டார்கள். முக்கியமாக இவர்களின் விவசாய விளைபொருட்கள். இதனால் பாதிக்கப்பட்டது யார் என்று பார்த்தால் இவர்களது விவசாயிகள் தான். இது போல் பல விடயங்களை கூறலாம். பொதுவாவக கூறினால் ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முக்கியமான ஏற்றுமதி நாடு. அதிலும் ஜேர்மனிக்கு ரஷ்யா மிக மிக பொருளாதார ரீதியாக முக்கியமான நாடு. ஜேர்மனியினது ஏற்றுமதிக்கு ரஷ்யா முக்கிய சந்தையாக இருந்தது. அமெரிக்காவின் எதிரி ஐரோப்பிய ஒன்றியத்தின் வளர்ச்சி. அதை தடுக்க உக்ரேனை தத்தெடுத்தது அமெரிக்கா. அமெரிக்கா விரித்த வலையில் வீழ்ந்தது ஐரோப்பிய ஒன்றியம். அதிலும் ஜேர்மனி தான் பெரிய ஆள் என காட்ட வெளிக்கிட்டு பெரிய சகதிக்குள்..... இது அமெரிக்காவுக்கு கிடைத்த பெரிய வெற்றி.
-
ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் முன்னறிவிப்பு: பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும்.அரசாங்க செலவினங்களும் ஏற்றுமதிகளும் வளர்ச்சியை ஆதரிக்கின்றன - பணவீக்கம் மெதுவாகக் குறைகிறது.
ஜேர்மனியின் பொருளாதாரத்தை பற்றி பெரிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை....அதுவும் இன்றைய நிலையில்.... தினசரி வேலை இழப்புகள்.... மாதாந்தம் சிறு சிறு முதலீட்டு கொம்பனிகள் மூடு விழாக்கள்.... அதே போல் பெரிய தொழிற்சாலைகளில் பல வேலை இழப்புகள்.... ஜேர்மனியின் மூலதனமே உருக்கு தொழிற்சாலைகளும் கார் உற்பத்தி நிறுவனங்களும் தான்....அதனை தொடர்ந்து லாபகரமாக நடத்த முடியாத நிலையில் இருக்கின்றார்கள். காரணம் எரி சக்தியின் அளவில்லா விலையேற்றம்.கொஞ்சம் யோசித்து பாருங்கள் வீட்டு பாவனைக்கும்,வாகன பாவனைக்கும் எரி சக்தி எமக்கு எவ்வளவு தாக்கத்தை எற்படுத்துகின்றது என. சாதாரண எங்களால் இதனை சமாளிக்க முடியவில்லை எனும் போது..... 24 மணித்தியாலமும் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளின் நிலை எப்படியிருக்கும் என...? பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் இருக்கும் பெரிய பிரச்சனை எரிசக்தி என நேரடியாகவே அறிக்கைகள் மூலம் தெரிவித்து விட்டனர். மந்த நிலையில் இருந்து முன்னேறிய காலம் போய் விட்டது. மூன்றாம் உலக நாடுகளும் முன்னேறிக்கொண்டு வருகின்றன.
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
டக்ளச சும்மா பகிடிக்குத்தான் கைது பண்ணினவை. நீங்கள் ஒண்டுக்கும் பயப்பிடாதேங்கோ மகிந்தரே....😎
-
“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!
இளமை என்பதை விட சாகும் வரைக்கும் தேகாரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணித்தியாலமாவது உடம்பு அசையும் படி ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். நவீன காலத்து எண்ணைகளும் அதன் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளையும் அறவே தவிர்க்க வேண்டும். இது எனது சொந்த அனுபவம்.👆 அதை விட ஜேர்மனியில் இன்றும் முக்கியமாக வயதானவர்களும் ஏனையவர்களும் பன்றி கொழுப்பை பாணில் பூசி சாப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே பன்றி கொழுப்பை உணவுகளை சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். ஒரு சிக்கலுமில்லை.ஒரு சிதம்பர ரகசியமும் இல்லை.😎
-
பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?
பூமியை படைத்த இயற்கை ஆறறிவு கொண்ட மனிதனை நம்பி அதிக தூரம் சென்றுவிட்டது. அண்மைக்கால அழிவுகளை பார்க்கும் போது அந்த இயற்கை திரும்பி வந்து கொண்டிருக்கின்றது என நினைக்கின்றேன். ☹️
-
'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்
இன்றைய உலகின் மருத்துவமும் மருந்துகளும் எல்லாம் வியாபார நோக்குடனேயே செல்கின்றது.எங்கடை பரியாரிமாரின்ர ஓசி மருத்துவம் எல்லாம் மலையேறி விட்டது. டாக்குத்தர் ஒரு மருந்தை எழுதி தந்தால் மருந்தகர் மலிஞ்ச மருந்தை தருவார். கேட்டால் மருந்துகள் எல்லாம் கொம்பனி வித்தியாசமே தவிர மற்றும்படி மருந்துகளின்ரை செயல்பாடு எல்லாம் ஒரு மாதிரித்தான் என்பினம்.இல்லை எனக்கு டாக்குத்தர் எழுதி தந்த மருந்து தான் வேணும் எண்டால் காசு கொஞ்சம் கூட வரும் எண்டு வெருட்டுவினம். மருத்துவதுறை மக்கள் சேவை என்பது இப்போதெல்லாம் இல்லை. தொட்டது பட்டதிற்கெல்லாம் காசு....காசு. அதை விட இப்போதெல்லாம் மொழி அரைகுறையாக தெரிந்த மருத்துவர்களே அதிகம். சிரியா,ஈராக்,துருக்கி என அங்கே மருத்துவத்தை படித்து விட்டு இங்கே டாக்குத்தர் வேலை பார்க்கின்றார்கள்.ஜேர்மனியர்களே பயந்து பயந்து முகத்தை சுளிக்கின்றார்கள்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இன்றைய உக்ரேன் யுத்தங்களுக்கான கொள்கையை வகுப்பதே ஜேர்மனிதான்.
-
முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.!
வீர வணக்கம் தாயே...🙏
-
உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராகிறது ஜப்பான்
அணு சக்தி இன்றைய உலகிற்கு முக்கியம் தேவையானது. அதை மிக பாதுகாப்புடன் இயக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. எரி சக்தி விடயத்தில் ஜேர்மனி நடுத்தெருவில் நிற்பது போல் வேறு எந்த நாட்டிற்கும் வரக்கூடாது என்பதால் எல்லாம் வல்லவனை வேண்டுகின்றேன். 😂
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
ஈழத்தமிழர் விடயமாக நீங்கள் ஆதரிக்கும் அல்லது முன்னுதாரண அரசியல்வாதி யார்? இப்படியா? ஆரத்தழுவி அரவணைத்து செல்வதும்.....கருவாடுகளை ஏற்றுவது போல் ஏறுவதும் உங்களுக்கு நியாயம் என்றால்........?
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
யாழ்கள உறவுகளை கருத்து சொல்லும் படி அழைத்தது நீங்கள். அதற்கு பதில் நாகரீகமாக பண்பாக எழுதியுள்ளேன்.அதே போல் சுமந்திரன் அவர்கள் இந்த செய்தியின் முக்கிய நபர். அதனால் அவரின் மறு பக்கத்தையும் எழுதினேன். மற்றும் படி உங்கள் மன பக்குவத்திற்கு ஏற்ப கருத்துக்கள் சொல்ல ஏதுமில்லை.
-
வணக்கம்.
வணக்கம் சகோதரம் வாங்கோ. சுகங்கள் எல்லாம் எப்படி? கண்டு கனகாலம்.
-
'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்
மருத்துவத்திற்கு பெயர் போன ஜேர்மனியில் கூட இந்த கோதாரிகளின் ஆக்கிரமம் சொல்லி வேலையில்லை. மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் மலிவு கலாச்சாரத்தால் மலிந்த விலையுள்ள இந்த கோதாரிகளை விழுங்கி தொலைக்க வேண்டியுள்ளது. 😡
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
காவி உடைதரித்த வேலன் சுவாமிகள் தமிழன் என்பதால் கைதும் அடி பிடிகளும்.இதுவே ஒரு பௌத்த பிக்கு என்றால் நடக்குமா? இதே காவி உடை தரித்த இனவாத சிங்கள பிக்கு என்றால் எம்மவர்களுக்கு கவிதை வருமா? சித்திரம் வருமா? கட்டுரைகள் வருமா? கட்டுமான கருத்துக்கள் வருமா? சிங்களம் என்றால் பக்குவம் பவுத்திரம் பாக்கியம் மௌனம்.
-
கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!
உலகம் முழுவதும் தீப்பெட்டி அளவில் இலையான் மாதிரி திரியும் இந்த வாகனங்களை தடை செய்ய 50வீத சுற்ற சூழல் மற்றும் காற்றின் தரமும் அதிகரிக்கும்.
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
விடுதலைப்புலிகளின் ஆயுத போராட்டத்தை எதிர்த்த/எதிர்க்கும் சுமந்திரனை தோளில் சுமந்து திரிவது கேவலத்திலும் கேவலம். கடந்த 10 வருடங்களில் சுமந்திரர் ஈழத்தமிழர் சம்பந்தமாக என்ன செய்தார் என கேட்டுப்பாருங்கள். அனைவரும் அந்த நிமிடம் தொடக்கம் பல நாட்களுக்கு கோமா நிலைக்கு சென்று விடுவர்.🤣
-
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
எனக்கு சிங்களவன் எவ்வளவோ மேல் என உணர்வை ஊட்டியவர் கவி அருணாச்சலத்தின் சிரித்திரன்கள் என்பது பலருக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. நாதியற்று நடு வீதியில் நிற்கும் ஈழத்தமிழனுக்கு .... இப்படிப்பட்ட கேலி சித்திரங்கள் இன்னும் வேண்டும். இஸ்டாலின்,கோத்தபாய கொம்பனிகள்,அனுர போன்றவர்களின் கேலிச்சித்திரங்களையும் எதிர்பார்க்கின்றேன்.
-
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?
பாரம்பரியங்கள் சில காலத்திற்கு காலம் மாறும். ஆனால் பழமையானவைகள் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டும். அதை அழிக்கவே கூடாது.இது பற்றி மேலைத்தேய வன,மர பாதுகாப்பு நிறுவனங்களிடம் இவர்கள் பாடம் படிக்க வேண்டும். நவீனங்கள் இன்றைய உலகிற்கு அவசியமானது. அது பழமைகளை அழித்துதான் உருவாக்கப்பட வேண்டும் என்பது எம்மை நாமே குழிக்குள் தள்ளுவதற்கு சமம். மற்றும் படி..... சுமந்திரன் நல்லதொரு வழக்கறிஞர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஈழத்தமிழர் பிரச்சனையில் அதை காட்டியிருந்தால் போற்றப்பட்டிருப்பார். இன்றுவரை அந்த விடயத்தில் சாத்தியம் எதுவுமே தெரியவில்லை. படித்த மேதாவிகள் என காட்டிக்கொள்பவர்களே பல விட்டுக்கொடுப்புகளுக்கு முன்னுதாரணமாக இல்லாமல் இருக்கும் போது.... அதே அவர்கள் பாமரன்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என நினைப்பதும் ஒரு வித மேட்டுக்குடித்தனம்.
-
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
பிரபாகரனை பற்றி கொஞ்சம் இழுத்து விட்டது உங்களுக்கு பிடிக்கேல்ல போல.....😎 யார் யாரெல்லாம் பிரபாகரனையும் ,போராளிகளையும்,மாவீரர்களையும் போற்றி பாடவேண்டும் என ஒரு வரையறை வைத்திருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது. அந்த பட்டியலை இங்கு இணைத்தால் ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் உதவியாக இருக்கும்.😋
-
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!
அரச செலவில் ஒரு தெய்வீக வழிபாடு......சிறப்பு. 😎
-
தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்
பழைய கனவில் இன்றும் இருக்கின்றார்கள் என்பது கிந்தியின் கடந்த 10 வருட ஸ்ரீலங்கா மீதான அரசியல் அம்மணமாகவே தெரிகின்றது. சிங்களத்துடன் ஒத்து ஓதிக்கொண்டே இருப்பார்கள். சிங்களம் கொஞ்சம் சீனா பக்கம் நகர்ந்தால் அல்லது வேறு வழிகளை தேடினால் கிந்தி உடனடியாக தமிழர் பிரச்சனையை தூக்கிப்பிடித்து தங்கள் அரசியல் லாபம் தேடுவது.. இதுதான் காலம் காலமாக நடக்கின்றது.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வெளியேற்றம் பற்றி தலைவர் அறிக்கை விட்ட பின்னரும்.... முஸ்லீம்களின் வெளியேற்றம் இன சுத்திகரிப்பு என சமாந்திர சுமந்திரனார் அறிக்கை விட்டதெல்லாம் கண்களுக்கு தெரியவில்லையோ? 😂